திருமதி ராஜிராமின் அஞ்சல் 331 குறித்து:
குழந்தை முதலில் வீட்டில் அப்பாவுடன் கிரிக்கெட் ஆடப் பழகுகிறது. கொஞ்சம் வளர்ந்ததும் தன் சகாக்களுடன் தெரிவில் சுவரில் கரிக்கோடு இட்டு ரப்பர் பந்தினால் அன்டர்ஹான்ட் பௌலிங் போட்டு விளையாடுகிறது. பின்னர் தன் ஹைஸ்கூல் நண்பர்களுடன் ஸ்கூல்விட்டதும் பள்ளி மைதானத்தில் கார்க் அல்லது கிரிக்கெட் பால், பாட், ஸ்டம்ப் மற்ற உபகரணங்களுடன் விளையாடுகிறது. பெரும்பாலான குழைந்தைகள் அந்த லெவலுடன் விளையாடுவதை விட்டுவிடுகின்றன. இருப்பினும் குழந்தையையும் அதன் சுற்றம்-நட்பையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த நிலையிலும் விளையாடியது கிரிக்கெட்தான்.
இங்கு நாம் எல்லோரும் நம் முயற்சிகளில்--அது எதுவாகட்டும்--குழந்தைகளே. நம் முயற்சிகளில் எண்ணமும் வடிவமும் சமபங்கு முக்கியத்துவம் பெறும்போது ’இது-அதுவல்ல, இது-அதுதான், இது-அப்படியல்ல-இப்படி, எதுவாயிருந்தாலும்-எப்படியிருந்தாலும்-என்-முயற்சி-எனக்கு-முக்கியம்’ போன்ற மனப்பாங்குகளில் நாம் சச்சரவிட்டுக்கொள்ள நேரிடுகிறது. இவை குழந்தைகளின் ’இன்று காய் நாளை பழம்’ போன்ற மனத்தாங்கல்களாக இருக்கும் வரையில்--என்ன சொல்ல?--எல்லோருக்கும் ஜயமுண்டு பயமில்லை மனமே!
வாழு! வாழ விடு!!! :hug:
எழுது! எழுத விடு!!! :typing: