• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.

இணையதளம் சில நிஜ நண்பர்களைத் தந்துள்ளது. அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! :)
படிக்கப் பிடிக்காதவர்கள், உள்ளே வந்து, நேரத்தை விரயம் செய்ய வேண்டாமே! :clock:
 
........... பிரச்சினை என்னவெறால் நானும் இரண்டு ரகத்தையும் சேர்ந்தவனாக இருப்பதுதான்! ..........
தங்கள் இழைகளில் கவிதைகள் படையுங்கள்; படிக்கிறோம்!

தாங்கள் விரும்பும் கவிதைகளைத் தேடுங்கள்; படியுங்கள்!

:fish2: . . . :ranger:

 
’கடிக்கவிதையில்’ இதெல்லாம் சகஜம் ராஜுகாரு! நான் அஞ்சல் 297-இல் எழுதிய கடிக்கவிதையில் வரிக்கு வரி வாக்கியம்தானே! பாரதியாரே

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

என்று வாக்கியங்களில் ஆசிரியப்பா அமைத்திருக்கிறாரே?

"ஊருக்குப்போனேன் திரும்பி வந்தேன்" என்பதைக்கூட முதல்/கடைசி வரியாக வைத்து ஆசிரியப்பா எழுதமுடியும். அதில் மோனை இருக்கிறது. எதுகையைக்கொண்டுவரலாம். இலக்கணப்படி சீர், தளைகளை அமைத்துவிடலாம். ஆனால் முக்கியமான சந்தமும், கருத்துச்செறிவும், கவிதை எழிலும்,ஜீவனும் இல்லாது போனால் அது பெயருக்குத்தான் கவிதையாக இருக்கும். ஒரு கைதேர்ந்த சிற்பி செதுக்கி உருவாக்கும் சிலைகளுக்கும் plaster of paris ஐக்கலந்து அல்லது கரைத்து அச்சிலிட்டு காயவைத்து விற்கப்படும் பொம்மைகளுக்கும் வித்தியாசம் இல்லையா? பாரதியின் கவிதைகளில் இருப்பவை இந்தப்புதுக்"கவிதை"களில் இல்லை என்பதுதான் என் வாதம். கவிதை என்ற தலைப்பிட்டு எழுதினால் அது congratulations! you have won a billion GBP என்று தொடங்கும் இம்சை SMS போல. தலையிலடித்துக்கொள்வது தவிர வெறெதுவும் செய்ய முடிவதில்லை.

நான் இதையெல்லாம் எழுதுவது இந்த தளத்தில் மாற்றுக்கருத்துக்களும் உள்ளன என்பதை வெளிப்படுத்தவே. குறிப்பாக views எல்லாமே votes அல்ல என்பதை வலியுறுத்தவே. எனது கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அது என், என்னையொத்த கருத்துடையவர்களின் கருத்து. அவ்வளவே.
பாரதியின்
“வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!” கவிதையும்

அறிவொளி சிறுவனாக

அரிச்சுவடி கற்றபோது,

ஆசான் ஒரு நாள்

கடிந்தார் அவனை,

'என் உடைகள்

எத்தனை சுத்தம்!

உன் உடைகள் ஏன்

இத்தனை அழுக்கு' என்று!

தயங்காது பதில் வந்தது,

'உங்கள் சட்டையை விட

என்னுடைய சட்டை,

மண்ணுக்கு அருகில்

இருக்கின்றதே!'!

என்ற இதுவும் comparable தானா நண்பரே!
 
இணையதளம் சில நிஜ நண்பர்களைத் தந்துள்ளது. அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி! :)
படிக்கப் பிடிக்காதவர்கள், உள்ளே வந்து, நேரத்தை விரயம் செய்ய வேண்டாமே!

முதல் வரி எனக்கும் மகிழ்ச்சி தருகிறது-உள்ளது உள்ளபடியே கூறப்பட்டதால். இரண்டாவது வரி உங்களது அதிகாரவரம்பின் அப்பாற்பட்டது. எனவே அது ஒரு விரயம்.
 

'பாரதிக்கு இணை நான்', என்று என்றுமே சொன்னதில்லை; சொல்லப்போவதும் இல்லை!

தாங்கள் ஏன் 'படுத்தும்' கணினியுடன் போராடி, தட்டெழுதி, பொன்னான நேரத்தை வீண் செய்கிறீர்கள்? :noidea:
 
But NO ONE will be dumb enough to 'view' everyday and NOT READ!


No. There are people hoping against hope and looking for light at the end of the tunnel.
 
......... இரண்டாவது வரி உங்களது அதிகாரவரம்பின் அப்பாற்பட்டது. எனவே அது ஒரு விரயம்.
சரி, சரி! விரயம்தான்!

இனிமேல் உங்கள் அஞ்சல்களுக்கு, பதிலைத் தட்டெழுத, நானும் தயார் இல்லை!! :nono:

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்............ என்பதுபோல, எல்லாத் தர்க்கங்களும்

இந்த இழையில் வேண்டாம்! இது என் வேண்டுகோள்.
 
'பாரதிக்கு இணை நான்', என்று என்றுமே சொன்னதில்லை; சொல்லப்போவதும் இல்லை!

அது வேறொருவருக்கு எழுதப்பட்ட பதிவு. அவர் சொன்ன ஒரு கருத்துக்கு எழுதப்பட்ட பதில். அதை எடுத்து உங்களை ஏன் குத்திக்கொள்கிறீர்கள்?
 
Last edited:
One of the basics of internet forums: "View" is not equal to "read fully" or even "read". Nothing can be presumedl. சீத்தலைச் சாத்தன் கூட view பண்ணிவிட்டுத்தான் தலையிலடித்துக்கொண்டிருப்பான்-TB ஃபோரத்தில் வலம் வரும் புதுக்கவிதைகளைப் "பார்க்க" நேர்ந்திருந்தால்.


பொய் சொல்லி ஏமாற்றவில்லையே! :lie:
மெய் சொல்லித் தானே எழுதுகிறார்கள்!

தலைப்பிலேயே சொல்லிவிடுகிறார்கள்
"இலக்கணத்தை எதிர் பார்க்காதீர்கள்!" :nono:

அதையும் மீறி அதை விரும்பிப் படிக்கின்றனர் :ranger:
புதுமைகளையும், கவிதைகளையும் ரசிப்பவர்கள்.

சீத்தலைச்சாத்தனார் ஒருமுறை ஏமாறலாம்.
சீத்தலையை மேலும் புண்ணாகிக் கொள்ளலாம்.

ஒருநாள் போலவே தினம் வந்து ஏமாந்தால் அவர்
இருக்க முடியாது ஒரு சீத்தலைச் சாத்தனாராக!
:rolleyes:
 

அறிவொளி - 87


ஏன் இந்த இடம்?
-------------------------------


சின்ன மின் விளக்கு

மின்னும் அறையில்,


ஓர் ஊசியைத்


தொலைத்துவிட்ட


நம் அறிவொளி,


நன்கு தேடினான்,


பெரிய மின் விளக்கு


ஒளிரும் அறையில்!


ஏன் எனக் கேட்க,


பதில் வந்தது,


'இந்த அறையில்தானே


நிறைய வெளிச்சம்


இருக்கிறது!'
icon3.png



குறிப்பு:
வேறு இழைக்குச் செல்ல வேண்டிய சில தர்க்கங்கள் இந்த இழையில் வருவதற்கும்,

இதற்கும்
தொடர்பு இல்லை!!
:nono: . . . :)
 
நல்லது செய்ய வேண்டும் என்று

நினைத்துச் செய்யாத போதும்

நல்லதைத் தான் செய்ததாக

நினத்து மகிழ்வது ஏன்??? :noidea:


நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்.

1. வைஷ்ணவ ஜனதோ.......... என்ற பாடலின் அர்த்தத்தை ஒரு முறை படித்துப்பார்க்கவும்.

2. அது நல்லவர்களின் இயற்கையான குணங்களில் ஒன்று.

3. Rudyard Kipling இன் ஒரு word picture நினைவுக்கு வருகிறது. ஒரு பாராவைப்படிக்க attention span பத்தாதவர்கள் skip செய்து போகலாம். இதோ Kipling எழுதியது:

ஒரு வேடன் புதர்கள் நிறைந்த பசுமையான காட்டில் ஒரு மிருகத்தை வேட்டையாடத்துரத்தி வந்தான். சற்றுத்துரத்திய பின் அந்த மிருகத்தை நோக்கி ஒரு அம்பினை எய்தான். அம்பு இலக்கை தாக்காமல் புதர்களிடையே விழுந்து விட்டது. வேடனும் சோர்ந்து அம்பைத்தேடி எடுக்காமல் விட்டுச்சென்றுவிட்டான்.

வருடங்கள் பல சென்று விட்டன. காட்சி மாறுகிறது. இப்போது நம் கண் முன் விரியும் காட்சி. நல்ல வெயில் காலம். சூடு தகிக்கிறது. ஒரு வேடர் கூட்டம் காட்டு வழியில் மெல்ல முன்னேறி வருகிறது. பல மணிநேரமாக நடந்தும் நீர்நிலை எதுவும் காணவில்லை. தாகத்தால் தவித்துப்போயிருக்கும் வேடர்கள் உடம்பிலிருந்த சக்தியெல்லாம் வடிந்து போய்விட்டமாதிரி உணர்கிறார்கள். பலரும் மயங்கிவிழும் நிலையிலிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் செல்லும் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிடுகிறது. காட்டாற்றில் தெளிவான நீரோட்டத்தைக்கண்டு அவர்கள் மகிழ்ந்து ஆரவாரித்து வேண்டிய அளவு குடித்து மகிழ்கிறார்கள். வேடர்கள் தலைவனுக்கு ஒரே ஆச்சரியம். இந்தக்கோடையில் இங்கு மட்டும் எப்படி இவ்வளவு தண்ணீர் என்று ஆராய முற்பட்டான். காட்டாற்றின் மூலத்தைத்தேடி நடந்தபோது அது ஒரு பாறையின் ஊற்றுக்கண்ணிலிருந்து வருவதைக்கண்டான். பாறையின் ஊற்றுக்கண்ணைத்திறந்திருந்தது அங்கு குத்தி நின்ற ஒரு பழைய அம்பு. தன் பெயர் பொறித்திருந்த துருப்பிடித்திருந்த அந்த அம்பினைக்கண்ட வேடர் தலைவன் மௌனமானான்.

நடந்தது நல்லதானால் எண்ணியதும் நல்லதாகத்தான் இருந்திருக்கும். வேண்டுமானால் நினையாமல் செய்த நல்லது என்று அந்த வேடனைப்போல நினைத்துக்கொள்ளுங்களேன்.
 
Last edited:
This has reference to post # 386:

இது அறிவுக்கொழுந்தின் புதுக்கவிதையின் மூலம் நம்பர் 2.

சின்ன மின் விளக்கு மின்னும்அறையில்,ஓர்ஊசியைத் தொலைத்துவிட்ட நம் அறிவொளி, நன்கு தேடினான்,பெரிய மின் விளக்கு ஒளிரும் அறையில்!ஏன் எனக் கேட்க, பதில் வந்தது, 'இந்த அறையில்தானே நிறைய வெளிச்சம் இருக்கிறது!'

அறிவுக்கொழுந்துக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை. அவன் இப்போது தலைவரின் தயவால் வட்டச்செயலராகிவிட்டான். சிவில் காண்ட்ராக்டுகள் எடுப்பதிலும் காசு சம்பாதிப்பதிலும் ரொம்பவே பிசி. அதோடு நாமெல்லாம் விஷயங்களைக்கிரகிப்பதில் சூரர்கள் என்பதால் இனி அவன் தனது உரைநடை மூலங்களை இங்கு தருவதை நிறுத்திக்கொள்ளலாம் எனத்தீர்மானித்திருக்கிறான். ஒவ்வொரு புதுக்கவிதைக்கும், பிய்த்துப்போடும் முன்பிருந்த உரைநடை மூல வடிவத்தை இனி நீங்களே சுலபமாகப்புரிந்துகொள்வீர்கள் என்று நம்பி அவன் “வாழ்த்த வயதில்லை எனவே வணங்கினேன்” என்று கூறி வெளியேறுகிறான்.
 
தலைப்பிலேயே சொல்லிவிடுகிறார்கள்
"இலக்கணத்தை எதிர் பார்க்காதீர்கள்!" :nono:

எப்படி? சிகரெட் பெட்டிகளில் எலும்புக்கூட்டை வரைந்திருப்பது போலவும் டாஸ்மாக் கடை போர்டுகளில் எச்சரிக்கை எழுதியிருப்பது போலவுமா?
அதையும் மீறி அதை விரும்பிப் படிக்கின்றனர் :ranger:
புதுமைகளையும், கவிதைகளையும் ரசிப்பவர்கள்.

புதுமைகளை-சரிதான்.
கவிதைகளை-நிச்சயம் இல்லை.
 
Re #387 #388 #390 #391
(in the style of
gOpucca ) your posts resut:

உபகரணம்

கரணம்

ரணம்

 
Last edited:
Re #387 #388 #390 #391
(in the style of
gOpucca ) your posts resut:
உபகரணம்
கரணம்
ரணம்

It is not clear as to whom the post is addressed. If it is addressed to me I have this to say as reply:

It would be nice if the Garus kindly keep away from Tamil and Tamil poetry. They may concentrate on Gopuchcha yathi or whatever else is there beautiful in other languages. For heaven's sake leave Tamil alone.

Cheers.


 

மாறியதில் மகிழ்ச்சி!


இந்த இணையதளத்தின்

பொது விவாதங்களில்,


மெதுவாக நுழைகிறது


நம் தாய் மொழி!


மூன்று ஆண்டுகளுக்கு


முன்பு வந்துள்ளது,


கீழ்க்கண்ட அஞ்சல்!


ஆங்கில மொழிபெயர்ப்பு


இல்லாது, தமிழ் மட்டுமே


இருக்கக் கூடாதாம்!


இந்த நிலை மாறியதில்,


வந்தது எனக்கு மகிழ்ச்சி!

:peace:

This post dated 23 - 10 - 2009, was in red fonts!! :scared:

"please can i ask you a favour?


kindly, if you don't mind, use the instant translator, so that we can easily understand what you mean.

Type in Tamil - Google Transliteration

and feel free to express the same sentiments in english.

the forum does not encourage tamil only posts, in deference to our global presence, and possible inability

of members to read tamil.
but your tamlish or engamil confounds both.

thank you."
 
It is not clear as to whom the post is addressed. If it is addressed to me I have this to say as reply:

It would be nice if the Garus kindly keep away from Tamil and Tamil poetry. They may concentrate on Gopuchcha yathi or whatever else is there beautiful in other languages. For heaven's sake leave Tamil alone.

Cheers.



It is not clear as to whom the post is addressed. If it is addressed to me I have this to say as reply:

You are too LATE to make a comment on my Tamil and my poetry thread!!!

The laugh WILL be ON YOU since....
icon7.png
A poem a day to keep all agonies away!


Started by Visalakshi Ramani, 09-09-2010 09:59 PM 1 ... 137
paperclip.png
subscribed.png







  • Replies: 1,367
  • Views: 71,555

The Telugu "garu" and the Sanskrit Gopuhchayathi ONLY enrich a person's vocabulary.

I do not want to ride a lame horse inside a mud pot!!

குண்டுச் சட்டியில்
சண்டி (நொண்டி?) குதிரையை
ஓட்டுபவர்கள் ஓட்டலாம்! :rolleyes:
நான் அதற்குத் தயார் இல்லை!
Some people NEVER learn!!!
 
Last edited:
.............. replies: 1,367
  • views: 71,555..............
'இனியேனும் நல்ல கவிதைகள் வருமோ?' என்ற ஏக்கத்தில்தான் இத்தனை பேர் 'பார்க்கிறார்கள்'!

அவர்கள் 'பார்ப்பதை'ப் 'படிப்பது' என்று நாம் எண்ணுவது மிக மிகத் தவறு என்று பெரியவர் சொல்லக் கேள்வி!! :cool:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top