• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

வள்ளுவரைப் போற்றுவோம் ..... 211

நல்ல நட்பு...

பிறைமதி வளர்ந்து முழுமை அடைவதுபோல, நல்ல
நிறைவான அறிவுள்ளவர் நட்பும், வளர்ந்து சிறக்கும்.

தீயோர் நட்போ, முழுமதி தேய்ந்து சிறுப்பது போலவே,
தேய்ந்து, மாய்ந்து, அழிந்து போகும் தன்மை உடைத்து!

'நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு', என்கிறார்.

'பழகப் பழகப் பாலும் புளிக்கும்'; சிறப்பு இல்லாதவரிடம்
பழக நேர்ந்தால் இதுபோல நிகழ வாய்ப்புள்ளது. ஆனால்,

நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதைப் போல,
நல்ல அறிவாளர் நட்பு, பழகப் பழக இன்பத்தையே தரும்.

'நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு', என்பது அந்தக் குறள்.

சிரித்து மகிழ மட்டுமே அன்று நட்பு; தவறு செய்தால்
இடித்துத் திருத்த முன் செல்வதற்கும் தேவை நட்பு!

'நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு', என்கிறார்.

சிறந்த அறிவாளரை நண்பராய்ப் பெற்று, தவறினால்
திருந்த அறிவுரை கூறுமாறு, நட்பை வளர்த்துவோம்!

:grouphug:
 
Last edited:
விளம்பரம்!

முன்பு விளம்பரம் செய்வார்கள் ஒரு சிகரெட் வகைக்கு:

'இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை', என்று ௦- பாசக் கயிறு
இழுக்க இழுக்க நாட்கள் வேகமாய் நெருங்கும் எனக் கூறாது!

:whip:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 212

சிறந்த நட்பு...

முகத்தில் சிரிப்பைக் காட்டுவது மட்டும் நட்பல்ல;
அகத்தில் அன்பு கொண்டு பழகுவதே நட்பு ஆகும்!

'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு', என அவர் வாக்கு.

நண்பன் தீய வழியில் சென்றால், தடுத்துக் காத்து,
நண்பனின் துயரத்திலும் பங்கு கொள்வதே நட்பு.

'அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு', என அந்தக் குறள்.

தாம் அணிந்த ஆடை நழுவும்போது எந்த வகையில்
தம் கை உடனே சென்று பற்றுகின்றதோ, அதுபோல,

நண்பனுக்குத் துன்பம் வந்த வேளையில், தாமதியாது
அன்புடன் ஓடிச் சென்று உதவுவதே, சிறந்த நட்பாகும்.

'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு', என்கிறார்.

நல்ல நண்பர்களைத் தேடிப் பெற்று, நட்பை வளர்த்து,
நல்ல அன்பு மலர வாழ்ந்து, உலகில் சிறப்புறுவோம்!

:angel: :angel:
 
சிறு இடைவேளை...

என்னை அகம் மகிழ ஊக்குவிக்கும் நண்பர்களிடம், சிறு இடைவேளை அறிவிக்கிறேன்!

என்னை ஒரு கடமை அழைப்பதால், இது தேவை ஆகின்றது!

மீண்டும் சந்திப்போம் விரைவில்!
ராஜி ராம் :typing:
 
புதிய மாற்றம்!

பட்டிக்காட்டான் ஒருவன் பட்டணம் பார்க்க விழைந்தான்;
பட்டுடை மனைவியை உடுத்தச் சொல்லிப் புறப்பட்டான்!

முதலில் சென்றான், பெரிய சிறப்பு அங்காடி ஒன்று பார்க்க;
வெளியில் வருவதைக் கண்டான், அழகிய பெண்கள் பலர்!

வட்ட வடிவ அறை ஒன்றில், வயதான மூதாட்டி செல்ல,
எட்ட நின்று அதை நோக்கினான், 'லிப்ட்' என அறியாமல்!

சிறிது நேரத்தில் மீண்டும் அறைக் கதவு திறக்க, வெளியே
அழகு சொட்டும் சிறு பெண், துள்ளி வருவதைக் கண்டான்!

என்ன அதிசய அறை இது! உள்ளே சென்ற மூதாட்டி ஒருத்தி,
சின்ன வயதுக்காரியாக, சற்று நேரத்திலேயே மாறிவிட்டாளே!

இதுதான் பட்டணத்திற்கு எல்லோரும் வர விரும்புகிறாரோ?
மெதுவாக மனைவியை அழைத்து, ஆவலுடன் வேண்டினான்,

இந்த அறையின் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பினால், நீயும்
சிந்தை மயக்கும் அழகியாக மாறித் திரும்புவாய்! அவளோ,

தனியே செல்லப் பயந்து தவித்து, இன்னொரு பெண்ணுடன்
இனிய புன்னகை செய்தபடியே பயணித்து மேலே சென்றாள்.

அவள் இறங்கிய மாடியிலேயே இறங்கி, அவள் வரவிற்காக,
அவள் சென்ற கடையின் வாயிலில் காத்துக்கொண்டு நின்றாள்.

கீழே நின்ற அவன் சில நிமிடங்கள் லிப்ட் கதவையே நோக்க,
கீழே வந்த ஓர் அழகி வெளி வரக் கண்டு, மகிழ்ந்து, களித்து,

நாடியபடி தன் மனைவி அழகுப் பெட்டகமானாள் என எண்ணி,
ஓடிச் சென்று அவளை அணைக்க முயல, அவளோ நடு நடுங்க,

இவன் மீண்டும் மீண்டும் அவளையே மனைவி எனத் துள்ள,
அவன் துள்ளுவதைக் கண்டு மக்கள் கூட்டம் சேர்ந்தது மெல்ல!

இதற்குள் அவன் மனைவி அதே பெண்ணுடன் கீழே வந்துவிட,
அதற்குள் வேறு பெண்ணை இவன் அணைக்கச் செல்லக் காண,

பட்டணத்தில் வந்ததால் புத்தி மாறிவிட்டதா, என அவள் கத்த,
சட்டெனப் புரிந்த ஒருவன் அந்த அறை 'லிப்ட்' என்று விளக்க,

அப்போது புரிந்தது பட்டிக்காட்டானுக்கு, தான் செய்துவிட்ட தவறு;
அப்போதே அறிந்தான், எளிது இல்லை மனிதரை மாற்றுவது என்று!

:bump2:
 
கடவுளுக்குக் கடிதம்!

பள்ளிக்கூடத்தில் சுற்றுலாவிற்குக் கூட்டிச் செல்ல அழைப்பு;
துள்ளிச் சென்று சிறுமி சொன்னாள், அன்னையை அழைத்து.

அந்தத் தாயோ மிக ஏழை; தேவையான பணத்தைக் கொடுக்க
எந்த வழியுமே இல்லை என்று, வருந்திக் கூறினாள் மகளிடம்.

யோசித்து முடிவெடுத்த சிறுமி, மறுநாள் வேகமாய் எழுந்தாள்;
யாசித்துக் கடவுளிடம் பணம் வேண்டி எழுதினாள், ஒரு கடிதம்,

'கடவுளே! எனக்கு நூறு ரூபாய் பணம் மிக விரைவாய்த் தேவை!
கடிதம் கண்டவுடன் கொடுத்து அனுப்பி விடுங்கள் எனக்கு', என.

கடவுளுக்கு விலாசமிட்ட அக் கடிதத்தை எடுத்த தபால் ஊழியர்,
கடவுளுக்கு எழுதிய வரிகளை ஆவலுடன் படித்து, நெகிழ்ந்தார்!

தன்னால் ஐம்பது ரூபாய்தான் தர முடியும்; மீதியை எவரேனும்
முன்னால் வந்து அளிக்கட்டும், என்று எண்ணி, சிறுமி வீட்டிற்கு

மறுநாள் சென்று பணத்தைத் தந்தார், சிறுமியின் அன்னையிடம்;
மறு பாதிப் பணத்தை எவர் தருவாரோ என அன்னை வியந்தாள்!

மாலை வந்த மகளிடம், ஐம்பது ரூபாய் 'போஸ்ட் மேன்' மாமாவே
வேலை நேரத்தில் வந்து அளித்ததாகச் சொன்னாள், மகிழ்வுடன்!

அன்று இரவு மீண்டும் சிறுமி கடவுளுக்குக் கடிதம் எழுதி வைத்து,
சென்று அஞ்சல் பெட்டியில் சேர்த்து விட்டாள், மறுநாள் காலை!

கடிதம் எடுக்க வந்த தபால் ஊழியர், அன்றும் கண்டார் கடவுளுக்குக்
கடிதம், அதே சிறுமி கையெழுத்தில்! ஆவலுடன் அதைப் படித்தார்.

'மிக்க நன்றி கடவுளே, தங்கள் உடனடி உதவிக்கு! ஆனால், உடனே
தக்க தண்டனை கொடுங்கள், எங்கள் 'போஸ்ட் மேன்' மாமாவுக்கு!

ஐம்பது ரூபாய் மட்டும் தாங்கள் அனுப்பியதில் எனக்குத் தந்து, மீதி
ஐம்பது ரூபாய் தராமல், அவர் தன்னிடமே வைத்துக் கொண்டார்!'


:pray: . . . :typing:
 
வரம் தருவாய்!

அறுபத்தியாறு வயது கணவனும், அவனின்
அறுபது வயது மனைவியும் கொண்டாடினர்,

தம் திருமண நாளின் நாற்பதாவது ஆண்டை,
தாம் விரும்பும் அழகிய ஹோட்டல் ஒன்றில்.

இளம் மெழுகுவர்த்தி தீபங்கள் அங்கு ஆட, தம்
இளம் வயது நாட்களை அவர்கள் அசை போட,

எதிர்பாராத நிகழ்வாக, ஒரு ஒளிரும் தேவதை
எதிரில் வந்து இருவருக்கும் வரம் தர விழைய,

தன் அன்புக் கணவனுடன் உலகைச் சுற்றி வரத்
தான் விரும்புவதாக மனைவி உடனே சொல்ல,

தன் மந்திரக் கோலை ஆட்டிய தேவதை தந்தாள்,
தன் சக்தியால் உருவான இரண்டு டிக்கட்டுகளை!

பொல்லாத கணவனுக்கு தோன்றியது, எந்நாளும்
இல்லாத புதிய வாய்ப்பாகவே இது; மறு கணமே

'அன்பே! உனக்கு மிக வயதாகிவிட்டதே! எனவே,
அன்புடன் இளம் பெண்ணுடன் உலகைச் சுற்றவே

இன்று விரும்புகிறேன்! இதை வரமாகக் கேட்பேன்!',
என்று உரைத்து, தேவதையிடம் மிக்க ஆவலுடன்,

'என்னைவிட முப்பது ஆண்டுகள் இளையவளாக
எனக்கு மனைவி தருவாய்!' என்று கேட்டவுடன்,

தந்திரம் இவன் செய்வதால், கோபமான தேவதை
மந்திரக் கோலை ஆட்ட, மறு வினாடியே இவன்

தொண்ணூறு வயது முதியவனாக மாறிவிட்டான்!
எண்ணவில்லை அவன், தேவதை ஒரு பெண் என்று!

வாழ்க பெண்மை! :cheer2:
 
சந்தேகம் தீர்ந்தது!

மிகவும் சகுனத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர்,
மிகவும் அவசர வேலையாகப் புறப்பட்டுச் செல்ல,

வெளி வாயிலைத் தாண்டும்போது, எதிரில் வந்தார்,
ஒளிரும் பட்டைத் திருநீறு இட்ட பிராமணர் ஒருவர்!

சகுனம் பார்க்கும் நபருக்கு வந்தது பெரும் கடுப்பு - அப
சகுனம் போல ஒற்றை பிராமணர் எதிரில் வந்ததால்!

'ஒற்றையாய் ஏன் வந்து படுத்துகின்றீர்! யாருடனாவது
சற்றே பேசியபடி வரக் கூடாதா?', என்று கடிந்தவுடனே,

'என்னவாகும் என்று நீர் அலட்டுகிறீர்?', என்று கேட்க,
'என்னவாகும் என உமக்குத் தெரியாதோ? போகின்ற

ஒரு வேலையும் நடக்காது, ஒற்றை பிராமணன் எதிர்
வரும் நாட்களில்', என்று சலித்தபடிச் சென்றார்; இவர்

அந்த வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்;
அந்த மனிதர் திரும்புகிறவரை, அமைதியாக இருந்தார்!

மாலை வேளை, உலக மகா கோபத்துடன் திரும்பியவர்,
'வேலை ஒன்றுமே ஆகாமலே முடங்கியது! எல்லாமே

உம்மால் வந்த வினைதான்!', என்று கத்த, அதுவரையில்
சும்மாவே அமர்ந்த இவர், துள்ளிக் குதித்துச் சொன்னார்,

'வேலையை எல்லாம் ஒதுக்கிவிட்டு, நீர் சென்ற எல்லா
வேலைகளும் முடங்கியதா என அறியவே அமர்ந்தேன்!

பட்டையாய்த் திருநீறு போட்டாலும், வீட்டிலே என்னை
சட்டை செய்யாத மனைவி, 'நீர் பிராமணன்தானா?', என

தினம் கேட்டுத் திட்டுவாள்! என் சந்தேகம் தீர்ந்தது இன்று;
மனம் மகிழச் சொல்வேன், நான் ஒரு பிராமணனே என்று!'

:target:
 
காது கேட்காது!

தான் சொல்வது மனைவிக்குக் கேட்பதில்லை எனத்
தன் மன வருத்தம் அதிகரித்தபடியே இருந்த ஒருவர்,

தன் மனைவிக்குக் காது கேட்காது என்று சொல்லி,
தன்னிடமே என்ன வைத்தியம் செய்யலாம் என்று

கூறுமாறு நல்ல மருத்துவரைப் பணிக்க, அவரோ
'கூறுவது கடினம், நோயாளியைப் பாராது', என்றிட,

'மனைவி வருந்துவாள், தங்களிடம் கூட்டி வந்தால்;
எனவே தாங்கள் வேறு வழி கூறுங்கள்'. எனக் கேட்க,

மருத்துவர் சிறிது யோசனைக்குப் பின் உரைத்தார்,
'மருத்துவம் செய்யலாம்; எத்தனை தூரத்திலிருந்து

காது கேட்கிறது என அறிந்து வாருங்கள்'. என்று கூற,
காது வலிமை அறியப் பரீட்சையைத் தொடங்கினார்!

சமையல் அறையில் சப்பாத்தி இட்டபடிக் குனிந்திருந்த
சமையலரசி மனைவியை, 'மாலை என்ன டிபன்?' என்று

இருபது அடி தூரத்திலிருந்து கேட்டார்; பதிலே இல்லை;
இன்னும் ஐந்தடி சென்று, மீண்டும் கேட்க, பதில் இல்லை!

இன்னும் ஐந்தடி அருகில் சென்று, மீண்டும் அதே கேள்வி;
இன்னும் பதிலே வரவில்லை; மிகவும் மனம் சலித்தபடி,

இன்னும் மிக அருகில் சென்று, அவள் காதருகில் நின்று,
இன்னும் ஒரு முறை கேட்க, திடுக்கிட்டு பயந்த மனைவி,

'எத்தனை தடவை அதையே சொல்வேன்? நான் சொன்னது
இத்தனை தடவையும் கேட்கவே இல்லையா?' என்றாள்!

:director:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 213

நட்பின் சிறந்த நிலை...

சிறந்த நட்பைப் பற்றிக் கூறிய திருவள்ளுவர், நட்பின்
சிறந்த நிலையை நமக்கு அழகாகத் தெரிவிக்கின்றார்.

சிறந்த நிலை நட்பிற்கு எதுவென்றால், எப்பொழுதுமே
வேறுபாடு இல்லாது, இயன்ற பொழுதெல்லாம் உதவி,

துணையாக இருந்து நண்பனைத் தாங்குவதே ஆகும்.
இணையிலாக் குறட்பாவை இப்பொழுது காண்போம்.

'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை'. இது அவர் வாக்கு.

ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டே காலம் தள்ளப்
பெருவாரியான மக்கள் விரும்புகின்ற காலமே இது.

இவர் எமக்கு இத்தன்மை உடையவர் என்றும், யாம்
இவருக்கு இத்தன்மை உடையவர் என்றும் கூறினால்,

நட்பின் பெருமையே குன்றிவிடும் என்கின்றார் அவர்.
நட்பின் பெருமை குன்றும் இதைச் செய்யவே கூடாது.

'இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு'. இது குறள்.

:tea:
 
அன்பான நண்பர்...

வேறுபாடுகளைப் பெரிதாகப் பாராட்டாமல், தத்தம்
வேறுபாடுகளை ஏற்பவர்கள் அன்பான நண்பராவர்!

எப்போதும் மற்றவரின் குற்றம் கண்டு வாழ்ந்தால்,
தப்பாது அந்த நட்பு விரைவிலேயே முறிந்துவிடும்!

:whip: . . :pout:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 214

ஆராயாத நட்பு...

நட்புக் கொண்ட பின்னர், அதை விடுவது எளிதல்ல;
நட்புக் கொள்ளும் முன், ஆராய்தல் மிகவும் தேவை.

ஆராயாது கொண்ட தீய நட்பு, பழகப் பழக மேலும்
தீராத கேடுகளை உண்டாகும் தன்மை உடையது!

'நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு', எனக் குறள்.

இன்னும் எத்தனை கேடு விளைவிக்கும் தீய நட்பு
என்னும் கருத்து உரைக்க, ஒரு உவமை கூறுகிறார்.

திரும்பத் திரும்ப ஆராயாது கொண்ட நட்பு, இறப்பை
விரும்பும் அளவுக்குத் தீராத துயரத்தைக் கொடுக்கும்!

'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்', என எச்சரிக்கை செய்கிறார்.

ஒருவரின் குணங்கள் என்ன, குடிப்பிறப்பு எத்தகையது,
அவர் செய்த குற்றங்கள் யாவை, குன்றாத நற்பண்புகள்

என்ன, என அனைத்தையும் அறிந்த பின், நட்புக் கொள்ள
எண்ணி விழைதலே நன்மை தரும், என்று உரைக்கிறார்.

'குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு'. இது குறள்.

அன்புடன் பழக இனிய நண்பர்கள் தேவை; அவர்களின்
பண்புகள் ஆராய்ந்து அறிந்து, நட்புச் செய்து, சிறப்போம்!

:grouphug:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 215

யாரிடம் நட்பு...

பழி வந்து சேர்ந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு கொண்டு,
இழி செயல் புரியாத, நல்ல குடியில் தோன்றியவரை, நாம்

பொருள் ஏதாவது கொடுத்தேனும், நண்பராக்க வேண்டும்.
அரும் கருத்தாக இதை ஒரு குறட்பாவில் அமைக்கின்றார்.

'குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு'.

நாம் ஒருவேளை தவறேதும் செய்தால், உடனே கண்டித்து,
நாம் கண்ணீர் சிந்துமளவு செய்து, அறிவுரை வழங்க வல்ல

நல்ல பண்பாளரை, ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, அவரையே
நல்ல நண்பராக்க வேண்டும், என்றும் அறிவுறுத்துகிறார்.

'அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்'. இது குறள்!

கேடு வருவதை எவருமே விரும்ப மாட்டார்; ஆனாலும்,
கேடு வந்தால் ஒரு நன்மை; நல்ல நண்பரை அறியலாம்!

நம் நண்பரை அளந்து காட்டிவிடும் கோலாக இருப்பதே
நம் கேடு என்பதை அறிவுறுத்துகின்றார், திருவள்ளுவர்.

'கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்', என்பது குறட்பா.

எவரை நண்பராகக் கொள்ளலாமென ஆராய்ந்து, அறிந்து,
அவரை நட்புப் பாராட்டினால், நாம் வாழ்வில் உய்யலாம்!

:first:
 
Dear Raji!

I miss your comments and criticism - more than I thought I would do!

I was stressed out. About a dozen posts to be prepared on daily basis and the

power cut scheduled (+ unscheduled) ranging over from 3 to 9 hours a day!

What more do I need to become cross with the whole world? :mad:

I am not justifying my actions. I am just explaining myself.

You have been real closes to me all my life .

So please come back into my threads and let things go back to normal!

This does not feel normal to me. I am sure it does not feel normal to you also.

Let by bygones be bygones. :hug:

Hoping to see you as the lovely cheerful person I have always

known you to be! :kiss:

your loving sister, :tea:
visal akka.
 
Last edited:
I continue to be a cheerful person but keep away from commenting

since the replies to my comments come in the most unexpected angle!!

:decision: ... :cool:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 216

விலக்கவேண்டும்...

நல்ல நண்பர்களைத் தேர்வு செய்யும் வழி உரைத்து,
அல்ல நண்பரை விலக்கவும் கூறுகிறது, வள்ளுவம்!

ஒருவரின் நற்பயன் என்னவென்றால், அறிவு அற்ற
ஒருவரின் நட்பைத் துறந்து விடுவதே, என்கின்றார்!

'ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்', என்பது குறட்பா.

ஊக்கத்தைச் சிதைக்கும் செயல்களை நினையாது,
ஊறு வந்தபோது விலகுவோர் நட்பைத் தொடராது

இருப்பது நல்வழி என்று, திருவள்ளுவர் காட்டுகிறார்.
சிறப்புற வாழ, இவற்றை நாம் மனதில் கொள்வோம்!

'உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு', எனக் குறள்.

தாம் துன்புற்ற நேரம் ஒதுங்கிய நண்பரை நினைத்தால்,
தாம் இறக்கும் தருவாயிலும், அது உள்ளத்தைச் சுடும்.

'கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்', என எச்சரிக்கின்றார் அவர்.

மாசு மனத்தில் இல்லாதோரை நண்பராக்கிக்கொண்டு,
மாசுள்ளோரை, ஏதேனும் தந்தாவது விலக்கவேண்டும்!

'மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு', என்பது அறிவுரை!

:pout:
 
நண்பனே! நண்பனே!

சிறு வயது முதல் ஒரே பள்ளி சென்று, தோழராயினர்;
ஒரு நிமிடமும் பிரியாது, நாள் முழுதும் உலவினர்!

எனக்கு நீ, உனக்கு நான் என்று இருவருமே கருதினர்;
தனக்கு எது கிடைத்தாலும், பகிர்ந்து அக மகிழ்ந்தனர்!

நண்பர்கள் என்றால் இவர்களே என்றும், மிகச் சிறந்த
நண்பர்கள் இவர்களே என்றும் முத்திரையே பெற்றனர்!

நாட்கள் உருண்டு ஓடி, ஆண்டுகள் பல சென்ற பின்னும்,
நாளுக்கு ஒரு முறையேனும், தொலைபேசி மகிழ்ந்தனர்!

இருவருக்கும் திருமண வயது வந்து, ஒருவன் தேடலில்
இரு பெண்கள் அகப்பட்டு, நண்பனிடம் யோசனை கேட்க

விழைந்து, நேரில் சென்று குழைந்து, வெட்கத்துடன் கூற,
விரைந்து விவரங்கள் கூறுமாறு அவனும் பணிக்க, இவன்

'ஒருத்தி மிக அழகி; ஏழைப் பெற்றோரின் ஒரே மகள்; இன்-
னொருத்தி சுமாரான தோற்றம்; பணக்காரரின் ஒரே மகள்',

என்று இருவரைப் பற்றியும் கூற, நண்பன் யோசித்தான்;
'நன்று நண்பா! அழகு மனைவியே ஓர் அற்புதமான பரிசு!

பொருளை எப்படியும் தேடலாம்! அழகு இறைவனின் வரம்;
பொருளை நீ சேர்ப்பாய்; அழகியை மணந்து சிறப்பாய்', என

அறிவுறுத்த, இவன் அகம் மிக மகிழ்ந்தான்; காரணம் என்ன?
அறிவுரை சிறந்தது; தன் மீது நண்பனின் நம்பிக்கை அரியது!

தான் பொருள் சேர்த்துக் குடும்பத்தைக் காப்பதை நம்புகின்ற,
தன் நண்பனே உயர்ந்தவன் என நெஞ்சில் நிறைவு பெற்றான்!

அன்புடன் இவன் அரவணைக்க, காதோரம் அவன் கேட்டான்,
'அன்பு நண்பா! எனக்கு நீ இன்னொருத்தியின் விலாசம் தா!

:phone:. . :peace:

குறிப்பு:


இது அறிஞர் அண்ணாவின் குட்டிக் கதையை முன்வைத்து எழுதியது!
 
தேர்வு...

நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து நட்புக் கொண்டால்,
நல்ல முறையிலே நம்முடைய காலச் சக்கரம் சுழலும்!

அல்லவருடன் கூடி, பின்பு பிரிய முடியாது தவித்தால்,
அல்லல் வந்து வாட்டும், நம்முடைய காலம் முழுதும்!

:decision: . . . :angel:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 217

நல்ல நட்பு, என்றுமே தொடரும் என்பது உண்மை;
நல்ல நட்புக்கு உண்டு, பழைமை வரும் ஒரு தன்மை.

பழைய நட்பின் பெருமைகளை நன்கு உரைக்க, ஓர்
அரிய அதிகாரமே அமைக்கின்றார், திருவள்ளுவர்.

பழைமை பாராட்டுவது என்னவென்றால், நண்பர்கள்
உறவை என்றுமே அழியாமல் பாதுகாப்பதே ஆகும்!

'பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு', என்பது குறள்.

பழைமையான நட்பு தரும் உரிமையால், சில சமயம்
பழைய நண்பர்கள், சில செயல்களைச் செய்திடுவார்.

தவறென்று அவற்றைக் கருதாது, உரிமையால் செய்த
செயலென்று ஏற்கவேண்டும் என்கின்றார், வள்ளுவர்!

அவ்வாறு ஏற்காது குற்றம் சொல்லிவிட்டால், பலநாள்
எவ்வாறு பழகி வந்தாலும், அது வீணாகப் போய்விடும்.

'பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கடமையாக் கடை', என எச்சரிக்கை!

நட்பின் பழைமையைப் புதுமை மாறாது காப்போம்;
நட்பின் பெருமைகளை என்றென்றும் உணர்வோம்!

:grouphug: . . . :nod:
 
தவறை உணரவேண்டும் ..

நல்ல நண்பன் ஒருவரின் தவறைச் சுட்டிக் காட்டினால்,
கொள்ள வேண்டும் அதை, தனது நன்மைக்கே என்று!

'நான் தவறே செய்யேன்!', என்று அவனை எதிர்த்தால்,
'நான் உன் வழி வாரேன்', என்று அவனும் ஒதுங்குவான்!

:car:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 218

அன்பு விலகாது!

நட்பு நீண்டநாள் நீடித்து இருந்தால், அதுவே சிறந்தது;
நட்பு விலகாது, நண்பர் விரும்பாததைச் செய்தாலும்!

தன் மனம் வருந்தும் செயலை ஒரு நண்பர் செய்தாலும்,
நண்பரின் அறியாமையோ, உரிமையோ என நினைத்து,

நட்பை விடாது தொடரவேண்டும், என்கிறார் வள்ளுவர்.
நட்பை சிறப்பாக்கும் அந்த சீரிய குறட்பா இதுவே ஆகும்!

'பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்'. இது ஒரு வழிகாட்டியே!

நீண்ட கால நண்பர்கள் தமக்கு கேடு தந்தாலும்கூட, அந்த
நீண்ட கால நட்பை விடார், நட்பின் இலக்கணம் அறிவோர்!

'எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு', என்கிறார் அவர்.

அன்பின் அடிப்படையில் வந்த நட்பு, என்றுமே முறியாது;
அன்பின் காரணத்தால், அது எக்காலமும் தொடந்து வரும்.

அன்பு நண்பர், ஒருவருக்கு அழிவு வரும் செயல் செய்தாலும்,
அன்பு விலகாமல், அந்த நல்ல நட்பு தொடர்ந்தே இருக்கும்!

'அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்', என்பது குறட்பா.

பல காலம் தொடந்து வரும் நல்ல நட்பை நாமும் அறிவோம்;
சில நல்ல நண்பர்களை அன்புடன் நாடி, வாழ்ந்து சிறப்போம்!

:grouphug: . . :angel:
 
இருக்க முடியுமோ?

நாவினால் சுட்ட வடு ஆறாது என்று உரைத்த வள்ளுவரே,

நண்பன் தீது செய்தாலும் நட்பை விடக் கூடாது என்கிறார்!


நண்பன் ஆறாத வடுவாகச் சொல் அம்பை வீசினாலும், தன்

நண்பனைப் போற்றுபவர் இருக்க முடியுமோ? அறியேன்!

:noidea:
 
வள்ளுவரைப் போற்றுவோம் ..... 219

நட்பின் நாட்கள் வீணாகும்!

நல்ல நண்பர்கள் நட்பை என்றும் மறக்கவே மாட்டார்;
அல்லவை வரினும், நட்பைத் தொடருவார் என்றார்.

நட்பின் பெருமைகளைப் பலவாறு உரைத்த வள்ளுவர்,
நட்பின் நாட்கள் எப்போது வீணாகுமெனக் கூறுகிறார்!

தன் நண்பரைப் பற்றிச் சிலர் அவதூறு கூறினும், அதை
தன் மனதில் எண்ணாது, நண்பரை நம்பிடுவார் சிலர்.

ஆனால் நம்பியவருக்கே இந்த நண்பர் தீமை செய்தால்,
இந்நாள் வரை நட்புக் கொண்ட காலமே வீணாகிவிடும்!

'கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்', என்பது எச்சரிக்கை!

நல்ல நண்பரைச் சேர்ந்தோம் என்றால், என்றுமே நாம்
அல்லவை செய்யாது, நட்பைக் காத்து, உயர்திடுவோம்!

:tea:. . :first:
 
வள்ளுவத்தின் வழிகாட்டல்!

நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறையின் தீர்ப்பு!

'நம்பினாரைக் கெடுக்காதீர்'; இது வள்ளுவத்தின் வழிகாட்டல்!

:director:
 

Latest posts

Latest ads

Back
Top