Raji Ram
Active member
புதிய தோற்றம்!
'கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு', என்று,
கருப்பு விசைப் பலகையைத் தேர்வு செய்து,
இரண்டு ஆண்டுகளாக ஓயாது தட்டி வந்திட,
மறைந்து போயின அதிலுள்ள எழுத்துக்கள்!
பழமொழி, 'எறும்பு ஊரக் கல் தேயும்' என்பதே;
புதுமொழி, 'விரல்கள் தட்ட எழுத்துத் தேயும்!'
தட்டெழுதும்போது, எழுத்துக்களைப் பாராது
தட்டெழுதுவோருக்குப் பரவாயில்லை; தாம்
தட்டெழுதும்போது, எழுத்துக்களைத் தேடியே
தட்டெழுதும் சிலர் வந்தால், கடினம் ஆகுமே!
இறகு வருடுவதுபோல, மென்மையாக உள்ள
எனது விசைப்பலகையை மாற்ற மனமில்லை!
செய்தித்தாளிலே, ஒரு வலி நிவாரணி பற்றிய
செய்தியுடன் வந்தது பெரிய விளம்பரம்! அதில்
ஆங்கில எழுத்துக்கள் Q, W, O, Z தவிர மற்றவை
பாங்காக அச்சில் இருந்ததைப் பார்த்ததும், ஒரு
அருமையான யோசனை உதிக்க, எழுத்துக்களை,
பொறுமையாகத் தனித் தனியே வெட்டி எடுத்து,
புதிய 'செலோடேப்' உதவியுடன் பொருத்திவிட,
புதிய தோற்றம் பெற்றுவிட்டது விசைப்பலகை!
அழியாத எழுத்துக்களின் மீதும் 'செலோடேப்'பை
அழகாக ஒட்டிவிட்டேன், அவை அழியாதிருக்க!
O வில் வால் இட Q ஆனது; Y எளிதில் K யானது;
M தலைகீழாக்கிட, W ஆனது; N திரும்பி Z ஆனது!
புதிதாக விசைப்பலகை இனி வாங்கி வந்தாலும்,
புதிய எழுத்துக்களைக் காத்திடும் 'செலோடேப்'!