• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


இசைப்பயணம் தொடர . . . . .


இறையை அடையும் எளிய வழிதான்
இறையைப் பற்றிப் பாடுவது ஆகும்!

உன்னத இசைக் குடும்பத்தில் பிறந்து,
உன்னத இசையைப் பரப்பி வரும் ஒரு

இன்னிசை அரசியின் நல்ல வாழ்வை,
இனிய வகையினில் நடக்க விடாமல்

செய்துவிட்டார் கணவர், தற்கொலை
செய்து கொண்டு, இன்னுயிரை விட்டு!

உலக வாழ்வில் துயரம் வந்துவிட்டால்,
உலகை விட்டுச் செல்லுவதா நல்வழி?

வாழ்வாங்கு வாழ்ந்திட விழையாது, தன்
வாழ்வையே முடிப்பது என்ன நியாயம்?

இத் துயரம் தாங்கும் சக்தியை அளிக்க,
இக் க்ணம் இறைவனைப் பிரார்த்தித்து,

மனம் தளராது அவரது இசைப்பயணம்,
இன்னும் தொடர நாம் வேண்டுவோம்!


:pray2:
 
RR Mam, yes I happen to look in the tamil (pudhya thalaimurai channel,they are very prompt to deliver first news,)news channel ,its very disturbing ,as stated to media ,he had inform as to leave car for service,but the end had happen .God has to give her mental & physical strength to over come and sustain the life ,so sad ,as this season are very special for all music & dance legends. ( my sisters & nm are very close friends ,we do not have that guts to talk and console its very shocking,as she given media as no family issue matters,her mil has passed away some day\ month ,so due to depression .) oh god pls bless her.:(:pray2:
 

Dear TVK Sir and Dr. Narayani,

My friend and student happened to see the news on Kalaignar TV as flash news and immediately rang me up. I am still in a

state of shock and can't digest the news, though it is confirmed. Smt. N. M has a long way to go, since she is still very young.

Only the Almighty can give her the strength to bear this loss and continue her musical journey. :pray2:
 
We are deeply saddened by the sudden demise of Smt. Nithyasree's husband. Words fail to express our feelings. Our thoughts and prayers are with Smt. Nithyasree and her family.
 

உலகம் அழிந்ததே!


உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம்

உலகை விட்டுச் செல்லும் விதமாகப்

பிரளயம் வந்துதான் உலகு அழியுமா?
பிரளயம் வராமலே உலகு அழிந்ததே!

பெண்ணைத் தேவிகளின் உருவாகவே
எண்ண வேண்டும் என்று வேண்டும் நம்

பாரத மண்ணில், பெண்களின் நிலைமை
பார் போற்றும் வண்ணமா இருக்கிறது?

உலகம் முழுவதும் வன்முறை படர்ந்து,
உலகில் மக்களை ஆட்டிப் படைக்கிறது!

கொலை, கொள்ளை, பலாத்காரம் என்று
நிலை தடுமாறித் தவறான பாதையிலே

மனித குலம் செல்வதுதான் நிஜ அழிவு!
மனித குலத்திற்கு இதில் வெற்றிதானே!

மனித நேயம் ஒரு அதிசயப் பொருளாகி,
இனிய வாழ்வை அழிப்பதே அழிவுதானே!


:evil: . . .
:ohwell:
 
No doubt, everyone has a choice to live or die, in fact every breath is an option, for
some even a minute is a fate. There is a saying that the difficult years
for a person is between the adolescent stage to the stage of becoming old.

Balasubramanian
 

Dear Bala Sir,

Happiness lies within oneself. A person can be happy with what God has bestowed on him but also be unhappy

by always thinking about what all he does NOT possess! So, any stage of life is happy or unhappy accordingly!
 
ஜீரோ ரூபாய்!

IMG_3960.JPG
 

ஐந்தாவது தூண்!

ஊழலும், லஞ்சமும் விஷ ஜுரம் போல
ஊரெங்கும் பரவியிருக்கும் வேளையில்,

நெஞ்சில் பயமில்லாமல், நேர்மையுடன்,
லஞ்சம் கொடுக்க, வாங்க மாட்டேன் என

மக்களை நினைக்கத் தூண்டும் முயற்சி;
அக்கறையோடு வந்தது ஐந்தாவது தூண்!

இசை விழாக் கச்சேரி அரங்க வாயிலில்,
இசை கேட்கும் ரசிகர்களுக்குக் கிட்டியது

அழகு வண்ணத்தில் ஒரு காந்தி நோட்டு;
அழகாய் எழுதியுள்ளனர் - 'ஜீரோ ரூபாய்'!

லஞ்சம் யாரேனும் கேட்டால், அப்போது
அஞ்சாது அந்த நோட்டையே கொடுத்து,

தங்கள் அமைப்புக்குத் தொலைபேசிடத்
தந்துள்ளார் அவர்களின் இரு எண்களை!

அதெல்லாம் சரி! காமெடி என்னவெனில்,
அதிலிருந்த 'இது ரூபாய் நோட்டு அல்ல'!

:nono:
 

மனதைக் கலக்கிய விருத்தம்!

எதிர்காலம் என்னவென யார் அறிவார்?
புதிர்காலம் என்றே அதனைக் கூறலாம்!

மனம் இதை அறிந்தாலும், நேற்று மாலை
மனதைக் கலக்கிவிட்டது ஒரு விருத்தம்!

அருள் புரியக் காஞ்சி நகரில் வீற்றிருக்கும்
அருமையான காமாக்ஷி அன்னை பற்றிய

விருத்தத்தை, இளம் பாடகி, கேட்போரை
உருக்கும் வண்ணம் பாடி வரும் பொழுது,

தங்கத் தாலி பற்றிய வர்ணனை வந்ததும்,
அந்த வரிகளைப் பல விதமாகப் பாடினார்!

அன்று கேட்ட பலர் மெய் மறந்தனர்; நான்
நேற்று கேட்ட போது மனம் கலங்கினேன்!

தனக்கு அந்த மங்கலப் பொருளை அணிய
விலக்கு விரைவில் வருமென அறிந்தால்,

இந்த விருத்தத்தை அவர் பாடியிருப்பாரா?
இந்த ஐயமும் எழுந்து என்னை வருத்தியது!


:pout:
 

அன்று கேட்ட பலர் மெய் மறந்தனர்; நான்


நேற்று கேட்ட போது மனம் கலங்கினேன்!


1 - YouTube
 

காத்திராத காலம்!


காலம் எவருக்கும் காத்திருக்காது; அது

நாளும் நிற்காத ஓட்டத்திலே இருக்கும்!

நம்மால் இயன்றவரை நல்லவற்றையே
நாம் செய்தால், மன அமைதி கிடைக்கும்.

உலகம் அழியும் என வதந்தியைப் பரப்பி,
பலரும் காசி நகரை அண்டிச் சென்றனர்!

காசி நகர் மட்டும் அழியாது இருக்குமென
பேசிச் சிலர் திரிந்ததால் இப்படி முடிவாம்!

அந்தப் பிரளய பயம் ஏற்படுத்திய நாளும்
வந்த வழியே சென்று, தந்தது மன நிம்மதி!

வன்முறை ஒழிந்து நல்வழி பிறந்திட, நாம்
பன்முறை இறையை நாளும் துதிப்போம்!

சாந்தி உலகில் நிலவட்டும்! :pray2:
 
Mayan predictions that the world will end on the 21st of December, 2012 have fooled everyone.
Some started talking about nuclear holocaust, etc. Mayan Calendar made everyone nervous,
however, it has created an awakening in the minds of the people in the entire Universe.

December 21, 2012 is yet another April 1st. and brings all the possible scenarios into focus.
Scientists are yet to understand the nature completely so as to predict as to how this can happen.
People were looking forward to the dawn of December 22, 2012 watching the clock continue
to tickle without any major calamity. Hope the trains or air crafts have not been halted anywhere
imagining the reaction on December 21, 2012 or any Govt meetings were postponed at that hour.

Balasubramanian
 

இறையிடம் சரணடைய...


இறையிடம் சரணடைய எளிய உபாயம்

நிறைவான பக்தியுடன் இசை பாடுவதே!

ஸ்தாயிகள் மூன்று முழுமையாகப் பாட,
சாதனை செய்யவும் தேவையே இல்லை.

உயர்ந்த குரல் வளமும் வேண்டாம்; ஒரு
உயர்ந்த சுருதியில் பாடவும் வேண்டாம்.

இறையின் ரூபங்கள் எதிரில் வந்ததாகக்
குறையின்றிக் கற்பனை செய்து, மிகவும்

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து, சுருதி
பழுதில்லாமல் சேர்ந்து இருந்திடப் பாடி,

மக்களை மகிழ்வித்தால் போதுமே; அந்த
மக்களும் இறையிடமே சரணடைவாரே!

:hail: . . . :sing: . . . :pray2:
 

இறையிடம் சரணடைய...


இறையிடம் சரணடைய எளிய உபாயம்

நிறைவான பக்தியுடன் இசை பாடுவதே!

ஸ்தாயிகள் மூன்று முழுமையாகப் பாட,
சாதனை செய்யவும் தேவையே இல்லை.

உயர்ந்த குரல் வளமும் வேண்டாம்; ஒரு
உயர்ந்த சுருதியில் பாடவும் வேண்டாம்.

இறையின் ரூபங்கள் எதிரில் வந்ததாகக்
குறையின்றிக் கற்பனை செய்து, மிகவும்

அழுத்தம் திருத்தமாக உச்சரித்து, சுருதி
பழுதில்லாமல் சேர்ந்து இருந்திடப் பாடி,

மக்களை மகிழ்வித்தால் போதுமே; அந்த
மக்களும் இறையிடமே சரணடைவாரே!

:hail: . . . :sing: . . . :pray2:

Really it is a nice and mind provoking one. I like it very much. Hats off to you.

Balasubramanian
 

திரு வாய் திற . . .


உண்டி முதற்றே உலகு என்ற எண்ணத்தில், சிற்-

றுண்டி பல வகைகள் கண்டுபிடித்தனர் நம்மவர்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சில பலகாரங்கள்
ஒவ்வொரு வீட்டிலும் நைவேத்யமாகச் செய்வார்.

'திருவாய் திற; ஒரு வாக்களி' என்ற வாசகத்தை,
'திருவாதிரை; ஒரு வாய்க் களி' என்ற வாசகமாக

மாற்றி, ஆருத்திரா தரிசன நன் நாளில், சிவனைப்
போற்றிக் களிக்க, நாம் 'களி'யைப் படைக்கிறோம்!

சிறு வயதில், எங்கள் கிராமத்தில், உற்சவ மூர்த்தி
ஒரு அழகிய அரச மரப் பிள்ளையாரைச் சுற்றி வர,

'பட்டி சுற்றுகின்றார் சுவாமி' என்று மகிழ்ச்சியாகக்
குட்டிகள் அனைவரும். அம்மாக்களுடனே ஓடுவர்!

சத்தமான வெடிகள் முழங்கிட, மங்கல நாதஸ்வர
வாத்தியம், மேளம் ஒலித்திட, பூ அலங்காரத்தில்,

இறைவன் பவனி வருவது, அனைவர் மனதிலும்
நிறைவான காட்சியாகப் படர்ந்து மகிழ்விக்கும்!

இனிய இல்லம் திரும்பியவுடன், நைவேத்யமான
இனிப்புக் களியுடன், சுவையான கூட்டும் கிட்டும்!

கூட்டில் இடும் காவத்தங்கிழங்கு, புது விதமாகவே

கூட்டும் அதன் சுவையை! மறவோம் அச்சுவையை!

தென்னாடுடைய சிவனே போற்றி! :hail: . . . :pray:

 

திரு வாய் திற . . .


உண்டி முதற்றே உலகு என்ற எண்ணத்தில், சிற்-

றுண்டி பல வகைகள் கண்டுபிடித்தனர் நம்மவர்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சில பலகாரங்கள்
ஒவ்வொரு வீட்டிலும் நைவேத்யமாகச் செய்வார்.

'திருவாய் திற; ஒரு வாக்களி' என்ற வாசகத்தை,
'திருவாதிரை; ஒரு வாய்க் களி' என்ற வாசகமாக

மாற்றி, ஆருத்திரா தரிசன நன் நாளில், சிவனைப்
போற்றிக் களிக்க, நாம் 'களி'யைப் படைக்கிறோம்!

சிறு வயதில், எங்கள் கிராமத்தில், உற்சவ மூர்த்தி
ஒரு அழகிய அரச மரப் பிள்ளையாரைச் சுற்றி வர,

'பட்டி சுற்றுகின்றார் சுவாமி' என்று மகிழ்ச்சியாகக்
குட்டிகள் அனைவரும். அம்மாக்களுடனே ஓடுவர்!

சத்தமான வெடிகள் முழங்கிட, மங்கல நாதஸ்வர
வாத்தியம், மேளம் ஒலித்திட, பூ அலங்காரத்தில்,

இறைவன் பவனி வருவது, அனைவர் மனதிலும்
நிறைவான காட்சியாகப் படர்ந்து மகிழ்விக்கும்!

இனிய இல்லம் திரும்பியவுடன், நைவேத்யமான
இனிப்புக் களியுடன், சுவையான கூட்டும் கிட்டும்!

கூட்டில் இடும் காவத்தங்கிழங்கு, புது விதமாகவே

கூட்டும் அதன் சுவையை! மறவோம் அச்சுவையை!

தென்னாடுடைய சிவனே போற்றி! :hail: . . . :pray:


You need special Kali for this excellent recitation. Hats off to you.

Balasubramanian
 

Latest ads

Back
Top