• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


சண்டை - சமாதானம்!


தினமும் சண்டை ஒரு முறையாவது போட்டு,

தினமும் சமாதானம் செய்யும் தம்பதி உண்டு!

வாயாற வார்த்தை அபிஷேகம் செய்தபடியே,
ஓயாது சச்சரவு செய்து, அதில் மகிழ்ந்திடுவர்!

விந்தையான இது போன்ற தம்பதியர் சிலரை,
சிந்தை அதிசயிக்க நானும் பார்த்திருக்கிறேன்!

மனைவி எது கேட்டாலும், கணவன் அப்போதே
மறுப்பார்; ஆனால் மனைவி வருந்த மாட்டாள்!

அப்படியே தன் விருப்பம் நிறைவேற, வழியை
எப்படியோ கண்டுபிடிப்பாள்; அதை முடிப்பாள்!

எப்படிச் சண்டை மூண்டு எழுந்தாலும், அதுவும்
எப்படியும் சமாதானத்தில் முடியும் அல்லவா?


:argue: . . . :hug: . . . :peace:
 
"மனைவி எது கேட்டாலும், கணவன் அப்போதே
மறுப்பார்; ஆனால் மனைவி வருந்த மாட்டாள்!"

அப்படியே தன் விருப்பம் நிறைவேற, வழியை
எப்படியோ கண்டுபிடிப்பாள்; அதை முடிப்பாள்"


"அனுபவம் பேசுகிறது தவக்கவி அவர்களே!"


tvk


 

தவக்கவி அவர்களே!

2 + 2 = 4 என்று தயவு செய்து எண்ண வேண்டாம்! :nono:
 

பொங்கலோ பொங்கல்!!


சூடாகச் சாதம் வைக்கலாமென்று,
நேராகச் சமையல் அறை சென்று,

அரை ஆழாக்கு அரிசியை வைத்து,
சிறு கட்டுரை எழுத எத்தனித்தேன்!

திடீரென்று ஒரு பட்டாசின் சத்தம்;
படீரென்று பீங்கான் உடையும் ஒலி!

திடுக்கிட்டுச் சென்று நோக்கினால்,
நடுக்கத்தைத் தந்தது கண்ட காட்சி!

குக்கரின் 'குண்டு' பறந்து, தடாலென
பக்கத்தில் இருந்த பீங்கான் தட்டைப்

பதம் பார்த்தில், தட்டும் உடைந்தது!
சாதம் குழைந்து, 'Gasket' ஐ உடைத்து,

அடுப்பிலும், சுவற்றிலும் வீசியடிக்க,
அடுப்பிலிருந்த குக்கர் பறந்து போய்,

பெரும் ஓசையுடன் தரை இறங்கியது;
ஒன்றும் அறியாததுபோல் அமர்ந்தது!

பின் என்ன? இரவு உணவு உப்புமாதான்!
பின்னிரவு ஆகிவிட்டது சுத்தம் செய்ய!

பொங்கல் வைக்க இரு நாட்கள் இருக்க,

பொங்கலோ பொங்கல் இரவு நேரத்தில்!
:boom:

 

Dear Kunjuppu Sir,

"அப்படியே தன் விருப்பம் நிறைவேற, வழியை
எப்படியோ கண்டுபிடிப்பாள்; அதை முடிப்பாள்"

I must confess ...
நான் அவள் இல்லை! :D
 

பொங்கலோ பொங்கல்!!


சூடாகச் சாதம் வைக்கலாமென்று,
நேராகச் சமையல் அறை சென்று,

அரை ஆழாக்கு அரிசியை வைத்து,
சிறு கட்டுரை எழுத எத்தனித்தேன்!

திடீரென்று ஒரு பட்டாசின் சத்தம்;
படீரென்று பீங்கான் உடையும் ஒலி!

திடுக்கிட்டுச் சென்று நோக்கினால்,
நடுக்கத்தைத் தந்தது கண்ட காட்சி!

குக்கரின் 'குண்டு' பறந்து, தடாலென
பக்கத்தில் இருந்த பீங்கான் தட்டைப்

பதம் பார்த்தில், தட்டும் உடைந்தது!
சாதம் குழைந்து, 'Gasket' ஐ உடைத்து,

அடுப்பிலும், சுவற்றிலும் வீசியடிக்க,
அடுப்பிலிருந்த குக்கர் பறந்து போய்,

பெரும் ஓசையுடன் தரை இறங்கியது;
ஒன்றும் அறியாததுபோல் அமர்ந்தது!

பின் என்ன? இரவு உணவு உப்புமாதான்!
பின்னிரவு ஆகிவிட்டது சுத்தம் செய்ய!

பொங்கல் வைக்க இரு நாட்கள் இருக்க,

பொங்கலோ பொங்கல் இரவு நேரத்தில்!



குண்டு ஒன்று பறந்து சென்று தாக்கினாலும்
மண்டையைப் பதம் பார்க்காமல் இருந்ததே! :hail:

சமர்த்துக் குக்கர் வாரி இறைந்த hot பேஸ்ட்
சர்மத்தில் செட்டில் ஆகாமல் இருந்ததே!! :hail:

தரையில் soft லேண்டிங் செய்த குறும்புக் குக்கர்
அறையின் டைல்களைப் பிளக்காமல் இருந்ததே! :hail:

Three-in-one accident தவிர்க்கப்பட்டது பெண்ணே!
Thanks to விக்னேஸ்வர், முருகன் & அனுமன்!
:hail:
 
Last edited:

Dear Kunjuppu Sir,

"அப்படியே தன் விருப்பம் நிறைவேற, வழியை
எப்படியோ கண்டுபிடிப்பாள்; அதை முடிப்பாள்"

I must confess ...
நான் அவள் இல்லை! :D

Do I know her by any chance??? :rolleyes:
 
..........
தரையில் soft லேண்டிங் செய்த குறும்புக் குக்கர்
........
soft லேண்டிங் ?? :nono:

அடுப்பிலிருந்த குக்கர் பறந்து போய்,

பெரும் ஓசையுடன் தரை இறங்கியது;
:drum:
 

உலகம் உய்ய வேண்டுவோம்!


தை மாதம் பிறந்துவிட்டது; நல்ல
நெய் ஊற்றிச் சர்க்கரைப் பொங்கல்,

அருஞ்சுவைக் குழம்பு, கரும்புடன்,
வரும் வெண் பொங்கல், வடையும்!

ஒளி தந்து உலகைக் காக்க உலவும்
ஒளி மயமான நம் சூரிய பகவானுக்கு

நாம் நன்றி காட்டும் நன்னாளே இது;
நம் உள்ளம் மகிழச் சுற்றி வரும், நம்

நட்பையும், சுற்றத்தையும் சந்தித்து,
நட்பை மேம்படுத்திக் கொள்ளவும்,

உலகம் உய்ய வேண்டவும், இன்று
உறுதி பூண்டு, கொண்டாடுவோம்!


:pray2: . . . :grouphug:
 
Soft landing since it landed on its base and

stood innocent when you entered the kitchen!!!

May it was not a silent landing

but it was a soft landing no doubt

since none of the tiles even

cracked due to the impact!!! :)
 
Last edited:

இன்றைய சிறப்பு...


இன்று பொழுது புலர்ந்ததும், வைத்தது
நன்கு சகோதரர்கள் வாழ வேண்டிடும்

கனுப் பிடியே! 'காக்கா பிடி வெச்சேன்;
கனுப் பிடி வெச்சேன்; காக்கை கூட்டம்

கலையாதிருப்பதுபோல, என் கூட்டம்
கலையாதிருக்கணும்' என்று வேண்டி,

வண்ணச் சாத உருண்டைகள் வைத்து,
எண்ணத்தில் ஒற்றுமை வளர்த்தாச்சு!

சகோதரர்கள் நலனை வேண்டுவதற்கு,
சகோதரர்கள் கையில் ராக்கி கட்டுவர்

பெண்கள் வட நாட்டிலே; நம் பெண்கள்
தென் நாட்டில் செய்யும் முறை இப்படி!

மாடு கன்று வைத்திருப்போர், அழகாக
மாட்டுக் கொம்புகளுக்கு வண்ணமிட்டு,

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதை
நாட்டில் நாம் காண்பதும் இன்றுதானே!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக! :pray2:
 
Thank god you are Ok Raji, that I enjoyed the interaction between sisters.. I think it happened to my mom once.. and the mess was unbelievable.. I understand.. hope you all had a great pongal day.. :-)
 
.. I think it happened to my mom once.. and the mess was unbelievable..
Dear Bushu,

God saved me though I had a forced cleaning of the walls - anyway good that it happened before Pongal! :)

Enjoyed Pongal and Kanu pongal well, though son's family if far away! Skype chats makes us feel close. :grouphug:
 

தந்தையின் நினைவு...


சிந்தையில் எப்பொழுதும் நமக்குத்

தந்தையின் நினைவு இருந்தாலும்,

அவர் மறைந்த நாளில், மறவாது
அவரைப் போற்றுவது தேவையே!

அனுதினமும் எண்ணும் அவருக்கு
ஒரு தினம் கிரியை ஓர் ஆண்டிலே!

நல்வழி காட்டிய தந்தையை, நமது
நல்வாழ்வு தொடர, போற்றுவோம்!

:hail: . . . :pray2:
 
Dear Bushu,

God saved me though I had a forced cleaning of the walls - anyway good that it happened before Pongal! :)

Enjoyed Pongal and Kanu pongal well, though son's family if far away! Skype chats makes us feel close. :grouphug:

Yes dear, you were lucky you did not get hurt, I have heard horror stories long back.. I am glad that you enjoyed the the pongal with your son and family on skype.. :-)
 

கற்கை நன்றே!

கற்கை நன்றே! கற்கை நன்றே! என்றும்
பிச்சை எடுத்தும் கற்கலாம் என்றும், நம்

தமிழ் மூதாட்டி கூறியதை அறிவோமே!
தமிழ் மக்கள் இருவரின் சிறந்த சாதனை,

மகிழ்விக்கும் என்பதில் ஐயமே இல்லை!
மகிழ்ச்சி ஏனெனக் கூறுகிறேன்! ஆட்டோ

ஓட்டுனர் தந்தை; பணிப் பெண்ணாகச் சில
வீடுகளில் வேலை பார்க்கும் தாய், என்று

மிக எளிய குடும்பத்திலே பிறந்த இருவர்,
மிக அரிய படிப்பான C A படித்து, தேர்வில்

முதலாவது இடம் இந்தியாவில் பெற்றும்,
முதலாவது முறையில் வெற்றி பெற்றும்,

மகளும், மகனும் சாதனைகள் படைத்திட,
அகமகிழ்ந்தனர் அந்த ஏழைப் பெற்றோர்!

வசதிகள் அதிகம் இல்லாத நிலையிலும்,
வசதி படைத்த பிள்ளைகளை மிஞ்சினர்!

:thumb: . . . :clap2:
 

ஏன் இந்தக் கேலிக் கூத்து?

குழந்தைத் திருமணங்கள் நடந்த நாட்களில்,
குழந்தைகள் திருமண பயம் கொள்ளாதிருக்க,

மாலை மாற்றும் வைபவத்தில், மாற்றுகின்ற
மாலைகள் கொடுக்கும் மாமா, மணமக்களைத்

தன் தோளில் தூக்கி மகிழ்ந்தார்! இந் நாட்களில்
தம் விருப்பு வெறுப்புக்கள் நன்கு பதிந்த பின்பு,

முப்பதுகளில்தான் திருமணமே செய்கின்றார்!
இப்போது மாமாகள் பாடும் திண்டாட்டம்தான்!

அறுபது வயதை எப்போதோ தாண்டிய மாமா,
எழுபது, எண்பது, தொண்ணூறு என, எடையில்

கனக்கும் மணமக்களைத் தூக்கிவிட்டுச் சிலர்
கனம் தாளாது இடுப்பு சுளுக்குக்கு ஆளாகிவிட,

சிலர் தூக்க முடியாமல் கீழே தவறவிட்டுவிட,
சிலர் உடைகளைக் கசக்கிவிட, இதற்கும் மேல்,

தன் துணைக்குப் போட வேண்டிய மாலையை
தான் முயற்சித்தும் முடியாமல், கூட்டதிலுள்ள

யாருடைய கழுத்திலேயாவது வீசிவிடுவதும்,
யாரும் எதிர்பார்க்காது நடக்கிற காமெடிதான்!

மாமாக்கள் கூட்டம் கூட்டி, இக் கேலிக் கூத்தை
ஏமாந்தும் செய்யாது இருந்திட வேண்டாமோ?

:decision: . . . :nono:
 

கண் கூசும் விளம்பரங்கள்!


பெண்களை ஒரு போகப் பொருளாகவே
எண்ண வைத்திடும் பல விளம்பரங்கள்!

தம் இனத்தை இழிவுபடுத்துவது அறிந்தும்,
தம் வாளிப்புகளைக் கூசாமல் அரங்கேற்ற

பணம் வாங்கி உழைக்கிறது ஒரு கூட்டம்!
பணம் பாதாளம் வரை பாயும் அல்லவா?

'ஏன் இப்படிச் சிறுமைப்படுத்துகின்றீர்' என,
தன் ஆதங்கத்தை எவரேனும் சொன்னால்,

'உன் பார்வையில்தான் உள்ளது கோளாறு;
உன் மனத்தில்தான் உள்ளது வக்ரம்' என்று

பெரிய அறிவிப்பைச் செய்து, தம் பார்வை
அரிய கொள்கை உடையதுபோல் பேசுவர்!

மனிதனின் நல்ல பண்புகளை மேம்படுத்த,
மனித வர்கம் முயல வேண்டாமா? அவன்

மிருக வெறியினைத் தூண்டும் வகையில்,
பெருக விடலாமோ பல விளம்பரங்களை?

:ranger:
 
Hello RR Mam,After reading your post 1772, It just remind me watching an advtmt on TV,Its a popular chocolate bar P**k,Its being screen played as A father(pops)and his Daughter are on morning jogging ,were he is so tired ,she offer the p***,he feels more energy rise as its with glucose??!!, so goes for other 2 rounds of brisk jog,as he says ,then she whistles and invite her boy friend to have a chat.For a chocolate ,where comes cheating idea? /if want to chat in good intention give intro to her POPS(as she says him) then go head .What are they trying to focus??:doh:
 

Dear Dr. Narayani,

I hate all such advts which degrade women. One perfume for men draws many angels down from the sky near a guy who

uses it! One more is shown in which a girl hugs a boy sitting next to her and makes 'kissing' signs by her hand to another

guy who sits next to the guy she hugs! Will not any proper censor committee formed to remove such advts? :whip:
 

Latest posts

Latest ads

Back
Top