guruvayurappan
Active member
siva !சூழ்நிலைக் கைதி
இந்த பூமிக்கு நான் வந்த போது
எதுவும் தெரியாமலிருந்தேன்.
தாயின் அரவணைப்பு...
அவள் மார்பில் பால்குடி...
கிலுகிலுப்பைச் சத்தம்...
சிறுது சிறிதாய் தெரியத் தொடங்கியது...
உடனே என்னைக்
குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டனர்.
அழுகை... அவஸ்தை....
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரிச்சயம்.
பிற குழந்தைகளுடன் கூடி
விளையாடி மகிழத் தொடங்கிய நேரம்
என்னைப் பள்ளிக்கு அனுப்பினர்.
கண்டிப்பு... கண்காணிப்பு...
மெல்ல என்னைத் தேற்றிக்கொண்டு
படிப்பில் கவனம் செலுத்தினேன்.
புது நண்பர்கள், புதுப் புரிவு.
நிலைபெறத் தொடங்கிய நேரம்
மேற்படிப்புக்கு அயல்நாடு அனுப்பினர்.
இனம் தெரியாது, கலாச்சாரம் புரியாது;
கலவரப்பட்டு, கஷ்டப்பட்டு
என்னைப் பழக்கிக் கொண்டேன்.
உடனே வேலை, திருமணம்...
மீண்டும் ஒரு சவால்.
மீண்டும் ஒரு மறுதலிப்பு.
மீண்டு வருவதற்குள்
எனக்கே ஒரு குழந்தை.
மழலையின் ஸ்பரிசத்தில்
மகிழ்ந்திருக்க முடியாமல்
பொருளாதாரச் சூழ்நிலை.
எனக்கு நடந்தவைகளை
என் பிள்ளைக்கு நடத்திக்காட்ட....
இப்போதோ
நான் முதியோர் காப்பகத்தில்!
எனக்கென்று வாழ்வு இல்லையா?
எனக்கென்று மனிதர் இல்லையா?
எப்போதுமே நான் சூழ்நிலைக் கைதியா?
very nice . my son (his name also siva ramakrishnan )used say to his mother(i wanted to put as my wife &changed) that your anxiety never dies .first you said read well ,after prayed for job .then good job ,then foreign trip ,then marriage(good girl ) ,job for DIL,then grand child and you will repeat the cycle . where is the contented life ?
cheers ,
guruvayurappan
p.s. recently i started reading your kavithai and really moved . keep it up.