• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
தவக்கவி அவர்களே!

இந்தச் சண்டையை இந்த நூலில் ஏன் போடுகின்றீர்கள்? என் நூலிலேயே போட்டிருக்கலாமே!
தர்ம அடி வாங்கி எனக்குப் பழக்கம்!


தாங்கள் எழுதும் கவிதைகள் புதுக்கவிதைகள் என்றல்லவா நினைத்தேன்! அவை மரபுக் கவிதைகள் என நினைப்பா, என்ன? :high5:




நன்றி..நன்றி....நான் எழுதுவதும் கவிதை என்றதற்கு.....!!

Tvk
 
காத்திருந்த கண்களே....

அவள் வரவிற்காக
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தேன்
அவளோ
என் விழியையே வழியாக்கி
வேகமாகச் சென்றுவிட்டாள்.
 
dear bushu madam சுபலக்ஷ்மி !!

வெள்ளை தோலுக்கு ஏன் எந்த ஏக்கம் அம்மா ?
நக்மா விட சரிதா தான் மக்களுக்கும் பிடுக்கும் அம்மமா !!
காரைக்கால் அம்மையார் வேண்டியதை வேண்டாமலே
கறுபபு நிறம் தந்து காமுகன் கண்படாமல் ஆரோக்கியம் அள்ளித
கற்பூர நாயகியே கனக வள்ளி தாயே !!
காலமும் உனக்கு என் பக்தியம்மா !!
கறை படிந்த என் மனம் வெளுக்க உன் பாதம் பற்றினேன்
கரை ஏற எனக்கு உன் துன்னை வேண்டும் அம்மா
நிறம் பார்க்காது குணம் மட்டும் பார்க்கும் நல்
கணவனை தரவேண்டும் அம்மா அகிலாண்டேஸ்வரி தாயே
வெளியே சென்றாலும் வேலைக்கு போனாலும்
வெள்ளை மனசு சிரிப்பால் நிறத்தை மறக்க வைப்போம்
வெள்ளை ஆடையை மதிப்போம் வெள்ளை தோலுக்காக மதிக்க வேண்டாம்
அழகு நிறத்தில் இல்லை பழகும் விதத்தில் என்பதை நிலை நாட்டுவோம்

அன்புடன்
குருவாயுரப்பன்
 
ValaiTamil.Com | Tamil Poems | Beauty Tips

அழகிய தமிழ் கவிதைகள் வலைதமிழில் valaitamil.com
 
ஒலிம்பிக்ஸ்2012

ஒரு கோடிக்குமேல் வீரர்கள் - இருந்தும்
ஒரு தங்கப்பதக்கம்கூட பெறவில்லை;
ஆறு பதக்கங்கள் கிடைத்ததைஎண்ணி
ஆறுதல் கொண்டு அடங்கும்நிலை.

தேசீய விளையாட்டாம் ஹாக்கியில் - கொஞ்சமும்
தேறாமல் கேவலமாய்த் தோற்றோம்
தேவை இச்சமயம் ஆத்ம
தேடல் என்பதை உணர்வோம்!

அணியாய் விளையாடும் போட்டிகளில் -வெற்றி
அமையாமல் போனதன் காரணம்
அணுகுமுறைத் தவறுகள் மற்றும்
அரசியல் ஊடுருவிய அநாகரீகம்.

நான்கு வருடங்களுக் கொருமுறை - உலக
நாடுக ளெல்லாம் தடம்பதிக்கும்;
நாட்டுக்குள்ளே நிலவும் சர்ச்சைகளால்
நம்தாயகம் மட்டும் தடம்புரளும்.

வெள்ளி இரண்டு பெற்றதுவே - பெரும்
வெற்றியென கொண்டாடி மகிழ்வோம்;
வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியின்றி
வேதனையில் நாளு முழல்வோம்.

திறமை தேசத்தில் நிறையவுண்டு - கதவைத்
திறந்து பார்க்கத்தான் ஆளில்லை;
தினசரி வாழ்க்கைப் போராட்டத்தால்
திணறிப் போய்க்கிடக்கும் மந்தநிலை!
 
Last edited:
கவிதை வடிவத்தில் சந்தம் தான் உயிரானது. சந்தம் இனிதாக அமையவேண்டுமானால் அசைகளும் சீர்களும் சரியாக

இலக்கணவரம்புக்கு உட்பட்டு அமையவேண்டும். பாடப்படும் பொருளுக்குத்தக்கவாறு வல்லியல், மெல்லியல் எழுத்துக்கள்

அமைந்திருக்கவேண்டும். நல்ல ஒரு கவிஞனுக்கு இவையெல்லாம் பெருமுயற்சி ஏதும் இன்றி இயற்கையாகவே எழுதும்

கவிதைகளில் அமைந்து விடுகின்றன. இது கைவராதவர்கள் எழுதுவதெல்லாமே புதுக்கவிதை தான்.


ஊருக்கு வந்தேன் உன்னைக்கண்டேன், பெயரைக்கேட்டேன் என்னை இழந்தேன் என்ற இதை இரண்டாக வெட்டிப்போட்டு

புதுக்கவிதை என்று பெயர் சூட்டி கவியரங்கத்தில் வாசிக்கலாம். அது உரைநடையில்லை என்று

சத்தியம் கூடச்செய்யலாம். தமிழறிந்தவர்களிடம் இது எடு படாது. "தானைத்தலைவரே! தகுதி சிறிதும் இல்லாத்தருக்கர் கூட்டத்தை

இடுப்பொடித்துப்போட படைகளைக் கூட்டுங்கள்" என்று அடுக்குமொழியில் நீட்டி முழக்குவது போல எழுதுவதெல்லாம் கவிதையாகி

விடாது. உரைநடையையே நயம்பட எழுதினால் அது தானே சந்தத்துடன் கூடிய ஒரு நல்ல கவிதையாகிவிடும்.


கவிஞன் தனிக்குறில், தனிக்குறில்+ஒற்று, தனி நெடில், தனி நெடில்+ஒற்று,காய்ச்சீர்,கனிச்சீர் என்று பிரித்துப்பார்த்து கவிதை

எழுதுவதில்லை. அவன் சந்தத்தைமட்டும் மனதில் கொண்டு கருத்தைச் சொற்களாக்கும் போது அவை தானாகவே இலக்கணவரம்பு

மீராத அழகிய கவிதையாக வடிவெடுத்து விடுகின்றன.


ஒருகைதேர்ந்த சைத்திரிகன் வரையும் கோடுகள் அளவுகோல்கொண்டு அளந்து வரையப்படுவதல்ல. ஆனால் அவை அளவாகவும்

அழகாகவும் இயற்கையாகவே அமைந்து விடுகின்றன. இனிய சந்தத்துடன் ஆழமான கருத்தும் சேர்ந்திடும் போது கவிதை அழகாக

அமைந்துவிடுகிறது. உரைநடை உரைநடையாகவே இருந்துவிட்டுப்போகலாம். அதைப்புதுக்கவிதை என்றபெயரில்

வெளியிடும்போது அந்தக் "கவிஞன்" நான் ஒரு கவிஞன் என்று கூறிக்கொள்கிறானே தவிர இதோ என் கவிதை என்று

கூறிக்கொள்வதாகத்தெறியவில்லை.


இது புதுக்கவிதைகள் பற்றிய என் கருத்து. இந்தத்தளத்தில் பதிவாகும் பல புதுக்கவிதைகளையும் பாரா பாராவாக என்னால்

அப்படியே உரைநடையாக ச்சேர்த்து எழுத முடியும். அவற்றில் கவிதையைத் தேடத்தான் வேண்டும்.
ஒரு சீத்தலைச்சாத்தன்

இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்ட்டம் தான்.
பிழை திருத்தம் செய்யாமல், படிப்பதை எளிதாக்க, இடைவெளி விட்டு வழங்கிய மேற்கோள், இது!
நண்பர் சிவாவின் கவனத்திற்காக!! :ranger:
 
இது நம் எல்லோருடைய கவனத்திற்காக...





இணையதளம் சில நல்ல நண்பர்களை

இணைக்கும் பாலமாக இருத்தல் நலம்!

எழுதும் எல்லோரும் காவியம் போன்று

எழுதும் திறனைப் பெறுவது அபூர்வமே!

எண்ணங்களைப் பகிர்ந்து, பிறரின் மன
எண்ணங்களை அறிந்து நட்புப் பெறவே,

நாம் வருகிறோம் இணையதளத்திற்கு;
நம்மைப் போலக் கண்ணோட்டம் உள்ள

சிலரின் நட்பினைப் பெற்றால் பெருமை;
பலரின் கருத்துக்களை அறிதல் அருமை!

குற்றங்களையே தோண்டித் துருவாமல்,
பெற்ற நட்பைப் பேணிக் காத்திடுவோம்!

:grouphug: . . . :high5:
 
ஆனந்த ஜோதி படத்தில் இடம் பெற்ற "பனியில்லாத மார்கழியா" பாடலின் பாணியில் (நகைச்சுவையுடனும் தற்போதைய நாட்டு நடப்புடனும் கலந்து) சிந்தித்த போது.......


காபி இல்லாத காலையா
கட்ஆப் இல்லாத படிப்பா
கட்அவுட் இல்லாத நடிகரா
கவர்ச்சி இல்லாத நடிகையா

பெண்கள் சூழாத சாமியாரா
'பெக்கு' ஏற்றாமல் விடுமுறையா
பேஸ்புக் இல்லாத தொடர்பா
பெட்டிங் இல்லாத கிரிக்கெட்டா

லட்டில்லாத திருப்பதியா
லட்சங்களில்லாத 'பொது வாழ்வா'
வலைதளம் இல்லாத வாழ்க்கையா
வாரிசு இல்லாமல் அரசியலா

ஸ்டிங் ஆபேரஷன் இல்லாத மீடியாவா
ஸ்டேட்ஸ் போகாத மேற்படிப்பா
ஸ்டைல் இல்லாத இளைஞரா
ஸ்மார்ட்போன் இல்லாத நிலையா

சீரியல் இல்லாத தொலைக்காட்சியா
சீருடை இல்லாத பேரணியா
சீட்டாட்டம் இல்லாத திருமணமா
குத்தாட்டம் இல்லாத திரைப்படமா
 
Last edited:
வாலி


உலகுக்கு நீ வாலி - கவிஞன்

உன்னுள் தமிழ் வாவி!

உழைப்பா லுயர்ந்து லாவி()

உன்னால் மகிழ்ந்தது புவி!



வாலிபன் வயதில் பாதி - உன்

வார்த்தைகளில் தெரியும் சேதி

வைணவம் தந்த தாதி

வையகம் கண்ட பதி !



திரையிசைப் பாடல்கள் - எட்டுத்

திக்கெங்கும் பரவியது;

திருமண் இலக்கியமும்

திகட்டாத திருக்கண்ணமுது!



பொருள் நிறைந்ததுன் வரி - இழப்பால்

பொங்கும் துயரில் வலி;

பொறுப்புடன் காட்டினாய் வழி

பொதிகை உச்சியிலென்றும் வசி !
 
சுதந்திர இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்



'சட்ட மறுப்பு இயக்கம்'
கட்டாயக்கல்விச் சட்டமுண்டு;
கல்லாமையோ கால்வாசி!


'ஒத்துழையாமை இயக்கம்'
ஆசைக்கு ஒத்துழைக்காவிடில் கற்பழிப்பு!


'சிப்பாய்க் கலகம்'
எல்லையில் பாதுகாப்பின்றி வீரர்கள் படுகொலை


'தண்டி யாத்திரை'
'தலைவா' வெளியாக கொடநாட்டிற்கு விஜயம்


'வெள்ளையனே வெளியேறு'
வெள்ளையனை வெளியேற்றிவிட்டு
வெளிநாட்டு மோகத்தை ஏற்றுக்கொண்டுவிட்டோம்


'செய் அல்லது செத்துமடி'
செய்யாதனசெய்;
இல்லையேல் வெட்டியாய்க் குடித்து செத்துமடி!


'சத்தியாகிரகம்'
சத்தியமிருந்தால் கிரகம் பிடித்தாட்டும்!


கிழக்கிந்தியக் கம்பெனி
அரசியல் நோக்கில் வியாபாரம் அன்று; (British)
வியாபார நோக்கில் அரசியல் இன்று! (American)




என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top