guruvayurappan
Active member
dear siva!வாழ்க்கைப் போக்கு
உணவு, உறக்கம் - சமயங்களில்
உணர்வுகளில் கலக்கம்;
உருப்படியா யோன்றுமின்றி - காலம்
உருண்டு போய்விடுமோ?
தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலேயே - வாழ்க்கை
தொலைந்து போய்விடுமோ?
பொருளாதார நிர்ப்பந்தங்களில் - தினமும்
போராடியே கழிந்திடுமோ?
பெற்றவர்களைப் பார்ப்பதுவும் - பெரும்
பேறென்று ஆகிவிடுமோ?
பிள்ளைகளுடன் சேர்ந்திருப்பது - இப்
பிறவியில் வாய்க்காதோ?
மின்னஞ்சலும் skype -ம் - பளீரென
மின்னும் புகைப்படமும்
மிடுக்கான கைப்பேசியும் - மட்டுமே
மிஞ்சி நிற்குமோ?
மனதின் தேடலுக்குத் திரையிட்டு - நிறம்
மாறிய கேசத்திற்கு சாயமிட்டு,
மழலை மகிழ்ச்சித் தடம்விட்டு - இன்று
மன்றாடும் நிலை தறிகெட்டு!
இறையிலும் நாட்டமின்றி - கை
இருப்பிலும் ஆர்வமின்றி
இன்றும் நேற்றுபோலிருந்து - இறுதியில்
இறந்துபோவதில் அர்த்தமில்லை!
இயற்கையை ரசிப்போம் - நம்மிடம்
இருப்பதை ருசிப்போம்;
ஈகை செய்வோம் - மனிதத்தை
ஈண்டிங்கு கொணர்வோம்!
very nice . we always try for something and get disinterested once we attained it.we have pleasant memory of past and hope for the future and fail to live the present.
same routine of eat ,earn ,sleep and feeling that we have done nothing.that is life.as you said the இயற்கையை ரசிப்போம் - நம்மிடம்
இருப்பதை ருசிப்போம்;
ஈகை செய்வோம் - மனிதத்தை
ஈண்டிங்கு கொணர்வோம்!will bring some relief.
guruvayurappan