• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
64. ராமதர்மம்
(அறுசீர் விருத்தம்: காய் விளம் காய் காய் விளம் காய்)

நாரணனின் மந்திர ரகரமுடன் .. நாயகனின் மந்திர மகரமதே*
சேரவரும் ராமநின் திருநாமம் .. வேருடனே வினையெலாம் அழித்திடுமே
நாரணனாம் ராமநின் வேரென்றால் .. ஆஞ்சனேயன் அத்தனின் அம்சமாவான்
காரிருளை நீக்கிடும் ராமநாமம் .. தாரகமந் திரமெனக் கொள்வோமே.

ஒருவனுக்கு ஒருத்தியாம் தருமத்தை .. உறுதியுடன் வாழ்ந்துநீ காட்டினாயே
குருமுதலாம் தந்தைசொல் மந்திரமாய் .. உறும்துயர்நீ தெரிந்துமே கொண்டாயே
பரிவுடனே தமையனாய் வழிகாட்டி .. தருமங்கள் உலகினில் நிறுவினாயே
சரணமென ஒருவனுன் தாள்பற்ற .. கனிவுடனே அவனைநீ காப்பாயே.

ராமநாமம் மனம்வர எச்செயலும் .. ரம்மியமாய் முடிவதைக் காண்போமே
ராமஜயம் எழுதுதல் கூடினாலே .. பாவமெலாம் குறைந்திடக் காண்போமே
ராமகதை படிப்பதும் கேட்பதுமே .. ஆன்மீக மலர்ச்சியைத் தந்திடுமே
ராமராம மந்திரம் சொன்னாலே .. மராமரமாய்ப் பிறவிகள் சாய்ந்திடுமே.

--ரமணி, 15/09/2013, கலி.30/05/5114

முதலடி விளக்கம்:
’ஓம் நமோ நாராயணா’ என்னும் விஷ்ணு மந்திரத்தில் இருக்கும் ரா-வெனும் எழுத்தும்
’ஓம் நமச்சிவாய’ என்னும் சிவ மந்திரத்தில் இருக்கும் ம-வெனும் எழுத்தும்
சேர்ந்து சிவாவிஷ்ணு அபேதத்தை உணர்த்தவே ராம நாமாயிற்று என்பது ஆன்றோர் வாக்கு.

*****
 
முதலடி விளக்கம்:
’ஓம் நமோ நாராயணா’ என்னும் விஷ்ணு மந்திரத்தில் இருக்கும் ரா-வெனும் எழுத்தும்
’ஓம் நமச்சிவாய’ என்னும் சிவ மந்திரத்தில் இருக்கும் ம-வெனும் எழுத்தும்
சேர்ந்து சிவாவிஷ்ணு அபேதத்தை உணர்த்தவே ராம நாமாயிற்று என்பது ஆன்றோர் வாக்கு.

The Vishnu mantra is not ஓம் நமோ நாராயணா. It is ஓம் நமோ நாராயணாய. Just for info. Thanks.
 
முதியோர் தினம்

சொலலெளி தாகிச் செயலரி தாகிட
செல்லும் அனுதின வீழலில் - வல்லவன்
இல்லையென் றாகிட இல்லத்தில் நல்லனெனச்
சொல்லிடப் போமோ பொழுது?

--ரமணி, 01/10/2013

*****
 
65. உச்சிப் பிள்ளையார்
(கட்டளைக் கலிவிருத்தம்)

(தனனன தன்னன தனனன தான)

குணபர பல்லவன் உசுப்பிய கோட்டை
கணபதி உள்ளுறை மலையினில் தேட்டை
மணமிகு சந்தனம் மலர்களின் கூட்டை
வணங்கியே தந்திடக் களிவரும் பாட்டை.

திருவரங் கன்சிலை இறையுடன் தம்பி
திருநதிப் பக்கலில் சிறுவனாய் நம்பி
திருவுரு தந்திட இபமுக வம்பி
திருவுளங் கொள்ளவே இறங்கிய நம்பி.

(தனனன தானன தனனன தான)

மலைமிசை வீடணன் கரவிரற் குட்டும்
தலைமிசைத் தாங்கிய வடுவெனக் கிட்டும்
அலைமனம் ஓய்ந்திட அருளுவார் எட்டும்
தலைவனின் தாள்களில் தலைபட ஒட்டும்.

(தனனன தனனன தனனன தான)

அடிமலை யரிமகன் தரிசன வூட்டம்
இடிபடி யிவரவே திருவருள் கூட்டும்
இடையினில் செவந்தியின்* திருமுகம் காட்டும்
முடிமலை தரிசனம் உயர்வினை யூட்டும்.

(தன்னன தனனன தன்னனா தானா)

உச்சியில் தளர்வுலர் விக்குமே காற்றே
குச்சிபோல் தெரியும்தி ருச்சிவாழ் வூற்றே
அச்சமும் தருவது கல்வரை யீற்றே
உச்சிமேல் கரம்தொழ முற்படாக் கூற்றே.

--ரமணி, 23/09/2013, கலி.07/06/5114

குறிப்பு:
*செவந்தியின் திருமுகம்:
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் உறையும் பிள்ளையார்
செவ்வந்தி விநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

மேல்விவரம்:
Thayumanava Swami Temple : Thayumanava Swami Temple Details | Thayumanava Swami - Trichy | Tamilnadu Temple | ??????????
Malaikottai Uchipillayar Temple : Malaikottai Uchipillayar Temple Details | Malaikottai Uchipillayar - Trichy | Tamilnadu Temple | ??????????? ?????????????????

*****
 
கலைமகள் காப்பு
(எண்சீர் விருத்தம்: கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய் - அரையடி)

வித்தகர் சித்தமுள் நித்தமும் நர்த்தகியே!
. விற்பனர் கற்பனைப் பெற்றியி னற்புதமே!
சத்தமும் சிந்தையு மர்த்தமும் தந்தருள்வாய்!
. பற்றுளம் வந்துறை பங்கய மென்னடையே!
முத்தமிழ் கற்றவர் முற்படும் சிற்றிடையாள்
. பொற்பதக் கற்பகம் கற்பவ ருள்வருமே!
நித்தமும் உன்னருள் வேண்டுவன் என்னுளமும்
. நின்றுநீ தங்கியே கற்றிடும் சொல்லுரைப்பாய்!

*****
 
73. கணத்து நாயகன் துதி
(வண்ண வஞ்சித் துறை: தனத்த தானன)

களிற்று வாயினன்
களத்து நாயகன்
வளத்து வாரமும் ... [வாரம்=திரள்]
அளிப்ப னாயிரம். ... 1

குருத்த கோசிகன் ... [குருத்தம்=வெள்ளை; கோசிகம்=பட்டாடை]
பெருத்த மேனியும்
சிரத்து வேழமும்
உருக்கு மேமனம். ... 2

அருக்கு மாலைகள்
விருப்பன் மேனியில்
தருக்க ளைவகை
விருப்ப மீபவன். ... 3

மனத்து ளேறிடும்
சினத்த லேகவும்
கனப்பு மாளவும்
வனப்பு நாடுவம். ... 4

இகத்தி லேமமும்
அகத்தில் ஞானமும்
உகப்பி லேறிட
விகற்ப மேகிடும். ... 5

--ரமணி, 18/10/2013, கலி.01/07/5114

[பசுபதி புத்தகக் காட்டு: தனத்த தானன
செனித்த சீவருள்
மனத்தில் மாவொளி
மினுக்கும் வேலவ
எனக்கு மீயொளி.
--பாம்பன் சுவாமிகள்]

*****
 
ஒண்டுக் குடித்தனம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒண்டுக் குடித்தனம் ஒன்றும் குடித்தனம்
நண்டு வளையென பண்டுக் குடித்தனம்!
நடுவில் கிணறும் மாடத் துளசியும்
படுக்க நீண்ட தாழ்வா ரத்துடன்
வீட்டு விலக்கில் தீட்டில் அமர
ஓட்டுத் தாழ்வார மூலையில் இரண்டறை! ... 1

சமையற் கலையும் வாழ்க்கைக் கலையும்
அமைந்தே ஆளும் அறைகள் இரண்டில்!
அன்னை தந்தை தாத்தா பாட்டியும்
சின்னஞ் சிறிய பெரிய குழந்தையர்
செட்டாய் அமைந்து சிறப்பாய் வாழ
எட்டுக் குடும்பம் ஏறிய அரணாம்! ... 2

விடியும் முன்னரே இல்லத் தரசியர்
குடிநீர் பிடித்துக் கிணற்றடி குளித்துத்
துளசியைச் சுற்றி சுவாமி மாட
விளக்கினை யேற்றி வீட்டு வாசலில்
கோலம் போட்டுக் குமுட்டி யடுப்பில்
பாலைக் காய்ச்சப் பலபல விடியலே! ... 3

சமையல் அடுப்பைப் பற்ற வைத்தே
தமரின் அறுசுவை நலன்கள் பேண
அமிர்தம் போலும் சமையல் செய்து
அமர்தல் இல்லா அகத்துக் கடமை
ஆற்றும் இல்லத் தரசியர் அன்பில்
தேற்றம் பெற்றுச் செறிந்த குடும்பமே! ... 4

காலை விடிந்ததும் கடிதின் குளித்து
சாலை யோரம் பசும்பால் வாங்கி
வாழ்வின் அறங்கள் சற்றே ஆற்ற
தாழ்வா ரத்தில் சந்தியைச் செய்து
சூடாய்க் காப்பி குடித்துப் பின்னர்
ஓடாய் உழைக்க ஓடும் தந்தையர்! ... 5

குடும்பம் எங்கணும் பொண்ணும் ஆணும்
வடுவாய் வதுவாய் வலம்வரும் மக்கள்
உலையில் சோறு கொதிக்கும் பொழுதில்
தலையைப் பின்னி ஆடைகள் தேர்ந்து
சின்னஞ் சிறுசுகள் பள்ளிக் கனுப்பிப்
பின்னர் மற்றோர் பேணும் அன்னையர்! ... 6

மூத்தோர் ’காலேஜ்’ பொழுதில் செல்ல
சோத்து மூட்டை கட்டிக் கொடுத்து
ஆத்துக் காரர் ’ஆஃபீஸ்’ செல்லக்
காத்து நிற்க அவரையும் அனுப்பி
இடையில் கணவரின் பெற்றோர் பேணி
இடைசலித் தேங்கும் இல்லறக் காப்பாள்! ... 7

படித்தும் வேலை யமையாப் பொழுதை
தடித்தன மாகத் தள்ளும் யுவர்கள்
நண்பர் குழாத்துடன் அரட்டை யடித்து
பண்பும் பொறுப்பும் பக்கம் ஏக
தெருக்கள் சுற்றிச் சினிமா பார்த்துச்
செருக்கை வளர்க்கும் சில்லறை வாழ்க்கை! ... 8

பூஜை ஜபமும் பூர்த்தி யானதும்
ராஜாங் கம்வரும் மாமியார் கையில்!
துணிகள் பாத்திரம் தோய்த்துத் தேய்த்து
மணியா கிடவே மாற்றுப் பெற்றோர்
உண்டி படைத்தபின் எஞ்சிய துண்டு
நண்டு மெதுவாய் வளையின் வெளிவரும்! ... 9

அதன்பின் காலம் சற்றே உறைய
விதவித மாகப் பேசும் மாமிகள்
தோழிய ராகிச் சூழ்ந்தே அமர
சோழி யாடுதல் போலக் களித்து
குடும்பச் சுவைகள் சுமைகள் அலச
உடும்புப் பிடிகள் ஓய்ந்திடும் நேரமே! ... 10

சற்றே தலையைச் சாய்ப்ப தற்குள்
உற்ற நேரமும் குறைந்தே வாசலில்
நறுக்கெனக் குழந்தைகள் குரல்கள் ஒலிக்க
நொறுக்குத் தீனியைக் கொறிக்கத் தந்து
அவைவிளை யாட அனுப்பு வதற்குள்
இவளது மாற்றுப் பெற்றோர் எழுவரே! ... 11

ஆடியும் ஓடியும் பாடியும் சாடியும்
கூடியும் தேடியும் சுற்றியும் பற்றியும்
பாண்டியும் நொண்டியும் பச்சைக் குதிரை
தாண்டியும் தட்டா மாலை யென்றே
பலவிளை யாட்டில் களிக்கும் குழந்தையர்
கலகலப் பின்னவர் தாத்தா பாட்டி! ... 12

சாயங் காலம் ஆனதும் சிறுவர்
ஓயப் பெரியோர் கோவில் செல்ல
காய்கறி பழங்கள் வாங்கத் தெருவில்
தேய்ந்த செருப்பில் விரையும் அகமுடை!
மளிகை சாமான் மாதக் கடனில்
தளிகை தினமும் நடக்கும் வீட்டில்! ... 13

குழந்தையர் படிக்கும் குரலொலி விரவ
வழக்கம் போலச் சமையற் கட்டில்
அகமுடை யாளும் தஞ்சம் புகவே
தகப்பன் திரும்ப வந்திடும் பொழுதே!
வந்த தகப்பனும் அவசர மாகச்
சந்தி முடித்துச் சற்றே ஓய்வான்! ... 14

பட்டப் படிப்புடன் அலுவலில் உதவத்
தட்டவும் குறுக்கவும் பயில்வரும் எழுத்துகள்
ஆணும் பெண்ணும் காலை மாலை
காணும் பயிலகம் யாவும் சேர்ந்து
வேலை நேர்முகத் தேர்வில் நாளை
ஏலம் எடுபட வேண்டுவர் இறையை. ... 15

ஒன்றே அறையொளிர் குண்டு பல்பது!
இன்று போற்பல விளக்குகள் ஏது?
குழந்தைகள் அதன்கீழ் ஒன்றாய்ப் படிக்க
கிழமை மூதோர் வெளிவா ரத்தில்
காலை நீட்டி மாலை யுருட்டி
வேலை வேண்டுவர் வினைகள் போகவே! ... 16

ஏழை யந்தணர் ஏந்திய அறங்கள்
வாழை யெனவே தழைத்த வளைகள்
காலப் போக்கில் ஏலம் போக
வேலையும் கல்வியும் விளைத்த சூழலில்
அந்தணர் சந்ததி யறங்கள் கைவிட
சந்திகள் தொடர வந்தனம் ஓய்ந்ததே! ... 17

--ரமணி, 21/10/2013, கலி.04/07/5114

*****
 
ஒண்டுக் குடித்தனம்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒண்டுக் குடித்தனம் ஒன்றும் குடித்தனம்
நண்டு வளையென பண்டுக் குடித்தனம்!
நடுவில் கிணறும் மாடத் துளசியும்
படுக்க நீண்ட தாழ்வா ரத்துடன்
வீட்டு விலக்கில் தீட்டில் அமர
ஓட்டுத் தாழ்வார மூலையில் இரண்டறை! ... 1

சமையற் கலையும் வாழ்க்கைக் கலையும்
அமைந்தே ஆளும் அறைகள் இரண்டில்!
அன்னை தந்தை தாத்தா பாட்டியும்
சின்னஞ் சிறிய பெரிய குழந்தையர்
செட்டாய் அமைந்து சிறப்பாய் வாழ
எட்டுக் குடும்பம் ஏறிய அரணாம்! ... 2

விடியும் முன்னரே இல்லத் தரசியர்
குடிநீர் பிடித்துக் கிணற்றடி குளித்துத்
துளசியைச் சுற்றி சுவாமி மாட
விளக்கினை யேற்றி வீட்டு வாசலில்
கோலம் போட்டுக் குமுட்டி யடுப்பில்
பாலைக் காய்ச்சப் பலபல விடியலே! ... 3

சமையல் அடுப்பைப் பற்ற வைத்தே
தமரின் அறுசுவை நலன்கள் பேண
அமிர்தம் போலும் சமையல் செய்து
அமர்தல் இல்லா அகத்துக் கடமை
ஆற்றும் இல்லத் தரசியர் அன்பில்
தேற்றம் பெற்றுச் செறிந்த குடும்பமே! ... 4

காலை விடிந்ததும் கடிதின் குளித்து
சாலை யோரம் பசும்பால் வாங்கி
வாழ்வின் அறங்கள் சற்றே ஆற்ற
தாழ்வா ரத்தில் சந்தியைச் செய்து
சூடாய்க் காப்பி குடித்துப் பின்னர்
ஓடாய் உழைக்க ஓடும் தந்தையர்! ... 5

குடும்பம் எங்கணும் பொண்ணும் ஆணும்
வடுவாய் வதுவாய் வலம்வரும் மக்கள்
உலையில் சோறு கொதிக்கும் பொழுதில்
தலையைப் பின்னி ஆடைகள் தேர்ந்து
சின்னஞ் சிறுசுகள் பள்ளிக் கனுப்பிப்
பின்னர் மற்றோர் பேணும் அன்னையர்! ... 6

மூத்தோர் ’காலேஜ்’ பொழுதில் செல்ல
சோத்து மூட்டை கட்டிக் கொடுத்து
ஆத்துக் காரர் ’ஆஃபீஸ்’ செல்லக்
காத்து நிற்க அவரையும் அனுப்பி
இடையில் கணவரின் பெற்றோர் பேணி
இடைசலித் தேங்கும் இல்லறக் காப்பாள்! ... 7

படித்தும் வேலை யமையாப் பொழுதை
தடித்தன மாகத் தள்ளும் யுவர்கள்
நண்பர் குழாத்துடன் அரட்டை யடித்து
பண்பும் பொறுப்பும் பக்கம் ஏக
தெருக்கள் சுற்றிச் சினிமா பார்த்துச்
செருக்கை வளர்க்கும் சில்லறை வாழ்க்கை! ... 8

பூஜை ஜபமும் பூர்த்தி யானதும்
ராஜாங் கம்வரும் மாமியார் கையில்!
துணிகள் பாத்திரம் தோய்த்துத் தேய்த்து
மணியா கிடவே மாற்றுப் பெற்றோர்
உண்டி படைத்தபின் எஞ்சிய துண்டு
நண்டு மெதுவாய் வளையின் வெளிவரும்! ... 9

அதன்பின் காலம் சற்றே உறைய
விதவித மாகப் பேசும் மாமிகள்
தோழிய ராகிச் சூழ்ந்தே அமர
சோழி யாடுதல் போலக் களித்து
குடும்பச் சுவைகள் சுமைகள் அலச
உடும்புப் பிடிகள் ஓய்ந்திடும் நேரமே! ... 10

சற்றே தலையைச் சாய்ப்ப தற்குள்
உற்ற நேரமும் குறைந்தே வாசலில்
நறுக்கெனக் குழந்தைகள் குரல்கள் ஒலிக்க
நொறுக்குத் தீனியைக் கொறிக்கத் தந்து
அவைவிளை யாட அனுப்பு வதற்குள்
இவளது மாற்றுப் பெற்றோர் எழுவரே! ... 11

ஆடியும் ஓடியும் பாடியும் சாடியும்
கூடியும் தேடியும் சுற்றியும் பற்றியும்
பாண்டியும் நொண்டியும் பச்சைக் குதிரை
தாண்டியும் தட்டா மாலை யென்றே
பலவிளை யாட்டில் களிக்கும் குழந்தையர்
கலகலப் பின்னவர் தாத்தா பாட்டி! ... 12

சாயங் காலம் ஆனதும் சிறுவர்
ஓயப் பெரியோர் கோவில் செல்ல
காய்கறி பழங்கள் வாங்கத் தெருவில்
தேய்ந்த செருப்பில் விரையும் அகமுடை!
மளிகை சாமான் மாதக் கடனில்
தளிகை தினமும் நடக்கும் வீட்டில்! ... 13

குழந்தையர் படிக்கும் குரலொலி விரவ
வழக்கம் போலச் சமையற் கட்டில்
அகமுடை யாளும் தஞ்சம் புகவே
தகப்பன் திரும்ப வந்திடும் பொழுதே!
வந்த தகப்பனும் அவசர மாகச்
சந்தி முடித்துச் சற்றே ஓய்வான்! ... 14

பட்டப் படிப்புடன் அலுவலில் உதவத்
தட்டவும் குறுக்கவும் பயில்வரும் எழுத்துகள்
ஆணும் பெண்ணும் காலை மாலை
காணும் பயிலகம் யாவும் சேர்ந்து
வேலை நேர்முகத் தேர்வில் நாளை
ஏலம் எடுபட வேண்டுவர் இறையை. ... 15

ஒன்றே அறையொளிர் குண்டு பல்பது!
இன்று போற்பல விளக்குகள் ஏது?
குழந்தைகள் அதன்கீழ் ஒன்றாய்ப் படிக்க
கிழமை மூதோர் வெளிவா ரத்தில்
காலை நீட்டி மாலை யுருட்டி
வேலை வேண்டுவர் வினைகள் போகவே! ... 16

ஏழை யந்தணர் ஏந்திய அறங்கள்
வாழை யெனவே தழைத்த வளைகள்
காலப் போக்கில் ஏலம் போக
வேலையும் கல்வியும் விளைத்த சூழலில்
அந்தணர் சந்ததி யறங்கள் கைவிட
சந்திகள் தொடர வந்தனம் ஓய்ந்ததே! ... 17

--ரமணி, 21/10/2013, கலி.04/07/5114

*****

திரு சாய்தேவ் அவர்களுக்கு,

உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. ஒரு ஒண்டுக்குடித்தன உலகத்தின் பல பரிணாமங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. 17ல் கடைசி மூன்று வரிகளில் உள்ள punch எனக்குப் பிடித்தது. ஒரே ஒரு குறைதான். சொல்லாமல் இருக்கமுடியவில்லை. கல்கியும் குமுதமும் ஆனந்தவிகடனும் ஒண்டுக்குடித்தனங்களின் ஒரு பாகமாகவே அமைந்திருந்ததை ஏன் விட்டுவிட்டீர்கள்? மாமிகள், தேவனின் துப்பறியும் சாம்புவையும், கல்கியின் பொன்னியின் செல்வனையும், பிரேம ஹாரத்தையும், சாண்டில்யனின் கன்னிமாடத்தையும் யவன ராணியையும் வாராவாரம் அலசியதுபோல எந்தப் ப்ரொபசரும் அலசியிருக்கமுடியாது. அப்புறம் தீபாவளி மலர்களைப்பற்றி தனியாக ஒரு பக்கமே எழுதலாம். மலரும் நினைவுகளில் இவையெல்லாம் கண்ணைக்கவரும் வண்ணப்பூக்களல்லவா? இவற்றை எப்படி விடமுடியும்? உங்கள் இந்தக்கவிதைக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்காகவும் சொன்ன விதத்துக்காகவும் நன்றிகள் பல.
 
Vaagmi அவர்களுக்கு வணக்கம்.

இந்தக் கவிதையைப் பதினெட்டு பத்திகளில், அதாவது 108 அடிகளில்
எழுத நினைத்தை முடித்துக் கொடுத்ததற்கு மிக்க நன்றி. இதோ பதினொன்றாம் பத்தி,
உங்கள் எண்ணங்களுக்கு வண்ணம் தந்து. (முந்தைய பதினொன்று முதலுள்ள பத்திகளின்
எண்களை ஒன்று கூட்டி அமைத்துக்கொள்ளலாம்).

கல்கியும் குமுதமும் கதிரும் விகடனும்
சொல்லும் கதைகள் ஜோக்குகள் உரைகள்
ஒருவர் வாங்கி மற்றோர் பார்த்து
உருவம் சிதைய உருகிப் படித்து
இலக்கிய உலகின் ஈர்ப்பில் கவலை
வலிகள் மறைந்தே களிப்புறும் மாமியர்! ... 11.

அன்புடன்,
ரமணி

*****

திரு சாய்தேவ் அவர்களுக்கு,

உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. ஒரு ஒண்டுக்குடித்தன உலகத்தின் பல பரிணாமங்களையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. 17ல் கடைசி மூன்று வரிகளில் உள்ள punch எனக்குப் பிடித்தது. ஒரே ஒரு குறைதான். சொல்லாமல் இருக்கமுடியவில்லை. கல்கியும் குமுதமும் ஆனந்தவிகடனும் ஒண்டுக்குடித்தனங்களின் ஒரு பாகமாகவே அமைந்திருந்ததை ஏன் விட்டுவிட்டீர்கள்? மாமிகள், தேவனின் துப்பறியும் சாம்புவையும், கல்கியின் பொன்னியின் செல்வனையும், பிரேம ஹாரத்தையும், சாண்டில்யனின் கன்னிமாடத்தையும் யவன ராணியையும் வாராவாரம் அலசியதுபோல எந்தப் ப்ரொபசரும் அலசியிருக்கமுடியாது. அப்புறம் தீபாவளி மலர்களைப்பற்றி தனியாக ஒரு பக்கமே எழுதலாம். மலரும் நினைவுகளில் இவையெல்லாம் கண்ணைக்கவரும் வண்ணப்பூக்களல்லவா? இவற்றை எப்படி விடமுடியும்? உங்கள் இந்தக்கவிதைக்கு எடுத்துக்கொண்ட பொருளுக்காகவும் சொன்ன விதத்துக்காகவும் நன்றிகள் பல.
 
Last edited:
விற்பனைக் குயில்கள்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கீரைக்காரி
’அரக்கிரே முளக்கிரே அவுத்திக்கிரே சிறுகிரே!’
குரலில் கூர்த்தே குயில்போல் குழைந்தே
தெருவில் கூவும் கீரைக் காரி!
விரைவில் கட்டுகள் விற்றுப் போகுமே!
காய்ந்த செருப்பொலி தலைச்சும் மாடு
ஆய்ந்த கீரையிற் களையிருக் காதே!

மாநிற மேனி காதினிற் பாம்படம்
காநிறைக் குளிர்வரப் பார்வை அலையும்
சாயம் போன கைத்தறிச் சேலை
வாயில் வெற்றிலைக் காவிப் புன்னகை
தாயு மானவர் ஆலயச் சித்திரம்!
காயும் கனியும் காட்டிய ஔவை!

--ரமணி

*****
(தொடரும்)
 
அம்மித் தச்சன்

’அம்மிகொத் தலையோ ஆட்டுக்கல் கொத்தலையோ!’
அம்மையர் அம்மியில் ஆட்டுக் கல்லினில்
விழுதாய் அரைத்துத் திரட்டித் தினமும்
கொழித்த சுவைமிகு உணவுகள் செய்ததில்
குழிகள் கல்லினிற் தேய்ந்தே மறைய
குழவி வழுக்கிப் பொருள்மசி யாதே.

எனும்போது

தோளில் சிற்றுளி சுத்தியல் தொங்கும்
ஆளைப் பார்த்தால் ஆதி சிவனே!
மடித்துக் கட்டிய கைலியில் கால்கள்
நடக்கும் மெதுவே கண்கள் அலைய
புருவம் அடர்ந்த முகத்தில் மீசை
இரண்டொரு இல்லம் எதிர்நோக் கிடுமே.


--ரமணி

*****
(தொடரும்)
 
பாத்திரத் தச்சர்

’பாத்ரங்க பேர்வெட் டலையோ!’ என்றொரு
பாத்திரம் அன்றைய நாட்களில் உலவிடும்!
பித்தளை வெங்கலம் ’என்றும் வெள்ளி’யும்
எத்தனை யோவகைச் சீர்தருங் காலை
விரல்வழி மென்னுளி இயக்கும் சுத்தியில்
உருவரும் பெயர்கள் புள்ளியி லமைந்தே.

மென்னுளி புள்ளிப் பெயர்கள் பின்னர்
மின்னுளி தீற்றுக் கிறுக்கலாய் மாற
பாத்திரப் பெயர்கள் கடையினில் இன்று
சீத்தலைக் கலையாய்ச் சீரழிந் தனவே
பழந்துணி மாற்றுப் பாத்திரம் மட்டும்
வழிவரும் மரபுத் தச்சருக் கெனவே.

*****

அடுப்புக்கரி விற்பவர்

’அம்மணி யிருக்காங் களாஆ?’ காதுறும்
வெம்மைக் குரலில் வெகுண்ட கணவர்
உருவெதிர் நிற்பதை யுற்று நோக்கக்
கரிவிற் பவராம் கதிர்வேல் கண்பட
தனக்குள் எழுந்த நகைப்பை யடக்கி
மனையை விளித்தே நாளிதழ் ஆழ்ந்தார்.

கதிரையும் வேலையும் கரித்தூள் மறைக்க
முதுகில் ஏறிய மூட்டையை யெறிந்து
கரிப்புகை சூழத் தரையில் அமரவும்
உரிய நேரத்தில் உற்றதன் விலையுடன்
இல்லாள் நிறைய நீர்மோர் தந்தே
செல்லாள் செல்லப் பெருக்கினாள் தரையை!


--ரமணி

*****
(தொடரும்)
 
மணப்பாரை முறுக்கு வியாபாரி

’ஒன்றே குலமாம் ஒருவனே தேவன்
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
இந்தக் கூற்றுக் கேற்பச் செய்தது
வந்து வாங்குமணப் பாரை முறுக்கு!’
சைக்கிள் மணிக்குரல் மதியம் கேட்கக்
கைக்குழந் தைகளும் எட்டிப் பார்க்குமே!

ஆடிப் பேழையில் சைக்கிள் இருக்கையில்
சூடாய்க் கொள்ளும் முறுக்கை வாங்க
வீடுகள் தூக்கம் விழித்தே மதியம்
கூடி நிற்கக் கூட்டம் களிக்க
நாசியில் இறங்கும் கண்வழி பார்த்தவர்
பேசிய மொழியில் பேதைய ரானோம்!

பொன்மொழி யறிஞர் முறுக்குகள் விற்பர்!
மென்திரைப் பாடலும் விற்கும் முறுக்கை!
பாட்டோ பேச்சோ ஏற்கச் செய்வதாம்
கேட்டே விட்டேன் எப்படி யென்றே
மீட்டிங், வீட்டில் தின்னும் முறுக்கு
பாட்டிடைப் பேச்சிட தானே என்றார்!

*****
 
சாணை பிடிப்பவர்

’சாணை பிடிக்கலையோ சாணை!’ என்பவர்
காணற் கரியஆ ளாகிப் போனார்!
தோளில் கனக்கும் சுமையுடன் நடந்தே
நாளெலாம் அலைந்தே நளபாகப் படைக்கலன்
கூராக்கித் தந்துதவக் குழம்பும் கறியும்
வேராக விழுதாக இறங்கும் நாவழியே!

சங்க விலக்கியம் சாணையைப் பேசும்
அங்கம் தழீஇத் தலைவியைத் தலைவன்
பிரியும் போது செப்பும் மொழியிதே
’சிறுகா ரோடன் அரக்கொடு சேர்த்த
சாணைக் கற்போல் நானும் நீயும்!’
ஆணவன் பிரிய வருந்தினாள் பெண்ணே!*

சாணைக் கருவி தரையில் இறங்கக்
காணக் குழந்தையர் வருவர் திரளாய்
கால்மிதித் தியங்கும் சாணைக் கல்மேல்
வால்மீன் தீப்பொறி காற்றில் மறையக்
கத்தியரி வாள்மணை கத்திரிக் கோலும்
எத்தனைக் கூரென வியக்க வைக்குமே!*

திருப்பூர் அருகோர் கிராமம் முழுதும்
திருத்தும் கூர்தொழில் செய்யுமே சென்னையில்!
வீடுகள் விடுதிகள் வாடிக்கை சேர்த்து
பாடுறும் தொழிலில் பயனெதும் இலையெனத்
தோள்சுமைச் சாணைத் தொழிலனு பவமென
நாளிதழ் ஒன்று கண்டறிந் ததுவே!

எந்திரம் வாழ்வை இயக்கும் இந்நாள்
அந்தர மாகும் கைத்தொழிற் கல்வியே
ஆலைத் தொழில்களின் ஆடிக் காற்றில்
வேலையும் வேலை யில்லா நிலயையுமே!
உதிரித் தொழிலின் சுதந்திரம் இப்படிச்
சிதறிப் போக விடுதல் நன்றோ?

--ரமணி

குறிப்பு:
1. ’சிறுகா ரோடன்’
’சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய
கல்போற் பிரியல மென்ற சொல்தான்
மறந்தனர் கொல்லோ தோழி!’
--அகநானூறு 1.

2. ’தினமணி நாளிதழ் செய்தி’
???????? ????????...

*****
 
பூவிற்கும் பெண்கள்

’பூவம்மா! மல்லி முல்லை சாமந்தீ!’
பூவிற் பனைக்குரல் முகங்கள் எத்தனை!
தான்விற் கும்மலர் தன்றலை யமர
வானமும் வையமும் வாசம் பெறவே
கலைவிரல் தொடுக்கும் நாரும் நூலும்
மலர்களின் வகையும் மனங்குளிர்க் காட்சி! ... 1

சங்க காலத்திவர் மலர்கள் விற்றதைத்
துங்கத் தமிழில் புலவோ ருரைப்பரே
அகநா னூறும் நற்றிண யும்சொலும்
மகளிர் மலர்பனை வட்டிலி லேந்தி
வண்டுகள் சூழ நடந்தே விற்பது
கண்டே தலைவியும் தளர்வுறு வாளே! ... 2

பூவிற் பதில்வரும் உழன்றிடும் வாழ்வே
கோயம் பேடு போன்றசந் தையில்
உதிரிப் பூக்கள் விடியலில் வாங்கி
உதவிகள் நாடித் தொடுத்தே அவற்றில்
காலையும் மாலையும் விற்பதை விற்று
ஆலயங் களுக்கு மீதியைத் தருவரே. ... 3

தெருவாய் அலைந்து விற்பதில் தினமும்
வருவாய் எனவரும் ஐம்பதில் நூறில்
மூன்று வேளையும் உண்ண வியலாதே
ஊன்றுகோ லாகமற் றோர்வினை செய்வரே
கணவன் உழைப்போ கள்ளுக் கடைக்கே
பணமும் கேட்டவன் அலம்பல் செய்வான்! ... 4

மேவிடும் வேலை மேற்கது வாகப்
பூவும் பொட்டும் ஒழித்தே பெரிதும்
மகளிர் இன்று வாங்கும் மலர்களை
அகத்தில் உறையும் கடவுளர் கொள்வரே
உற்சவ மலர்களைக் குத்தகை யார்கொள
அற்றே போகுமோ தனிமலர் விற்பனை? ... 5

--ரமணி

உதவி:
2000 ????????? ??????? ???????? ????????? | Tamil and Vedas
???????????....! | ?????

*****
 
குயில்கள் இன்று

காலத் தணல்கொள ராகம் பாடிய
கோலக் குயில்களின் குரலொலி போனதே!
குரலின் குழைவுகள் தூக்கி யெறிந்தாண்
குரல்கள் இன்று விற்பதில் அதட்டுமே!
’ஆகொய்யாப் பழமாப்பிளூ ஆரஞ்சு மாதுளய்!
ஆஆப்பி ளாப்பி ளாப்பிளு வாளைப்பழம்!’

வடவர் உண்பொருள் நாளும் கொள்வதில்
இடம்பெயர் விற்பனை இளைஞர் கண்பட
வண்டியில் பூரிகள் பலவித சப்ஜிகள்
உண்டிட ஐஸ்க்ரீம் குல்ஃபிசோன் பப்படி
மணிகள் அடித்துவிற் பனைசெயும் இந்நாள்
மணிக்குயில் மணிக்குரல் மாய்ந்தே போகுமே!

பொருள்களும் சேவையும் கொடுப்பதை விடவும்
தரகு விற்பனை யதிகம் ஆகிட
ஒலிக்கும் ஓரிரு குயில்களின் குரல்களும்
விலைகள் கொடுத்து வீண்பொருள் வாங்குமே!
பழைய்ய பேப்பா ருபிளாஸ்டிக் சாமான்!
பழைய்ய இரும்புச் சாமான் பால்கவர்!...

பண்டிகை நாட்களில் வாகன மேறிடக்
கண்டிடும் குரல்கள் அறையும் செவிப்பறை!
பழைய்ய பட்டுப் பாவாடை சேலைவேஷ்டி!
கிழிஞ்சது ஜரிகை வெள்ளிக்கு நல்லவிலை!
ரெண்டு புதிய சின்தெடிக் புடவைக்கு
உண்டு இனாமாக ஒருசேலை யோடிவா!

சில்லறை வணிகம் பிறநாட் டார்கொளின்
கொல்லைப் புறம்வரும் தொழில்நுட் பத்தில்
உண்ண உடுத்தக் குடிக்கக் களித்திடத்
திண்ணம் எதுவும் விற்பனை யாகுமே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!

--ரமணி

*****
முற்றியது
 
கீழ்வரும் பாடலின் பொருளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

மரபுப்பா வித்தகம் 1.

புல்தின்னும் வேங்கைமுகம் மீசைப்பெண் நாவது
சொல்தின்னும் வண்டொன்று பூத்தின்னும் - வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவியெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால் மாடு.

--ரமணி, 03/11/2013

*****
 
இந்த உத்திக்குப் பெயர் ’கடைமாற்றுப் பொருள்கோள்’ என்று பெயர்.
அதாவது, செய்யுளின் இறுதித் சொல்லை எடுத்துச் செய்யுள் முதலில்
போட்டுப் படிக்கப் பொருள் தெளிவாகும்!

விடை:
மாடு புல்தின்னும் | வேங்கை முகம் மீசை | பெண் நா அது
சொல்தின்னும் | வண்டொன்று பூத்தின்னும் |- வில்லினில்
வல்லம்பு தின்னுமே ஆவி | யெனக் காட்சிகள்
கல்தின்னும் சிற்றுளியால்.

*****
 
மரபு வித்தகம் 2.
சதுர்பங்கி


மரபு வித்தக உத்திகளில் திரிபங்கி என்பது ஒரே பாடலில் மூன்று பாடல்கள் அமைத்து எழுதுவது. சதுர்பங்கியில் நான்கு பாடல்கள் உள்ளடங்கி யிருக்கும். பாம்பன் சுவாமிகள் 125 பாடல்களாகப் பிரியும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் என்பர்.

இந்தப் பாடலில் உள்ளிட்டு வரும் இன்னும் நான்கு பாடல்களை இனம் கண்டுகொள்ள முடிகிறதா? (உள்ளிட்ட பாடல்களில் சீர்கள் மூலப் பாடல்களை விடவும் குறைவாக--இரண்டு, மூன்று சீர்கள் என்பதுபோல்--இருக்கும் என்பது வெளிப்படை).

முன்னை வினைகள் இற்றுப் போகவே!
(எழுசீர் விருத்தம்: தேமா புளிமா தேமா கூவிளம் மா மா காய்)

முன்னை வினைகள் முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இன்னும் வினைகள் இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
உன்னத் தெரியேன் சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
மன்னித் தருள்வீர் பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா!

[துன்மை=தீமை; கங்காளன்=சிவன்]

--ரமணி

*****
 
உள்ளடங்கிய நான்கு பாடல்கள்:

வஞ்சித் துறை
முன்னை வினைகள்
இன்னும் வினைகள்
உன்னத் தெரியேன்
மன்னித் தருள்வீர்! ... 1.

வஞ்சித் துறை
முற்றும் சூழ்வது
இற்றுப் போகவே
சுற்றம் ஆகுவீர்
பற்றை நீக்கியே! ... 2.

வஞ்சி விருத்தம்
குன்றச் செய்வீர் கோமானே!
என்றும் அருள்வீர் பெம்மானே!
துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
நன்மை விளைப்பீர் கங்காளா! ... 3.

கலித் துறை
முற்றும் சூழ்வது குன்றச் செய்வீர் கோமானே!
இற்றுப் போகவே என்றும் அருள்வீர் பெம்மானே!
சுற்றம் ஆகுவீர் துன்மை யுரைப்பீர் முக்கண்ணா!
பற்றை நீக்கியே நன்மை விளைப்பீர் கங்காளா! ... 4

-- ரமணி

*****
 
மரபு வித்தகம் 3.
வினா உத்தரம்


இவ்வகைப் பாடல்களில் கேள்விகளும் அவற்றின் விடைகளும் இருக்கும்.
விடைகளை இணைத்தால் செய்யுள் குறிக்கும் பெயராகும்.

எரிவ தெதுவோ விளக்கிலே? மன்னன்
அரிவை இடம்பின் பதமெது? சொல்லெதிர்
’இந்த’வுக் கென்ன? இவற்றோடு ’கன்’சேர
வந்த சிவநா மமே. ... 1.

விடை:
கேள்விகளுக்கு விடை முறையே திரி, (அந்தப்)புரம், அந்த.
இவற்றோடு ’கன்’ விகுதி சேர வந்த சிவநாமம் ’திரிபுராந்தகன்’

*****

இதுபோல் இந்தப் பாடலின் விடையைக் காண்டுபிடியுங்கள்.

வரதுங்க ராமமன்னன் அந்தாதி சொல்லும்
கருவைத் தலமிது! யானையின்னோர் பேரெதுவோ?
அம்மைக்கெப் பக்கமத்தன்? ’போன’ எதிர்ப்பதம்?
செம்மைநல் லூர்சேர்க்க வே. ... 2.

*****
 
சென்ற அஞ்சலில் இரண்டாம் பாட்டு:
கேள்விகளுக்கு விடை முறையே: கரி, வலம், வந்த
கரிவலம்வந்த நல்லூர்

மரபு வித்தகம் 4.
சர-மழை


கனவும் நனவும் உளமே விளையும்
நனவும் மறுநாள் கனவாய் இரியும்
உளமே கனவாய் உருவாய் வரத்து
விளையும் இரியும் வரத்து.

[இரிதல்=கெடுதல், ஓடுதல், விலகுதல், வடிதல், அஞ்சுதல்]

மேலே உள்ள வெண்பாவின் சிறப்பு என்ன?

--ரமணி

*****
 
மேலுள்ள வெண்பாவின் சிறப்பு:
இடம்-வலம் படித்தாலும், மேல்-கீழ் படித்தாலும் அதுவாகவே அமைந்த வெண்பா.

மரபு வித்தகம் 5.
நிரோட்டம் அல்லது இதழகலி


இனியொரு நிரோட்ட வெண்பா. இதன் சொற்களைப் படிக்கும்போது உதடுகள் ஒட்டாமலோ
குவியாமலோ அமைவதால் இது நிரோட்டம் அல்லது இதழகலி என்று பெயர் பெறும்.

என்னென்ன நானில்லை என்றறியச் செய்தாய்நீ
என்னதான் நானெனக் கேட்டேன்நான் - என்னைநீ
என்றழைக்கா தேநீயே நான்நானே நீதெளி
யென்றானே நெஞ்சி லிறை.

--ரமணி

*****
 
மரபு வித்தகம் 6.
இதழுறல் அல்லது இதழுறலி


ஒவ்வொரு சீரிலும் (குறைந்தது ஓர்) இதழுறல் வருவது:

மானு மழுவு மிருபுஜ மோங்குமே
வானம் புவனமு மாண்டு மழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்புறு மாபதி
மெய்யவன் பாடியே போற்று.

பதம் பிரித்து:
மானு(ம்) மழுவும் இருபுஜம் ஓங்குமே
வானம் புவனமும் ஆண்டும் அழித்துமே
மொய்ம்புறக் காப்பவன் மாண்பு(று) உமாபதி
மெய்யவன் பாடியே போற்று.

எல்லா எழுத்துகளிலும் இதழுறல் வந்தது:

குப்பம்மா பாப்பா உவப்பது உப்புமா
சுப்பம்மா பூமா உவப்பது உப்புமா
உப்பொடு மாவுமே உப்புமா வாகுமே
உப்புமா போடு உமா!

--ரமணி

*****

தமிழில் உள்ள 247 எழுத்துகளில் இதழுறல்--அதாவது உச்சரிப்பில் இதழ்கள் ஒட்டியோ குவிந்தோ சொல்வது மொத்தம் 119. இவை போக மீதியுள்ள 128 எழுத்துகளும் இதழகலி எழுதப் பயன்படும் எழுத்துகளாகும்.

உ,ஊ,ஒ,ஓ,ஔ உயிர்களுடன்,
ப், ம், வ் மெய்களும் சேர்ந்து 8
ப்,ம்,வ் 12 உயிர்கள் உறழ்ந்து 36
உ,ஊ,ஒ,ஓ,ஔ x15 மெய்யுடன்
உறழ்ந்து, (ப்,ம்,வ் நீங்கலாக) 75
ஆக 119.

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top