எங்கே எங்கள் இடங்கள்? - 2
தன்னிடம் பாதுக்காப்பாக வைத்துக்கொள்ள,
என்னிடம் இருந்த பையை எடுத்துக்கொண்டு,
தனது இடத்திற்கு மாமா மகன் சென்றுவிட,
தந்தை ப்திவில்லாப் பெட்டியில் சென்று ஏற,
பெண்கள் பதிவில்லாப் பெட்டியில், தெரியாத
பெண்கள் மத்தியில் அமர்த்தப்பட்டேன் நான்!
என் மனமோ, என் பையில் உள்ள என்னுடைய
எண்ணிலாச் சான்றிதழ்களை எண்ணியிருக்க,
நெருக்கியடித்து அமர்ந்து, விடியல் எப்போது
வரும் என்று எதிர்பார்க்கவும் ஆரம்பித்தேன்!
நள்ளிரவில், திடீரென்று பழகிய குரல் ஒன்று,
நள்ளிரவு நிசப்தத்தை மீறி என்னை அழைக்க,
உடனே அறிந்துகொண்டேன், தந்தையே என்று!
உடனே ஓடி வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில்,
குதித்தேன் ரயிலின் வெளியில், நான்கடி கீழே!
குதித்த பின் அறிந்தேன், எங்கோ சிக்னலுக்காக
ரயில் நின்றது என்றும், என்னை அழைத்து வர
ரயில் நண்பர் யாரோ தந்தையிடம் கூறியதால்,
அவர் என்னைக் கூட்டிச் செல்ல வந்தார் என்றும்!
அவர், தான் இறங்கிய பெட்டி நினைவு இல்லாது,
என்னுடன் அந்தப் பெட்டியைத் தேடி வர, ரயிலோ
தன்னுடைய கூக்குரல் எழுப்பி, போக விழைந்திட,
அதே ரயில் நண்பர் கதவருகில் நின்று, எங்களை
அதே பெட்டியில் ஏற, தன் கரம் கொடுத்து உதவ,
அந்த நல்லவர், நான் படுக்க, Luggage வைத்திடும்
அந்த இடத்தைக் காலி செய்தும் கொடுக்க, நன்றி
பல முறை அவருக்கு சொல்லி, நான் சுருண்டேன்!
'சில நல்லவர்களை இறைவன் உதவ அனுப்புவான்'
என்று எப்போதும் சொல்வதுபோல் தந்தை சொல்ல,
அன்று அப் பயணம் தொடர்ந்தது, சென்னை செல்ல!
சிங்காரச் சென்னை சேர்ந்து, என் பையை கண்டதும்,
சிந்தை தடுமாறிய எனக்கு, மன நிம்மதியே வந்தது!
ஒன்று அறிந்துகொண்டோம்; 'டிக்கட்' பரிசோதகரை
என்றும், மறந்தும், உரத்த குரலில் வையக் கூடாது!
:argue: . . . :nono: