Raji Ram
Active member
கவின் மலையாள தேசத்தில் பயணம் - 5
திருச்சூரிலிருந்து சிறிது தொலைவில் அமைந்தது
த்ரிப்ரயார் ராமர் கோவில்; செல்லும் பாதை நெடுக
பல விஷ்ணு மாயா கோவில்களை அமைத்துள்ளார்.
பல குடும்பங்கள் நிர்வகிக்கும் இவற்றைக் காணவே
ஆச்சரியம்தான்! செய்வினைகள் செய்து கெடுப்பவர்
ஆயிரங்களில் இருப்பார்களோ, கேரள மண்ணிலே?
சில விஷயங்களை நாம் அறியாமல் இருப்பது நலம்.
பல மனக் கிலேசங்கள் நம்மை அணுகாது இருக்கும்!
த்ரிப்ரயார் ராமர் கோவிலில் விசேஷங்கள் பற்பல.
திரி வைக்காத வெடிக் கட்டு அதிலே ஒன்று ஆகும்!
இரும்புக் குடுவைகள் போல உள்ளவைகளில், நன்கு
இறுக்கமாக வெடி மருந்தை அடைத்து வைத்து, ஒரு
வரிசையில் அவற்றை அடுக்கி, ஒரு ஓரத்தில் ஏற்ற,
வரிசையிலுள்ள அனைத்தும் உடனே டப, டப, டப!
நெஞ்சு படபடக்கிறது, நம் காது பிளக்கும் ஒலியில்!
அஞ்சும் விதம் திருஷ்டி தரும் கேடுகள் எல்லாமே
வெடிகள் வைக்கப் பிரார்த்தனை செய்துகொண்டால்,
வெடித்துச் சிதறி, நன்மை வந்திடும் என நம்பிக்கை!
பெரிய குளம் இருக்கிறது கோவிலில்; அங்கு உள்ள
பெரிய வகை மீன்களுக்கு 'மீனுட்டு' செய்கிறார்கள்!
அரிசியில் நெய்யும், வெல்ல நீரும் சேர்த்துக் கலக்கி,
அருகில் சென்று மீன்களுக்கு உணவாக இடுகின்றார்.
இதுவும் ஒரு பிரார்த்தனைதானாம்! இங்கு வருகிற
பொதுமக்கள் கூட்டத்தைப் பார்க்கவும் அதிசயமே!
பெரிய பிரகாரத்தைச் சுற்றி வந்த பின்பு, மூலவரை
தரிசிக்கச் சென்றோம்; அங்கும் பற்பல அதிசயங்கள்!
தொடரும் .............