• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 97

நீண்ட ஒரு வார விடுமுறை ( LABOUR DAY ) தொடங்கியது,
நீண்ட நாளாய் ஆசை கொண்ட மலை ரயில் பயணத்துடன்!

முதன்முறையாக, நூறு ஆண்டுகளுக்கு முன் செய்த பாதை;
முதன்முறையாக எங்கள் மலை ரயில் பயணமும் அதுவே.

குளிரும் கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தும்,
குளிரும் ஊட்டிக்கு ரயில் பயணமே நான் சென்றதில்லை!

அமெரிக்கரின் அமர்க்களமான விளம்பரத் திறமையால்,
அமெரிக்காவில் பல இடங்கள் புகழ்பெற்று இருக்கின்றன.

மிகவும் மோசமான வானிலையுள்ள இடமென்று இங்கு
மிகவும் புகழ் பெற்றது, ரயில் போகும் வாஷிங்டன் மலை!

US11world%27s%20worst%20weather.jpg


அது பற்றி இன்டெர்நெட்டில் துருவி, ஆராய்ந்து,
மெதுவாகப் பல விஷயங்கள் கண்டுபிடித்தேன்.

இந்த வாஷிங்டன் மலை உச்சியை 1852 - இல் அடைந்து,
வந்த வழியில் இறங்க முடியாது தவித்த மலை ஏறுனர்,

திரு சில்வெஸ்டர் மார்ஷ் என்பவரின் எண்ணத்தில் உதித்த
ஒரு மலை ஏறும் ரயில்தான், இந்த COG RAILWAY என்பது.

எந்தக் கண்டுபிடிப்பாளரும் எதிர்நோக்கும் பிரச்சனைகளை,
இந்த மார்ஷும் அனுபவித்தார்! இவர் தம் எண்ணத்தைச்

சொன்னதும் எல்லோரும் பரிகசித்து, 'வெண் நிலவுக்கு
செல்லவும் கூட ரயில் பாதை போடலாமே' என்றனராம்!

எருதுகளில் முப்பது மைல் தொலைவு மரங்களைக் கடத்தி,
அரிதான தன் முயற்சியால், 1869 - ல் இப்பாதை அமைத்தாராம்!

US10cog%20railway%2C%20Mount%20washington.jpg

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 98

நூற்றுநாற்பது ஆண்டு வயதுள்ள இப்பாதையில், முற்காலத்
தோற்றமான நிலக்கரி என்ஜினும், டீசல் என்ஜினும் செல்கின்றன.

ஆறு ரயில்கள், ஒரு என்ஜினுடன் ஒரு பெட்டி என இணைந்து,
நாலு மைலுக்கும் குறைவாக அப் பாதை செல்லும் வளைந்து.

இணையான இரண்டு தண்டவாளங்களுக்கு நடுவில், அதன்
துணையாக, ஒற்றை வரிச் சங்கிலிப் பாதையும் செல்லும்.

US14trees%20on%20the%20way.jpg


உற்சாகமாய் டிக்கட் எடுத்து, வரிசையில் நின்றதும், எங்கள்
உற்சாகம் இரட்டித்தது, நிலக்கரி என்ஜினைக் கண்டதும்!

கனத்த கோட்டுகளும், கம்பளித் தொப்பிகளும் கைகளில்
கனக்க, நாங்கள் பெட்டியினுள்ளே சென்று அமர்ந்தோம்.

'கூக்கூ' என்று குழந்தைகள் ரயில் விளையாட்டில் கூவுவதுபோல்
கூவியபடி, கிளம்பியது ரயில் 'தடக், தடக்' என்ற ஓசையுடன்.

'மூணேமுக்கால் மைல் செல்ல, ஒரு மணி நேரப் பயணம்
ஏனோ?', என்ற கேள்விக்கு விடை கிடைத்தது அப்போது!

ஆடி, ஆடி அது செல்லும் வேகத்திற்கு மேலாக நாம்
ஓடி, ஓடிச் செல்லலாம், சக்தி மட்டும் இருந்துவிட்டால்!

வெள்ளை மலை எனும் White mountain - இல் உள்ளது,
கொள்ளைக் குளிரால் நடுங்க வைக்கும் வாஷிங்டன் மலை.

உயரம் செல்லச் செல்ல, வெள்ளைக் கற்பாறைகள் வெயிலில்
வைரம் போல மின்ன, நிலக்கரிப் புகை கருப்பாய் மேலே எழ,

மரங்களின் செங்குத்து தரைமீது சாய்வாய்த் தெரிய, குளிரால்
கரங்களும் சில்லிட, அனைவரும் கோட்டும், தொப்பியும் அணிய,

இருபது நிமிட பயணத்தின் பின், மேலிருந்து கீழே இறங்கி
இரு ரயில்கள் வர, வழி விட்டு நின்றது எங்கள் ரயில்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 99

US12water%20tank.jpg


அருகிலிருந்த பெரிய தொட்டி நீரை என்ஜினில் நிரப்பிய பின்,
பெருகிவரும் புகையுடனே, மீண்டும் பயணம் தொடர்ந்தது!

இரு ரயில்கள் தாண்டிக் கொள்ளும் இடங்களில் மட்டும்,
இரு வழித் தண்டவாளங்கள் பாதையில் இருக்கின்றன.

ரயில் செல்லும் வேகத்திலேயே மலை ஏறுபவர் சென்றனர்;
ரயில் புகை தாக்காதிருக்க, முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

சில இடங்களில் செங்குத்தான ஏற்றங்கள், மனதில்
சில நிமிட பயத்தைத் தோற்றுவித்தது நிஜம்தான்!

பக்தியை ஏற்படுத்தும் பயணமென்றும் கூறலாம், பய
பக்தியுடன் ஆண்டவனை நினைக்க வைப்பதால்!

கற்களை அங்கங்கு குவித்துள்ளார்; பனிக்காலத்தில் அக்
கற்களைக் கொண்டு, மலை ஏறுவோர் பாதையை அறிய.

US13piles%20of%20stones.jpg


மணித் துளிகள் அறுபது செல்ல, 'கூக்கூ'வெனக் கூவி,
மணி அடித்தபடி, ரயில் மலையுச்சி வந்து சேர்ந்தது.

அனைவரும் ஆவலுடன் கீழே இறங்க, காற்று வீசி,
அனைவரையும் தன் திசையில் இழுத்துத் தள்ளியது!

கைகள் விறைத்துப்போக, நடக்கும் திசையும் மாற,
கைப்பைகள் பறந்துபோக முயல, தூசி நம் மீது படிய,

'வானிலை ஆராய்ச்சி மையத்தை' நாடிச் சென்றோம்,
வானிலை உலகிலேயே மோசமான அந்த இடத்தில்!

 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 100

பழமொழி ஒன்று 'நிழல் அருமை வெய்யிலிலே' என்று; அன்று
புதுமொழி தோன்றியது 'வீட்டு அருமை வெளியிலே' என்று!

வீட்டினுள்ளே முடங்கத் தூண்டும் மோசமான காற்று;
வீடுகள் கட்டிக் குடியிருப்பு இல்லாதது வியப்பே இல்லை!

ஆராய்ச்சிக்கு ஒரு மையம் வைத்துள்ளார், மலை மீது
ஆராய்ச்சி தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாததால்!

மூடிய கதவுகளே எங்களை வரவேற்க, மீண்டும்
ஆடியபடியே வெளியேறினோம், சுற்றிப் பார்க்க.

போட்டோ எடுக்கவும் மிகப் பயமாக இருந்தது, அந்த
போட்டோ எடுப்பதற்குள் காமரா பறக்குமோ என்று!

பதினைந்து நிமிட நேரமே கொடுத்தனர் அங்கு சுற்ற;
அதில் ஐந்து நிமிட நடையே, களைத்திட வைத்தது!

மீண்டும் வரிசையில் நின்று ரயில் பெட்டியேற, அங்கு
கண்டோம் ஒரு அதிசய மாற்றத்தை! இருக்கைகளின்

சாயும் பகுதியை கீழே தள்ளிவிட, அமரும் பகுதி
சாயும் பகுதியாக மேலே வந்துவிட, இருக்கைகள்

திசைமாறிவிட்டன நாங்கள் மீண்டும் வந்தபோது!
இசைவாக இருந்தன, கீழே செல்லும் பயணத்திற்கு.

மலையின் மறுபுறம் படமெடுக்க வசதியாக அமர்ந்து,
மலையின் அழகை ரசித்தவாறு பயணித்தோம்.

புற்கள் காற்றில் வளைந்து கவிழ, அப்பகுதியில்
கற்கள் கருமையாக விளங்க, உச்சியில் இல்லாத

நெடு மரங்கள் கீழே வரும் வழியில் வளர, மலைகள்
தொடுவானம் வரை அடுக்கடுக்காய் இருக்க, ரயில்

புவியீர்ப்பு விசையால் இயங்கி, நிலக்கரியை சேமிக்க,
கவிதை எழுதப் பல வரிகள் எனக்குக் கிடைக்க,

பயமூட்டிய ஒரு புதிய பயணம் செய்துவிட்டு, அந்த
வழிகாட்டிக்கு அன்பளிப்புக் கொடுத்து, இறங்கினோம்!

US15Holding%20wheel%20of%20cog%20rail....JPG

.....................................Cog rail wheel
 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 101

இன்னும் இருபத்திநாலு மணியில் விமானம் ஏறணும்
என்னும் வேளை வந்ததும், துணிகள் பெட்டியில் ஏறின.

நீண்ட வார விடுமுறையின் கடைசி நாளில், நாங்கள்
நீண்ட பயணமாகச் சென்னைக்குப் புறப்பட்டோம்.

பிரியமான பிள்ளைகளுக்கு நல்வாழ்த்துச் சொல்லிப்
பிரியா விடைபெற்றுக் குட்டி விமானம் ஏறினோம்.

முதல் கட்டப் பயணம் சுமார் ஒரு மணி நேரமே;
அதில் பெட்டிகள் ஏறினால், சென்னை வந்து சேருமே.

நியூயார்க் வரை போகும் விமானம் சின்னது. பின்னர்
நியூயார்க்கில் ஏறும் ஜெட் விமானம்தான் பெரியது.

ஆதவன் மேற்கில் மறைவதும் அழகு; ஓய்வுக்குப்பின்
ஆதவன் கிழக்கில் உதித்தல் பேரழகு! காமரா கையில்

உள்ளபோதெல்லாம், நான் மறப்பதே இல்லை அந்தக்
கொள்ளை அழகை, புகைப்படமாய்ச் சிறைப் பிடிக்க!

விமானம் தரை இறங்கும்போது அஸ்தமன நேரம்;
விமானத்தின் உள்ளிருந்தே அதை 'கிளிக்கினேன்'.

US16Sunset%2C%20New%20York.jpg


முதல் ஜெட் பயணம் ப்ரசெல்ஸில் முடிந்ததும், இறங்கினால்
முதலில் அமர்ந்த இடமே கிடைக்கும், இரண்டு மணி நேரத்தில்.

அதே விமானத்தில் அதே இருக்கைகள் கிடைத்தாலும், நாம்
அதே விமானத்தில் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாது.

இரண்டாம் ஜெட் விமானப் பயணத்தில் அதிகக் கூட்டமில்லை.
இரண்டு இருக்கைகள் ஒருவர் பெற்றதால் நெருக்கடியில்லை.

பத்து மணி வெய்யிலில் புறப்பட்டபின், நல்ல உணவு அளித்து,
ஐந்து மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டனர்.

வெளியில் வெளிச்சம் பரப்ப சூரியன் இருந்தாலும், அந்த
ஒளியில் கொஞ்சமும் விமானத்திற்குள் வரவில்லை.

நல்ல ஓய்வு தந்தபின் கொஞ்சம் ஸ்நாக் பரிமாறினர்.
நல்ல பெரிய சாக்லேட் ஐஸ்கிரீம் கடைசியில் தந்தனர். :hungry:


 
கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 102

US17Sunrise%2C%20Brussels.jpg


முதல் ஜெட் விமானம் தரை இறங்கும்போது, ஆதவனின்
முதல் கிரணங்கள் ஒளிபரப்ப, அதுவும் என் 'காமரா'வில்!

நீண்ட பயணம் முழுதும் அருமையான உபசரிப்புப் பெற்று,
நீண்ட எங்கள் விடுமுறையும் முடிவுக்கு வந்தது அன்று!

அமெரிக்கா சென்றபோது சேமித்த ஒன்பதரை மணி நேரத்தை,
அமெரிக்காவிடமே கொடுத்ததுபோலத் தொலைத்துவிட்டோம்!

பன்றிக் காய்ச்சல் பாடு படுத்துவதால், ஒரு விண்ணப்பத்தில்
ஒன்றும் தமக்கு இல்லை என உறுதி செய்யச் சொன்னார்கள்.

கிருமி நாசினி தெளித்தபின், அனைவரையும் இறக்கிவிட்டு,
கிருமி பரிசோதிக்கும் மருத்துவரிடம் உடனே அனுப்பினார்கள்.

சுங்கச் சோதனை முடித்து, மருத்துவச் சோதனை முடித்து,
எங்கள் பெட்டிகளை எடுக்க, நாங்கள் வெளியில் வந்தோம்.

இனிய இல்லம் வந்தடைந்ததும், மன மகிழ்ச்சி வருதே; இனி
பணிப்பெண் வருவாள் வீட்டு வேலைகளைச் செய்ய இனிதே!

'நாடகமே இந்த உலகம்; ஆடுவதோ பொம்மலாட்டம்', என்பதை
நம்பிடுமே நம் மனம், நீண்ட பயணங்கள் சென்று வரும்போது!

கடல் கடந்து சென்று, நல்ல சுற்றம் நட்புகளைக் காண,
உடல் சோர்ந்து போகுமளவு, ஊர்கள் பல சுற்றி வந்து,

எத்தனையோ புதுப் புது அனுபவங்கள் பெற்றாலும், அவை
அத்தனையும் கனவு போலவே தோன்றுவதும் நிஜம்தானே?

புதிய வடிவில் கோவில்களும், புதிய வகையில் தோட்டங்களும்,
புதிய சூழலில் வாழும் வாழ்க்கை முறைகளும், பனி மலைகளும்,

மிக அரிய, அனல் வீசும் பூமி வடிவங்களும், அரிய விலங்குகளும்,
மிகப் பெரிய பள்ளத்தாக்குகளும் என்று பல அதிசயங்கள் கண்டு

வந்த பின்பு, அவை நாம் பார்த்தவைதானா எனும் ஐயம், ஆல்பம்
கண்ட பின்புதான் போகும் என்று ஆவதும் ஒரு மாயைதானோ?

நமக்கு மேலே ஒருவன் இருந்து, கைப்பாவைகளாக வைத்து,
நம்மை ஆட்டுவிப்பது போலவும் ஒரு பிரமை தோன்றுகிறது!

கண்காணாத தேசங்களில் வாழும் பிள்ளைகளைத் தினம்
கண் பார்த்து, மனம் மகிழ, இப் பயணங்கள் தேவைதான்!

இறையருளால் கிடைத்த அருமையான வாய்ப்பாக எண்ணி,
இறையைப் பணிந்து, இப்பக்கங்களை நிறைவு செய்கின்றேன்!

உலகம் உய்ய வேண்டும்.....:pray2:..... :amen:
ராஜி ராம்
 
நீண்ட இத் தொடரில், 'ஏற்ற' விட்டுப்போன சில புகைப்படங்களை,

மீண்டும் அளிக்க விரும்புகிறேன். இது நாளை தொடரும்......
 
Acadia national park:

Thunder hole

001water%20splash%2C%20thunder%20hole.jpg


................................................................................................................................

Seals lying on rocks

002seals.jpg


................................................................................................................................

Sri Lakshmi temple, Delaware

004Lakshmi%20temple%2C%20Delaware.jpg


 
Last edited:
Musical fountain, Longwood gardens, Delaware

005Musical%20fountain%2C%20spalsh.jpg

...........................................................................................................................

Children dancing at the Dragon festival, Boston

006Dancing%20kids%2C%20Dragon%20festival.jpg

...........................................................................................................................

Whale watch, Boston


007close%20up%20of%20a%20whale.jpg
 
Candies made for a Baby shower function

008Duck%20shaped%20candies.jpg


..........................................................................................................................

Photos taken at the aquarium, Boston

009Aquarium%2C%20Boston.jpg


010Jelly%20fish%2C%20%20Boston%20Aquarium.jpg

 
The gun that frightened me at a Mexican restaurant, Santa Fe

013Gun%20near%20exit%20in%20restaurant.jpg

.................................................................................................................

Black mesa on the way to Los Alamos

012Black%20mesa.jpg

..................................................................................................................

Bandelier national monument, Santa Fe

014remains%20of%20houses%2C%20Bandelier%20national%20monument.jpg

..................................................................................................................

Spanish festival, Santa Fe

015music%20troup%2C%20Spanish%20market.jpg


 
Photo of Kumba mela, Santa Fe

016Kumbamela%2C%20%20photo.jpg

.................................................................................................................

Model of atom bomb, Bradbury museum, Los Alamos

017Atom%20bomb.jpg

.................................................................................................................

Caldera valley, Santa Fe

018Caldera%20valley%2C%20Santa%20Fe.jpg

 
Bear lake, Rocky mountains, Colorado

019Bear%20lake.jpg

.......................................................................................................................

Colorful trees around the Bear lake

020Trees%20around%20bear%20lake%20%281%29.jpg

.......................................................................................................................

A lonely bird at Rocky mountains, Colorado

021Bird%20in%20Rocky%20mountains.jpg

.......................................................................................................................

All male elks at Rocky mountains

022Male%20elks.jpg

 
பயணக் க(வி)தைகள்...

Ms. Raji Ram,

The photographs uploaded are beautiful. I request you to give a note on "the photo of Kumba Mela, Santa fe". What is the occasion on which this photo was taken?

Regards,
Brahmanyan,
Bangalore.
 
Ms. Raji Ram,

The photographs uploaded are beautiful. I request you to give a note on "the photo of Kumba Mela, Santa fe". What is the occasion on which this photo was taken?

Regards,
Brahmanyan,
Bangalore.
Dear Sir,

Thanks for your reply... We saw this photo in a huge hall in the Santa Fe market area, displaying many such photos which were like beautiful paintings... Shall give the portion of my write up here:

"கடல் கடந்த இரண்டாம் அனுபவம்..... 54

பானைகள் மிக அழகு என்று அருகில் சென்றால்,
யானை விலையாக 5000 டாலர் என்கின்றார்கள்!

பெரிய ஹால் ஒன்றில் நான்கடிக்கும் மேல் சதுர வடிவில்
பெரிய அளவுப் புகைப்படங்கள் பல இருக்கக் கண்டோம்.

என்ன அதிசயம்! நம் நாட்டுக் கும்பமேளா விழா அங்கு
சின்னத் தூரிகையால் வரைந்ததுபோல் பாங்காகத் திகழ்கிறது.

மீன் பிடிக்கும் படகுகளில், கழுத்தில் வளையம் கொண்டு,
மீன் பிடிக்க உதவக் CORMORANT பறவை உபயோகிப்பதும்,

மிகப் பெரிய சைனாச் சுவரும், ஆதிவாசிகளும் என
மிக அழகான புகைப்பட வரிசைகள் கண்டு வியந்தோம்!"

 

Jewels, Santa Fe market

Raji%20Ram%27s%20-%20Albuquerque.jpg

.........................................................................................................................

Few more clicks of the photos for sale, Santa Fe market

Raji%20Ram%27s%20-%20Albuquerque-1.jpg


Raji%20Ram%27s%20-%20Albuquerque-3.jpg

..............................................................................................................................

Photo of the great wall of China

Great%20wall%20of%20China%2C%20Photo.jpg



 
Last edited:
Few photos taken at the Denver zoo, with notes from the write up.....

தன் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தது ஒரு பறவை,
தன் சூரியக் கதிர் தங்கக் கொண்டை, செந்தாடி சகிதமாய்.

023bird%20on%20one%20leg.jpg

.............................................................................................

மிக உயர்ந்த ஒட்டகச்சிவிங்கி ஒன்று, ஒரு மரத்தருகில் சென்று,
மிக ரசனையுடன் மரப் பட்டைகளை நாக்கால் நக்கி மகிழ்ந்தது.

முதிர்ந்த அந்த மரப் பட்டையில் ஒருவேளை அது
உணர்ந்ததோ மிக நல்ல வெனிலா வாசனையை?

Jiraffe.jpg

.............................................................................................

திறந்த வெளியில் நடந்து போனது பெருமையுடன்,
சிறந்த அழகிய நம் நாட்டு தேசியப் பறவை ஒன்று!

தன் நண்பர்கள் எல்லோரும் வேறு இடத்தில் கூடியிருக்க,
தன் தோகை அழகை விரிக்காமலே காட்டி நடை போட்டது.

024proud%20peacock.jpg

 
தன் தோகை அழகு காட்டி நடந்த மயிலை அடுத்து வந்தது
'என் அழகிலும் குறைவில்லையே?', எனக் கேட்பதுபோல் வாத்து.

Duck.jpg


போலார் வெள்ளைக் கரடி, குகை போன்ற அமைப்பில் நடந்தது,
'போலார் பகுதி செல்ல வழியுண்டோ?' எனக் கேட்பது போல!

025Polar%20bear.jpg


கருப்பு நிற சடை கொண்ட காட்டெருமைகள் நின்றன.
விருப்பமுடன் போஸ் கொடுத்து காமராவில் சிக்கின.

மண்ணும் புழுதியும் உடல் மீது இல்லாவிட்டால்
இன்னும் கருமை நிறம் கூடி இருந்திருக்கும்.

026Bison.jpg


வெள்ளைக் கிளிகள் இரண்டு, இந்த உலகையே மறந்து,
கொள்ளை அழகாய்க் கொஞ்சும் கிள்ளை மொழி பேசின!

parrots.jpg

 

பயணம் செய்யக் கடல் கடக்க அவசியமில்லையே;
பயணம் இனிதே செய்யலாம், நம் பாரத தேசத்திலே!

'கீதா கிருஷ்ணா அனுபவம்' என்ற யாத்திரையை,
கீதா போதகர், வேளுக்குடி சுவாமிகள் முன்னின்று,

சென்ற ஆண்டு வெற்றிகரமாக முடிக்க, யாத்திரை
சென்ற என் சகோதரியின் அனுபவங்களைக் கேட்டு,

படைத்த சில பக்கங்களை, ஆவலுடன் உங்களுக்கு
அடுத்த பயணக் க(வி)தையாக அளிக்க விழைகிறேன்!

உலகம் உய்ய வேண்டும், :angel:
ராஜி ராம்
 
எங்கள் மூத்த சகோதரி திருமதி. லக்ஷ்மி சங்கர் இந்த யாத்திரை மேற்கொண்டார்.

C. T. C. R. I, திருவனந்தபுரத்தில், உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.

புகைப்படங்கள் அளித்து உதவிய திரு. ஜே. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்
 
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை ..... 1

இறை அனுபவத்தை விரும்பாதவர் யார்? அந்த
இறை அனுபவத்தைப் பெற்றவரிடம் பேசியதில் வந்த

எண்ணங்களை வடித்திடவே, இந்தச் சில பக்கங்களைப்
பண்ண விழைந்துள்ளேன்; நாம் படித்து மகிழ்ந்திடவே!

'கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை', என்று அழகிய
கீதம் போல் இனிக்கும் பெயரே அனைவரையும் ஈர்க்கும்!

பயண ஏற்பாடுகளை 'கிஞ்சித்காரம் டிரஸ்ட்' செய்து,
பயண விவரங்கள் அச்சடித்த தாள்களும் தயாரித்தது.

ரயிலில் டிக்கட்டுகள் வாங்குவது முதலாக, இரவுகளில்
துயிலும் அறைகள் ஏற்பாடுகள் வரை, டிரஸ்ட் கவனித்தது.

கூட்டம் கூட்டி, வேளுக்குடி சுவாமிகள் யோசனை வழங்க,
நாட்டம் மிகுந்த சிஷ்யர்கள், ஒரு மனதுடன் கேட்டனர்.

எண்ணவே திகைக்க வைக்கும் எண்ணில் பயணிகள் - ஆம்!
எண்ணிக்கையில் இரண்டாயிரத்து எண்ணூறு! அதிலும்

எழுபத்தைந்து வயதைத் தாண்டியவர்கள், அறுநூறு பேர்கள்;
எழுபத்தியாறு பேருந்துகளில், வடக்கே சுற்றப் போகிறார்கள்.

01.geetha%20krish.jpg


நாற்பது மருத்துவர்களும் யாத்திரிகர்களில் அடக்கம் - மேலும்
நாற்பது சமையல் வல்லுனர் பெயரும் பட்டியலில் இருக்கும்.

பேருந்துக்கு ஒருவர் வீதம் வழிகாட்டிகள் உண்டு - அந்தப்
பேருந்துப் பயணத்தில், பாராயணங்கள் செய்வோரும் உண்டு.

தடி ஊன்றும் மூதாட்டியும் அழைத்துச் சென்ற பெருமையை,
நொடி நேரம் நம்பாது, என் மனம் அதிசயித்தது உண்மை! :nod:

தொடரும் .....
 
ஆரம்பமே படு சுவையாக இருக்கின்றது.
அடுத்து என்ன என்
று காத்திருக்கின்றோம்!:)
 
Last edited:
ஆயிரக் கணக்கில் யாத்திரைக்கு அழைத்துச் செல்லுவது,
ஆயிரம் முறை கேட்டாலும், கொஞ்சம் கடினமே நம்புவது!

இனிமையாக அனைவரும் அனுபவித்த இப் பயணத்தை,
எளிமையான கவிதைகளாகச் சொல்ல விழைகின்றேன்! :blah:
 

Latest posts

Latest ads

Back
Top