• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை.... 2

ஏழு வெவ்வேறு ரயில்களில் பதிவு செய்யப்பட்ட பயணிகளின்
ஏழு பிரிவுகளும், ஒரே இடத்தில் கூடினர்! விமானத்தில்

அஹமதாபாத் சென்றவரைச் சந்தித்து, உணவளித்து, பேருந்தில்
அகம் மகிழப் பயணித்து, மற்றவருடன் சேர்த்தனர் வழிகாட்டிகள்.

புல்லாகுழல் இசைத்த அந்தக் கண்ணனின் ஆரமுது வழங்கிச்
சொல்லால் மயக்கும் இந்த ஒருவர் பின் எத்தனை பேர்கள்!

கண்ணன் வாழ்ந்த பூமியை அடையும் பாக்கியத்துடன்,
கண்ணனின் ஆரமுதின் இனிய சொல்லின்பமும் பருக

அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்க, இனிய நாளில்
அனைவரின் பயணமும், பேருந்துகளில் தொடங்கியது.

இரு குழுக்களாக, கூடியவர் அனைவரும் பிரிக்கப்பட்டு,
ஒரு குழு முதலில் செல்ல, மற்ற குழு பின்னே சென்றது.

கண்ணன் வாழ்ந்த இடங்களைக் காணும் பேறு பெறக்
கண்ணன் புகழ் பாடியபடி, அனைவரும் பயணித்தனர்.

அன்பர்கள் தங்கும் அறைகளைக்கூடத் தம் LAP TOP - ல்
அன்புடன் ஸ்வாமிகள் கவனித்து, ஏற்பாடுகள் செய்தார்.

கோவில்களில் இவர்கள் கூட்டம் செல்ல, உள்ளூர்வாசிகளும்
கோவில்களில் திரண்டு எழ, நெருக்கடிக்குக் கேட்கவேண்டுமா?

கைகளை மேலே தூக்கி, அதில் இனிப்புகளைப் 'பிளாஸ்டிக்'
பைகளில் தொங்கவிட்டு சேவித்தால், பின்னால் நிற்போர்

இறையைத் தரிசிக்க வழியுண்டோ? அந்தக் கவலையே இன்றி,
இறைவனுக்குப் படைக்க, அந்த இனிப்புகளைக் காட்டுவார்கள்!

கூட்டத்தின் நடுவில் செல்வோர்தான், மறுபுறம் செல்ல முடியும்;
கூட்டத்தின் ஓரத்தில் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே தள்ளப்படுவார்!
:bump2:
தொடரும் .....
 
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை.... 3

நீர்ச் சுழிக்கு ஒப்பிடலாம் இவ்வகைக் கூட்டத்தை,
நேர் வழியில் விடாது, சுற்றிச் சுற்றி விடுவதால்!

பல கோவில்களில் கண்ணன் கார்மேக வண்ணனாய் இருக்க,
பல கோவில்களில், வடக்கே, வெண்ணிறப் பளிங்கில் மின்ன,

எந்த நிறமாயின் என்ன? கண்ணன் அழகு மிகுந்தவனே;
எந்த அலங்காரத்திலும் மனதைத் திருடும் கள்ளனே!

04.%20geetha%20%20Radha%20Krishna.jpg


05.%20geetha%20Krishna.jpg


குழந்தை வடிவாய் இருக்கும் கோவிலில் அவனைக்
குழந்தை போலவே பாராட்டி ஆராதிக்கின்றார் - அவன்

ஒரு முறை முக்கால் மணி நேரம் தரிசனம் தந்ததும், திரையிட்டு,
மறு தரிசனத்திற்கு முன் ஓய்வளித்து, அலங்காரம் மாற்றுகின்றார்!

எல்லாக் கோவில்களிலும் படிகள் ஏறியே ஆகவேண்டும்;
நல்ல உடற்பயிற்சியால் எடை கொஞ்சம் குறைய வேண்டும்!

தங்கும் விடுதிகளும் மாடிகள் கொண்டவையே; அவற்றில்
எங்கும் 'லிப்ட்' என்ற ஒன்று காணவே முடியாது! எத்தனையோ

இதய அறுவை சிகிச்சை செய்தவரும், கீல் வாதமுள்ளவரும்,
'இனிய குருதி'யால் இன்சுலின் ஏற்றுபவரும், யாத்திரை சென்று,

நல்ல விதமாக ஊருக்குத் திரும்பியது எத்தனை அதிசயம்!
எல்லாம் வல்லனின் அருளன்றி வேறேது சாதிக்கும் இதை?

02%20geetha%20%20%20Q%20for%20food.jpg


சென்ற இடமெல்லாம் வந்தன ஆவி பறக்க உணவுகள்.
அன்றே அப்போதே தயாரித்த எளிய இரு வகைகள்!

சாப்பிட நிற்கும் வரிசையை விடச் சிரமம் தந்தது அங்கு
சாப்பிட்ட தட்டை அலம்ப நிற்கும் நீண்ட வரிசைதான்!

வெய்யிலின் கொடுமையில் தட்டும் கையும் காயும்;
வெய்யிலையும் மீறித் தட்டு அலம்பிய நீர் சேறாகும்!

கிருஷ்ண அனுபவமல்லவா? அதனால் அவனின் அந்தக்
கிருஷ்ண நிறம் நமக்கும் வர வெய்யில் வேணுமல்லவா?
:flame:
தொடரும் .....
 
Last edited:
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை.... 4

கண்ணன் வாழ்ந்த பூமியில் வறுமையே மிகுந்துள்ளது!
முன் செய்த கர்மவினையால் இந்த இடத்தில் பிறந்து,

அவன் அருளால் அவர்களுக்கு மோக்ஷம் கிட்டும் என்று
எவரோ சொல்லக் கேட்டுள்ளோம்! மனம் கனக்கிறது!

பஞ்ச துவாரகை என்று ஐந்து துவாரகைகளைச் சொல்வதால்,
பஞ்சம் தலை விரித்து அங்கெல்லாம் ஆடுகிறதோ என்னவோ?

எல்லாத் துவாரகைகளிலும் கண்ணன் அலங்காரம் ஒரேபோல;
நல்ல விசிறி மடிப்புகளாய் அவன் உடைகள் பளபளக்கும்!

08%20geetha%20%20Boat%20ride%20to%20see%20Krishna.jpg


ஒரு துவாரகை மட்டும் நீருக்கு நடுவே திகழும் - அதற்கு
ஒரு சிறு படகுப் பயணம் செல்ல வேண்டும். ஆனால்

பிரசாதம் இடக் கையால் வழங்குவது பற்றிக் கூறியது,
பிரசாத மதிப்பைக் குறைப்பதுபோலவே தோன்றியது!

குசேலர் அவில் தந்த இடத்தில் பிரசாதமாக கிடைப்பது,
குசேலர் போல வறுமை வராது தடுக்கக் கொஞ்சம் அரிசி!

நம் வீட்டு அரிசிப் பானையில் அதை இட்டால், என்றும்
நம் வீட்டில் அரிசி நிறைந்து இருக்குமென நம்பிக்கை - அங்கு

புஷ்கரணிகளில் இறங்கும் தென்னிந்தியரை விரும்புவதில்லை;
புஷ்கரணிகளை நம்மவர் சோப்பு இட்டுப் பாழ்படுத்திவிடுவதால்!

குளிக்க சோப்பு இடுவது மட்டுமல்லாது, அங்கு தீர்த்தம்
எடுக்க வருமிடத்தில் உள்ளாடைகளையும் அலசுகின்றார்!

வருந்த வைக்கும் விஷயமே இது! கங்கை அன்னை ஓடும்போதே,
மிகுந்து போய்விடுகிறதே தூய்மைக் குறைவு, மனிதர்களால்!

நீர் ஓடும்போதே இந்தக் கதியென்றால், நிற்கும்
நீர் படும் பாட்டைச் சொல்லவும் வேண்டுமோ?

25%20geetha%20one%20of%20the%20pushkaranis.jpg


தொடரும்....

 
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை .... 5

மனிதர்கள் செய்யும் சேட்டைக்குப் பழிவாங்கச் சில
மனித மூதாதையான குரங்குகள் சேட்டை செய்யும்!

பெரிய கோவில் பிரகாரங்களில் திரியும் இவைகளில்,
சிறிய குரங்குகளின் அட்டகாசம் சொல்லில் அடங்காது!

ஓடி வந்து நண்பனைப் போலத் தோளில் கைபோட்டு, நம்மை
நொடி நேரம் திரும்ப வைத்துக் கண்ணாடியைப் பிடுங்கும்!

கண் முன்னே அதை வளைத்து உடைத்துப் போட்டுவிடும்;
கண் இமைக்கும் நேரத்தில் படிக்கும் புத்தகத்தைப் பிடுங்கும்!

மரத்திலேறி, அதைத் தாள் தாளாகக் கிழித்துக் கீழே போடும்;
கழுத்திலேறி அமராமலேயே, தோளில் தொங்கும் பை பிடுங்கும்!

கடலை வாங்கி போட்டுக் கொண்டே நடப்போரின்
உடலை வருத்தாமல், அலுங்காமல் சென்றுவிடும்!

முற்பிறவியில் அரசியலில் இருந்தவையோ என்னவோ!
இப்பிறவியில் குட்டி லஞ்சங்களை எதிர்பார்க்கின்றனவோ?

09%20geetha%20.%20Our%20ancesters%21.jpg


பல வகை அனுபவங்களை இறை அனுபவத்துடன் பெற்று,
ஒரு வகையாக அனைவரும் குருக்ஷேத்திரம் வந்தனர்!

இந்தியத் தலைநகரிலிருந்து, இன்னுமோர் ஆயிரம் பேர் வர,
இந்தக் கூட்டத்தின் எண்ணிக்கை நாலாயிரம் தொட்டது!

பெரிய நீர் நிலையைச் சுற்றி அனைவரும் அமர்ந்து,
ஒருமையுடன் பகவத் கீதையும், விஷ்ணு சஹஸ்ரநாமமும்

பாராயணம் செய்தது, மிக அரிய செயலாகும்! மேலும்
பாராயணம் செய்ய, நாலு மணி நேரம் வெய்யிலில்

அத்தனை பெரும் மயக்கம் வராது அமர்ந்திருந்தது,
எத்தனை அதிசயமாகத் நமக்கெல்லாம் தெரிகிறது!

இறைவன் உள்ளான் என்ற தத்துவம் அறிந்துகொள்ள,
இறைவன் செய்யும் திருவிளையாடல்களில் இது ஒன்று!

10.%20%20Prasangam%20in%20Kurukshethram.jpg

:angel: தொடரும் .....

 
வளரட்டும் உங்கள் தமிழ் இலக்கியத் தொண்டு!

புகைவண்டி(?) பிடித்தவர் ஒருவர்,
புகைப்படம் (!) பிடித்தவர் ஒருவர்,

இருந்த இடத்தில் இருந்து கொண்டே
அருகில் எங்களைக் கொண்டு சென்று

அனைத்தையும் காட்டிக் கொடுப்பது
நினைக்கவே மலைக்க வைக்கின்றது!

வளரட்டும் உங்க
ள் தமிழ் இலக்கியத் தொண்டு!
மலரட்டும் பல புதுக் கவிதைகள் மேன்மேலும்!
 
அன்பான தமக்கை சென்று வந்த கதை சொல்ல,
பண்பான நண்பர் புகைப்படங்கள் எடுத்துத் தள்ள,

எண்ண அலைகளாய் மனதில் பதிந்தவை எல்லாம்,
பண்ண விழைந்தேன் சில க(வி)தை மலர்களாய்!

நுண்ணிய விவரங்கள் எல்லாம் தர முடியவில்லை;
எண்ணிய பொதுவான விவரங்களை வடித்துள்ளேன்!

யாத்திரை அனுபவம் முழுமையாகப் பெறாவிடினும்,
யாத்திரை பற்றி ஒரு கண்ணோட்டம் கிடைத்திடுமே!

தங்கள் ஊக்கம் என் ஆக்கம்! (செல்வம்) :thumb:
நன்றியுடன், ராஜி ராம்
 
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை.... 6

குருக்ஷேத்திரப் புகைப் படங்களால் மனம் கலங்கியது! - சிறந்த
குருவான பீஷ்மரின் அம்புப் படுக்கைச் சிலையும், கர்ணன்

தானமாய் அனைத்தையும், முதிய வடிவில் வந்த கண்ணனுக்கு
நிதானமாய் அளிக்கும் சிலையும், தத்வரூபமானவை கண்ணுக்கு!

21%20geetha%20Bhisma%20in%20arrow%20bed.jpg


11.%20geetha%20%20Last%20dhanam%20of%20KARNA.jpg


எப்படிப்பட்ட சூத்திரதாரி கண்ணன்? பாண்டவர் ஜெயிக்க
எப்படிப்பட்ட தந்திரங்களைச் செய்துள்ளான், யுத்த பூமியில்!

கோவர்த்தன கிரி வலம் மற்றொரு முக்கிய நிகழ்வாகும்.
கோவர்த்தன கிரியைச் சிலர் நமஸ்கார வலம் செய்கின்றார்!

கல் ஒன்று கையில் குறியீடு செய்ய வைத்துக்கொண்டு, அக்
கல்லால் ஒவ்வொரு நமஸ்காரத்தின் பின், மண்ணில் குறியிட்டு,

மலையைச் சுற்றியுள்ள ஏழு கிலோமீட்டர் பாதை முழுதும், தன்
தலையாய பணியாக எண்ணி, நமஸ்கரித்தபடி செல்கின்றார்.

ஆண்கள் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்துச் செல்ல,
பெண்களோ ஒருக்களித்து நமஸ்கரித்துச் செல்கின்றார்.

15.%20geetha%20%20Namaskarap%20pradhakshinam%20Govardhana%20giri.jpg


ஒட்டகம் பூட்டிய வண்டியில் உணவுகளைக் கடத்தி, ஒரு
உத்தமமான பணியையும் நன்றாக நிறைவேற்றியுள்ளார்.

'கிரியின் நாக்கு' என விளங்கும் ஒரு கல்லை அலங்கரித்து,
கிரியின் ஆசி வேண்டி பலகாரங்களும் அன்னமும் படைக்கின்றார்.

இங்கிருந்து கொண்டு சென்ற உற்சவ மூர்த்திகளும் வலம் வந்து
அங்கிருந்து ஆசி வழங்க, அனைவரும் உணவு உண்கின்றார்.

வாழை இலையில் அத்தனை பேருக்குப் பரிமாறியதும்,
ஏழை மக்களுக்கு வயிறார உணவளித்ததும் மிகச் சிறப்பு!

சிறப்புப் பாயசத்தை சில முதியவர் குவளைகளில் பல முறை
நிரப்பிக் குடித்ததைக் கேட்டபோது, மிக விநோதமாக இருந்தது!

இனிப்பு உண்ணக் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கையே, மிகவும்
இனிப்பது போலத் தெரிவது இது போன்ற செயல்களால்தானோ?
:bounce:
தொடரும் .....
 
நண்பர் ஜே. ராமகிருஷ்ணன் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் மிகச் சிறப்பு!

அவற்றை, சின்னக் குறிப்புக்களுடன் உங்களுக்கு அளிக்க விழைகிறேன்....
--------------------------------------------------------------------------

ஒட்டகம் பூட்டிய வண்டியில் உணவுகளைக் கடத்தி, ஒரு
உத்தமமான பணியையும் நன்றாக நிறைவேற்றியுள்ளார்.

13%20geetha%20%20Ottaga%20vandi%20with%20food.jpg

--------------------------------------------------------------------------

'கிரியின் நாக்கு' என விளங்கும் ஒரு கல்லை அலங்கரித்து,
கிரியின் ஆசி வேண்டி, பலகாரங்களும் அன்னமும் படைக்கின்றார்.

இது 'அன்னக்கூடை உத்சவம்' என அழைக்கப்படுகிறது.

18%20geetha%20%20anna%20koodai%20%28food%20for%203000%29.jpg


 

இங்கிருந்து கொண்டு சென்ற உற்சவ மூர்த்திகளும் வலம் வந்து
அங்கிருந்து ஆசி வழங்க, அனைவரும் உணவு உண்கின்றார்.

12%20geetha%20%20Namma%20ooru%20uthsava%20moorthis.jpg


'அன்னக்கூடை உத்சவத்தில்' ஒரு பணக் கூடையும் நிரம்பியது!

--------------------------------------------------------------------------

வாழை இலையில் அத்தனை பேருக்குப் பரிமாறியதும்,
ஏழை மக்களுக்கு வயிறார உணவளித்ததும் மிகச் சிறப்பு! :hungry:

14.%20geetha%20Heavy%20lunch.jpg


 
காளிங்க நர்த்தனம்

03%20geetha%20%20Dark%20krishna%20on%20Kalinga.jpg

------------------------------------------------------------------------------

ப்ரும்மசரோவர்

23%20geetha%20brahmasarovar%20%28lunch%20here%20for%203000%29.jpg

------------------------------------------------------------------------------

குஸுமசரோவர்

19%20geetha%20kushumasarovar%2C%20Govardhana%20giri.jpg

------------------------------------------------------------------------------

அழகிய கோவில்

17%20geetha%20%20Beautiful%20temple.jpg

 
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை .... 7

குழந்தைத்தனமான ஆவலுடன் பாயசம் அருந்திய முதியோர்,
குழந்தைகளாகவே மாறினர், கண்ணன் ஓடிய இடங்களில்!

மண்டியிட்டு, தவழ்ந்து, ஓடி ஆடி மகிழ்ந்தனர். கண்ணனை
வேண்டிவிட்டு, நல்வாழ்வு தொடர அவனைப் போற்றினர்.

கண்ணன் வளர்ந்த கிராமத்தில், மண்ணில் புரண்டும், பெண்கள்
கண்ணன் தோழியர் போலத் தட்டாமாலை சுற்றியும் மகிழ்ந்தனர்.

இனிய பஜனைப் பாடல்களால் சிலர் இறையைப் போற்றினர்;
இனிய கணங்களாகக் கூடியிருந்த நேரங்களை மாற்றினர்.

ராதையும், கண்ணனும் வாழ்ந்த இடங்களை தரிசித்து,
மேதையாகக் கீதை உபதேசித்த பகுதியும் பார்த்தனர்.

a2geethopadesam.JPG


கண்ணன் வைகுண்டம் எய்திய பிரபாச க்ஷேத்திரம் சென்று,
கண்ணன் அம்பால் அடிபட்ட அந்த மரத்தையும் கண்டனர்.

வேடன் ஜரா என்றவன் கண்ணனை மன்னிக்கும்படிக் கெஞ்சி
வேண்டும் அமைப்பில் வண்ணச் சிலைகளைப் பார்த்தனர்.

சிவன் கோவில் அமைந்த இடங்களில் விரைந்து சென்று.
அவன் அருள் பெறவும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

22%20geetha%20one%20of%20the%20shiva%20temples.jpg


சீரிய பணி செய்யப் பல 'ஆட்டோ ' ஓட்டுனர்கள் துணை வர,
ஏறிய சில மணித்துளிகளில் கோவில்களை அடைந்தனர்.

பஞ்ச முக ஆஞ்சநேயரின் அழகு வடிவமும் கண்டு,
அஞ்சா நெஞ்சம் வேண்டிப் பிராத்தனை செய்தனர்.

24%20geetha%20panch%20muka%20anjaneya.jpg


சக்தி பீடங்களும் சில தரிசித்து, அதில் வலம் வந்து,
சக்தி அருளும் நிறைவாகப் பெற்று மனம் மகிழ்ந்தனர்!

:grouphug: தொடரும் .......
 
Two more photoes

கண்ணன் வைகுண்டம் எய்திய பிரபாச க்ஷேத்திரம் சென்று,
கண்ணன் ஜராவின் அம்பால் அடிபட்ட மரத்தைக் கண்டனர்.

a1%20krishna%20tree.jpg


வேடன் ஜரா என்ற அவன், கண்ணனிடம் மன்னிக்கக் கெஞ்சி
வேண்டும் வடிவத்தில், வண்ணச் சிலைகளைப் பார்த்தனர்.

16%20geetha%20Krishna%20and%20the%20hunter%20Jara.jpg


தொடரும் ... :happy:

 
Last edited:
கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை ..... 8

வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்பவர்கள் ஒன்றுகூடி இருந்து,
வெவ்வேறு அனுபவங்களைப் பரிமாறிக்கொண்டு, உயர்ந்த

சுகமான ஓய்விடங்களை எதிர்பாராது, எளிமையாய் இருந்து,
மிதமான உணவுகளை உண்டு, இறைவனையே நினைந்து,

இரு வாரங்களைப் புதிய விதமாய்க் கழித்து, நிறையப்
புது நண்பர்களைப் பெற்று, வீட்டுக் கவலைகள் அற்று,

தம் பைகளைப் பல்வேறு பரிசுப் பொருட்களால் நிறைத்து,
தம் வசதிக்கேற்பச் செய்த தானங்களால் மனம் நிறைந்து,

குரு வேளுக்குடியின் பல மணி நேரப் பிரசங்கங்கள் கேட்டு,
பெரு வாழ்வு பெறும் வழிகளை அறியும் பேறு பெற்று,

மனதில் ஒரு கணமும் உடல் அசதியை நினையாது,
மனதில் மகிழ்ச்சி நிறைய, கூட்டமாய் ஊர் திரும்பினர்!

இத்தனை முதியவர்கள் ஒருமைப்பாட்டுடன், கண்ணன் வாழ்ந்த
அத்தனை இடங்களையும் கண்டு வந்தது, பெருமைக்குரியதே!

பெரிய இடர்கள் ஏதுமில்லாது, இந்த யாத்திரை முடிந்தது
அரிய விஷயமே; எல்லோரின் பாராட்டுக்கும் உரியதே!

கண்ணனின் திருவருள் பெற முனைந்த அனைவரையும்
கண்ணனின் திருவருளே காப்பாற்றியது என்றிடலாம்!

இறைவன் தான் அருள்வது நிஜமென உணர்த்துவதும்,
இறையருள் நாடும் இது போன்ற யாத்திரைகளால்தான்!

உலகம் உய்ய வேண்டும், :pray2:
ராஜி ராம் 2 - 11 - 2009

 
சிங்காரச் சென்னையிலிருந்து மிக அருகிலேயே,
பாங்காக அமைகின்றன சில குட்டிப் பயணங்கள்!

தமிழ் நாடு சுற்றுலா வாரியத்தின் உபயத்தால்,
தமிழ் நாட்டில் சென்ற பயணங்கள் தொடரும்!
:car:
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - I ..... 1

இறை அனுபவம் பெற முடியவில்லை, 2008 -ம் ஆண்டு; ஆனால்,
குறை இன்றி அதை முடித்தாள் என் தமக்கை, 2009 - ம் ஆண்டு!

கண்ணன் வாழ்ந்த இடங்களெல்லாம் காண, மூவாயிரம் பேருடன்,
எண்ணம் இனிக்க 'கீதா கிருஷ்ண அனுபவ யாத்திரை' சென்றாள்.

தமிழ் நாடு சுற்றுலா வாரியத்தின் இரு யாத்திரைகளில் அவளைத்
தமிழ் மண்ணில் கோவில்களுக்கு அழைத்துச் செல்ல விழைந்தேன்!

மண்ணுக்கு காஞ்சீபுரம், நெருப்புக்குத் திருவண்ணாமலை,
விண்ணுக்குச் சிதம்பரம், காற்றுக்குக் காளஹஸ்தி, நீருக்குத்

திருவானைக்காவல் என பஞ்சபூத லிங்கங்களுக்குத்
திருத்தலங்கள் அமைந்திருக்க, அக்கோவில்களைக் காண

மூன்றுநாள் பயணம் அழைத்துச் செல்ல நினைத்தேன்! ஆனால்
மூன்று பேர் கூடப் அதற்குப் பதிவு செய்யாததால், அதிகாரி

எங்களையே மேலும் சிலரை அழைத்துவரக் கெஞ்சினார்! எனவே
'தங்கள் பேருந்து செல்லும் இடங்கள் எவை?', என அவரை வினவி,

ஒரு நாள் பயணமாக காஞ்சீபுரம், மாமல்லபுரம் செல்லவும்,
ஒரு நாள் பயணமாக வேலூரில் மூன்று கோவில்கள் காணவும்,

இரு வேறு தினங்களுக்கு முன் பதிவு செய்யச் சென்று,
இரு டிக்கட்டுகள் வாங்கி வந்தார், என்னவர் எங்களுக்காக!

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றேனும் காண்பதை எண்ணி,
நெஞ்சில் திருப்தி நிலவ, முதல் பயணம் தொடங்கினோம்!

இருபதுக்கும் மேற்பட்ட யாத்திரிகர் இருந்ததால், நல்ல
பெரிய பேருந்து பயணம் செய்ய அன்று கிடைத்தது!

செல்லும் பாதைகள் புதுப்பிக்கப் பட்டிருக்க, நீண்ட தூரம்
செல்லும் அலுப்பேயின்றி, காஞ்சீபுரம் சென்றடைந்தோம்!
:dance:
தொடரும் ......
 
Last edited:
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - I ..... 2

ஏகாம்பர நாதர் கோவில் மிகவும் பெரியது. அங்குள்ள
ஒரே மாமரத்தின் பழங்கள் நான்கு வேறு சுவைகளாம்!

அடர்ந்து பரந்து கிடந்த மாமரத்தின் அளவு குறைந்துவிட்டது;
தொடர்ந்து பூஜைகள் நடக்கிறது, குட்டி மாமரத்தின் நிழலில்!

02%20chennai%20ekambreasar.jpg


சின்னதாக மரத்தடியில் அமைந்த சன்னதியில் காண்கின்றோம்,
வண்ணப் புடவை அணிந்து, நாணித் தலை குனிந்த நாயகியை!

திருமணப் பெண்ணின் வெட்கம் நன்கு பரிமளிக்க, அன்னை
திருமணக் கோலத்தில், ஈசனின் இடப்புறம் அமர்ந்துள்ளார்!

குறுகிய ரிப்பன்கள் போல மஞ்சள் துணிகளை வைத்து பூஜித்து,
பெரிய தட்சிணையான நூறு ரூபாய்க்குக் கொடுத்தார் அர்ச்சகர்!

விரைவில் திருமணம் நிச்சயமாகும்; குழந்தை பாக்கியம் மிக
விரைவில் கிடைக்கும் என்றெல்லாம் கூறி, வரும் பக்தரிடம்,

நல்ல வரும்படி வரும்படிச் செய்கிறார் அங்கு! அருகிலேயே
நல்ல சன்னதி மற்றொன்று உண்டு! மிக அழகாக அம்பாள்

நடுவில் உலோகச் சிலை வடிவில், அலங்கரித்து நிற்க,
சுவரில் எதிரெதிராக வைத்துள்ள இரு கண்ணாடிகளில்,

எண்ணற்ற பிம்பங்கள் கண்களை நிறைக்க, மனம் வியக்க,
கண்கொள்ளக் காட்சிதான் அன்று அங்கு நாங்கள் கண்டது!

ஆயிரம் கோவில் கொண்ட நகரமாக விளங்குவதால், அந்த
ஆயிரம் அன்னையரையும் இங்கேயே தரிசிக்க இது வழியாம்!

பிரபலமான ஆயிரத்தியெட்டு லிங்கங்கள் அடங்கிய ஒரே லிங்கமும்
பிரகாரத்தைச் சுற்றி வரும்போது கண்டு, மிக அதிசயித்தோம்!

கல்லிலே செதுக்கிய அழகிய சங்கிலி வடிவங்களைச்
சொல்லிலே வருணிக்க இயலாது, அத்துணை நேர்த்தி!

000%20chennai%20ekambresa%20stone%20chain.jpg


பெரிய கோவிலில் நல்ல தரிசனம் கண்டுவிட்டு, பிரகாரத்தில்
அரிய நூற்றியெட்டு லிங்கங்களும் தரிசித்து, பயணம் தொடர்ந்தோம்! :biggrin1:

தொடரும்.....
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா -I ..... 3

குறுகிய தெருக்களில் பயணித்துக் காமாக்ஷி அம்மனின்
அழகிய திருக்கோவில் சென்று தரிசித்தோம்! அன்று

வெள்ளிக் கிழமையானதால் நல்ல கூட்டம்! ஆனாலும் யார்
சொல்லியும் கேளாது சன்னதி முன், நகராது நின்றனர் மக்கள்!

அம்மனைக் காண சிரமப்பட்ட பின்பு, அருகில் தியான மேடையில்
அம்மனை மீண்டும் காண ஏறினால், தெரிந்தது திருவுருவம் நன்கு!

முன்னமே தெரிந்திருந்தால், கூட்டத்தில் இடிபட வேண்டாம்;
வண்ண மய சன்னதி முழுதும் மேடையிலிருந்தே காணலாம்!

00%20chennai%20Kamakshi.jpg


பிரசாதக் குங்குமத்தை எடுத்துச் செல்லாமல், சுற்றி அமைந்த
பிரகாரத்திலேயே போடுகின்றார்! அதுதான் அங்கு வழக்கமாம்!

வெளிப் பிரகாரத்தில் உள்ளது காசி விசுவநாதர் சன்னதி. அது
துளியும் புதுமையின்றி இருந்தது, என்றோ சூட்டிய பூக்களுடன்!

ஒரு இளம் பிச்சைக்காரன் அருகிலேயே ஓலமிட்டு அமர்ந்திருக்க,
ஒரு நிமிடமும் தாமதியாது, ஓட்டம் பிடித்து வெளியேறினோம்!

பெரிய குளத்தைச் சுற்றி, மிக நீண்ட நடை நடந்து, வேறு சில
சிறிய சன்னதிகளைக் கண்டு, பேருந்துக்குத் திரும்பினோம்!

'கஞ்சி வரதப்பா' என்றால் 'எங்கே வரதப்பா?', என விகடம் செய்யும்
காஞ்சி வரதராஜர் கோவில் மிகப் பெரியது! சுவாமி பெரியவரே!

முதலாம் இடத்தில் மிகப் பெரிய மூர்த்தியாக, திருமலை பாலாஜி;
இரண்டாம் இடத்தில் விளங்குபவர், இந்த வரதராஜப் பெருமாள்!

அழகிய சிங்கரையும், பெருந்தேவித் தாயாரையும் தரிசித்தபின்,
அழகிய உயர்ந்த மூர்த்தியான பெருமாளைச் சேவித்தோம்!

படிகள் ஏறிச் செல்லும்போதே அவரின் திருமேனி தெரிந்தது!
நொடியில் மனம் உருகி, மெய் முழுதும் சிலிர்த்துப் போனது!

03%20chennai%20kanchi-varadarajar.jpg


மேலும் ஒரு விசேஷம் இக்கோவிலில் இருக்கிறது. அதுதான்
மேலான தங்க வெள்ளிப் பல்லிகளின் தரிசனம்! ஆமாம்!

திரை மறைவிலுள்ள கூரையில் பதித்துள்ளார் இவற்றை;
சூரிய சந்திர வடிவங்களும், அவற்றின் அருகிலே உள்ளன!

படிகள் அமைத்துள்ளார் கூரையின் அருகில் போக; பல
அடிகள் உயரத்தில் அமர்ந்த பல்லிகளைத் எளிதில் தொட!

நாம் இவற்றைத் தொட்டால், ராகு கேது தோஷம் நீங்குமாம்;
நம் பாபங்களும் மறைந்து, வாழ்வில் நலன்கள் பெருகுமாம்! :cool:

04%20chennai%20Gold%20and%20silver%20lizard.gif.jpg


தொடரும் ....
 
Last edited:
நூறு கால் மண்டபம், வரதராஜர் கோவில்

28%20chennai%20100%20piller%20mandapam%2C%20kanchi.JPG

.............................................................................................

ஒற்றைக்கல்லில் செதுக்கிய சங்கிலி!

30%20chennai%20kanchipuram-varadaraja.jpg


புகைப்பட உதவி: இன்டர்நெட்! :typing:
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - I ..... 4

பெருமாள் கோவில் தரிசனத்திற்கு முன், நெசவாளிகளுக்கு
வருமானம் கிடைத்திட, ஒரு குட்டி ஷாப்பிங் செய்தோம்!

வறுமையைக் கண்டால் மனம் நெகிழும் அக்கா, அங்கு
வறுமைக் கோட்டில் வாழும் நெசவாளிகளுக்கு உதவ,

ஒன்று வாங்கினால் போதும் என்று நான் சொல்லிய பின்னும்,
மூன்று புடவைகள் வாங்கி அவர்களுக்கு உதவினாள்! ஆனால்

ஆயிரத்தி ஐநூறு என்று அதிக விலையை அச்சடித்து, அதை
ஆயிரத்தி ஐம்பதாகக் குறைத்து, முடிவு விலை அறுநூறுதான்!

பசி மீறியது, மணி பத்தைத் தாண்டிவிட்டதால்! ஒருவழியாக
ருசி அதிகம் இல்லாவிட்டாலும், காலைச் சிற்றுண்டி கிடைத்தது!

அடுத்துச் செல்லுவது மாமல்லபுரத்திற்கு; வழிகாட்டி
எடுத்து அடுக்கினார் பற்பல பொய் வர்ணனைகளை!

பஞ்ச பாண்டவருக்கும், அந்தப் பாண்டவ ரதங்களுக்கும்,
கொஞ்சமும் தொடர்பு இல்லை என அறிவிப்பு அங்கு!

பஞ்ச பாண்டவர் இங்குதான் வனவாசம் செய்தார்கள் எனச்
சொந்தக் கற்பனையை எல்லோரிடமும் வாரி வழங்கினார்!

05%20chennai.jpg


வெய்யிலின் தாக்கம் தவிர்க்கக் குடை பிடித்தபடி நடந்து,
வெய்யில் பாழே போகாமல், அங்கு சுற்றி வந்தோம்!

கடற்கரை மணலில் எப்படி அவ்வளவு பெரிய கற்கள் வந்தன?
கடலின் அருகிலிருந்த குன்றுகளையே செதுக்கினரா?

ரதங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன; மேலும்
ரதங்கள் தனித் தனியே இல்லாது அடியில் இணைந்துள்ளன!

செதுக்கிய பணியும் முடியவில்லை! சில பகுதிகளில்
செதுக்காது தூண்கள் பல விடப்பட்டுள்ளன, பாவமாக! :sad:

தொடரும்......

 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - I ..... 5

கொஞ்சம் தொலைவில் வேறு சிலை வடிவங்கள் இன்னும்
கொஞ்சம்; பூர்த்தியாகாது விளங்குகின்றன! அக்காலத்தில்

என்ன நினைத்து மாமல்லபுரம் அமைத்தானோ பல்லவன்?
என்ன இடையூறால், சிற்பங்களை முடிக்காமல் விட்டானோ?

மீண்டும் பயணித்து, கடற்கரைக் கோவிலை அடைந்தோம்;
மீண்டும் வெய்யிலில் நடந்து, கோவிலைச் சுற்றினோம்.


06%20chennai.jpg


சிவன் பார்வதியோ என்று எண்ணவைக்கும் உருவங்களை,
சுவரில் செதுக்கியுள்ளார், சிலைகளாக வடிக்கவில்லை!

07%20chennai.jpg


பின்னால் சென்றால் சிதிலமடைந்த லிங்கம் இருந்தது;
முன் நாளில் காணாத 'கிரனைட்' கல் போலத் தெரிந்தது!

08%20chennai.jpg


'பல்லவன் செய்ததுதானோ?', என்ற ஒரு ஐயம், வரலாற்று
வல்லுனரிடம் கேட்டு விடை அறிந்துகொள்ளத் தூண்டியது!

கோவில் வடிவத்தில் இருக்கிறதே தவிர, அங்கு
கோவில் போலப் பூஜைகள் செய்வது கிடையாது.

வலையால் வேலி அமைத்துள்ளார்கள், கடற்கரை அருகில்;
தடை மீறிச் செல்லாது, கடலன்னையைக் கண்டு வந்தோம்!

மதிய உணவு தமிழ்நாடு சுற்றுலாக் கழக உணவகத்தில்;
மீறிய பசி தீர, சுவையான உணவை ஒரு பிடி பிடித்தோம்!

உண்ட மயக்கத்தில் முப்பது கிலோமீட்டர் பயணித்த பின்,
கொண்டு வந்து சேர்த்தனர், முட்டுக்காடு படகுத்துறைக்கு!
:fish2:
தொடரும் .............

 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - I ..... 6

பெரிய 'ஜாக்கெட்டு'கள் உயிர் காக்க அணிவித்து, படகில்
சிறிய பயணம் கூட்டிச் சென்றனர். அங்கு மிகக் குறைந்த

உயரப் பாலத்தின் அடியில் தம் படகு செல்லும்போது, தம்
உயரம் குறைக்க, அனைவரும் பயந்து குனிந்து கொண்டனர்!

10%20chennai%20Low%20bridge.jpg


படகோட்டி இட வலமாக அசைத்து ஓட்டி பயமுறுத்த, விசைப்
படகு ஓட்டி இளைஞர்கள், தத்தம் வேகத்தால் பயமுறுத்தினர்!

பத்திரமாக எங்களைக் கரைக்கு அழைத்து வந்ததும்,
பத்து ரூபாய் வீதம் படகோட்டிக்குச் சன்மானம் தந்தோம்.

இன்னும் ஒரே நிறுத்தம் உள்ளது இச் சுற்றுலாவில் - அது
எண்ணும்போதே மகிழ வைக்கும் V G P UNIVERSAL KINGDOM.

நுழை வாயிலிலே உள்ளது அழகிய யானைகளின் வரிசை;
நுழைந்ததும் கண்ணில் தெரிவது அசையாச் சிலை மனிதன்!

11%20chennai%20VGP%20universal%20kingdom%20entrance.jpg


12%20chennai%20Statue%20man.jpg


வெளிநாட்டு RIDE - களுக்கு நிகரில்லாவிடினும்,
இந்நாட்டுக் குழந்தைகளை மகிழ்விக்கும் இடமே.

சென்ற முறை சென்றபோது, சில RIDE களில் சுற்றினேன்;
இந்த முறை அக்காவுடன் அங்கே நடந்தே சுற்றினேன்.

வேலை நாள் என்பதால் கூட்டமே இல்லாதிருக்க,
வேலையின்றிச் சும்மா இருந்தனர் RIDE காப்பாளர்கள்.

LONDON BULL என்ற இயந்திரக் காளை மீது அமர்ந்து, ஆடி,
அண்டம் அதிரும்படிக் கத்தி மகிழ்ந்தன, சில இளசுகள்!

கடற்கரையில் நின்று, அலைகளின் அழகை ரசித்த நாங்கள்,
கடலுக்குள் செல்ல வேண்டாமென்ற அறிவிப்பை மதித்தோம்.

என்னவர் ஆறு மணிக்கு நுழை வாயிலருகில் காத்திருந்தார்.
என்னவரின் அண்ணா வீட்டில் இரவு உணவும் ஏற்பாடு.

இரவு உணவு முடித்து, ஊர்க் கதைகள் பேசி, 'இனிய
இரவு' வாழ்த்திவிட்டு, இனிய இல்லம் திரும்பினோம்.

ஒரே நாளில் இறை தரிசனமும், புது இடங்களும் கண்டு,
ஒரு நல்ல அனுபவம் தந்ததற்கு, இறையை வாழ்த்தினோம்!

:pray:
 
பாங்கான முதல் சுற்றுலா, நிறைவடைகிறது.

அடுத்த சுற்றுலாக் க(வி)தை நாளை தொடரும்! :typing:
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 1


மூன்று கோவில்கள் காணும் முதல் சுற்றுலாவுக்குப் பின்
மூன்று கோவில்கள் வேலூரில் காணும் சுற்றுலா உள்ளது!

செவ்வாயன்று எங்களைத் தவிர யாருமே டிக்கட் வாங்காததால்,
செவ்வாய்க் கிழமை யாத்திரையே ரத்தாகுமோ என ஐயம்!

ஞாயிற்றுக் கிழமையில் சிலர் பயணம் செய்வதால், என்னவர்
ஞாயிற்றுக் கிழமைக்கு எங்கள் டிக்கட்டை மாற்றி வந்தார்!

அன்று பதினெட்டுப் பயணிகளே இருந்ததால் நாங்கள்
அன்று பயணிக்க ஏற்பாடானது ஒரு குட்டிப் பேருந்து!

சென்ற முறை பத்தரை மணி வரை காயவிட்ட வழிகாட்டி,
இந்த முறை எட்டு மணிக்கே உணவகத்தில் நிறுத்தினார்!

இது தெரியாததால் கைவசம் இருந்தது இட்லி பாக்கெட்!
மெதுவாக இறங்கிச் சென்று, காபி மட்டும் பருகினோம்.

அழகே உருவான பாலமுருகனின் திருக்கோவில், மிக
அழகாக அமைந்துள்ளது, ரத்னகிரிக் குன்றின் மீது!

14%20chennai%20Rathnagiri.jpg


உடல் நோக யார்தான் நூற்றி ஐம்பது படிகளில் ஏறுவார்,
உடனே அறுவரை ஏற்றிச் செல்லும் ஆட்டோ கிடைப்பதால்?

இரு வழிப் பயணம் செய்யப் பத்து ரூபாய் செலவுதான்;
இரு கொண்டை ஊசி வளைவுகளே உள்ளது பாதையில்!

பால முருகனுக்கு வள்ளி, தெய்வானை அருகிலுள்ளார்!
ஆறுமுக உலோக மூர்த்திக்கும் ஆராதனைகள் உள்ளன.

அபிஷேகம் செய்யும் நேரம் என்பதால், மூலவர்கள்
அலங்காரம் ஏதுமின்றி இருந்தனர் எளிய திருக்கோலத்தில்!

15%20chennai%20Bala%20murugan%20with%20Valli%2C%20Deivaanai.jpg


சன்னதிக்கு எதிரில் கூட்டமாக பக்தர்கள் அமர்ந்திருக்க,
சன்னதியை வலம் வந்து, சேவித்து, வெளியேறினோம்!

இரு வழிப் பயணமும் ஆட்டோவில் செய்ததால், வேலனை
இருபது நிமிட நேரத்தில் தரிசித்துக் கீழே வந்தோம்!

தொடரும்.....
:pray:
 
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 2


16%20chennai%20Vellore%20fort.jpg


அவ்வளவு பெரிய கோட்டை வேலூரில் உள்ளதே தெரியாது!
எவ்வளவு பெரிய கற்களால் அழகாய்க் கட்டி வைத்துள்ளார்.

பெரிதாக அதைக் கட்டியது கிருஷ்ண தேவராயர் என்றனர்.
பெரிதாக அகழி ஒன்று கோட்டையைச் சுற்றிலும் இருக்கிறது!

முன்னொரு காலத்தில் அதில் முதலைகள் உலவியிருக்குமோ?
எண்ணியதும் உடலெங்கும் ஒரு நடுக்கம் வந்து போனது!

கோட்டைக்குள் அமைந்துள்ளது, ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்.
கோட்டைக்குள் நுழையும்போது சிறு வானரப்படை வரவேற்கிறது!

16%20chennai%20Jalakandeswarar%20with%20Akilandeswari.jpg


சந்தனத்தால் புது வகை அலங்காரம் அங்கு காணப் பெற்றோம்!
சந்தனத்தால் குட்டி வட்டங்களைச் சிலைகளில் மாலைபோல் இட்டு,

குங்குமத்தை அதன் நடுவில் சிறிதாக வைத்து அலங்கரிக்க,
எங்கும் காணா அழகுடன் உள்ளன அந்த அணிகலன்கள்!

கிரீடத்திலும் இதேபோல அலங்காரம் செய்து வைக்க,
பளீரென மின்னுவதுபோல அது நம்மை மயக்குகிறது!

விநாயகர், முருகன், பெருமாள், தக்ஷிணாமூர்த்தி, துர்கை என
அனைத்து இறைகளுக்கும் சன்னதிகள் இருக்கின்றன.

ஒரு மூதாட்டி 'பல்லி தரிசனம் இரண்டு ரூபாய்' என்று கூவ,
அருகில் சென்றால், அது தங்க வெள்ளிப் பல்லிகள் தரிசனமே!

வரதராஜர் கோவில் போலவே , கூரையில் உள்ளன
இரு வகைப் பல்லிகளும், சூரியன் மற்றும் சந்திரனும்.

தோஷம் நீங்கினால் நல்லதுதானே என்று எண்ணி,
தோஷம் நீக்கும் 'பல்லித் தொடல்' செய்து வந்தோம்!

பல ஆண்டுகளாகக் கோவிலில் வழிபாடு இல்லாததால்,
பல விளக்குகளை தினமும் ஏற்றி வைத்து, எண்ணிக்கை

ஒரு கோடி வருமாறு செய்ய அங்கு ஒரு விண்ணப்பம்;
ஒரு பெரிய தட்டு முழுதும் விளக்குகள் ஒளிர்ந்தன!

:help: தொடரும்....
 
Last edited:
சிங்காரச் சென்னையிலிருந்து பாங்கான சுற்றுலா - II ..... 3

18%20chennaiSripuram%20Golden%20Temple.jpg


எண்ணவே வியக்க வைக்கும் தங்கக் கோட்டையாக
பண்ணியுள்ளனர் ஒரு திருக்கோவில், ஸ்ரீ லக்ஷ்மிக்கு!

வெளிநாட்டு பக்தர்கள் அள்ளி வழங்கிய பணத்தால்,
ஒளிரும் தங்கக் கோவில் எழுந்துள்ளது வேலூரில்.

19%20chennaiThe%20grand%20view.jpg


லக்ஷ்மியின் அருளைப் பதினாறு வயதில் பெற்றவரையும்
லக்ஷ்மியாகவே பாவித்து, அங்கே வணங்கி வழிபடுகின்றார்!

அறுகோண நக்ஷத்திர வடிவில் வெளிப்பிரகாரம்.
அது முழுதும் அவரின் படங்களும், அருள் வாக்கும்.

இடையில் பல இடங்களில் தண்ணீரும், பிஸ்கட்டும்
கடைகளில் வைத்து விற்பனையும் செய்கின்றார்.

இரண்டு கிலோமீட்டர் வரை நடக்க வேண்டியுள்ளது.
இரண்டாம் பிரகாரத்தில் செல்லணும் ஒரு சிறு வட்டம்.

லக்ஷ்மி அம்சமான தங்கத் தகடுகளிட்ட கோவிலின் நடுவே
லக்ஷ்மி நாராயணி அருள் வழங்கும் கர்ப்பக்கிரஹம் உள்ளது.

உள்ளும் வெளியும் 1500 கிலோத் தங்கம் ஒளிர்ந்திருக்க,
உள்ளம் அதிசயிக்கிறது அங்கு காணும் பிரும்மாண்டத்தால்!

தங்கத்தால் செய்த யானைகளும், அன்னங்களும் இருக்க,
தங்கம் முழுதும் பிரதிபலிக்க, அகழி நிறையத் தண்ணீர்!

21%20chennaiGold%20plated%20elephants.jpg


நீரில் காசு, வளையல் போடவேண்டாம் என எச்சரித்தும்,
நீரில் நிறைந்துள்ளன ரூபாய் நோட்டுக்களும், வளைகளும்!

சுற்றிலும் யானை பொம்மைகள் துதிக்கையால் புது நீர் நிரப்பியும்,
பற்றிய பாசம் அகழியின் தரையெங்கும் பச்சையாய்ப் படர்ந்துள்ளது!

ரூபாய் இருநூற்றி ஐம்பதுக்கு சன்னதி அருகில் செல்லலாம்.
ரூபாய் நூறுக்கு, இருபது அடி தள்ளி நின்று தரிசிக்கலாம்!

பொது தரிசனம் எங்கு வருமென்றே தெரியவில்லை;
பொது தரிசன வரிசையில் அன்று எவருமே வரவில்லை!

:hail: தொடரும் .....
 

Latest posts

Latest ads

Back
Top