• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணிக் கீர்த்தனைகளின் கனித் தமிழாக்கம் - ராஜி ராம்

21. "அபராதமுல நோர்வ - (தமிழாக்கம்)
ரஸாளி - ஆதி. தியாகராஜர்

ஆ: ஸ ரி¹ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் த²ப ம¹ரி¹ஸ

Audio link:


பல்லவி:
எல்லாப் பிழைகளை|யும் பொறுக்கத் | ; தருணம்||
நல்லருள் புரிவாய்| ; நான் | ; செய்த||

அனுபல்லவி:
; நில்லா உள்ளத்தினால்| ; மனம் அறி|யாது வந்த||
; சொல்லொணாத் துயரை| ; முறையி|டும் எனது||
(எல்லா)

சரணம்:
; உலகில் அனைவரின்| ; வினைப் பயன்| அறிந்து||
; பாலனம் செய்து| ; ரக்ஷிக்கும்| தெய்வமே||
; உலகில் என் ஒருவனை| ; காத்திட அ|றியாயோ?||
; பல நூறு பாடல்கள் பா|டும் த்யாகரா|ஜன் புகழ்வோனே||

(எல்லா)
 
22. "ப³ண்டுரீதி" (தமிழாக்கம்)
ஹம்சநாதம் - தேசாதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²ம²ப நி³ஸ் - அ: ஸ் நி³ப ம²ரி²ஸ

Audio link:


பல்லவி:
;, அரும் சேவ|கனாய் செய்|வீரே|| ராமா

அனுபல்லவி:
;, கரும்பு வில்|லவன் த|ரும் காமம்|| முதல்
அறு குணங்க|ளை அழித்து ஒ||ழிக்கும்
(அரும் சேவகனாய்)

சரணம்:
;, ரோமாஞ்ச|மே க|னத்த க||வசம்
ராம பக்தன்| எனும் ரா|ஜ வில்||லை
ராம நாம|மெனும் சி|றந்த வாள்|| இவை
ராமதாசன் | த்யாகராஜன் மீது||ஒளிர

(அரும் சேவகனாய்)
 
23. "நகுமோமு" (தமிழாக்கம்)
ஆபேரி - ஆதி. தியாகராஜர்

ஆ: ஸ க²ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
நகும் முகத்தை காணாது|| மிகும் வருத்தம்| அறிந்து- என்||
அகம் குளிர அருளல் ஆகா|தா ஶ்ரீ ரகுவரனே - உன்||
(நகும் முகத்தை)

அனுபல்லவி:
அரும் கிரியை தாங்கிய உன்| பரிவாரத்தில் | உள்ளோர்கள்||
ஒருவருமே நல் போதனையை| உரையாது இருப்|பாரோ-உன்||
(நகும் முகத்தை)

சரணம்:
கருடன் உன் ஆணை கேட்டதும்| விரைந்து செல்ல| வில்லையா?||
ககனம் உலகில் இருந்து வெகு | தூரம் எனச்| சொன்னாரா?||
பாராளும் பரமாத்மா| எவரிடம் நான்| முறையிடுவேன்?||
பாராமுகம் தாளேனே என்னை | ஏற்பாய் த்யா|கராஜன் தொழும்||
(நகும் முகத்தை)


 
One correction done in Pallavi lyrics.
21. "அபராதமுல நோர்வ - (தமிழாக்கம்)
ரஸாளி - ஆதி. தியாகராஜர்

ஆ: ஸ ரி¹ம¹ப த²நி²ஸ் - அ: ஸ் த²ப ம¹ரி¹ஸ

Audio link:


பல்லவி:
எல்லாப் குற்றங்களை|யும் பொறுக்கத் | ; தருணம்||
நல்லருள் புரிவாய்| ; நான் | ; செய்த||

அனுபல்லவி:
; நில்லா உள்ளத்தினால்| ; மனம் அறி|யாது வந்த||
; சொல்லொணாத் துயரை| ; முறையி|டும் எனது||
(எல்லா)

சரணம்:
; உலகில் அனைவரின்| ; வினைப் பயன்| அறிந்து||
; பாலனம் செய்து| ; ரக்ஷிக்கும்| தெய்வமே||
; உலகில் என் ஒருவனை| ; காத்திட அ|றியாயோ?||
; பல நூறு பாடல்கள் பா|டும் த்யாகரா|ஜன் புகழ்வோனே||

(எல்லா)
 
24. "க்ஷீராப்தி கன்யககு" - (தமிழாக்கம்)
குறிஞ்சி - கண்ட சாபு - அன்னமையா

ஆ: .நி³ஸ ரி²க³ம¹ப த² - அ: த²ப ம¹க³ரி²ஸ .நி³ஸ

Audio link:


பல்லவி:
; க்ஷீர சா||கரத்தின் மகள்|| ஶ்ரீ மஹா|| லக்ஷ்மிக்கு||
; கமலம் அமர்|| தேவிக்கு நீராஜனம்|| நீராஜனம்||

சரணம் 1:
; கமல விழி|| வதனத்திற்கு|| ;கச்சித வ||டிவழகிற்கு||
; கனிவோடு|| கற்பூர|| நீராஜ||னம்|| நீராஜனம்||
; கார் கூந்தல்|| அழகிற்கு || ; கமலத் திருக்|| கரங்களுக்கு ||
; அரிய மா||ணிக்கங்களால்|| நீராஜனம்|| நீராஜனம்||

சரணம் 2:
; பார் புகழ் ஶ்ரீ|| வேங்கடேச||னின் பட்டத்து|| ராணியின்||
; பத்தினி கு|ணங்களுக்கு|| நீராஜனம்|| நீராஜனம்||
; பாரில் அலர்||மேல் மங்கையின்|| நற்பண்புகள் அ||னைத்திற்கும்||
; பாங்குடன் உ||யரும் புனித|| நீராஜனம்|| நீராஜனம்||
 
25. "கோவிந்தா நின்ன" (தமிழாக்கம்)
ஜனசம்மோதினி - ஆதி - புரந்தரதாசர்

ஆ: ஸ க³ப த²நி² ஸ் - அ: ஸ் நி²த²ப க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
கோவிந்தா உந்தன்| நாமமே| அழகு||

அனுபல்லவி:
; சிறு அணு புல் பூண்டில்| ; நிறைந்த கோ|விந்தனே என||
; நிர்மல ஆத்மாவாய்| ; இருப்பது| ஆனந்தமே||
(கோவிந்தா)

சரணம்:
; ஸ்ருஷ்டித்துக் காத்து| அழிப்பவன்| கோவிந்தனே||
; இந்த மஹிமைதனை| ; அறிவது| ஆனந்தமே||
; பரம புருஷன் ஶ்ரீ| ; புரந்தர| விட்டலனின்||
; அரும் பெரும் தாஸரை| ; நினைப்பது| ஆனந்தமே||

(கோவிந்தா)
 
பாடல்களின் பதிவு:

மணிக் கீர்த்தனைகளைத் தமிழாக்கம் செய்த பின், அவற்றை ஸ்ருதி மற்றும்
மின்னணுத் தபேலாவின் துணையுடன், எங்கள் இனிய இல்லத்தில் பாடி,
கைபேசியில் பதிவு செய்து வெளியிடுகின்றேன்.

தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்.

நட்புடன்,

ராஜி ராம்.
 
26. நாதோ³பாஸன - (தமிழாக்கம்)
பேகடா- ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ க³ரி²க³ம¹ப த²ப ஸ் - அ: ஸ் நி²த²ப மா¹க³ரி² ஸ

Audio link:


பல்லவி:
; நாதோபாசனை| ; செய்து| சங்கரனும் ||
நாராயணனும் விதி|யும் ஒளி| வீசினரே மன||மே

அனுபல்லவி:
; வேதங்கள் ஓங்கச் செய்தோர்| ; வேதத்தி|னும் உயர்ந்தோர்||
; விஸ்வம் முழுவதும்| ; நிறைந்தோ|ரே அவர்கள்||
(நாதோபாசனை)


சரணம்:
; மந்திரம் யந்திரம் தந்தி|ரம் மூன்றின்| ஆத்மாவாகி மன்||
-வந்திரங்கள் பல| ; கடந்தவ|ரே அவர்கள்||
; தந்தி லய ஸ்வர| ; கானங்க|ளில் திளைப்போர்||
; த்யாகராஜன் வணங்|கும் சுதந்திர|ரே அவர்கள்||
(நாதோபாசனை)
 
27. "சந்திர சூட சிவ சங்கர" (தமிழாக்கம்)
தர்பாரி கானடா - ஆதி - புரந்தரதாசர்

ஆ: ஸ ரி²கா² ம¹ ப தா¹ நி²ஸ் - ஆ: ஸ் த¹நி²ப ம¹ ப க²ம¹ரி²ஸ

Audio link:


பல்லவி:
; சந்திரனை அணிந்த| சிவா ச|ங்கரா||
; பார்வதி ரமணா| நமோ ந|மோ||

அனுபல்லவி:
; சுந்தரா மானும் பி|னாக வில்|லும் ஏந்திய||
; கங்காதரா குஞ்சரத்| தோலுடை| தரித்தவா||
(சந்திரனை அணிந்த )

சரணம்:
; அரும் தென் காவேரிக்| கரையினி|லே அமைந்த||
; கும்பபுரவாசனும்| நீ|யே||
; கரங்களால் வீணா| ; கானம் இ|சைப்பவனும்||
; நாக பூஷணனும்| நீ|யே||
; திருநீறுடன் ருத்|ராக்ஷமும் அணிந்த||
; பரம வைஷ்ணவனும்| நீ|யே||
; கருட கமனன் நம் புரந்தர விட்டலனின்|
; ஆருயிர் அன்பனும்| நீ|யே||

(சந்திரனை அணிந்த)
 
தியாகராஜர் சில பாடல்களில் இலை மறை காயாகச் சில விஷயங்களைக்
குறிப்பிடுவார். "அடுகாராதனி" (அவ்வாறு நேராது) என்ற பாடலில், யார்
இவர் மீது என்ன குறை கூறினார் என்பதைத் தெரிவிக்கவில்லை!
 
28. "அடுகாராதனி" (தமிழாக்கம்)
மனோரஞ்சனி - தேசாதி - தியாகராஜர்.

Audio link:


பல்லவி:
;, அவ்வாறு நே|ராது என்|று சொல்ல|| உனக்கு
அபிமான|மே இல்|லாது போ||னதா

அனுபல்லவி:
;, எவ்வாறு பொ|றுப்பேன் த|யை புரி ஐ||யனே
எந்த தெய்வம்| செய்த ச|தியோ தெ||ரிந்தும்
(அவ்வாறு நேராது)

சரணம்:
;, நன்கு வேத| சாஸ்திர உப|நிஷந்தங்கள் || கற்ற
நன் நெறியைப்| பற்றும் உன் தாச||னான
என் மீது | குற்றம் குறைகளைக்|| கண்டால்
என் செய்வேன் த்யாக|ராஜன் போற்று||வோனே

(அவ்வாறு நேராது)
 
29. "ஶ்ரீ ராம பாதமா - தமிழாக்கம்
அம்ருதவாஹினி - ஆதி - தியாகராஜர்.

ஆ: ஸ ரி²ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ம¹க²ரி² ஸ

Audio link:


பல்லவி:
ஶ்ரீ ராமன் பாதமே| உன் கிருபை| போதுமே என்||
சித்தத்தில் வருவா|யே |..||

அனுபல்லவி:
; ஶ்ரீ கமலாசனனும்| ; சனகச|னந்தனரும்||
இந்திரனும் நாரதரும்| அனைவரும்| பூஜிக்கும்||
(ஶ்ரீ ராமன் பாதமே)

சரணம்:
; பாதையில் சிலையாய்| ; வெம்மை| தாளாது||
; பெருகும் கண்ணீருடன்| ; பல காலம்| தவித்த||
; பேதை அகலிகையை| ; பார்த்ததும்| காத்தாய் அது||
போல தன்யனாக்குவாய்| பக்தன் தியாக|ராஜனை||

(ஶ்ரீ ராமன் பாதமே)
 
Last edited:
30. நாத தனுமனிசம் - (தமிழாக்கம்)
சித்தரஞ்சனி - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹ப த²நி² - அ: நி²த²ப ம¹க²ரி²ஸ

Audio :


பல்லவி:
; நாத வடிவின|னை சங்|கரனை||
எந் நாளும் தொழுதேன்| மனத்தால்| சிரத்தால்||
(நாத வடிவினனை)

அனுபல்லவி:
;, வேதங்களிலே மிக| ; உயர்ந்த| சாம||
;, வேத சாரமாய்த்| திகழ்பவ|னான||
(நாத வடிவினனை)

சரணம்:
; ஸத்யோஜாதம் மு|தல் ஐந்து முகங்|களில் உதித்த||
; ஸ ரி க ம ப த நி எ|னும் ஏழு ஸ்வரங்|கள் அமைந்த||
; வித்தையில் திளைப்பவன்| ; காலனை| அழித்தவன்||
; விமல இதய த்யா|கராஜனைக்| காப்பவன் ||

(நாத வடிவினனை)
 
31. "ராம நாம பாயஸகே" (தமிழாக்கம்)
பீ³ம்பிளாஸ் - ரூபகம் - புரந்தரதாசர்

ஆ: ஸ க²ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க²ரி²ஸ

Audio link:


பல்லவி:
ராம நாம|| பாயசத்திற்கு|| ; கிருஷ்ண நாம|| சர்க்கரையும்||
; விட்டல நாம|| நெய்யும் கலந்து|| ரசனையோடு|| ருசிப்பீரே||

அனுபல்லவி:
ஒரு நெறிப்பட்ட|| மன கோதுமையை||
வைராக்கியக்|| கல்லிலே அரைத்து||
சிறந்த மனமாம்|| ரவையைக் கொண்டு||
நல்ல எண்ணம் என்ற|| மாச்சேவை செய்து||
(ராம நாம|)

சரணம்:
இதயம் என்ற|| பானையிலே|| பக்திப் பாசிப்|| பருப்பை இட்டு||
புத்தி என்ற|| பாலில் சமைத்து|| பாங்குடன் பரி||மாறி உண்ண||
ஆனந்தம்|| ஆனந்தம் என்ற|| திருப்தி வரக்|| காண்பீரே||
ஆனந்த|| மூர்த்தி புரந்தர|| விட்டலனை|| எண்ணுவீரே||
(ராம நாம)
 
திரு Prof. M S K மூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட புரந்தரதாசரின்
அழகான பாடலின் மொழிமாற்றம் அடுத்த இடுகையில்.
 
32. மரேய பே³டா³ மனவே" - (தமிழாக்கம்)
ஹிந்தோளம் - ரூபகம் - புரந்தரதாசர்

Audio link:


பல்லவி:
; மற|க்க வேண்டாம்|| ; ம|னமே நீ ||
; ஹ|ரி ஸ்மரணையை ||

சரணம் 1:
; யா|க யக்ஞம்|| ; செய்|ய வேண்டாம் ||
; யோ|கி புனிதன்|| ஆ|க வேண்டாம் ||
; நா|க சயனன்|| ; நா|ரதர் தொழும் ||
நாத|னின் பஜனை|| நாம்| கூடிச் செய்வோம்||
(மறக்க வேண்டாம்)

சரணம் 2:
சாது | பக்தருடன்|| சங்க|மமாகி||
; வே|தங்களைக் கற்||றா|லும் - முதலில்||
; வே|தங்கள் சென்று|| சே|ரும் ஹரியின்||
பாதக் |கமலங்கள்|| தியா|னம் செய்வோம்||
(மறக்க வேண்டாம்)

சரணம் 3:
; மனை|வி மக்கள்|| உள்ள|னர் என்று||
; மதி| கெட்டுத் தீய|| வழி|களைத் தேடி||
; மெல்|லப் பாதை|| மா|றிப் போனால்||
; மனை|வி மக்கள்|| உடன் வ|ருவாரோ?||
(மற|க்க வேண்டாம்)

சரணம் 4:
; ஹரி|யின் ஸ்மரணை|| புகல்| என கொண்டால்||
கோரத்| துயர்களும்|| அழிந்|து போகும் ||
; பர|ம புருஷன்|| புரந்த|ர விட்டலனின்||
; பவி|த்ர நாம|| பஜ|னை செய்வோம்||

(மறக்க வேண்டாம்)
 
33. "ராம நன்னு ப்ரோவ'' - (தமிழாக்கம்)
ஹரிகாம்போஜி - ரூபகம்.
தியாகராஜர்

Audio link:


பல்லவி:
ரா|மா என்னைக்|| காத்|திட வ-||
ரா|ததேன்|| லோகாபி⁴||

அனுபல்லவி
; சிறு| எறும்பிலும்|| ; ப்ரம்|மனிலும் ||
ஹரன்| ஹரியிலும்|| விர|வியே மிக||
பிரி|யமாக|| இயங்|குவாய் என்ற||
விரு|து பெற்றவ||னே| சீதா||
(ராமா என்னை)

சரணம்:
; பாரிலே| புகழ் || பெறவே| செல்வம்||
யாரி|டமும் நான்|| பெற்|றிலேனே||
; செருக்|கு மிகுந்து|| பாபம்| செய்யாத||
த்யாக|ராஜன் || போற்றும்| சீதா ||

(ராமா என்னை)
 
34. "கந்தமு புய்யருகா (தமிழாக்கம்)
புன்னாகவராளி - ஆதி - தியாகராஜர்

Audio link:


பல்லவி:
சந்தனம் பூசின|ரே |பன்னீர்||
சந்தனம் பூசின|ரே; | ; ; ||

அனுபல்லவி:
சுந்தரன் யதுகுல| நந்தன் மேல்| நன்கு||
சுந்தர முல்லைப் பல்லழகியர்| வாசனை||
(சந்தனம் பூசினரே)

சரணம் - 1:
திலகம் இட்டன|ரே| கஸ்தூரி||
திலகம் இட்டன|ரே; | ; ; ||
கலகலப்பான| முகக் களை|யில் சொக்கி||
சொற்களில் அமுதம்| சொட்டும்| சுவாமிக்கு ||
(சந்தனம் பூசினரே)

சரணம் - 2:
ஆடை உடுத்தின|ரே |பொன்னால்||
ஆடை உடுத்தின|ரே; | ; ; ||
அன்புடன் கோபால| பாலகர்|களையும் ||
அவர்களையும் ஆண்ட| அகன்ற ந|யனனுக்கு||
(சந்தனம் பூசினரே)

சரணம் - 3:
ஆரத்தி எடுத்தன|ரே முத்|துக்களால்||
ஆரத்தி எடுத்தன|ரே; | ; ; ||
நாரீமணிகளுக்கு| என்றுமே | மாறாத||
இளமை அளிக்கும்| கமலக் க|ண்ணனுக்கு||
(சந்தனம் பூசினரே)

சரணம் 4:
பூஜைகள் செய்தன|ரே; | மனதார||
பூஜைகள் செய்தன|ரே; | ஜாதி||
பூக்கள் இருவாட்சி| மல்லி த|வனத்தால்||
ஒளிரும் த்யாகராஜன்| போற்றுவோ|னுக்கு ||
(சந்தனம் பூசினரே)
 
Last edited:
தியாகராஜர் இயற்றிய நௌகா சரித்திரக் கீர்த்தனைகளின்
தொகுப்பில், கண்ணனை அலங்கரிக்கும் கோபியர்களைப்
பற்றிய பாடல்தான் "கந்தமு புய்யருகா" என்ற பாடல்.
 
35. மாயம்மயனி (தமிழாக்கம்)
ஆஹிரி - ஆதி (சவுக்கம்) சியாமா சாஸ்திரிகள்

ஆ: ஸ ரி¹ஸ க³ம¹ப த¹நி²ஸ் - அ: ஸ் நி²த¹ப ம¹ க³ ரி¹ஸ

Audio link:


பல்லவி:
என் அன்னையே என| நான் அ|ழைத்தால்||
என்னுடன் பேசலாகா|தா | அம்பா||

அனுபல்லவி:
; உன் மனதிற்கு நியாய|மா மீ|னாக்ஷியே (இது)||
; உன்னையன்றி புகல்| ; அளிப்பவர்| எவரம்மா||
(என் அன்னையே)

சரணம்:
பிரமனும் ஹரியும் பரமசிவனும் பணி|யும் லலிதா உன்| பதபங்கஜங்களை||
ஸ்திரமென நம்பினேன் நம்பினேன் நம்பினே|னே உன்| பதபங்கஜங்களை||
ஸ்திரமென நம்பினேன் ஸ்திரமென நம்பினே|னே உன்| பதபங்கஜங்களை||
ஸ்திரமென ஸ்திரமென ஸ்திரமென நம்பினே|னே..| ..||
கருணையுடனே பார் காத்யாயனி கா|ளியே பவா |னி ..||
பரமேஸ்வரி சுந்தரேசனின் ராணி| பாலாம்பா| ; மதுர வாணி||அம்பா

(என் அன்னையே)
 
Last edited:
36 . "எவரனி" (தமிழாக்கம்)
தேவாம்ருதவர்ஷிணி - தேஸாதி (2 களை சவுக்கம்) - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹ நி²த² நி²ஸ் - அ: ஸ் நி²த²ப ம¹க²ரி²ஸ

Audio:


பல்லவி:
;, எவரென நிர்ணயம்| செய்தாரய்|யா உன்||னை
எவ்வாறு ஆராத|னை செய்தாரய்|யா மாதவர்||

அனுபல்லவி:
;, சிவ பெருமானோ மா|தவப் பெரு|மானோ கமலம்||
; அமர் பெருமானோ| ; பரப்பிரம்|மனோ உனை||
(எவரென)

சரணம்:
; சிவ மந்திரந்தனில்| ; "ம" ஜீவன்| ஆகும் மா-||
தவ மந்திரந்தனில்| "ரா" ஜீவன்| ஆகும் இந்||த
விவரங்கள் அறிந்த அறிஞரைப்| பணிகிறேன்||
; நற்குண த்யாகராஜன்| ; போற்றும் ரா|மா உனை||
(எவரென)

 
தியாகராஜர், "எவரனி நிர்ணயிஞ்சிரிரா" என்ற கீர்த்தனையை,
தேவாம்ருதவர்ஷணி ராகத்தில் அமைத்துள்ளார். இதை அதன்
ஜனக ராகமான கரகரப்பிரியாவில் பலரும் பாடுவது வழக்கம்.
ஆரோஹணம் ஸரிகமநிதநிஸ் - இதில் பஞ்சமம் இல்லை.

கவனமாகப் படவேண்டிய ராகம்.
 
"பேரிடி" என்று ஆரம்பம் கண்டால் கொஞ்சம் பயம் வருவது நிஜம்!
ஆனால் இதன் பொருள் "பெயரிட்டு" என்பதாகும். ராமனுக்குப்
பெயரிட்டு, வளர்த்தவரைப் போற்றிப் பாடுகிறார் தியாகராஜர்.
 
37. "பேரிடி நின்னு" (தமிழாக்கம்)
கரஹரப்ரியா (மத்தியம ஸ்ருதி)- ஆதி - தியாகராஜர்.

ஆ: ஸ ரி²க²ம¹ப த²நி²ஸ் - அ: ஸ நி²த²ப ம¹க²ரி²ஸ

Audio:


பல்லவி:
;, பெயர் இட்டு| ; ; | உன்னை|| ;, வளர்த்தவர்| எவ|ரோ ||

அனுபல்லவி:
;, அவர்களைக்| காட்|டிடு||வாய் ஶ்ரீ|ரா|மா ||
(பெயர் இட்டு)

சரணம் 1:
;, ஸாரமா|ன மே|லான|| ;, தாரக| நா|மத்தை||
(பெயர் இட்டு)

சரணம் 2:
;, ஸர்வ ம|தங்க|ளுக்கும்|| ;, சம்மத|மாய் இ|ருக்கும்||
(பெயர் இட்டு)

சரணம் 3:
;, கோர பா|தகங்|களை|| கோதண்ட நு|னியால்| அடக்கும்||
(பெயர் இட்டு)

சரணம் 4:
;, என்றும் த்யா|கரா|ஜன்|| ;, நன்கு ப|ஜித்|திடும்||

(பெயர் இட்டு)
 
சுருள்கள்:

தியாகராஜர், தன் சில கீர்த்தனைகளில், மர்மங்கள் வைத்திருப்பார்.

பல்லவியை, "ராஜ முனிவர், சுருள்கள் ஆடுவதைக் கண்டு எப்படிப் பூரித்தாரோ?"
என்று ஆரம்பிப்பார்! சரணத்தில்தான் புரியும், ராமனின் திருமுகத்தில், நெற்றியில் புரண்டு ஆடும் கேசச் சுருள்கள் அவை, என்று.

இன்னொரு சுருள்கள் பற்றி மற்றொரு பாடலில் விவரிக்கிறார். இந்த இரண்டையும், அடுத்த இடுகைகளில் கேட்டு மகிழுங்கள்.
 

Latest ads

Back
Top