• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வண்ண வண்ண மனிதர்கள்!

இப்படியும் மூதாதையரா?

பரிஹாரங்கள் செய்வதில் கேரளாக்காரர்கள் கில்லாடிகள்! சமீபத்தில் ஒரு குடும்பத்தில் சில நிகழ்வுகள் மோசமாக

இருக்க, பரிஹாரங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று வினவினார்கள். வந்தது ஒரு பெரிய லிஸ்ட்!

'பித்ருக்கள்' பலர் இன்னும் கதி மோட்சம் கிடைக்காமல் இங்கேயே சுற்றுகின்றார்களாம். அவர்களைக் கடைத்தேற

வைக்க, பல ஹோமங்கள் செய்ய வேண்டுமாம். தோராயமாக ஆகும் செலவு, ஒரு லட்சம் என்றனர்! நான்கு

நாட்கள், விடியற்காலை முதல் இரவு வரை பற்பல் ஹோமங்கள் செய்யப்பட்டன. மீண்டும் இரு நாட்கள் சிறப்பு

பூஜைகள் செய்யப்பட்டன.



விஷ்ணு மாயா என்று ஒரு புதிய இறையைப் பற்றியும் கேள்விப்பட்டேன். எருமை வாஹனம் கொண்ட அந்த

இறைவன் சாத்தான் என்றனர். சிவபெருமான் பார்வதியின் மகனான் அவர் காட்டில் வளர்ந்தவராம். அந்தக் கதை

என் பயணக் கவிதைகளில் வரும்! அந்தக் கோவிலில் பிரார்த்தனைக் காசைப் போடச் சொன்னார்கள். இன்னும் சில

கோவில்களில் சிறப்புப் பிராத்தனைகள் செய்யப்பட்டன. எல்லாம் முடிந்த பின், சோழிகளைப் போட்டுப் 'பிரசன்னம்'

பார்த்து, எல்லா மூதாதையரும் வைகுண்டம் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது!



வீட்டில் உள்ள பெரியவர்கள், தம் இளைய தலைமுறை நன்றாக வாழ வாழ்த்துவார்கள் என்றுதான் நான்
எண்ணியிருந்தேன். ஆனால், இப்படிக்கூட மூதாதையர் வந்து படுத்துவார்களா? :ballchain:

 

சகுனமோ சகுனம்!


சகுனம் பார்ப்பது பலரின் வழக்கம். ஆனால் தொட்டது தொண்ணூறுக்கும் சகுனம் பார்த்து, வாழ்வைக் கெடுத்துக்கொள்வார்,

சிலர்! காலை வெளியில் புறப்படும்போது, ஒற்றை பிராமணன் வந்தால்; பூனை குறுக்கே சென்றால், தான் தும்மல்

போட்டால் அல்லது வேறு யாராவது போட்டால்; கால் தடுக்கினால், கழுதையைப் பார்த்தால் என்று பெரிய 'லிஸ்டே'

வைத்திருப்பார்கள்.



சமீபத்தில் ஒரு வசதி குறைந்த அப்பா, தன் பெண்ணுக்குத் தேடும் வரன் வேட்டையில், நல்ல வேலையில் இருக்கும்,

கடவுள் பக்தி கொண்ட, கெட்ட பழக்கங்கள் இல்லாத, பணக்கார வரன், தெரிந்த குடும்பத்தில் கிடைத்தான். இரு

குடும்பங்களும் ஜாதகத்தில் 200 % நம்பிக்கை கொண்டவர்கள். இரண்டு, இரண்டு ஜோசியர்களை ஒவ்வொருவரும் நாடி,

அவர்கள் நால்வரும் ஒரே போல, ஜோடிக்கு நல்ல பொருத்தம் என்று பச்சைக் கொடி காட்ட, புகைப்படங்கள்

பரிமாறிக்கொண்டனர். இரு பக்கமும், புகைப்படங்கள் மனத்திற்குப் பிடிக்க, பெண்ணின் அப்பா, பிள்ளையின் வீட்டுக்கு வர

நாள் குறித்தார்! சரியாக அந்த நாள் காலை, அவருடைய ஒன்றுவிட்ட அண்ணன் காலமாகிவிட, தடாலடியாக சம்பந்தமே

வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார்! சகுனம் சரியில்லையாம்! பொதுவாகப் பெண்ணைப் பெற்றவர்கள்தான்

பயப்படுவார்கள், பெண் புகுந்த வீடு செல்லும் நேரம், அசம்பாவிதம் நடக்கக் கூடாதே, என்று! இப்போது, பெண் வீட்டில்

சகுனம் பார்த்துப் பிள்ளையை ஒதுக்கும் காலமாகிவிட்டது!



இவர்களை யார் திருத்துவார்? :director:
 

உதவும் கரங்கள்.



'உன் கடமையைச் செய்; பலனை எதிபாராதே' என்பதை எல்லோரும் அடிக்கடி கூறுவார்கள். நாம் பிறக்கும்

குடும்பம், நாம் தீர்மானிக்க இயலாதது! நம் பிறப்பால் சில கடமைகளும், நம் திருமணத்தால் வேறு சில

கடமைகளும், வாழ்வில் வந்து சேரும்! நம்மிடம் உதவி கோரும் நிலைமையில் சில சுற்றத்தார் இருப்பர். உதவி

செய்யும் நாம், இறைவன் நம்மை உதவும் நிலைக்கு உயர்த்தியுள்ளானே என்று சந்தோஷப்பட வேண்டும். செய்த

உதவியை மீண்டும் மீண்டும் சொல்லிக் காட்டினால், உதவி செய்த பலனே இல்லாது போய்விடும். நம் உதவிக்குப்

பிரதி பலனை எதிர்பார்க்காது இருக்கும் மனப்பக்குவத்தை வளர்ப்போம்!


நம் கரங்கள் உதவட்டும்; நம் மனம் அதனால் மகிழட்டும்! :grouphug:


 

வாய்ப்புக்கு நன்றி!


வண்ண வண்ண மனிதர்கள் என்று என் சுற்றத்தில் ஆரம்பித்து, நட்பும் பற்றி எழுதினேன்!

படித்துப் பாராட்டிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த நூலுக்கும், மேலும் என் இரு நூல்களுக்கும்

ஐந்து நட்சத்திரம் அளித்து மகிழ்ந்த Prof. Nara அவர்களுக்கு என் வணக்கங்கள்!

இனி என் எழுத்துக்கள், நான் பங்கேற்கும் வேறொரு இணையதளத்தில் தொடரும்!


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :)
 
விடை பெற விழைந்தாலும், எழுதும் ஆவல் தடை போடுகிறது!

இதோ தொடர்கின்றனர் வண்ண வண்ண மனிதர்கள்! :high5:
 

பேறு பெற்றவர்கள்!



உலகில் பேறு பெற்றவர்கள் யார் தெரியுமா?
தன்னலம் இல்லாத் தாய் உள்ளவர்கள்! தாய்மையின் சிறப்பை உணர்ந்து பலர்

அன்புப் பெட்டகங்களாகத் திகழ, சிலர் தன் வாழ்வே பெரிதென எண்ணும் பிறவிகளாக இருப்பார்கள்! விந்தையான இவர்கள்

சிலரை நான் பார்த்துள்ளேன்!



படிப்பு முடியும் முன்னே,
தன் பிள்ளையை வேலைக்கு அனுப்பிப் பொருள் சேர்ப்பவர்; திருமண வயதை அடைந்த தன்

பெண்களுக்கும், அ
வர்ள் சம்பாதிக்கும் பணம் போய்விடுமே என்று தக்க துணை தேடாது இருப்பவர்; தன் மகன், தான்

கிழித்த கோட்டைத் தாண்டாதிருக்க, அதிகாரம் செய்து ஆள்பவர்; தன் மகளின் திருமணம் முடிந்த பின், மருமகனின் தாய்

தந்தையரைப் பிரித்து வைத்து, அதில் மகிழ்பவர்; என்று பல விதப் பெண்கள் உலவுகின்றனர்!



ஐந்தறிவுப் பிராணிகள் தம் குட்டிகளைப் பாதுகாத்து வளர்ப்பதைப் பார்க்கிறோம். அவற்றிலும் மேன்மையாகக் கருதப்படும்,

ஆறறிவு கொண்ட மனித இனம், தாய்மையை மேன்மைப்படுத்தட்டும்! :thumb:


 
Hi Raji,

I wanted to tell you that I missed all your recent posts, so went back to find a few great ones.. hope all is well, Yes I am here, :-) I will come by regularly.. take care..
lots of love
Bushu :-)
 
......... hope all is well, Yes I am here, :-) I will come by regularly. ......
Thanks for the concern, dear Bushu.

Yes... All is well! We are enjoying Agni nakshathram in SingArach Chennai!

You are most welcome to all my threads. I feel so good to get feed backs and comments. Take care. :)
 

இந்தப் படித்தவர்கள் எந்த நிறம்?


இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்தேன்! மிகவும் எளிய கேள்விகளைக் கேட்டுப் பலரிடம்

பதில் பெற விழைந்தார் ஒருவர். நம் நாட்டின் கல்வித் தரம் பற்றிய சோக கீதம் ஒலிக்க ஆரம்பித்தது என் செவிகளில் -

சுபபந்துவராளி ராகம்! அதிலும் ஷெனாய்!! ஏனென்று வியக்கின்றீர்களா? இதோ ஒரு சில கேள்வி-பதில்களைப் பாருங்கள்!



கேள்வி: சூரியனின் இன்னொரு பெயர் என்ன?


பதில்கள்:

1. சந்திரன் (இது பலர் சொன்னது!)

2. அக்னி நட்சத்திரம்


3. வெய்யில்

4. மாதவன் :faint:

ஞாயிறு, பரிதி, கதிரவன், ஆதவன் என்ற பல பெயர்களில் ஒன்று கூட எவரும் சொல்லவில்லை, சிறுவர் முதல் MBA பட்டதாரி வரை!


ஞாயிறு என்றால் என்ன என்று கேட்ட பின்பும் Sunday என்றே பதில் வந்தது!



கேள்வி: சந்திரனின் வேறு பெயர் என்ன?


பதில்கள்:

1. அமாவாசை

2, பவுர்ணமி


3. இரவு :loco:


திங்கள், மதி, நிலா, நிலவு என்பதில் எதையும் ஒருவரும் சொல்லவில்லை!



கேள்வி: ஏன் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது?


பதில்கள்:

1. கெட்ட கனவுகள் வரும்

2. வாந்தி வரும்

3. மாமியார் மருமகளைத் திட்டுவாள் :pound:

சிரிப்பதா? அழுவதா? :noidea:


 

அபூர்வத் தம்பதி!



சமீபத்தில் எங்கள் இனிய இல்லத்தில் ஒரு நாள் தங்குவதற்கு வந்தனர் ஒரு தம்பதி. எங்கள் நீண்ட கால நண்பர்களே

அவர்கள். என்னதான் வயது முதிர்ந்தாலும் இப்படியா இளைத்துப்போவார்கள்! எப்படி இது சாத்தியம் என்று எண்ணினேன்.

அவர்களுடன் கழித்த ஒரு நாளிலே புரிந்துகொண்டேன்!



மாலை நேரம் வந்த அவர்கள், எந்தப் பானமும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். காபி - வேண்டாம்; டீ - வேண்டாம்;

பால் - வேண்டாம்; மோர் - வேண்டாம்; எலுமிச்சை / மாம்பழச் சாறு - வேண்டாம்; என்று கொடுக்க விழைந்த பானங்களுக்கு

எல்லாமே அதே பல்லவிதான்! ஆளுக்கு ஒரு குவளை தண்ணீர் மட்டும் பருகினார்கள்.



இரவுச் சாப்பாடு நேரம் வந்தது. நாளெல்லாம் அலைந்ததில், களைப்போடு பசியும் இருக்குமே என்று, நிறையத் தயார்

செய்து வைத்திருந்தேன். அவர்கள் உண்டதோ நான்கு கவளங்கள் மட்டுமே - இரண்டு கவளங்கள் வத்தக் குழம்புச் சாதம்;

இரண்டு கவளங்கள் தயிர் சாதம். தயாரித்த இரு வகைக் காய்களையும் ருசி பார்த்தார்கள், அவ்வளவே. அவ்வளவுதான்

தினம் உண்போம் என்றும் சாதித்தார்கள். காலை எழுந்தவுடன், அரைக் குவளை டீ மட்டும் அருந்தினார்கள். பின் ஆளுக்கு

இரண்டு இட்லி, சிறிதளவு சாம்பார். மதிய உணவும் முந்தின நாள் இரவு உணவு போலத்தான். நான் வியப்பின் உச்சிக்கே

போய்விட்டேன். இத்தனை குறைவாக எப்படி உண்ண முடியும்?



ஆனால், ஒன்று கவனித்தேன். முன்பு அந்த நண்பர் விலைவாசி உயர்வு பற்றியும், வங்கியில் வட்டி விகிதம் குறைவது

பற்றியும் புலம்பியபடியே இருப்பார். அரசாங்க ஊழியர்கள் போல 'பென்ஷன்' இல்லையே என்றும் வருந்துவார். அவருடன்

அரை மணி நேரம் பேசினால், அவரது சோகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்! இந்த முறை மிகவும் சந்தோஷமாக, பல

நல்ல மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தார்.



உண்ணும் உணவைக் குறைத்தால், நம் உடல் அந்த அளவு உணவில் வாழத் தன்னைத் தயார் செய்துகொண்டு பசியை

மறக்குமாம். அவர்கள் இதை நிரூபித்தார்கள். விலைவாசி ஏற்றத்தால் அவர்கள் இவ்வாறு மாறினார்களோ என்னவோ,

தற்போது சந்தோஷமாக இருக்கின்றார்கள்.


'உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு' என்றுதான் படித்துள்ளேன்! 'உண்டி சுருங்குதல் மனதிற்கு மகிழ்வு' என்று இப்போது அறிந்தேன்! :hungry:
 

அதிசயத் தம்பதி!



'சட்டை மாற்றுவதுபோல வாழ்க்கைத் துணையை மாற்றுவார்கள்' என்று மேலை நாட்டினரைப் பலர் கேலி செய்வார்கள்.

ஆனால், எழுபது ஆண்டுகள் இனிய இல்லறம் நடத்தி, மூன்று நாட்கள் மட்டுமே பிரிந்த அதிசயத் தம்பதி பற்றி அறிவோம்!



Fred Noble ஒரு துடிப்பான ராணுவ வீரர்; Elizabeth ஒரு அழகிய நர்ஸ். இவர்கள் முதலில் சந்தித்தது 1936 - ம் ஆண்டு.

ஆனால் Fred வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதால், திருமணம் 1940 -ம்ஆண்டு புதுவருடப் பிறப்பன்று, இரு நாட்கள்

விடுமுறையில் நடந்தது! ராணுவ வீரராக அவர் ஆப்கானிஸ்தான், இந்தியா, பர்மா, இலங்கை, ஃபிரான்ஸ் போன்ற

நாடுகளுக்குச் சென்று வந்தார். பின், இருவரும் ஒருவருக்காக ஒருவர் என்று மனமொத்து வாழ்ந்தனர். இரண்டு மகள்
கள்,

நான்கு பேரர்கள், நான்கு கொள்ளுப் பேரர்கள் என்று விரிந்தது அவர்கள் குடும்பம். இருவரும் மறவாமல் பிறந்தநாள்,

காதலர் தின வாழ்த்து அட்டைகளைப் பரஸ்பரம் அனுப்பி மகிழ்வார்களாம்!



சென்ற ஆண்டு, டிசம்பர் நான்காம் தேதி Fred தன் தூக்கத்தில் அமைதியான மரணத்தைத் தழுவியபோது, அவர் வயது 96!

மூன்றே நாட்களில், அவரின் மனைவி Elizabeth அவரைத் தொடந்து வானுலகம் சென்றபோது, அவர் வயது 92!
அவர்களின்

குடும்பத்தினர் அவர்களின் மறைவால் வருந்தினாலும், ஒருவரை ஒருவர் மூன்று நாட்கள்தானே பிரிந்தனர் என்று ஆறுதல்

அடைந்தார்களாம்!



வாழ்க அந்தத் அதிசயத் தம்பதி! :high5:


 
Fred Noble and Elizabeth as newly weds:

article-2073229-0F26B53D00000578-140_468x801.jpg


The same couple as super seniors:

article-2073229-0F26B41200000578-985_468x528.jpg

 

அதிசயத் தம்பதி!



'சட்டை மாற்றுவதுபோல வாழ்க்கைத் துணையை மாற்றுவார்கள்'

திருமறை வாழ்வு வாழ்ந்து
திருநாடு சென்ற இவரை
திருநெறி கண்ட தமிழ்
திருவுள்ளம் கொண்டு
வாழ்த்தும்...


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை-
 
Last edited:
தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, சண்முகம் சார்! :)
 

தவறான கண்ணோட்டம்!



சலனங்களும், இடையூறுகளும் நிறைந்த உலக வாழ்வில், சரியான கண்ணோட்டம் இல்லையென்றால், மன

நிம்மதி பெற முடியாது! சரியான கண்ணோட்டம் இருந்தால், மன அமைதி பெறுவது மிகவும் எளிது.



சில உதாரணங்கள் சொல்லுகிறேன். சிலரிடம், என்ன சொன்னாலும் தவறாகவே எண்ணுவார்கள். 'உங்கள்

தம்பியின் வீடு மிக அழகாக இருக்கிறது!' என்ற பாராட்டைக் கேட்டவுடன், 'அப்படீன்னா, என் வீடு அழகாய்

இல்லையா?' என்று விவாதத்திற்கு வருவார்கள். 'உங்கள் நண்பரின் மகன் மிகவும் புத்திசாலி!' என்று சொன்னால்,

'என் மகன் மட்டும் மக்கா?' என்று சண்டைக்கே வந்துவிடுவார்கள்! யார் யாரைப் பாராட்டினாலும், தன்னுடன்

ஒப்பிட்டு, மனம் கலங்குவார்கள்! 'உங்கள் கார் விலை உயர்ந்ததாக இருக்கிறதே!' என்று அவரையே

பாராட்டினாலும், 'நம்மைப் பார்த்துக் கண் வைக்கிறானே!' என்று தன் மனதில் அங்கலாய்க்க ஆரம்பித்து,

நிம்மதியை இழப்பார்கள்! இவற்றையே தவறான கண்ணோட்டம் என்று குறிப்பிடுகிறேன்.



மனம் திறந்து நல்லவற்றைப் பாரா
ட்டுவதும், பிறரைப் பற்றிய பாராட்டைக் கேட்டால், நிஜமான மகிழ்ச்சி பெற

விழைவதும், நல்ல கண்ணோட்டத்தின் அஸ்திவாரங்கள்! இதை மனதில் நிறுத்தி, அமைதியாக வாழ நாம்
அறிவோம்! :peace:


 
Last edited:

சேற்றில் மலர்ந்த செந்தாமரை!



எளிய சூழ்நிலையில் பிறந்து உயர்ந்த நிலையை அடைவோரை, 'சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என்றே

குறிப்பிடலாம். நான் இங்கு எழுதப்போவது, சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு இளம் பெண்ணைப்

பற்றியே! உங்களில் பலர் பார்த்திருக்கக் கூடும்! அவள் என் மனத்தைக் கவர்ந்ததால், அவளைப் பற்றி எழுதுகிறேன்.



ஏழ்மையான மீனவர் குடும்பத்தில் பிறந்தவள். அன்னையின் வயிற்றில் வளரும் பொழுதிலே தந்தையை

இழந்தவள். அன்னையின் அரவணைப்பில் வளர்ந்து, நல்ல கல்வி அறிவு மட்டுமின்றி பொது அறிவும் பெற்றவள்.

பொது அறிவை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், கல்வித் துறையில் பணி புரியும், படித்த மேதாவிகள் சிலரின்

வினோதமான பதில்கள் கேட்டு வருந்திய ஆதங்கத்தினால்தான்! கோடி ரூபாய் வெல்ல முடியும் போட்டி ஒன்றில்

தோன்றி, தன் தாயை மறவாமல் உயர்த்திப் பேசி மகிழ்ந்து, கல கலவென்று விடாது சிரித்து, லட்சங்களில் பணம்

வென்று சென்றால், அவளை எளிதில் மறக்க முடியுமா?
தன் மீனவர் இனத்தில், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும்

படிக்கச் செல்லாது இருப்பதை, மனம் வருந்திச் சொன்னாள். தன்னைப் போலவே பிறரும் உயர வேண்டும் என்ற

அவளின் மேலான எண்ணம், அவளை இன்னும் உயரத்தில் வைக்கிறது!


வாழ்வில் மேன்மை பெற்றுச் சிறக்க, அவளை மனமார வாழ்த்துவோம்! :high5:

 
இப்படியும் பெண்கள்!


தந்தை தாயிடம் உருட்டி மிரட்டிப் பிடுங்கும் பெண்களைக் கண்டது உண்டோ? நான் சிலரைப்

பார்த்துள்ளேன்!


விசாகையில் வசித்தபோது, ஒரு நண்பரின் மகள், காதலித்துத் திருமணம் செய்து கொள்ள விழைந்தாள்.

தாயிடம் ஒரு நாள், 'காதல் கல்யாணம்தானே என்று ஒரு சீரும் செய்யாமல் விட்டு விடாதே! நகைகள்,

வெள்ளிப் பாத்திரங்கள் வரிசையுடன், கட்டில், மெத்தை, பீரோவும் இருக்கட்டும்', என்று கறாராகச்

சொல்லிவிட்டாள்! அப்படிச் சொல்லாவிட்டால், அம்மாவே அவளை ஏமாற்றிவிடுவாளாம்! இது எப்படி

இருக்கு?



ஒரு கல்யாணத்தில், இரட்டை வடச் சங்கிலியைச் சீர் நகைகளுடன் கேட்டு கலாட்டா செய்த ஒரு

முதியவரை மனமாரப் பாராட்டி, 'அவர் அப்படிக் கேட்டிருக்காவிட்டால், எனக்கு அந்த நகை கிடைத்தே

இருக்காது!', என்று மகிழ்ந்த ஒரு பெண்ணைப் பற்றி, முன்பு ஒரு முறை எழுதினேன்! இப்போது

இன்னொரு பெண், பேரன், பேத்திகள் எடுத்த பின், தன் அன்னையிடம் கேட்கின்றாளாம், 'எனக்கு என்ன

பெரிதாகச் சீர் செய்து கல்யாணம் செய்தீர்கள்?', என்று!


உலகம் பலவிதம்!!
:bowl: . . . :twitch:




உலகம் பல விதம்; ஆனால் பெண்கள் ஒரே விதம்?
 
உலகம் பல விதம்; ஆனால் பெண்கள் ஒரே விதம்?
நிச்சயமாக இல்லை சிவா சார்!

நானே ஒரு உதாரணம்!! :high5:

:gossip: ....
Though someone commented that I am a self proclaimed :angel: !!!
 
நிச்சயமாக இல்லை சிவா சார்!

நானே ஒரு உதாரணம்!! :high5:

:gossip: ....
Though someone commented that I am a self proclaimed :angel: !!!
dear madam !
you can not be ,you might not have taken anything ,but at times you might have asked your parents "am i like other girls demanded anything from you ". that will automatically do its own purpose .if at all you are dif the credit must go your husband.
guruvayurappan
 

இப்படியும் மனிதர்கள்!



சமுதாயம் என்பது கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமென்றால், சில கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம். புதுமையான

எண்ணங்களைப் பரப்புகிறேன் பேர்வழி என்று சிலர் கிளம்புவார்கள். நம் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கேலி

பேசுவார்கள். 'எப்படி வாழ்ந்தால் என்ன?' என்று சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதாக எண்ணிக் கொண்டு, எதையுமே தவறாக

நினைக்க மாட்டார்கள். பூவும், பொட்டும் வைப்பது பத்தாம் பசலித்தனம் என்பார்கள்; 'தாலிக்குத் தேவை என்ன?' என்று

கேட்பார்கள்.



புதிய பாதையில் வழி நடத்துவதாக நினைத்து, திருமணத்திற்கு முன் கொள்ளும் அன்னியோன்னிய உறவுகள் முதல்,

திருமணம் ஆன பின்னும் பலரிடம் கொள்ளும் இவ்வகை உறவுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டியவை என்றும் பேசுவார்கள்.

இவர்கள் உயர் மட்ட மனிதர் வகையில் சேர்ந்தவர்களாம்!



ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒரு பெண்மணி அவள் கணவனின் நண்பரிடம் கூறுகின்றாள்,'பேசாமல் நான்

உங்களையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்! நம்ம ரெண்டு பேரின் wave length ஒரே போல இருக்கின்றன!' சுற்றியுள்ளவர்கள்

அவள் பெரிய காமெடி சொன்னதுபோல், கைதட்டி மகிழ்கின்றனர்! நான் தலையில் அடித்துக்கொள்ள வழி இல்லாது, வேறு

புறம் சென்றுவிட்டேன்! அவளுடைய wave length எனக்கு ஒத்துவராதே! எல்லாமே காமெடிதான். பேச்சிற்கு வரம்புகளே

கிடையாது!



இவ்வகை மனிதர்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருத்தலே நலம்! :pout:
 

Latest posts

Latest ads

Back
Top