DEVI BHAAGAVATAM - SKANDA 2
2#5c. நிபந்தனை
வலைஞன் தாசன் வலையை வீசினான்;
விலை மதிக்க முடியாததைக் கேட்டான்!
“நிபந்தனை ஒன்று உள்ளது மன்னா! அது
பந்தப்படுத்தும் உன்னுடைய சந்ததிகளை.
அரசனாக வேண்டும் சத்தியவதியின் மகன்;
வரக்கூடாது எந்தத் தடையும் இதற்கு இனி.”
தயங்கினான் சந்தனு நிபந்தனையைக் கேட்டு!
மயங்கினான் சந்தனு காங்கேயனை நினைத்து!
‘மூத்தவன் இருக்க இளையவன் அரசாள்வதா?
ஏற்றுக் கொள்ளுமா இதனை இந்த உலகம்?
மறுத்துச் சொன்னால் வலைஞன் தாசன்
மறுத்து விடுவான் மகளைத் தருவதற்கு!’
இருதலைக் கொள்ளி எறும்பானான் சந்தனு!
தர்மநெறி ஒரு புறம், காம வெறி மறு புறம்!
விடை கூறவில்லை வலைஞன் தாசனுக்கு!
விடை பெறவில்லை பரிமள கந்தியிடமும்!
விரைந்து திரும்பினான் தன் அரண்மனைக்கு.
கரைந்தான் மனக் குழப்பத்தில் குமுறியதால்.
தந்தையின் மாற்றதைக் கண்டான் தனயன்;
சந்தனுவிடம் கேட்டான் துயரின் காரணம்!
“எந்தப் பகைவனை எண்ணி வருந்துகிறீர்கள்?
அந்தப் பகைவனை வென்று வருவேன் நான்!
தந்தையின் துயரைக் களையாத மகன்
தனயன் என்ற பெயருக்கு தகுந்தவனா?
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தியாகம் செய்தான் ராமன் அரசுரிமையை.
தந்தையின் ஆணைப்படித் தாயைக் கொன்று பின்
விந்தையாகத் தாயை உயிர்ப்பித்தான் பரசுராமன்.
யாகப் பசுவாக விற்கப் பட்டான் மகன்
சுனஸ்பேசன் தந்தை ஆணீகர்த்தரால்.
உடல் நீர் தந்தது, எனவே உமக்கு உரியது
உடன் நிறுத்துங்கள் துயரம் அடைவதை.
தயங்க வேண்டாம் உண்மை கூறுவதற்கு;
இயலாத காரியம் என்று ஒன்றும் இல்லை!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
2#5c. நிபந்தனை
வலைஞன் தாசன் வலையை வீசினான்;
விலை மதிக்க முடியாததைக் கேட்டான்!
“நிபந்தனை ஒன்று உள்ளது மன்னா! அது
பந்தப்படுத்தும் உன்னுடைய சந்ததிகளை.
அரசனாக வேண்டும் சத்தியவதியின் மகன்;
வரக்கூடாது எந்தத் தடையும் இதற்கு இனி.”
தயங்கினான் சந்தனு நிபந்தனையைக் கேட்டு!
மயங்கினான் சந்தனு காங்கேயனை நினைத்து!
‘மூத்தவன் இருக்க இளையவன் அரசாள்வதா?
ஏற்றுக் கொள்ளுமா இதனை இந்த உலகம்?
மறுத்துச் சொன்னால் வலைஞன் தாசன்
மறுத்து விடுவான் மகளைத் தருவதற்கு!’
இருதலைக் கொள்ளி எறும்பானான் சந்தனு!
தர்மநெறி ஒரு புறம், காம வெறி மறு புறம்!
விடை கூறவில்லை வலைஞன் தாசனுக்கு!
விடை பெறவில்லை பரிமள கந்தியிடமும்!
விரைந்து திரும்பினான் தன் அரண்மனைக்கு.
கரைந்தான் மனக் குழப்பத்தில் குமுறியதால்.
தந்தையின் மாற்றதைக் கண்டான் தனயன்;
சந்தனுவிடம் கேட்டான் துயரின் காரணம்!
“எந்தப் பகைவனை எண்ணி வருந்துகிறீர்கள்?
அந்தப் பகைவனை வென்று வருவேன் நான்!
தந்தையின் துயரைக் களையாத மகன்
தனயன் என்ற பெயருக்கு தகுந்தவனா?
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தியாகம் செய்தான் ராமன் அரசுரிமையை.
தந்தையின் ஆணைப்படித் தாயைக் கொன்று பின்
விந்தையாகத் தாயை உயிர்ப்பித்தான் பரசுராமன்.
யாகப் பசுவாக விற்கப் பட்டான் மகன்
சுனஸ்பேசன் தந்தை ஆணீகர்த்தரால்.
உடல் நீர் தந்தது, எனவே உமக்கு உரியது
உடன் நிறுத்துங்கள் துயரம் அடைவதை.
தயங்க வேண்டாம் உண்மை கூறுவதற்கு;
இயலாத காரியம் என்று ஒன்றும் இல்லை!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.