• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 8

1. தாமிஸ்ரம்

பிறர் பொருளைக் கொள்ளைஅடித்தவர்களையும்;
பிறன் மனைவி, சிசுவை அபகரித்தவர்களையும்;

மிரட்டி அடித்துத் தள்ளுவர் தாமிஸ்ர நரகத்தில்;
காலதூதர் காலபாசத்தினால் கட்டி இழுத்து வந்து!

2. அந்ததாமிஸ்ரம்

கணவனை வஞ்சித்த மனைவி அடையும் நரகம் ;
மனைவியை வஞ்சித்த கணவன் அடையும் நரகம்;
cleardot.gif


கண்களை இழந்து வேதனை தாளாமல் - உடல்
புண்ணாகி வாடி வதங்கும் நரகம் அந்ததாமிஸ்ரம்

3. ரௌரவம்

தனக்கு உரிமை இல்லாத பொன் பொருளைத்
தன் சாமர்த்தியத்தினாலும் செல்வாக்கினாலும்

தன்னுடையது என்று அபகரித்துக் கொள்பவர்;
தன் குடும்பத்தை நன்கு பேணிக் காப்பதற்காக

பிறர் குடும்பத்தை சீரழிப்பவர்களின் நரகம் இது!
மரண காலத்தில் பெரிதும் துன்புறுவர் இவர்கள்.

தருவார்கள் தண்டனை ஏமாற்றப் பட்டவர்கள்
ருரு என்னும் கொடிய விஷ மிருக வடிவத்தில்.

4. மஹா ரௌரவம்

ருரு துன்புறுத்திக் கொண்டே இருக்கும் பாவிகளை!
ஒருவேளை தப்பிவிடாமல் சூழ்ந்துகொண்டு நிற்கும்!

5. கும்பீபாகம்


பிற உயிர்களைக் கொன்று தின்பவரின் நரகம் இது
வறுப்பார்கள் கிங்கரர்கள் அவர்களை எண்ணையில்

தின்ற பசுக்களின் உடலில் இருந்த ரோமங்கள் போல்
அத்தனை ஆண்டு காலம் சமைக்கப்படுவார்கள் இங்கே!

6. காலசூத்திரம்

மாதா, பிதா, வேதியரை ஆதரிக்காதவன் அடையும் நரகம்;
மாதா, பிதா, வேதியரைத் துரத்தி விடுபவனின் நரகம் இது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21a. HELLS ( 1 TO 6)

1. TAmisra Hell

He who steals another man’s sons, wives, and riches, is taken to Yama by His messengers. He is tied down by the terrible messengers of Yama, using the KAla Sootra or the rope of Time!

He is taken to the TAmisra hell, the place of many torments and punishments. Yama’s attendants beat him and threaten him until he becomes stupefied, weak, distressed and faints

2. Andha TAmisra Hell

He who deceives another man and enjoys his wives is dragged down to Andha TAmisra hell. There he is subjected to pain and suffering. He loses his eyesight and becomes blind. His state resembles that of a tree when its trunk is broken. For this reason it is called as Andha TAmisra.

3. Raurava Hell

He who claims everything to be “My” and “Mine” and quarrels with others; he who maintains his own family, at the expense of another goes Raurava hell.

The animals which he had injured and killed in this world, assume the form of the animal Ruru and torment him in the
Raurava Hell.

4. MahA Raurava Hell

Ruru is more cruel and ferocious than poisonous snakes. These animals living in that hell, surround the sinner making sure that he can not escape. Hence it is named as MahA Raurava Hell. He who torments others, goes to this hell and these Rurus, the flesh-eaters, spring on his body and bite and eat his flesh.

5. KumbheepAka Hell

He who cooks and eats animals and birds, is fried in hot oil in the KumbheepAka Hell by the Yama Dootas for one thousand years.

6. KAla Sootra Hell

He who quarrels with his Pitris and the BrAhmaNas, is taken by the Yama Dootas to the KAlasootra Hell to be burnt by the fire and Sun. The sinner is troubled by hunger and thirst and spends his time in sitting, walking and running here and there helplessly.


 
64 THIRU VILAIYAADALGAL

57c. தேவ வலைஞன்.

நினைத்த மாத்திரத்தில் சிவன் வடிவெடுத்தார்,
அனைத்துலகும் மயங்கும் தேவ வலைஞனாக!

கறுத்த வைரம் பாய்ந்த மேனி, சிறுத்த இடை,
பரந்து விரிந்த மார்பு, அரையில் வரிந்த கச்சு.

இடையில் தொங்கும் கூரிய உடைவாள்,
சடையில் தேன் சிந்தும் நெய்தல் மலர்கள்;

தோலினால் ஆகிய அழகிய மேலாடை,
தோளில் தொங்கும் கனத்த மீன்வலை;

உதவியாளன் ஒருவன் பின் தொடர்ந்து வர
பதவிசாக பரதவ மன்னனிடம் வந்தான்.

“அழகிய நம்பீ! யார் நீ என்று கூறுவாய்!”
பழகியவன் போலச் சிரித்து பதில் தந்தான்.

“மதுரை பரதவர் அரசன் மகன் நான்!
வதுவை புரிய வந்தேன் உம் மகளை!

வலை வீசுவதில் வல்லவன் நான் அறிவீர்.
அலைகடல் என் விளையாட்டு மைதானம்!”

“துள்ளித் திரிந்து துயரம் தருகின்ற
கள்ளச் சுறா மீனை வெல்பவருக்கே

ஒள்நித்தில நகைக் குமரியின் கரத்தை
அள்ளித் தருவேன் நான் திருமணத்தில்!”

ஏறினான் படகில் தன் உதவியாளனுடன்
ஏகினான் கடலில் கடுகி மறைந்தான்

விட ஒண்ணாத சுறா மீனைப் பிடிக்கச்
‘சடார்’ எனத் தன் வலையை வீசினான்.

தெய்வீக வலையில் சிக்கிக் கொண்டது
தெய்வீகச் சுறாவாகிய நந்தி தேவன்.

தொலை தூரம் படகை இழுத்துச் சென்றது!
தொல்லைகள் பல தந்து தப்ப முயன்றது!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

57 (C). THE DIVINE FISHERMAN.


The moment Siva decided to give sapa vimochanam, he acquired the form of divine fisherman.
He was dark, stunningly handsome, strong, slim, broad shouldered and had a very narrow waist. He had tied up his dress well. A sword hung at his waist.

Flowers dripping with honey decorated his hair. He wore a vest made of a thin hide. His assistant carried the heavy fishing net on his shoulder.


He walked to the king of the fishermen, who asked the newcomer, “Who are you my handsome boy?”


Siva replied,”I am the son of the king of fishermen in Madurai. I have come to marry your daughter! I am an expert in throwing the net. The sea is my play ground.”

“Only the man who could capture the troublesome shark can marry my daughter!”


Siva (turned to a fisherman) got into a boat, with his assistant. They soon disappeared from the sight.


Siva threw his net far and wide. The shark got caught in it but it dragged them all over the sea. It tried every trick known to it to escape from the net.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#7b. பாண்டவர் சரிதை (2)

ஆசிரமத்தை அடைந்தனர் தர்மன் குழுவினர்.
அனைவரும் அவர்களைக் கண்டு மகிழ்ந்தனர்.

காணவில்லை ஆசிரமத்தில் மகான் விதுரரை!
வினவினான் அவரைக் குறித்து தர்ம புத்திரன்.

விரக்தி அடைந்த விதுரர் சென்றிருந்தார்
பரம புருஷனை தியானிக்கத் தனியிடத்துக்கு.

தேடிச் சென்றான் தருமன் விதுரரை மறுநாள்.
ஒடுங்கி இருந்தார் ஆழ்ந்த தியானத்தில் விதுரர்.

ஜோதி வெளிப்பட்டது அவர் முகத்திலிருந்து;
ஜோதி கலந்தது தர்மன் முகத்தில் சென்று.

இருவர் அம்சமும் தர்மராஜனுடையதே;
ஒருவர் அம்சம் ஒடுங்கியது மற்றவரிடம்.

அந்திமக் கிரியைகள் செய்ய முற்படுகையில்
அசரீரி கூறியது, “விரக்தனை எரிக்கலாகாது!”

வந்தனர் வியாசரும் நாரதரும் ஆசிரமத்துக்கு;
குந்தி கூறினாள், ” காண வேண்டும் கர்ணனை!”

விரும்பினாள் காந்தாரி நூற்றுவரைக் காண;
விரும்பினாள் உத்தரை அபிமன்யுவைக் காண.

நீராடச் செய்தார் கங்கையில் அனைவரையும்;
நீராடினார் கங்கையில் வியாச முனிவரும்.

தியானம் செய்தார் பராசக்தியைக் குறித்து;
தீர்க்கவல்லவள் அபிலாஷையை அவளே!

‘ஜகத்காரிணி, பரப்ரம்ம ஸ்வரூபிணி, மாயே!
ஜகன்மாதா, ஸகுண நிர்குண ரூபிணி தாயே!

மகாதேவி, மணி த்வீப வாசினி, அம்பா!
மஹா வீரர்களை வரவழைப்பாய் இங்கே.

எந்த உலகத்தில் எந்த நிலையில் இருந்தாலும்.
உந்தன் அருளால் வரட்டும் அவர்கள் இங்கு!”

காண விரும்பியவரைக் கண்டனர் அனைவரும்.
கண்டபின் சென்றனர், வந்தவர் மறைந்தருளினர்.

வியாசர் சென்றார் தன் வழியே தனியாக;
வந்தனர் மற்றவர் ஹஸ்தினாபுரத்துக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATM - SKANDA 2

2#7b. The PaaNdavaas(2)

Dharma and the others reached Sage Sathayoopa’s ashram. The people there were happy to see these visitors. Dharman looked for Vidura and could not find him in the Ashram. Vidura had gone to a lonely place to meditate on the Supreme power.

The next day Dharma went in search of Vidura and found him lost deeply in his meditation. A jyoti emerged from Vidura’s face and merged in Dharma’s face. Both Vidura and Dharma were the amsam of the same Dharma Raajan. So the amasam merged from one into the other.

An asareeri warned them that the body of a virakthan should not be burned – when they tried to perform the funeral rites of Vidura.

Narada and Vyasa came to the ashram. Kunti Devi wished to see her eldest son Karnan. Kaanthaari wished to see the Kouravaas. Uththara wanted to see her husband Abimanyu.

Vyasa told them to take a holy bath in Ganges. He himself bathed in the holy river and prayed to Shakti Devi – who was the one who could fulfill such an unusual wish.

He prayed to Devi, “You are the cause of the creation; You are the para brahma swaroopini! You are mother of everything seen, you exhibit yourself both as saguNa roopini and nirguNa roopini. Mahaa Devi who dwells in the MaNi dweepa! Please make all those valorous people appear here – wherever they may be now and however they maybe now”

By Devi’s divine grace all those people appeared at the place. The ladies met their loved ones and after some time the unearthly visitors disappeared. Vyasa went on his way all alone while Dharma and the others returned to Hastinaapuram.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21b. நரகங்கள் (7-12)

7. அஸி பத்ரம் (வாளலகு)

தன் மதத்தைப் புறக்கணித்துப் பிறவற்றில் புகுபவன்
தள்ளப் படுகின்றான் இந்த நரகக் குழியில் உழன்றிட!

அடிப்பார்கள் அஸிபத்ரம் வாளலகுச் சாட்டையினால்;
இடறி விழுவான் பாவி தப்பித்து ஓட முயலும் போது!

8. பன்றி முகம்

வேதியருக்குச் சரீர தண்டனை தந்த அரசனுக்கும்;
அநீதியான தண்டனைகளைத் தருபவனுக்கும்;

உருவாக்கப் பட்டது பன்றி முகம் என்னும் நரகம்;
முறிப்பார்கள் கைகள் கால்களை அடித்து நசுக்கி.

ஆலை வாய்க் கரும்புகள் போலவே - பாவிகள்
சாலத் துன்புறுவர் இந்த நரகக் குழியில் விழுந்து!

9. அந்த கூபம்

புகழுடன் விளங்கும் அந்தணனைக் கொல்பவன்;
ரகசியமாக நல்ல மறையவனைக் கொல்பவன்;

துரோகம் செய்தவர்களின் கொடிய நரகம் இது
துரத்தித் தாக்கும் பல பறவைகள், விலங்குகள்!

10. கிருமி போஜனம்

பஞ்ச யக்ஞங்களைப் புரியாதவர்களின் நரகம் இது;
புழு வடிவெடுத்து பிற புழுக்களால் புசிக்கப் படுவர்!

11. அக்கினிக் குண்டம்

அந்தணனின் உடைமைகளைப் பறித்துக் கொள்பவரை
அக்கினிக் குண்டத்தில் தள்ளி வாட்டிக் காய்ச்சுவார்கள்.

12. வஜ்ர கண்டகம்

சேரத் தகாத மங்கையோடு சேரும் ஆடவனையும்,
சேரத் தகாத ஆடவனோடு கூடும் மங்கையையும்,

அடிப்பார்கள் இடைவிடாது சாட்டையினால் இங்கு!
அணைக்கச் செய்வர் காய்ச்சிய இரும்புத் தூணை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#22b. Hells ( 7 - 12)

7. Asipatra Hell

He who transgresses the path of the Vedas in normal times (other than those of great danger) and he who follows other paths, is taken by Yama dootas to Asipatra KAnana and whipped severely.

Not being able to bear the pain he would run about wildly and get pierced by the sharp edged Asi leaves on both his sides. His whole body would be lacerated, he would tumble down at every step and suffer for violating the path of the Vedas.

8. Sookaramukha Hell

The King or ruler who gives punishment not approved by Dharma and he who inflicts physical suffering on a Brahmana is thrown down into the S’ookaramukha Hell.

His body is crushed as sugar cane is crushed to extract the juice. He would then cry aloud bitterly, faint and becomes stupefied.

9. Andhakoopa Hell

He who gets a famous a brahmin murdered or plots and murders brahmins secretly or proves to be not trust worthy get punished for that fault in the Andhakoopa Hell.

There he is tormented by the beasts, birds, deers, reptiles, mosquitoes, bugs, lice, flies and various other pests. There he lives in his ugly body and roams around like a beast.

10. Krimi Bhojanam

The man who does not perform the five MahA YagnAs nor gives the due share of offerings to the Devas but feeds only his own belly, is taken to the Krimi bhojana Naraka for his sinful deeds.

This hell is a huge reservoir of worms. It causes terror to all the inhabitants of the hell. That sinner assumes the form of an insect and is eaten up by the other insects and thus passes his time there.

When a man does not give any share to the Atithis or the guests and does not offer oblations to the Fire and eats his food, he, too, goes to the above hell.

11. Agni KuNdam

When a man earns his livelihood as a thief and robs gold and jewels forcibly from a brahmin or any other person, he is taken to this hell by the Yama’s servants. He is burned in a pit of fire for all his past sins.

12. Vajra Kandakam

A man who cohabits with an unfit woman and a woman who lives with an unfit man are sent to this hell. They are whipped mercilessly and forced to embrace a red hot figure of a woman or man.




 
64 THIRU VILAIYAADALGAL

# 57 (d). சுறாமீன் பிடிபட்டது!

உடும்புப் பிடியைப் போல வலையை, வலைஞன்
விடவே இல்லை ஒரு நொடிப் பொழுதும் கூட!

ஓடி ஓடிக் களைத்து விட்டது சுறாமீன் நந்தி.
தேடிப் பிடித்துக் கரையில் வீசினான் வலைஞன்.

திருமணம் நிகழ்ந்தது அவர்கள் முறைப்படி!
அருமை மணமக்களுக்கு என்ன ஆகிவிட்டது?

உமையும், சிவனும் அன்றோ அவ்விடத்தில்
அமைந்துள்ளனர் புதிய மணமக்களாக!

நந்தி தேவன் ஆயிற்று கொடிய சுறாமீன்.
நந்தியின் மீது காட்சி தந்தனர் மணமக்கள்.

கண்டவர்கள் பெற்றனர் தூய மெய் ஞானம்.
மண்டின பாவங்கள் தொலைந்து போயின.

“உம் பக்திக்கு மெச்சியே தேவி உமையை
உம் வளர்ப்பு மகளாக நாம் ஆக்கினோம்.

அன்புக்கு அடிமை ஆகிய நானும் உம்
அன்பு மருமகன் ஆகி விட்டேன் இன்று.

குபேர சம்பத்தைப் பெற்று மகிழ்வீர்!
அமோக போகங்கள் துய்த்து மகிழ்வீர்!

சிவலோக சாயுஜ்யமும் உங்களுக்காகவே
சிறந்த முறையில் காத்து இருக்கின்றது!”

உத்திர மங்கை என்னும் க்ஷேத்திரத்தை
உமை, நந்தி தேவன், பிற அடியவர்களுடன்

அடைந்தார் பிரான்; அங்கிருந்துகொண்டு
படைத்தார் மீண்டும் வேத விழுப்பொருள் .

சிவன் அடியவர்கள் கற்றுத் தேர்ந்தனர்;
சிவ யோகிகளும் உடன் கற்றுத் தேர்ந்தனர்;

சிவகாமியாகிய உமையுடன், அங்கே, அன்று,
சிவ உபதேசம் பெற்றனர் அறுபதாயிரம் பேர்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

57 (D). THE SHARK IS CAPTURED!


Siva held on to the net with all his might. The shark became
very tired eventually and could swim no more! Siva pulled the shark ashore.


The wedding took place as promised by the king of fisher folks. But where were the newly weds? What had happened to them? Lord Siva and Devi Uma stood there instead of the newly weds!

The shark transformed into Nandhi Devan. The divine couple were now seated on the divine bull. Whoever was present there and saw this rare spectacle gained pure knowledge and pure bliss. All their sins vanished without a trace.


Lord Siva spoke to the chief,” I was pleased with your sincere devotion.That is why I made Uma your daughter. I too became your sin in law.

You will be bestowed with every wealth in the world like Kuberan. You will live a very long life filled with happiness and joy. When your time comes. you will attain saayujya mukthi.”


They all left for the kshethram called Uththira Mangai. Siva again did the upadesam of the sacred and secret meanings of the Vedas.


Siva yogis, devotees as well as Uma Devi listened to it with fervor. On the whole 60,000 persons reaped the benefit of Siva’s upadesam.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#8a. பரீக்ஷித்

காட்டுத் தீயில் வெந்து மடிந்தனர் கானகத்தில்
காந்தாரி, குந்தி, திருதராஷ்ட்டிரன் மூவரும்.

தீர்த்த யாத்திரை சென்றுவிட்டான் சஞ்சயன்!
தீராத துன்பம் தோன்றியது தர்மன் மனத்தில்.

நலிந்தது அவர்கள் வம்சம் மெல்ல மெல்ல;
நாசம் அடைத்தது யாதவ குலம் சாபத்தால்.

பலராமன் துறந்தான் தன் தேஹத்தைத் தானே!
பாணம் தாக்கியது கண்ணனின் திருப் பாதத்தை.

செய்தான் ஈமகிரியை யாதவருக்கு அர்ஜூனன்.
சென்றனர் அனைவரும் துவாரகையை விட்டு.

கொந்தளித்த கடல் விழுங்கியது துவாரகையை;
கோபியர் துன்புற்றனர் கள்வர்களின் கரங்களில்.

அரசனாக்கினான் அநிருத்தன் மகன் வஜ்ரனை;
அர்ஜுனன் திரும்பினான் அஸ்தினாபுரத்துக்கு.

ஆண்டான் தருமன் முப்பத்தாறு ஆண்டுகள்;
அரசன் ஆனான் உத்தரையின் மகன் பரீக்ஷித்.

இமயம் சென்றனர் பாஞ்சாலியுடன் பாண்டவர்;
சமயம் வந்ததும் அடைந்தனர் நற்கதி முறைப்படி.

ஆண்டான் பரீக்ஷித் ராஜ நீதி தவராமல்;
ஆண்டுகள் அறுவது கழிந்தன இவ்வாறு,

வேட்டைக்குச் சென்றான் பரீக்ஷித் – நீர்
வேட்கையும் பசியும் வாட்டி வதைத்தன!

உச்சி வெய்யில் சுட்டெரித்தது – அவன்
எச்சில் கூட வரண்டு விட்டது உஷ்ணத்தில்.

கண்டான் மஹாசந்தரை ஆழ்ந்த நிஷ்டையில்;
“வேண்டும் பருக நீர்” எனப் பதில் கூறவில்லை!

கோபம் வந்தது மௌனம் கண்டு – அஹம்
பாவம் கொண்ட முனிவர் என எண்ணினான்.

விதி செய்த சதியால் விபரீதச் செயல் ஒன்றை
மதியிழந்த மன்னன் அரங்கேற்றினான் அங்கே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#8a. Pareekshith

Dhrutharaashtran, Kaanthaari and Kunthi got burned by the wild fire in the forest. Sanjayan went of a long tour to holy places. Kourava vamsam was dwindling fast.

Yaadhava race got killed by a Brahmin’s curse. Balaraman dropped his mortal body. Krishna succumbed to an arrow hiting his foot.

Arjun performed the last rites to the Yaadavaas and everyone left Dwaarakaa. The sea water swelled up and swallowed Dwaarakaa completely.

The gopis suffered in the hands of the robbers. Vajran – the son of Anirudhdhan was crowned as king by Arjun before returning to Hastinaapuram.

Yudhishtra ruled for thirty six years. He crowned Pareekshith after him. He went to Himalayas along with his brothers and Paanchaali. They gained mukti one after another when their time came.

Pareekshith ruled well and wisely for sixty years. He went on a hunting expedition one day. He grew extremely thirsty and hungry. He saw a sage in deep meditation and asked him for some drinking water. But the sage did not reply not stirred from his meditation.

Pareekshith mistook him to be a proud sage. By the ill fate he got a weird idea and did something which was going to change his life completely.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21c . நரகங்கள் (13 - 18)

13. சான்மலி

வேறுபாடு பாராமல் எல்லா மங்கையரோடும்
நீசத் தனமாகக் குலவுபவர்களின் நரகம் இது.

வஜ்ரகண்டகம் என்ற முட்களால் அவர்களைக்
குத்திக் குத்தித் துன்புறுத்துவர் யம கிங்கரர்கள்.

14. வைதரணி

நீர் மயமானது இந்த வைதரணி நரகம்
நீராக இருப்பவை நாம் அருவருப்பவை!

மலம், மூத்திரம், ரத்தம், சீழ், தலை மயிர்,
எலும்பு, நகம், இறைச்சி, கொழுப்பு இவை.

சாஸ்திர நெறிக்குத் தீங்கு இழைப்பவரைத்
தள்ளுவர் வைதரிணியில் யம கிங்கரர்கள்.

கடிக்கும் இவர்களை நீர் வாழும் கொடிய ஜந்துக்கள்!
துடிப்பர் தாளாத வேதனையால் மாளவும் முடியாமல்!

15. பூயோதம்

ஆசாரம் ஒழுக்கத்தைத் துறந்து விட்டவர்கள் ;
தகாத தாழ்ந்த பெண்ணுடன் கூடிக் குலவுபவர்,

பறவைகள், விலங்குகள் போல வாழ்கின்றவர்;
இரக்கம் இன்றித் தள்ளப் படுவர் பூயோதத்தில்!

நிறைந்திருக்கும் இதில் மலம், மூத்திரம், சீழ், உதிரம்.
அருவருக்கும் இவற்றை உண்பர் இதில் விழுந்தவர் !

16. பிராண ரோதம்

பிராணிகளின் எஜமானன் ஆகிய அந்தணனை;
பிராணிகளைக் குரூரமாக வேட்டையாடுபவனை;

தள்ளுவர் பிராணரோத நரகத்தில் கிங்கரர்கள்
எய்வர் கூரிய அம்புகளை உடல் வருந்துமாறு

17. விசஸனம்

ஆடம்பரத்துக்காக யாகங்களைச் செய்பவர்;
ஆடம்பரத்துக்காகப் பசுக்களைக் கொல்பவர்;

திடமாக அடையும் நரகம் விசஸனம் - இவர்கள்
அடிக்கப் படுவார்கள் கொடூரமான சாட்டையால்

18. லாலாபக்ஷம்

விபரீதக் காமாந்தகன் மனைவியைத் தன்
வீரியத்தைக் குடிக்கும்படி வற்புறுத்தினால்,

இந்திரியக் குண்டதில் தள்ளி விடுவர் அவனை!
அந்த வீரியத்தையே உண்ணச் செய்வர் அவனை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21c. HELLS (13 TO 18)

13. S'almalee Hell

When a man goes to all sorts of wombs for unnatural crimes, he is taken to Vajra KaNtaka Naraka and placed on the top of an iron S’almalee wood.

14. VaitaraNee Hell

When a King or any royal personage follows the unrighteous path and breaks the boundary of a law, he is sent to the Hell VaitaraNee - the ditch surrounding that hell. There the aquatic animals eat his body from all around him! Yet neither his life nor his body leaves him. He is thrown into the river filled with feces, urine, puss, blood, hairs, bones, nails, flesh, marrow and fat and suffers.

15. Booyodam

Those who are the husbands of very young girls under twelve years of age; those who are the husbands of barren women; those who do not care about any S’aucha; those who do not have any shame and those who do not follow one’s natural customs and rites and those who live like the birds and beasts are thrown into this hell. It is filled with feces, urine, sputum, blood and other impurities. When they feel hungry, they are forced to eat the filthy things.

16. PrANa ROdham Hell

Those persons who are twice born but maintain dogs and asses; those who are addicted to hunting; those who kill beasts, birds and deer daily for no reasons, are specially watched by the servants of Yama who tear them asunder by shooting sharp arrows at them.

17. Visasanam Hell

He who kills animals, engaged vainly in a sacrifice and addicted to haughty tempers and habits, is thrown into this hell by the Yama’s servants and whipped very severely.

18. Laalapaksham hell

The twice-born who has weird sexual perversions and forces his wife to do the unnatural acts of love making or copulates blindly with all types of women, is taken by the Yama’s messengers into the hell filled with semen and he is made to drink that.
 
Men and women assume that their sexcapades are secrets - unknown to anyone.

The pancha boothAs witness everything happening everywhere and all the time.

There is no way one can cheat them and keep them in the dark.

Will this info about the types of hell into which man and woman will fall

for sinful acts performed by them deter them from indulging in sex

so madly and so badly at least in the future?
 
64 THIRU VILAIYAADALGAL

58 (a). திருவாதவூரார்.

திருவாதவூர் வைகைக் கரையில்,
திருவிழாக்கள் நிகழும் நகரம்;
விருந்தோம்பலில் சிறந்த இல்லங்கள்;
பெருமை பெற்ற வேத பாடசாலைகள்!

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும்
அழகிய வளமிக்க அமைதியான ஊர்!
அரன் அருளால் அங்கே அவதரித்தார்
அவன் சிறந்த பக்தர் திருவாதவூரார்.

சிறு வயதிலேயே பலவிதப் பயிற்சிகள்;
பெருமை சேர்த்தன பதினாறு வயதில்!
வேத, வேதாகம சாஸ்திரங்களுடன்,
வேத புராணங்களையும் கூடக் கற்றார் .

திறமையை அறியும் அறிஞர் குழாம்
தெரிவித்தது இதை அரிமர்த்தனனுக்கு.
திறமைகளை ஊக்குவிக்கும் மன்னனும்,
அரிய அமைச்சர் பதவியை அளித்தான்.

போர்க்களப் பயிற்சியும் நன்கு உண்டு!
தர்ம சாஸ்திர அறிவும் நிரம்ப உண்டு!
விரைந்து முன்னேற்றம் கண்டவர்
சிறந்த முதல் மந்திரி ஆகி விட்டார்.

அந்நிய நாட்டுடன் நல்லுறவு நிலவ,
அந்நிய நாட்டுடன் வாணிகம் பெருக,
நன்னெறி நிலவியது அந்த ஆட்சியில்!
நற்பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன!

கூர்மையாயிற்று அவர்தம் பகுத்தறிவு!
பார்த்தவற்றை இனம் காண முடிந்தது!
“இம்மை, மறுமை இரண்டுமே தொல்லை!
செம்மையானது அந்தச் சிறந்த மோக்ஷமே!”

மோக்ஷ மார்க்கத்தை ஆராய்ச்சி செய்தார்.
வேத வல்லுனர்களின் கருத்தைக் கேட்டார்.
தெரிந்து கொண்டவை அமைதி தரவில்லை!
செறிந்த சிவபக்தி ஒன்றே அமைதி தந்தது!

குதிரைக்காரன் சொன்னான் அரசனிடம்,
“குதிரைகள் எல்லாம் மாண்டு விட்டன!
எஞ்சியுள்ளவை கிழட்டு குதிரைகள் தாம்!
கொஞ்சம் குதிரைகள் வாங்கவேண்டும்!”

“பொன் பொருள் எடுத்துச் செல்வீர் நீர்!
அன்னிய நாட்டின் அழகிய குதிரைகள்
கடல் துறையில் வந்திறங்கும் போது
படைக்குத் தேவையானதை வாங்குவீர்!”

பொன் பொருள் எடுத்துக் கொண்டார்.
அண்ணல் அருளால் மனம் மாறிவிட்டது!
“பொன் பொருள் எல்லாம் என்னுடைய
அண்ணலுக்கே செலவாக வேண்டும்!”

பக்தியுடன் நீராடினார் குளத்தில்;
சித்தி விநாயகரைத் தொழுது எழுந்தார்.
அன்னையையும் ஐயனையும் வணங்கிப்
பின்னர் ஏறிச் சென்றார் பொற் சிவிகை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

58 (A). THIRUVATHAVOORAAR.

Thiruvaathavoor was situated on the bank of Vaigai river. The city was celebrating festivals round the year. The people were famous for their hospitality.

There were several Veda paatasaalaas there. Cultivation was on full swing. In this and auspicious place one of Siva’s greatest devotees was born.


His name was Thiruvaathavooraar. He learned Vedam, Vedaagamam, puraanam and saasthram. He became well versed by the time he was 16 years old.


A group of wise men were favorable impressed by this young man’s achievements. They advised King Arimardhanan to appoint him as one of his ministers.


The young man knew warfare as well as he did the dharma saasthrass. Soon he was made the chief minister. He maintained friendly relationship with the neighboring countries. Trades were carried on with them. People’s welfare was the prime object of this benevolent rule.


His power of discretion became very sharp. He could now differentiate the 'Sath' from the 'Asath'. He realized that the life in this world as well the one in the next world were riddled with pain and suffering.


The only thing worth striving for is Moksham or Liberation. He consulted the authorities in Vedas. The knowledge he acquired did not make him happy or peaceful. Only the intense bakthi to Siva gave him peace of mind and joy.

The man in charge of the stable, reported to the king,” Sir! Most of the horses are dead. The ones alive are too old to be of any use. We need to buy more horses for our army.”


The king told his minister “Please take enough gold from the treasury for the purchase of new horses. Buy the good ones when the are imported from the other countries!”


The minister took the gold but in his mind he secretly wished that all the gold should be spend on Siva and is devotees. He took a holy dip in the pond and worshiped Siddhi Vinaayaka, Siva and Devi. He set out in his golden palanquin.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

1#8b. சாபமும், தாபமும்

சற்றுத் தொலைவில் கிடந்தது ஒரு செத்த பாம்பு;
சுற்றினான் வில்நுனியால் அதை அவர் கழுத்தில்.

கழுத்தில் சுற்றிய போதும் அசையவில்லை அவர்.
இழுத்தான் பாம்பைப் பற்றி முனிவரைத் தள்ளிவிட.

சலனமே இல்லை முனிவரிடம் அப்போதும்!
சலித்துப் போன பரீக்ஷித் திரும்பினான் நாடு.

வனத்தில் விளையாடிவிட்டு முனிகுமாரன்
தினம் போலத் திரும்பினான் தன் குடிலுக்கு.

கண்டான் தந்தையை ஆழ்ந்த நிஷ்டையில்
கண்டான் தந்தையின் கழுத்தில் பாம்பை!

மாட்டினவன் பரீக்ஷித் என்றார்கள் சிறார்கள்.
'கேட்பதற்கு ஆளில்லையென எண்ணினானா?'

பொங்கிய கோபத்துடன் ஜலத்தை எடுத்துத்
தங்கு தடையின்றிச் சாபமிட்டான் கவிஜாதன்.

“தந்தையின் கழுத்தில் பாம்பைச் சுற்றினவன்
தக்ஷகன் கடித்து இறப்பான் ஏழு நாட்களில்!”

முனிவரின் சீடன் சென்றான் அரசனிடம்;
முனிகுமாரனின் சாபத்தைச் சொன்னான்.

அஞ்சினான் பிரம்ம ரிஷியின் சாபம் கேட்டு
ஆபத்தை நீக்குமா மணி, மந்திர, ஔஷதம்?

அறிவிற் சிறந்தவருடன் செய்தான் ஆலோசனை;
ஒருபோலக் கூறினர் “தடுக்க இயலாது சாபத்தை!”

எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி ஏங்கினான்
“எப்படியாவது தடுக்க முடியுமா வரும் ஆபத்தை?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#8b. The curse and the fear

Pareekshit saw a dead snake lying at some distance. He carefully lifted it with the tip of his bow and put it around the neck of the rushi. The rushi still remained motionless.

The king pulled the snake trying to topple the rushi. Still he sat firmly and did not get disturbed. Pareekshit lost his patience and went back to his country.

KavijAthan the son of the sage was playing with his friends in the forest. He came to his hut as usual but was stunned to see his father in deep meditation with a dead snake around his neck. The other boys told him that it was king Pareekshit who had put the dead snake on his father’s neck.

Anger swelled in the young sage. He took a little water in his hand and laid this terrible curse.”Whosoever put the dead snake on my father’s neck will die bitten by the terrible snake Takshaka in seven days.”

One of the disciples of the rushi ran to the palace to convey the news about the impending curse to the king.

Pareekshit got terrified by this curse and consulted knowledgeable people They said in unison,” The curse cannot be stopped. Neither the use of gems, not mantras nor oushadam can protect the king.” He was deeply distressed now.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21d. நரகங்கள் (19 - 23)

19. சாரமேயாதனம்

வீடுகளுக்குத் தீயிட்டுக் கொளுத்துபவர்கள்;
விஷத்தால் கொல்லுகின்ற கொடியவர்கள்;

கூட்டமாக மக்களைக் கொல்லுகின்ற பாவிகள்;
குட்டிசுவர் ஆகும்படிப் பொறுப்பற்று ஆள்பவர்;

தள்ளப் படுவர் இந்த சாரமேயதன நரகத்தில்;
தள்ளப் படுவர் நாயை உண்ணும் நிலைக்கு!

நாய்களை ஏவிக் கடித்துக் குதறச் செய்வர்;
நாய்களைக் ஏவிக் கடித்துத் தின்னச் செய்வர்!

20. அவீசி

தானமாக ஒரு பொருளைத் தரும் போதும்;
பரிசாக ஒரு பொருளைத் தரும் போதும்;

சாட்சி சொல்லும் போதும் - தன் பெயரையே
மாட்சிமை வாய்ந்ததாக முன் நிறுத்துவோர்

தள்ளப் படுவர் உயரமான மலையிலிருந்து!
தள்ளப் படுவர் அவீசி என்ற இந்த நரகத்தில்!

நீர் நிலை போலத் தோன்றும் இந்த நரகம்;
நீர் கானல் நீர் போன்ற பொய்த் தோற்றமே!

விழுந்து பொடிப் பொடியாக உடைந்தாலும்
விழச் செய்வர் கிங்கரர்கள் மீண்டும் மீண்டும்!

21. பரிபாதனம்

போதை ஊட்டும் பானம் அருந்துபவர்களை - யம
தூதர் குடிக்கச் செய்வர் உருக்கிய இரும்பினை!

22. க்ஷாரகர்தமம்

தன்னைத் தானே உயர்த்திக் கொள்பவனும்;
தவத்தாலும், பிறவியாலும், வர்ணத்தாலும்,

ஆசிரமத்தாலும், ஆசாரத்தாலும் உயர்ந்தவரை
அவமதிக்கின்றவனும் அடைகின்ற நரகம் இது.

தலை கீழாகத் தொங்கிக் கொண்டு - பலத்
தாளாத துயரங்களை அனுபவிப்பர் இங்கு!

23. ரக்ஷோகணம்

நர மேத யாகம் செய்பவர்கள் - மற்றும்
நர மாமிசத்தைப் புசிக்கும் இரு பாலரும்

தள்ளப்படும் நரகம் ரக்ஷோ கணம் ஆகும்!
கொல்லப்படுவர் அவர் மீண்டும் மீண்டும்

முன்பு தங்கள் பலியிட்ட மிருகங்களாலும்,
துன்புறுத்தப்பட்ட அப்பாவி மக்களாலும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 8

8#21d. HELLS ( 19 TO 24)

19. SAramEyAdana Hell

Those who rob; or burn down other people’s houses; or force others to drink poison; or are treacherous by nature; or destroy the interest of other persons, they are sent to the SAramEyAdana hell. There seven hundred and twenty dogs come furiously and with great energy and feed on them.

20 . Aveechi Hell

Person who impelled by sinful selfish motives speaks falsehood at the time of giving evidence and while taking or giving money is sent to this terrible hell Aveechi.

There, from the summit of a high mountain he is dropped down headlong. The solid ground appears like a water body with waves. But it is just a mirage. His body is broken into a thousand pieces but he can't die-since he is already dead.

His punishment gets repeated several times.

21. ApahpAna hell

When a dwija (belonging to one of the first three varNas) drinks the intoxicating drinks he is thrown into this hell. Yama’s servants force him to drink molten iron.

22. KshArakardama Hell

When a person being arrogant with pride due to his self-learning, birth, austerities or VarNa and Aas’rama and does not pay due respect to his superiors, he is thrown into the KshArakardama Hell head long to suffer a tremendous pain there.

23. RakshogaNa hell

When a person performs human sacrifices or eats the human flesh, he is sent to this hell. Those who had been killed by him, attack him like butchers. They eat his flesh, drink is blood and sing and dance as RAkshasA gaNAs so.

24. Soolaprota Hell


Those who kill the innocent people, ignorant people, those who have done no harm at all mercilessly, they are thrown into Soolaprota Naraka and are pierced by S’oolAs.

They are overcome by hunger and thirst. Herons and cranes peck at them with their sharp beaks. Tormented in this manner they remember all their sins done in their previous lives.



 
64 THIRU VILAIYAADALGAL

58b. குரு சிவன்.

# 58 (b). குரு சிவன்.

ஒட்டகங்கள் பொன்னைச் சுமந்தன;
கெட்டிக்கார வீரர்களின் காவலுடன்.
பொற் சிவிகையில் முதன் மந்திரியார்;
காற்படையும் உடன் நடந்து சென்றது.

திருவாதவூராரின் இருவினை ஒப்பையும்,
மலபரிபாகத்தையும் உணர்ந்த சிவ பிரான்,
தானே குருவடிவு எடுத்துச் சென்று அவரைத்
தானே வலிய ஆட்கொள்ள விழைந்தான் !

வேதிய குருவின் திருவடிவம் எடுத்தார்;
போதிக்க மாணவர் குழாம் படைத்தார்;
திருப்பெருந்துறையின் திருக்கோவிலுக்குள்
குருந்த மரத்தின் கீழே குருவாய் அமர்ந்தார்.

கடல் போன்ற சேனையுடன் சென்றவருக்கு
மடை திறந்த இன்பம் மனத்தில் பொங்கியது!
திருப்பெருந்துறையை நெருங்க, நெருங்க,
அருள் ஒளி நிறைந்தது அவர் உள்ளத்தில்.

கரங்கள் குவிந்தன! கண்ணீர் பெருகியது!
பரவசம் அடைந்தார்! பித்தர் போல் ஆனார்!
சிவ தீர்த்தம் ஆடிச் சிவனை தெரிசித்தார்!
சிவகுருவைக் கண்டார் குருந்த மரத்தடியில்!

நானாவித ஒலிகள் நிறைந்து இருந்தன.
நான்கு வேதங்களுடன், ஆகமங்கள்!
சமய சாஸ்திரங்களும் பிறவும் அங்கே
அமைந்து விளங்கின ஏக காலத்தில்.

நால் வகை மார்க்கத்தினர் இருந்தனர்!
நால்வகை மக்களும் குழுமியிருந்தனர்.
ஞானிகள், யோகிகள் மற்றும் துறவிகள்,
மாணவர்கள், அறிஞர்கள் அனைவரும்.

குருந்த மரத்தின் கீழே, மாணவர் நடுவே,
குருவாக அமர்ந்தவரைக் கண்டதுமே,
அன்பு என்னும் கயிற்றால் சிவபிரான்
பின்னிய வலையில் ‘சிக்’கெனச் சிக்கினார்!

அருட்பார்வையால் அகன்றன மும்மலம்;
மருட்டும் பந்த பாசங்கள் தொலைந்தன!
சூட்டப் பெற்றார் திருவடித் தாமரைகள்!
ஊட்டப் பெற்றார் சூக்ஷ்ம பஞ்சாக்ஷரங்கள்!

தன்மயம் ஆனார்; தன் வசம் இழந்தார்!
உண்மை குடி புகுந்துவிட்டது உள்ளத்தில்.
வாக்கில் ஒளி வீசத் தொடங்கியது.
வாக்தேவி நாவில் நடனம் புரிந்தாள்!

தேந்தமிழ்ப் பாடல்கள் பொங்கலாயின.
தெய்வ ஞான ஆசிரியனுக்குச் சூட்டினார்.
ஒளிரும் மாணிக்கச் சொற்களை எடுத்து
மிளிரும் பக்தி எனும் நூலால் தொடுத்தார்.

திருவாதவூரார் முற்றிலும் மாறிவிட்டார்!
திருமாணிக்கவாசகர் ஆக மாறிவிட்டார்.
வந்த வேலையை முற்றிலும் மறந்து - தன்
சொந்த வேலையில் அமிழ்ந்தே போனார்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
64 THIRU VILAIYAADALGAL

58 (B). GURU SIVAN.


The gold was carried by camels and protected by the soldiers.The minister traveled in his palanquin. An army marched along with him.


Siva decided to shower His grace on Thiruvaadaooraar. He wanted to take the first step. He took the form of a Brahmin guru. Many disciples accompanied him. He entered the temple at Thirup Perunthurai and sat under a tree.


As the army marched nearer to that place, the minister started feeling an inexplicable joy in his heart. His palms were joined in anjali mudra.


He attained a state of ecstasy. He quite forgot himself. He took a dip in the Siva theertham and entered the Siva temple. Then his eyes fell on the divine guru seated under a tree surrounded by his disciples.


In that place, there was a fusion of various sounds. Vedas were being chanted. Siva Aagamas and Saasthraas were heard. All sorts of people of all ashrams and ages were there.


When the guru looked at the minister, he got caught in the web of bhakthi spun by Siva with the cords of love. Lord’s glance freed him from the three defects of a jiva. He got freed form all bondage.

He was taught the sookshma panchaaksharam. Siva’s lotus feet were placed on his head.
He forgot himself. The truth he was seeking dawned in his mind. Saraswathi Devi took possession of his tongue.

Divine Tamil poems started pouring out on their own! Songs of praise which he offered to his divine guru. Each word used by him was a gem in itself. He strung them with the thread called his bhakthi.


The minister was now completely transformed. He was now Maanikka Vaasagar Piraan. He forgot his original mission and was deeply immersed in bhakti towards Siva.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 2

2#9a. பிரமத்வரை

புலோமை பிருகு முனிவரின் மனைவி;
புலோமையின் புத்திரர் ஆவார் ச்யவனர்.

சுகன்யை ஒரு மன்னனின் மகள்
சுகன்யை மணந்தாள் ச்யவனரை.

பிரமதர் பிறந்தார் சுகன்யையின் மகனாக;
பிரமதர் மணந்தார் பிரதாபி என்பவளை.

ருரு பிறந்தான் பிரதாபியின் மகனாக
ருரு காதல் கொண்டான் பிரமத்வரை மீது.

மேனகை உறவாடினான் விசுவா வசுவுடன்;
மேனகை ஈன்றாள் ஒரு பெண் குழந்தையை.

தூலகேசர் வளர்த்தார் மேனகை பெண்ணை;
தூலகேசர் பெயரிட்டார் பிரமத்வரை என்று.

பிரமத்வரை மோஹத்தால் துக்கித்தான் ருரு;
பிரமதர் வினவினார் துயரத்தின் காரணம்.

“தூலகேசமுனிவர் பெண்ணுடன் நான்
காலம் எல்லாம் வாழ விரும்புகின்றேன்!”

தூலகேசரை அணுகிப் பேசினார் பிரமதர்.
தூய உள்ளதோடு நிச்சயித்தனர் திருமணம்.

ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
ஏற்பட்டது அங்கு ஒரு விபரீத விபத்து!

முற்றத்தில் உறங்கிக் கொண்டு இருந்தது
சுற்றி மண்டலம் இட்ட ஒரு விஷ நாகம்.

விளையாடிக் கொண்டிருந்த பிரமத்வரை
வினையாகப் பாம்பை மிதித்து விட்டாள்!

மிதித்தாரைக் கடியாத பாம்பும் உண்டோ?
மிதித்தவளைக் கொன்று விட்டது நாகம்!

நேசிக்கும் தூலகேசர் பதறி ஓடி வந்தார்
ஆசிரமவாசிகள் எழுப்பினர் கூக்குரல்!

மணப் பெண் பிணமாகக் கிடந்தததால்
மனம் உடைந்துபோனான் மணமகன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 

Latest posts

Latest ads

Back
Top