• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARAGAVA PURAANAM - PART 2

#43d. தேவாந்தகன் வதம்

வெற்றி, தோல்வி இல்லாமல் நீண்டது போர்,
வெறுப்படைந்தனர் விஷ்ணு, பிரமன், தேவர்.


‘அதிகரிக்கின்றது அசுரனது பராக்கிரமம்,
அழிவு காலம் அவனுக்கு எப்போது வரும்?’


“தேவரீர் பொறுப்பது எதற்கோ அறியோம்!
தேவாந்தகனை அழிக்கவேண்டும் தாங்கள்.”


யுத்த களத்தில் இறங்கினார் மகோற்கடர்,
மெத்தச் சினம் கொண்டான் தேவாந்தகன்.


அசுர உறவினரைக் கொன்ற சிறுவனை
அஸ்திரங்களால் பலவற்றால் அடித்தான்.


தடுத்தார் மகோற்கடர் போரில் அசுரன்
விடுத்த பாணங்களை, பாணங்களால்.


வாயு அஸ்திரம், மற்றும் கருட அஸ்திரம்,
வருண அஸ்திரம், மற்றும் சர்ப்ப அஸ்திரம்,


மோகன அஸ்திரம் தரவில்லை ஒரு பயனும்
தேவாந்தகன் அவற்றைப் போரில் விடுத்தபோது .


பாசுபதாஸ்திரத்தை விடுத்தான் தேவாந்தகன்.
பாசுபதாஸ்திரத்தை விடுத்தார் மகோற்கடர்.


விண்ணிலே மோதிச் சண்டையிட்டபின்னர்
வீணே திரும்பிவிட்டன இரு அஸ்திரங்களும்.


‘கொல்வது அல்லது கொல்லப் படுவது’ என்று
பொல்லாத தேவாந்தகன் முடிவு செய்தான்


தண்டத்தை ஓங்கி ஓடி வந்த அசுரனைத்
தந்தத்தை உடைத்துக் குத்தினார் சிரத்தில்.


ஆயிரம் சுக்கல்கள் ஆகிவிட்டது அவன் சிரம்.
போயிற்று இறையிடம் ஜோதி வடிவில் ஜீவன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#43d. DevAntakan


The war prolonged and went on for a long time with neither victory nor defeat to any of the two sides. VishNu, Brahma and the other DEvA lost their patience.


“The strength of DevAntakan seems to be increasing. When will his atrocities end?” They worried thinking on this line. They told MahOrkadar, ” We do not know why you are delaying or for what you are waiting! You must destroy DevAntakan now!”


MahOrkadar entered the battle field now. DevAntakan blew his top at the sight of the little boy who had managed to kill all his kith and kin so effortlessly.


He shot several powerful asthras on MahOrkadar who nullified them with the proper counter asthrams. VAyu asthram, VaruNa asthram, Garuda asthram, Sarpa asthram and MOhana asthram shot by DevAntakan were all wasted there.


DevAntakan fired the pAsupadAsthram. MahOrkadar did likewise and the two asthrams fought in midair for sometime in vain and went back to their owners.


DevAntakan decided to ‘kill or get killed ‘ by MahOrkadar now. He charged onto MahOrkadar with his daNdam raised and held ready to attack. MahOrkadar broke his tusk and pierced DevAntakan’s head with it and the head exploded into a thousand pieces.


The asuran DevAntakan fell down dead and his Aatma merged with the God MahOrkadar standing in front of him, in the form of a jyothi or illumination.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11b. The names of the 32 auspicious Shakti Devis

The names of the thirty two auspicious Shakti Devis

VidyA, Hree, Pushti, PragnA, SineevAli, Kuhoo, RudrA, ViryA, PrabhA, NandA, PoshaNi, RiddhidA,

SubhA, KAlarAtri, MahArAtri, Bhadra KAIi, Kaparddini, Vikriti, DaNdi, MundiNi, SendukhaNdA,

SikhaNdini, Nisumbha Sumbha mathani, MahishAsura marddini, IndrANi, RudrANi,

SankarArdha sareeriNi, NAri, NArAyaNi, Trisoolini, PAlini, AmbikAHlAdini.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#31b. சும்பாசுரன் வதம் (2)

பூண்டான் கவசமும், போக்கோலமும் – கைக்
கொண்டான் விவித ஆயுதங்களைச் சும்பன்.


சென்றான் சதுரங்க சேனை பின் தொடர்ந்திட
அன்னையும், சக்தியரும் இருந்த இடத்துக்கு.


“விந்தையாக இருக்கின்றது இவள் அழகு!
சிந்தையை மயக்குகின்றது இவள் அழகு!


ஒளிர்கின்றாள் மின்னல் போல் கண்கள் கூசிட,
ஒளிர்கின்றது கரிய மேனியும் கண்கள் கூசிட;


எங்கனம் பொருந்தின இங்கு ஒளியும், இருளும்?
மன்மதன் மயங்குவான்! மயங்க மாட்டாள் இவள்!


மந்திரம், தந்திரம், யந்திரம் பயன் தரா – இந்தச்
சிந்தையைக் கவர்ந்த சுந்தரியைக் கவர்ந்திட.


வசப்படமாட்டாள் சாம, தான, பேதத்துக்கு!
வசப்படுவாளோ இவளை நான் வென்றால்?


ஓடிப் பாதளம் செல்வதும் சரியல்ல – இவளை
நாடிச் சென்று உயிர் விடுவதும் சரியல்ல!


புகழ்ச்சி அடைவேன் போரில் வென்றால்;
இகழ்ச்சி அடைவேன் புறமுதுகிட்டால்!


வருவது வரட்டும்; நடப்பது நடக்கட்டும்;
வீரமரணமோ, வெற்றியோ எதுவாயினும் சரி.”


காமவேதனை கூடியது தேவி எழிலால்;
கடைசியாகக் கவர முயன்றான் தேவியை


தன் இனிய சாதுர்ய வாதத்தினால்,
தன் முயற்சியில் தளராத சும்பாசுரன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#31b. The fall of S’umbAsuran


S’umbAsuran donned his armour and took hold of his powerful weapons. He went along with his army to the place where Devi and the other forms of Shaktis were present.


He got stunned by his first glance at Devi. ‘Her beauty is something very rare. Her beauty is indeed mesmerizing. She shines like a streak of lightning. And yet her hue is very dark. How can both darkness and luster coexist?


Manmathan (Cupid) may get infatuated with her but she will not infatuated even with Manmathan. Mantra, Tantra and Yantra will be of no use to make this lady come round. Nor will she be brought round by sAma or dAna or bedha.


May be if I win over her she will accept me! Running away to PAtAlam is not the right thing to do. Confronting her and getting killed by her in vain will not serve my purpose!


I will gain fame and a good name if I win in this war. I will be ridiculed if I run away to PAtAlam now. Let anything happen – be it a victory or defeat or even death in her hands.’


He wanted to try for one last time to win over Devi’s love and affection with his smart speeches and arguments.




 
BHAARGAVA PURAANAM - PART 2

#43e. திருமணம்

அசுரன் வதம் முடிந்து திரும்பினர் காசி.
அரசன் நிச்சயித்தான் மணமகளைப் பேசி.


மகத நாட்டு இளவரசியைக் காசிராஜன்
மகனுக்கு நிச்சயித்தான் மண மகளாக.


அழைப்புகள் சென்றன தேவர்களுக்கு;
அழைப்புகள் சென்றன முனிவர்களுக்கு;


அழைப்புகள் சென்றன உறவினருக்கு;
அழைப்புகள் சென்றன நண்பர்களுக்கு.


புரோஹிதர் மகோற்கட முனிகுமாரர்;
புனிதத் திருமணத்தை நடத்தினார் நன்கு.


பிரியத்துடன் அளித்தனர் காசிநகர மக்கள்
பிரியாவிடை மகோற்கடர் திரும்பிச் செல்ல.


காசிராஜன் வந்தான் மகோற்கடருடன்,
காசியபர் ஆசிரமத்தை அடையும் வரை.


ஆசி அளித்தார் இறைவன் காசி ராஜனுக்கு,
பூசித்த அன்பர்கள் அனைவருக்கும் அங்கு.


நீண்டகாலம் ஆண்ட காசிராஜன் மகனை
வேண்டினான் அரசுக் கட்டில் ஏறும்படி.


மண்ணுக்கை நீத்ததும் தன் மனைவியுடன்
பொன்னுலகு ஏகினான் பொன்விமானம் ஏறி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#43e. The Wedding


DevAntakan was killed and his atrocities came to an end. Everyone returned to his residing place. KAsi RAjan fixed the princess of Magada as the suitable bride for his son.


Invitations were sent put to the DEvA, the Gods, the rushis, the relatives and the friends of the king of KAsi. MahOrkadar was the prohit and perforned the wedding grandly.


Now it was time for him to go back to his Ashram. All the people bade farewell to him with great affection. KAsi RAjan accompanied him back to the Ashram of Kashypa.


MahOrkadar blessed KAsi RAjan and everyone else besides. The king of KAsi ruled well for a long time. Then he made his son the new king of KAsi. When his time on earth came to an end, he went to swargga in a gold vimAnam along with his wife.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11c. சக்தி கணங்கள் (3)

வஜ்ரப் பிராகாரம்
உள்ளது இதற்கு மேலே​
விளங்கும் பல அழகிய கோபுரங்களோடு.

தாளிடப் பட்டிருக்கும் கதவுகள் அங்கே;
விளங்கும் அனைத்தும் வைரமயமாக!

வசிப்பர் இங்கு தேவியின் பரிஜனங்கள்;
வசிப்பர் இங்கே தேவியின் பாத தாசிகள்.

எந்தியிருப்பர் பான பாத்திரங்கள், மலர்கள்;
ஏந்தியிருப்பர் விசிறிகள், வெண்சாமரங்கள்.

ஏந்தியிருப்பர் தாம்பூலம், சூர்ண வகைகள்;
ஏந்துவர் குங்குமம், சந்தனம், ஆடி, குடை.

தீட்டுவர் ஓவியம் சிலர்; பிடிப்பார் பாதம் சிலர்;
பூட்டுவர் ஆபரணங்கள், செய்வர் அலங்காரம்.

ஆடிப் பாடுவர் அழகிய சிங்காரிகள் இங்கே
அனைத்தையும் துரும்பாக மதிப்பவர்கள்.

கொடியிடை உடையவர், மேகலை அணிபவர்;
அடி வைத்திடும்போது சிலம்பொலி செய்பவர்.

திறமை வாய்ந்தவர் எல்லாத் துறையிலும்;
திரிவர் பிரம்புகளை ஏந்தி உள்ளும், புறமும்.

காவல் செய்வர் வைரப்பிரகார வெளியில்;
ஏவல் செய்வர் இவர் பராசக்திக்கு மட்டுமே.

அனங்க ரூபா, அனங்க மதனா, மதனாதுரா,
புவனவேகா,புவனா பலிகா, சர்வசிசிரா,

அனங்க வேதனா, அனங்க மேகலா ஆவர்
அந்த மின்னற்கொடி அழகியர் எண்மர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

Note:

AnangaroopA, AnangamadanA, MadanAturA, Bhuvanavegâ, BhuvanapAlikA, Sarvasisira, AnangavedanA and AnangamekhalA are these Eight Sakhîs.


12#11c. Shakti GanAs (3)

Next one is the enclosure made of diamonds. Everything lying inside this enclosure is made of diamonds. Devi Bhuvaneswari lives here with her chief attendants.
Each of them has one lakh attendant who are proud of their beauty.

Some of them hold fans in their hands; some others hold cups for drinking water; some others carry betel nuts; some others hold umbrellas; some hold cowries; some hold clothes; some others carry flowers; some hold mirrors; some have saffrons; some collyrium, whereas some others are holding Sindoora.

Some are ready to paint; some to massage her feet; some are eager to make her wear ornaments; some are anxious to put garlands of flowers on her neck.

All of them are skilled in various arts and very young. They care for nothing other than Devi's commands. Each of them is very fair and is adorned with various ornaments. When they walk to and fro with canes and rods in their hands, they look like flashes of lightning.

AnangaroopA, AnangamadanA, MadanAturA, Bhuvanavegâ, BhuvanapAlikA, Sarvasisira, AnangavedanA and AnangamekhalA are these Eight Shaktis.





[TABLE="class: cf FVrZGe"]
[TR]
[/TR]
[/TABLE]

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#31c. சும்பாசுரன் வதம் (3)

“வீரமங்கையே! என் வந்தாய் போர்க்களம்?
வீரம் ஆண்களின் லக்ஷணம் என்றறியாயோ?


மங்கையர் போர்க்களம் வேறு ஒன்று உண்டு;
தங்க உடலுக்கு ஏற்றது அந்தப் போர்க்களம்.


கண்கள் அம்புகள், புருவங்கள் விற்கள்,
காம லீலைகளே சிருங்கார ஆயுதங்கள்;


காமக் கலையில் தேர்ந்த புருஷன் குரு,
கலவி இச்சையே ஏறிச் செல்லும் ரதம்;


மந்த வார்த்தைகள் ஒலிக்கும் முரசு;
சந்தனப் பூச்சுக்களே போர் முயற்சி;


வில், அம்புகளால் விளையாது நன்மை!
சொல்வேன் நான் நன்மை விளைவிப்பதை.


நாணமே பெண்களுக்கு அணிகலன் ஆகும்.
நாணத்தைத் துறப்பது பெண்ணின் தோல்வி.


வில் ஏந்தினால் கெட்டுவிடும் உடல் மென்மை;
தண்டம் ஏந்தினால் கெட்டுவிடும் அன்ன நடை;


இனிமையாகப் பாடவல்ல நீ எழுப்பலாம்
இடியோசை போன்ற குரலை இக்களத்தில்.


யுத்தம் செய்ய இயலேன் உன்னுடன் நான்;
யுத்தம் செய்ய முயல்வேன் இவளுடன் நான்!


தொங்கும் உதடுகள், தொங்கும் வயிறு
அங்க லக்ஷணம் இல்லாத கரிய நிற எதிரி;


கோர உருவமும், கோரைப் பற்களும் கொண்ட
பூனைக் கண் பெண் என் எதிரில் வந்து நின்றால்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

5#31c. The fall of S’umbAsuran (3)


“My dear brave lady! Why did you come to the warfront? Don’t you know that war is the busines of men and not of women. A woman has a different battle field. It is apt for the gentle body of a woman.


In that battle field, eyes are the arrows and eyebrows are the bows. The play of love is the weapon used. The man who is well versed in the art of love is the guru. The desire for love making is the chariot and the sweet nothings uttered is the yuddha berigai (war drum). Smearing of sandal paste is a part of the war of love making.


Wielding the real bow and arrow will not do you any good. I shall tell you what is good for you. Coyness is the ornament of a woman. If she loses it she is already defeated. Using the bow will make your gentle body tough and hardened. Wielding the daNdam will make you lose your swan-like gait.


You can sing sweetly. You can also scream with a deafening noise. I can not fight with you. But may be I can fight with a woman if she has hanging lips, a drooping belly, a terrifying body, a dark hue, hedious canine teeth and feline eyes.”




 
BHAARGAVA PURAANAM - PART 2

#44a. பிரமாசுரன்

பிரமாசுரன் செய்தான் கடும் தவம் – சிவ
பிரான் காட்சி அளித்தார் மனம் மகிழ்ந்து.


“வேண்டும் வரம் கேள்! தருகிறேன்” என
வேண்டினான் விபரீத வரத்தினை அசுரன்.


“எவர் சிரத்தில் என் கரத்தை வைத்தாலும்
அவர் எரிந்து சாம்பலாகி விடவேண்டும்!”


கோரிய வரத்தை அளித்தார் சிவபிரான்
கோரியவன் விரும்பினான் பரீட்சிக்க.


வரம் தந்த சிவபிரான் சிரத்திலே தன்
கரத்தை வைக்க விரைந்தான் அசுரன்.


மாயமாக மறைந்து விட்டார் சிவபிரான்;
ஓயாமல் துரத்தினான் அசுரன் பிரானை.


வரம் தந்த பிரான் அசுரனுக்கு அஞ்சி
சிரம் காக்கத் திரிந்தார் உலகெங்கும்.


மாலவன் அறிந்து கொண்டா
ன் நிகழ்வை.
மாயவன் விழைந்தான் அவனை அழிக்க.


மோகினி வடிவத்தில் மீண்டும் அவ
ன்,
லோகம் மயங்கும் அழகிய பெண்ணாக!


நாணித்தலை குனிவாள் ரதியும் அவள் முன்பு;
பே
ணவில்லை காற்றில் பறந்த மேலாடையை


பிரமாசுரன் முன்பு பயின்றாள் அன்னநடை;
பிரமாசுரன் விழுந்தான் பிரேமைக் கடலில்.


மோகம் கொண்டான்; காம வசப்ப்பட்டான்;
தாபம் கொண்டான்; காம இன்பம் துய்த்திட!


கண்டும் காணாமல் நடந்தாள் மோகினி,
கொண்டான் அசுரன் தாளாத வேதனை.


நெருங்கினான் அவளை விடாமல் துரத்தி.
பெருகிய காதலை உரைத்தான் விரும்பி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#44a. BrammAsuran


BrammAsuran did severe penance and Lord Siva was pleased enough to grant him a boon he wished for. The asuran made a strange request. “The person on whose head I keep my hand must turn into ash!” Siva granted him the boon.


Now the asuran wanted to test the boon by placing his hand on Lord Siva’s head. Siva ran away fast but the asuran would not spare him and started chasing him all over the three worlds. Siva was desperate and no one came to his help.


VishNu rose to the occasion and transformed himself in to Mohini – the most beautiful woman in the world. She walked in dainty steps in the presence of the asuran. He wanted to possess her immediately.


But she pretended as if she was not aware of his presence and let her clothes flutter in the air, revealing her irresistible beauty. The asuran chased her now instead of Lord Siva who became less important! He told her his extensive love for her.





 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11d. சக்தி கணங்கள் (4)

உள்ளது வைடூர்ய பிரகாரம் இதற்கும் அப்பால்;
உள்ளன வைடூர்ய மயமாக அனைத்தும் இங்கே.

உள்ளனர் எட்டு சக்தியர் மண்டலாகாரமாக;
உள்ளனர் எண்மரும் நன்மைகள் புரிவதற்கு.

ப்ராஹ்மி, மஹேஸ்வரி , கௌமாரி, வைஷ்ணவி
வாராஹீ, இந்த்ராணி, சாமுண்டி, மஹாலக்ஷ்மி.

நிற்கும் சித்தமாக, அலங்காரமாக எப்போதும்
தேவர்களின் விமானங்கள், வாஹனங்கள்.

உள்ளது இந்திர நீலப் பிரகாரம் இதற்கும் அப்பால்;
உள்ளன அனைத்தும் இங்கே இந்திர நீல மயமாக!

உள்ளது பதினாறு இதழ் தாமரை ஒன்று இங்கு;
உள்ளது தாமரையின் ஒளி சுதர்சனத்தை நிகர்த்து!

உள்ளன தாமரையில் விசால ஷோடச கோணங்கள்
cleardot.gif

உள்ளன பதினாறு சக்தியர் க்ருஹங்கள் இதன் மேல்

கராளீ, விகாராளீ, உமா , சரஸ்வதி
ஸ்ரீ, துர்கா, உஷா, லக்ஷ்மி மற்றும்

ஸ்ருதி, ஸ்மிருதி, த்ரிதி, ஸ்ரத்தா,
மேதா, மதி, காந்தி, ஆர்யா ஆவர்.

நீருண்டமேகம் நிகர்த்த நிறம் கொண்ட
கருநிற அழகியர் ஆவர் இத் தேவியர்.

ஏந்திதியுள்ளனர் சக்தியர் கைவாள், கேடயம்,
ஏற்பட்டுள்ளனர் தேவியின் சேனாதிபதிகளாக.

எஜமானிகள் ஆவர் பிரம்மாண்டங்களுக்கு;
நிஜ ஆற்றலை அளவிட முடியாது எவரும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11d. Shakti GanAs (4)

The thirteenth enclosure wall is made of Vaidoorya MaNi. It has entrance gates and doorways on the four sides. Everything inside this enclosure is made up of VaidooryaMaNi.


Eight MahA shaktis live here in a cirlcular arrangement. They are BrAhmi, MahEswari, KaumAri, VaishNavi, VArAhi, IndrANi, ChAmuNdA and MahAlakshmi. They do good to the Universe and reside here with their own VAhanas and weapons. All the vAhanAs are fully equipped and arranged in due order.

Next is the fourteenth enclosure wall built of Indra Neela MaNi. Everything inside this enclosure is made up of Indra Neela MaNi. A lotus with sixteen petals shines here like a second Sudarsana Chakram.

On these sixteen petals reside the sixteen Shaktis with their hosts. They are
KarAli, VikArAli, UmA, Sarasvati, Sree, DurgA, UshA, Lakshmi, Sruti, Smriti, Dhriti, SraddhA, MedhA, Mati, KAnti, and AryA. These are the 16 Saktis.

They are dark blue in colour as the fresh rain-cloud. They wield axes and shields in their hands. They are very eager to fight. Their true strength and greatness defy expression.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5
5#31d. சும்பாசுரன் வதம் (4)

புலம்பினான் காமவசப்பட்ட சும்பாசுரன்;
கலங்கினான் போர்புரியத் துணிவில்லாமல்.


“போர் புரிவாய் சாமுண்டி, காளியருடன்!
போர் புரிய மனம் துணியும் அல்லவா?


கோர ரூபமும், கரிய நிறமும் கொண்டவர்கள்;
போர் புரியத் தகுந்தவர்கள் உன் கருத்துப் படி.


காளி! கோர வடிவம் கொண்ட கரியவளே!
சளைக்காமல் போர் புரிவாய் சும்பனுடன்.”


பாய்ந்தாள் கதையுடன் சும்பன் மீது காளி;
பயங்கர யுத்தம் தொடங்கித் தொடர்ந்தது.


நொறுக்கினாள் காளி சும்பனின் ரதத்தை;
நொறுக்கினாள் காளி சாரதியை, கழுதைகளை.


அடித்தான் காளியின் மார்பில் சும்பன்;
ஒடித்தாள் காளி சும்பன் இடக் கரத்தை!


எஞ்சிய கரத்தால் தாக்கினான் காளியை;
மிஞ்சிய கரத்தையும் துணித்தாள் காளி.


போரிட்டான் சும்பன் கால்களால் உதைத்து;
வேறாகின கால்களும் அவன் உடலிலிருந்து.


போரிட்டான் சும்பாசுரன் தலையினால்;
தலையையும் தனியாக்கி விட்டாள் காளி!


கிடந்தது உடல் மலைக் குன்று போல்!
ஒலித்தது வாழ்த்து தேவர்கள் குரலில்!


வீசியது சுகமான மந்தமாருதம் அங்கு.
விரவியது நிம்மதியான சூழ்நிலை அங்கு.


எழுந்தது ஹோம அக்னி வலம் சுழித்து.
விழுந்தனர் தேவியின் பாதங்களில் அசுரர்.


அபயம் அளித்தாள் தேவி அசுரர்களுக்கு;
வினயம் மிகுந்திடச் சென்றனர் பாதாளம்.


நூற்பயன்


திவ்வியமான இந்தக் கதை, கேட்பவருக்கு
செவ்விய வாழ்வின் பயனை அளித்திடும்.


புண்ணியம் அடைவர் படிப்பவர், கேட்பவர்;
பண்ணிய பாவங்கள் தொலைத்து போய்விடும்.


அடைவர் செல்வத்தை வறிய பக்தர்கள்;
அடைவர் மக்கட் செல்வத்தை மலடிகள்;


விடுபடுவர் சகல சத்ரு உபாதையிலிருந்து;
விடுபடுவர் சகல உடல் உபாதையிலிருந்து.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#31d. The fall of S’umbAsuran (4)


S’umbAsuran was infatuated with Devi and was unable to fight with her. Devi said now,” You won’t mind fighting with KAli and ChAmuNdi instead of me I am sure. They are dark hued and have a terrifying appearance as you had asked for. Oh KAli! Fight with S’umbAsuran on my behalf!”


KAli pounced on S’umbAsuran with her mace. A terrific war ensued. Kali shattered the chariot of S’umbAsuran and killed his charioteer and the animals pulling the chariot.


S’umbAsuran hit her hard on her chest. KAli cut off his left hand. S’umbAsuran hit her with his right hand now. KAli cut off his right hand also. S’umbAsuran fought with his powerful legs. KAli severed his legs from his body.


Now S’umbAsuran attacked her with his head. KAli cut off his head also promptly. His dead body resembled a mountain of flesh. The Devas sang Devi’s praise.


A cool breeze blew soothingly. All the eight directions became peaceful and very pleasant.The agni (fire) from the homa kundam rose circling to its right side. The remaining asuras fell at Devi’s feet. She gave them abhayam and spared them alive. They were grateful to Devi for sparing them alive and returned to PAtAlam.


Phala sruti:


Those who listen to this auspicious story will gain all the benefits they wish for. The reader as well as the listener will earn good karma and merits. Their previous bad karma will get nullified.

The poor devotees will acquire wealth, the devotees without offfspring will beget good children. Everyone will be liberated from the fear of enemies and their other bodily afflictions.


 
BHAARGAVA PURAANAM - PART 2

#44b. பிரமாசுரன்

“அழகிய பெண்ணே! யார் நீ எனக் கூறு!
அப்சரஸா நீ ? அன்றி தேவ மங்கையா?


கண்டதில்லை உன்போல அழகியை நான்;
கொண்டதில்லை இதுபோல ஒரு வேதனை.


அஞ்சும் மூவுலகும் என்னைக் கண்டவுடன்
கொஞ்சும் மூவுலகும் உன்னைக் கண்டதும்.


மெல்ல மெல்ல மோகினி மயக்க – நேரம்
செல்லச் செல்லத் தன் வயம் இழந்தான்.


“அறிவேன் நான் உங்கள் பெருமைகளை;
அறிந்ததால் நான் நாடிவந்தேன் உங்களை!


கண்டவர் அஞ்சி வணங்குவர் என்னையும்;
கொண்டாடும் மூவுலகும் இனி என்னையும்.


கொள்கை வைத்துள்ளேன் நெடுநாட்களாக
வெல்ல வேண்டும் என்னை நீர் நடனத்தில்.


நடன மாதாகிய நான் மணக்க விரும்புவது
நடனத்தில் என்னை வெல்லும் ஒருவரை.”


அசுரன் தயாரானான் நடனப் போட்டிக்கு.
அசுரன் அபினயித்தான் மோகினி போல்.


வேகம் கூடியது நாட்டியப போட்டியில்;
மோகினி ஆடினாள் பம்பரமாகச் சுழன்று.


தாளம், பாவம் அபிநயம் முத்திரை,
மாளாது சொல்லி அற்புத நடனத்தை!


கரத்தைச் சிரத்தில் வைத்தாள் மோகினி
வரத்தை மறந்து வைத்தான் அசுரனும்.


கரம் சிரத்தின் மேல் பட்டதும் சிவன் தந்த
வரம் வேலை செய்தது; சாம்பலானான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#44b. Mohini


“Oh pretty damsel! Tell who you are! Are you an Apsaras? Are you a DEva kanya? I have never before laid my eyes on anyone as beautiful as you. I have never suffered the pangs of love as I do now. All the three worlds are afraid of me. If you become mine, all the three worlds will adore your beauty.”


Mohini dillydallied him so that he went deeper and deeper in into lust. “I know your greatness. That is why I had come looking for you. But I have one principle which I have cherished for a very long time. I will marry only a person who can defeat me in a dance competition. I am a dancer and I want to marry a better dancer than I am.”


The asuran agreed to the condition eagerly. Mohini started dancing. The asuran copied her movements exactly. Slowly the tempo of the dance increased and their involvement in the dance became total.


Mohini held her hand above her head. Asuran forgot all about the boon he had got with so much difficulty and placed his hand on his own head. And that brought about the sudden and sad end of the asuran as a result of his own rare boon!



 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11e. சக்தி கணங்கள் (5)

உள்ளது முத்துப் பிரகாரம் அதற்கும் அப்பால்;
உள்ளன இங்கு அனைத்தும் முத்து மயமாக;

உள்ளது இதன் நடுவே எட்டு இதழ்த் தாமரை;
உள்ளது தாமரை முத்துக்கள், கேசரங்களுடன்.

உள்ளனர் சக்தியர் தேவியை நிகர்த்த
எழிலுடன்;
உள்ளனர் சக்தியர் தேவியின்
பல ஆயுதங்களுடன்.

உள்ளனர் ஜகத்தின் செய்திகளைச் சொல்பவராக;
உள்ளனர் தேவியின் போகம் அடைபவர்களாக.

குறிப்பால் அறிவர் மனோ பாவத்தை இவர்கள்;
அறிவர் தேவியின் அபிப்பிராயத்தை இவர்கள்.

பெற்றுள்ளனர் சிறந்த எழிலும் சிவப்பு நிறமும்,
மற்றும் ஜீவரின் எண்ணங்களை அறியும் சக்தி.

மந்திரிணிகள் ஆவர் இவர்கள் தேவிக்கு - இங்கு
மகிழ்வுடன் வசிப்பர் அந்தத் தாமரை மலர் மேல்

அனங்க குஸுமா, அனங்க குஸூமாதுரா
அனங்க மதனா, அனங்க மதனதுரா ,

புவனா பாலா, ககன வேகா மற்றும்
சசி ரேகா, ககனரேகா என்னும் எண்மர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

Note:

The names of these eight Sakhis are

AnangakusumA, AnangakusumAturA, AnangamadanA, AnangamadanAturA,
BhuvanapAlA, GaganavegA, SasirekhA, and GaganarekhA.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11e. Shakti GanAs (5)


The fifteenth enclosure is made up of pearls. Everything inside the enclosure is completely made up of pearls. Within this enclosure there is a lotus with eight petals, made of pearls. On these eight petals, eight Saktis reside. They are the main advisers and ministers of the Devi.

Their appearance, weapons, dresses, enjoyments are exactly similar to those of Devi herself. Their main duty is to inform the Devi of the happenings in the various Universes.

They are skilled in all sciences and arts and excel in every action. They can read Devi's mind and do what she wants to be done - without being told. They learn the happenings in the Universes by their GnAna shakti.

The names of those eight Saktis are AnangakusumA, AnangakusumAturA, AnangamadanA, Ananga madanAturA, BhuvanapAlA, GaganavegA, SasirekhA, and GaganarekhA.

They are the color of the Rising Sun! They hold a noose, a goad, and signs of granting boons and Fearlessness in their four hands . At every instant they inform Devi of all the events of the BrahmANda.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#32a. சுரத மன்னன்

“சண்டிகையின் பெருமைகளை உள்ளபடி
விண்டீர் வியாச மஹாமுனிவரே நீங்கள்!

சண்டிகையைப் பூஜித்தவர் யார் யார் யார்?
உண்டான பயன்கள் என்ன எனக் கூறுவீர்!”

“ஜனமேஜய மன்னா! கூறுவேன் கேள் நீயும்
மனம் ஒன்றித் தேவி வழிபாட்டின் மகிமையை.

சுவரோசிஷாந்தரம் நாட்டை முன்னாளில்
சுரதன் என்ற தர்மசீல மன்னன் ஆண்டான்.

கொண்டிருந்தான் அளவற்ற குருபக்தி – மேலும்
கொண்டிருந்தான் குடிமக்கள் நலனைக் கருத்தில்.

பலம் பெற்றுவிட்டனர் அவன் காலத்தில்
மலைகளில் வாழ்ந்திருந்த மிலேச்சர்கள்.

முற்றுகை இட்டனர் அவன் நாட்டை – கைப்
பற்ற எண்ணினர் அவன் ராஜ்ஜியத்தை

படை எடுத்து வந்தனர் சுரதன் மீது – நாற்
படை கொண்டு போரிட்டான் சுரதமன்னன்

விதிவசமாக வென்றுவிட்டனர் மிலேச்சர்கள்;
மதிமந்திரிகள் மாறிவிட்டனர் பகைவர் பக்ஷம்!

சிந்தித்தான் சுரதமன்னன் நொந்த மனத்துடன்,
‘இந்த நாட்டில் இல்லை எனக்கு ஆப்தர்கள்!

காத்திருக்கலாம் காலம் கனியும் வரையில்;
போர் தொடுக்கலாம் காலத்தைக் கருதாமல்!

நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்கள் இல்லை;
நம்பிக்கைத் துரோகிகள் பெறுவார் பரிசுகள்.

பிடித்துக் கொடுத்து விடுவர் பகைவரிடம்
அடுத்து கெடுக்கும் குணம் உடையவர்கள்.’

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#32a. King Suratha

King Janamejayan told sage VyAsa,”You are expatiating on the greatness of Devi in the most captivating manner. Kindly tell me now who were the people who worshiped Devi and what were the benefits they received from her”


Sage VyAsa continued expatiating on the greatness of Devi,” King Suratha ruled over SwarochishAntaram. He was kind and just and had intense guru bhakti. The welfare of his citizens was the top most thing on his mind.


The wicked people living on the mountains became very powerful during his reign. They laid a siege, tried to attack king Surata and capture his country. King Surata fought bravely but could not defeat the powerful enemies.


All his loyal ministers shifted their loyalty to the new ruler. King Surata realized that there no one whom he could trust now. The betrayers and traitors would be richly rewarded by the enemies. So he decided to wait for a more favorable time to overthrow the new rulers who were his staunch enemies.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#44c. துராசதன்

வஞ்சகமாகப் பிரமாசுரன் கொல்லப்பட்டதை,
வஞ்சம் தீர்க்க எண்ணினான் மகன் துராசதன்.


சுக்கிராசாரியாரிடம் சென்றான் அவன் நேராக,
“அக்கிரமாகக் கொன்று விட்டனர் தந்தையை!


உபாயம் ஒன்றினைக் கூறுங்கள் குலகுருவே!
அபாயம் வரச் செய்வது எப்படி தேவர்களுக்கு?”


பஞ்சாக்ஷரத்தை நன்கு உபதேசித்தார் குலகுரு.
பிஞ்சு மதியணி பிரானைத துதிக்கச் சொன்னார்.


ஐம்புலன்களையும் அடக்கி, ஐந்தெழுத்தை ஓதிட,
சம்பு தோன்றினார், வரங்களையும் அருளினார்!


தேவர்களால் அழிவின்மை; நீண்ட ஆயுளுடன்;
மூவுலகங்களின் ஆளுமையைக் கோரிப்பெற்றான்.


வல்லவன் பின்னால் செல்வதற்கு வருவார்கள்
அல்லல் தீர்ந்து அமைதியாக வாழ விரும்புபவர்.


வந்து கூடினர் அரக்கர்கள் அசுரன் துராசதனிடம்,
வல்லமை பெருகத் தொடங்கியது மேன்மேலும்.

முகுந்தம் ஆனது அவனது அழகிய தலை நகர்
மூவுலகும் அவன் குடைக் கீழ் வந்து விட்டன


அசுரனின் வருகையை அறிந்ததால் இந்திரன்
அமராவதியை விட்டுச் சென்று விட்டான் காசி.


பிரமனும், நாரணனும் அவனை எதிர்க்காமல்
பிரானிடம் சென்று சரண் புகுந்தனர் காசியில் .


சகல தேவர்களும் கூடி இருந்தனர் காசியில்;
சகல லோகங்களையுன் வென்றான் துராசதன்.


காசிக்குச் சென்றான் தேவர்களைத் துன்புறுத்த;
ஈசன் சென்றுவிட்டார் தேவர்களுடன் கேதாரம்!


நடத்தினான் ஆட்சி காசியில் இருந்து கொண்டு;
முடக்கினான் யாக, யக்ஞங்களை முற்றிலுமாக.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#44c. DurAsadan

BrammAsuran’s son DurAsadan got angry that his father was killed by treachery. He wanted to avenge his father’s death. He went to his kulaguru SukrAchArya and asked him, “My father was killed by VishNu treacherously. Please tell me how I can inflict pain and sufferings on the DEvA?”


SukrAchArya taught him panchAkshara and told him to meditate on Lord Siva. DurAsadan meditated on Lord Siva controlling his five sense organs and chanting the panchAkshara. Lord Siva was very pleased and appeared before him to grant boons.


DurAsadan got the boons that he could not be destroyed by the DEvA, he would live for a very long time and rule all the three worlds.


All the asurA came and joined hands with him. Slowly his power increased. Mukundam became his capital city and he invaded the heavens. On hearing about the arrival of DurAsadan, Indra left AmarAvati and went to KAsi.


VishNu and Brahma also left their abodes and went to KAsi. All the DEvA were in KAsi. DurAsadan wanted to trouble them and went to KAsi. But Siva along with all the DEvA had gone off to KEdAra kshetram by that time.


However DurAsadan continued to live in KAsi and rule from there. He stopped the performance of all the yAgA and yagna completely.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11f. சக்தி கணங்கள் (6)

உள்ளது மரகதப் பிரகாரம் அதற்கும் அப்பால்;
உள்ளன மரகத மயமாக இங்கு அனைத்துமே.

உள்ளது ஒரு ஷட் கோணம் இங்கே - அதில்
உள்ளார் பூர்வ கோணத்தில் பிரம்ம தேவன்.

உள்ளார் காயத்ரியுடன், அக்ஷ மாலையுடன்,
உள்ளார் குண்டிகையுடன், தண்டாயுதத்துடன்.

துலங்கும் மூர்த்திகளின் வடிவம் எடுத்து ஸ்மிருதிகள்,
சாஸ்திரங்கள், மந்திரங்கள், இதிஹாஸ, புராணங்கள்.

உள்ளார் நிருதி கோணத்தில் விஷ்ணு மூர்த்தி;
உள்ளார் சங்கு, சக்கரம், தாமரை, கதை ஏந்தி.

உள்ளார் தம் பெருமை, மேன்மைகள் தோன்ற;
உள்ளார் தஸ அவதாரங்களோடு கூடியவராக.

உள்ளார் வாயு கோணத்தில் ருத்திர மூர்த்தி
பரசு, அக்ஷ மாலை, அபயம், வரதங்களுடன்.

இருப்பாள் சரஸ்வதி தேவியும் இங்கே;
இருக்கும் ருத்திர வேதங்களும் இங்கே.

வடிவெடுத்திருக்கும் இருபத்தெட்டு ஆகமங்கள்;
வடிவெடுத்திருக்கும் மற்றுமுள்ள ஆகமங்களும்.

உள்ளான் அக்னியின் கோணத்தில் குபேரன்;
உள்ளான் ரத்ன கும்பம், மணிக் கரண்டி ஏந்தி.

உள்ளான் மஹாலக்ஷ்மியோடும், கணங்களோடும்;
உள்ளான் தேவியின் நிதிகளுக்கு ஒரு அதிபதியாக.

உள்ளான் மேற்குக் கோணத்தில் மன்மதன்;
உள்ளான் தன் நாயகி அழகி ரதிதேவியுடன்.

உள்ளான் பாச, அங்குச, தனுஸு, பாணம் ஏந்தி;
உள்ளன சிருங்கார ரசங்கள் வடிவெடுத்து அங்கு.

உள்ளார் ஈசான கோணத்தில் விநாயகர்,
உள்ளார் பாசாங்குசதாரியாகப் புஷ்டியாக.

உள்ளன அவர் பெற்ற ஐஸ்வர்யங்கள் அங்கே;
உள்ளன அவர் பெற்றுள்ள விபூதிகள் அங்கே.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11f. Shakti GaNAs (6)

Next is the sixteenth enclosure wall made of Emerald or Marakata. Everything inside this enclosure is made up of Marakata MaNi. This region has all the excellent objects for enjoyments.

There is a Yantra in a hexagonal shape. A DevatA resides in each of the six corners. BrahmA and GAyatree Devi resides on the eastern cornerof this Yantra.

BrahmA holds his KamaNdalu, his rosary, his dandAyudam and the abhya hastam. GAyatree Devi is also decorated similarly.

VedAs, Smritis and PunrANAs assume physical forms and reside here. All the avatars of BrahmA, GAyatree and VyAhrutis live here.

On the south-west corner resides MahA VishNu holding on to his Conch shell, club, discus and lotus. SAvitri Devi also lives here. All the various avatars of Vishnu and SAvitree are also there.

On the north western corner reside MahA Rudra and Sarasvati Devi. Both of them hold Paras’u, rosary, signs of granting boons and fearlessness in their four hands.

All the different AvatAras of Rudra and PArvati Devi live here. The sixty four main AgamAs and the various tantras live here with their respective physical forms.

On the south-eastern corner lives Kubara the Lord of wealth holding a jar or jewels and gems. MahA Lakshmi also lives here.
On the western corner live KAma DevA and Rati Devi. Madana holds a noose, a goad, a bow and arrows. All his retinue and attendants live here, incarnate in their forms.

On the north-eastern corner lives GaNesA - the Remover of all obstacles, holding a noose and a goad and with his Pushti Devi. All his glories and vibhootis also live here.

These six DevatAs are the cosmic integral form of the various Devatas in all the other brahmANdAs. They all worship Devi from their respective regions.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#32b. சுமேதஸ் முனிவர்

பேராசை பிடித்தவர்கள் – சிந்தியாமல்
யாரையும் பலிகடா ஆக்கி விடுவார்கள்!’


தன்னந் தனியனாக குதிரை மேல் அமர்ந்து
முன்னம் சென்றிராத ஆசிரமம் சென்றான்.


முனிவர் சுமேதஸின் ஆசிரமம் இருந்தது
மூன்று காத தூரத்தில் அவன் நாட்டிலிருந்து.


பூத்துக் குலுங்கின மரம், செடி, கொடிகள்;
காற்றில் ஒலித்தன பறவைகளின் பாடல்கள்.


கொஞ்சி விளையாடிய இயற்கையின் எழில்
விஞ்சியது விரவிய ஆழ்ந்த அமைதியில்!


கேட்டது சீடர்கள் வேதம் ஓதும் நாதம்!
கட்டினான் குதிரையை; நடந்தான் சுரதன்.


சால மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார் – மான்
தோலின்மீது குரு மஹான் சுமேதஸ் முனிவர்.


சாந்த பாவமும், தவத்தின் தேஜசும் கலந்து
காந்தம் போல இழுத்தது சுரத மன்னனை!


கால்களில் விழுந்தான் சுரத மன்னன் – அவர்
கால்களைக் கழுவினான் கண்ணீர் அருவியால்.


மனம் உருகிவிட்டது மாமுனிவருக்கு – அவனை
இனம் கண்டு கொண்டார் ஓர் அரசன் என்று.


“நாடாள வேண்டிய மன்னன் தனியே
காடாள வந்த காரணம் கூற வேண்டும்!”


“தவ சிலரே! இழந்து விட்டேன் என் நாட்டை!
இழந்தேன் அரசை! பிரிந்தேன் குடும்பத்தை!


ஓடி வந்துவிட்டேன் சத்ரு பயத்தால் – உம்மை
நாடி வந்து விட்டேன் நீர் அபயம் அளிப்பீர் !”


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K. ராமன்


5#22b. Sage Sumedas


‘The courtiers are always greedy. They may betray me to the enemy for a fat purse!’ King Surata mounted on his loyal steed and made haste towards the ashram of sage Sumedas, which was close to his country and which he had never before visited even once.


Nature shone in her great splendor and full glory there. All the creepers, trees, plants and bushes were laden with flowers and fruits. The birds’ songs merged into a sweet jargon. The distant chanting of the Veda by the disciples of the sage was refreshing to hear.


Surata tied his horse and walked towards the ashram. Guru mahAn Sumedas was seated under a sAla tree on a deer skin. The calm composure of the sage and the brilliance due to the penance done by him shining on his face, attracted king Surata as a magnet does an iron piece. He fell at the feet of the sage and washed them with his tears now flowing copiously.


The heart of the kind sage melted at this sight. He knew that the man at his feet was a good king and spoke to him, “Please tell me why a king who must be busy ruling his country has come to the forest all alone in tears”


King Surata spoke to him now,”Oh venerable sage! I lost my country, my ruler ship and had to desert my family due to the fear of my enemies. Kindly bless me with abhayam (fearlessness) here!”



 
BHAARGAVA PURAANAM - PART 2

#44d. வக்ர துண்டர்

தேவர்களின் உணவு யாகங்களின் ஹவிசு.
தேவர் வாடினர் அவிர்பாகம் கிடைக்காமல்


பிரமனிடம் கேட்டனர், “விடிவு காலம் எப்போது?”
பிரமன் கூறினான் அவர்களுக்கு நற் செய்தியை,


“பார்வதி தேவியிடம் தோன்றுவார் விநாயகர்;
பாரில் துன்பம்தீர அழிப்பார் துராசதனை!” என .


துதித்தனர் தேவியை ஒன்று கூடித் தேவர்கள்;
மதித்துக் காட்சி தந்தாள் அன்புடன் பார்வதியும்.


“பதுங்கியுள்ளோம் அசுரனுக்கு அஞ்சி இங்கு!
ஒதுங்கியுள்ளோம் எங்கள் இடங்களில் இருந்து!


வதங்குகின்றோம் வாடி அவிர் பாகம் இன்றி;
வதைக்கிறான் யாக, யக்ஞங்கள் புரிபவரை1


முனிவர்களையும் விட்டு வைக்கவில்லை;
கனிவுடன் காத்தருள்! தேவி நீயே துணை!”


அன்பர்களின் துன்பங்களைக் கேட்டதும்
அன்னையின் மனதில் பெருகியது கோபம்.


அப்போது அவதரித்தார் விநாயக பெருமான்
அவள் திருமுகத்திலிருந்து வக்ரதுண்டராக!


திருமுகங்கள் ஐந்து; திருக்கரங்கள் பத்து;
திருவுள்ளம் மகிழ்ந்து வாரி அணைத்தாள்.


அளித்தாள் தன் சிம்ஹத்தை வாகனமாக;
களித்தனர் தேவர்கள் திரு அவதாரம் கண்டு.


“அபயம் அபயம் பிரானே நீர் எமக்கு!” என
அபயம் அளித்தார் வக்ரதுண்டர் மகிழ்ந்து


சதுரங்க சேனையுடன் சென்றார் போருக்கு!
எதிர் நோக்கிக் காத்திருந்தது அசுரனின் படை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#44d. VakrathuNdar


DEvA live on the Havis offered in the yAgA and yagnas. When these two came to a grinding halt, the DEvA did not get any food. They went to Brahma and asked him, “When will we get freed from this state of affairs?”


Brahma told them a good news. “VinAyaka will appear from PArvati Devi very soon to kill DurAsadan.” All the DEvA meditated and prayed to PArvati and she appeared to them in person.


The DEvA related their suffering to DEvi. “We are hiding here fearing DurAsadan. We have left the heaven and all our comforts there. DurAsadan has stopped all the yAgAs and yagnas. So we are starving. He does not spare even the rushis and sages. DEvi! you are the one who can save us now! Abhayam! Abhayam!”


DEvi’s heart melted on hearing the sufferings of the DEvA. Anger swelled in her heart and VinAyaka appeared from her face as VakrathuNdar. He had five beautiful faces and ten mighty arms. Devi was happy to see her son and embraced him.


She presented him with her Simha vAhanam. The DEvA were delighted to have witnessed the avatar of VakrathuNdar. They prayed to him seeking abhayam. VakrathuNdar went to the war front with his chathuranga sena. The army of the asuran was waiting there in all readiness.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#11g. சக்தி கணங்கள் (7)

உள்ளது பவளப் பிரகாரம் இதற்கும் அப்பால்;
உள்ளன பவள மயமாக அனைத்தும் இங்கு.

உள்ளனர் பஞ்ச பூதங்களின் அதிபதிகள் இங்கு;
உள்ளனர் ஐந்து சக்தி தேவியர்கள் இங்கே.

பூண்டவர் இவர்கள் சர்வாபரணங்களையும்;
கொண்டவர் பஞ்ச பூதங்களின் காந்தியையும்.

ஹ்ருல்லேகா, ககனா, ரக்தா, கராளிகா
மஹோச்சுஷ்மா ஆவர் அந்த ஐந்து சக்தியர்.

உள்ளது நவரத்னப் பிரகாரம் அதற்கும் அப்பால்;
உள்ளன நவரத்ன மயமாகவே இங்கு அனைத்தும்;

உள்ளன தேவிக்குரிய மந்திரங்கள் இங்கு;
உள்ளன தேவிக்குரிய மஹா வித்தைகள்.

உள்ளன தேவிக்குரிய மஹா வேதங்கள்;
உள்ளன தேவிக்குரிய ஆவரண தேவதைகள்.

உள்ளன சப்த கோடி மந்திரங்கள் இங்கே;
உள்ளன மஹா கோடி மந்திரங்கள் இங்கே.

உள்ளது சிந்தாமணி க்ருஹம் இதற்கும் அப்பால்;
உள்ளன சிந்தாமணி மயமாக இங்கு அனைத்தும்.

தெரியாது உள்ளே உள்ள பொருட்கள் வெளியே
உருவானது சூரியகாந்த, சந்திரகாந்தக் கற்களால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


12# 11g. ShaktiGaNAs (7)

The seventeenth enclosure wall is made of PrabAla or Coral. It is as red as saffron and everything lying within this enclosure is made up of Coral.

HrillekhA, GaganA, RaktA, KarAlikA, and MahochchushmA reside here. They are the Goddesses of the Pancha bhootAs or the five elements.

The color and lustre of every Shakti resemble those of the element over which she presides. All of Shaktis are proud of their youth and hold in their four hands noose, goad and signs granting boons and Fearlessness. They too are dressed and adorned simlar to Sree Devi.

The eighteenth enclosure wall built of Navaratna or the nine precious gems. This enclosure wall is far superior to and higher than the previous enclosing walls. Everything inside this enclosure is made up of the nine gems.

The ten MahA VidyAs and their AvatAras all dwell here with their respective AavaraNas, VAhanas and ornaments.

All the AvatAras taken by Sree Devi for the killing the DaityAs and saving her devotees live here. They are PAsAnkuseswari Bhuvaneswari, Bhairavi, KapAla,
Bhuvaneswari, Ankusa Bhuvaneswari, PramAda Bhuvaneswari, Sree Krodha Bhuvaneswari, TriputAsvAroodha, NityaklinnA, AnnapurnA, TvaritA, and the other avatAras of Bhuvanes’vari.

Next to this is the palace of Sree Devi made of ChintAmaNi gems. All the articles within this are also made of the ChintAmaNi gems. The pillars are made of SooryakAnta MaNi, ChandrakAnta MaNi and VidyutkAnta MaNi.

The whole palace is so brilliant that nothing inside it is visible outside.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#32c. வணிகன் சமாதி

“அச்சம் இன்றி வாழலாம் எங்களுடன் அரசே!
நிச்சயம் வரமாட்டார்கள் உன் பகைவர் இங்கே!


வன வாசத்துக்கு ஏற்ப வாழவேண்டும் இங்கு;
கனி, காய்,கிழங்கு வேர்களை மட்டும் உண்டு".


தங்கி விட்டான் சுரத மன்னன் அவர்களுடன்;
பங்கிட்டு உண்டான் உணவை அவர்களுடன்.


கவலை அடைந்து சிந்தித்தான் சுரதன் ஒரு நாள்,
‘நிலைமை என்னவோ தெரியவில்லை நாட்டில்!


துன்பப் படுகின்றனாரோ அன்புப் பிரஜைகள்?
முன்னம் சேர்த்த செல்வம் விரயம் ஆகிறதோ?


கொள்ளை அடிக்கின்றனரோ என் கஜானாவை?
கொலை செய்கின்றனரோ என் குடி மக்களை ?’


வந்தான் வைசியன் சுரதன் இருந்த இடத்துக்கு;
வந்தவன் வாழ்க்கையில் அடிபட்டு நொந்தவன்.


“யார் நீர் ? எங்கிருந்து வருகின்றீர் கூறும்!
யார் உமக்கு துரோகம் விளைவித்தார் கூறும்!”


“நான் ஒரு வணிகன்; என் பெயர் சமாதி;
நான் செல்வந்தன்; செய்தேன் தான தர்மம்.


பொருளாசை மிக்க மனைவி மக்களால் – நான்
அருளின்றிக் கொடுமைப் படுத்தப் பட்டேன்.


கசந்தன உறவுகள்; சலித்தது வாழ்க்கை;
கானகம் வந்தேன் உறவுகளைத் துறந்து!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

5#32c. The Merchant SamAdhi


The sage Sumedas told king Surata, “You may live with us without any fear. I assure you oh king! your
enemies will not dare to come here and disturb you. But you cannot expect the comforts of a kingly life in a forest. You will have to eat fruits, vegetable, and roots as we all do.”


Surata stayed at the ashram and shared the simple natural food the sage and his disciples ate. His mind was constantly worrying about the state of his kingdom and the situation prevailing there.


‘Are my citizens being squeezed dry? Is my wealth amassed earlier being plundered? Are they looting my khazAna? Are my enemies punishing my good countrymen?’


One day there came another man dejected in life. Suratan asked him, “Who are you sir? What brings you here?”


The newcomer answered,”I am a merchant named SamAdhi. I was very rich and spent a lot of my wealth for good causes. My wife and children were money minded and objected to my donating money even for worthy causes.


They ill treated me. I felt rejected and I got dejected with my life and sore with all my relatives. I have come to this forest leaving everything behind.”



 
Last edited:
BHAARAGAVA PURAANAM - PART 2

#44e. துராசதன்

“வாழ்வதற்குப் பெற்றுள்ளாய் வரங்களை;
வீழ்வதற்கு வதைக்கின்றாய் தேவர்களை!

சரண் அடைந்தால் மன்னிப்பேன் குற்றத்தை
முரண் பட்டால் அழிப்பேன் உன் சுற்றத்துடன்.”

வக்ரதுண்டர் கூறினார் துராசதனிடம் – ஆயின்
வக்ரதுண்டரை எள்ளி நகையாடினான் அசுரன்.

“யார் என்று நினைத்தாய் என்னைப் பாலகனே?
பார் முழுவதும் வென்று ஆள்கின்றவன் நானே!

அஞ்சுவார்கள் என்னிடம் தேவரும் மூவரும்;
அஞ்சாமல் பேசுகின்றாய் நீ பிஞ்சு பாலகனே!”

பாண மழையைப் பொழிந்தான் துராசதன்;
பாணங்களை விலக்கியது இறைவன் மழு!

மழுவால் தாக்கினார் அசுரனை இறைவன்,
மழு அழிக்கவில்லை அவன் வஜ்ரகாயத்தை.

பாய்ந்தான் அசுரன் வாளைச் சுழற்றியபடி;
பாய்ந்தவன் நெற்றியில் குத்தினார் ஓங்கி!

பிளந்தது நெற்றி; விழுந்தான் அசுரன்;
பெருகி ஓடியது அங்கு செந்நிற ஆறு.

மயங்கி விட்டான் துராசதன், மாளவில்லை
மயக்கம் தெளிகையில், மயங்கியது மாலை.

‘சிறுவனிடம் அடிபட்டு மயங்கிவிட்டேனா?”
சிறுமையால் மனம் குமுறினான் துராசதன்.

திரும்பினான் அரண்மனைக்கு அன்றிரவு;
திரும்பினான் போர்க்களம் மறுநாட்காலை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#44e. DurAsadan

VakrathuNdar told DurAsadan, “You got boons in order to live long but you are troubling the DEvA to get your life span cut short. Surrender and beg for my pardon and you will live long. If you want a war, I will kill you with all your kith and kin”

DurAsadan laughed at the boy mouthing these words. “Who do you think I am? I am the conqueror and ruler of all the three worlds. Even the Deva and the Trimoorthis are afraid of me. You talk very bravely since you are only a small child.”

DurAsadan shot arrows like a rain cloud pouring rain drops. VakrathuNdar destroyed them with his mazhu. He tried to attack DurAsadan with his mazhu but it could not harm the body of the asuran which was as hard as a diamond!

Now the asuran charged on VakrathuNdar with his raised sword. VakrathuNdar punched him on his head very hard. His forehead split and he started bleeding profusely. He fell down in a faint but did not die.

When he came round, already the sun was setting and the war had to stop. He felt ashamed that he fainted due to a blow delivered by a mere child. He went back to his palace to rest for the night and came back to the war front the next morning.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12a. தேவியின் உலகம் (1)

மிளிரும் தேவியின் ஆயிரம் கால் மண்டபம்
ஒளிரும் நவரத்தின பிரகாரத்தின் நடுவில்.

உள்ளன மேலும் நான்கு நண்டபங்கள் அங்கே;
உள்ளன நடு மண்டபத்தின் நாற்புறங்களிலும்.

உள்ளன ஸ்ருங்கார மண்டபம், முக்தி மண்டபம்,
உள்ளன ஞான மண்டபமும், ஏகாந்த மண்டபமும்.

கண்ணைப் பறிக்கும் அவற்றின் விதானங்கள்!
கருத்தைப் பறிக்கும் அங்கு வீசும் நறுமணம்!

அசையும் அழகிய திரைச் சீலைகள் - அவற்றில்
நிறையும் மல்லிகை, குந்தம் ஒரு வனம் போல!

திகழும் தாமரைத் தடாகங்கள் தெளிவாக;
திகழும் ரத்தினங்கள் இழைத்த படிகளுடன்.

ரீங்கரிக்கும் வண்டினங்கள் இனிமையாக;
நிறைந்திருக்கும் அழகிய அன்னப் பறவைகள்.

வீற்றிருப்பாள் உலகநாயகி மண்டபங்களில்;
ஆற்றுவாள் பணிகளை அந்த மண்டபங்களில்!

கீதம் ஒலிக்கும் சிருங்கார மண்டபத்தில் - தேவி
பாசம் நீக்கும் வகையறிவாள் முக்தி மண்டபத்தில்.

உபதேசம் செய்வாள் ஞான மண்டபத்தில் - ஆராய்வாள்
உலகங்களைக் காக்கும் வழியை ஏகாந்த மண்டபத்தில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest posts

Latest ads

Back
Top