• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12a. Devi's world (1)

This navaratna palace is situated in the centre of all the enclosures. There are the four MaNdapams on its four sides, built on innumerable pillars.

These are the SringAra Mandapam, Mukti MaNdapam, GNAna MaNdapam and EkAntaMaNdapam. Canopies of various colours decorate these MaNdapams.

They are filled with the sweet scent of incense sticks. The brilliance of each of these Mandapams will make ten million Suns put together look pale.
On the sides of these MaNdapams there are flower gardens with Kashmira, Mallika and Kunda flowers.

There is a very big lotus tank - the steps leading to which are made of gems and jewels. Its water is nectar. In it are many fully bloomed lotus flowers with the bees humming and hovering over them.

Within the SringAra Mandapam, Devi would sit in the centre and listen to the songs sung by the other Devis along with the DevAs.

She frees the Jeevas from the bondages of the world, when she is in the MuktiManadapm. She gives instruction on GnAnA while she is in the GnAna MaNdapam. She consults her ministers and assistants sitting in the EkAnta MaNdapam.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#32d. சுரதன், சமாதி

“அரச குலத்தைச் சேர்ந்தவன் சுரதன் நான்!
அரசையும், நாட்டையும் பறி கொடுத்தேன்!


வஞ்சித்து விட்டனர் என் மந்திரிகள் என்னை;
அஞ்சித் தஞ்சம் புகுந்துவிட்டேன் வனத்தில்.


துக்கத்தை விட்டுத் தள்ளும் நீரும் – நாம்
மிக்க நல்ல நண்பர்கள் ஆகிவிடுவோம்!


சுகமயம் என்பது ஏது ஒரு சம்சாரிக்கு?
துக்கமயம் ஆகும் சம்சாரியின் வாழ்வு!


புத்திரர், மனைவி, இல்லத்தை மீண்டும்
எத்தினம் காண்பேனோ அறியேன் நான்!”


“பாவ, புண்ணியங்களை அறியாத உறவுகள் எதற்கு?
பார்த்தால் என்ன நன்மை? பாராவிடில் என்ன தீமை?


பகைவர்களே நமக்குத் தீங்கிழைக்கும் உறவினர்கள்!
பகைவர்களும் நண்பர்களே நமக்கு நன்மை செய்தால்.”


“விசனம் இல்லாமல் தங்குவீர் என்னோடு – நாம்
விசனப் பட்டு சாதிப்பது தான் என்ன?’ என்றான்.


“மனம் கவலையை மறக்க மறுக்கிறது மன்னா!
வனம் வந்த பின்னும் என் மனம் மாறவில்லை!”


“நாட்டைத் துறந்த கவலை வாட்டுகிறது என்னை!
நாடுவோம் நாம் முனிவரை, நல்வழி காட்டுவார்”


நாடினர் முனிவரைச் சுரதனும் சமாதியும்;
நாடினர் முனிவரை நல்வழி அறிந்திட.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


5#32d. Surata and SamAdhi


“I am king Surata of a nearby kingdom. I lost my kingdom and my ruler ship to my enemies. My own ministers have betrayed me. I had to seek refuge in a jungle. We are safe here. You too please forget all your worries and we two can be very good friends in the future.


A samsaari (a householder) can never be really happy. His sorrows outweigh his happiness. I do not know whether or not I will see my country and meet my family ever again!”


Now SamAdhi spoke to Suratha, “What is the use of the relatives who give us a hard time and do not try to understand us? What good comes out of meeting them? What is the loss in not meeting them. The relatives who wrong us are our enemies. The enemies who do us good are our friends.”


King Surata said, ” Please stop worrying. There is no point in worrying about what we can’t set right”

SamAdhi said, “My mind keeps worrying all the time. I thought I will be a different person after quitting my home but it has not really helped me!”

King Surta said, ” Let us go to sage Sumedas and find out what is the effective means to overcome this state of mind”. They both went to the sage Sumedas and sought his advice in overcoming their sorrows and grief.



 
BHAARGAVA PURAANAM - PART 2

#44f. அஞ்ஞானம்

புதிய நாள் துவங்கியதும் வந்தான்
புதிய படையுடன் துராசதன் போருக்கு!


விரும்பவில்லை வக்ரதுண்டர் நீண்ட போரை.
வீழ்த்தினார் அசுர சேனையை மளமளவென!


தரித்தார் வக்ரதுண்டர் பிரமாண்ட வடிவம்!
பதித்தார் தன் பாதத்தை துராசதன் சிரத்தில்.


சரண ஸ்பரிசம் செய்தது பல விந்தைகளை;
முரண்பட்டவனின் அஞ்ஞானம் நீங்கியது!


துதித்தான் வக்ரதுண்டரை பக்தியுடன்
பணித்தார் வக்ரதுண்டர் கருணையுடன்,


“காசி நகரில் மேற்கு வாயிலில் – எமது
காலடியில் இருக்கும் பேறு பெறுவாய்!


பாதகங்கள் செய்யும் துஷ்டர்களை நீ
சோதனைக்கு உள்ளாக்குவாய்!” என்றார்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#44f. The boon


On the next day DurAsadan came to the battle field with a fresh army. VakrathuNdar did want to prolong the war. He demolished the army of the enemy fast.


The he assumed a huge form and planted his foot on the head of DurAsadan. The touch of the Lord’s foot did wonders in DurAsadan! True knowledge dawned in him and his ignorance vanished.


He paid obeisance to VakrathuNdar. His crimes were forgiven and a boon was bestowed on him by VakrathuNdar. “You may live near the Western gate of KAsi and take to task the miscreants in the city of KAsi.”



 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12b. தேவியின் உலகம் (2)

இருக்கும் ஒரு மஞ்சம் சக்தி தத்துவாத்மகமாக;
இருக்கும் அந்த மஞ்சம் பத்துப் படிகள் கொண்டு.

இருப்பர் இந்த மஞ்சத்தின் நான்கு கால்களாக
பிரம்ம
ன், விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன்.

இருப்பார் மஞ்சத்தின் பலகையாக ஸதாசிவன்;
இருப்பார் மஞ்சத்தின் மேலே புவனேஸ்வரன்.

புவனேஸ்வரர் ஆவார் ஸ்ரீ மஹா தேவர் - தேவி
புவனேஸ்வரியாக வீற்றிருப்பாள் அவருடன்.

தேவியின் அர்த்தாங்கம் ஆதியில் ஈஸ்வரன்;
தோன்றினார் மஹாதேவனாக காமனை அடக்க.

அழகில் கோடி மன்மதர்களை வெல்லுபடி;
ஐந்து முகங்களும், முக்கண்களும் கொண்டு;

வயது பதினாறைத் தாண்டாத இளமையோடு;
வரதம், அபயம், பரசு இவற்றை ஏந்திக் கொண்டு.

கோடி சூரியர்களின் பேரொளியைக் கொண்டு;
கோடி சந்திரர்களின் குளுமையைக் கொண்டு.

சுத்த ஸ்படிகம் போன்ற மேனியுடன் - பல
ரத்தின ஆபரணங்களை அணிந்து கொண்டு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12b. Devi's world (2)

The palace of the Devi is known as the ChintAmaNi Gruha. Devi sits on a cot placed on a raised platform. The ten steps leading to her cot on the platform are the ten Skahti tattvas.

The for legs of the cot are BrahmA, VishNu, Rudra and Maheswara. The plank of the cot is SadAsiva. Bhuvaneswra MahAdeva sits on this cot.

Before the creation Devi, divided Her own Body into two parts and created Bhuvaneswara from her right half.

He has five faces and in each face has three eyes. He is holding a spear and an axe in two of his four hands and shows the signs of Favor (Varadam) and Fearlessness (Abhayam) with his other two hands.

He looks not a day older than sixteen years of age. He is more handsome than ten million Manmathans (God of Love) put together. He has more brilliance than ten million Suns to together. He has the coolness of ten million full moons put together .

His complexion is as clear as a crystal. Bhuvaneswari Devi sits along with him on the same cot.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#33a. தேவி லீலைகள்(1)

வணங்கினர் இருவரும் சுமேதஸ் முனிவரை,
“வணிகர் இவரது பெயர் சமாதி எனப்படும்.


துரத்தப்படுள்ளார் தன் மனைவி, மக்களால்;
துக்கம் கொண்டு வந்துள்ளார் இக் கானகம்;


இன்னமும் நீங்கவில்லை என் மனக் குறைகள்;
கண் மூடித் தூங்க முடியவில்லை என்னை மறந்து.


இன்னல்கள் அடைகிறேன் குடி மக்களை எண்ணி;
இன்னல்கள் அடைகிறேன் ராஜ்ஜியத்தை எண்ணி.


'கனவு போன்றதே இந்த உலக வாழ்க்கை!' என்ற
நினைவு இருந்தபோதும் விளையவில்லை பயன்.


அலை பாய்கிறது என் மனம் பழக்க தோஷத்தால்;
அலையும் மனத்தை அமைதிப் படுத்துவீர்!”என,


முனிவர் நோக்கினார் துக்கித்துள்ள இருவரையும்,
கனிவுடன் கூறினார் தனது இனிய குரலில்,


“காரணம் ஒன்று பந்த மோக்ஷங்களுக்கு எனக்
கற்றறிந்தோர் கூறுகின்றனர் மஹா மாயையை.


மாயையின் வசப்பட்டவர்களே தெய்வங்கள்;
மாயையின் வசப்பட்டவர்களே தேவர்கள்;


மாயையின் வசப்பட்டவர்களே மானவர்கள்;
மாயையின் வசப்பட்டவர்களே தானவர்கள்;


மாயையை உடைப்பது மிகவும் கடினம்;
மாயை மயக்கும் முனிவரை, ஞானியரை.


சுரூவதத் தீவுக்குச் சென்ற நாராயணன்
கிருத யுகத்தில் செய்தார் கடும் தவம்


மாறி மாறி வரும் சுக, துக்கங்களை ஒழித்துப்
பெறவேண்டும் பிரம்மானந்தம் என்று கருதி.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

5#33a. The LeelAs of Shakti Devi (1)

Surata and SamAdhi went and prostrated to sage Sumedas. Surata introduced the new comer to the sage,” This man is a merchant named SamAdhi. He has been driven away from home by his own wife and children. He is immersed in deep sorrow even after coming here.


As for me, I am not still able to get over the loss of my kingdom and the separation from my family. I am unable to sleep care free. I know that the human life is like a dream and that knowledge does not really make any difference. Both of us are mentally agitated and sorrowful. Please show us a way to control and calm our troubled mind.”


The sage was moved to pity on seeing the suffering of these two good men. He spoke to them in a soothing voice now.


” The only cause of both Bandham (bondage) and Moksham (liberation) is MAyA. The Gods, the Devas, the human beings and the asuras are all under the influence of this all powerful MAyA.

It is very difficult to break the shackles of MAyA. It can delude and infatuate even the holy men like rushis, sages and sanyAsins.

Lord NArAyaNan himself had gone once to a lonely island, to do severe penance, in order to overcome the cycles of sukam and dukham (continuous waves of joys and sorrows) and obtain Supreme Bliss for ever.”



 
BHAARGAVA PURAANAM - PART 2

#44g. ரிபுஞ்சயன்

ஸ்வாயம்பு மனுச் சக்கரவர்த்தி மறைந்த பின்பு,
ஸ்வபாவமாக மழை பொழியவில்லை உலகில்.

அறுபதாயிரம் ஆண்டுகள் பொய்த்தது வானம்!
வறட்சியும், பஞ்சமும் தலை விரித்து ஆடின!

நகரங்களும், நாடுகளும் அழியத் தொடங்கின;
நன்கு ஆளும் அரசன் ஒருவன் உடனே தேவை.

காசியில் ரிபுஞ்சயன் தவம் செய்திருந்தான்,
காசி விஸ்வநாதரைக் குறிந்து நெடுங்காலம்.

குற்றமற்ற அரசன் ஆவான் ரிபுஞ்ஜயன்,
ஏற்ற அரசன் ஆவான் மண்ணுலகை ஆள!

பிரமதேவன் தேடிச்சென்றான் ரிபுஞ்சயனை;
பிரமன் எடுத்துரைத்தான் தன் எண்ணங்களை.

“நல்ல அரசன் இன்றேல் நாடு பாழாகிவிடும்;
பொல்லாத வறட்சி, பஞ்சம் நீங்க வேண்டும்.

சக்ரவர்த்தியாக இருந்து நீ ஆளவேண்டும்!
மிக்காரும் ஒப்பரும் இல்லாத ஆதிசேஷன்

அளிப்பார் உனக்கு நல்ல மனையாளாக
அனங்கமோகினி என்னும் குமாரத்தியை!

திவோதாசன் என்னும் பெயரில் திகழ்வாய்
புவி நன்றியுடன் புகழும் உன் சேவைகளை!”

கூறினான் ரிபுஞ்சயன் ஒரு மறு மொழி;
சிறிதும் பிரமன் எதிர்பாராத மறுமொழி!

“ஏற்கின்றேன் உங்கள் கோரிக்கையை நான்!
ஏற்கவேண்டும் என் கோரிக்கையை நீங்கள்!

தேவர்கள் இருக்கக்கூடாது காசி நகரில்;
தேவை எனக்கு இந்த உறுதிமொழியே!”

பிரமன் ஏற்றுக்கொண்டான் கோரிக்கையை.
பிரமன் சென்றான் விஸ்வநாதரைத் தரிசிக்க.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#44g. Ripunjayan

After SwAyambu Manu passed away, the monsoon rains failed for sixty thousand years. Draught and
famine afflicted the whole world. Cities were deserted and kingdoms disappeared. A good ruler was the need of the hour – to protect the earth from further deterioration and destruction.

Ripunjayan was a good king. He was doing penance on Lord Siva in KAsi for a very long time. Brahma thought that Ripunjayan was the only king qualified to rule the earth well and save it from complete destruction.

He approached Ripunjayan and explained to him thus, ” In the absence of a good ruler, the country suffers. To remove the drought and the famine, you must rule over the earth as its emperor. Aadhiseshan will marry his beautiful daughter Ananga Mohini to you. You will become famous as DivodAsan. The earth and all its inhabitants will remain eternally grateful to you!”

Ripunjayan gave a reply which no one could have expected including Brahma. “I agree to your requests but you must agree to my requests. I will rule the world as an emperor only if all the DEvA go away from the city of KAsi”

Brahma had no choice and accepted the strange condition. He then went to Kasi to have a darshan of ViswanAtha.



 
I am very keen to know what that brilliant PERSON is going to do about the number of daily views!

Let me put THIS in black and white before this will be rendered impossible in the near furture!

The number of views in the past 24 hours In this thread is ( 326467 - 325500) = 967!

Let me have the last laugh - while it is still possible!! :rofl:

She who laughs LAST and that too from a safe distance LAUGHS BEST!!!! :laugh:
 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12c. தேவியின் உலகம் (3)

இருப்பாள் உலகநாயகி புவனேஸ்வரியாக இங்கு;
இருப்பாள் தேவி இரத்தின ஒட்டியாணம் அணிந்து;

ஆணிப் பொன்னில் வைடூரியத் தோள்வளைகள்;
அணிந்திருப்பாள் தாடங்கம் ஸ்ரீசக்ர வடிவில் தேவி.

மூன்றாம் பிறை நெற்றியுடன், கோவை
இதழ்களுடன்;
கஸ்தூரித் திலகம், சூரியச் சந்திரச் சூடாமணி மின்ன.

சுக்கிரன் போல் ஒளிரும் மூக்குத்தி, முத்தாரம்;
சந்தனம் பூசிய அங்கங்கள், சங்குக் கழுத்துடன்;

அழகிய பல் வரிசைகள், இரத்தின மணி மகுடம்;
அழகிய சரத் காலச் சந்திரனைப் போன்ற முகம்;

கங்கையாற்றின் நீர்ச் சுழி போன்ற நாபி;
மங்காது ஒளி வீசும் மாணிக்க மோதிரங்கள்;

நெருக்கமான மல்லிகைச் சரம், இரத்தின வளை;
நெருங்கி உயர்ந்த ஸ்தனங்கள் கொண்டவளாக;

தரிப்பாள் பாசாங்குச அபய வரத ஹஸ்தங்களை;
இருப்பாள் வல்லிக் கொடி போன்ற வனப்புடன்;

இருப்பாள் சௌந்தரியத்தின் பிறப்பிடமாக;
இருப்பாள் சிருங்கார ரசத்தின் இருப்பிடமாக;

கோடி சூரியர்களின் சக்தி பெற்றிருப்பாள்
கோடி சந்திரரின் குளுமை பெற்றிருப்பாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12c. Devi's world (3)

Bhuvaneswari wears is a shining girdle decorated with small tinkling bells, made from various gems stones. The ornaments on her arms are studded with VaidooryamaNi in solid gold.

The TAtanka worn in the ears look like the Sree Chakra - adding beauty to her lotus-like face. The beauty of her forehead defies the bright half moon seen on the eighth lunar day.

Her lips are redder than the fully ripened Bimba fruits. Her face shines with the sindhoormark made of musk and saffron.

Her hair is decorated with the ornaments resembling the Sun and Moon made of precious gems. Her nosering shines brighter than the planet Venus.

Her neck is decorated with gem studded necklaces. Her breasts are anointed with a mixture camphor and saffron.

Her teeth look prettier than the seeds of a fully ripe pomegranate fruit. She wears a bejeweled crown on her head.

Her navel resembles the deep whirl in the river BhAgirathi. Gem studded rings decorate her tender fingers. She has three lovely eyes. Her body is bright as if made of PadmarAgaMaNi.

Her bracelets, her tinkling anklets, her neck ornaments , the rows of flowers on her braid add to her beauty and grace. Her short blouse is studded with various jewels.

In her four hands she holds a noose, a goad and the signs of granting boons and Fearlessness. Her voice is sweeter than a lute. The lustre of Her body is similar to tens of millions of Suns and Full Moons rising simultaneously in the sky.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#33b. தேவி லீலைகள் (2)

தவம் செய்தான் அப்போது பிரம்ம தேவனும்
தன்னுடைய அஞ்ஞானத்தை விலக்கிக் கொள்ள;


மனித நடமாட்டமே இல்லாத ஒரு வனத்தில்
தனிமையில் நிஷ்டையில் அமர்ந்து கொண்டு.


விரும்பினான் நாராயணன்,’செல்லவேண்டும்
சுரூதத் த்வீபத்தை விட்டு வேறு தபோவனம்.’


தேடிச் சென்றான் பிரமனும் அதே சமயத்தில்
வேறு ஒரு நல்ல வனத்தைத் தவம் செய்திட.


இருவரும் சந்தித்தனர் ஓரிடத்தில் ஒரு நாளில்;
ஒருவரை ஒருவர் கேட்டனர், “நீர் யார்? கூறும்!”


பிரமன் சொன்னான் “நான் படைப்புக் கடவுள்!”
பிரமனை எள்ளி நகையாடினான் நாரணன்.


“உன்னைப் படைப்புக் கடவுள் என்கின்றாய்!
உன்னைப் படைத்த கடவுள் நான் அன்றோ?


சத்துவ குண சம்பன்னன் மகாவிஷ்ணு நான்;
மெத்தவும் தாழ்ந்தவன் நீ ரஜோ குணத்தால்!


அசுரர்கள் உன்னைத் துன்புறுத்துகையில்
அசுரரை வதைத்து, உன்னைக் காத்தேன்!


சரண்புகுந்தவனிடம் இத்தனை கர்வமா?
முரண்பாடாகத் தோன்றவில்லை உனக்கே?


என்னிலும் மேலானவன் அல்ல நீ பிரம்மனே!
என்னிடம் தோன்றி, என்னால் வாழ்பவன் நீ!”


வாக்குவாதம் தொடங்கியது இருவரிடையே.
தாக்கிக் கொண்டனர் வாய்ச் சொற்களினால்!


“நானே பெரியவன்; நானே உயர்ந்தவன்!” எனத்
தாமே பறை சாற்றிக் கொண்டனர் வாய் ஓயாது.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


5#33b. The LeelAs of Devi (2)


Brahma was also doing severe penance at the same time to remove his ignorance in a remote forest where no human being ever entered. He decided to change the location of doing penance at the same time when Vishnu had decided to change over and go to a new spot.


Both Brahma and NArAyaNan went in search of a suitable spot of doing tapas. They met on the way one day and demanded to know about each other.


Brahma said proudly, “I am the god of creation.” NArAyaNan had a heart laugh on hearing this and said mockingly,


“You call yourself the creator of the world. Have you forgotten that you were created by me? I am Sree MahA VishNu – the God filled with adorable Satva GuNam. You are much lower to me because of your Rajo GuNam.


When the asuras Madhu and Kaitaban threatened you, I fought with them and saved you. I am surprised to see your arrogance towards me – who had not only created you but also protected you and saved you!”


Brahma was crestfallen by this argument but he would not admit the truth. An argument ensued with both the gods continued to boast about their own greatness vociferously.


P.S.

IN MY NEW BLOGS I AM USING MY MAIDEN NAME AS '
விசாலம். K. ராமன்'.

This is just to honor my dear father who introduced me to the World of Letters (Journalism)


and gave me a new purpose in life (and to my quest for knowledge and the spreading of it to my best ability)


by keeping my insatiable hunger for knowledge well channelized and useful for me as well as to the others.

The imaginary Halo (if there is really one over my head) is NOT imagined by me

but by those who LOVE me extremely and dangerously.

 
Last edited:
BHAARGAVA PURAANAM - PART 2

#44h. மந்தரகிரி

மந்தரகிரி தவம் செய்தது சிவனைக் குறித்து;
மந்தர கிரிக்கு அருளச் சென்றார் சிவபிரான்.


உடன் சென்றனர் சிவகணங்களும், பிரமனும்;
கடும் தவம் செய்து கொண்டிருந்தார் மரீசியும்!


அளித்தார் சிவபிரான் மரீசிக்கு வரங்களை;
அளித்தது மந்தரமலை தன் விண்ணப்பத்தை!


“தேவர்கள் சூழக் காசியில் வசிப்பது போலவே,
தேவரீர் எழுந்தருள வேண்டும் என்னிடத்திலும்.”


பிரமன் குறுக்கிட்டான் தக்க தருணத்தை நோக்கி;
பிரமன் தெரிவித்தான் ரிபுஞ்ஜயன் கோரிக்கையை!


“தேவர்கள் வெளியேற வேண்டுமாம் காசியிலிருந்து!
தேவரீர் ஏற்கவேண்டும் மந்தரத்தின் கோரிக்கையை!”


மந்தர மலையில் எழுந்தருளினான் பரமசிவன்,
மந்தரத்திலேயே தங்கி விட்டன சிவகணங்கள்.


ரிபுஞ்ஜயன் முடி சூடினான் சக்கரவர்த்தியாக;
ரிபுஞ்சயன் மணந்தான் அனங்க மோகினியை.


அளித்தான் ஆதிசேஷன் அளவற்ற ஐஸ்வர்யம்;
அளித்தான் ரிபுஞ்ஜயன் உலகில் ஒரு நல்லாட்சி.


“கங்கையில் ஸ்நானம் செய்யமுடியவில்லை.
காசி விஸ்வநாதரைத் தரிசிக்க முடியவில்லை”


வருந்தினர் தேவர்கள் இவற்றை எண்ணி எண்ணி.
குரு பிரஹஸ்பதியிடம் கேட்டனர் நல்ல உபாயம்.


“நல்லாட்சி புரிகின்றான் சக்கரவர்த்தி ரிபுஞ்சயன்;
நம்மால் மீறமுடியாது நாமே அளித்த வரத்தினை.


குளறுபடிகள் செய்ய முடியும் அளித்த வரத்தில்
குறைபாடுகள் அவன் ஆட்சியில் தோன்றினால்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#44h. Mandara Giri


Mandara Giri did penance towards Lord Siva. He went to bless the Mandara Giri. The SivagaNAs as well as Brahma accompanied him. Sage Mareechi was also doing penance on that mountain.


Lord Siva blessed Mareechi with the boons he wished for! Mandara Giri made its wish known to Lord Siva, “I wish you would live here surrounded by the DEvA just as you live in the city of KAsi’


Brahma used this opportunity to convey the condition laid by Ripunjayan’s to Siva. Brahma told Lord Siva, “Ripunjayan has agreed to rule over the world and in return all the DEvA must leave KAsi. It is better that you accept the invitation of Mandara Giri.” Siva agreed and stayed on there. The Siva gaNAs also stayed back there.


Ripunjayan became the chakravarti of the earth. He married Ananga Mohini. AadhisEshan presented him with rich gifts and unlimited wealth. He ruled the earth well adhering to dharma.


DEvA felt crestfallen since they could not have Ganga snAnam any more nor have dharshan of KAsi ViswanAthar. They went to their kulaguru Bruhaspati and asked him for an idea to break the boons given to Ripunjayan.


Bruhaspati told them, “Ripunjayan is ruling well and we can’t break the boons given to him now. If there is any confusion or adharma, then we can go back in our promise.”



 
வராத விருந்தாளி வந்துள்ளார் என்று
ஏராள மகிழ்ச்சி அடையாதீர்கள் - அவர்
குடியைக் கெடுக்கவும் வந்திருக்கலாம் !
வெடியை வைக்கவும் வந்திருக்கலாம்!!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12d. தேவியின் உலகம் (4)

சூழப்பட்டிருப்பாள் தேவி தோழிகள், தாசிகளால்;
சூழ்ந்திருப்பர் இச்சா, க்ரியா, ஞான சக்தியர்கள்!

லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி,
க்ஷமா, தயா, புத்தி, மேதா, ஸ்மிருதியரால்!

ஜெயா, விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா,
விலாசினி,தோக்தரீ, அகோரா, மங்களா என

சேவிப்பர் தேவியை ஒன்பது பீடாதிபதிகளும் ;
சங்க, பதுமநிதிகள் இருக்கும் இருபக்கங்களில்.

நவரத்ன நதியோடும் இடப்பக்கத்திலிருந்து,
நதி பிரிந்து செல்லும் அமிர்த சாகரம் வரை.

மஹாதேவர் புவனேஸ்வரர் ஆனது இந்த
மஹா தேவியின் சம்பந்தத்தால் அல்லவா?

ஓடும் கால்வாய்களாக மணித்வீபத்தில்
நெய், பால், தயிர், தேன் போன்றவை.

ஓடும் மணித்வீ பத்தில் அமிர்தம் நதியாக;
ஓடும் கிளையாறுகளில் பல பழ ரசங்கள்.

கரும்பு, திராக்ஷை, மாம்பழம், நாவல் பழம் என
விரும்பும் சுவைக்கேற்ப கனிகள் தரும் தருக்கள்.

இல்லை இங்கே பிணிகளும், மூப்பும்!
இல்லை இங்கே சோகமும், கவலையும்!

இல்லை இங்கே காம, குரோத, லோபம்!
இல்லை இங்கே மோஹ, மத, மாத்சர்யம்!

முக்தி அடைந்தவர் வசிப்பர் இங்கே - சேவிப்பர்
சக்தி தேவியை பிரம்மாண்டத்தின் தேவதைகள்;

வடிவ
ம் பெற்று இங்கே உபாசிக்கும் - சப்த
கோடி மந்திரங்களும் புவனேஸ்வரியை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12d. Devi's world (4)

The Sakhis, attendants, the Devas and the Devis surround Bhuvaneswari on all the sides. IchchA Sakti, GnAna Sakti, and Kriya Sakti are present before the Devi.

LajjA, Thushti, Pushti, Keerti, KAnti, KshamA, DayA, Buddhi, MedhA, Smriti, and Lakshmi are with Devi Bhuvaneswari.
JayA, VijayA, AkitA, AparAjitA, NityA, VilAsini, Dogdhree, AgjorA and MangalA are the nine Peetha Sakthis always in the service of Devi.

On the two sides of Devi are the two oceans of treasures. From these Navaratna, gold, and the other seven elements flow out to assume the forms of rivers and merge with the ocean SudhA Sindhu. Rivers of ghee, milk, curds, honey, nectar, pomegranate juice, jamoon fruit juice, mango juice, sugarcane juice flow on all the sides.

The trees yield the fruits one desires and the wells and tanks yield water as people desire. There is no want of anything; no diseases; no sorrow no old age; no anxiety, no anger, no jealousy no envy nor wicked thoughts.

All remain young here and enjoy with their wives and they worship Bhuvanesvari. Some have attained SAlokya mukti, some others SAmeepya and some others SAroopya mukti.

The seven Koti MahA Mantras and MahA VidyAs assume physical forms and worship Devi.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#33c. தேவி லீலைகள்(3)

தோன்றியது ஒரு சிவலிங்கம் அவர்கள் நடுவே!
வெண்மையாக, உயர்ந்து, ஆழ்ந்து, அகன்று!


ஒலித்தது ஆகாசவாணி வானத்தில் கம்பீரமாக;
“ஒளிரும் சிவலிங்கத்தின் அடி, முடி எங்குள்ளன?


கண்டு வாருங்கள் அடியை, அன்றேல் முடியை;
கண்டு வருகின்றவனே உங்களில் உயர்ந்தவன்.”


அன்ன வடிவெடுத்துப் பறந்தான் பிரமன் வானில்;
சொன்னபடி சிவலிங்கத்தின் முடியினைக் கண்டிட.


பன்றி வடிவெடுத்துப் பாதாளம் வரை சென்றான்
சொன்னபடி லிங்கத்தின் அடியைக் காண நாரணன்.


பாதாளம் வரை சென்றும் பயன் ஒன்றும் இல்லை;
பார்க்க முடியவில்லை சிவலிங்கத்தின் அடியை!


வழியில் கண்டான் பறந்து சென்ற பிரம்மன்
நழுவி விழுந்து கொண்டிருந்த தாழம்பூவை.


விழுந்து கொண்டிருந்தது லிங்கத்திலிருந்து;
விஷ்ணுவிடம் காட்டினான் பிரமன் அப்பூவை.


“கண்டு விட்டேன் சிவலிங்கத்தின் முடியினை!
கொண்டு வந்தேன் சாட்சியாகத் தாழம்பூவை


“மலர் கொண்டு வந்தாய் நீ சிவலிங்கத்தின்
முடியிலிருந்து என்பதற்கு என்ன அத்தாட்சி?”


“சொல்லும் சாட்சி இந்தத் தாழம்பூ உமக்கு!
சொல்வதற்கு வேறு யார் உளார் உயரத்தில்?”


சொன்னது தாழம்பூ விஷ்ணுவிடம் பொய் சாக்ஷி,
சொன்னது பிரமன் தன்னைக் கொண்டு வந்ததாக!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


DEVI BHAAGAVATAM -SKANDA 5


5#33c. The LeelAs of Devi (3)

A glowing Siva Lingam appeared in between NArAyaNan and Brahma. It was bright white in color, very tall, broad and deep! An AakAsh vANi was heard from the sky. “Find the top or bottom of this Siva Lingam. Which of you returns first after locating it, will be the better God between you!”


Brahma assumed the form of a swan and flew higher and higher in sky searching for the top of the endless glowing Siva Lingam. NArAyaNan took the form of a boar and went down digging the earth deeper and deeper until he had reached PAtAlam. But he failed to find the bottom of the lingam.


Meanwhile Brahma saw a flower falling down from the top of the Sivalingam. He caught hold of it and showed it to NArAyaNan saying, ” I have seen the top of the Siva Lingam. I brought this flower from there as a witness!”


But NArAyaNan would not believable his words. He asked Brahma,” Who will bear witness to the statement that you have indeed picked the flower from the top of the Siva Lingam yourself?”


Brahma said, “The flower can bear witness to my words. Who else is there so high in the sky to bear witness for me?” The flower falsely testified Brahma’s claim to be true!




 
BHAARGAVA PURAANAM - PART 2

#44i. தவ வலிமை

அக்னி தேவனுக்கு ஆணையிட்டான் இந்திரன்,
“இனி நுழைக்கக்கூடாது காசி நகரில் நீ!” என்று.

“அக்னி இன்றி யாகம் ஏது? யக்ஞம் எது?” என
முனிவர் தவித்தனர், பணிகளில் தடங்கலால்!

தேவர்களின் சூழ்ச்சியை அறிந்தான் ரிபுஞ்சயன்,
“தேவையில்லை வீண் அச்சம் முனிபுங்கவர்களே!

அக்னியாகவும், சூரியனாகவும், தேவர்களாகவும்
அத்தனை காரியத்தையும் செய்கிறேன் நானே! ”

தவ வலிமையால் தகர்த்தான் சூழ்ச்சிகளை.
தவித்தனர் தேவர்கள் காசிக்குச் செல்வதற்கு.

எண்பதாயிரம் ஆண்டுகள் கழிந்தன இவ்வாறு.
தன்பதிக்குத் திரும்ப விரும்பினர் சிவபிரான்.

வரங்களை உடைக்கவேண்டும் எனில் முதலில்
வர வேண்டும் நாட்டில் பலவிதக் குழப்பங்கள்!

தேவர்கள் முயன்றனர் குழப்பம் விளைவிக்க;
தேவர்கள் தோற்றனர் தங்கள் முயற்சிகளில்.

யோகிகளை உண்டாக்கி அனுப்பினார் சிவன்;
யோகிகளும் தோற்றனர் தங்கள் முயற்சியில்.

விநாயகரால் முடியாதது இல்லை எனப் பிரான்
விநாயகரிடம் தெரிவித்தார் உள்ளக் கருத்தை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#44i. The power of penance

Indra ordered to Agni,”Do not enter the city of KAsi!” The sages got worried since they could not perform yAgA or yagnaas without agni.

Ripunjayan understood the trick played by the DEvA and came forward to play the part of Agni, Sooryan and all the other DeVA so that the yAgA and yagna could go on undisturbed, as before.

He had earned so much power through his penance and adherence to dharma that this miracle could go on for eighty thousand long years!

The Deva were desperate to get back to KAsi. Siva himself wanted to return to KAsi. They wanted to break the boons given to Ripunjayan. For doing that, first they had to create confusion in KAsi.

The DEvA went to Asi and tried to create confusion and failed badly. Siva created Yogis and sent them to create confusion in KAsi. They too failed in their mission miserably.

Now it was clear that only VinAyaka – for whom nothing was impossible – could create confusion in KAsi. Siva told VinAyaka his plans and ideas.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12e. தேவியின் உலகம் (5)

ஈடாகார் மணித்வீபத்தின் காந்திக்கு
கோடி சூரியர்கள், அக்னி, மின்னல்!

ஒளிர்ந்திடும் பவளம் ஓரிடத்தில்;
ஒளிர்ந்திடும் மரகதம் வேறிடத்தில்.

ஒளிரும் நவரத்தினம் ஓரிடத்தில்;
ஒளிரும் வைரம் வேறோர் இடத்தில்.

காட்டுத் தீயின் நிறம் ஓரிடத்தில் - ஓரிடத்தில்
காண்பதற்கரிய சூரிய, சந்திர காந்தக் கற்கள்.

ரத்தின மலைகள்; ரத்தின கோபுரங்கள்;
ரத்தின மரங்கள்; ரத்தின இலை
கள்; கனிகள்;

ரத்தினத் தாமரை; ரத்தின நீர் நிலைகள்;
எத்தனை எத்தனை காணுமிடம் எல்லாம்!

வீசும் நறுமணத் தென்றல் எப்போதும் - ஒளி
வீசிடும் தீபங்கள், நறுமணம் வீசிடும் தூபம்.

நிறைந்திருக்கும் ஐஸ்வர்யம், பராக்கிரமம்;
நிறைந்திருக்கும் சிருங்காரம், சர்வக்ஞத்வம்;

நிறைந்திருக்கும் தேஜஸ், தயை, குணநலன்கள்;
சிறு உலக இன்பம் முதல் பிரம்மானந்தம் வரை!

உத்தம ஸ்தானங்களில் மிகவும் உத்தமமானது;
மொத்தமாக அழித்துவிடும் செய்த பாவங்களை!

சித்தத்தில் மணித்வீபத்தை நினைக்கும் போதே
பக்தர்கள் சென்றடையவல்லது தேவியின் தீவு.

அடைவான் மணித்வீபத்தையே ஒருவன்
விடும் இறுதி மூச்சில் நினைவு கூர்ந்தால்.

பாராயணம் செய்விப்பாய் ஜனமேஜய மன்னா!
பூதப் பிரேதத் தொல்லை நீக்கும் ஸ்கந்தங்களை.

நிமிப்பாய் நூதன க்ருஹத்தை இதற்காக;
செய்வாய் வாஸ்து, சாந்தி யாகம் முதலில்."

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 12

12#12e. Devi's world (5)

The lustre of Sun, Moon and lightnings cannot compete with the lustre of MaNi Dweepam. Some places shine as Vaidooryam some others as Marakatam; some others as Sooryakaantam and some others as lightning.

The color of light varies from Sindooram to Indra neelam to MAnikyam to diamond. Some places look like burning fire while others as molten gold, some shine as Soorya KAntamand Chandra KAntam.

The mountains, gates, doors, trees and everything is made of gems and jewels. Peacocks dance, cuckoos sing, doves and parrots click and cackle.

Tanks are filled with crystal clear sweet water. Lotuses bloom delighting the eyes as well as the nose. Breeze rustle the leaves.

These jewels act like lamps and the sweet scented trees act as incense sticks. Every happiness right up to BrahmAnandA exists here.

All the sins are destroyed just be remembering Devi. If a man thinks of Devi and MaNi Dweepa when he breaths his last he will surely reach there.

He who reads the five Chapters (eighth to twelfth) will not be troubled by Bhootas, Pretasand PisAchas.

Recitation of this at the time of building a new house and at the time of VAstu yAgaensures auspiciousness.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#33d. தேவி லீலைகள்(4)

நம்பவில்லை நாராயணன் இருவர் கூற்றையும்;
“நம்புவேன் பரமசிவனார் உரைத்தால் மட்டுமே!”


கோபம் கொண்டார் பரமசிவன் இவற்றால்;
சாபம் தந்தார் பொய் சொன்ன தாழம்பூவுக்கு!


“நழுவிக் கொண்டிருந்தாய் என் முடியிலிருந்து;
நடுவில் கைப்பற்றினான் உன்னைப் பிரமன்.


வழுவினாய் உண்மையிலிருந்து முற்றிலும்!
இழந்தாய் என்னைப் பூஜிக்கும் தகுதியை!”


நாணம் கொண்டு சிவனை வணங்கினர் இருவரும்
நாணம் இருவருக்கும் ஏற்படக் காரணம் தெரியுமா?


அடைந்தனர் மனமயக்கம் நாரணனும், பிரமனும்;
அடைந்தனர் கர்வம் ‘நானே உயர்ந்தவன்’ என்று!


மாயையே காரணம் அவர்கள் மயக்கத்திற்கு;
மாயையே காரணம் அவர்கள் கர்வத்திற்கு.


மயக்கத்தைத் தந்து நம்மை பந்திக்கும் மாயை;
மயக்கத்தைத் தொலைத்தால் சித்திக்கும் முக்தி.


எங்கும், எதிலும், எப்போதும் நிறைந்து
தங்கும் அன்னை பராசக்தியே மாயை!


தருவாள் ஞானம் ; நீக்குவாள் அஞ்ஞானம்;
தருவாள் முக்தியை; நீக்குவாள் பந்தத்தை!”


சுரத மன்னனுக்கும், வணிகன் சமாதிக்கும்
சுமேதஸ் முனிவர் விளக்கினார் இவற்றை.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


5#33d. The LeelAs of Devi (4)


NArAyNan would not believe the words of either Brahma or the flower as the truth. He declared. “I will believe this statement only if Lord Siva himself confirms the truth of this.”


Siva got annoyed by the audacity of the flower and cursed it. He said, “You slipped from the top of my Lingam and were falling down. Brahma intercepted you midway and took hold of you. Yet you had the audacity to a tell a lie. You are not fit for my pooja hence forth.”


Brahma and VishNu prostrated to Lord Siva humbled after realizing who was really the greatest among the gods. Brahma became red with guilt.


Why did they feel ashamed and had to be humbled? It is because both of them got deluded and became proud and arrogant about their own greatness.


It was MAyA which deluded them. MAyA made them both proud and arrogant. MAyA deludes us and binds us. If we can come out of the delusion we can get liberated. The ParA Shakti who resides in everything, everywhere and all the time is the all powerful MahA MAyA.


She steeps us in ignorance. She can enlighten us in a moment. She binds us in samsAra. She can deliver us from bondage in one moment. Everything and everyone is always under her power.”


Sage Sumedas explained the LeelAs and greatness of ParA Shakti Devi to king Surata and the merchant SamAdhi.



 
BHAARGAVA PURAANAM - PART 2

#44j. அனாசாரம்

சிறுவனாக உருவெடுத்தார் விநாயகர்.
சிரமம் இன்றி நுழைந்தார் காசி நகரில்.


பயங்கரக் கனவுகளைத் தோற்றுவித்தார்;
பரிஹாரம் கூறி வென்றார் நம்பிக்கையை.


“காசிக்கு நெருங்குகிறது ஆபத்து!” என்றார்.
“கனவுகள் தோன்றிடக் காரணம் அதுவே!”


பேசியது கேட்டு வெளியேறிவிட்டனர் பலர்!
போகாதவர்கள் வாழ்ந்தனர் திகிலில் மூழ்கி!


வந்தன தடங்கல்கள் தினசரி வேலைகளில்.
எந்தக் காரியமும் நிகழவில்லை சரியாக.


மன்னன் இருந்தான் குழம்பிய மனத்துடன்,
மன்னனைத் தேற்றினாள் மகிஷி லீலாவதி!


“ஜோசியன் ஒருவன் வந்துள்ளானாம் இங்கு,
பேசுகின்றான் மூன்று காலங்களையும் பற்றி!”


அழைத்து வந்தனர் விநாயக ஜோசியரை;
அளித்தனர் ஆசனம்; செய்தனர் உபச்சாரம்;


“குழப்பம் இன்றி நடந்த என் ஆட்சியில்
குழப்பம் விளைகிறது இப்போது நாட்டில்.


ஆபத்து நேருமா? என் ஆட்சி முடியுமா?
தாபத்தை நீக்கி உண்மையை கூறுங்கள்!”


“பதில் தருவான் இந்தக் கேள்விக்கு இங்கு
பதினேழாம் நாள் வந்து சேரும் அந்தணன்!”


மகாதேவன் அனுப்பினர் காசி மாநகருக்கு
மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும்.


அநாசாரத்தைப் பெருக்கச் சொன்னான் சிவன்;
அலாதி முயற்சி செய்தனர் இருவரும் சேர்ந்து.


யாகத்தைப் பழித்தார் விஷ்ணு ஆண்களிடம்;
போகத்தை வளர்த்தாள் லக்ஷ்மி பெண்களிடம்.


கற்புத் தன்மை குறையச் செய்தாள் – மேலும்
மற்ற ஆண்களிடம் சுகம் தேடச் சொன்னாள்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.




 
BHAARGAVA PURAANAM - PART 2

#44j. Perversions

VinAyaka became a young boy and entered the city of KAsi easily. He made the people there get terrifying nightmares. He told them the suitable parihAram and easily won their confidence very soon.


He told the people of KAsi, “Terrible things will happen to Kasi soon. These nightmares indicate that!” Many people left Kasi, fearing the imminent danger. Those who could not leave the city lived in constant fear.


Many hurdles developed in the daily activities. Nothing seemed to happen in perfect order. The king Ripunjayan got worried about these sudden developments.


His queen LeelAvathy told him about the boy-astrologer who predicted everything accurately and knew the past as well he did as the future.


VinAyaka – the boy astrologer – was brought before the king Ripunjayan. The king told the boy, “My rule had gone on till now without a hitch. Suddenly everything seems to be going wrong. Is it an omen for the future or is my rule coming to an end?”


The boy astrologer told the king, “A Brahmin will come to KAsi on the seventeenth day from today. He will answer all your questions.”


Meanwhile Siva sent VishNu and Lakshmi to spread confusion and cause perversion in the minds of the people. VishNu spoke ill of the yAgA and Yagna to the men folk. Lakshmi told the women that there was no need to remain chaste and that it was perfectly alright to seek pleasure in the company of the other men.


 
devi bhaagavatam - skanda 12

12#13. படிப்பதன் பலன்

கற்றுக் கொண்டான் மன்னன் முனிவரிடம்
பிரணவ சம்ஞை உடைய தேவி மந்திரத்தை.

செய்தான் தேவி யக்ஞத்தைத் தாரளமாக
ஐயம் திரிபறக் கற்ற ஆச்சாரியர்களுடன்.

படிக்கச் செய்தான் இந்தப் புராணத்தை - வழி
பட்டான் சுமங்கலிகளைக் குமரிகளைகளை.

வழங்கினான் அறுசுவை உண்டி தீனர்களுக்கு;
வழங்கினான் தானங்கள் அந்தணர்களுக்கு.

முடிந்தது தேவி யக்ஞம்; வந்தார் நாரதர்;
"அடைந்துவிட்டார் உன் தந்தை திவ்ய ரூபம்!

அடைந்து விட்டார் உன் தந்தை சுவர்க்க லோகம்;
அடைந்து விட்டார் உன் தந்தை விமானத்தை;

அடைந்து விட்டார் உன் தந்தை மணித்வீபத்தை!
அடைவித்தது உன் தந்தையை உன் முயற்சிகள்.

துர்கதி அடைந்திருந்த உன் தந்தையை
நற்கதி அடையச் செய்தாய் ஜனமேஜயா!"

வியாசர் வாழ்த்தினார் ஜனமேஜயனை ;
விடைபெறும் முன் கூறினார் அவனிடம்,

"வேத புராணங்களின் சாரம் தேவி பாகவதம்;
வேத பாராயணப் பலன் தரும் தேவி பாகவதம் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#33e. தேவி லீலைகள் (5)

வினவினான் மன்னன் ஜனமேஜயன்
முனிவர் வியாசரிடம் ஒரு கேள்வி.


“கூறுங்கள் மாமுனிவரே எனக்கு விரிவாக;
பராசக்தியின் தன்மை, வடிவத்தை நன்றாக.


பராசக்தியின் வலிமையை, வடிவத்தை;
பராசக்தியின் உற்பத்திக்கு மூலகாரணத்தை”.


“அறிவாய் ஜனமேஜயனே இந்த உண்மையை;
அநாதி ஆனவள் அன்னை பராசக்தி – அதனால்


உற்பத்தி என்பதே இல்லை சக்தி தேவிக்கு!
உற்பத்தி
முன்பு இல்லாத பொருட்களுக்கே
!

நித்தியமானவள் அன்னை பராசக்தி மட்டுமே!
சத்தியமானவள் அன்னை பராசக்தி மட்டுமே!


காரணங்களுக்கெல்லாம் காரணம் சக்தியே!
காணும் இடமெல்லாம் நீக்கமற நிறைபவள்!


குறைந்து விட்டால் சக்தி, மனிதன் வீழ்வான்!
நிறைந்து விட்டால் சக்தி, மனிதன் வாழ்வான்!


சித்ரூபமாக விளங்குகின்றாள் சக்தி ஜீவனிடம்;
சித்ரூபமே அவளது உண்மைத் தன்மை உருவம்.


துதிக்கின்றனர் சித்ரூபிணியைத் தேவர், மனிதர்;
உதிக்கின்றாள் துயர் தீர்க்கப் பல வடிவங்களில்.


சுவாதீனப்பட மாட்டாள் தேவர்களுக்கு;
வசப்படமாட்டாள் காலத் தத்துவத்து
க்கு.

தனியாக ஆடுகிறாள் பிரபஞ்ச நாடகத்தை,
தனியாக ஆட்டுவிக்கிறாள் ஜீவராசிகளை.


ரஞ்சிக்கின்றான் சிவன் இவள் லீலைகளை;
ரஞ்சித்தபின் அழிக்கிறாள் அனைத்தையும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


5#33e. The LelAs of Shakti Devi (5)


King Janamejayan asked one more question now to sage VyAsa. “Sire! Please explain to me the swroopam of ParA Shakti. I want to know her strength and the reason for her being created.”


Sage VyAsa said, “Please understand and remember this oh king! Devi has neither a beginning nor an end. So there is no question of her being created. She is eternal. She is the whole truth and the only truth.

She is the cause behind all the other causes.
She pervades everywhere. If Shakti gets reduced, a man becomes weak. If Shakti gets increased, a man becomes strong.

Shakthi exhibits as ChithroopiNi. The Deva, the humans all worship her as Chithroopini. She takes up other forms to put an end to the sufferings of the good and the gentle people. She can’t be commanded by the Devas. She can’t be controlled by the all powerful Time Factor.


She plays this cosmic drama all alone by herself. She controls everything created by her. Siva enjoys watching her cosmic play. When she get tired of the play, she destroys everything and starts all over once again.”



 
BHAARGAVA PURAANAM - PART 2

#44k. திவோதாசன்

பட்டணம் முழுவது சுற்றினார் விஷ்ணு;
பதினேழாவது நாள் சென்றார் அரசனிடம்.


ஜோசியர் கூறிய அந்தணன் அவரே என
ஆசையுடன் வரவேற்றான் ரிபுஞ்ஜயன்.


யோகபலத்தால் அறிந்து கொண்டான்,
லோகநாதனே தன்னிடம் வந்தார் என.


“அஞ்ஞானம் மறைந்தது தரிசனத்தால்;
மெய்ஞானம் பிறந்தது என் சித்தத்தில்.


தடுத்தேன் தேவர்கள் காசிக்கு வருவதை;
பகைத்தேன் தேவர்களைக் காரணமின்றி!


விநாயகர் வித்திட்டார் அறியாமை விலகிட.
அநாயாசமாகத் தீர்த்துவிட்டார் பகையை.


அறியாமல் செய்த பிழையை மன்னியுங்கள்;
சரியான பரிஹாரம் தெரிவியுங்கள்” என்றான்.


சுயவுருவைக் காட்டினார் விஷ்ணு மூர்த்தி;
தயவுடன் மன்னித்து அவனை வாழ்த்தினார்.


“மந்தர கிரியில் தங்கி இருக்கும் சிவபிரான்
சொந்தத் தலமான காசியை விழைகின்றார்.


தெரியாமல் செய்த பிழைகள் மறைந்துவிடும்
விரும்பும் காசியை தேவர்களுக்கு அளித்தால்!”


காசி நகரை அளித்தான் சிவபிரானுக்கு – தன்
ஐசுவர்யத்தில் ஒதுக்கினான் ஒரு பகுதியை.


ஆலயம் எழுப்பி, ஆராதனைகள் செய்தான்;
அரசாட்சி செய்து, அரன் திருவடி சேர்ந்தான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#44k. DivOdAsan


VishNu roamed in the city of KAsi and went to the king Ripunjayan on the seventeenth day. The king welcomed him heartily, knowing that it was the Brahmin the astrologer had spoken about.


He also knew that it was none other than Vishnu who had come to meet him as a Brahmin. He spoke in all humility, “I got enlightened by your divine dharshan. My ignorance had vanished now.


I stopped the DEvA from entering KAsi and made them my enemies. VinAyaka made it possible that my ignorance got removed and the seed of knowledge was planted. Please pardon my thoughtless actions and tell me how I can make up for my faulty behavior.”


VishNu was very pleased with him and showed himself in his true glory. He told Ripunjayan, ” Lord Siva wishes to return to KAsi. If you allow the DEvA to enter KAsi all your wrong actions will be pardoned.”


Ripunjayan welcomed Siva and the DEvA into KAsi. He spent half of his wealth in building temple for Siva and doing ArAdhanA regularly. He ruled well for a long time and merged with Siva when his time came to leave this world.



 

Latest posts

Latest ads

Back
Top