BHAARGAVA PURAANAM - PART 2
#42i. மேகன்
“கஜானனர் அழைத்தார் தங்களை வருமாறு!”
நிஜமான ஆனந்தம் கொண்டார் புருசுண்டி.
நண்பர்களுடன் விளையாடும் மகோற்கடரைக்
கண்டு நம்பவில்லை கஜானனன் என புருசுண்டி.
பக்தனின் ஐயத்தை நீக்கக் காட்சி தந்தார் தன்
பத்துக் கரங்களுடனும், வேழ முகத்துடனும்,
ரத்தின கிரீடத்துடனும், பிறைச் சந்திரனுடனும்,
சித்தி, புத்தி தேவியரோடு, சிங்க வாஹனத்தில்.
ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார் புருசுண்டி,
தானறிந்த ரூபத்தில் வேழமுகனைக் கண்டு.
தங்கினர் இருவரும் காசிராஜன் மாளிகையில்
அங்கு நடந்தது இருவருக்கும் ராஜ உபசாரம்!
வந்தனர் மேலும் பல அசுரர்கள் காசிக்கு.
வந்தான் மேகன் ஜோசியன் வேடத்தில்.
காசிராஜனிடம் கூறினான் ஜோசியன் மேகன்,
“காசிக்கு வரும் இனித் துன்பங்கள் தொடந்து.
முனி குமாரன் ஜாதகத்தில் உள்ளது தோஷம்;
இனியும் அவன் இங்கேயே இருக்க வேண்டாம்.
காட்டுக்கு அவனை விரட்டி விட்டால் உங்கள்
நாட்டுக்கு வரும் துன்பங்கள் நீங்கும்!” என்றான்.
பயந்தவன் போலவே நடித்தான் காசிராஜன்;
‘நயமாகப் பேசி அழிக்க வேண்டும் இவனை!’
“காசியபரின் மகன் என்று அழைத்து வந்தேன்;
காசிக்குத் துன்பம் தருவதை அறியவில்லை.
காட்டில் விட்டு விடுகிறீர்களா தாங்களே?”என
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் அசுரன் மேகன்.
பணித்தான் காசிராஜன் தன் காவலனிடம்,
“பேணி அழைத்துச் செல் மகோற்கடரிடம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
#42i. மேகன்
“கஜானனர் அழைத்தார் தங்களை வருமாறு!”
நிஜமான ஆனந்தம் கொண்டார் புருசுண்டி.
நண்பர்களுடன் விளையாடும் மகோற்கடரைக்
கண்டு நம்பவில்லை கஜானனன் என புருசுண்டி.
பக்தனின் ஐயத்தை நீக்கக் காட்சி தந்தார் தன்
பத்துக் கரங்களுடனும், வேழ முகத்துடனும்,
ரத்தின கிரீடத்துடனும், பிறைச் சந்திரனுடனும்,
சித்தி, புத்தி தேவியரோடு, சிங்க வாஹனத்தில்.
ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார் புருசுண்டி,
தானறிந்த ரூபத்தில் வேழமுகனைக் கண்டு.
தங்கினர் இருவரும் காசிராஜன் மாளிகையில்
அங்கு நடந்தது இருவருக்கும் ராஜ உபசாரம்!
வந்தனர் மேலும் பல அசுரர்கள் காசிக்கு.
வந்தான் மேகன் ஜோசியன் வேடத்தில்.
காசிராஜனிடம் கூறினான் ஜோசியன் மேகன்,
“காசிக்கு வரும் இனித் துன்பங்கள் தொடந்து.
முனி குமாரன் ஜாதகத்தில் உள்ளது தோஷம்;
இனியும் அவன் இங்கேயே இருக்க வேண்டாம்.
காட்டுக்கு அவனை விரட்டி விட்டால் உங்கள்
நாட்டுக்கு வரும் துன்பங்கள் நீங்கும்!” என்றான்.
பயந்தவன் போலவே நடித்தான் காசிராஜன்;
‘நயமாகப் பேசி அழிக்க வேண்டும் இவனை!’
“காசியபரின் மகன் என்று அழைத்து வந்தேன்;
காசிக்குத் துன்பம் தருவதை அறியவில்லை.
காட்டில் விட்டு விடுகிறீர்களா தாங்களே?”என
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான் அசுரன் மேகன்.
பணித்தான் காசிராஜன் தன் காவலனிடம்,
“பேணி அழைத்துச் செல் மகோற்கடரிடம்!”
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.