• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

ஸ்ரீ வேங்கடேச புராணம்

1. சூத முனிவர்


நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்;
நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு,


பகவத் த்யானமும், பகவத் சர்ச்சைகளும்,
அகத்தை வென்ற முனிவர்கள் இடையே!


சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்
“பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம்,


பகவான் நிகழ்த்திய லீலாவிநோதங்கள், என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவி குளிர!”


அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்.


“கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள்,
வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை.


வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு
புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#1. Sootha maharushi


NeimichAraNyam is a wonderful tapovanam. Bagavath dhyAnam and discussions about God go on there all the time, between the sages and rushis who have conquered their minds.


Sootha maharushi enjoyed talking about God. The rushis gathered in NeimichAraNyam told him, “We want to listen to the stories about NArAyaNan. Which is his favorite place on earth? What are the leelAs and miracles performed by him there?”


Sage Sootha replied, “The leelAs performed by NArAyaNan in SeshAchalam are endless. I shall relate them to you as a purANam.”


https://sreevenkatesapuraanam.wordpress.com/வேங்கடேச-புராணம்/1-சூத-முனிவர்/
 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#1b. விஸ்வரூபன்

“அறிந்து கொள்ள வேண்டும் முதலில் நாம்
விருத்திரன் இந்திரன் பகைமையின் காரணம்.


தத்துவ ஞானியாகத் தேவர்களில் சிறந்திருந்த
துவஷ்ட பிரஜாபதி வெறுத்தான் இந்திரனை.


உருவாக்கினான் மூன்று தலை உடைய மகன்
திரிசிரன் என்னும் விஸ்வரூபனைத் துவஷ்டா.


வசீகரித்தான் விஸ்வரூபன் அனைவரையும்;
வசீகரித்தான் தன் மூன்று பிரகாச முகங்களால்.


செய்தான் வேத அத்யயனம் ஒரு முகத்தால்;
செய்தான் சுரபானம் இன்னும் ஒரு முகத்தால்;


கண்டான் உலக நிகழ்வுகளை ஒரு முகத்தால்;
கொண்டான் புலன் அடக்கமும், நல்ல மனமும்.


தவம் செய்யலானான் பஞ்ச அக்னிகள் நடுவே.
தவம் செய்யலானான் ஏகாக்கிர சிந்தையோடு.


கவலை பற்றிக் கொண்டது இந்திரனை – திரிசிரன்
தவ வலிமை பெற்றுவிட்டால் பறி போகும் தன் பதவி.


‘முளையிலேயே கிள்ள வேண்டும் பகைவனை;
வளரவிடக் கூடாது வலிய மரமாகப் பகைவனை.


கெடுக்க வேண்டும் தீவிரத் தவத்தை உடனடியாக!
கெடுக்க வேண்டும் காம உணர்வுகளைத் தூண்டி!


அனுப்புவேன் அப்சரஸ்களைத் திரிசிரனிடம்;
அழிப்பேன் திரிசிரனின் தீவிரத் தவத்தை நான்!”


அழைத்தான் தேவ கன்னியர் அனைவரையும்;
விழைந்தான் அவர்கள் உதவியைக் கோரிப் பெற.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#1b. Viswaroopan


“First of all, we must know the reason for the enmity between ViruthrAsuran and Indra. Thvashta PrajApati was a famous Deva but he hated Indra. He created a son Viswaroopan also known as Trisiras, with three heads.


Viswaroopan became a favourite of everyone by his good looks and good conduct. He recited Veda with one of his three faces, he ate and drank with the second face and he watched the happenings of the world with his third face.


He started doing severe penance as he sat surrounded by five agnis. He had focused all his concentration in his penance. Indra got worried because if Trisiras completed his penance and got more power, he might displace Indra from his seat as the ruler of heaven.


Indra told himself,’I have to nip my enemy in the bud. It will be foolish to let him grow into a mighty enemy and then try to get rid of him. I must disturb his penance by arousing his lust and love for women. I shall send all my beautiful apsaras to him and ruin his penance.’


Indra called all his divine damsels, the apsaras, and sought their help in his lowly scheme.





 
BHAARGAVA PURAANAM - PART 2

#45f. திருமணம்

விரைந்தனர் மரீசியிடம் ஆசிரம வாசிகள்,
உரைத்தனர் அந்தணன் வருகை குறித்து.


‘எதிர் நோக்கி இருந்த வினாயகரே அவர்!”
எதிர் கொண்டழைக்க ஓடினார் ரிஷி மரீசி.


“புத்திரியை ஏற்றுக் கொண்டருள வேண்டும்,
உத்தரவு வேண்டும் மணஏற்பாடுகள் செய்ய!”


பிரம்மாண்டமான பந்தலை அமைத்தனர்
பிரமன், விஷ்ணு, இந்திராதி தேவர்கள்.


முனிபுங்கவர்களை அழைத்தனர் உளமார;
இனிதாகத் திருமணத்தை நடத்துவதற்கு


வல்லபையின் வலக்கரம் விநாயகர் பற்ற,
வாழ்த்துக் கூறினார் வந்திருந்த அதிதிகள்.


பன்னிரு குமாரிகளுடன் வந்தார் விஷ்ணு.
பன்னிருவரையும் அளித்தார் பகவானுக்கு.


விநாயக பெருமானை வேண்டினார் விஷ்ணு.
“விஸ்வரூபத்தைக் காட்டியருள வேண்டும்.


ஞான மார்க்கத்தைப் போதிக்க வேண்டும்.”
ஞான மார்க்கத்தை போதித்து அருளினார்.


வரங்களை வாரி வாரி வழங்கினார்;
இருப்பிடம் திரும்பினர் அனைவரும்.


குறைவின்றி வாழ்ந்தனர் நெடுங்காலம்
திருவடி சேர்ந்தனர் இறைவன் அருளால்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#45f. The Wedding


The people who lived in Mareechi’s Ashram rushed to tell him about the arrival of a Brahmin. Mareechi knew that it was none other than VinAyaka and ran to receive him with due honor.


He requested VinAyaka to marry his daughter VallabhA and also give him permission to go ahead with the wedding arrangements. VinAyaka agreed to both.


Brahma, VishNu and Indra got ready a huge pandal with the help of the other DEvA. All the sages were invited in order to perform the wedding in a grand manner.


VinAyaka married VallabhA and they were blessed by all the guests of honor. VishNu presented his twelve daughters to VinAyaka. Vishnu prayed to VinAyaka to reveal his viswaroopam and teach the JnAna mArggam. VinAyaka obliged. In addition to these he showered several boons on the people who had gathered for his wedding.


Everybody went back to their respective places. Those who got blessed by VinAyaka lived for a long time and finally reached his lotus feet, when they left this world.



 
SRI VENKATESA PURAANAM

2a. ஸ்வேத வராஹம்

ஓராயிரம் சதுர்யுகங்கள் பிரமனின் ஒரு பகல்;
ஓராயிரம் சதுர்யுகங்கள் பிரமனின் ஒரு இரவு.


பிரமனின் ஒருநாள் பொழுது நீளும் நமக்கு
இரண்டாயிரம் சதுர்யுகங்களாக பூவுலகில்!


ஒரு நாள் முடிந்ததும் எரிப்பான் சூரியன்;
ஒரு துளி மழை விழாது பூமியின் பரப்பில்!


முன்னமேயே இதை அறிந்த முனிவர்கள்
சென்று அடைக்கலம் புகுவர் ஞானவுலகில்


மரம், செடி, கொடி, ஜீவராசிகள் அனைத்தும்
எரிந்து சாம்பலாகிவிடும் அதீதஉஷ்ணத்தில்.


தொடர்ந்து வீசும் காற்று பல ஆண்டுகளுக்கு.
அடர்ந்த மேகத்திறள் உருவாகும் வானில்.


கொட்டும் கனமழை பூமியின் மேற்பரப்பு அதிர;
கெட்டிப்பட்டு பூமி பதிந்து விடும் பாதாளத்தில்!


பொங்கி எழுகின்ற ஜலப் பிரவாகத்தால்
தாங்கும் நீர் மகரலோகம் வரையிலும்!


வடியாது நீர் பிரமனின் இரவு முடியும் வரை
படைப்பைத் தொடங்க வேண்டும் மீண்டும்!


வெள்ளைப் பன்றி உருவெடுப்பார் விஷ்ணு;
வெள்ளத்தில் தேடிச் செல்வார் பூவுலகினை.


பாய் போலச் சுருட்டி ஒளித்து வைத்திருப்பான்
பாதாளத்தில் பூமியை அரக்கன் ஹிரண்யாக்ஷன்.


தரணியை வெளிக் கொணரும் முன்பு வராஹம்
ஹிரண்யாக்ஷனை வெற்றி கொள்ள வேண்டும்!


தொடங்கும் துவந்த யுத்தம் இருவரிடையே!
தொடரும் துவந்த யுத்தம் வெகு நீண்டகாலம்!


கூரிய நகங்களாலும், கோரைப் பற்களாலும்
கிழித்து அரக்கனை அழித்து விடும் வராஹம்.


ஜலத்தில் கலந்து விடும் பெருகும் குருதி நதி
ஜலப்ரவாஹம் ஆகிவிடும் செந்நீராக அப்போது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#2a. Sweta VarAham


The day time Brahma lokam lasts for one thousand chatur-yugams on earth. Brahma’s night time lasts another one thousand chatur-yugams on earth. Brahma’s one full day and night lasts for two thousand chatur-yugams on earth.


When Brahma’s one such day gets over, the Sun would start scorching the earth mercilessly. Not a single drop of rain would fall from the sky. The sages and rushis who would know this well before they happen, would take refuge in the gnaana lokam.


Tress, plants, creepers and all living things would get scorched by the sun’s rays. Fierce wind would blow for many years. Dense rain clouds would form in the sky, as the earth get cooled by the wind.


Then rain would pour down, beating the surface of the earth harsh. The earth would become denser and harder and sink to the pAtAla lokam. The rain water would stand as high as the Mahara lokam till Brahma’s night gets over.


Creation must take place on the next day all over once again. Vishnu would assume the form of a white boar and go looking for the earth in the Paataala lokam.


HirNyAkshan would have hidden the earth in the PAtAla. Vishnu – the white boar- would have to win over him and kill him before the earth could be saved and brought up from PAtAla.


The white boar and the HinraNyAkshan would engage in a dwandva yuddham. It would go on for a very loNg time. Finally the white boar would kill the asuran HirNyAkshan using his sharp canine teeth and nails.
The stream of blood flowing from HiraNyAkshan would mix with the water making it a red colored ocean.





 
DEVI BGAAGAVATAM - SKANDA 6

6#1c. முயற்சி தோற்றது!

“கர்வம் ரூப லாவண்யத்தில் கொண்டுள்ளீர்!
சர்வம் செய்ய வல்ல உருவம் கொண்டுள்ளீர்!


தவம் புரிகின்றான் திரிசிரன் மிகத் தீவிரமாக;
தவம் பலித்தால் பறிபோகும் என் அரசப் பதவி.


விரையுங்கள் திரிசிரனின் தவச் சாலைக்கு;
கலையுங்கள் தவத்தைக் காமச் சுவையால்.


அபாயம் நேராமல் சுவர்க்கத்தைக் காத்திட
சகாயம் செய்யுங்கள் தேவப் பெண்களே!”


“அஞ்ச வேண்டாம் அமரர்களின் அரசனே!
கொஞ்சமும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.


திரிசிரனை மயக்குவது கடின வேலையா?
திரிசிரன் திரிவான் மோஹ வெறி கொண்டு!


வசப்படுத்தி விடுவோம் அவனை எளிதாக;
இசைவான் தவத்தை விடுத்துக் காமத்துக்கு.”


சென்றனர் திரிசிரன் அமர்ந்திருந்த இடம்.
முயன்றனர் தவத்தைக் கெடுத்து மயக்கிட.


பாடல், ஆடல், சிருங்கர சேஷ்டைகள்
பலன் தரவில்லை இவற்றில் எதுவுமே.


பூரணமாக லயித்திருந்தான் தவத்தில் திரிசிரன்;
ஆரணங்குகளின் முயற்சி தோற்றது பரிதாபமாக.


பாடல்கள் விழவில்லை செவிடன் செவிகளில்;
ஆடல்கள் விழவில்லை அந்தகன் கண்களில்!


முயன்றனர் சளைக்காமல் மேலும் மேலும்;
முயன்று முயன்று தோல்வியே அடைந்தனர்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#1c. The defeat of the Apsaras


Indra told the Apsaras, “You are very proud of your beauty and charms. You have lovely figures which can disturb any saint. Trisiran is doing severe penance. If he succeeds in his penance, he will displace me from my ruler ship of heaven.


Please proceed immediately to Trisiran and disturb his penance by arousing his lust. You can save the swarggam and me by doing this great timely favour.”


The Apsaras replied, ” Forget your worries oh king Indra. Disturbing Trisiran will be an easy job for us. He will be chasing us instead of doing his penance in a very short time. He will agree to enjoy pleasures with us rather than pursue his tapas.”


The Apsaras went to the place where Trisiran was doing penance They exhibited all their talents in singing, dancing and other provocative activities. But Trisiran remained unperturbed and immersed in his intense tapas.


Their songs fell on a deaf man’s ears and their dances fell on a blind man’s eyes. They kept trying more and more until finally they had to give up!



 
BHAARGAVA PURAANAM - PART 2

#46a. சோமநாதன் முக்தி

பிரம்மதேவன் வியாசருக்குக் கூறியதை
பிருகுமுனி சோமகாந்தனுக்குக் கூறினார்.

“இடைவிடாது பரம்பொருளை ஆராதித்தால்
திடமாக நிறைவேரும் உன் அபிலாஷைகள்.”

சோமகாந்தன் ஜெபித்தான் மந்திரங்களை.
சோமகாந்தன் தியானித்தான் விநாயகரை.

ஆண்டு ஒன்று உருண்டோடியது – வந்தது
அழகிய விமானம் அழைத்துச் செல்வதற்கு.

தேவகணங்கள் தெரிவித்தன வரவேற்பினை.
சோமகாந்தன் பணிந்தான் பிருகு முனிவரை.

“விநாயகர் மகிமையை விவரமாகக் கேட்டு
விடாமல் தியானித்தீர் விநாயகரை நீங்கள்.

திவ்விய லோகத்துக்குச் செல்வீர் நால்வரும்!”
திவ்விய சரீரங்களுடன் ஏறினர் விமானம்.

சோமகாந்தனிடம் கூறினாள் சுதன்மை,
“ஏமகண்டனைக் காண்போம் செல்லுமுன்.

நற்பேற்றினைச் சொல்லவேண்டும் – மகன்
குற்றமற்ற நம் உடலைக் காணவேண்டும்!

தேவகணங்கள் கூறின சோமகாந்தனிடம்,
“தேவி கூறியது சரி என்பதே எம் கருத்து.

தேவகணங்கள் கூறின சோமகாந்தனிடம்,
“தேவி கூறியது சரி என்பதே எம் கருத்து.

குமாரர் பூஜித்து வருகிறார் விநாயகரை.
விமானத்தை நிறுத்துவோம் நகர் அருகே.

குமாரனை வரவழைத்து விடைபெற்றபின்
விமானம் ஏறிச் செல்வோம் விண்ணுலகு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#46a. SomakAntan

Brugu rushi told SomakAntan what Brahma had told to sage VyAsa. “If you meditate on VinAyaka with no other thoughts, he will surely make your wishes come true.”

SomakAntan chanted VinAyaka’s names. He meditated on VinAyaka. One year passed by and VinAyaka’s vimAnam came down to transport them to the VinAyaka lOkam.

The DEva gaNaa welcomed them to enter the vimAnam. SomakAntan and the others paid obeisance to sage Brugu. They got into the vimAnam. Sudanmai told her husband SomakAntan,

“We must take leave of our son HEmakaNtan. I am sure he will be very happy to learn that we are going to VinAyaka lOkam and that we are bestowed with blemish-less divya sareeram.”

The DEva gaNa agreed to this and told the king, “You son HEmakaNtan is now an ardent devotee of VinAyaka. We will stop the vimAnam outside his city. We can call him over to our vimAnam and take leave of him before we go to VinAyaka lOkam.”

 
VENKATESA PURAANAM

2b. கிரீடாசலம்

ஞான லோகத்தில், தியானத்தில் இருந்த,
மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை.


தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார்
வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே.


ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே;
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே.


சிருஷ்டியைத் தொடங்கினான் பிரமதேவன்
சிருஷ்டித்தான் சூரிய, சந்திரரை முதலில்.


பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர்
பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்.


பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான்
பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்.


கருடனைப் பணித்தார், “வைகுந்தம் செல்க!
பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க!”


வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்;
வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்!


கோமதி நதிக்குத் தெற்கேயும், மற்றும்
கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது.


நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்,
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்!


காய் கனி, மூலிகைகளால் நிறைந்தது;
கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது;


ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது
ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது.


தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப்
பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது.


இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம்,
கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே.


நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட
நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்.


அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம்
அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்.


எழுந்தருளினார் வராஹ பெருமான் – தாம்
விழைந்தபடி பூவுலகில், விமானத்தின் கீழ்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#2b. Kireedaachalam


The sages and rushis who were in the GnAna lokam realized this. VarAhamoorthi came out of the water supporting the earth on his face.

He established the earth as before. He established the seven oceans as before. Brahma started his creation. He created the Sun and the Moon first. Then he created the other living beings as per their order.


VarAhamoorthi wished to stay back on earth. He ordered Garuda,”Go to Vaikunta and bring my KireedAchalam down to the earth. Garuda flew to Vaikunta. Varaahamoorthi selected the spot where the KireedAchalam must be placed. It was to the south of the river Gomati and to the west of the eastern ocean.


NAraayanagiri and KireedAchalam are one and the same. Its peaks were loaded with the precious gems. It was flourishing with vegetable, fruits and herbs. Fragrant flowers bloomed on the hill. Birds sang their sweet songs and the running streams made a sweet gurgling sound.


When the KireedAchalam was set on the selected spot, it resembled Aadiseshan sleeping on the earth. There was a sparkling pond called Swami PushkariNi in between the hills and amidst the trees.


Gem studded pillars supported a vimAnam which had several beautiful manadapams attached to it. It was situated on the bank of the pond Swami PushkariNi. VaAhamoorthi took his place under the vimAnam – as his heart had desired.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#1d. இந்திரன் வஞ்சகம்

பணிந்தனர் தவத்தின் தீவிரத்துக்கு;
துணியவில்லை திரும்பிச் செல்வதற்கு!


தங்கினர் அவன் அருகே பல நாட்கள்.
ஏங்கினர் அவன் கவனத்தை கவர்ந்திட.


பயன் தரவில்லை அழகியர் முயற்சிகள்;
தயங்கியபடிச் சென்றனர் சுவர்க்கலோகம்.


வாடிய முகங்களே பறை சாற்றின – அவர்கள்
ஆடிய ஆட்டம் பயன் தரவில்லை என்பதை.


“தோற்றுவிட்டோம் திரிசிரன் முன்பு நாங்கள்!
போற்றுகின்றோம் அவன் புலனடக்கத்தை.


செய்யுங்கள் வேறு முயற்சி ஒன்று – அவன்
மெய்யான தவத்தைக் கலைப்பதற்கு!


சாபம் வாங்காமல் வந்தது ஓரு பெரிய
சாதனை போல உணருகின்றோம் ” என்று


வெட்கத்துடன் சென்றனர் தேவ மகளிர்.
வெட்கம் இன்றிச் சென்றான் இந்திரன்;


அஞ்சவில்லை பாவச் செயல் புரிந்திட;
‘வஞ்சகத்தால் வெல்வேன் திரிசிரனை!’


பசி வந்தாலே பத்தும் பறந்து போகும் எனில்
பதவி படுத்தும் பாட்டைச் சொல்ல முடியுமா!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#1d. The Treachery of Indra


The Apsaras bowed to the power of self control of Viswaroopan. They did not dare to return to swargga without accomplishing their mission. They spent many days at his feet.


They tried their best to grab his attention. But they did not succeed at all. Then they reluctantly returned to the swarggam. Their down cast expression declared to Indra that they had failed in their assigned mission.


The Apsaras told Indra, “We failed in our mission miserably. We have to praise Viswaroopan’s perfect self control. You may try to disturb him by some other method.
We are glad we came back without incurring his wrath and getting cursed.” The humbled Apsaras went back to their abodes.

Indra had to try a new scheme. He wanted to ruin Viswaroopan by treachery. The ruler-ship of heaven is too dear to be given up so easily or so swiftly.



 
BHAARGAVA PURAANAM - PART 2

#46b. ஏமகண்டன்.

விமானம் இறங்கியது நகருக்கு வெளியே.
குமாரனிடம் சென்றனர் இரு அமைச்சர்கள்.


தந்தை, தாயுடன் சென்ற இரு அமைச்சர்கள்
தந்தை, தாயின்றித் திரும்புவதைக் கண்டான்.


அஞ்சினான் ஆபத்து நேர்ந்து இருக்குமோ என.
அமைதி கொண்டான் ஆலோசித்த பின்னர்.


வரவேற்றான் அமைச்சர்களை அன்புடன்;
“வந்த காரணத்தைக் கூறுங்கள் நீங்கள்!


தந்தையும், தாயும் நலமாக உள்ளனரா?
தந்தையின் நோய் குணமாகிவிட்டதா?


பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் நாங்கள்
ஆர்வத்துடன் கேட்டோம் கணபதி மகிமை.


நோய் நீங்கி மறைந்து விட்டது – கிடைத்தது
தாய், தந்தையர்க்கு விண்ணுலக வாழ்வு!


பூவுடன் சிறந்த நாரும் நறுமணம் பெறும்.
மேருவுடன் சேர்ந்த காகமும் பொன் நிறம்!


தந்தையாருடன் சென்றதால் எங்களுக்கும்
வந்துள்ளது வாய்ப்பு விண்ணுலகில் வாழ.


விண்ணுலகு ஏகுமுன் விடை பெறவேண்டி
விமானத்தில் உள்ளனர் நகருக்கு வெளியே!


விரைந்தான் ஏமகண்டன் பெற்றோரைத் தரிசிக்க,
விரைந்தனர் நகர மக்கள் அவனைத் தொடர்ந்து.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


# 46b. HEmakaNtan


The VimAnam stopped at the outskirts of the city. The King and the Queen stayed back in the VimAnam with the DEva gaNa and the two loyal ministers went to meet HEmakaNtan.


At first HEmakaNtan got worried to see the ministers returning unaccompanied by his parents. But the happy expression in their faces conveyed that there was nothing to worry about.


He welcomed them very warmly and asked.” May I know what brings you here sirs? How are my dear parents the King and the Queen? Has my father’s illness got cured?”


The ministers replied, ” It was due to our good deeds done in some previous birth that we had the opportunity to listen to the greatness of VinAyaka from Brugu maharishi. The King’s disease is completely cured.


The King and the Queen will go to VinAyaka lOkam in a VimAnam. Since we accompanied them, we too got the chance to go with them there too. They want to take leave of you and are waiting in the VimAnam in the outskirts of the city.”


HEmakaNtan was thrilled to listen to such a piece of good news and rushed to meet his parents. All the citizens were interested to see their king cured of that dreadful disease and followed HEmakaNtan eagerly.




 
SRI VENKATESA PURAANAM

2c. ஸ்துதி

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால்
வந்து பூமியில் துதித்தனர் வானவர், முனிவர்,


இந்திரன், பிரமன், துவாதச ஆதித்யர்கள்,
ருத்திரர், தேவர், வசுக்கள், திக்பாலகர்கள்,


கந்தருவர், சப்த ரிஷிகள், மருத் கணங்கள்!
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்,


“தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த
ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில்.


ப்ரபாவமும், தோற்றமும் மாறவேயில்லை!
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்.’


மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே,
தோற்றத்தையும், தன் முக விலாசத்தையும்!


அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்;
அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்,.


கருணை பொழியும் கமலக் கண்களுடனும்;
கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்;


கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை.


வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால் – ஸ்வேத
வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#2c. Sthuti


Since Varaahamoorthi stayed back on the earth the Deva, rushis, Indra, Brahma, Dwaadasa Aadithya, Ekaadasa Rudra, ashta Vasu, ashta Dikpaalakaa, Gandharva, Sapta rushi and the 49 Marut gaNa came down to the earth to worship him.


They all had only one prayer,”When you saved the earth from HiraNyaakshan you had a long and terrifying fight with him. You still retain the same fierce expression in your face. We pray that you must bless us and all the other devotees with a pleasant smiling face”


Varaahamoorthi smiled and changed his expression and appearance. He stood there in Kireedaachalam, under the gem studded vimaanam, with his four powerful arms, two beautiful Devi, merciful eyes shaped like the petals of a lotus flower and with an attractive appearance – to bless his devotees with whatever they wish for.


Since Vishnu took the form of a white boar, this Kalpam was named as Sweta Varaaha Kalpam.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#2a. விஸ்வகர்மா

பதவியை இழக்கத் தயார் இல்லை இந்திரன்;
பதவி அடையக் கூடாது திரிசிரன் கைகளை.


சென்றான் திரிசிரனிடம் இந்திரன் ஐராவதம் ஏறி.
கண்டான் திரிசிரனை வீராசனத்தில், தியானத்தில்.


பிரகாசித்தான் திவ்வியமான தவ ஒளியுடன்.
பிரகாசித்தான் சூரியன், அக்னி போலவே.


வீசினான் வஜ்ஜிராயுதத்தை இந்திரன் சினத்துடன்;
வீசிய வஜ்ஜிராயுதம் வீழ்த்தி விட்டது திரிசிரனை!


ஆனந்தித்தான் இது கண்ட இந்திரன் – ஆனால்
ஆதங்கம் கொண்டனர் இது கண்ட முனிவர்கள்.


“குற்றமற்ற தவசியைக் கொன்றான் இந்திரன்!
குற்றம் நீங்குமா பிரம்மஹத்தி செய்தவனுக்கு?”


பிரகாசித்தான் அப்போதும் திரிசிரன் முன்போலவே;
பிரமித்தான்; கவலையுற்றான் இதைக் கண்ட இந்திரன்.


“அறுத்து எறிவாய் மூன்று சிரங்களையும் !” என
ஆணையிட்டான் விஸ்வகர்மாவுக்கு இந்திரன்.


“வெட்ட முடியாது திரிசிரனை என் பரசுவால்!
வெட்ட மாட்டேன் ஒரு நல்ல தபஸ்வியை நான்.


பிரம்மஹத்தி பீடித்தால் நான் என்ன செய்வேன்?”
மறுத்தான் விஸ்வகர்மா தலைகளைக் கொய்திட.


“போருக்கு வந்தவனைக் கொல்லலாம் – ஆனால்
வீராசனத்தில் தியானத்தில் அமர்ந்தவனை அல்ல!


என்ன பலன் கிடைக்கும் இந்தப் பாதகச் செயலால்?
எதற்குப் புரியவேண்டும் இந்த பாதகத்தை?’ என்றான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#2a. Viswakarma


Indra was not willing to lose his power and place in swarggam. Trisiran should never usurp his place in the heaven. Indra mounted on his white royal elephant AirAvat and went looking for Trisiran.


Trisiran was in deep meditation, seated in VeerAsanam and completely lost to the world. Indra was jealous of the brilliant aura Trisiran emitted – earned by the power of the intense penance he was performing.


Indra threw his VajrAyudam and Trisiran fell dead. Indra felt happy and relieved but the sages became sad to watch this unprovoked attack.


“Indra has killed a brahmana and incurred brahma hatthi dosham! He can never get out of the bad effect of this murderous act!” The dead body of Trisiran appeared brilliant and very much alive.

Indra got worried and ordered Viswakarma to cut off the three heads of Trisiran. Viswakarma refused saying, “I can not severe the three heads of Trisiran with my parasu. I can never commit such a crime to a peaceful tapasvi.

I will be afflicted with brahma hatthi dosham if I do. I can kill an enemy in a war but not a brahmanan in deep meditation. What is the use of this atrocity? Why should I oblige you and obey you?” Viswakarma demanded Indra



 
BHAARGAVA PURAANAM - PART 2

#46c. விநாயக லோகம்

விமானத்தில் இருந்த தன் பெற்றோரை
விழுந்து வணங்கினான் ஏமகண்டன்.


“கவலை தீர்ந்தேன் கண்களால் கண்டதால்;
உவகை கொண்டேன் நோய் மறைந்ததால்!


விருப்பம் இல்லை தங்களைப் பிரிந்து வாழ!
மறுப்புக் கூறாமல் உடன் அழைத்துச் செல்வீர்.”


நகரமக்களும் வேண்டினர் சோமகாந்தனிடம்,
நம்மையும் உம்மோடு அழைத்துச் செல்வீர்.”


“ஏற்றுக் கொள்ளமுடியாது வேண்டுகோளை!
பேற்றினை அடையவேண்டும் முயற்சியால்!


பூர்வஜன்ம புண்ணியம் தரவேண்டும் பலனை;
ஆர்வம் இருந்தால் கிடைத்துவிடாது நற்பேறு.


விதித்த கர்மங்களைச் செய்து முடித்த பிறகே
விடுக்க முடியும் உலக வாழ்வை உங்களால்!


விரும்புகிறேன் உங்களைக் கூட்டிச் செல்ல.
வருந்துகிறேன் என் இலயாமையை எண்ணி.”


தேவகணங்கள் குறுக்கிட்டுக் கூறின அப்போது,
“ஏமகண்டன் பூசித்து வருகிறார் விநாயகரை.


நற்பேற்றினைப் பெறும் தகுதி உடையவரே.
நற்பேற்றினைப் பெறமுடியும் நகர மக்களும்!


விநாயகர் மஹிமையைக் கேட்ட பலனை
விநியோகம் நீங்கள் விரும்பிச் செய்தால்!”


தன் நற்பலனைத் தன் நாட்டும் மக்களுக்குத்
தத்தம் செய்தான் சோமகாந்தன் மனமுவந்து.


திவ்விய சரீரங்கள் பெற்றனர் அனைவருமே!
திவ்விய விமானத்தில் ஏறினர் அனைவருமே!


விமானம் எழும்பியது மண்ணுலகிலிருந்து;
விமானம் சென்றடைந்தது விண்ணுலகினை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#46c. VinAyaka lOkam


HEmakaNtan paid obeisance to his parents seated in the VimAnam. He told them, “I am happy to have seen you both. I am happy that father is cured of his hideous disease. I do not want live separated from you anymore. Please take me with you to where you are going.”


The citizens also joined in this request now, “Oh dear king! We too have no wish to live away from you. Kindly take us with you to whichever place you are going!”


The king replied to them firmly, “Your request can not be accepted. Everything must be earned by one’s own merits and hard work. Wishing for something is one thing. Working to achieve is quite another. You have to finish all the prescribed karma here before you can think of leaving this world. I am sorry I am not able to oblige to your request.”


Now the DEva gaNa intervened and spoke,”HemakaNtan is an ardent devotee of Lord VinAyaka. He is fit or entering the VinAyaka lOkam on his own merits and the puNya earned by him.

As for the citizens, they too can get the entry to VinAyaka lokam if you will to give them kindheartedly the puNya earned by you by listening to the greatness of VinAyaka. ”

The kindhearted King gave the puNya earned by him to his citizens. Now they were all fit for the heavenward journey. Everyone got a divine body. The divine VimAnam accommodated everyone and they took off to the VinAyaka lOkam.



 
#47. பலச்ருதி

விநாயக புராணத்தை விரும்பிப் படித்தாலும்,
விநாயக புராணத்தை எடுத்துச் சொன்னாலும்,

நீங்கி விடும் ஏழேழு ஜன்மங்களில் இழைத்த
தீங்குகள் அனைத்தும் என்பது தான் சத்தியம்.


பாவங்களின் பட்டியல்:-


1. செய்நன்றி மறத்தல்

2. பிறருக்குத் துன்பம் இழைத்தல்,
3. சத்கர்மாக்களைச் செய்யாதிருத்தல்
4. குருவுக்கு உரிய தக்ஷணை கொடதிருத்தல்
5. ஆலயங்களை அசுத்தப் படுத்துதல்

6. பஞ்ச பூதங்களை அவமதித்தல்

7. அந்தணர், ஆ, சூரியன், சந்திரன் இவற்றை வணங்காது இருத்தல்
8. உண்ணும் உணவைத் தொழாது இருத்தல்
9. அதிதிகள், அடிமைகளுக்கு உணவு கொடாமல் இருத்தல்
10. பெரியவர்கள் உண்ணும் முன்பே தான் உண்ணுதல்

11. ஒரு கையால் தானம் வழங்குதல்

12. அந்திப் பொழுதில் தீபத்தை வணங்காது இருத்தல்
13. இருவருக்கு இடையே புகுந்து செல்லுதல்
14. பொது இடங்களையு நீர் நிலைகளையும் அசிங்கம் செய்தல்
15. பரஸ்திரீ கமனம் செய்தல்

16. பஞ்ச மாபாதகங்கள் செய்தல்

17. பொறாமைப்படுதல்
18. வீட்டில் கடவுளுக்குப் பூஜை செய்யாது இருத்தல்
19. நெருப்பைத் தாண்டுதல்
20. தலயில் வைத்த எண்ணையை வழித்து உடலில் தடவுதல்

21. மனைவியைப் புகழுதல் ( அப்படிப் போடு!!!)

22. தொடை மேல் தட்டை வைத்து உண்ணுதல்
23. பட்டினி கிடந்து உடலையும், உயிரையும் வாட்டுதல்
24. பூமியை நகத்தால் கீறுதல்
25. வஸ்திரம் இன்றி நீரில் இறங்குதல்

26. மந்திரங்களைத் தகுதி இல்லாதவர்களுக்கு உபதேசித்தல்

27. பெரியவர்கள் அமரும் ஆசனத்தைக் காலால் உதைத்தல்
28. நகத்தையும், ரோமத்தையும் பற்களால் கடித்தல்.
29. உறங்கும் பெரியவர்களை எழுப்புதல்
30. பொய் சொல்லுதல்

31. நல்லவர்களை ஏசுதல்

32. காலோடு காலைத் தேய்த்துக் கழுவுதல்
33. இடல் கையால் தலையைத் தொடுதல்
34. நின்றும், நடந்து, படுத்தும் உண்ணுதல்
35. அடியார்களைத் தூஷித்தல்

36. கர்மாக்களைச் செய்து இருத்தல்

37. தகாத காலத்தில் மனைவியுடன் கூடுதல்
38. தீபத்தை வாயால் ஊதி அணைத்தல்
39. பெண்கள் பரபுருஷரை விரும்புதல்
40. செய்யக் கூடாதவற்றைச் செய்தல்

( இப்போது தெரிகின்றதா தினமும் நாம் எத்தனை
பாவங்கள் செய்கின்றோம் அறிந்தும் அறியாமலும்)


இது புராண காலத்திய பட்டியல்! இன்று இன்னமும்
ஒரு நாற்பது புதுப் பாவங்களைச் சேர்க்க முடியும்!!



 
#47. Phala sruti

Whoever reads this VinAyaka PurANam or listens to it with devotion will be freed from all the sins committed by him or her in past births – knowingly or unknowingly.

The list of sins:-


1. ingratitude

2. himsa
3. not doing good deeds
4. not paying guru dhakshiNa
5. rendering the temples dirty.

6. insulting the five elements (pancha boothas)

7. Not worshiping Brahmins, cows, the sun and the moon.
8. not respecting the food one eats
9. not feeding the guests and the servants
10. eating before the elders have eaten food.

11. donating something using only one hand.

12. not worshiping the lamp at sunset.
13. passing in between two persons
14. rendering the public places and water bodies filthy
15. coveting another man’s wife

16. doing any of the five great sins

17. feeling jealous
18. neglecting the puja at one’s home
19. jumping over fire
20. removing the excess oil applied to the hair and smearing it on the body

21. praising one’s wife

22. eating from a plate kept on one’s thighs
23. starving and punishing one’s body and soul
24. scratching the earth with one’s nails
25. getting into water body stark naked

26. teaching mantras to the unworthy people

27. kicking the seat/ aasanam used by the elder
28. biting one’s nails or hair
29. waking up the sleeping elders
30. uttering lies

31. accusing the virtuous people

32. rubbing one leg on the other while washing them
33. touching one’s head with left hand
34. eating while standing, walking or lying down
35. speaking ill of the devotees

36. failing to do one’s karma/ duties

37. indulgence in sex during the wrong time of the day
38. blowing off a lit lamp
39. women desiring the other men
40. doing things which are prohibited clearly.


 
#49. விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)


குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)


குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)


முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


பாடலாசிரியர்: ஔவையார்




 
venkatesa puraanam

3a. நாரதர்

கலியுகத்தில் நிகழ்த்தினர் மாபெரும் யாகம்
காசியபர் முதலிய முனிபுங்கவர்கள் சேர்ந்து.


வேதகோஷம் ஓங்கி ஒலித்தது யாகசாலையில்
தேவரிஷி நாரதர் வந்தார் அந்த யாகசாலைக்கு.


“அவிர் பாகம் அளிக்கப் போவது யாருக்கு?” என
ஆர்வத்துடன் கேட்டார் முனிவர்களை நாரதர்.


“இன்னமும் முடிவு செய்யவில்லை அதனை
இருக்கிறதே காலஅவகாசம் அதற்கு” என்றனர்.


“சத்துவ குணமே முக்குணங்களில் உத்தமம்;
சத்துவ குணம் கொண்டவரைக் கண்டறிந்து,


பூர்த்தி செய்யுங்கள் உங்கள் யாகத்தை ” என்று
பற்ற வைத்தார் நாரதர் கலஹம் நடப்பதற்கு.


“இறைவன் குணத்தை ஆராயும் அளவிற்குத்
திறமை உள்ளவர் யார் உள்ளார் உலகினில்?”


தேர்வு செய்தனர் பிருகுவை பிற முனிவர்கள்;
தேர்வு செய்யவேண்டும் அவர் சத்துவ குணனை.


சத்திய லோகம் சென்றார் பிருகு முனிவர்;
பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார் பிரமன்.


சாவித்திரி, காயத்திரி தேவியருடன் இருந்தனர்
சரஸ்வதி தேவியும், திக்பாலகர்களும் குழுமி!


நின்று கொண்டே இருந்தார் பிருகு – அவரைக்
கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பிரமன்!


‘எத்தனை நேரம் தான் நிற்பது?” என்று எண்ணிச்
சத்தம் இன்றி அமர்ந்துவிட்டார் பிருகு முனிவர்.


அனுமதி பெறாமலேயே அமர்ந்த முனிவரை
அலட்சியம் செய்தார் பிரம தேவன் சபையில்


முனிவரை அலட்சியம் செய்த பிரமனுக்குக்
கனிவான சத்துவகுணம் இல்லவே இல்லை!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#3a. Naradar


The sages performed a huge yaagaa in Kaliyuga. The chanting of Vedas reverberated all over the place. Deva rushi Narada visited the yaagasaalaa. He asked the rushis, “Who will you offer the Havis to?” The rushis replied, “We have not decided about that yet. There is still plenty of time to think about it!”


Naradar said,”Sathva guna is the best among the three gunas. Find out which of the Gods is most satvic in his temperament and offer the Havis to him.”


Who was wise enough to test the satvic temperament of the gods and find the answer? All the sages felt that sage Brugu was the one suitable for that task. So it was decided that Brugu would test the trimoorthis and find out who was the most satvic among them.


Brugu went to Satya Lokam first. Brahma was seated on his lotus flower surrounded by his three Devis – Savithri, Gaayatri and Saraswathi along with the ashta dikpaalakaas. Brugu kept standing for a long time. Brahma did not tell him a to take a seat. So finally Brugu himself took a seat
quietly.


Brahma did not like the sage sitting down without his permission and so ignored his presence in the gathering. Brugu thought to himself, “A god with such a temperament is anything but satvic in nature!”

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#2b. விருத்திராசுரன் (1)

“அளிப்பேன் அவிர் பாகம் உனக்கும் நான்;
அளிப்பேன் யாகப் பசுவின் தலையை நான்!”


இந்திரன் ஆசை காட்டினான் விஸ்வகர்மாவுக்கு;
இந்திரன் திட்டம் பலித்துப் பலன் அளித்தது!


மறந்தான் விஸ்வகர்மா நீதி நன்நெறிகளை!
துறந்தான் அறிவை; வெட்டினான் சிரங்களை!


வெளிப்பட்டது ஒரு நெருப்புக் கோழி
உலகைத் திரிசிரன் கண்டுவந்த முகத்தில்!


வெளிப்பட்டது ஒரு அழகிய மாடப்புறா
சுரபானம் செய்த திரிசிரன் முகத்தில் இருந்து!


வெளிப்பட்டது ஒரு மீன் கொத்திப் பறவை
வேதங்கள் ஓதிய திரிசிரன் முகத்தில் இருந்து.


பிரம்மஹத்தி தோஷத்துக்கு அஞ்சவில்லை இந்திரன்
பிரம்மாண்ட பலசாலி திரிசிரனை வீழ்த்திய பின்னர்.


‘அநியாயமாகக் கொல்லப் பட்டான் திரிசிரன்!’
அறிந்தவுடன் கோபம் கொண்டான் துவஷ்டா.


“படைக்கின்றேன் இந்திரனைக் கொல்லும் மகனை ;
உடைக்கின்றேன் இந்திரன் கர்வத்தை இப்போதே!”


உக்கிரமான யாகம் செய்தான் துவஷ்டா பிரஜாபதி;
அக்கினி உருவத்துடன் தோன்றினான் ஒருவன்!


“இந்திரன் பகைவனே! நீ விருத்தி அடைவாய்!’
விருத்தி அடைவாய் என் தவ வலிமையால்! என


ஆகாயம் வரை உயர்ந்து பரந்து வளர்ந்தான்;
அக்னி வடிவாகத் தோன்றிய விருத்திராசுரன்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#2b. ViruthrAsuran (1)


Indra tempted Viswakarma with attractive perks and benefits now. “I shall give you, your share of havisu in every yAgam. I shall present you with the head of the animal scarificed in every yAgam!”


Viswakarma needed no more tempting and cut off the three heads of Thrisiran very promptly. An ostrich emerged from the face with which Trisiran was observing the world.


A dove emerged from the face with which Trisiran used to drink SurA pAnam. A kingfisher emerged from the third face which used to chant the Vedas.


Indra was not laid down by the sin of brahma hatthi dosham. He was happy that he had got rid of his powerful enemy Viswaroopan also known as Trisiran.


When Thvashta PrajApati learned about the treacherous manner in which Indra had killed his son Trisiran, he became very angry. He swore that he would create a son who would kill Indra his mortal enemy and avenge the death of Trisiran.


Thvashta performed a terrible yAgam seeking a powerful son who could kill Indra. A fiery son appeared from the fire and grew bigger and bigger till he stood up scaling the heaven and the earth.


Since he grew bigger and bigger with the power of penance of Thvashta PrajApati, he was named as ViruthrAsuran.



 
kanda puraanam - urpatthik kaandam

இது ஒரு மாக் கடல் தான்!

இது ஒரு பாக் கடலும் கூட!

மொத்தம் ஆறு காண்டங்கள்;

நூற்று நாற்பத்தொரு படலங்கள் ;

பதினாயிரத்து முன்னூன்று

நாற்பது ஐந்து 'பா'க்கள்!

கந்த புராணத்தை எழுத

கந்தனே அருள வேண்டும்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!

ஆனை முகனும், ஆறு முகனும், அன்னையும்

அருள் புரிந்தால் எல்லாமே சாத்தியம் ஆகும் .

இது வேதம் கூறும் சத்தியம்.

நம்பிக்கையுடன் தொடர்ந்து படிப்போம்

நம்பியின் கதையை நாம் அனைவரும்!
 
kanda puraanam - urpatthik kaandam

1a. கடவுள் வாழ்த்து.

ராகம் : கானடா.
தாளம்: ஆதி.


கந்தனே வா வா கண்மணியே வா வா
காந்தி மயில் ஏறி வரும் கட்டழகா வா வா

என் தாய் வா என் முன் வா என் செல்வா வா வா
இன்னுயிரே இன்னமுதே எம் பிரானே வாவா


நந்தாமணி விளக்கே நன்னயமே வா வா
நாயேனைக் காத்தருளும் நாயகனே வா வா

சிந்தை குறை தீர்க்கும் செந்திலோனே வா வா
சிந்தூர வர்ண சிவ சிற்பரமே வா வா


 
விநாயகர் காப்பு.

திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகடச் சக்கரத் தாமரை நாயகன்
அகடச் சக்கர வின்மனி யாவுறை
விகடச் சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.


திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், ஐந்து செம்முகங்களையும் உடையவன்,
சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன்,

விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!

முருகக் கடவுள் போற்றி! போற்றி!

மூவிரு முகங்கள் போற்றி! முகம்பொழி கருணை போற்றி!
ஏவருந் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி! போற்றி!


 
1b. கடவுள் வாழ்த்து.

சிவபிரான்.

திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெருவந் தனைசெய்து அறிதற்கு அரும்பெற்றி எய்தி
அருவந் தனையும் உருவத்தையும் அன்றி நின்றான்
ஒருவன் தனது பதந்தன்னை உளத்துள் வைப்பாம். (1)

இறைவி.

செறிதரும் உயிர்தொறுந் திகழ்ந்து மன்னிய
மறுவறும் அரனிடம் மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவும் ஆக்கிய
இறைவிதன் மலரடி இறைஞ்சி ஏத்துவாம் (2)


விநாயகர்

மண்ணுல கத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம் (3)


முருகக் கடவுள்

இருப்பரங் குறைத்திடும் எஃக வேலுடைப்
பொருப்பரங்(கு) உணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங்(கு) அமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம் (4)

சூரலை வாயிடைத் தொலைத்து மார்பு கீண்டு
ஈரலை வாயிடும் எஃகம் ஏந்தியே
வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச்
சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம் (5)

காவினன் குடிலுறு காமர் பொன்னகர்
மேவினன் குடிவர விளியச் சூர் முதல்
பூவினன் குடிலையும் பொருட்கு மாலுற
ஆவினன் குடிவரும் அமலற் போற்றுவாம் (6)

நீரகத் தேதனை நினையும் அன்பினோர்
பேரகத் தலமரும் பிறவி நீத்திடும்
தாரகத் துருவமாந் தலைமை எய்திய
ஏரகத்(து) அறுமுகன் அடிகள் ஏத்துவாம் (7)

ஒன்றுதொ றாடலை ஒருவி ஆவிமெய்
துன்றுதொ றாடலைத் தொடங்கி ஐவகை
மன்றுதொ றாடிய வள்ளல் காமுறக்
குன்றுதொ றாடிய குமாரற் போற்றுவாம் (8)

எழமுதி ரைப்புனத்(து) இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர் களி(று) என வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம். (9)

ஈறுசேர் பொழுதினும் இறுதி இன்றியே
மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சியில்
கூறுசீர் புனைதரு குமரக் கோட்டம் வாழ்
ஆறுமாமுகப் பிரான் அடிகள் போற்றுவாம்(10)

நூற்பயன்

இந்திரர் ஆகிப் பார்மேல் இன்பமுற்(று) இனிது மேவிச்
சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி அதனிற் சேர்வர்
அந்தமில் அவுணர் தங்கள் அடல்கெட முனிந்த செவ்வேல்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித்(து) ஒதுவோரே (11)



 
1c. திருக்கயிலை மலை.

1. உற்பத்திக் காண்டம்.

#1. திருக்கயிலை மலை. (ஒரு வர்ணனை)

இறைவனின் இனிய இருப்பிடம் கயிலை;
உறைந்த பாற்கடல் அன்னது கயிலை;


வெள்ளியை நிகர்த்தது திருக்கயிலை;
வெள்ளி நிலவுகளின் குவியல் கயிலை;


பொன்வண்ணனைக் காண அன்பர் கூட்டம்;
பொற்பிரம்புடன் ஒழுங்குபடுத்தும் நந்திதேவன்;


இசைந்து முழங்கும் இன்னிசைக் கருவிகள்;
இசைவாய் ஒலிக்கும் இன்னிசை வல்லுனர்கள்!



 
SRI VENKATESA PURAANAM

3b. ஈசனும், உமையும்

பிரமனின் போக்குப் பிடிக்காத பிருகு
பிரம்மலோகத்தை விட்டுச் சென்றார்.


அடுத்துச் சென்றார் கயிலை மலைக்கு
அங்கும் ஆனார் சிவபூஜையில் கரடியாக.


தனிமையில் இனிமை கண்டிருந்தவரின்
தனிமையைக் குலைத்தார் பிருகுமுனிவர்.


கவனம் வேறிடத்தில் இருந்ததால் ஈசன்
கவனிக்கவில்லை பிருகுவின் வரவை.


பெண்ணுக்கு உண்டு அதிக உள்ளுணர்வு;
கண்டு விட்டாள் உமை முனிவர் வரவை.


விலகிச் செல்லுமாறு ஈசனுக்குணர்த்த
விலகிச் செல்லாமல நின்று கொண்டிருந்த,


முனிவர் மேல் கொண்டான் சீற்றம் சிவன்;
முனிவரும்கொண்டார் சீற்றம் சிவனிடம்.


தேடி வந்தவரைக் காக்க வைத்தது ஒன்று;
தேடி வந்தவரை வரவேற்காதது இரண்டு;


நாடி வந்த காரணத்தை வினவாதது மூன்று;
நாடி வந்தவரிடம் சினம் கொள்வது நான்கு!


தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்த
சிவபெருமான் மேல் சீற்றம் பொங்கியது.


கோபத்தின் மிகுதியால் பிருகு முனிவர்
சாபத்தை அளித்தார் சிவ பெருமானுக்கு,


“உலகில் இனிக் கிடையாது உனக்கு
உருவ வழிபாடு .என்ற ஒன்று!” என்றார்


நின்றுவிட்டது சிவனுக்கு உருவ வழிபாடு
இன்றும் எங்கும் நடப்பது லிங்க வழிபாடே.


சத்துவ குணம் இல்லாதவன் சிவன் என்று
உத்தம குணனைத் தேடினார் வைகுந்தத்தில்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#3b. Siva and Uma

Brugu rushi left Brahma lokam in a huff after being slighted and insulted by Brahma. He went straight to Kailash. Siva and Uma were enjoying each others’ company in solitude. Brugu disturbed their solitude. Siva did not notice the arrival of the rushi but Uma noticed it and told Siva to keep some distance.


Siva got annoyed with Brugu who disturbed their happy moments and stood rooted to the spot without leaving the place silently. Burgu also got annoyed with him since Siva did not welcome him, made him wait, did not ask for the reason which brought him there and on top of all these got angry with him.


He cursed Siva, “Hence forth you will not have any puja performed for your roopam. ” The worship now changed to the linga roopam. Brugu was disappointed with Siva and went to vaikuntam to continue his quest for the most satvic god.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#2c. விருத்திராசுரன் (2)

“சோகம் கொண்டது ஏன் தந்தையே? உங்கள்
சோகத்தைப் போக்கச் செய்வேன் எதையும் நான்!


குடிக்க வேண்டுமா கடல் நீர் முழுவதையும்?
பொடிக்க வேண்டுமா மலைகளைக் குன்றுகளை?


திசை மாறச் செய்ய வேண்டுமா சூரியனை?
திக்பாலகரோடு அழிக்க வேண்டுமா இந்திரனை?


தலை கீழாகத் தூக்க வேண்டுமா உலகத்தை?
தண்ணீரில் மூழ்கடிக்க வேண்டுமா உலகத்தை?”


“விருத்தி அடைந்தாய் என் சக்தியால் – நீ
விருத்திராசுரன் என்ற பெயர் பெறுவாய் மகனே !


திரிசிரன் உனக்கு அண்ணன், என் மூத்த மகன்;
திரிசிரனைக் கொன்றான் இந்திரன் தயையின்றி!


அறுத்து எறிந்தான் தவ சீலனின் தலைகளை!
அழிப்பாய் இந்திரானை நீ சென்று வென்று!”


அளித்தான் குறையாத அம்பறாத் துணி;
அளித்தான் கதை, தனுசு, சூலம், தோமரம்.


அளித்தான் ஒரு கவசமும், அழகிய தேரும்,
அளித்தான் ஆசிகள் போரில் வெற்றி பெற.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#2c. ViruthrAsuran (2)


ViruthrAsuran asked Thvashta PrajApati, “Why are you so sad my dear father? I will do anything to make you come out of your sorrow. Do I need to drink up the water from the oceans? Do I need to break into fine dust all the tall hills and mountains?


Do I need to make the Sun change its path ? Need I destroy indra along with his ashta dik pAlakAs? Do I need to lift the earth and hold it upside down or do I have to submerge it in water?”


Thvastaa became happy to hear these words and replied to his son, “You grew up immensely by my power. You will be aptly called as ViruthrAsuran from now on.


You had an elder brother Viswaroopan. He was mercilessly murdered by the treacherous Indra while he was lost in deep meditation. Indra killed your elder brother and cut off his three heads. I shall avenge this murder with your help”.


Thvashta presented ViruthrAsuran with a bow and inexhaustible supply of arrows, a mace, a soolam (Trident) and a thomaram. He also presneted his son with an armour and a chariot. He blessed him and said, “Go forth and avenge the dealth of Viswaroopan, my elder son and your elder brother!”


 
Last edited:

Latest ads

Back
Top