• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

2a. மலைமகள்.

அவமதித்துத் தங்களை இகழ்ந்தான் தக்ஷன்,
அவன் மகளாக நான் இருந்தேன் சில காலம்;


அவன் தந்த இவ்வுடலைத் துறந்து விட்டு,
அவமதிப்பில்லாத இன்னுடல் வேண்டும்!”


“இமவான் விழைவது உன்னையே மகளாக!
இமவான் விழைவது என்னையே மருமகனாக.


அவன் ஆவல் தீரும் வண்ணம் சென்று
அவன் மகளாக வளர்ந்து வருவாய் நீ!


ஆண்டுகள் ஐந்து முடிந்தவுடன் வருவாய்
மீண்டும் என்னிடம் உன் தவப் பயனாக.”


வெள்ளியங் கயிலையில் ஒரு மானசவாவி;
வெள்ளியை நிகர்த்த தூய்மையானது அது.


அழகிய மலர்ப் பொழில் அதன் அருகில்,
தொழிலே தவமாகிய இமவான் அங்கே.


உமையவளை மகளாக விழைந்தான் அவன்,
உமையாள் கிடந்தாள் ஒரு தாமரை மலரில்.


பச்சிளம் குழவியைக் கண்டு மகிழ்ந்தான்;
“இச்சை நிறைவேறியது இறைஅருளால்!”

விண்ணாளும் ஈசன் மனம் கனிந்துவிட்ட
தண்ணருளை எண்ணி வியந்து மகிழ்ந்தான்.


அன்புடன் குழவியை வாரி அணைத்தான்;
அன்புப் பரிசாக்கினான் மனைவி மோனைக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#2. Uma Devi.


“Lord! Dakshan humiliated you. I was his daughter DhAkshAyaNi for some time. I want to give up this body associated with him and a get a new one – of which I need not feel ashamed.” Uma spoke to Siva.


Siva replied,”HimavAn desires you to become his dear daughter and me to become his dear son in law. So now you may become his beloved daughter. When you attain the age of five years, start your penance in order to reunite with me.”


MAnasarOvar is a holy lake in HimAlayas. There are beautiful flower gardens near it. HimavAn was doing penance in one of them. Suddenly he he saw a pretty female child on one of the lotus flowers in front of him.


He knew that it was God’s answer to his own prayers. He lifted the divine child from the flower in ecstasy and ran home to present it to his wife Mona Devi.



 
SRI VENKATESA PURAANAM

3c. நாரணன்


கைலாசம் விடுத்த பின்பு பிருகு முனிவர்
வைகுந்தநாதனைச் சோதிக்க விரைந்தார்.


ஆனந்தமாகச சயனித்திருந்தார் நாரணன்
ஆதிசேஷன் மீது; லக்ஷ்மி பாதங்களை வருட.


தேவியின் பணிவிடையில் மெய்மறந்திருந்த
நாதன் உணரவில்லை பிருகுவின் வருகையை.


‘வேஷம் போடுகிறான் மாயவன் – இவன்
வேஷத்தைக் கலைக்கிறேன் இப்போதே!’


இரண்டு இடங்களில் அலட்சியம் செய்தனர்
இங்கும் அதுவே தொடருகின்றதே!’ என்று


நாரணன் மார்பில் ஓங்கி உதைத்தார் பிருகு,
“நாடகம் போதும் கண்டும் காணாதது போல!”


உதைத்த காலைப் பற்றினார் நாரயணன்,
உதைத்த போதும் சினம் கொள்ளவில்லை.


“கால் வலித்திருக்குமே முனிவரே! ” எனக்
கால் வலி போக அழுத்திவிட்டார் பாதத்தை.


“தூக்க மயக்கத்தில் இருந்து விட்டேன் நான்!
துயர் அடைந்தீரோ என்னை உதைத்
தால்?”

முனிவருகு ஏற்பட்ட திகைப்பு அளவற்றது!
‘கனிவுக்கும் ஓர் எல்லையே இல்லையோ?


உதைத்த காலைச் சபித்திருக்க வேண்டும்
உதைத்த காலை உபசரிக்கிறாரே!’ என்று


“கண்டு கொண்டேன் நான் சத்துவ குணனை
கண்டு கொண்டேன் நான் உத்தம குணனை!”

பாதங்களில் விழுந்து வணங்கினார் முனிவர்.
பாதகத்தை மன்னிக்க வேண்டினார் முனிவர்.


யாகசாலை திரும்பினர் வெற்றியுடன் – மூன்று
லோகத்திலும் சத்துவ குணனை கண்டறிந்ததால்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#3c. NArAyaNan


Brugu reached Vaikuntam to test NArAyaNan’s temperament. He was sleeping on Aadhiseshan and Lakshmi Devi was massaging his feet gently. He did not realize that Brugu had arrived there.


Brugu had already been insulted in Satya Lokam and KailAsam. He thought the same thing was
going to happen here since NArAyaNan ignored him. He got angry thinking to himself,”He too is enacting a drama. I will expose him now!” and kicked hard on NArAyaNan’s chest.


NArAyaNan must have gone into a fit of temper and cursed the feet that kicked him. But he apologized for not welcoming the rushi. He said, “I am sorry I was half asleep and did not know you had come. Your feet must be feeling the strain of kicking my hard chest!” He massaged the sage’s feet to relieve the pain and strain.


Brugu could not believe himself. Is there no limit for the patience and mercy of NArAyaNan? He fell at God’s feet and begged for pardon. He felt happy that he had succeeded in his mission and found the most satvic among the trimoorthis. He returned to the yAga SAla happily.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#3a. விருத்திரன் தவம் (1)

ஆசிகள் கூறினார் துவஷ்டப் பிரஜாபதி;
ஆசிகள் கூறினர் அங்கு வந்த அந்தணர்.


ஆயுதங்கள் ஏந்தித் திரண்டு வந்தனர்
அதுவரை ஒளிந்து வாழ்ந்த அசுர வீரர்.


விரைந்தனர் தூதர்கள் இந்திரன் சபைக்கு;
உரைத்தனர்,”ராஜனே! கேள் இச்செய்தியை.


வருகின்றான் பலவானான பகைவன் ஒருவன்;
உருவானவன் துவஷ்டவின் அபிசார யாகத்தில்.


அஞ்சி ஒளிந்திருந்த அசுர வீர்கள் மீண்டும் திரண்டு
எஞ்சி விடாமல் சேர்ந்துள்ளனர் அவன் தலைமையில்.


மேரு மலை போன்ற உருவம் கொண்டுள்ளான்!
பெருங் குரலோசையே அழித்து விடும் நம்மை!


பெரு முயற்சி செய்ய வேண்டிய வேளை இது;
வெறுமனே அமர்ந்திருப்பதற்கு அல்ல!” என்றனர்


“துர்ச்சகுனங்கள் தோன்றுகின்றன சுவர்க்கத்தில்;
கோர சப்தங்கள் எழுகின்றன நாற்புறங்களிலும்!


அரக்கியர் அச்சுறுத்துகின்றனர் கனவில் வந்து;
மிரட்டுகின்றன பூகம்பம் தூமகேது முதலியவை!”


சென்றான் குலகுரு பிருஹஸ்பதியிடம் இந்திரன்;
சொன்னான் தூதர்கள் மொழிந்தவற்றை அவருக்கு.


“வழி காட்டி உதவுங்கள் எங்களுக்குக் குருதேவா!
வருகின்ற ஆபத்திலிருந்து தப்புவதற்கு” என்றான்.


இந்திரனைப் பார்த்தார் ஏற இறங்கக் குலகுரு;
நொந்த உள்ளத்துடன் அவனிடம் பேசலுற்றார்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#3a. ViruthrAsuran’s penance (1)

Thvasta PrajApati blessed ViruthrAsuran. So did the brahmins who had came there. The asura warriors who were living in hiding till that time gathered under his leadership. They set out to the Swarggalokam (the heaven).


The messengers of Indra gave him this unpleasant message,” Oh king of Heaven! An enemy is invading our swarggalokam. He is as big as the Mount Meru. He has been created by Thvashta through an abichAra yAgam.


All the asuras who were living in hiding till now have come out and joined with him. His loud voice is enough to damage and destroy Heaven. Now it is the time to prepare for a war and not sit idly wasting precious time.”


The other Devas said, “Ill omens have become frequent in heaven. Weird noises are heard from all the four directions. Many hideous RAkshasis and demons appear in our nightmares. Tremors are felt and the comets are seen very often”


Indra got worried and went to Bruhaspati to consult him. The Devaguru was not happy with these developments and started talking to Indra thus.







 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

2b. மலைமகள்.

நெகிழ்ந்து குழவியை மோனை அணைத்ததும்
நிகழ்ந்தது ஓர் அற்புதம் அப்போது அங்கே!


அன்னை அளித்திட தாய்ப்பால் சுரந்தது.
அன்னை அளித்ததோ உலக அன்னைக்கு!


நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம்;
நாளொரு புதுமை, பொழுதொரு வளமை.


எண்ணி ஐந்து ஆண்டுகள் நிரம்பி விட்டன.
எண்ணினாள் அவள் அரும் தவம் செய்ய.


“பச்சிளம் குழந்தை நீ இன்னமும் கண்ணே!
பட்டுடல் தாங்காது கோரத் தவ வேகம்.


தவம் வேண்டாம் என் சொல் கேளடி!
தவம் இருந்து நான் பெற்ற பொன்மகளே!”


“அரனே உயிர்கள் அனைத்தையும் காப்பவன்.
அவனே இந்த எண்ணத்தையும் தந்தவன்.


அரனே என் அருந் தவப்பயன் ஆவான்.
அவனே எந்தன் தவத்தையும் காப்பான்.”


அமைத்தான் இமவான் ஒரு தவச் சாலை.
அளித்தான் பல தோழியர், துணைவியர்.


தினம் தவறாமல் சென்று கண்டான்;
மனம் கவர்ந்த மகள் செய் தவத்தை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1# 2b. Uma Devi.


The moment Mona Devi embraced the child, a miracle took place. Milk started flowing from her bosom to feed her dear child.


She took great care of the child who grew well and looked new every day. When she became five years old, she wanted to do tapas on Lord Siva.


HimavAn discouraged her since she was no more than a mere child. But Uma was adamant and said to him, “Siva takes care of every one of us. He has planted this thought in my mind. He will surely protect me and my tapas. So please do not worry dear father!”


HimavAn made the necessary arrangements for her doing tapas. He gave her and friends several servants to take care of them. He visited her every day to see the progress made by her.
 
SRI VENKATES PURAANAM

4. லக்ஷ்மியின் கோபம்

ஏகாந்தமாக இருந்த வேளையில் உள்ளே
வேகமாக வந்ததோடு நிற்கவில்லை பிருகு!


உதைத்தார் தன் இருப்பிடமான மார்பினை.
உதைத்த காலுக்கு நாரணனின் உபசாரம் வேறு.


வெகுண்டு எழுந்தாள் அமர்ந்த நிலையில் இருந்து.
வெலவெலத்துப் போனார் நாரணன் அதுகண்டு


பதறிய விஷ்ணு சாந்தப்படுத்தினார் லக்ஷ்மியை.
உதறித் தள்ளினாள் கோபம் குறையாத லக்ஷ்மி.


‘அசுத்தம் செய்தான் என் இருப்பிடத்தை பிருகு!
அதற்கு அவனைக் கொண்டாடினீர்கள்!” என்றாள்


“அவமதிக்கும் எண்ணம் இல்லை பிருகுவுக்கு!
அதீத பக்தி தந்த உரிமையில் உதைத்தான்” என,


“பக்தன் அவன் என்றால் பக்தையே நானும்.
பக்தன் ஒரு பக்தையை அவமதிக்கலாமா?


வாசஸ்தலம் களங்கப் பட்டது பிருகுவால்
வசிக்க முடியாது மீண்டும் அங்கு என்னால்.”


எத்தனை சொல்லியும் கேட்கவில்லை அவள்.
“என்னிருப்பிடத்தை உதைத்தான்! ” என்றாள்


வைகுந்தம் விடுத்தாள் லக்ஷ்மிதேவி உடனே.
வையகம் அடைந்தாள் தவக் கோலம் பூண்டிட.


கரவீரபுரம் சென்று அடைந்தாள் – அங்கு
பரந்தாமனின் பாதங்களை தியானித்தாள்


எப்படி இருக்குமோ லக்ஷ்மி இல்லாத இடம்
அப்படியே இருந்தது வைகுந்தம் இப்போது.


சோபை மறைந்தது; சோகம் நிறைந்தது;
சூனியமாக இருந்தது காணும் இடங்கள்!


வைகுண்ட விடுத்தான் நாரணனும்;
வையகம் அடைந்தான் நாரணனும் ;


சேஷாச்சலம் இருந்தது கரவீரபுரத்தின் அருகே
சேஷாச்சலத்தைத் தேர்வு செய்தார் நாரணன்


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#4. Lakshmi Devi’s anger

Brugu not only disturbed their privacy but also kicked Vishnu hard on his chest – in the same place where Lakshmi lived. She got annoyed when Vishnu massaged the foot that had kicked him.


She got up in anger and haste. Vishnu felt concerned by her anger. He tried to console her saying, “Brugu is our son and a great bhakta. He did this out of his closeness with us and not to insult me or you.”


“I am also a great bhakta of you. Is one bhakta allowed to insult another bhakta? I can not live in the place which has been polluted by his rude kick. I have to go away from here.” Lakshmi Devi was adamant.


Nothing could make her change her mind. Lakshmi Devi quit Vaikuntham and went to the earth. She reached Karaveerapuram and started to meditate on Vishnu.


Vaikuntham was a place deserted by Lakshmi and lost its auspiciousness and glory. Vishnu could not bear the separation and the lack of auspiciousness prevailing there. He too decided to go down to earth. He chose Seshaachalam which was very near to Karaveera puram.



 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#3b. விருத்திரன் தவம் (2)

“பாதகம் செய்தாய் நீ ஈவு இரக்கமின்றி
மாதவம் செய்த தபஸ்வியைக் கொன்று!


பரிஹாரம் அழித்து விடாது பாவங்களை;
பரிஹாசம் செய்தாய் நல்ல அறிவுரைகளை.


தோன்றிவிட்டான் பலவான் ஆன பகைவன்;
தோல்வி என்பதே இல்லாத விருத்திராசுரன்.


ஆயுதங்கள் பெற்றுள்ளான் உன்னை வெல்ல;
ஆயத்தம் செய்வது வீணே அவனை வெல்ல!”


அழைத்தான் தேவர்களில் வீரர்களை இந்திரன்;
அனுப்பினான் போருக்கு ஆயுத பாணிகளாக.


சென்றான் ஐராவதம் மீதேறிய இந்திரன்;
சென்றனர் அசுரப் படையை எதிர்கொள்ள.


நீண்டது போர் ஒரு நூறு ஆண்டுகளுக்கு;
நிற்க முடியவில்லை தேவர்களால் பிறகு.


சிதறி ஓடினர் தேவர்கள்; புறமுதுகிட்டனர்;
சிதறியோடுவது கண்டு சிரித்தான் விருத்திரன்!


மகிழ்ந்தான் துவஷ்டப் பிரஜாபதி இது கண்டு,
மகனுக்குச் சில அறிவுரைகள் கூறினான் தந்தை.


“நம்பாதே இனிமேல் யாரையுமே நீ மகனே!
நம்பிக்கை துரோகிகள் நிறைந்த உலகம் இது.


பகைவன் ஆகிவிட்டான் இந்திரன் உனக்கு!
பகைவனுக்கு அஞ்சாமை அறிவின்மை ஆகும்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#3b. ViruthrAsuran’s penance (2)


Bruhaspati told Indra, “You committed a grave sin by beheading Trisiran who was in deep meditation and who had done you no harm. ParihAram will not wash out the sins committed.


You ridiculed the good advice given to you. Now a mighty rival has risen. The mighty ViruthrAsuran does not know what it is like to be defeated. He has also obtained special weapons as powerful as your own. It is impossible to conquer him in a war.”


Indra sent for all the Deva warriors. He himself mounted on his white elephant AirAvat and went to face the army of the asuras in the battle field.


A terrible war ensued and went on for one hundred years. The Devas could not withstand the onslaught by the mighty asura army any longer! They ran away in utter confusion in every possible direction. ViruthrAsuran had a hearty laugh watching the Devas running away in confusion.


Thvashta PrajApati became happy with the success of his second son. He now warned Viruthran, ” Do not trust anyone my dear son. The world is filled with treacherous people who will not hesitate to betray and destroy you.

Indra is now your mortal enemy. Be very careful in all your dealings with him. Slighting an enemy – even if he is weak – is utter foolishness.”



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

3a. மேருமலை.

இறைவி கடும் தவம் செய்யும் வேளையில்,
குறைவற்ற திறன் விரும்பிய சூரபத்மன்

கடும் தவங்கள் செய்து வரங்கள் பெற்றான்;
கொடுமைகள் புரிந்து உலகை வாட்டினான்.

கல்லால மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தியின்
சொல்லைக் கடந்தவற்றின் உபதேசம் பெற்றும்,

மயக்கம் தீர்ந்து தங்கள் மனம் ஒடுங்காததால்,
கயிலையை அடைந்தனர் சனகாதியர் மீண்டும்.

“காமனைத் தவிர யாரையும் அனுமதியாதே!”
ஆணை பிறப்பித்தான் ஈசன் நந்திதேவனுக்கு.

சரியை, கிரியை, யோகம் என்றவற்றை
மறுபடியும் உபதேசித்தான் நால்வருக்கு.

ஞானம் விழைந்தனர் சனகாதியர்கள்.
“ஞானம் நாவினால் நவிலற்பாலதன்று!”

மோனத்தில் அமர்ந்த ஈசன் கணநேரத்தில்
ஞானம் அளிக்க மனம் ஒடுங்கினார்கள்.

சிவஞானம் அளித்த ஈசன் இருந்தான்
சிவயோகத்தில் ஒரு கணநேரம் மட்டுமே!

கண நேரம் நீண்டது உலகத்தினருக்கு
கணக்கற்ற பற்பல சதுர் யுகங்களாக!

காமம் நீங்கின உலகத்து உயிரினங்கள்.
காமம் இன்றேல் உயிரினம் தோன்றுமா?

உலக வளர்ச்சி தடைப்பட்டு நின்று விட்டது.
உலகத்து உயிரினங்கள் வியப்பில் மூழ்கின!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1 (#3.a) Creation comes to a halt!

While Parvathi was doing tapas, Soorapadman did severe penance and got many boons. He became intoxicated with his invincible power and started harassing the three worlds.

Sanakan and his three brothers had already got Siva’s upadesam, but they were still unable to control their minds. So they went to Kailash and begged Siva to give them JnAnam or pure knowledge.

Siva instructed Nandhi not to let anyone inside except Manmathan. He explained the “sariyai, kiriyai and yogam” again to the four brothers. They requested to be blessed with JnAam.

Siva replied that JnAnam cannot be imparted by mere words. He sat in Sivayogam and gave true knowledge and perfect bliss to the four brothers. Their minds were completely conquered now.

Siva sat in yoga only for a moment. But it extended to many yugams in the mortal world. The living creatures lost all interest in procreation and the creation itself came to a grinding halt and the srushti came to a standstill.

 
SRI VENKATESA PURAANAM

5a. எறும்புப் புற்று

நாற்புறங்களிலும் மலைச் சிகரங்கள்;
ஊற்றெடுத்து ஓடும் இனிய சுனைகள்;


சலசலத்து ஓடும் அழகிய சிற்றோடைகள்;
கலகலப்பால் மகிழ்வூட்டும் பறவையினங்கள் ;


பள்ளத்தாக்குகள் மலைகளின் இடையிடையில்;
உள்ளம் கொள்ளை கொள்ளும் இயற்கையெழில்;


தெளிந்த நீர்த் தடாகத்தைக் கண்டார் நாரணன்;
விளங்கிய ஆலயத்தையும் கண்டார் நாரணன்;


அழகிய மண்டபங்கள், விமானம் கொண்ட,
ஆதி வராஹ மூர்த்தியின் அழகிய ஆலயம்.


தடாகத்தில் நீராடி வராஹப் பெருமானிடம்
தங்குவதற்கு அனுமதி வேண்டினார் நாரணன்;


“எங்கு விருப்பமோ அங்கு தங்கலாம்!”எனத்
தங்கு தடையின்றி அனுமதித்தார் வராஹர்.


“தங்குவேன் இங்கேயே கலியுகம் முழுவதும்.
தடாகத்தில் நீராடித் தங்களைத் தொழுத பிறகே


இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் என்னையும்
இங்கே தொழ வரவேண்டும் இனிமேல்” என்றார்.


நாரணன் சேஷாசலம் சென்றதை அறிந்து
நாரணனைத் தேடி ஓடினான் பிரம்மதேவன்.


பிரிவுத்துயர் தாங்காமல் வருந்தி நாரணன்
திரிவதைக் கண்டு வருந்தினான் பிரமன்.


வெட்ட வெளியில், கட்டாந்தரையில்,
படுத்து உறங்கினார் வைகுந்தவாசன்.


அமைக்க விரும்பினான் இருப்பிடம் ஒன்றை
அமைத்தான் நிழல் தரும் புளிய மரத்தினை.


அமைத்தான் அதன் கீழ் எறும்புப் புற்றினை
அமைத்தான் இறங்கிச் செல்லப் படிக்கட்டு.


அமைத்தார் வேலைப்பாடுகள் நிறைந்த
அழகிய மண்டபத்தினை புற்றினுள் பிரமன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#5a. The anthill

The place was surrounded by many mountains. Sweet water streams were formed there and flowed down with a pleasant gurgling sound. The birds sang various sweet songs. There were valleys in between the mountains and the scenic beauty was captivating.


NArAyaNan saw the pond with sparkling clear water. He also saw the ancient and beautiful temple of VarAha moorthy. He took a holy dip in the pond and asked for the permission of the prevailing deity VarAha moorthy to stay there.


VarAha moorthy was happy and allowed to NArAyaNan to stay wherever he wished to stay.

NArAyaNan said, “I wish to stay on here till the end of Kali yuga. All the devotees who come here must take a holy dip in the pond and worship you first. They can come to see me afterwards.”


Brahma learned that NArAyan had gone to live on the earth. He ran in search of NArAyaNan. Brahma was sad to see NArAyaNan badly shaken by the separation from Lakshmi Devi. He was pained to see NAyrAyaNan sleeping on the hard earth in the open area. He wished to make a comfortable home for NArAyaNan.


He created a Tamarind tree which would give shade from the hot sun. He created a spacious anthill below the tree. There was a beautiful mandapam inside the anthill and a flight of steps to go into it.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#3c. விருத்திரன் தவம் (3)

“தவம் செய்ய வேண்டும் செல்வம் பெற்றிட;
தவம் செய்ய வேண்டும் பாக்கியம் பெற்றிட;


தவம் செய்ய வேண்டும் ஆட்சியைப் பெற்றிட;
தவம் செய்ய வேண்டும் வெற்றியைப் பெற்றிட;


தவம் செய்யாமல் சித்திக்காது எதுவுமே உனக்கு!
தவம் செய்வாய் மகனே நீயும் சென்று தனிமையில்!


வீராசனத்தில் அமர்ந்து நன்கு தியானிப்பாய்;
பிரம்ம தேவனை மனதில் நிலை நிறுத்துவாய்.


காட்சி அளிப்பான் பிரம்ம தேவன் உனக்கு;
மாட்சிமை பொருந்திய வரங்கள் பெறுவாய்!


அழிக்க வேண்டும் இந்திரனை முழுவதுமாக!
பழி தீர்க்காமல் அடையேன் மனநிம்மதி!”என,


வணங்கினான் விருத்திராசுரன் தன் தந்தையை;
இணங்கினான் அவன் கடும் தவம் செய்வதற்கு!


கந்த மாதன மலைக்குச் சென்றான் – தேவ
கங்கையில் நீராடிப் புனிதம் அடைந்தான்.


வீராசனத்தில் தியானித்தான் பிரம்மதேவனை;
விருத்திராசுரனின் தவம் தீவிரம் அடைந்தது.


தவத்தைக் குலைக்கும் முயற்சிகள் வீண்;
தவம் கலையவில்லை சிறிதளவும் கூட.


கின்னரர்கள், யக்ஷர்கள் அப்சரஸ்கள்,
பன்னகர்கள், வித்யாதரர், சர்ப்பங்கள்,


முயன்றன
ர் விருத்திரன் தவத்தைக் கலைக்க;
முயன்று, முயன்று தோற்றன
ர் தம் முயற்சிகளில்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#3c. ViruthrAsuran’s penance (3)


Thvashta PrajApati told his son ViruthrAsuran, “One must do penance in order to achieve wealth, good fortune, victory and kingdom. Without doing a sincere and serious penance, nothing can be achieved in this world.


Son! Go forth and do penance directed to Brahma Devan and seek rare boons from him. We must destroy Indra completely and avenge the death of Trisiran. Until then I will not have any peace of mind!”


ViruthrAsuran paid obeisance to Thvashta and went to GandhamAdana mountain for doing
penance towards Brahma. He bathed in the Deva Ganga and became purified for performing penance. He sat in VeerAsana and immersed himself in a deep and severe penance.


Kinnara, Yaksha, Apasars, Pannaga, Vidhyaadara and NAga treid their best to disturb and disrupt his penance but without any success.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANADAM

3b. இந்திரன் தவம்.

யோகத்தில் நம் ஈசன் அமர்ந்திருக்க,
துரோகம் இழைத்தான் சூரபத்மன்.


பரிவாரங்களுடன் தப்பிப்பிழைத்த
பரிதாப இந்திரன் இம்மண்ணுலகில்!


“இடர்ப்பாடுகளை நீக்க வல்லவன்
இறைவன் ஒருவன் மட்டுமே” என்று


கயிலை சென்றவன் காண முடியவில்லை,
கண்ணுதல் பிரானை கணநேரம் ஆகிலும்!


பானுகோபன் சூரனின் ஒரு வீர மகன்;
பானுவைப் போலவே கோபிப்பானோ?


பானுவிடமே கோபம் கொள்வானோ?
பானுகோபன் கோபத்துக்கு பலி சுவர்க்கம்!


தன் விண்ணகரத்தையும் அழித்துவிட்டு
தன் மகன் ஜெயந்தனையும் சிறைவைத்த,


கொடியவனை வெல்ல நல்ல வழி தேடி
கொடிய தவம் செய்தான் மேருவின் மேல்.


தவத்துக்கு மசியாதவனா நம் ஈசன்?
தவத்தை மெச்சிக் காட்சி தந்தான்.


ஏதும் அறியாதவர் போல் பேச, “ஈசன்
தீது நீக்கி அருள” வேண்டினான் இந்திரன்.


“என்னை இகழ்ந்த தக்ஷன் யாகத்துக்கு
முன்னம் நீங்கள் சென்றதன் பலன் இது.


என்னிடம் தோன்றுவான் ஒரு வீரமகன்
துன்பம் தீர்த்து உம் துயர் துடைத்திட!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#3b. Indra’s penance.


While Siva was immersed in Sivayogam, Soorapadman started disturbing the three worlds.

Indra escaped by the skin of his teeth and reached the earth with IndrAni and other Deva. When the solution of a problem proves to be beyond our capacity, only God should help us to solve it. Indra went to Kailash but he could not meet Siva.

Soorapadman’s son BhAnugOpan destroyed AmarAvathy the city on Indra and the Devas He imprisoned all the remaining Devas – including Indra’s son Jayanthan. Indra started doing severe penance on Mount Meru.


Siva was pleased and appeared in front of him. He spoke as if He was not aware of Indra’s problems. Indra explained his real plight and begged for Siva’s help.


“Dakshan humiliated me and yet all the Devas attended his yAga. This is the punishment for your folly. A valorous son will be born to me. He will put an end to all your troubles soon.” Siva consoled Indra.


 
SRI VENKATESA PURAANAM

5b. இடைப் பெண்

நாரணனுக்குப் பிடித்திருந்தது புதிய மண்டபம்;
நிரந்தரமாகத் தங்க விரும்பினான் அங்கேயே.


‘வைகுந்தம் விடுத்து விண்ணிலிருந்து நாரணன்
வையகம் வந்ததை அறிவிக்க வேண்டும் உடனே’.


கைலாசநாதனிடம் விரைந்து சென்றான் பிரமன்.
“சேஷாச்சலத்தில் உள்ளான் நாரணன்” என்றான்.


நாரணனுக்கு உதவிட ஆவல் கொண்டனர் ,
பிரமனும், பிரானும் விரைந்தனர் வையகம்.


சிறு பிணக்கினால் நாரணனிடமிருந்து
பிரிந்து சென்ற லக்ஷ்மியிடம் சென்றனர்.


கரவீரபுரம் வந்த பரமேச்வரன், பிரமனை
வரவேற்றாள் லக்ஷ்மிதேவி மனமுவந்து.


“தாங்கள் பிரிந்து வந்து விட்டதால் நாரணன்
தானும் வந்து விட்டார் இப்போது வையகம்.


அனாதை போல அலைந்து திரிகின்றார்
வனாந்தரங்களிலும், மலைச்சரிவுகளிலும்!


வராஹ பெருமான் கோவில் தடாகத்தருகே
இருப்பிடம் ஒன்றை அமைத்துவிட்டேன்.


ஆகாரத்துக்குச் செய்ய வேண்டும் ஒரு ஏற்பாடு.
அரனும், நானும் வைத்துள்ளோம் ஒரு திட்டம்.


மாறி விடுவோம் நாங்கள் இருவரும் உடனே
மடி சுரக்கும் ஜாதிப் பசுவாகவும், கன்றாகவும்!


தடை சொல்லாமல் தாங்களும் உதவ வேண்டும்;
இடைப் பெண்ணாக மாறிவிட வேண்டும் நீங்கள்.


சேஷாசலத்தின் அருகே சந்திரகிரியை ஆளும்
சோழ ராஜனிடம் விற்று விடுங்கள் எங்களை!”


சந்திரகிரியை நோக்கிப் புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி,
விந்தையான பசு, கன்றுடன் இடைப்பெண்ணாக மாறி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#5b. Lakshmi Devi


NArAyaNAn liked the mandapam in the anthill and wished to stay on there. Brahma had to tell Siva that NArAyaNan also had chosen to live on the earth. He rushed to Mount Kailash and told Siva, “NArAyaNan also lives on the earth now!”


Siva and Brahma wanted to help NArAyaNan. They went to Karaveera puram to meet Lakshmi Devi. She welcomed them heartily. Brahma told her,” After you left Vaikuntham, NArAyaNan could not stand your separation. He too has come down to live on the earth.


He roams around in the forests and on the slopes of the hills. He has no place to stay and no one to take care of him. I have arranged for a place for his stay. Now we have to arrange for his food.


I have a plan. I and Siva will change into a cow and its calf. You too please change into the woman who owns the cow and the calf and sell us to the Chozha king of Chandragiri.”


Lakshmi Devi agreed to oblige and help them as requested by them. She changed into a woman who owned the cow and the calf and went towards Chandragiri with the divine cow and calf.





 
Attention the Bhakta Jana of Sri Baalaaji (aka Sri Venkateswara)!

Do Not miss the special documentary on Tiruppathi

in National Geographic channel at 9 P.M. on 27th March 2017.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#4a. தேவாசுர யுத்தம் (1)

தவம் செய்தான் விருத்திரன் நூறு ஆண்டுகள்;
தவம் பலித்துக் காட்சி தந்தான் பிரம்ம தேவன்!


“எறும்புகளாலும், மரங்களாலும் மற்றும்
ஈரப் பொருட்களாலும், உலர்ந்தவற்றாலும்,


ஆயுதங்களாலும் நிகழக் கூடாது எனது மரணம்;
அளியுங்கள் தேவர்களை வெல்லும் வலிமையை.”


அளித்தான் பிரமன் கோரிய வரங்களை;
களித்தான் துவஷ்டா மகனைக் கண்டவுடன்.


தந்தையிடம் கூறினான் பெற்ற மேன்மைகளை;
தந்தை கூறினான் அறிவுரைகளை அவனுக்கு!


“பழி தீர்ப்பாய் திரிசிரனைக் கொன்றவனை;
பழி பாவத்துக்கு அஞ்சாத பாவி இந்திரனை.


திரிசிரன் அறிஞன், ஒழுக்கம் உடையவன்;
திரிசிரன் தபஸ்வி; சத்திய சீலனும் ஆவான்.


அவனைக் கொன்ற பாவி உள்ளான் உயிரோடு;
அவனைக் கொன்று இந்திரனாக வேண்டும் நீ!


தந்தைக்கு மகன் ஆற்றும் உதவியாக இதைச்
சிந்தையில் கொண்டு நிறைவேற்றுவாய் மகனே!”


படை நடத்தினான் விருத்திரன் இந்திரன் மீது
படையினை எதிர்கொண்டது கழுகு வியூகம்.


இந்திரன் இருந்தான் வியூகத்தின் நடுவே;
இந்திரனைப் பிடித்தான் விருத்திரன் எளிதாக


உருட்டிக் கசக்கி வாயில் இட்டு மென்று
இறுக்கக் கடித்து மெல்லத் தொடங்கினான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#4a. The war between Devas and Asuras(1)


Viruthran did severe penance for one hundred years. Brahma appeared in front of him and blessed him with the boons he sought.


“I should not get killed by ants nor by wood nor by anything wet nor by anything dry nor by weapons of any sort. Please give me the power to win over the Devas.”


Brahma gave these boons and disappeared from there. Thvashta was happy to see his son return with these special boons and told ViruthrAsuran one more time his only aim in life now.


” We have to avenge the cruel murder of Trisiran by Indra. Trisiran was a well learned man with a good conduct. He was a tapasvi and spoke the truth always. He is dead while Indra who murdered him treacherously still lives.


You must destroy him and become the next Indra. I do not wish for anything from you other than this my dear son. If you want to do anything to make me happy please do this.”


ViruthrAsuran invaded swarggam with his asura army. The Devas had formed the eagle Vyooha and Indra was well within its protection. But ViruthrAsuran caught hold of Indra, put him in his mouth and started chewing him with his mighty jaws.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

3c. பிரமனிடம் செல்லுதல்.

“இறைவன் கயிலையில் யோக நிலையில்!
இறைவியோ இமயத்தில் தவக் கோலத்தில்!

எப்படி இவர்களின் வீரமகன் தோன்றுவான்?
எப்போது எங்கள் துயர் துடைப்பான்?”

குருவின் பாதுகாவலில் இந்திராணி!
மறுபடிச் சென்றான் அவன் பிரமலோகம்.

படைத்தல் தொழில் நின்றே போனதால்,
சடைத்தல் மிகுந்து இருந்தான் பிரமன்.

தனது துயர்களைக் கூறினான் இந்திரன்,
தனக்கு ஈசன் தந்த வரத்தையும் கூட!

“துன்பங்களைத் தீர்க்கும் சூரமகன்
தோன்றுவது எப்போது, எப்படி?”

“ஈசனின் யோகம் நம் நன்மைக்கே.
பூசிக்கும் அன்னையின் தவக் கோலமும்.

நம் தீவினைப் பயன் தீர்ந்து போனதும்,
நம்பி அவதரிப்பான் நம்பிக்கை வை!

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினை ஆக்கும் அறிவாய்!

திருமாலின் திருவருள் ஒன்று இருந்தாலே
தீர்ந்துவிடும் நம் சிரமங்கள் எல்லாம்.”

அயன் சொற்படியே தேவர்கள் கூட்டம்
அய்யனிடம் சென்று சரண் புகுந்தது

அறிதுயிலில் மகிழும் திருமாலும்
பெரிதுவந்து இன்மொழிகள் பயின்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி .

1 (# 3c). A visit to Brahma lokam.

“Siva is inimmersed in his yoga nishta in Kailash. Devi is immersed in doing penance in HimAlayas. How and when will they get a son? When will he wipe out our troubles?” Indra got more and more confused as he thought on this line.

He left IndrAni under the protection of his kulaguru and went to Brahma lokam. Since creation had come to a grinding halt, Brahma was in boredom. Indra elaborated his troubles and told about Siva’s promise.

Brahma replied thus, “Whatever Siva does is for our own good. He will beget his valorous son as soon as our bad karmas are exhausted and we are ready for his grace. All the same we must do our part well. Let us visit Vishnu. He will surely guide us properly.”

So they all left for Vaikunta. Vishnu welcomed them and spoke to them kindly.


 
SRI VENKATESA PURAANAM

6a. பசுவின் மாயம்

கரவீர புரத்திலிருந்து புறப்பட்ட இம்மூவரும்
விரைவாகச் சென்றடைந்தனர் சந்திரகிரியை.


கன்றையும், பசுவையும் விற்க வந்ததாக
நின்ற காவலரிடம் கூறினாள் இடைச்சி.


கொழுகொழு பசுவும், மொழுமொழு கன்றும்,
அழகால் கவர்ந்தன காவலரின் உள்ளங்களை!


அறிவித்தனர் அதை அரசனிடம் சென்று;
தருவித்தான் அவன் அவர்களைத் அருகே.


பளபளப்போடும், சுழிகளோடும் கூடிய
பசுவும், கன்றும் கவர்ந்தன அரசனை.


அரசிக்கும் பிடித்துவிட்டது அவற்றை,
பராமரித்தாள் தன் கவனத்தில் வைத்து.


இடையன் செல்வான் தினமும் மலைக்கு,
விடியற் காலையில் பசுக்களை மேய்க்க.


அரண்மனை திரும்புவான் அன்றாடமும்.
ஆவினத்துடன், ஆதவன் மறையும் முன்.


மலைக்குச் சென்றபின் பசுவும், கன்றும்,
மலைச் சரிவில் ஒதுங்கிவிடும் தனியாக.


இடையனின் தலை மறைந்த உடனே
எடுக்கும் ஓட்டம் சேஷாச்சலத்துக்கு.


புற்றின் மேல் நின்று பசு பால் பொழிய
புற்றினுள்ளே பசியாறுவான் நாரணன்.


திரும்பக் கலந்துவிடும் பிற மாடுகளுடன்!
அறியவில்லை இடையன் இம் மாயத்தை!


பசுவைக் கறந்தாள் ராணியே சுயமாக;
பசு பால் தரவில்லை ராணிக்குச் சரியாக.


அதிக உணவு அளித்தாள் பசுவுக்கு எனினும்
அதிகப் பால் கரக்கவில்லை அந்த மாயப் பசு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#6a. The cow’s trick!


Brahma, Siva and Lakshmi Devi disguised as a cow, its calf and their seller respectively, reached Chandragiri soon. They went straight to the king’s palace.


The palace guards were duly impressed by the cow and its calf and reported to their king that a woman wanted to sell an excellent cow and its calf to the king.


The king called them to come come inside the palace. He like the appearance of the fine cow and its calf. The queen also liked them immensely so they were bought immediately. The queen personally took care of the new cow and its calf.


The cowherd in charge of the cattle drove them to the hill side every morning and drove them back to the palace before sun set. The new cow and calf joined with the rest of the cattle and went for grazing.


But soon they separated themselves from the rest of the cattle. They turned their back and raced to Seshaachalam as soon the cowherd and the cattle were out of their view.


The cow stood over the ant hills and let its milk flow down freely. Naaraayanan who was inside the anthill drank the rich milk to his fill. Later the cow and the calf mingled with the rest of the cattle -without the knowledge of the cowherd.


The queen personally milked the cow but it hardly gave any milk. She thought the feed was not sufficient and gave the cow more feed. But in spite of the rich and sufficient feed the cow continued to give far less milk than it should have given.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#4b. தேவாசுர யுத்தம் (2)

முறையிட்டனர் தேவர்கள் தம் குலகுருவிடம்,
மறுத்துக் கூறினார் குரு பிருஹஸ்பதி இதனை.

“இல்லை இறப்பு இந்திரனுக்கு இவ்வாறு – யாரும்
மெல்ல முடியாது, விழுங்கவும் முடியாது அவனை.

ஒட்டிக் கொண்டுள்ளான் கடை வாயினில் – இந்திரன்
பட்டுக் கொள்ளவில்லை விருத்திரன் பற்களிடையே.”

கொட்டாவி வந்தால் திறக்கும் வாய் என்று அவனைக்
கொட்டாவி விடச் செய்தனர் தேவர்கள் தந்திரமாக.

எய்தனர் ஜிரும்பிகாஸ்திரத்தை விருத்திராசுரன் மீது;
செய்தனர் விருத்திரன் வாயை அகலத் திறக்கும்படி!

சிறிய உருவெடுத்து வெளியேறிய இந்திரன் – பிறர்
அறியும் முன்பே அங்கிருந்து சென்று மறைந்தான்.

தொடர்ந்தது யுத்தம் பதினாயிரம் ஆண்டுகள்;
தொடர்ந்தனர் தேவர் விருத்திரனுடன் போரை.

வெல்ல முடியவில்லை விருத்திரனைப் போரில்;
செல்லத் தொடங்கினர் தேவர்கள் ஒளிந்து வாழ.

கைப் பற்றினான் சுவர்க்கத்தை விருத்திரன்;
கைபற்றினான் சுவர்க்கத்தின் சம்பத்துக்களை!

விருத்திரன் அசுரருடன் வாழ்ந்தான் சுவர்க்கத்தில்;
விருத்திரன் அசுரருடன் துய்த்தான் சுவர்க்க போகம்.

திருக்கயிலைக்குச் சென்றது தேவர்களின் சமூஹம்,
“கருணைக் கடலே! இழந்தோம் சுவர்க்க போகத்தை!

உதவ வேண்டும் எமக்கு இழந்தவற்றை மீட்டிட;
உதவுபவர் யாருமில்லை உம்மைத் தவிர!” என,

“செல்லுங்கள் பிரம்மனுடன் சேர்ந்து கொண்டு;
செல்லுங்கள் திருமாலிடம் குறைகளைச் சொல்ல!

தந்திரம் மிகுந்தவன் நாராயணன் – தன்னை நம்பி
வந்தவரைக் கை விட மாட்டான் ” என்றான் சிவன்.

சென்றனர் வைகுண்ட நாதனிடம் தேவர்கள் – ப
கன்றனர் தம் மனக் குறைகளை அவனிடம்.

அபயம் அளித்தான்; நாரணன் மனம் கனிந்தான்;
“அபாயம் விலகும் வெகு விரைவில்!” என்றான்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#4b. The war between Devas and Asuras (2)

The Devas ran to their kulaguru Bruhaspati and reported this. He did not believe it to be possible. He told the Devas, “Such a horrible death is not in Indra’s destiny. He may be caught inside the mouth but he is not in between the rows of teeth of ViruthrAsuran.”

The Devas wanted to make ViruthrAsuran open his mouth wide to enable Indra to escape. They shot the ‘Jrumbhika asthram’ on ViruthrAsuran. The effect of the arrow was to produce a sensation of yawning. When ViruthrAsuran yawned widely, Indra shrunk his size, escaped from his mouth undetected and disappeared before anyone could miss him.

The war continued and went on for ten thousand years. The Devas could not defeat ViruthrAsuran. They ran away and hid themselves in fear. ViruthrAsuran occupied the Heaven with his kith, kin and clan. They enjoyed the pleasures of heaven.

The crestfallen Devas went to Lord Siva and said, “Oh lord! we have lost our heaven and everything in it to ViruthrAsuran. We have no one to help us except you! Kindly help us to recover all that we have lost to the ViruthrAsuran and his asura clan!”

Lord Siva took pity on them and said, “Go to VishNu accompanied by Brahma and explain your problems to him. VishNu is very clever and cunning. He never forsakes those who seek his help. He will surely find out a way to recover the heaven from the asuras.”

The Devas went to Brahma first and then to VishNu along with him. VishNu gave them a sympathetic ear and gave them abhayam. He promised that they would regain their heaven very soon.


 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

3d. மாலுடன் சந்திப்பு.

கூடி வந்திருந்த தேவர்களைக் கண்டதும்
ஓடி வந்து வரவேற்றார் அறிதுயில் மால்;


“நலம் தானா பிரம தேவா? தேவர்களே?
நலமாக நடக்கிறதா படைப்புத் தொழில்?”


ஆதியோடு அந்தமாக விவரங்களை
வேதபிரமன் விவரித்தான் அவருக்கு.


சனகாதியர் கயிலைமலை சென்றது…
முனிவர்கள் மனம் அடங்கி ஒடுங்கிட…


யோகத்தில் சிவபிரான் அமர்ந்துவிட…
போகத்தை உயிரினங்கள் துறந்துவிட…


காமம் ஒழிந்து முற்றிலும் அழிந்துவிட…
கர்மாதீனப் பிறப்பு முழுதும் நின்றுவிட…


மூவுலகையும் சூரபத்மன் சூறையாட…
தேவர்களும் ஜயந்தனும் சிறைப்பட…


“ஈசன் யோகநிலை நீங்கிட வேண்டும்,
பூசிக்கும் தாயை மணந்திடவேண்டும்,


படைப்புகள் தொடர்ந்திட ஒரே வழி,
இடர்களைத் துடைத்திட அதுவே வழி!


காமனால் மட்டுமே கலைக்க முடியும்
மோனத்தில் அமர்ந்துள்ள ஈசன் மனதை,


அவனால் இயலாது போகுமானால் வேறு
எவனாலும் இயலாது என்று அறிவோம்.”


“நல்ல யுக்தியை அளித்தீர் பரந்தாமா!
வெல்லும் மன்மதனையே ஏவுகின்றேன்.


நல்ல செய்தி ஒன்று விரைவில் வரும்.
செல்வ மகன் அவதரிப்பது உறுதி”


மனம் மகிழ்ந்து திரும்பினர் தேவர்கள்
கனவுகள் கண்டனர் துயரம் தீர்ந்ததாக.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 (# 3 d). MEETING MAHA VISHNU.


Vishnu welcomed the group eagerly. He asked about the welfare of everyone there. Brahma related
to Him all the recent happenings in great detail.


The visit to KailAsh by Sanakan and his three brothers; Siva sitting in yoga to help them conquer their minds; all the living creatures losing interest in procreation; and the recent imprisonment of the Devas and Jayanthan by Soorapadman etc.


Vishnu replied,” Siva must come out of his yoga sthithi. He must wed Parvathi Devi. It is the only solution to all our problems now. Manmathan can conquer anybody’s mind and senses. Let him divert Siva from His yoga, by using his special powers.”


Brahma was very happy with this solution. As for the Devas they already imagined that their problems have come to an end. So the whole group went back happily.


 
SRI VENKATESA PURAANAM

6b. பரந்தாமன்

அரசி சந்தேகித்தாள் அப்பாவி இடையனை,
‘கறந்து குடிக்கின்றனோ வருகின்ற வழியில்?’


“மடி பெரிதாக இருக்கிறது பசுவுக்கு – ஆனால்
அடி தட்டுகிறது கறக்கும் பால் விந்தையாக!


கூறு உண்மையை என்ன நடக்கிறது?” அதட்ட ,
“அறியேன் நான் ஒரு பாவமும் ” என அழுதான்.


“ஜாக்கிரதை நாளைக்குக் தரவேண்டும் பால்!”
எச்சரித்தாள் இடையனைச் சந்திரகிரி அரசி.


இத்தனை ஆண்டுகள் பெறாத அவப் பெயரை
பெற்றுத் தந்துவிட்டன இந்தப் பசுவும் கன்றும்.


நம்பவில்லை அந்தப் பசுவை இடையன் சற்றும்,
‘ஓம்புகிறதோ பழைய எஜமானுக்குப் பால் தந்து?’


கண் இமைக்காமல் கண்காணித்தான் மறுநாள்;
நண்பகலில் பிரிந்து ஓடின அப் பசுவும் கன்றும்.


ஓடின சேஷாசலத்தின் மலைச் சரிவுகளில்,
ஓடினான் துரத்திய இடையன் கோடரியுடன்!


புற்றை அடைந்ததும் நின்று விட்டன அங்கு.
புற்றின் உள்ளே சுரந்தது மொத்தப் பாலையும்!


கோபம் கொண்டான் இடையன் – ‘அரசியின்
நோகும் சொற்களை நான் கேட்டது இதனால்’.


பாய்ந்தான் பசு மீது கோடரியை ஓங்கியபடி;
பாய்ந்து வெளிவந்தார் புற்றிலிருந்த நாரணன்.


விழுந்தது வெட்டு நாரணன் நெற்றியில்!
பிளந்த நெற்றியிலிருந்து பீறிட்டது ரத்தம்!


நனைந்தன பசுவும் கன்றும் ரத்தத்தில்!
நினைவிழந்தான் இடையன் அச்சத்தில்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#6b. The injury

The queen doubted the cowherd. ‘May be he drinks the cow’s milk on the way back to the palace?’ She threatened him, “The udder looks large but the milk is scanty. What is happening ? Tell me the truth!”


The cowherd got scared and cried piteously, “I have not done anything stealthy or wrong. Please believe me”. “The cow better give more milk tomorrow or you will be in trouble” the queen warned the cowherd.


‘I have never been insulted in all my life but the new cow and the calf have made the queen doubt my loyalty. May be the cow continues to give its milk to its previous owner! I shall watch it carefully tomorrow and find out what is really happening!’ The cowherd thought to himself.


The next day he did not take his eyes off the new cow and the calf. At noon those two ran away from the rest of the cattle. The cowherd ran after them. They ran on the hilly slopes of the mountain SeshAchalam. The cowherd followed them with his axe kept ready.


They stopped near the anthill and cow let its entire stock of milk flow into the anthill. The cowherd could not contain his anger any longer. He pounced on the cow with his axe lifted up.


NArAyaNan came out to stop the violent attack on the cow. The axe hit his forehead splitting it and making the blood flow out like a red fountain. The cow and the calf got drenched in his blood and cowherd fell unconscious by these unexpected events.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#5a. தேவர் விண்ணப்பம்

“உபாயம் சொல்கின்றேன் விருத்திரனைக் கொல்ல;
உபாயங்கள் சாம, தான, பேத, தண்டம் பயன் தரா!


வலிமை பெற்றுள்ளான் அழிவே இல்லாதவனாக!
வஞ்சித்துக் கொல்லவேண்டும் விருத்திராசுரனை!


கந்தருவரை அனுப்பிக் குதூகலப் படுத்துவோம் – பின்
கலந்து பழகுவோம் நட்புணர்வுடன் இருப்பது போல்.


இந்திரன் அழைக்க வேண்டும் அவனைப் போருக்கு.
இருப்பேன் வஜ்ஜிராயுதத்தின் கூரிய நுனியில் நான்.


எதிர் நோக்கி இருப்போம் தக்க தருணம் வரும்வரை;
அதிகம் கவலைப்படத் தேவையில்லை தர்மம் பற்றி.


வஞ்சித்தேன் வாமனனாகவும், வராஹமாகவும்;
வஞ்சனையால் கொன்றான் இந்திரன் திரிசிரனை.


வஞ்சனை செய்ய வைப்பது தேவியின் மாயையே;
வஞ்சிக்கலாம் விருத்திரனை தேவியின் மாயையால்.”


வழிபட்டனர் தேவர்கள் ஓன்று கூடிப் பராசக்தியை;
வெளிப்பட்டாள் தேவி அவர்களுக்குக் காட்சி தந்திட.


பாச, அங்குச, அபய, வரத ஹஸ்தங்களுடன்;
பூஷணங்கள் தரித்துப் பொலியும் பேரழகுடன்.


தண்டைகள், வளையல்கள், ஓட்டியாணத்துடன்
கொண்டிருந்தாள் இரத்தின கிரீடம், முக்கண்கள்.


சச்சிதானந்த ஸ்வரூபிணியாக வந்தாள் அவள்!
சந்திரப்பிறை ஒளிர்ந்தது அழகிய திருமுடியில்.


“தருகின்றான் துன்பம் விருத்திராசுரன் – எமக்குத்
தரவேண்டும் வல்லமை அவனை வெல்லுவதற்கு!”


“அங்ஙனமே ஆகுக!’ என்று புன்னகைத்தாள் தேவி;
அங்கிருந்து மறைந்தருளினாள் உடனே சக்தி தேவி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#5a. MahA MAyA’s help.


VishNu told Brahma and the other Devas who had assembled there,” I will tell you an infallible method of killing ViruthrAsuran. SAma, DhAna, Bedha and Dandam will not yield the desired result here. We will have to kill him by treachery.


We will send Gandharvas and try to impress the asuras favourably to please them. We will mingle with them freely as if we were their true friends. We will wait for the most opportune moment.


I will be present at the sharp tip of Indra’s vajrAyudam when he will use it on ViruthrAsuran. I do not worry much about the rights and wrongs or the dos and don’ts. For me the end justifies the means.


I cheated MahAbali as VAmana. Indra killed Trisiran by treachery. We thus become trecherous by the power of MAyA of Devi ParA Shakti. We can kill ViruthrAsuran by treachery with Devi’s help!”


All the Devas and the Gods worshipped Devi ParA Shakti. She appeared dressed in rich silks and bedecked with gem studded jewels and ornaments. She sported the crescent moon her crown and had a third eye on her forehead. She was the Sath-Chith-Aananda-Roopini.


The Devas and the Gods said, “ViruthrAsuran is tormenting us by usurping our heaven and driving us out. He is invincible. Devi! Please give us the power and strength to vanquish VrithrAsuran!”

Devi smiled and said,”So be it!” and vanished from there.




 
Kanda puraanam (Urppathik Kaandam)


4a. பிரமனும், மன்மதனும்.

காமனை மனத்தால் நினைத்தான் பிரமன்;
காமன் வந்தான், ” பிரபு! ஆணையிடுங்கள்!”


“மலர்க் கணைகளை ஈசன் மீது செலுத்தி
மலைமகளை அவர் மணக்கச் செய்வாய்!


அவதரிக்கப் போகும் திருமகன் ஒருவனே
அவனியோர் துயர் துடைக்க வல்லவன்.


அவுணர்கள் தரும் தொல்லை அறியாதவனா?
தேவர்கள் படும் துயர்கள் தெரியாதவனா நீ?”


இடியேறுண்ட ஒரு நாகம் போல மன்மதன்
நடுநடுங்கி மூடிக் கொண்டான் செவிகளை.


“மற்றவர்களை வெல்லும் திறனை எனக்கு
குற்றமில்லாத சிவன்றோ அளித்தார்!


அவர் அளித்த அற்புத சக்தியை நான்
அவர் மீதே செலுத்தக் கூடுமோ கூறும்!


நகைப்பினாலேயே முப்புரங்களை எரித்து
திகைக்க வைத்தவர் சிவனே அன்றோ?


பாலன் ஒருவனைக் காக்க வேண்டிக்
காலனைக் காலால் உதைத்தவர் அன்றோ?


கடவுள் நானே என்று சொல்லித் திரிந்த
உம் நடு சிரசைக் கிள்ளி எடுத்தவர் யார்?


ஈசனை இகழ்ந்து செய்த வேள்வியால்
மோசம் போன தக்ஷனை அறியீரோ?


நஞ்சினைக் கண்ட அனைவரும் அஞ்சி ஓடிட,
கொஞ்சமும் அஞ்சாமல் அருந்தியவர் யார்?


கங்கையைத் தன் சடையில் தாங்கியவர் யார்?
சிங்கத்தின் வயிற்றைக் கிழித்தவர் யார்?


கரிய யானையின் தோலை உரித்தவர் யார்?
வரிப் புலியின் தோலை அணிந்தவர் யார்?


நெற்றிக் கண்ணில் தோன்றும் ஒற்றைப் பொறி
பற்றி எரியச் செய்யும் மொத்த உலகங்களையும்!


கரும்பு வில்லும், மலர்க்கணையும் ஏந்தி நான்
அருகில் செல்லேன் முழுமுதற் கடவுளிடம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 # 4 (a) BRAHMAN AND MANMATHAN.


Brahman thought of Manmathan. He appeared immediately and asked, “What do want of me?”

“Shoot your flower arrows on Siva to make him marry Parvathi Devi. Only their son can save us from the atrocities of Soorapadman.” Manmathan shivered violently and covered his ears on hearing these words.

“It is Siva who has given me the power to win over anyone. Surely I can’t use it on Him. He burned Tripuram just by His laughter. To save a young devotee, He kicked Yama – the God of Death.


When you and Hari were arguing as to who was the superior God, He nipped one of your heads! You know the fate of Daksha who humiliated Siva. When everyone took to their heels fearing the potency of the poison during Amrutha mathanam, it was Siva who dared to drink it.


Only He could contain the destructive power of AakAsh Ganga during her descent to the earth. He tore open the stomach of a narasimham. He ripped the hide of an elephant and the skin of a ferocious tiger.


A single spark of fire coming out of his third eye is enough to destroy the whole creation. Whatever you may say, I will never go near Siva carrying my sugarcane bow and flower arrows”. Manmathan was quite firm in his refusal.







 
SRI VENKATESA PURAANAM

7a. சோழராஜன்

ரத்தக் கறையுடன் ஓடிவந்தன பசுவும், கன்றும்!
சித்தம் குழம்பியது அரண்மனைக் காவலருக்கு!


‘துஷ்ட மிருகங்கள் சேதம் விளைவித்தனவா?
கஷ்ட காலம் காணவில்லை இடையனையும்!


யார் யாருக்கு என்னென்ன நிகழ்ந்தனவோ?
யாருக்குத் தெரியும்?’ அரசனிடம் ஓடினர்.


வாசலுக்கு விரைந்தான் அரசன் – ஆனால்
வழக்கத்துக்கு மாறாகக் குழம்பியது மனம்.


வாலைச் சுழற்றிய பசு ஓடியது தெருவில்.
வரச் சொல்லுகிறது எனத் தெரிந்து விட்டது.


“செல்லுங்கள் பசுவைத் தொடர்ந்து நீங்கள்!
சொல்லுங்கள் அங்கு கண்டதை இங்குவந்து!”


ஆயுதங்களுடன் விரைந்தனர் காவலர்கள்;
அடைந்தனர் புற்று இருக்கும் இடத்தினை.


இடையன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான்
கிடந்தது அவன் அருகே ரத்தக் கோடாரி!


கசிந்தது ரத்தம் புற்றின் துவாரத்தில்!
வசித்த நாகம் வெட்டுண்டு விட்டதோ?


விரைந்து சென்று கூறினார் அரசனிடம்
விரைந்து வந்தான் அரசன் பல்லக்கில்


‘நிகழ்ந்துள்ளது அசாதாரண சம்பவம் ஒன்று !
நிகழ்ந்து விட்டதோ தெய்வக் குற்றம் இன்று?’


தெய்வத்தை எண்ணி தியனித்தான் மன்னன்;
“தெளிவாக்குவாய் நிகழ்ந்தவற்றை நீ எனக்கு!


பிழை செய்யப் பட்டிருந்தால் மனமுவந்து
பிராயச் சித்தம் செய்கின்றேன் பாவத்துக்கு!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#7a. Chozha Raajan

The cow and the calf ran to the palace gate. The guards got frightened looking at them covered with blood. ‘Was it caused by the wild animals? The cowherd is missing too! What calamity has befallen and to whom? God only knows!’ they ran and reported it to the king.


The king rushed to the entrance of the palace. His mind felt agitated for no known reasons. The cow ran in the street hinting that the soldiers should follow it.


The king ordered to them,”Closely follow the cow and tell me what you find there”. The soldier ran behind the cow with their weapons ready – for they knew not what danger awaited them there.


They saw the cowherd lying unconscious. An axe dripping blood lay beside him. The mouth of the anthill was seeping with blood. They feared that a serpent living in the anthill had been struck with the axe. They ran back to the king to convey this information.


The king hurried in his palanquin. The moment he saw the spot he realized that something unusual had happened there. ‘Was it a sin against god?’ He did not know. He prayed to his favorite deity, “Please make it clear to me as to what has happened here. If it is my fault, I am ready to do parihaaram for my mistake”



 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#6a. விருத்திரன் வதம் (1)

“மறந்து விடுவீர் பகைமையை இருவரும்;
துறந்து விடுவீர் பகைமை தரும் துன்பம்.


நண்பர்கள் ஆகவேண்டும் அமரர், அசுரர்;
நன்மை விளையும் இதனால் இருவருக்கும்.”


முனிவர் கூறினர் விருத்திரனிடம் – மிகவும்
பணிவுடன் இனிய மொழிகள் பலவும் பேசி.


“வணங்குகின்றேன் உண்மைத் தவசீலர்களே!
பிணங்குகின்றேன் அமரர்கோனுடன் மட்டும்.


நட்புக் கொள்ளக் கூடாது ஒருபோதும்
நம்பிக்கை துரோகம் செய்பவர்களுடன்.”


மறைத்தாள் தேவி அவன் அறிவொளியை!
உரைத்தான் முனிவருக்கு விருத்திரன் இதை.


“உலர்ந்த பொருள் அல்லது ஈரப் பொருள்,
கல், கட்டை, வஜ்ஜிரயுதம், பிற ஆயுதங்கள்,


தேவர்கள், மனிதர்கள், அசுரர்களால் நிகழாது
இரவு அல்லது பகலில் என்னுடைய மரணம்!


சத்தியம் செய்து நட்புப் பூணுவான் எனில்
இத்தகையவனுடனும் கொள்வேன் நட்பு!”


நெருங்கிப் பழகினர் விருத்திரன், இந்திரன்.
திரிந்தனர் குதூகலத்துடன் பல இடங்களில்.


இருந்தான் சூது, வாது இன்றி விருத்திரன்;
இருந்தான் சமயம் எதிர்நோக்கி இந்திரன்!


கவலை அடைந்தான் இதைக் கண்ட துவஷ்டா;
நிலைமையை விளக்கினான் விருத்திரனுக்கு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#6a. The end of ViruthrAsuran (1)


Venerable sages came to meet ViruthrAsuran. They spoke to him very sweetly and showed him deep respect. “You and Indra must bury the hatchet and become good friends. If the Devas and the Asuras become friends, it will benefit both their races.”


VirutharAsuran told them, “I will pay my respect to you venerable sages, but I can’t become a friend on Indra. He is treacherous and can’t be trusted as a true friend. We should not form friendship with unreliable people!”


Just then MahA MAyA Devi clouded his sharp intellect and deluded him slightly. He told the sages,”I can’t be killed by any dry or wet objects; nor by stone or wood; nor by any other weapon; nor by a Deva, Asura or Manushya; nor during the day or the night. But if Indra promises to be a true friend, I have no objection to becoming his friend.”


Indra was only to happy to hear this. He promised true friendship and very soon he became very close to ViruthrAsuran. They spent a lot of time together and roamed around visiting various places together.


ViruthrAsuran was both innocent and ignorant of Indra’s ulterior motives. Indra was abiding for his
most favourable time to finish off his mortal enemy – with whom he pretended to be a true friend.


Thvashta PrajApati got worried to watch these happenings since he would never trust Indra – promises or no promises. He warned his son ViruthrAsuran to break away from the friendship of the unreliable Indra.



 
Kanda puraanam (Urppathik Kaandam)

4b. பிரமனின் கோபம்.

“உண்மையே கூறினாய் நீ மன்மதா!
நன்மையையும் சற்று எண்ணிப்பார்.


உன்னையன்றி இச்செயல் செய்யும்
வன்மையுடையவர் யார் எனக் கூறு!


‘எல்லாம் அவன் செயல்’ என்று நான்
சொல்லாமலேயே நீ அறியாயோ?


தன்னுயிர் பேண விரும்புவதால் நீ
மன்னுயிர் துயருற விட்டு விடலாமா?


பிறர் துயர் தீர்க்கும் முயற்சியில்
பிறழ்ந்தால் வருமே தீராப் பழி!


அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையோர் என்பும் உரியர் பிறர்க்கு.


விருத்திரனைக் கொல்ல வச்சிரத்தை
இரந்து பெற்றான் இந்திரன் ததீசியிடம்.


பல்லுயிர் காக்க உன்னுயிர் ஈந்தால்
நல்லுலகம் போற்றும், அல்லும் பகலும்.


சூரனின் கொடுமையை அடக்கி ஒடுக்க
வீர மகன் ஒருவன் தோன்றிட வேண்டும்.


அனைத்து உலகையும் காக்கும் பணி
உனக்கு அளிக்கப்பட்டதை உணர்வாய்.”


“இறைவனுக்கு மாறாக நடவேன் நான்!
வேறு எதுவாகிலும் உவந்து செய்வேன்”


“நயத்தால் அல்லது பயத்தால் செய்வாய்!
மயக்கம் தீர்வாயா? சாபம் கொள்வாயா?”


“சாபம் பெற்று உம்மால் அழிவதிலும்,
கோபம் பெற்று ஈசனால் அழிவதே மேல்.


கடமையை ஆற்றச் செல்லும் எந்தன்
மடமையை ஈசன் மன்னிக்கட்டும்!”


சென்றான் தன் அன்பு மனைவி ரதியிடம்.
சொன்னான் நிகழ்ந்தவற்றை எல்லாம்.


கலங்கிய உள்ளத்தை மறைத்துக்கொண்டு,
கலங்கியவளைத் தெளிய வைத்தான் அவன்.


மலர்க் கணைகள் நிறைந்த தூணி முதுகில்;
மாந்தளிர் உடைவாள் அழகிய இடையில்;


கரும்பு வில்லை ஏந்தினான் தன் கையில்;
கடலே முரசம்! குயில்களே காகளங்கள்!


குதிரைகளோ கிளிகள்! தென்றலே தேர்!
ரதியுடன் பறந்தான் தன் தேரில் ஏறி.


கயிலையை அடைந்து நந்தியைப் பணிய,
ஐயன் கட்டளைப்படி அனுமதித்தான் நந்தி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
Kanda puraanam (Urppathik Kaandam)

1 (# 4 b). BRAHMA’S ANGER!

“Truly spoken Manmathaa! But think of the welfare of the world. Tell me who else is capable of performing this deed besides you.


Everything is done by God Himself using all the others as instruments. Can you sacrifice the lives of all the others just to save your own? If you refuse so bluntly to help others, you will be blamed all your life.


Those whose hearts are filled with love for the others, will be ready to sacrifice themselves for the sake of the others. Indra begged for the backbone of Dadichi – to enable him to kill VruthrAsura.


If you help, your praise will be sung as long as the creation lasts. Wicked Soorapadman’s atrocities must be put an end to. For that Siva must beget a valorous son. Your assistance is needed and you are given a great opportunity to help the world!”.


Manmathan still refused to oblige. Brahma lost his temper and threatened him thus, “Either you do as you are told or be prepared to be cursed!”


“It is far better to die facing the anger of the lord than die by your curse! May God forgive me and my folly, since I am only performing my duty”


He went to his wife Rati Devi and told her of all the happenings. She was moved to tears. He consoled her and got ready for his unpleasant and dangerous assignment.


Flowers were his arrows; tender mango leaf his sword; sugarcane was his bow; the sea was his drum, the cuckoos were his trumpets; parrots were his horses and the southern wind was his chariot.


He flew with his lovely wife to Kailash and prostrated to Nandi. Nandhi let him go in, as per the order given by Siva.
 
Sree Venkatesa PuraaNam

7b. நாரணன் சாபம்

கோபத்தோடு எழுந்தார் நாரணன் புற்றிலிருந்து
கோடரி பிளந்த நெற்றியில் வழிந்தது ரத்தம்!


தரையில் விழுந்து நமஸ்கரித்தான் அரசன்,
“உரையுங்கள் தேவதேவா! நிகழ்ந்தது என்ன?”


கண்ணீர் விட்டுக் கதறினான் சோழராஜன்,
செந்நீர் வழிய நின்றிருந்த நாரணனிடம்.


“வைகுந்தம் விடுத்து வையகம் வந்த பின்னர்
வாழ்ந்து வருகின்றேன் நான் இந்தப் புற்றில்!


தெய்வப் பசு வந்து சுரக்கும் பாலை எனக்காக;
செய்வது ஏதென்று அறியவில்லை இடையன்.


கோடரியால் தாக்க வந்தான் பசுவினை – எனக்குக்
கோடரி வெட்டு அடாத செயலைத் தடுத்ததற்கு!”


“ஏய்க்கிறது பசு என்று எண்ணினான் அவன்,
துய்க்கிறது இறைவன் என்று அறியவில்லை!


சாந்த மூர்த்தியான தாங்கள் கோபம் விடுத்துச்
சாந்தம் அடைய வேண்டும் லோக ரக்ஷகா!”


“புற்றில் பால் சுரந்த உடனேயே அவனது
சிற்றறிவுக்கு எட்டி இருக்கவேண்டும் இது!


புற்றில் உள்ளது ஏதோ விசேஷம் என்பது.
குற்றமே இடையன் கோடரியை வீசினது!”


அத்தனின் உக்கிரம் குறையவில்லை – மன்னன்
எத்தனை கெஞ்சினாலும் மாறவில்லை கோபம்!


“குடிமக்கள் செய்யும் பாவம் சேரும் சென்று,
குடிமக்களை ஆளும் அரசனையே என்றும்!


யோசியாமல் இடையன் செய்த தவற்றுக்குப்
பைசாசமாக மாறித் திரிவாய் நீ வனங்களில்!”


சாபம் இட்டார் அப்பாவிச் சோழமன்னனுக்குச்
சாந்த மூர்த்தியாகிய சத்துவ குண நாரணன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 

Latest ads

Back
Top