• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

SRI VENKATESA PURAANAM

11b. “வாசுதேவன் நானே!”

அந்நிய ஆடவனைக் கண்ட தும் தோழியர்
சொன்னார்கள், “திரும்பிச் செல்வோம்!” என.


“தெரிந்து கொண்டு வாருங்கள் அவன் யார் என!”
“யார் நீங்கள்? இங்கு என்ன வேலை? கூறுவீர்!”


நடந்தான் ஸ்ரீநிவாசன் பத்மாவதியை நோக்கி
தடுக்க முடியவில்லை தோழிப் பெண்களால்!


“ஆடவருக்கு நுழைய அனுமதி இல்லையா?
அறியாமல் வந்து நுழைந்துவிட்டேன் இங்கு!


கண்டேன் வனத்தில் மத யானை ஒன்றை!
கண்டதும் யானை ஓடலானது வேகமாக!


காட்டுக்குள் செல்லவில்லை அந்த யானை;
நாட்டுக்குள் நுழைந்தது; நந்தவனம் வந்தது !


கன்னியரைத் துன்புறுத்துமோ என்று அஞ்சி
கணை ஒன்றை எய்து விரட்டினேன் அதை.


பூரணச் சந்திரன் போன்ற முகம் கொண்ட
ஆரணங்குடன் பேச விரும்பி வந்தேன்.”


“யானை திரிந்தால் தெரிந்திருக்கும் எமக்கும்!
யார் நீர்? எதற்கு வந்துள்ளீர்? உண்மை கூறும்.”


“வசிப்பது சேஷாச்சலம்; சிந்து புத்திரர் குலம்;
வசுதேவர் தந்தையார்; தேவகி தாயார் ஆவார்.


பஞ்ச பாண்டவர்களுக்கு ஆப்த நண்பன் நான்;
கொஞ்சப் பெயர்களா நான் சொல்லுவதற்கு?”


“பித்தம் தலைக்கு ஏறி விட்டது உமக்கு!
வைத்தியரைப் போய்ப் பாரும் உடனே!


உத்தியான வனத்தில் பெண்களிடம் வந்து
எத்தன் வேடமா போடுகின்றீர்கள் நீங்கள்?


பைத்தியக்காரன்! யசோதை கிருஷ்ணனாம்!
வைத்தியம் செய்து கொள்ளும் விரைவாக.


ஜோலியைப் பார்த்துக் கொண்டு செல்வீர்!”
கேலி பேசினார் பத்மாவதியின் தோழியர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#11b. “I am VAsudEvan!”

When the girls saw a strange young man in their garden, they insisted that they should go back to the palace immediately. But PadmAvati told her friends,”Go and find out all about that young man!”


Her friends approached SrinivAsan and asked him, “Who are you? What brings you here now?” He did not reply to those girls but kept walking nearer to PadmAvati. No one could stop his progress.


“I did not know that men are forbidden from entering this garden. I entered since I did not know that rule. I saw a mad elephant in the forest. It started running towards this city instead of running into the forest. It then entered this garden.


I was afraid that it might harm you the young girls here and shot an arrow on it. It ran away leaving me here. Now I wish to talk to the pretty girl who has a face resembling the silvery full moon !” SrinivAsan walked nearer to PadmAvati.


“If there were really a mad elephant on rampage, we would have known it already. Tell us the truth. Who are you and why are you here?” PadmAvati’s friends would not spare the young man so easily!


SrinivaAsan answered earnestly.” I live in SeshAchalam. I belong to the Sindu Puthra kulam. My father is Vasudevar and my mother is Devaki. I am a close friend of the PAndavAs. I have so many names that I do not know which one to tell you !”


“You are raving mad sir! Go and get treated by a qualified physician soon. You enter the private garden of the princess and pretend to be innocent. A mad prince indeed! The son of Vasudeva and Devaki! Go and mind your own business now. But don’t forget go and get treated first. ”


The girls made fun of SrinivAsan.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#9a. சிவிகை (1)

வியந்தாள் இந்திராணி இந்திரனைக் கண்டு!
வியந்தான் இந்திரன் இந்திராணியைக் கண்டு!

“யாருக்கும் தெரியாது நான் இங்கிருப்பது – என்
இருப்பிடத்தை அறிந்தது எங்ஙனம் இந்திராணி?”

“அறிந்தேன் இருப்பிடத்தைத் தேவியின் அருளால்.
அறிவீர் இப்போது புதிய இந்திரன் பூலோக நகுஷன்.

தொல்லைகள் தருகின்றான் தினமும் எனக்கு;
அல்லல் படுத்துகின்றான் ஆசைநாயகி ஆகும்படி.

காலத்தை எதிர் நோக்கிக் காத்துள்ளேன்!” என்றாள்.
“காலத்தை எதிர்நோக்கி காத்திருத்தல் நலம்!” என்றான்

“என்னைக் காக்கும் என் மனவுறுதி என்பதில்லை;
எளிதே அந்த முரடனுக்கு என்னை வசப்படுத்துவது.

அஞ்சுகின்றனர் தேவர்கள் அவனைக் கண்டு;
கெஞ்சுகின்றனர் அவனிடம் செல்லுமாறு என்னை.

தேவகுரு அடைக்கலம் அளித்துள்ளார் எனினும்
தேவகுருவிடம் இல்லை படை பலம் எதுவும்.

காமாந்தகன் இந்திரன் ஆகிவிட்டதால் – கற்பைக்
காப்பாற்றுவது கடினம் ஆகிவிட்டது எனக்கு.”

“காப்பாற்றவேண்டும் கற்பைத் தனக்குத் தானே;
காப்பாற்ற முடியாது புறக்காவல் பெண் கற்பை!

உனக்கு அதிக நெருக்கடி தந்தால் தப்புவதற்கு
உபாயம் ஒன்று கூறுகின்றேன் கேள் இந்திராணி!

‘நாயகனாக ஏற்பேன் நகுஷனே உன்னை – நீ
நாடு போற்றும் சிறப்புடன் என்னிடம் வந்தால்!

வர வேண்டும் நீ அழகியதொரு சிவிகையில்- உன்னை
வர வேண்டும் சப்தரிஷிகள் தோளில் சுமந்து கொண்டு!’

கூறுவாய் நகுஷனிடம் இந்த கோரிக்கையை.
தாறுமாறு ஆகிவிடும் அவன் இந்திர வாழ்வு!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#9a. The palanquin (1)

Indra was surprised to see IndrAni and IndrAni was surprised to meet Indra. He asked her, “No one knew that I was hiding here. How did you come to know abour my being here?”

“I came to know a about your presence here through Devi’s grace. Now Nahushan – a king from the earth is the new Indra. He is giving me a very hard time. He wants me to become his lover or wife. I am aibiding for a more favorable time to escape from him.”

Indra said,”It is good to wait for a more favourable time.” IndraaNi said, “My being adamant may not save me from Nahushan. He can break my resistance very easily by his power and position. The Devas are afraid of him. They advise me to go to him in order to save their skin.

Deva Guru has given me protection but he has no army to enforce his decision. It is indeed difficult to keep a lust filled king at one’s arm’s length.”

Indra said, “A woman has to save her virtue by her own efforts. No outside protections can really save her virtue. If Nahushan continues to bother you, follow my advice to get rid of him.

Tell him that you will accept him as your husband if he comes to you in a rare palanquin carried by the sapta rushis. He will surely fall for this bait and he will get destroyed by it.”



 
Kandapuraanam (Urppathik Kaandam)


10a. திருமணம்.

உமையை மணந்திட உள்ளம் கனிந்தார்.
இமயத்தில் எழுந்தருளத் தருணம் இது.


முன்னே நந்திதேவன் புகழ்ந்தபடிச் செல்ல,
பின்னே முனிவர்கள் வாழ்த்தியபடி வர,


தும்புரு, நாரதர் இன்னிசை பாடிவர,
தம் விடை மீது ஆரோஹணித்தார் ஈசன்.


ஆனைமுகன் கணங்களோடு முன்னே செல்ல,
அன்புடன் சூரிய, சந்திரர்கள் குடைகள் பிடிக்க,


காற்றுக்கு இறைவன் வெண் சாமரம் வீசிட,
சுற்றினான் இந்திரன் அன்புடன் ஆலவட்டம்!


இமயத்தை அடைந்துவிட்டது மணமகன் குழு,
உமையின் மணவேளை நெருங்கியே விட்டது!


மலையரசன் நின்றான் சுற்றம் புடை சூழ.
மலர்ந்த முகத்துடன் அழைத்துச் சென்றான்.


மறை முனிவர்கள் பூர்ணகும்பங்களுடன் வர,
மங்கலப் பெண்டிர் அஷ்ட மங்களங்களுடன்;


ஊர்வலம் அடைந்தது மண மண்டபத்தை;
ஊர்திகளிலிருந்து இறங்கினர் அனைவரும்.


பாலாலே கால் அலம்பினாள் மோனாதேவி.
பட்டாலே துடைத்துப் பாதுகை அளித்தனர்.


திருமாலும், நான்முகனும் கை கொடுக்க,
திருமண மண்டபத்தை அடைந்தான் ஈசன்.


இந்திர நீலமணி இழைத்த அரியணையில்
இந்துவை அணிந்த நாதன் எழுந்தருள,


தத்தம் இருக்கையில் அமர்ந்தனர் அவனை
நித்தம் துதிக்கும் தேவர்களின் குழாம்.


எல்லோரும் ஓரிடத்தில் வந்து குழுமவே,
கல்மலையும் நடுங்கி நிலை குலைந்தது.


வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது.
வருந்தி ஓலமிட்டனர் தேவரும், மனிதரும்.


விரைந்து நிலவுலகைச் சமன் செய்யவேண்டி
குறுமுனியைத் தம்பால் வரவழைத்தான் ஈசன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#10 a. THE WEDDING.


Siva thought it was time to go to HimAlayas to wed Uma. Nandi led the group singing the praise of Lord Siva. Rushis chanted auspicious words in unison and followed him. Divine singers Thumburu and NArada sang sweet songs. Siva sat on his bull vAhanam Nandhi.


VinAyaka led the procession with his GaNas. The Sun and the Moon held the decorated white silk umbrellas for the lord. VAyu the God of Wind, set fresh air in motion with his chAmaram. Indra did the Aalavattam. The whole group reached the venue of the wedding HimAlayas in this manner .


HimavAn was waiting to welcome the group with his kin and kith. Rushis welcomed the group with poorna kumbham. Sumangalis came carrying the ashta mangalam. The procession reached the wedding mandapam. Every one got down from their vAhanams.


Mona Devi washed Siva’s feet with milk and dried them with silk. Siva got new pAda rakshai. He reached the mandapam in the company of Brahma and Vishnu. Siva sat on the throne studded with blue sapphires and all the others took their respective seats.


Since everybody assembled in one spot the equilibrium of the earth was upset. The north dipped down and the South got lifted up. Everyone got frightened and it was now left to Siva to restore the balance of the earth. He called sage Agasthya and spoke to him thus.


 
SRI VENKATESA PURAANAM

11c. சினம் பெருகியது

“அரசகுமாரி தங்களைப் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அறிய வேண்டும் நான் இப்போது.”

“தாராளமாகத் தெரிந்து கொள்ளுங்கள் ஐயா!
நாராயணபுர மன்னன் ஆகாசராஜனின் மகள்.

பத்மாவதி என்பெயர், தாரணி தேவி என் தாய்;
அத்திரி கோத்திரம், நாங்கள் சந்திர வம்சம்.

உத்தியான வனம் உண்டானது எனக்காக.
இத்தனை விவரங்கள் போதுமா உமக்கு?”

“என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
என்னை மணந்து கொள்ள உனக்கு விருப்பமா?”

கோபம் வந்து விட்டது இளவரசி பத்மாவதிக்கு!
கோபம் கொண்டனர் பத்மாவதியின் தோழியரும்.

“அத்து மீறிப் பேசவேண்டாம் பித்துப் பிடித்த ஐயா!
பத்திரம் இவள் அரசகுமாரி, நினைவிருக்கட்டும்!”

“கன்னி பெண்ணை நான் மணக்க விரும்புவதில்
என்ன தவறு எனத் தெரியவில்லையே!” என்றான்.

பல்லைக் கடித்தாள், கண்களை உருட்டினாள்,
தொல்லை தரும் மனிதனுடன் என்ன பேச்சு?

வைகுந்தவாசனை வரித்த என்னை ஒரு
வழிப் போக்கன் மணக்க விரும்புவதா?

சினம் தலைக்கு ஏறியது பத்மாவதிக்கு
மனம் அவனைத் தண்டிக்க விரும்பியது.

“அனுமதி இல்லாத இந்த இடத்துக்கு வந்து
அத்து மீறி நுழைந்தது உம் முதல் தவறு!

தனித்து இருக்கும் இளம் பெண்களிடம்
தவறாகப் பேசுவது இரண்டாவது தவறு.

கன்னிப் பெண் இவள் என்று அறிந்திருந்தும்
கண்ணியம் இன்றிப் பேசுவது மூன்றாவது.

சுய உணர்வு இல்லை போலும் உமக்கு!
மயக்கத்தில் பேசுகின்றீர் போலும் நீர்!

தயவு செய்து சென்று விடுங்கள் உடனே!
பயம் இல்லையா அரசனின் கோபத்துக்கு?”

விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதையானது!
இடத்தைக் காலி செய்ய மறுத்தான் ஸ்ரீநிவாசன்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#11c. PadmAvati’s Anger


SrinivAsan spoke to PadmAvati, ” I wish to know everything about you now, my dear princess!” PadmAvati replied, “Why not sir? I am the daughter of AakAsa RAjan, the king of NArAyaNa puram. My name is PadmAvati.

My mother is DharaNi Devi. We belong to Atri gothram and Chandra vamsam. This garden is created for my use. Are these details sufficient or do you need more?”

SrinivAsan felt delighted by the details furnished by the princess PadmAvati. “We are made for each other my dear princess. Will you marry me?” he seemed to be the very personification of daredevilry!

PadmavAti now lost her temper. So too her dear friends. They warned SrinivAsan. “Stay within your safe limits young man! She is a princess! Remember this fact always”

Now SrinivAsan wondered aloud, “What is wrong in my wishing to marry a beautiful and unmarried princess?’ PadmAvati bit her lips, rolled her eyes and did not want to talk to that irritating young man anymore.

She had decided to marry Vishnu and some nitwit wayfarer, a total stranger, was proposing to her so daringly. She wished to punish him severely.

She spoke to him with swelling anger, “You have come inside my garden which no men are allowed to enter. This is your first crime. You do not know how to talk to young women. This is your second crime. Knowing that I am unmarried, you speak so cheaply about me. This is your third crime.

May be you are not in your right senses. May be you are intoxicated or infatuated. Go away from here immediately. Are you not afraid of the wrath of the king?”

These angry words were shaken off by SrinivAsan like a duck shaking off the water poured on its back. The situation became a battle of wills and SrinivAsan gave no hint of leaving that royal garden as commanded by Princess PadmAvati!


 
Bhagavathy Bhaagavatam - 9

6#9b. சிவிகை (2)

“விரதமாக ஏற்றுள்ளேன் இதனை நான் – உங்கள்
விருப்பம் நிறைவேறும் என் விரதம் நிறைவேறினால்”


என்று கூறுவாய் நீ நகுஷனிடம் இக் கோரிக்கையை;
முன் பின் யோசியாமல் ஏற்றுக் கொள்வான் அவன்.


மோஹ வெறியில் அவமதிப்பான் முனிவர்களை!
கோப வெறியில் சாபம் தருவார்கள் முனிவர்கள்.”


திரும்பிச் சென்றாள் இந்திராணி நகுஷனிடம் ;
தேன் குடித்த நரியானான் அவளைக் கண்டவுடன்.


“சொன்ன சொல் தவறவில்லை நீ சசிதேவி!
இன்னமும் என்ன செய்ய வேண்டும் சொல்!”


“வசப் படுத்திக் கொண்டீர் சுவர்க்க லோகத்தை.
வசப் படுத்திக் கொண்டீர் இந்திரன் அரியணையை


வசப் படுத்திக் கொண்டீர் முனிவர், தேவர்களை
வசப் படுத்திக் கொள்வீர் இனி என்னையும் கூட.


இன்னமும் உள்ளது ஒன்று நீங்கள் செய்வதற்கு;
சொன்னால் செய்வீர் என்றால் நான் சொல்வேன்!”


“சத்தியம் செய்கின்றேன் சசி தேவி உன்னிடம்;
உத்திரவாதமாகச் செய்வேன் நீ விரும்புவதை!”

“வாகனங்கள் வேறுபடும் தெய்வங்களுக்குள்;
வாகனம் இந்திரனுக்கு ஐராவதம், உச்சைச்ரவம்;


வாஹனம் விஷ்ணுவுக்கு வலிமை மிக்க கருடன்;
வாஹனம் சிவனுக்கு அழகிய காளை நந்திதேவன்.


வாஹனம் ஆகும் நீல மயில் சுப்பிரமணியருக்கு;
வாஹனம் ஆகும் அன்னப் பறவை பிரம்மனுக்கு.


வர வேண்டும் நீங்கள் இன்னமும் சிறந்த வாகனத்தில்;
வர வேண்டும் சப்தரிஷிகள் சிவிகையைச் சுமந்த படி!


உன்னத வாஹனத்தில் வந்து இறங்கினால் அப்போது
உலகம் உணரும் உங்கள் அருமை, பெருமைகளை!


என்னை நீங்கள் அடையத் தடையொன்றும் இல்லை,
என்னிடம் நான் விரும்பியயபடி நீங்கள் வந்தால்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#9b. The Palanquin (2)


Indra told IndrANi how to bring about the downfall of Nahushan in a clever and subtle manner. “You must tell Nahushan that you have a vratam about the man who wants to become your husband.


Tell Nahushan that he must come riding in a palanquin carried by the great Sapta rushis to your palace. He will surely misbehave with them and get cursed by the sapta rushis. ”


IndrANi went back to Nahushan. He was happy to see her and felt dizzy like a bear intoxicated with fresh honey. “So you have kept your promise Sasi Devi! Tell me what more you want me to do?”


IndrANi told him,”You have conquered the swarggam and the throne of Indra. You have control over the Devas and the sages. You will have me also under your control soon. There is just one more thing I want you to do. If you are willing to oblige, I shall tell you what it is.”


Nahushan told her,”I promise to carry out your wish – whatever it may be. Please tell me about it!”


“Every God and Deva has his own VAhanam. Indra rides on the four tusked Airavat and Uchchaisravas. Vishnu rides on his Garuda and Siva on his bull Nandi Devan. Brahma flies on the back of a swan and Subrahmanya on a peacock.


I wish you would ride in a vAhanam which will be superior to all these other vAhanaas. I want you to ride on a palaquin carried by the sapta rushis. This will make the word realise you true greatness and there will nothing more standing in between you and me separating us!”



 
Kandapuraanam (Urppathik Kaandam)

10b. அகத்தியர்

“குறுமுனிவரே! ஓருதவி செய்வீரா?
மறுமொழி கூறி இதை மறுத்திடாமல்?

வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து,
நடுங்குகின்றது நிலைதடுமாறி நிலவுலகு!

பொதியமலை மீது சென்று இருப்பீர் நீர்,
கதிகலங்கிய நிலத்தைச் சமன் செய்திட.”

“அன்னையின் திருமணத்தை காணவிடாது
என்னைப் போகச் சொல்கின்றீர்களா ஈசனே ?

நான் செய்த பாதகம் தான் என்ன கூறும்!
என் கண் பெற்ற பயனை அடைவேனோ?”

“எதை எதை யாரால் செய்ய முடியுமோ
அதை அதை அவரே செய்ய வேண்டும்.

மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரியது!
பார்த்துவிட்டு நான் உம்மை அணுகினேன்.”

“தேவர்களையும் விட்டு என்னைப் பணித்தீர்.
தேவாதிதேவன் உம் மணத்தைக் கண்களால்

காணாமல் இருக்க மனம் ஒப்பவில்லை!
வாணாளை வீணாள் ஆக்குவது எங்ஙனம்?”

“பொதிய மலைக்குச் செல்வீர் நீவீர்!
அதிசயத் திருமணக் கோலத்தை அங்கேயே

தரிசிக்கச் செய்வேன் கவலை வேண்டாம்.
அரியவரே! சமன் செய்வீர் நிலவுலகை!”

தேவதேவனை வணங்கிய அகத்தியர்
வேகமாக அடைந்தார் பொதிகையை.

முன்போலவே உலகு சமநிலை அடைய,
மன்னுயிர்கள் எல்லாம் நிம்மதி அடைந்தன.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1#10b. RESTORING THE EARTH’S BALANCE.

“Agasthya! I seek a help from you! Please do not refuse to do it. The north has dipped and the south has risen. The earth has lost her balance. The entire creation is frightened. You must go to Podigai in the south and restore the balance of the earth”.

“Lord every one has gathered here to witness the divine wedding. You want to send me away! What is the crime I have committed. Why am I denied the very purpose of possessing my eyesight?”

“We must get the things done by the persons capable of doing them. You are small in stature but big in powers. Only you can restore the balance of the earth”

“Lord, you have asked me to help you – brushing away even the Devas. But the thought that I will miss your wedding makes me feel very sad.

“Do not worry. I will give you a dharshan of my wedding with Uma on Podhigai itself. Do not worry but please do hurry?”

Agasthya left for Pothigai. The balance of the earth was restored. The Devas and manushyas heaved a sigh or relief.



 
Sree Venkatesa PuraaNam


11d. மோதலும், காதலும்!

“எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் பெண்ணே?
என்னை மணக்கப் புண்ணியம் பண்ண வேண்டும்!”


“அம்பு எய்து மதயானையை விரட்டிய பின்பும்
வம்பு செய்து எம்மைத் துன்புறுத்துவது ஏனோ?”


“போகாவிட்டால் என்ன செய்ய முடியும் உன்னால்?”
“போகாவிட்டால் உங்கள் உயிரை வாங்கிவிடுவேன்!”


“உயிருக்கு அதிபதியான என் உயிரையா?”என்றான்.
“பயித்தியத்தை அடித்து விரட்டிவிடுங்கள்!” என்றாள்.


சொல்லடிகள் பட்டு நின்றிருந்த ஸ்ரீனிவாசனுக்குக்
கல்லடிகள் கொடுக்கலாயினர் தோழிப் பெண்கள்.


காயம் பட்டது சில கற்கள் தாக்கி – எனினும்
நியாயம் கேட்க நிற்கவில்லை ஸ்ரீநிவாசன்!


மோதல் ஏற்படும் இருவர் சந்தித்தவுடனே!
காதல் ஆகிவிடும் பின்னர் சிந்தித்தவுடனே!


அடித்து விரட்டச் சொன்ன பத்மாவதியை
அடித்து விட்டன மன்மதனின் பாணங்கள்.


நாரணன் வெளியேறிய பின்னர் உலகம் தன்
பூரணத்துவம் இழந்தது போல் தோன்றியது.


உலகமே இருண்டது போலத் தோன்றியது
கலகமே நிறைந்த மனதின் நினைவுகளால்!


பாலும் கசந்தது; பஞ்சணை வருத்தியது;
கோலம் மாறியது; பசலை நோய் படர்ந்தது.


“மந்திரம் போட்டுவிட்டானோ அந்தத்
தந்திரம் அறிந்த வம்புக்கார வாலிபன்?


உற்சாகமாகச் சண்டையிட்டாள் அவனுடன்!
உற்சாகம் இழந்து ஆளே மாறிப் போய்விட்டாள்.


ரதத்தில் ஏற்றி அமர்த்தினர் பத்மாவதியை;
ரதம் விரைந்தது மன்னனின் மாளிகைக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#11d. The clash and the crush!


“What do I lack my dear princess? You must be very lucky to marry me!” SrinivAsan told PadmAvati. “You came to save us from the mad elephant. The elephant has long since gone away! May I know why you are still hanging around here in my garden?” She asked him point blank.


“What will you do if I refuse to leave this palce ?” he taunted her. “I will put off your life!” she retorted.


“Put off the life of one who is the savior of every jeeva’s life?” He laughed at her openly now. PadmAvati lost her temper completely and told her friends, “Drive him away from our garden by any means!”


Her friends started pelting stones on poor SrinivAsan. Some of the stones made their mark and caused bleeding wounds ! SrinivAsan decided that it was wise to make a disappearing act from the scene.


When two young people meet for the first time, they may clash. But soon it will be followed by an inexplicable crush for each other. The same thing happened here also.


PadmAvati had SrinivAsan stoned by her friends but she herself was hit by the arrows of Cupid. The world looked washed out and lackluster after SrinivAsan went away.


Her mind was troubled by the recent events. She hated the sight of the sweet nourishing milk and the soft cushions seemed to hurt her. She looked so different and was lovelorn.


Her friends wondered whether the teasing and mischievous young man had cast any evil spell on their princess. She fought with him in such a spirited manner, but now she had became so serious and sad.


They made her sit on her chariot and drove her to the palace in a great hurry.





 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#9c. “ஸர்ப்ப! ஸர்ப்ப!”

அடைந்தான் அகம்பாவம் தேவியின் மாயையால்;
ஆராயவில்லை இதன் பின்விளைவுகளைச் சிறிதும்.


“உணரும் உலகம் என் பெருமைகளை இதனால்,
உணர்ந்தேன் உன் பொறுமையை நான் இதனால்!”


வரவழைத்தான் சப்த ருஷிகளைத் தன்னிடம்;
உரைத்தான் சசிதேவி விதித்த நிபந்தனையை.


” அடைய வேண்டும் இந்திராணியை நான்;
அடைவதற்குச் செல்லவேண்டும் சிவிகையில்.


தடை சொல்லாது சுமப்பீர் என் சிவிகையை;
நடை போடும் விரைந்து இந்திராணியிடம்!”


வரப்போவதை உணர்ந்து கொண்ட ருஷிகள்
பொறுமையாகச் சுமந்து நடந்தனர் நகுஷனை.


முற்றியது வினைப் பயன், பழுத்தன பாவங்கள்;
முற்றியது காம வேகம் இந்திராணியின் மீது.


பற்றியது அறியாமை; ஒடுங்கியது நல்லறிவு;
பற்றியது வெகுளி தீயிடப்பட்ட சருகு போல.


குறுமுனி அகத்தியர் குறுநடை பயில – அவரைத்
தறுதலை நகுஷன் அடித்தான் தன்கைப் பிரம்பால்.


“ஸர்ப்ப! ஸர்ப்ப!” என்று விரட்டினான் அவரை!
“ஸர்ப்ப” என்றால் “சர்ப்பம்” மற்றும் “விரைந்திடுக”!


“எந்த வனத்தில் கொடுமைகள் மிக அதிகமோ
அந்த வனத்தில் விழுவாய் மலைப் பாம்பாக!”


சாபம் தந்தார் கோபம் கொண்ட அகத்தியர்.
சாப விமோச்சனம் கேட்டான் நகுஷ மன்னன்.


“சாபம் நீங்கும் யுதிஷ்டிரனைச் சந்திக்கும் போது!”
சாபம் பலித்தது; இந்திராணியின் தாபம் தீர்ந்தது.


தலைக் குப்புற விழுந்தான் விண்ணிலிருந்து
மலைப் பாம்பாக மாறிவிட்ட நகுஷன் கீழே.


அழைத்துச் சென்றனர் தேவர்கள் இந்திரனை;
அமர்த்தினர் மீண்டும் அவனை அரியணையில்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#9c. “Sarppa! Sarppa!”


Nahushan got deluded by Devi’s MAyA. He did not bother to think about the bitter consequences of this adventurous ride. He thought to himself, “This will make all the three worlds realize my true greatness!”


He sent for the sapta rushis and told them about the condition laid by Sasi Devi. “I must win Sasi Devi’s affection. She will accept me only if I go to her palace in a palanquin carried by you – the seven great sages. So obey my orders and carry me in a palanquin to her palace fast.”


The seven sages became very angry to hear this. But they had the divya drushti to foresee his miserable future. So they kept silent and carried the palanquin.


The sins of Nahushan bore fruit at that time. He became impatient and wanted to reach Sasi Devi’s palace fast. The shortest sage Agasthya could not keep pace with the other six sages. So Nahushan beat him with his cane and commanded, “Sarppa! Sarppa!” meaning ” Go fast! Go fast!”


But the word ‘sarpa’ had another meaning also as a ‘snake’. Agasthya flew into a temper and cursed Nahushan thus.”You will become a python snake and fall down on earth in a forest in which all animals are the most violent”

Nahushan felt sorry and prayed for his sApa nivAraNam ( the release from the curse). Agasthya said, “You will be freed from this curse when you happen to meet Yudhishtra sometime in the future.”

IndrANi’s troubles were over. The Devas brought back Indra with them and made him the ruler of swarggam as before.



 
Kandapuraanam (Urppathik Kaandam)

10c. திருமணம்.

தேவமாதர்கள் அழைத்து வந்தனர் உமையை,
ஏவல் செய்த இமவான் கட்டளைக்கிணங்கி.

காவலுக்குக் காளி; அடைப்பை ஏந்த இந்திராணி;
சாமரம் வீச கங்கை; கைலாகு கொடுக்க இலக்குமி;

அடைந்தாள்
உமை அழகிய மண மேடையை.
புகழ்ந்தாள் வீணை மீட்டிப் பாடிய கலைவாணி.

பணிந்து எழுந்த உமையை பரிவுடன்
பணித்தார் ஈசன் அருகில் அமரும்படி;

மோனை நீர் ஊற்ற, மலைஅரசன் பாதபூஜை
மணக்கும் மலர்கள், சந்தனத்தால் செய்தான்.

உமையின் தளிர்க்கரங்களை வைத்தான்
இமவான் சிவபெருமான் திருக்கரங்களில்!

தாரை வார்த்துச் செய்தான் கன்னியை தானம்;
அரம்பையர் ஆடினர், கந்தருவர் பாடினர்;

மறை மொழிகள் பயின்றனர் முனிவர்கள்.
மங்கலம் பாடினர் அலைமகள், கலைமகள்,

பல இசைக் கருவிகளை ஒலித்தன பூதங்கள்.
அலைகடல் ஓசையை வென்றது இன்னிசை.

முக்கனிகள், பால், நெய்,தேன் இவற்றை
முக்கண்ணனுக்கு அளித்தார் இமவான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1 # 10 c. THE WEDDING.

The wifes of the Devas led Uma to the wedding mandapam, as ordered by HimavAn. KAli was guarding the bride. Indrani carried the betel bag, Ganga fanned her with chAmaram, and Lakshmi Devi accompanied Uma. Saraswathi Devi sang songs of praise.

Uma touched Siva’s feet with reverence. Siva told her to sit beside Him on the throne.

Mona Devi brought the things needed for Siva’s pAda poojai. HimavAn washed the groom’s feet with milk, applied sandal paste on it and and placed flowers.

Himavaan placed Uma’s lotus-soft hands in Siva’s hands and offered her in kanyA dAn.

The ApsarAs danced , gandharvas sang, Rushis chanted vedas, Lakshmi and Saraswathi sang auspicious songs. Bootha GaNas played on several musical instruments in unison. HimavAn offered mango, banana, jack fruit along with milk, honey and ghee to the Lord.


 
SRI VEnkatEsa PuraaNam

11e. காதல் நோய்

அந்தப்புரம் சென்று வணங்கினர் அரசியை
அரண்மனை திரும்பிய உடன் தோழிகள்


வாடிய முகங்கள்; வாயடைத்த பெண்கள்;
தேடினாலும் காணவில்லை பத்மாவதியை!


“அன்னியன் ஒருவன் நுழைந்து விட்டான்
அரண்மனை உத்தியான வனத்தில் இன்று!


மதயானையைத் துரத்தி வந்தானாம் அங்கு.
மதயானை ஓடிவிட்டது அவன் பாணத்துக்கு!


வம்பு செய்து பேசினான் பத்மாவதியிடம்;
கம்பு கொண்டு புடையாமல் கல் எறிந்தோம்.


நழுவினான் கழுவும் மீனில் நழுவும் மீனாக!
இழந்து விட்டாள் இவள் தன் உற்சாகத்தை!"


மகளைத் தேடி ஓடினள் அரசி அந்தப்புரத்தில்.
மகளோ வெட்டவெளியை வெறித்திருந்தாள்!


‘கெடுதலே நினையாத நான் இன்று மட்டும்
கொடூரமாக ஏன் நடந்து கொண்டு விட்டேன் ?


அடி பலமாகப் பட்டிருக்குமோ என்னவோ?
துடிப்பான இளைஞன்! பயித்தியம் அல்ல!’

அன்னை வந்ததையும் கவனிக்கவில்லை;
சொன்ன சொற்களையும் கவனிக்கவில்லை!


திருஷ்டி கழித்தாள் அரசி பத்மாவதிக்கு!
திரு நீறு பூசினாள் அரசி பத்மாவதிக்கு!


உணவு இறங்கவில்லை பத்மாவதிக்கு!
உறக்கமும் பிடிக்கவில்லை பத்மாவதிக்கு.


குலகுரு சுகர் வந்தார், அறிவுரைகள் தந்தார்;
“மலர்வனம் அருகேயே அகத்தியர் ஆசிரமம்!


பரமசிவன் அபிஷேக நீரைக் கொண்டுவந்து
அரசகுமாரி மேல் தெளித்தால் குணமாகும்!”


பதினோரு வேத விற்பன்னர்கள் சென்றனர்,
பரமசிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்ய!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#11e. Bitten by the love bug!

Princess PadmAvati’s friends went straight to the Queen DharaNi Devi and paid their respect. The Queen knew that something was wrong – since the girls were unusually quiet and appeared very serious. PadamAvati was not to be seen among them!

The girls told their Queen, “Today a strange young man had entered our flower garden. He said that he was chasing a mad elephant and it had led him to our garden. The mad elephant ran away when he shot an arrrow on it.

But he stayed on there and was teasing and taunting our princess. We threw stones at him and he went away. A tremendous change has come over the princess now!”


The queen ran to her daughter. PadmAvati was sitting staring vacantly. She neither saw her mother approaching her nor heard the words spoken by her.


She was thinking over her own strange behavior during the day! ‘I usually never think of doing any harm to anyone. Then why did I behave so rudely towards that strange young man? He was a very smart and handsome and most certainly he was was not mad !’

The Queen removed the effects of the evil eyes by doing drushti parihAram. She smeared the holy ash on the forehead of the princess but they were of no use. PadmAvati would neither eat well nor sleep well.

Kula guru Sage Sukar advised the King and the Queen, “Please perform abhishekham in the Siva temple situated in the Aashram of Sage Agasthya and sprinkle that holy water on our princess. She would become her normal self once again.”


The King sent eleven pundits well versed in Veda to perform the AarAdhana in the Siva temple situated in the Aashram of Sage Agasthya near the royal nanda vanam.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#10. தர்மத்தின் நியதி

“துன்பங்கள் இந்திரனைச் சூழ்ந்தது ஏன்?
இன்பத்தை இந்திரன் தொலைத்தது ஏன்?


சுவர்க்கத்தை விட்டு இந்திரன் ஓடியது ஏன்?
எவரும் அறியாது அவன் ஒளிந்திருந்தது ஏன்?”


கேட்டான் மன்னன் ஜனமேஜயன் வியாசரிடம்,
கூறினார் வியாசர் மன்னன் ஜனமேஜயனுக்கு.


“கர்மங்கள் மூன்று வகைப்படும் ஜனமேஜயனே!
சஞ்சிதம், பிராரப்தம், வர்த்தமானம் என மூன்று.


பல ஜென்மங்களின் பாவ மூட்டை ஆகும் ‘சஞ்சிதம்’.
இந்த ஜன்மத்தில் துய்க்க வேண்டியது ‘பிராரப்தம்’.


அந்தந்த ஜன்மத்தின் வினைப் பயன் ‘வர்த்தமானம்’
இந்த நியதியிலிருந்து தப்ப முடியாது ஒருவரும்.


கர்மமே காரணம் நம் தேகத்தின் உற்பத்திக்கு;
கர்மம் பக்குவம் அடைகிறது ஒரு ஜன்மத்தில்.


அடைவான் தேவாம்சம் கொண்டவன் சம்பத்து;
படைப்பான் ருஷிஅம்சம் கொண்டவன் காவியம்.


ஆவான் சிவபக்தனாக ருத்திர அம்சம் கொண்டவன்;
ஆவான் வேந்தனாக விஷ்ணு அம்சம் கொண்டவன்;


இந்திரன், யமன், அக்னி, குபேரனின் அம்சங்கள்
தந்து விடும் தலைமை, புகழ், வல்லமை, கோபம்.


அவதரித்தான் நரன் அர்ஜுனனாகப் பிற்காலத்தில்;
அடைந்தான் சொல்லொண்ணாத துன்பம் அர்ஜுன்;


பிறந்தான் ஒரு காட்டில், வாழ்ந்தான் ஒரு நாட்டில்;
திரிந்தான் காட்டில் வனவாசத்தில் பல ஆண்டுகள்!


பிறந்தான் நாராயணன் கிருஷ்ணனாகப் பிற்காலத்தில்;
பிறந்தான் அவன் சிறைச்சாலையில் கட்டுக் காவலில்.


துரத்தினர் கொல்வதற்கு பலவேறு அசுரர்கள் அவனை;
துரத்தினான் மிலேச்சன் துவாரகைக்குக் கிருஷ்ணனை;


நாசம் அடைந்தது யாதவ குலம் பிராமண சாபத்தால்;
நாம் எவருமே பெறுவதில்லை சுவாதீனம் மன்னனே!


அடைகின்றோம் ஜனனம், மரணம் தெய்வாதீனத்தால்!
அடைகின்றோம் சுகம், துக்கம் கர்ம வினைப்பயனால்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#10. The Law of Karma

King Janamejayan asked sage VyAsa a chain of doubts and questions now. “Why did Indra have to suffer so much? Why did he have to run away from heaven and hide himself?”


Sage VyAsa replied,” Karmas fall into three categories namely the ‘Sanchitam’, ‘PrArabdam’ and the ‘VarthamAnam’. Sanchitam is the collection or the bundle of the karmas done by the jeeva over many births.


PrArabdam is what the jeeva is destined to suffer or enjoy in this particular birth. VarthamAnam is the Karmas accumulated by the jeeva in any particular birth. Nobody can escape from this Law of Karma and Law of Dharma.


Our birth and the body given to us are shaped by our Karmas. Karma decides our life in this birth. A person who has the amsam of a Deva will acquire wealth. A person who had the amsam of Rushi, will write epics and purANams.


One who had the amsam of Rudra will become a devotee of Shiva. One who has the amsam of Vishnu will become a King. The amsams of Indra, Agni, Yama and Kubera will give a person the qualitiy of leadership, fame, valor and anger.

Naran was born as Arjun in a later birth. He suffered a lot as Arjun. He was born in a forest and grew up in a city. He roamed in the forest for several years in vana vAsam. NArAyaNan was born as Krishna in a prison under tight security.

Asuras chased him in his childhood in an effort to kill him. KAla Yavana chased him to Dwaraka. YAdava race was doomed by the curse of an enraged Brahmin.


None of us have the freedom or any independence. Our birth and death are due to the grace of God and the life in between the birth and death is controlled by our Karmas.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

10d. திருமண வேள்வி.

“எல்லோரும் செய்யும் திருமண வேள்வியை
எல்லா உலகின் தலைவரும் செய்ய வேண்டும்.


திருமண வேள்வி செய்திட அனுமதி தாரும்!”
பெருமானிடம் வேண்டினான் பிரம்ம தேவன்.


வேள்விப் பொருட்கள் வந்து சேர்ந்தன.
வேள்விச் சடங்குகள் செய்தான் பிரமன்,


வியாழன், சுக்கிரன், பிற முனிவர்களுடன்.
வீழ்ந்து வணங்கினர் மணமக்களை அனைவரும்.


வந்து வணங்கினாள் ரதி தேவி – ஈசன்
தந்த வாக்குறுதியை நினைவூட்டினாள்.


காமன் வந்து தோன்ற அருளினான் ஈசன்;
காமனோ தன்பிழை பொறுக்கவேண்டினான்.


“உருவுடன் இருந்து ரதியை மகிழ்விப்பாய்!
அருவமாக இருந்து உலகை ஆட்டிவைப்பாய்!”


வரம் தந்தார் மதனுக்கு, வாக்கு மாறாத ஈசன்,
வரத்தால் அகமுகம் மகிழ்ந்தனர் ரதி மன்மதர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 #10 d. THE WEDDING HOMAM.


Brahma told Siva,”Sire! you must perform all the wedding rituals like every one else. Please give me permission for performing the wedding homam!” Siva agreed.


Brahma got all the things required for the homam. He performed the homam attended by the gurus Bruhaspathi, Sukran and other rushis. Everyone fell at the feet of the bride and groom.


Rati who was waiting for the appropriate moment entered and fell at Siva’s feet. She reminded Him of His promise to bring back to life Manmathan.


Siva wished that Manmathan should appear before Him. Manmathan begged for forgiveness. Siva blessed him such that Manmathan will be visible only to Rati Devi. To the rest of the world, he will be invisible but will still have power on all the living things.


Siva and Uma returned to Kailash. All the rushis, Devas and ganas went back to their places. Siva and Uma sat on their throne. All the living creatures got back their interest in life and love. Creation was restored and resumed.


 
SRI VENKATESA PURAAANAM

12. பத்மாவதி யார்?

விடியலில் எழும் ஸ்ரீனிவாசன் அன்று
வெகுநேரம் வரையிலும் எழவில்லை.


வேட்டையாடின களைப்பு என்று எண்ணி
விட்டு விட்டாள் அவனை வகுளமாலிகை.


விழித்துக் கொண்டு விருதாகப் படுத்திருந்தான்;
எழுப்பினாலும் எழவில்லை மஞ்சத்திலிருந்து.


என்ன நடந்தது என்று பலவாறாகக் கேட்டும்,
என்ன நடந்தது என்று சொல்லவே இல்லை.


“எவள் மீதாவது மோஹம் கொண்டாயா?” என,
“எப்படிக் கண்டு பிடித்தீர்கள் அம்மா?” என்றான்!


“நீராடி உணவருந்திய பின் கூறு என்னிடம்,
நீ கண்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை!”


“காட்டில் வேட்டையாடும் போது நான் கண்டேன்
காட்டு யானை ஒன்று மதம்கொண்டு திரிவதை!


மனிதர்களுக்குத் தீங்கு செய்யுமோ என்றஞ்சி
கனத்த காட்டுக்குள் விரட்டி விட முயன்றேன்.


மலைச் சரிவில் இறங்கி ஓடியது மதயானை.
மலர் வனம் ஒன்றில் புகுந்தது அம்மதயானை.


நாராயண புரத்தை ஆட்சி செய்யும் மன்னன்
ஆகாசராஜனின் விசேஷ மலர்வனமாம் அது.


மன்னன் மகள் இருந்தாள் தன் தோழியருடன்;
மனதைப் பறிகொடுத்துவிட்டேன் கண்டவுடன்!


விருப்பத்தைத் தெரிவித்தேன் நான் அவளிடம்;
விரட்டி விட்டாள் என்னைக் கல்லால் அடித்து .


எங்கெங்கு நோக்கிலும் தெரிவது அவள் முகமே!
எங்கள் திருமணம் நடக்குமா அம்மா?” என்றான்.


“மணம் செய்ய விரும்புகிறாய் பத்மாவதியை.
குணம் கொண்டவளா உனக்கு ஏற்றவாறு?”


“அறியமாட்டாய் நீ அவள் யார் என்பதை!
அறிவேன் நான்! கூறுவேன் உனக்கும்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#12. Who is PadmAvati?

SrinivAsan used to get up from bed very early in the morning. On the next day he did not get up at the usual hour. VaguLa MAlikA thought that he was very tired after his hunting expedition and so did not disturb him.

But she found out that he was lying wide awake in deep thoughts. She asked him what was the matter but he kept mum. Finally she lost her patience and asked him, “Have you fallen in love with some sweet maiden?”


SrinivAsan’s face brightened and he asked her quite surprised, “How did you find it out my dear mother?” She told him, “Take your bath, eat your food and then tell me all about that girl”


SrinivAsan told her the events of the previous day in great detail. “I saw a mad elephant on rampage in the forest. I tried to chase it back into the deep jungle. But it started running towards NArAyaNa Puram and entered the royal garden meant for the princess and her friends.


I too entered the garden. I saw the princess PadmAvati there and fell in love with her at the very first sight. I told her my love. She drove me away from there after pelting me with stones with the help of her friends. Now I can see only her face wherever I look. Will our marriage ever take place dear mother?”


“So you want to marry princes PadmAvati? Are you sure she has a good nature to suit your own nature?” He replied, “Mother! you do not know anything about princess PadmAvati. I know everything about her and now I shall tell you all I know about her!”





 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#11a. யுக தர்மம் (1)

ஜனமேஜயன் வினவினான் வியாச முனிவரிடம்
மனத்தில் எழுந்த ஒரு புதிய ஐயத்தை மீண்டும்.


“பூபாரம் அழிக்கத் தோன்றினானாம் கிருஷ்ணன்;
பூபாரம் அழிக்கப்பட்டதா கிருஷ்ணனால் கூறும்!


கொல்லப்பட்டனர் பாரதப் போரில் அநேகம்
நல்லவர்கள் – பீஷ்மர், துரோணர் போன்றவர்.


கொல்லப் படவில்லை வேடர், மிலேச்சர்கள்;
கொல்லப் படவில்லை பாவிகள் கலியுகத்தில்.


பாவிகள் நிறைந்து இருக்கும் பொழுது – பூமி
பாரம் குறைந்தது என்று சொல்வது எப்படி?”


“எந்த ஒரு யுகத்துக்கும் உண்டு ஒரு யுகதர்மம்;
அந்த யுகத்தில் தோன்றும் அதற்கேற்ற ஜீவன்கள்.


விரும்புவர் தர்மத்தை கிருத யுகத்தில் ஜீவன்கள்;
விரும்புவர் தர்மம், பொருளை திரேதா யுகத்தில்.


விரும்புவர் தர்மம், பொருள், காமம் மூன்றையும்
பிறக்கும் ஜீவர்கள் அதன் பின் துவாபர யுகத்தில்.


விரும்புவர் பொருளையும் காமத்தையும் மட்டும்
பிறக்கும் ஜீவன்கள் அதன் பின்னர் கலி யுகத்தில்.


மாறாது யுக தர்மம் ஒரு நாளும் – எனவே
மாறாது யுகங்களின் தர்மங்கள் அதர்மங்கள்.


செய்விக்கின்றன இவற்றை காலத் தத்துவம்;
செய்கின்றனர் இவற்றை வாழும் ஜீவர்கள்;


யுக தர்மத்தை மீறி நடக்க முடியாது நம்மால்;
யுக தர்மம் நம்மை ஆட்டிப் படைக்கும் போது.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#10a. Yuga Dharmam (1)


King Janamejayan asked sage VyAsa, ” Krishna took avatar to reduce the wicked people’s population in the world. Did he actually do it? Many good people got killed in the MahA BhArata yuddham. But the thieves and and milechas did not get killed by Krishna. How can we say that the earth was rid of the sinners when the sinners still abounded on it?”


Sage VyAsa replied, “Every Yuga has its own Yuga Dharmam and the people being born during that yuga will have the appropriate characteristics suitable to the prevailing yugam. All the jeevas born in Kruta Yugam were sworn to Dharma and justice.


In Treta yugam the people born wanted both Dharma and Artha or material comforts. In DwApara Yugam the people wanted all the three namely Dharma, Artha and KAma. In Kali Yuga people care only for Artha and KAma and do not care for Dharma and Moksha.


The Yuga Dharma is constant. The people in any yugam born behave according to it. So the Dharma and Adharma prevailing in any yugam varies according to the yugam. The Time Factor manipulates all these changes. We are helpless and can not go against it.”



 
Last edited:
kanda puraanam- urpatthik kaandam

11a. முருகன் தோற்றம்

நாட்கள் பல கடந்தும் நம்பி அவதரிக்கவில்லை.
நான்முகன், இந்திரன், திருமால், தேவர் குழுமினர்.


“பிறையணி நாதனிடமும், பார்வதி தேவியிடமும்,
முறை இட்டு வேண்டிக்கொள்வதே ஒரே வழி!


நல்ல சகுனம் நோக்கி நாம் சென்றால் ஒழிய
செல்லும் காரியங்கள் வெல்ல வாய்ப்பு இல்லை.”


வாயு தேவனைப் பணித்தார்கள் அவர்கள்,
யாது செய்கின்றான் பிரான் என்று கண்டு வர.


“காமனையே எரித்த கண்கள் உருவமற்றதான
காற்றை என் செய்யுமோ?” என அஞ்சினான்.


கயிலையை அடைந்து நீராடி, தென்றலாகிப்
பயின்றான் நடை, மலர் மணத்தைச் சுமந்தபடி.


நந்தியின் அனுமதியின்றி கயிலைமலையில்
மந்த மாருதமும் நுழைய முடியாது அன்றோ!


வாயுவைத் தடுத்து, அதட்டி நந்தி விரட்டக்
காயும் சூரியன் முன் பனியாகிவிட்டான் வாயு.


“தேவர்கள் பிரானை தரிசிக்க விரும்பி என்னை
ஏவினர் வேத முதல்வனைக் கண்டு வரும்படி.


சூரபத்மனின் அடிமையான நாள் முதல் – என்
வீரமும், விவேகமும் அழிந்து விட்டன போலும்!”


“உன்னைப் பிழைக்கவிட்டேன், நீ ஓடிப்போ!”
இன்னுயிர் பிழைத்த காற்று கடுகி மறைந்தான்.


மேரு மலையில் இருந்த தேவர்களிடம் சென்று
கூறினான் கயிலையில் நிகழ்ந்தவற்றை எல்லாம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 # 11 a. THE BIRTH OF MURUGAN.


Many days rolled away but Siva’s son was yet to be born! All the Devas including Brahma, Vishnu and Indra met on Mount Meru.


“We can’t wait any longer. We have to meet Siva and Uma in person and tell them our grievances. Only if we approach them at an appropriate time, our task will become easy.”


They ordered VAyu to go to KailAsh and find out whether the time was ripe for their visit.


“Siva had burned Manmathan who had the most lovely body. I am already formless and invisible! What will become of me?” VAyu worried. But he had no choice but to give in.


He reached KailAsh, took a bath, loaded himself with the fragrance of the flowers and tried to enter Kailash as Manda MArutham – the gentle and fragrant breeze .


But the ever vigilant Nandi stopped him, scolded him and ordered him to run off as fast as he could – if he wished to remain alive.


VAyu told him the purpose of his visit but in vain. VAyu was forced to return to mount Meru and relate the failure of his mission to the Devas there.


 
Last edited:
SRI VENKATESA PURAANAM

13a. வேதவதி


திரேதா யுகத்தில் இலங்கேஸ்வரன்
திரிலோக சஞ்சாரம் செய்து வந்தான்.


இமாலயச் சாரலில் கண்டு மோஹித்தான்
அமானுஷ்ய அழகுடைய ஒரு சுந்தரியை.


வேதவதி என்ற அந்தக் கன்னிகைக்கு
வேதவாக்கு ஆகும் தந்தையின் சொல்.


மகாவிஷ்ணுவை வரித்தாள் தன் மணாளனாக;
ஹிமாச்சலத்தில் செய்து வந்தாள் கடும் தவம்.


நெருங்கினான் வேதவதியை இலங்கேஸ்வரன்.
விரும்பினான் அவள் அழகை அனுபவிப்பதற்கு!


“பரந்தாமனை வரித்துவிட்டேன் மணாளனாக!
பரபுஷர்களுக்கு இடமில்லை மனதில்” என்றாள்.


“பரந்தாமனுக்கு இளைத்தவனோ இந்த ராவணன்?
பரமசுகமாக வாழலாம் என்னை மணந்துகொண்டு!”


வேதவதி ஏற்கவில்லை இந்தக் கோரிக்கையை.
வேண்டாம் என்றால் விடுபவானா இராவணன்?


தலைக்கு ஏறிவிட்ட மோக வேகத்தில் – அவள்
தலை மயிரைப் பற்றிக் கொண்டு சூளுரைத்தான்.


“அடையாமல் ஓயமாட்டேன் நான் விரும்பியதை!”
அடிபட்ட பெண் நாகமாக மாறிவிட்டாள் வேதவதி.


“கேசத்தைத் தீண்டி அதை மாசு படுத்திவிட்டாய்!
கேசவனுக்கு உகந்தது அல்ல அது இனிமேலும்!


திடமனத்தோடு தவம் புரிந்துவந்த வேதவதியின்
இடக்கையே மாறி விட்டது ஒரு கூரிய கத்தியாக!


கேசத்தையே துண்டித்து விட்டாள் இடக் கையால்!
மோசமான எண்ணத்தை அது மாற்றிவிடவில்லை.


திடுக்கிட்டான் ராவணன்; மனம் தளரவில்லை;
தடுத்ததால் மேன்மேலும் வளர்ந்தது காம ஜுரம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#13a. Vedavati

In Treta yugam RAvaNa used to travel in all the three worlds. One day he saw an unusually beautiful maiden on the slopes of HimAlaya and felt his lust surging in him.


The maiden was Vedavati. She had decided to marry VishNu as desired by her father. She was doing severe penance towards her goal, on the slopes of HimAlaya.


RAvaNa approached her but she refused bluntly saying, “I have decided to marry VishNu and there is no place for any other person in my life!”


RAvaNa felt insulted and asked her. “In which way am I inferior to your VishNu? If you marry me you can live in pure bliss.” But she was adamant in her decision.
RAvaNa was not to be put off so easily. He was used to getting everything he had set his mind on.


He pulled her by her hair and said, “Nothing will stop me from enjoying what my heart desires!” Vedavati became wild like a wounded serpent and said,

“You have touched my hair and made it unfit for VishNu. I have no need for it any more!”

Her left hand transformed into a sharp knife by the power of her penance. She cut off her hair touched and defiled by RAvana, using her left hand itself as a knife.


RAvaNa was shocked to see this but it did not deter him from his determination. In fact his desire to possess her became more than it had been before.



 
Last edited:
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#11b. யுக தர்மம் (2)

“வெட்கம் கெட்டவர், ஒழுக்கமற்றவர் – நடத்தை
கெட்டவர், இறைவனை நிந்திப்பவர் போன்றவர்


நிறைந்த கலியுகத்தில் நல்லவர் மறைவது எங்கே?
கிருத யுகத்தில் கெட்டவர் மறைவது எங்கே கூறும்!”


“விரும்பினர் முதல் மூன்று யுகங்களில் மக்கள்,
விதிக்கப்பட்டிருந்த தங்கள் கர்மங்களை மட்டுமே.


தானம், தவம், உண்மை, கருணை – பிறர்
தாரம் விழையாமை, துரோகம் செய்யாமை.


அடைந்தனர் சுவர்க்கத்தை அனைவருமே;
அமைந்தனர் சுவர்க்கத்தில் கலி முடியும் வரை.


மாறாக நடந்த மனிதர்கள் அனுபவிப்பார்கள்
மறுபடிக் கலி யுகம் வரும் வரை துன்பங்களை!


வந்து பிறப்பார் மீண்டும் கலியுகத்தில் அவர்கள்!
வந்து பிறக்கும் வரையில் உழல்வர் பாழ் நரகத்தில்.


கலியுகத்தில் நற்கருமங்கள் செய்த நல்லவர்கள்
சென்று பிறப்பர் துவாபர, கிருத யுகங்களில் பின்பு


அந்த யுகங்களில் தீமைகள் செய்த தீயவர்கள்
வந்து பிறப்பார்கள் கலி யுகத்தில் அவதிப்பட.


மாறது ஒரு போதும் யுக தர்மம் ஜனமேஜயனே!
மாற அனுமதிக்காது அதைக் காலத் தத்துவம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#11b. Yuga Dharmam (2)


“Kali yugam is filled with people who are shameless, who lack good morals and good conduct and who are atheists. What happens to the good souls during the Kali yuga? Where do they reside during this period? Where do the wicked souls of Kali yuga reside during the Kruta and Treta yugams?


Sage VyAsa replied to King Janamejayan thus:
“In the first three yugams, the people were interested in doing their prescribed duties sincerely. Good people with good qualities, doing good karmas filled the earth. All those good souls resided in heaven until the Kali yugam of that cycle got exhausted. Those who were bad souls were born in the Kali yugam, instead of residing in heaven.

Those who were born in Kali yugam were sent to the hell until the next Kali yugam started. They suffered pangs of of sorrows in hell followed by the real problmes on the earth in the next Kali yugam. Yuga dharma never changes. Time Factor makes sure that the yuga dharma never changes.”



 
Kandapuraanam (Urppathik Kaandam)


11b. தேவர் விண்ணப்பம்.

தேவர்கள் வருந்தினர் வாயுவின் மொழி கேட்டு;
“யாவரும் ஒரு விண்ணப்பம் செய்வோம் வாரீர்!”


மேருவை நீங்கி கயிலைமலையை அடைந்தனர்- “எம்
வருகையைப் பெருமானுக்கு அறிவிக்க வேண்டும்!”


வரச் சொன்ன பெருமானிடம் முறையிட்டனர்.
“தர வேண்டும் வீரத் திருமகன் குறை தீர்க்க!”


“வருந்த வேண்டாம் தேவர்களே வறிதே நீங்கள்!
திருமகன் தோன்றும் நேரம் கனிந்து விட்டது!”


ஐந்து புதிய திருமுகங்கள் தோன்றச் செய்தார்;
ஆறு முகங்களில் ஆறு அழகிய நுதற்கண்கள்!


அவற்றில் தோன்றின ஆறு தீப் பொறிகள்!
அவை விரிந்து, பரந்து வெப்பத்தை உமிழ்ந்தன!


ஓய்ந்து விட்டது காற்று! வற்றி விட்டன கடல்கள்!
ஒடுங்கியது நாணிய ஊழித்தீயும்! பிளந்தது நிலம்;


நெகிழ்ந்தன கல்மலைகள்; அஞ்சின உயிரினங்கள்;
உமிழ்ந்த வெப்பத்தால் அஞ்சினாள் உமையும்!

படர்ந்த பொறிகள் தீங்கு விளைவிக்கவில்லை.
உடனே தணிக்க வேண்டினர் கடும் வெப்பத்தை;


ஐந்து முகங்களையும் மறைத்த ஈசன் முன்போல்
இந்து அணிந்த ஒரு முகத்தினான் ஆனான்.


தீப்பொறிகளைத் தன்னிடம் திரும்ப அழைத்தான்.
தீக் கடவுளிடமும் காற்றிடமும் சொன்னான்,


“இருவரும் இப்பொறிகளைத் தாங்கிச்சென்று
பெருகும் கங்கை நதியில் சேர்க்க வேண்டும்!”


“நுதற் கண்ணில் தோன்றிய தீப்பொறிகளை
முதலில் தாங்கும் ஆற்றல் வேண்டுமே!”


தீங்கு நேராமல் தீப்பொறிகளைத் தாங்கத்
திருவருள் புரிந்தான் கருணைக் கடல் ஈசன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 #11B. THE REQUEST OF DEVAS.


Devas worried about the failure of VAyu’s mission. They decided to take a chance and go to KailAsh in person to meet Siva and Uma.


They left Mount Meru and reached mount KailAsh. They requested Nandi to inform Siva of their visit. Siva Himself called them to come in and they spoke to him in unison,

“Sire! Where is the valorous son you had promised us – who will rid us of all our troubles and humilations?”

Siva replied to them.,”Now is the right time for my son to be born. Do not worry any more!” He assumed five new faces. Along with His face, He now had six faces. There was a third eye in each of those six faces. A spark of fire appeared from each of them.

These six sparks were so hot that everybody started running aimlessly. The air stopped moving. The oceans dried up! Agni Devan got frightened by these intense sparks. All Mountains softened as if they were melting in the heat. All the living things were scared. Uma also go frightened and ran away in a hurry.


Since the sparks were benign they did not harm anyone. Siva decided to reduce the intensity of the sparks and called them back to him. He made his extra five faces disappear and was seen with one face adorned by the crescent moon.


He ordered Agni and VAyu to carry the sparks and deposit them in the river Ganges. She will transport them to Saravanap Poigai .


Agni and VAyu wondered how anyone could even touch those sparks. Siva blessed them with the power to bear the heat of the sparks and sent them on their mission.






 
Sree Venkatesa PuraaNam

13b. வேதவதியின் சாபம்

அண்டம் குலுங்க நகைத்தான் ராவணன்;
'கொண்டது விடா முதலையும், மூர்க்கனும்'!


“மந்திர, தந்திரப் பிரயோகங்கள் என்னிடத்திலா ?
தந்திரங்களில் பெயர் போனவன் இந்த ராவணன் !”


மீண்டும் நெருங்கினான் வேதவதியை ராவணன்;
மீண்டும் தியானித்தாள் வேதவதி பரந்தாமனை;


வேதவதி ஒரு புனிதவதி அதனால் அங்கு
வேகமாக வளர்ந்தது அக்கினி ஒரு தடுப்பாக.


திகு திகு என்று எரியத் தொடங்கியது அது
திகில் அடைந்த அபலையைக் காப்பதற்கு.


வரவழைத்தான் ராவணன் வஜ்ஜிராயுதத்தை.
எரியும் தீயை அணைக்க முயன்றான் அவன்.


‘கற்பைக் காத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழி
கயவன் தொடுமுன் உயிரை விடுவதே ஆகும்!’


“காமத்தால் கண்ணிழந்து விட்ட அரக்கனே!
காமம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன்!


விடுவேன் என்னுயிரை எரியும் தீயில் குதித்து;
விடாது என்றும் இந்தப் பாவம் உன் குலத்தை!


பழி தீர்க்கும் உன்னை என்றாவது ஒருநாள்!
அழிவாய் நீயும், உன் குலமும் பெண்ணால்!”


சாபம் இட்டாள்; குதித்தாள் அந்த நெருப்பில்
சாபம் வீண் போகவில்லை பலித்தது பிறகு.


சீதையிடம் கொண்ட விபரீத மோஹமே
சீரழித்துவிட்டது அவன் வம்சத்தினையே1


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#13b. The curse!


RAvaNa laughed in such a manner that the whole world trembled. A crocodile would never would let go of its price catch nor would a fool let go his pet theory.


“You are exhibiting the power of your MAyA to me – The king of MAyA! ” He made fun of Vedavati and went near her again. Vedavati meditated on VishNu and prayed for his protection. A barrier of fire appeared in between them immediately.


It burned with high flames. RAvaNa could not go near her. He summoned his mighty VajrAyudam and tried
to put off the barrier of fire in between them.


Vedavati realized that that the only way to escape from this lusty demon was to give up her body to the flames instead of to him.


She cursed him,” You are blinded by your lust. I will never let you touch me body. I will rather offer it to this fire. This sin committed by you will never let you live in peace. It will surely punish you. You and your race will be destroyed by a woman.”


She jumped into the roaring flame. Her curse came true since RAvaNa and his race were completely destroyed by his unjust lust towards Sita.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#11c. யுக தர்மம் (3)

“எந்த தர்மம் எந்த யுகத்துக்கு உரியது – எனக்கு
இந்த உண்மையை விளக்க வேண்டும் முனிவரே!”

“யுக தர்மம் மாற்றிவிடும் நல்லவர்களையும் கூட;
யுக தர்மத்தால் செய்தான் பரீக்ஷித் பாவச் செயல்.

தவம் செய்து கொண்டிருந்த அந்தணர் கழுத்தினில்
அவன் இட்டான் இறந்த பாம்பின் உடலை எடுத்து!

வேத வல்லுனர்கள் கிருத யுகத்தில் அந்தணர்கள்;
பேதமின்றிச் செய்தனர் சக்திதேவியை ஆராதனை.

ஆயலங்கள் கட்டினர் க்ஷத்திரியர்கள் – மக்கள்
அவரவர் கர்மங்களைச் செய்ய வைத்தனர்.

வைசியர் செய்து வந்தனர் வணிகம், வியாபாரம்,
பசுக்களின் ரக்ஷணை, பயிர்த்தொழில் முதலியன.

கடவுள் தொண்டாற்றினர்; மூன்று வர்ணத்தவரைக்
காப்பதில் ஈடுபட்டனர் நான்காம் வர்ண்த்தினர்.

தருமம் மேலும் குறைந்துவிடும் திரேதா யுகத்தில்;
தருமம் க்ஷீணிக்கும் மேலும் துவாபர யுகத்தில்;

போலி வேடதாரிகள் வஞ்சித்திடுவர் மக்களை;
பொய் பேசுவர்; கைவிடுவர் வேத விதிகளை;

ஆடம்பரம் மிக்கவராக, அகம்பாவிகளாக,
அதர்மம் செய்து சேவிப்பார் சூத்திரர்களை.

நிந்திப்பர் வேதங்களை, விரும்புவர் தானங்களை;
நீசர்களாக மாறிவிடுவர் கலியுகத்தில் வேதியர்கள்.

துறந்துவிடுவர் நால் வர்ணத்தவர் குல தர்மத்தை;
துறந்து விடுவர் பெண்டிர் நான்கு நளினங்களை.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#11c. Yuga Dharmam (3)

King Janameyajan asked Sage VyAsa,” Please tell me which Dharmam belongs to which Yugam.”

VyAsa replied, ” The Yuga Dharmam can corrupt even good people and make them do bad things. King Pareekshit did a sinful act corrupted by the Kali Yuga Dharmam. He draped the body of a dead snake around the neck of a sage who was lost in deep meditation.

In Kruta yugam, all the Brahmins were exponents in Vedas. They worshipped Shakti Devi. The Kshatriyas built temples and made sure that the people performed their prescribed karmas. The Vaisyas did business, trade, agriculture and animal husbandry. The fourth VarNa served and protected the other three varNas.

Dharma would become weaker in TretA Yugam and more weakened in DwApara yugam. Imposters would deceive the general public. People would become liars, give up Vedic practices, and give more value and respect for pomp and show.

The Brahmins would disown the Vedas but not the practice of receiving DAnam. They would serve and hail the rich people of the other three VarNas.

All the four varNas would give up their prescribed duties. All the women would give up their womanly qualities namely Fear, Innocence, Coyness and Chastity.”




 
KANDA PURAANAM _ URPATTHIK KAANDAM

11c. சரவணப் பொய்கை.

அக்னியும், வாயுவும் வணங்கினர் பிரானை.
அக்னிப் பொறிகளைச் சுமந்தான் வாயு.


திருமால் முதலானோர் பின் தொடர்ந்தனர்.
ஒரு நாழிகைப்பொழுதில் களைத்துவிட்டான்!


அக்னிப் பொறிகளைச் சுமந்தான் அக்னிதேவன்!
அக்னியே அக்னியைச் சுட்டது அங்கே, அன்று !


வருத்தத்தைப் பொறுத்துக் கொண்ட அக்னிதேவன்
திருத்தமாகப் பொறிகளை கங்கையில் சேர்த்தான்.


வற்றாத கங்கையும் வற்றி விடுமோ வெப்பத்தில்?
சிற்றாறு போல் ஓடிச் சேர்த்து விட்டது கங்கை,


ஆறு தீப் பொறிகளையும் ஒரு பழுதும் இன்றி
சரவணப் பொய்கையில், இமயமலைச் சாரலில்.


காவல் நின்றனர் தேவர்கள்அப்பொய்கைக்கு.
ஆவல் மீறியது வீர சிவகுமாரனைக் கண்டிட.


உருவமும் அருவமும் ஆகி, ஆதி அந்தமில்லாத
திருவுடலே ஒளிப்பிழம்பாக அவன் தோன்றினான்.


ஓராறு திரு முகங்கள்; பன்னிரு திருக் கரங்கள்;
ஈராறு விழிகள்; இவ்வுலகை உய்விக்க வந்தான்.


அரவணைத்து அனைதுலகையும் ஆளப்பிறந்தான்.
சரவணப் பொய்கையில் அவதரித்தான் அவன் .


விண்ணில் ஒலித்தன தேவ துந்துபிகள்,
மண்ணில் மகிழ்ந்தன உயிரினங்கள்;


மலர்கள் சொரிந்தன; மறைகள் முழங்கின;
குலவும் குமரன் இருந்ததோ தாமரையின் மீது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 # 11c. SARAVANAP POIGAI.


Agni and VAyu took leave of Siva. Vishnu and other Devas followed them. VAyu carried the sparks for one muhoortham and got totally exhausted. Now it was Agni’s turn to carry those sparks.


Even though he himself was the God of Fire, Agni had difficulty in carrying those sparks. However he managed to deposit the sparks in Ganges as ordained by Siva.


Ganges got partly dried up by the intense heat of the sparks but transported them to Saravanap Poigai. All the Devas stood around the Poigai, waiting for a glimpse of the great Sivakumar – their only Savior and protector.


The baby appeared in the Poigai. He has six faces, twelve hands and twelve eyes. His body was just one. Dundubis were blown by Devas. The whole world felt greatly relieved and reassured. Vedas were chanted and Sivakumar was siting on a lotus flower.


 
SRI VENKATESA PURAANAM

13c. இரண்டு சீதைகள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை எனத்
தன்னாட்டை விடுத்துக் கனகம் ஏகினான்


தம்பியுடனும், சீதையுடனும் ஸ்ரீ ராமன்.
தங்கினர் பஞ்சவடியில் அமைதியுடன்.


தையல் சீதையைத் தாக்கினாள் – ராமனிடம்
மையல் கொண்டுவிட்ட அரக்கி சூர்ப்பனகை.


காது, மூக்கு அறுபட்டு அலறி ஓடிச் சென்று
ஓதினாள் சீதையின் அழகை ராவணனிடம்.


காமம் கொண்டான் கண்டிராத சீதைமீது!
ஏமாற்றினான் ஒரு மாய மானை அனுப்பி!


அப்புறப்படுத்தினான் ராம, லக்ஷ்மணர்களை.
அபகரித்தான் சீதையைப் பர்ணசாலையுடன்.


“அபாயம் நேரக் கூடாது சீதைக்கு!” என்று
உபாயம் ஒன்று. செய்தான் அக்கினிதேவன்


வேதவதியுடன் வந்தான் விரைந்து வெளியில்!
வேகமான ராவணனை மறித்தான் வழியில்!


“உண்மை சீதை இருக்கிறாள் என்னிடம்;
உன்னிடம் இருப்பவள் ஒரு மாயச் சீதை.


எடுத்துச் செல் இந்த உண்மை சீதையை!
விடுத்துச் செல் அந்த மாயச் சீதையை!”


நம்பினான் அக்கினியின் சொற்களை ராவணன்;
அம்பென விரைந்தான் வேதவதியுடன் இலங்கை.


சீதையை விட்டு விட்டான் அக்கினிதேவனிடம்;
சீதையை விட்டான் ஸ்வாஹாவிடம் அக்கினி.


ராவணன் அழிந்தபின் அக்கினிப் பரீட்சை
ராமன் செய்யச் சொன்னன் வேதவதியிடம்.


வலம் வந்தாள் அக்கினியை மூன்று முறை;
வணங்கினாள் ராமனை; இறங்கினாள் தீயில்!


வெளிப்பட்டார் அக்கணமே அக்கினி தேவன்!
வெளிப்பட்டனர் அவருடன் இரண்டு சீதைகள்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#13c. Two SitAs!

Sri RAman went for vana vAsam with his younger brother LakshmaNa and wife SitA, as commanded by his father Dasaratha. They lived in Panchavadi in peace.


Soorpanakha (RAvaNa’s sister) fell in love with RAma and wanted to marry him. She tried to hurt SitA who was a hindrance to her one sided love towards RAma..


LakshmaNa punished Soorpanakha by chopping off her nose and ears. Soorpanakha went back to Lanka and ignited lust in the mind of RAvaNa – by praising highly the nonpareil beauty of SitA.


RAvaNa was infatuated with the SitA whom he has not seen yet. He sent a fancy deer and got RAma and LakshmaNa out of his way. He abducted SitA on his Pushpaka vimAnam along with her parNasAlA.


Agni Devan was worried abut the safety of SitA in the hands of RAvaNa. He now came forward with the Vedavati – who had jumped into fire earlier, but whom he had saved unhurt and protected with respect.


Agni told RAvaNa, “This lady with me is the real SitA. The one with you is MAya SitA. Please take this real SitA and leave behind the MAya SitA.”


RAvaNa trusted Agni Devan’s words completely. He left behind the lady abducted from Panchavadi and went to Lanka with Vedavati instead of her.


After RaAvaNa got killed in the war, RAma asked SitA (who was in fact Vedavati) to go through the Agni Pareeksha. She (Vedavati) went round the fire thrice, paid her respect to RAma and jumped in to the fire.


Immediately Agi Devan emerged from the flames. There were two SitAs with him now.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#11d. யுக தர்மம் (4)

“மனம் போனபடி வாழ்வார்கள் பெண்கள்;
மோகம், காமம், லோபம் கொண்டிருப்பர்.


பேசுவார்கள் கற்புநிலை பற்றி வாய் கிழிய;
மோசம் செய்வார்கள் தங்கள் கணவன்மாரை.


கலி முற்றியதும் அழிந்துவிடும் தர்மங்கள்;
மறைந்து சூனியம் ஆகிவிடும் தர்மங்கள்;


தூய்மை அடையலாம் பிராயச் சித்தம் செய்து
தூய்மை அடையலாம் சிறிது சிறிதாக முயன்று.


ஆகார அசுத்தி உண்டாக்கும் சித்த அசுத்தி;
ஆகார சுத்தியால் அடையலாம் சித்த சுத்தி.


சித்த சுத்தியால் விருத்தி அடையும் தர்மம் – ஆனால்
தர்ம விருத்தியைத் தடை செய்யும் துன்மார்க்கம்.”


“கலி யுகத்தில் நற்கதி பெரும் வழி என்ன கூறுவீர்,
கலியை வெல்லும் உபாயம் கூறுவீர் முனிவரே!”


“உள்ளது ஒரே உபாயம் கலியை வென்றிட;
உள்ளது தேவி ஆராதனை என்ற உபாயம்;


உள்ளது பாவத்தை அழிக்கும் வல்லமை
கள்ளமற்ற தேவி அன்னை பராசக்தியிடம்.


நீக்கி விடுவாள் எல்லாப் பாவங்களையும்,
நீக்கி விடுவாள் அனைத்து தீமைகளையும்.


உச்சரித்த மாத்திரத்தில் தந்து விடுவாள் அவள்,
உரிய பலனை நாம் விளையாட்டாக ஒதினாலும்.


உய்வான் தேவியை வழிபடும் மனிதன் – செயல்கள்
செய்வான் நான், எனது என்ற எண்ணத்தை ஒழித்து.


புண்ணிய க்ஷேத்திரத்தில் வாசம் செய்து
பண்ணவேண்டும் தேவியின் ஆராதனை.


தடையின்றி ஜபிக்க வேண்டும் நாமத்தை
இடைவிடாது நம் இதயக் கோவிலினில்.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#11d. Yuga Dharmam (4)


Sage VyAsa continued talking to King Janamejayan about the effects of Kali yugam. “The women would live loose lives without any morals or scruples. They would be filled with Lust, Desire and Greed. They woulf talk about Chastity and purity while cheating on their trusting husbands.


When the Kali yuga ripens, Dharma would vanish completely. One can get purified by acts of pariharam, but it is a slow and continous process. Wrong type of food, corrupts one’s mind and intellect. Right eating will make one’s thinking clear. Bad qualities would deter the development of good qualities.”


King Janamejayan asked VyAsa,”Is there any way to beat the bad effects of Kali yuga and get liberated? Oh sage VyAsa!”


The sage replied, “There is only one way to beat the effect of Kali. It is the Devi AarAdhana. Devi has the power to destroy all sins and remove all impending dangers. She will bestow on us her grace- even when we have uttered her name only playfully.


The devotee of Devi will get liberated. He will perform actions devoid of the thoughts about “I” and “Mine”. It is best to reside in a holy place and do Devi AarAdhana.


Remember Devi as installed in the heart and do coonstant japa of her name to beat the bad effects of Kaliyugam.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

11d. திருவிளையாடல்கள்

பொய்கையில் தோன்றிய பெருமானை
மெய்யன்புடன் வளர்க்க வேண்டுமே!


கார்த்திகைப் பெண்கள் அறுவரிடமும்
பார்த்து வளர்க்க வேண்டினர் தேவர்கள்.


“சிவபாலனை வளர்க்கும் பொறுப்பு
சீலவதிகள் உங்களைச் சார்ந்தது.”


கரும்பு தின்னக் கூலி கிடைக்குமோ?
கிடைத்தது கார்த்திகைப் பெண்களுக்கு!


அறுவரையுமே தாயாக எண்ணியவன்
ஆறு அழகிய குழவிகளாக ஆனான்.


பாலூட்டினர்; தாலாட்டினர் - தாமரை
மலர்கள் மீது உறங்க வைத்தனர்.


ஆறு குழவிகளும் செய்யும் வேறு
வேறு செயல்களை ஒரே நேரத்தில்!


ஒன்று துயிலும், ஒன்று விழிக்கும்;
ஒன்று பால் உண்ணும், ஒன்று தவழும்;


ஒன்று நகைக்கும், ஒன்று சிணுங்கும்;
ஒன்று பாடும், ஒன்று ஆடும்;


ஒன்று கை கொட்டும், ஒன்று கூத்தாடும்,
ஒன்று பொய்கை நீரைக் கலக்கும்.


ஆறு குழந்தைகளும் புரிந்தன
வேறு வேறு திரு விளையாடல்கள்.


காண்பவர்கள் கண்களும், மனங்களும்
களவாடப்பட்டன அச்சிசுக்களால்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1 # 11d . DIVINE PRANKS OF SIVAKUMAR.


The divine baby should be taken care of with great love. Devas requested the six KArthigai women to take care of the baby Siva KumAr.


The six ladies were very happy to perform their duties as mothers. Sivakumar wanted to be with all those six ladies. So he transformed himself into six babies and each baby was cared for by one of those six ladies.


They fed the babies with milk, sang lullabies and made them sleep on the lotus flowers in the Poigai. The six children behaved as though they were indeed six different children. They did different things at the same time.


One of them would go to sleep. Another would wake up from sleep. One of them would drink milk. Another would pretend to cry. One of them would sing and another would dance. One of them would clap hand and another would churn the water of the Poigai.


The six lovely babies stole the hearts of all the onlookers by their sweet and naughty pranks!


 

Latest ads

Back
Top