• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

SRI VENKATESA PURAANAM

26d. விஸ்வரூபம்

” இந்த முறை உதவுகிறேன் தொண்டைமான்
இன்னொரு முறை நடக்கக் கூடாது இது போல!


உடல்களைக் கொண்டு வா என் சன்னதிக்கு!” என
உடல்களைக் கொண்டு கிடத்தினான் சன்னதியில்.


“உயிர்ப்பித்துத் தருவாய் மீண்டும் ஸ்ரீனிவாசா!
உயிர்ப் பிச்சை தருவாய் குற்றவாளி எனக்கும்!”


பாத்திரத்தில் இருந்து பகவான் எடுத்துத் தெளித்த
தீர்த்தத்தினால் உயிர் பெற்றனர் தாயும், சேயும்.


எழுந்தனர் தூக்கத்தில் இருந்து எழுவது போல;
விழுந்தனர் வியப்புக் கடலில் அதைக் கண்டவர்.


“பட்டினியால் மெலிந்து நலிந்த மகன் இப்போது
பட்டொளி வீசி ஜொலிப்பது எப்படி?” என்றாள்.


“சரணடைந்தேன் ஸ்ரீனிவாசநிடம் நான் – அவன்
அரவணைத்து உயிர்ப்பித்தான் தன் கருணையால்!”


அவளும் தொழுதாள் பகவான் பாதங்களை;
“அருளுங்கள் என்றும் குறையாத பக்தியை!”


“நித்திய வாசம் செய்வேன் நாடி வருபவருக்கு!
சத்தியமாக உதவுவேன் தேடி வருபவர்களுக்கு!”


பகவான் மார்பில் தோன்றி மறைந்தன – ஈரேழு
லோகங்கள் பதினான்கும், கடல்கள் ஏழும்!


அழைத்து வந்தனர் கிருஷ்ண சர்மாவை அங்கு,
அடைந்தான் ஆச்சரியம் அவர்களைக் கண்டு.


‘இத்தனை வனப்புள்ளவளா என் மனைவி?
இத்தனை தேஜஸ் உடையவனா என் மகன்?’


“மறுபிறவி எடுத்து வந்துள்ள்ளோம் நாங்கள்!
மறவோம் என்றும் ஸ்ரீனிவாசன் கருணையை!”


விளங்கவில்லை ஒன்றும் கிருஷ்ண சர்மாவுக்கு;
விளக்கினான் அனைத்தையும் தொண்டைமான்.


ஊர் திரும்பும் அந்தணனுக்கு அளித்தான் அவன்
சீர் போலப் பொன்னும், மணியும், பல பரிசுகளும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#26a. Viswaroopam


“I will help you this time. But make sure such a thing will never be repeated in the future. Bring those two bodies here to my sannadi” SreenivAsan told ThoNdaimAn.


The bodies were brought to the temple and laid before SreenivAsan. ThoNdaimAn begged him, “Please resurrect them O Lord. Please grant me my life by bringing them back to their life!”


SrinivAsan sprinkled some water on the mother and her son. They woke up as if from deep sleep. The mother wondered on seeing her infant son,”He was so hungry and famished before. He seems to be hale and healthy now!”


ThoNdaimAn told her, “SrinivAsan took pity on you and resurrected you and your son!” The lady prayed to God for undiminished bhakti . SrinivAsan promised her, “I shall live here for the sake of my devotees. I shall always protect them and save them”


The fourteen worlds and the seven seas appeared on the chest of SrinivAsan. Then they disappeared from their sight.

Krishna sharma was brought there. He was wonderstruck at the beauty of his wife and the tejas of his son. His wife told him, “We have taken a new birth now. We have been blessed by Lord SrinivAsan.”

Her husband could not make head or tail of this news. ThoNdaimAn explained to him everything that had happened. He showered gold, gemstones and many costly gifts on Krishna Sharma when he went home with his young wife and infant son.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#24b. வியாசரின் விசனம் (2)


“சோகத்துடன் என்னை நினைவு கூர்ந்தாள் அன்னை;
வேகத்துடன் சென்று அடைந்தேன் நான் அவளிடம்;

“நசித்துப் போகக் கூடாது நம் வம்சம் – அதனால்
உசிதமாக உற்பத்தி செய்வாய் உந்தன் சந்ததிகளை.

கூடிக் கலப்பாய் தம்பியர் மனிவியரோடு – அதனால்
கேடில்லாமல் விருத்தி அடையும் வம்சம்!” என்றாள்.

“சகோதரன் மனைவி ஒருவன் மகளுக்குச் சமம் அல்லவா?
சம்மதிக்க மாட்டேன் இந்தத் தீச் செயலுக்கு ஒருநாளும்!”

“பற்றாது பாவம் பெரியோர் ஆணைப்படி நடந்தால்;
பற்றாது பாவம் உன் தாயின் தாபத்தைத் தீர்ப்பதால்.”

வற்புறுத்தினாள் என் அன்னை சத்தியவதி – மேலும்
வற்புறுத்தினான் காங்கேயனும் தாய் சத்தியவதியுடன்.

வந்தாள் அம்பிகை என்னுடன் கூடுவதற்கு – ஆனால்
வெறுப்பினால் கண்களை மூடிக் கொண்டு விட்டாள்.

சாபம் தந்தேன் “கண்ணற்ற மகன் பிறப்பான்!” எனக்
கோபம் எல்லை மீறி விட்டதால் நான் அம்பிகைக்கு.

தாபம் அடைந்தாள் எந்தன் தாய் சத்தியவதி – மிகவும்
துக்கப்பட்டாள் என் தாய் என் அவிவேகச் செயலால்!

துக்கப் பட்டேன் நானும் என் அவசர சாபத்துக்கு.
விக்கினம் இன்றிக் குருடனால் அரசாள முடியுமா?”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

6#24b. VyAsa’s sorrow (2)

My mother Satyavati remembered me with deep sorrow. I had promised her to go to her whenever she remembered me. So I hurried to her. She was sad since her other two sons had died without leaving behind any children.

She told me,”Help the wives of your brothers to produce worthy children. Our race must not come to an end with my sons.”

I told her, ”The wife of one’s younger brother is equal to one’s own daughter. I can never perform this service for the sake of our race to continue.”

My mother would not give up so easily. He told me,”No sin will be incurred when a man obeys his mother’s commands or fulfils her wishes.”

Satyavrathan also joined with her in brainwashing me to perform this act. Finally I gave in to their wishes. Accordingly Ambikai was sent to me that night.

She did not feel any love towards me. She was afraid of me and closed her eyes tight during the act of love. I got terribly upset and cursed her, ” May you bear a blind son since you shut your eyes tight when we were in union!”
My mother was very upset with this. I too hated myself for being so hasty in cursing Ambikai. How can a blind man rule a kingdom well without any problems?”

 
Last edited:
KANDA PURAANAM - ASURA KAANDAM

4. தந்தையின் அறிவுரை

உடன் பிறந்தோருடன் சென்ற சூரபத்மன்
உடன் பணிந்தான் தன் தாய் தந்தையரை.

“தாங்கள் ஆணை இடுங்கள் எமக்கு.
நாங்கள் செய்ய வேண்டியது என்ன?”

“அறவழியில் நின்று ஆராய்வீர்களாகுக
அறிவின் துணையோடு மெய்ப்பொருளை.

ஐந்தெழுத்து மந்திரங்களுக்கு உரிய சிவனே
ஐந்தொழில்களையும் செய்பவன் ஆவான்.

சிவன் பெருமையைக் கூறுவது என்பது
எவனுக்குமே ஆகும் ஓர் அரியசெயல்!

மும்மலங்களால் கட்டப்பட்ட உயிர்கள்
மூழ்குகின்றன எழுவகைப் பிறவிகளில்.

காணப்படும் பொருட்கள் அனைத்துமே
கணத்தில் மறையும் நீர்க் குமிழி போல்.

அறம் மட்டுமே அளிக்கும் உயிர்களுக்கு
அருளும், அன்பும், தவமும், சிவமும்!

மும்மலத்தினின்றும் விடுபடப் பற்றுவீர்
முக்கண்ணனின் இரு பொற்பாதங்களை!

ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்து
ஐயனுடன் ஒன்றுவதே வாழ்வின் பயன்.

பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவர்
இருமையிலும் எய்தப் பெறார் இன்பம்.

தவத்தின் நிகர் ஆகும் தவம் ஒன்றே.
தவம் புரிவீர் மேன்மை அடைவீர்.

மறத்தை மறந்தும் கைப்பற்றி விடாதீர்!
அறத்தை ஒரு பொழுதும் கைவிடாதீர்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#4. The advice given by the sage.


Soorapadman went along with his two younger brothers and sister and paid his respect to the sage.”Please tell us what we should do now”

“Stand on the path of righteousness and find out the truth about the God. Lord Siva is worshipped by the pancha aksharam and he does the five jobs of a God. It is very difficult to explain the greatness of Siva.

The living things are affected by the three doshas of the intellect and they take one of the seven types of births. Everything which we can see will get destroyed like a bubble of water. Always worship Lord Siva. Always hold on the Dharma.

Those who make the others suffer will have happiness neither here nor later. Do penance for realizing the God and also your own Selves.”
 
SRI VENKATESA PURAANAM

27a. மண் பூக்கள்

முதிர்ந்து விட்டது வயது தொண்டைமானுக்கு;
முன்போல் சுமக்க முடியவில்லை ராஜ்யபாரம்.

நாடியது மனம் ஸ்ரீநிவாசனுடன் இருப்பதையே;
தேடின கண்கள் ஸ்ரீனிவாசனின் திருவுருவத்தையே!

முடி சூட்டினான் மகனுக்கு அடுத்த மன்னனாக;
விடை பெற்றான் அன்பு மனைவியிடமிருந்து.

ஆனந்த நிலையத்தில் மிகுந்த ஆர்வத்துடன்
ஆராதனை, பூஜைகள் செய்தான் ஸ்ரீநிவாசனுக்கு.

மாறுபாடு தெரிந்தது ஸ்ரீனிவாசனிடம் – அவன்
வேறுபட்டு நின்றான் கற்சிலையாக இப்போது.

அளவளாவுவான் முன்பு அழைத்த போதெல்லாம்;
அழைத்த போதிலும் வருவதே இல்லை இப்போது.

“பிழை என்ன செய்துவிட்டேன் ஸ்ரீனிவாசா? கூறும்
அழைத்தாலும் நீங்கள் வாராததின் காரணம் எனக்கு!

பக்தியில் குறை ஏற்பட்டு விட்டதா கூறுவீர்!
பழிகளில் இருந்து காத்தீரே முன்பெல்லாம்!”

கல்லாகவே நின்றான் ஸ்ரீனிவாசன் அப்போதும்;
சொல்லொன்றும் கூறவே இல்லை இப்போதும்.

அர்ச்சனை செய்தான் அன்றலர்ந்த மலர்களால்;
அடையவில்லை அவை இறைவன் பாதங்களை!

மண்ணால் செய்யப்பட மணமற்ற மலர்களே
அண்ணலின் இரு பாதங்களை அலங்கரித்தன!

“மணம் வீசும் புது மலர்களை நிராகரித்து விட்டு
மணமில்லாத மண்மலர்களை நீங்கள் ஏற்பது ஏன் ”

பாதங்களைப் பற்றிக் கொண்டு படுத்து விட்டான்!
“பாராமுகம் ஏன்?” என அழுதான், எழவே இல்லை.

மனம் இளகிவிட்டது ஸ்ரீநிவாசனுக்கு – வாய் திறந்து
“இனிப் போதும் நீ அழுதது எழுந்திரு!” என்றான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#27a. The Clay flowers


ThoNdaimAn had become very old. He was unable to bear the burden of his kingdom. He wished to spend all his remaining time in the company of SrinivAsan. He crowned his son as the new king and took leave of his dear queen. He went to Aananda Nilayam and spent his time there in doing the pooja and AarAdhana of his favorite god.


Soon he noticed many changes in the behavior of SrinivAsan. Previously He would appear and converse with ThoNdaimAn whenever He was called. Now a days He remained silent as a statue and did not respond to ThoNdaimAn.

ThoNdaimAn could not understand the cause for this change. “Is there anything wrong with my bhakti or pooja or AarAdhana?” The fresh fragrant flowers he used for the archanai did not reach the lord’s feet. Flowers made of clay were found upon his lotus feet . What were they and whence they came from were beyond his knowledge.

He caught hold of SrinivAsan’s feet and started shedding tears. “What is the crime I have committed? Why have you become so indifferent to me?” He kept on crying until SrinivAsan’s heart melted with sympathy.

He broke his silence and talked to ThoNdaimaan, “Enough of crying now. Please get up and tell me what is the matter!”

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#25a. வியாசரின் விசனம் (3)

சாபம் தந்துவிட்டேன் கோபம் எல்லை மீறியதால்!
“பாவம் குருட்டுப் பிள்ளை அரசனாகும் தகுதியற்றவன்!

உற்பத்தி செய்வாய் நீ அம்பாலிகையோடு கூடி
நற்குணங்களும், லக்ஷணமும் கொண்ட மகனை!”

காத்திருந்தேன் அம்பாலிகையின் வரவை எதிர்நோக்கி;
பார்த்தவுடன் அவள் வியர்த்து வெளுத்தாள் பயத்தால்.

கோபம் வந்தது மீண்டும்; சாபம் தந்தேன் மீண்டும்;
பாவம் பிள்ளை வந்து பிறந்தான் வெண்குஷ்டத்தோடு!

திரும்பிச் சென்றுவிட்டேன் என் ஆசிரமத்துக்கு;
திரும்பவும் அழைத்தாள் என் தாய் வருட முடிவில்.

“இருவரும் அரசாளும் தகுதியற்றவர்கள் – எனவே
பெறுவாய் இம்முறை நல்ல மகனை!" என்றாள்

அம்பிகையை அனுப்பினாள் என் தாய் என்னிடம்;
அம்பிகை அனுப்பினாள் ஒரு தாதியை அலங்கரித்து.

ரதி போன்று அழகியவள் அந்தத் தாதி – அவள் தன்
மதி முகத்தில் புன்சிரிப்புடன் என்னிடம் வந்தாள்.

இன்பக் கடலில் வீழ்த்தினாள் என்னை வசீகரித்து;
தன்மயமாகி அளித்தேன் நல்ல வரம் அவளுக்கு.

“சர்வ லக்ஷணங்களும் பொருந்தியவனும் – உலகின்
சகல சாஸ்திர நிபுணனும் ஆன மகன் பிறப்பான்!”

பிறந்தான் அவளுக்கு நீதிமான் விதுரன் மகனாக,
பிறந்தது எனக்கு மூன்று பிள்ளைகள் மேலும் பாசம்.

குறைந்தது சுகன் தந்து சென்ற புத்திர சோகம்;
மறைய வில்லை ஆயினும் மாயையின் மயக்கம்;

மறை முனிவரையும் மயக்கிவிடும் மாயை அறிவோம்!
மறைய வேண்டும் மயக்கமும், துக்கமும் முழுவதும்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

6#25a. VyAsa’s sorrow (3)

VyAsa continued to tell NArada,” I cursed Ambikai due to my surging anger. My mother said, “The blind boy is unfit to rule a kingdom. I want you to produce a healthy and good looking son with the help of AmbAlika.”

I was waiting for the arrival AmbAlika. She turned as pale as a white sheet when she saw me. I became angry one more time and cursed her, “May you bear a son afflicted with Leucism.”

A son was born to her as white as a sheet. I went back to my Aashram. But my mother Satyavati sent for me again at the end of the year.

She told me, ”Both the children are unfit to become future kings. I want you to produce a good looking and healthy son with the help of Ambikai”. She then sent Ambikai to me.

But Ambikai decorated a maid and sent her to me in her place. The maid was very beautiful and was happy to see me. She made me feel very happy and wanted. I was in the seventh heaven with bliss, hen she was with me.

I blessed her, “May you bear a good looking son, who is very intelligent and well versed in all the sAstras of the world!”

She gave birth to Vidura. I developed attachment on all my three sons. The deep sorrow inflicted by the separation of Sukan was reduced to some extent. But I am still dazed by the effects of MAyA. Even the wise sages are deluded by the power of MAyA.”


 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5a. மிருகண்டூயர்

கடகம் நகரில் கவிச்சிகன் தோன்றினான்
குச்சகர் என்னும் மறையவர் மகனாக.

மறைகளைக் கற்றுத் தேர்ந்த கவுச்சிகன்
பிறவிக் கடலைக் கடக்க விழைந்தான்.

ஊண், உறக்கம் ஒழித்துத் தவம் செய்தான்;
மாண்பு மிக்க ஐந்தெழுத்தை ஜெபித்தான்.

உடல் தினவு தீரத் தேய்க்கும் விலங்குகள்
ஜடம் போல் அமர்ந்திருக்கும் அவன் மீது!

தவத்தை மெச்சித் தோன்றினார் திருமால்;
தடவிக் கொடுத்து “மிருகண்டூயா!” என்றார்.

தந்தையிடம் திரும்பினான் கவுச்சிகன்;
தந்தை மகிழ்ந்தார் திருமால் அருளால்.

“முறைப்படி இல்லறத்தில் நீ நிற்பாய்!”
மறையவன் சொன்னான் தன் மகனிடம்.

“பிறவித் தளையையை அறுக்க வேண்டும்;
மறுபடித் தளையில் அகப்பட மாட்டேன்!

நல்ல தவம் தவிர்த்து இல்லறம் புகுதல்
நல்ல நீர் தவிர்த்து சகதியில் புகுதலே!

பெண்களைப் படைத்தான் பிரம்ம தேவன்
மண்ணில் உள்ள தீவினைகளைத் திரட்டி.

துன்பங்களை உண்டாக்கும் பெண்ணாசை!
பின்னாளில் கொண்டு தள்ளும் நரகத்தில்.

பெண்ணிலும் இனியது கொடிய நஞ்சு!
பெண்ணுள்ளம் கடலினும் ஆழமானது.

காம வசப்பட்ட தேவர்கள், முனிவர்கள்,
சோ காத்தனர் சொல்லிழுக்குப் பட்டு.

பிறவித் துன்பத்தை தொலைப்பதை விட்டு
பிறவிக் கடலில் மீண்டும் நான் விழுவேனோ?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5a. MRUGANDOOYAR.


Kouchchigan was born as the son of a brahmin named Kuchchagar in the city called Kadagam. He studied the scriptures well and decided to end the endless cycle of birth and death called SamsAra.

He did severe penance sacrificing food, water and sleep. He was completely immersed in his own Self. The animals passing by would stop rub their bodies against his to scratch themselves, but he would be completely oblivious to this.

VishNu was pleased with his penance . He appeared to him, touched the young man with affection and called him as “Mrugandooya!”

The son later returned to his father. The father was very pleased by the grace of VishNu. He told his son that it was time for him to get married and settle down in life.

“I want to get out of SamsAra and you want to push me deeper into it. Giving up penance in favour of married life is similar to shunning the clean water and bathing in the slush.

Brahma created the women from all the vices in the world. They cause nothing but pain and suffering in this world and push us into the hell in the after-life. I will rather prefer a deadly poison to a woman. The mind of a woman is unfathomable.

The Devas and rushis who fell in love with damsels lost their honour and fame. Please do not push me in to the quicksand called SamsAra!” Kouchchigan firmly firmly to get married.

 
SRIVENKATESA PURAANAM

27b. பீமாவரம் பீமன்

“மௌனம் கழிய இத்தனை நேரமா உமக்கு?”என,
“சௌகரியமாக நீ வாழலாம் உன் அரண்மனையில்!


வருத்திக் கொள்கிறாய் அனாவசியமாக உன்னையும்;
வருத்துகின்றாய் அனாவசியமாக என்னையும்!” என்றான்


“வெறுப்பு ஏற்பட்டுவிட்டது உலக வாழ்வில் எனக்கு;
நறுமண மலர்களால் நான் அர்ச்சிக்கின்றேன் – ஆனால்


மணம் வீசும் என் மலர்களை நீங்கள் ஏற்பதில்லை;
மணமற்ற மண் மலர்களை நீங்கள் ஏற்கின்றீர்கள்!


குறை ஏற்பட்டு விட்டதா என்னுடைய பக்தியில் ?
குறை ஏற்பட்டதா என்னுடைய ஆராதனையில் ?


ஆனந்த நிலையத்தை அமைத்திட உழைத்தேன்;
அடுத்த சேவையைச் சிந்தித்துக் கொண்டுள்ளேன்!


பக்தி நிலவுகிறது என் மூச்சுக் காற்றில் கலந்து;
பக்தியை வெளிப்படுத்த முடியுமா இதை விட?”


கலகலவென நகைத்தான் ஸ்ரீனிவாசன் இப்போது;
“கலப்படம் இல்லாதது உன் பக்தி என்று அறிவேன்!


இருக்கின்றது உன்னுடைய மனதில் ஓர் இறுமாப்பு;
‘இவை அனைத்தும் செய்தவன் நானே!’ என்ற கருத்து.


ஆணவம் அகன்றால் மட்டுமே ஐக்கியம் சித்திக்கும்.
காண விரும்பினால் உடனே செல்வாய் பீமாவரம்!


மயங்காமல் கண்டால் மனதுக்குத் தெரியும்
குயவனும், மனைவியும் கொண்டுள்ள பக்தி!”


தொண்டைமான் சென்றான் பீமாவரத்துக்கு;
கண்டு கொண்டான் குயவன் பீமன் வீட்டை.


ஏழ்மை நிலையைக் கண்டு அதிர்ந்து போனான்.
‘தாழ்மையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்.


எளிமையையே விரும்புகின்றான் ஸ்ரீனிவாசன்
வலிமையைக் காட்டுபவர்களை அல்லவே அல்ல!’


வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி.


#27b. BeemAvaram Beeman


“It took you so long to break your silence!” ThoNdaimAn was feeling both happy and sad at the same time.



SrinivAsan told him,” You can spend the rest of your life in the comforts of your palace. I do not know why you want to live here and suffer and also keep bothering me all the time!”

ThoNdaimAn told him, “I have lost all interest in life. I do archanai with fresh fragrant flowers and yet you prefer those clay flowers ore than my fresh flowers. What is lacking in my devotion? What is wrong with my pooja and AarAdhana?


I have built Aanandha Nilayam overcoming so many problems. Even now I am thinking on what next to do for you. Bhakti bhAvam has merged with the air I breathe. How else can I show my devotion to you?”


SinivAsan had a hearty laugh. “I know that your bhakti is pure and unadulterated. You still have ahankAram (Ego). You still think that all these were done by you. Only when your karthruthva-bhAvam ( sense of doer-ship) completely vanishes from your mind, your merging with me will become possible.”


Go to BeemAvaram and visit the hut of the pot maker Beeman and his wife. You will surely understand what is meant by pure and unadulterated bhakti.”


ThoNdaimAn left for BeemAvaram and located the humble hut of Beeman. He felt appalled at the sight of dire poverty prevailing there. God prefers simplicity. God prefers humility. God does not care for pomp and show.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#25b. வியாசரின் விசனம்(4)

“நிலையறற்து பந்த பாசம் என அறிந்து கொண்டேன்
நிலை கொள்ளாது அலைந்தேன் அங்கும் இங்கும்.


துறவு மனப்பான்மை என்னை ஆசிரமத்துக்கு இழுக்க,
உறவு முறைகள் இழுத்தன என்னை அரண்மனைக்கு!


பட்டாபிஷேகம் செய்து கொண்டான் பாண்டு;
மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் அந் நன்னாளில்;


மணந்து கொண்டான் இரண்டு குணவதிகளை;
இணையற்ற மகிழ்ச்சி கொண்டேன் அது கேட்டு.


முனிவர் சாபத்தால் தனித்தனியே வாழ்ந்தார்கள்;
கனிந்து உருகியது கேட்ட என் தந்தை நெஞ்சம்!


புத்திரப் பேறு விழைந்தனர் பாண்டுவும், மனைவியரும்;
புத்திரப் பேறு பெற்றனர் தேவதைகளின் அருளால்.


செய்தான் பாண்டு மனைவியுடன் சம்போகம் ஒருநாள்;
சென்றான் உலகை விடுத்து முனிவர் சாபம் பலித்ததால்.


உடன் கட்டை ஏற முயன்றார்கள் இரு மனைவியர்;
தடை செய்து விட்டனர் குந்தியை அங்கிருந்தோர்;


மாறினாள் மாத்ரி பாண்டுவின் வீர பத்தினியாக;
மாறினர் காட்டிலிருந்து நாட்டுக்குப் பாண்டவர்.


அனுபவித்தனர் பல கொடுமைகளைப் பாண்டவர்கள்;
அனுப்பினான் பீஷ்மன் போற்பயிற்சிக்கு பாண்டவரை.


சேர்ந்து வாழமுடியாத சகோதரர்களைப் பிரித்து
வேறுவேறாக வாழச் செய்தான் திருதராஷ்ட்டிரன்.


அரக்கு மாளிகையில் வசித்து வந்த பாண்டவர்களை
இரக்கம் இன்றிக் கொல்ல முயன்றான் துரியோதனன்.


ராஜசூய யாகம் செய்த போது நான் மகிழ்ந்தேன்;
ராஜ்யத்தை இழந்த போது நான் வருந்தினேன்.


வனவாசம் சென்றபோது மனம் வருந்தினேன்;
மனம் அலை பாய்ந்தது அமைதியேயின்றி.


சம்சாரம் வெறும் மாயை என்று அறிவேன்;
சம்சார சாகரத்தில் துரும்பாகத் தவிக்கின்றேன்.


ஊசலாடுகிறது என் மனம் சஞ்சலத்தினால்;
ஊன்ற வேண்டும் மனதில் அமைதியை நீர்.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#25b. VyAsa’s sorrow (4)


VyAsa continued to NArada,” I understood that family ties were transitory and temporary. I became restless and roamed about aimlessly. I turned towards my Aashram drawn by the virakti and disinterest in samsAram. At the same time my relatives pulled me towards the palace and samsAram against my will.


PANdu was crowned the new king. I was very happy on that day. He married two virtuous women. I was happy to hear about it. Later PANdu was cursed by a sage that he would die if he enjoyed marital pleasures with his wives. He and his wives were forced to live like sanyaasins. My heart melted to hear about this.


PANdu and his two wives wished to have sons. With PANdu’s permission the two wives got five sons – through the help of five Devatas.


PANdu indulged in pleasure with his younger wife MAdri one day. True to the rushi’s curse, he died while he was still in ecstasy. Kunti and MAdri wished to perform sati along with PANdu. Kunti was stopped from performing sati and was entrusted to bringing up the five PANdavas. MAdri became PANdu’s veerapatni and performed sati.

Kunti and PAnNdavas shifted from the forest to the city now. They were subjected to various troubles and humiliations. Beeshma sent the PAndavas for training in warfare and wielding the various weapons.


The cousins could not get along well. So DrutharAshtran separated the PANdavas from Kouravas. When the PANdavas lived in the palace made of lac an inflammable material, Duryodhan tried to burn them alive.


I was happy when PAndavas performed RAja sooya yagna and sad when they were forced to go to vana vAsam (live in a forest)and ajnAtha vAsam (live under disguise).


My mind is in utter confusion. I know that samsAra is kalpitham and imaginary. Still I feel like a straw in a flooded river. My mind was always agitated. Kindly give me some peace of mind O Deva ruhi!”


Sage VyAsa begged Deva rushi NArada to give him peace of mind.




 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5b. தந்தை வற்புறுத்தல்

தவப் புதல்வன் தவத்தின் மீது கொண்ட
தாளாத பற்றினை உணர்ந்தான் குச்சகன்.

“இல்லறம் புகுந்து மக்கட்பேறை அடைந்து
துறவறம் புகுவதே மனிதனுக்கு நல்லறம்;

இறந்த முன்னோர்கள் நரகம் தவிர்த்திட
மேற்கொள்ள வேண்டும் இனிய இல்லறம்.

மலை மீது போலவே ஏறவேண்டும் படிப்படியாக,
மலை உச்சி என்னும் துறவறத்தை அடைந்திட.

வசிட்டர் மணந்தார் அருந்ததி தேவியை,
சிவபிரான் மணந்தார் உமை அன்னையை,

இல்லறம் புகாமல் துறவறம் பூண்டால்
நில்லாமல் வந்து சேரும் காம விகாரம்.

நாம் செய்கின்ற நல்லதும், தீயதும்,
நமது ஊழ்வலியின் வினைப்பயனே!

இல்லறம் புகுந்து வாழ்ந்த பின்னர்
துறவறம் புகுவாய் மகனே கவுச்சிகா!”

தாய், தந்தை, குருவின் சொற்களைத்
தவறாமல் நிறைவேற்றுவது கடமை.

“கற்புடைய மாதைக் கடிமணம் புரிவேன்
சொற்படி நடப்பேன் தாய், தந்தையரின்.

நான் கூறும் நல்லியல்புகள் கொண்ட
நங்கை கிடைத்தல் புரிவேன் திருமணம்.”

“என் சொற்களை ஏற்று சிறப்பித்தாய்.
உன் தாயும், நம் சுற்றமும் சிறப்படையும்.

உன் நோக்கத்தை கூறுவாய் கவுச்சிகா!
உன் கருத்துப்படி தேடுவேன் மங்கையை.”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5b. PERSISTENCE OF THE FATHER.


Kuchchagan realised the reverence his son had for penance. But he persisted and went on to say,” A man must live his life s a gruhastha before becoming a vAnaprastha or a sanyAsin. A man must get a son to prevent his forefathers from suffering in Hell.

If you want to climb a mountain and reach the top, you must climb from the base step by step. If you want to reach the pinnacle called renunciation of the world, you must start from the life of gruhastha and go up step by step.

Sage Vasishta married Arundati. Lord Siva married Uma. If you renounce the world straight away, the unfulfilled lust will haunt you later on in your life.

Whatever we do is due to our sanchita karma. It is proper to get married and live the life of a gruhastha before moving on to tapas and penance.”

Kouchchigan said,”A man must obey the words of his mother, father and guru. If you can find a girl who I think will be most suitable for me, I will surely marry her!” Kuchchagan was overwhelmed and said he would find a girl exactly as required by his son.



 
SRI VENKATESA PURAANAM

27c. வைகுந்தம்

இருக்கும் இடத்திலேயே இருந்தனர்;
இருந்த வேலைகளைச் செய்தனர்.

இருந்தது மனம் இறை திருவடிகளில்;
இருந்து பக்தி மட்டும், இல்லை கர்வம்!

கோவில் கட்டவில்லை – வசதி இல்லை
உற்சவம் நடத்தவில்லை – வசதி இல்லை

மனத்தால் பூஜிக்கின்றனர் இடைவிடாது!
பணத்தால் பூஜித்ததை இடைவிடாமல்

நினைத்துக் கொண்டிருந்தது மடத்தனம்.
அனைத்தையும் செய்பவன் இறைவனே!

சர்வமும் செய்து கொள்பவன் அவனே!
சர்வமும் செய்விப்பவனும் இறைவனே!

கர்த்ருத்வம் தந்திருந்தது கர்வத்தை.
கர்வம் அகன்றது; கண்கள் திறந்தன!

மாயை விலகியது, அறிவு துலங்கியது
தூய பக்தரை விழுந்து வணங்கினான்.

“மண் மலர்களைக் கண்டேன் ஆலயத்தில்
மண மலர்களை விடப் பாதங்கள் அருகில்.”

“விருப்பம் உண்டு பகவானைத் தரிசிக்க;
வசதிகள் இல்லை பகவானைத் தரிசிக்க.

தரிசிப்போம் பகவானை மனத்திலேயே;
அர்ச்சிப்போம் மண் மலர்களைக் கொண்டு.

மண மலர்களால் அர்ச்சிக்க ஆசை உண்டு
மண் மலர்களே சாத்தியம் எமக்கு” என்றனர்.

ஸ்ரீனிவாசன் தோன்றினார் அப்போது!
“ஸ்ரீனிவாசா வந்தாயா தரிசனம் தர?

ஏழையின் குடிசைக்கு வருவீர் தேவா !
எங்கள் உணவை உண்பீர் ஸ்ரீனிவாசா!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

27c. Vaikuntham

ThoNdaimAn saw that the pot maker Beeman and his wife had lived there all their lives. They had spent their entire lives in pot making to earn a pittance. But their minds were fixed in lord’s feet. They were devoted without feeling proud of their pure devotion.

They never built any temple. They could not have – even if they had wished to. They never performed any festival. They could not have – even if they had wished to do. Yet they were worshiping lord with their thoughts and mind day in and day out.

Suddenly it dawned on him that everything is being done by God Himself. He gets done whatever He wants to, in whichever way He wants them to be. He does them all by Himself – using the others as mere instruments in His hands.

The thought that “I had built Aanandha Nilayam” had corrupted his intense bhakti by introducing the karthruthva bhAvam (Sense of Doer-ship) in all his actions. His ego and pride vanished now. His ahankAram and mamakAram
( Ego and Sense of Ownership) disappeared. He fell at the feet of these ignorant, innocent, illiterate poor pot makers.

“I saw these clay flowers at the feet of the lord. I did not know that they were made by you here.” Beeman replied, “We wish to offer fresh flowers but we cannot afford them. We want to have a dharshan of the lord but we have no money to travel.”

SrinivAsan suddenly appeared there in front of them now. The humble devotees jumped with joy. “Oh my Lord did you take pity on us and decide to come here to give us your diva dharshan? Please come inside our hut and share our humble food! “


 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#26a. தமயந்தியின் காதல் (1)

நாரதர் சிரித்தார் வியாசரின் மொழியைக் கேட்டு;
“நீரா கேட்கின்றீர் என்னிடம் இதற்கான காரணம்?

மாயைக்கு மயங்காதவன் ஒருவன் உள்ளானா?
மாயை ஆட்டுவிக்கும் தேவர், தெய்வங்களையும்.

திரிலோக சஞ்சாரி என்று புகழ்கின்றனர் என்னை.
திரிகால ஞானி என்றும் புகழ்கின்றனர் என்னை.

பெண்ணின் உடலைப் பெற்றேன் ஒருமுறை.
பெண்ணாக வாழ்ந்து பிள்ளைகளை ஈன்றேன்.

பர்வத முனிவருடன் வந்தேன் பாரத கண்டம்;
பார்த்தோம் புனிதத் தலங்களைப் புனித நீராடி.

பிரதிக்ஞை செய்து கொண்டோம் நாங்கள்;
பிறழாமல் கூறவேண்டும் மனோ விகாரங்களை;

புகல வேண்டும் ஒளிவு மறைவு எதுவுமின்றி
புதிதாகத் தோன்றும் எண்ண ஓட்டங்களை என.

வந்து சேர்ந்தோம் இருவரும் ஒரு நகருக்கு:
வரவேற்றான் அந் நகர மன்னன் எங்களை.

மழைக் காலம் தொடங்கிவிட்டது அப்போது;
மழைக் காலத்தில் தங்கி விடுவோம் ஓரிடத்தில்

தங்கி விட்டோம் அரசன் அரண்மனையிலேயே;
தமயந்தி என்னும் இளவரசி நன்கு உபசரித்தாள்.

குறிப்பறிந்து செய்தாள் பணிவிடைகள் எமக்கு.
துருதுறு வென்ற அழகிய இளம் அறிவாளி அவள்.

மஹதி வீணையை மீட்டிப் பாடுவேன் நான்;
மனோ ரம்மியமான சாமகானம் இசைப்பேன்.

கவர்ந்தது சங்கீதம் காந்தம் போல தமயந்தியை!
கவனித்தாள் என்னை மேலும் விசேஷமாக.

பாரபக்ஷம் தென்பட்டது அவள் உபசரிப்பிலே.
பர்வத முனிவருக்குச் சுமாரான உபசரிப்பு”.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#26a. Damayanti’s love

NArada laughed on hearing VyAsa’s words. “It is funny that you should ask me this! Tell me one person who is not deluded by MAyA. Even Devas and Gods are controlled by MAyA.

People praise me as ‘triloka sanchAri’ ( one who roams around in the three worlds) and ‘trikAla JnAni’ ( one who knows the past, present and future). Yet I was also deluded by MAyA once. I lived in a woman’s body and gave birth to many children.

I came to BhArata kaNdam along with Parvata rushi. We visited several holy places and bathed in the holy teerthams. We took an oath that we should share all our thoughts truthfully – however weird they may seemed to be.

We reached a city. The king welcomed us heartily. The rainy season started then. No one travels during the rainy season but stay put where they are till the rains clear off.

So I and Parvata rushi stayed in the king’s palace. Princess Damayanti was attending to our needs and taking care of us. She was active, smart and very intelligent.

I used to sing often and play on my Mahati veena. I would sing SAma gAnam. It attracted the princess like a magnet attracting an iron object. She started taking special care of me and the difference in her treatment extended to the two of us became unmistakably obvious”.


 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5c. நல்லியல்புகள்

“திருமணத்துக்கு உரிய மணமகளின்
சிறப்புக்களை உரைக்கின்றேன் நான்.

தந்தை, தாயை இழந்தவள் கூடாது;
தங்கை, தமக்கை அற்றவள் கூடாது;

உடன் பிறந்தவன் இல்லாதவள் கூடாது;
ஒற்றைப் பெண் ஆனவளும் கூடாது;

உறவினர் அற்றவள், நோயாளியின் மகள்,
உயர்க்குடிப் பிறவாதவள், அழகற்றவள்;

விலங்குகளின் பெயரை உடையவள்;
விலக்கிவிட வேண்டிய பிற சமயத்தவள்;

செவிடர், முடவர், ஊமையர் கூடாது;
தெரு வாசலில் நின்று நோக்குபவள்;

மிகுதியாக அலங்கரித்துக் கொள்பவள்,
மிகுதியாக உணவு உட்கொள்ளுபவள்;

பேருறக்கம் உடையவள், முதிர்ந்தவள்,
கோத்திரத்தில் நம்மை ஒத்தவள் கூடாது;

நெட்டையானவள், மெலிந்தவள் கூடாது;
குட்டையானவள், பருத்தவள் கூடாது.,

கருநிறம், பொன்னிறம், பசப்பையுடையவர்;
குருதி நிறம் கொண்டவர்கள் கூடவே கூடாது.

நாணம் இல்லாதவள், பெரு வலிவுடையவள்;
நகைப்பவள், சினம் மிகுந்தவள் கூடாது,

அத்தன், அம்மை சொல் கேளாதவள்;
கூத்துப் பார்க்க விரும்புபவள் கூடாது.

சிவனிடத்தில் அன்பு கொள்ளாதவள்;
முனிவரை இகழ்பவள் கூடவே கூடாது.

அருள் அற்றவள், தீக் குணம் உடையவள்;
நிறை அற்றவள், தேவரைக் கல் என்பவள்;

இடி முழங்குவது போலப் பேசுபவள்;
இடுங்கிய கண்களை உடையவள்;

நரை மயிர், பெருங்கூந்தல் உடையவள்;
சிறுத்த கண்களை உடையவள் கூடாது;

நீண்ட மூக்கை உடையவள் கூடாது;
நீட்டிய பற்களும், வளைந்த கழுத்தும்

மயிர்ப்பரந்த கால்களை உடையவள்;
மனத்தைக் கவரும் அன்னநடை அற்றவள்;

உள்ளங் கைகளும், நகமும், வாயும்,
உள்ளங் கால்களும் சிவந்து இராதவள்;

இந்தக் குற்றங்கள் இல்லாதவள் ஆகிய
எந்தப் பெண்ணையும் மணப்பேன் நான்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

பெண்மையின் நல்லியல்புகள் புதுமைப் பெண்களிடம்

அண்மைக் காலமாகக் காண அரிதாகி வருகின்றனவோ?


2#5c. THE QUALITIES OF A GOOD BRIDE.


” Dear father! I shall enlist the good qualities of a bride to be.

She should not have lost her parents.
She must have brothers and sisters.

She must be from a good family.
She must have several relatives.

She must not have sickly parents.
She must not be named after any animal.

She must not belong to another religion.
She must not be physically challenged.

She must not stand outside the home and gaze at the men passing by.
She must neither eat nor sleep too much nor decorate herself too much.

She must not be older than me.
She must not belong to the same gothram.

Her complexion must not be very dark or very fair or greenish yellow.
She must not be very tall or very lean.

She must not be very fat or very short.
She must not be very daring or very strong.

She must not laugh and get angry beyond decent limits.
She must be obedient to her parents.

She should not wish to see vigorous entertainments.
She must have love for Lord Siva and the venerable sages.

She must be chaste, kind, good natured, and pious.
She must not have grey hair or hair too long.

She must not speak like the thunder claps.
She must not have light coloured eyes like a cat.

She must not have a very long nose, large teeth, bent neck, or hairy legs.
She must walk gently like a swan.

Her palms, nails, mouth and feet must be pink in colour.
If you can locates such a girl, I am ready to marry her!”

Note:-

A good mental exercise to study and determine how many of our women still retain these delicate feminine qualities in the 21st Century!!!



 
SRI VENKATESA PURAANAM

27d. விமானம்

பீமன் மனைவி கழுவினாள் அன்புடன்
பகவான் திருப் பாதங்களை நீரினால்.

பரப்பி இருந்தது குடிசையில் மண்.
பரப்பினர் அதன் மேல் ஒரு பாயை.

அமர்ந்தான் ஸ்ரீனிவாசன் அதன் மேல்,
அழகிய மணை மேல் அமர்வது போல்.

இரவு உணவு வெறும் கூழும், உப்பும்.
இருப்பதை மிக விரும்பிக் குடித்தார்.

‘எளியவருக்குஎளியவன் இறைவன்!’
என்பது எத்தனை பெரிய உண்மை!

விமானம் இறங்கியது விண்ணிலிருந்து;
விண்ணில் பறந்தான் கருடன் உடனே.

பத்மாவதி வந்தாள் கருடன் மீதேறி.
பகவானுடன் இணையாக நின்றாள்.

ஆசி பெற்ற பீமனும், மனைவியும்
அதிசய விமானம் ஏறிச் சென்றனர்!

“நான், எனது என்பதை ஒழித்தேன்!
நாயேனுக்கும் அருள்வீர் பரமபதம்!”

இறங்கியது ஒரு தங்கவிமானம் தரையில்;
பறந்தது தொண்டைமானுடன் விரைவில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#27d. The VimAnam


Beeman’s wife washed the feet of the Lord with fresh water. They had heaped some mud inside their hut. A mat was spread on the leveled heap. SrinivAsan sat on the mat as if it were a royal peetam.

Their simple food consisted of a porridge and salt. The entire food was offered to god. He relished the food and drank the whole thing. Surely whatever we offer to God with love, and devotion becomes nectar.

A vimAnam descended form the sky. Garudan took off to bring PadmAvati Devi there. SrinivAsan and PadmAvati gave them their dharshan. Beeman and his wife had prayed for all their lives. They took their blessings, got into the vimAnam and flew away.

ThoNdaimAn told SrinivAsan, “I have realized how I had become corrupted in bhakti by my ahankAram (Ego) and mamakAram (Sense of Doer-ship). Now I am now rid of those two blemishes completely. Please give me your parama padam(The highest abode) !”

SrinivAsan knew that ThoNdaimAn spoke the truth and blessed him as he had wished for. A gold vimAnam came down. ThoNdaimAn got into it and it flew high into the sky taking him to Vaikuntham.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#26b. தமயந்தியின் காதல் (2)

வியப்படைந்தார் முனிவர் பாரபட்சத்தால்;
வினவினார் என்னிடம் என்ன சங்கதி என்று.

“ஆசை கொண்டுள்ளாள் தமயந்தி என் மீது;
ஆசை கொண்டுள்ளேன் நான் தமயந்தி மீது!”

சினம் பொங்கியது முனிவருக்கு – “இத்தனை
தினம் என்னிடம் சொல்லாதது ஏன்?” என்றார்.

“பிரதிக்ஞையை மறந்து விட்டீர் – என் மேல்
பிரியம் இல்லாத பெண்ணை நேசிக்கின்றீர்.

துரோகம் செய்துவிட்டீர் நீர் எனக்கு – அதனால்
துரோகியின் முகம் குரங்கு முகம் ஆகக் கடவது!”

சாபம் தந்த முனிவருக்கு தந்தேன் எதிர்சாபம்;
கோபம் மறைத்தது முனிவர் என் உறவினர் என்பதை.

“வாசம் கிடைக்காது உமக்கு சுவர்க்க லோகத்தில்!
வாசம் கிடைக்கும் உமக்கு மிருத்யு லோகத்தில்!”

பர்வத முனிவர் அகன்று சென்றார் அங்கிருந்து;
பார்த்து வருந்தினாள் தமயந்தி குரங்கு முகத்தை.

பணிவிடைகள் செய்து வந்தாள் முன் போலவே,
“இனி என் முகம் மாறாதோ?” என வருந்தினேன்.

மணப் பருவம் எய்திவிட்ட மகளுக்கு மன்னன்
மணமகன் தேடினான் சிறந்த அரசர்கள் இடையே.

“ரிசி என்பவன் தலை சிறந்த ராஜகுமாரன்;
‘சரி’ என்றால் மணம் முடிக்கலாம் தமயந்திக்கு!”

அமைச்சர்கள் அளித்தனர் ஆலோசனையை;
அழைத்தாள் தமயந்தி அந்தரங்கத் தோழியை.

“மஹதி வீணையில் மயங்கி விட்டேன் நான்;
மகத்துவம் வாய்ந்த இசைக்கு அடிமை ஆனேன்.

மணந்தால் நான் மணப்பேன் நாரதரையே;
மணம் புரியேன் வேறு எந்த அரசருடனும்.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#26b. Damayanti’s love (2)

Parvata rushi was surprised to note the difference in the hospitality extended to both us. He asked me what was the matter. I told him “Princess Damayanti loves me and I too reciprocate her feelings!”

He became wild with anger since I had not shared my innermost thoughts with him as I had promised him earlier. He cursed me “May your face become that of a monkey as a reward for you treachery.”

In my anger I forgot that he was my sister’s son and cursed him back.”May you not get a place in swargga lokam. May you end up in the Mrityu lokam!”

He felt very hurt and went away quickly and quietly. I stayed on there. Damayanti took good care of me and became very sad to see my monkey’s face. I was worrying as to whether or not I will regain my original face.

Meanwhile the king started looking for suitable match to give his daughter’s hand in marriage. His ministers suggested king Richi as suitable for Princess Damayanti.

When she came to now of this Damayanti called her best friend and told her,” I have lost my heart to NArada and his divine music accompanied by his Mahati veena. I won’t marry anyone else now.”


 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5d. பெண் தேடுதல்

உலகம் எங்கும் தேடினார் பெண்ணை;
உசாவினார் எதிர்ப்பட்ட முனிவர்களிடம்;

உசத்திய முனிவரின் உசத்தியான மகள்
விருத்தையைப் பற்றி அறிந்து கொண்டார்.

குச்சக முனிவரின் மகன் கவுச்சிகனுக்கு
விருத்தையைத் தர இசைந்தார் உசத்தியர்.

காட்டாற்றில் நீராடினார்கள் பெண்கள்;
காட்டு மதயானை ஒன்று துரத்தலானது! .

புதர்கள் மூடிய கிணற்றில் விழுந்ததால்
பூத உடல் நீத்தாள் மணமகள் விருத்தை.

தோழியைத் தேடித் துவண்டு விட்ட பிற
தோழிகள் சென்று சேதி சொன்னார்கள்!

மகளைத் தேடிச் சென்ற உசத்திய முனிவர்
மகளைக் கண்டார் கிணற்றில் பிணமாக!

தேற்ற முடியவில்லை தாய் மங்கலையை.
துயரம் எல்லை மீறியது எல்லோருக்கும்.

மணமகள் பிணமானதை அறிந்த பின்னும்
மணத்தை நிறுத்தவில்லை குச்சக முனிவர்;

“எண்ணைத் தோணியில் இட்டு வையுங்கள்;
என் தவத்தால் உயிர்ப்பிக்கின்றேன் இவளை!”

பொய்கையில் மூழ்கிக் கடும் தவம் செய்தார்;
பொய்கையின் அருகே வந்தது அதே யானை;

குச்சகரை வாரிப் பிடரி மேல் வைத்துக்கொண்டது
குச்சகரைச் சுமந்தபடி விரைந்து நடக்கலானது.

ஆராயத் தொடங்கினார் அறிவுக் கண்ணால் முனிவர்;
“ஆனை என்னை எங்கே, எதற்குக் கொண்டு செல்கிறது?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5d. THE SEARCH FOR A SUITABLE BRIDE


Kuchchgar searched for a suitable bride everywhere. He questioned the sages and others he met on the road and found out from them that Sage Usathhiyar had a daughter who might fit in the description given by his son.

He visited the father of the girl. Both of them decided happily to get their children get duly married, at the earliest auspicious day.

Virutthai – the bide to be – went to bathe in a river with her friends. A mad rogue elephant chased them. They ran about and got separated. Viruththai fell into a well covered by thorns and bushes and gave up her life.

The friends were unable to trace her and told her father the events that took place. He went in search of his daughter and found her dead inside the well. He broke down and shed bitter tears. His wife MangaLai could not be consoled at all!

Kuchchgar consoled them. He said, ” Please preserve the body of your daughter in oil. I will bring her back to life with the power of my penance”

He went to the pond and started his severe penance. The rogue elephant returned to the spot, lifted up the sage Kuchchagr onto its shoulders and started walking away very fast.

The sage pondered at the significance of all these strange happenings using his wisdom.


 
SRI VENKATESA PURAANAM

28a. வட்டி கட்ட வழி?

ஆனந்தமாக இருந்தான் ஸ்ரீனிவாசன்,
ஆனந்த நிலயத்தில் பத்மாவதியுடன்.

பக்தர்கள் தேடி வந்தனர் பகவானை;
சக்திக்கு ஏற்பக் காணிக்கை அளித்தனர்.

மகிழ்வுடன் பகவான் இருந்த போதிலும்,
நெகிழ்வுடன் நினைப்பதுண்டு லக்ஷ்மியை!

‘உற்சாகம் குன்றி பகவான் இருப்பதற்கு
உபசரணையில் உள்ள குறைபாடுகளோ?’

பத்மாவதி ஆலோசிப்பதுண்டு அடிக்கடி;
பகவானிடம் கேட்டுவிட்டாள் நேரடியாக.

“சுகமாக இருப்பதை விட்டு அடிக்கடி நீங்கள்
சோகமாகி விடுவதன் காரணம் கூறுங்கள்!”

“லக்ஷ்மி என்னைப் பிரிந்ததனால் வாழ்க்கை
லக்ஷ்யம் இழந்ததைப் போல ஆகிவிட்டது.

திருமணச் செலவுக்கு வாங்கினேன் கடன்;
திருப்பித் தர வேண்டும் கலியுக முடிவில்.

வட்டி கட்ட வேண்டும் வருடா வருடம்
கட்ட வில்லை வட்டி ஒரு வருடம் கூட.

லக்ஷ்மி மீண்டும் என்னிடம் வந்தால் தான்
லக்ஷணமாகும் நம் வாழ்க்கை!” என்றான்.

“லக்ஷ்மி வருவதில் தடை என்ன சுவாமி?”
“லக்ஷ்மி உனக்குப் போட்டி அல்லவா?”என,

“இந்த வாழ்க்கையே லக்ஷ்மி தந்தது!
அந்த லக்ஷ்மியை நான் வெறுப்பேனா?

அழைத்து வருவோம் நாம் சென்று!” என்றாள்.
“அழைத்து வருவேன் நான் சென்று!” என்றான்.

வகுள மாலிகை துணையானாள் அவளுக்கு.
பகவான் மட்டும் சென்றார் கரவீரபுரத்துக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#28a. Payment of the Interest

SrinivAsan lived happily in Aanandha Nilayam with PadmAvati. His devotees visited him and offered money in the Hundi – according to their affordability. He would often think of Lakshmi Devi with a soft tender feeling. How different his life would have been if only Lakshmi did not leave him at all!

PadmAvati noticed this change and wondered if she was not doing her best to keep him happy. One day she took courage and asked him directly, “Why is it that you often seem to be in a pensive mood?”

SrinivAsan told her the truth, “After Lakshmi deserted me, my life seems to be devoid of any purpose or beauty. I have borrowed heavily for our wedding expenses. The principal of the loan can be returned at the end of Kali yuga but I had promised to pay the annual interest. Till today I have not paid back any interest.”

Why can’t we bring back Lakshmi here?” PadmAvati asked. Srinivaasan replied, “She will be a competitor for you in sharing my love and affection.”

PadmAvati replied, “The life I live now is a gift bestowed by Lakshmi Devi. I can never feel jealous of her. I will go and request her to come back to you.”

SrinivAsan told her, “I myself will go and request her to come back to me!” He made Vagula MAlikA keep company with PadmAvati in his absence and went to Karaveera Puram to bring back Lakshmi Devi.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#27a. வினோதத் திருமணம் (1)

மன்னனிடம் கூறினாள் தோழி செய்தியை;
மன்னன் கூறினான் பட்டத்து ராணியிடம்.

“அருமை மகள் இழந்துவிட்டாள் மதியை!
விரும்புகின்றாள் குரங்கு முக நாரதனை!

ஆண்டி ஆவான் அந்த மந்தி முகன்;
அரசிளங்குமரி இவள் அழகிய பெண்.

ஒரு போதும் சம்மதியேன் இதற்கு நான்;
பொருத்தமானவனை மணக்கப் புத்தி சொல்!”

அரசி செய்தாள் அரசன் இட்ட பணியை
சிரமேற்கொண்டு முழு கவனத்துடன்.

“பேரழகுப் பெட்டகம் நீ; மந்தி முகன் அவன்;
பூக்கும் பூங்கொடி நீ; வாடிய வற்றல் அவன்;

மாசு மருவற்ற உன்னால் பேசமுடியுமா சொல்?
நேசம் கொள்வதற்கும் தராதரம் இல்லையா?

முல்லைக் கொடி வேம்பின் மீது படர்ந்தால்
தொல்லை முல்லைக் கொடிக்கு அன்றோ?

வருந்துவார்கள் உன்னைக் காண்பவர்கள்;
அருவருப்பு இன்றி வாழ முடியுமா உன்னால்?”

“உண்மை தான் நீ கூறுவது என் அன்னையே.
உடலால் அழகன் ஒரு மூடனாக இருந்தாலோ?

ஆற்றல் இல்லாதவனுக்கு அரசு எதற்கு?
ஆறுமே மனம் இன்னிசை வெள்ளத்தில்!

இசைக்கு வசப்படும் பசுக்கள், பறவைகள்;
இசைக்கு வசப்படும் குழந்தை, தெய்வம்.

இசை வல்லுநர் கின்னரர் பெற்றுள்ளனர்
இயற்கைக்கு மாறான குதிரை முகங்கள்.

மதிக்கின்றார்கள் தேவர்கள் இசை ஞானத்தை;
மிதிக்கவில்லை குதிரை முகக் கோமாளி என்று.

மூடனோடு வாழ்ந்தால் மூச்சு முட்டும் – இசையில்
மூழ்கடிக்கச் செய்கிறவருடன் வாழ்வதால் அல்ல!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

6#27a. The strange wedding (1)

Damayanti’s friend went told the matter to the king. He told it to his queen. “Our daughter has lost her mind. She wants to marry the monkey-faced-NArada. He is a pauper in addition to being monkey-faced.

I will never give my consent to this alliance. Go and talk to your daughter and make her see good sense!” The queen spoke to her daughter as commanded by the king.

“Listen to me my dear girl! You are a pretty princess. NArada is a monkey faced pauper. You look fresh like a creeper laden with fragrant flowers and he is all dried up like a twig.

Even while falling in love, you have to heed to some basic qualifications. If a jasmine creeper climbs on a Neem tree, it will the jasmine plant and not the Neem tree that will suffer as a result.

Whosoever sees you both will feel very sorry for the mismatch. Can you spend your entire life with him without ever feeling sorry that you had made a wrong choice?’”

Princess Damayanti spoke now,”My dear mother! I fully agree with every word you tell me. What happens if a handsome man is also a total fool? Of what use is a kingdom for one who does not have the power to protect it?

Music enchants everyone and everything. The birds, the beasts, the babies and the gods are all attracted by the divine music. Kinnaras are expert musicians and they have the heads of horses. No one ever makes fun of their horse faces but everybody respects their musical talents.

I will suffocate if I am forced to live with a fool by marrying him. I will never feel sorry if I marry NArada who can make me forget the whole world by his divine and captivating music.”

The Princess was firm in her decision to marry NArada.

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5e. தருமதத்தன்

கலிங்க நாட்டின் வணிகன் தேவதத்தன்;
அரிபுரத்தில் வசித்து வந்தான் அவன்.

தருமதத்தன் தேவதத்தனின் மகன்;
தருமம் செய்வதே கருமம் ஆனவன்;

தாய் தந்தையர் இறந்து பட்டனர்!
தனி ஆளாகி விட்டான் தருமதத்தன்.

இரசவாதி ஒருவன் வந்தான் வீட்டுக்கு;
நீறணிந்து பூணூலும் தரித்திருந்தான்;

கழுத்திலே ஒரு ருத்திராக்ஷக் கொட்டை,
தலையிலே மொட்டை, காதில் குண்டலம்.

போலித் துறவி என்று அறியாமலேயே
போலித் துறவியை நன்கு உபசரித்தான்.

“சிவ பெருமான் அருளிய ஒரு வித்தை உள்ளது!
எவருக்கும் தெரிவிக்கக் கூடாது அதை நான்!

கரிய இரும்பையும் செம்பொன் ஆக்குவேன்;
ரசத்தையும், ஈயத்தையும் நல்ல வெள்ளியாக!

ஒரு பொன் ஆகும் ஒரு கோடிப் பொன்னாக,
ஒரு கோடி பொன் ஒரு பொன் மலையாகும்.”

தன் பொன் அனைத்தையும் ஈந்தான் வணிகன்
தன் நினைப்பு பொய்க்குமோ என்று ஐயத்தால்!

“என் வித்தைக்கு உறைபோடக் கூடக் காணாது!”
என்று சினந்து சொன்னான் அந்தப் போலி இரசவாதி.

வீடு வாசலை, நில புலன்களை எல்லாம் விற்றான்;
ஆடு மாடுகளை, அணி மணிகளை எல்லாம் விற்றான்.

தான் அறியாமலேயே தான் அதுவரை செய்த
தருமத்தையும் விற்று விட்டான் அந்த வணிகன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5e. DHARMA DATTAN.


Deva Dattan was a merchant living in Aripuram of Kalinga Desam. His son Dharma Dattan was involved in many charitable deeds.
When the merchant and his wife died, Dharma Dattan became all alone in the world.

An alchemist came to his house. He wore the sacred thread and had smeared the holy ash on his forehead, He wore a rudrAksham and kuNdalams and his head was clean shaven. Dharma Dattan welcomed him warmly.

He told Dharma Dattan, “Siva has taught me a trick by which I can convert iron into Gold. I can convert lead and mercury into silver. Your one gold coin can become one crore coins and one crore coins can become a mountain of gold coins.”

Dharma Dattan brought forth all his gold but the alchemist lost his temper and said. “This is like the gold strewn on the floor after my alchemy!” Dharma Dattan sold his land, house, cattle and every earthly possession. Without realising he sold off all the good karmas he had performed till then.


 
SRI VENKATESA PURAANAM


28b. பத்ம ஸரோவர்

பகவான் கரவீரபுரம் வருகின்றான் என்றதும்,
பாதாள லோகம் சென்று விட்டாள் லக்ஷ்மி!

கபில முனிவரைக் கண்டாள் லக்ஷ்மி தேவி;
கபில முனிவர் வரவேற்றார் அங்கே தங்கிவிட!

எந்த இடமானால் என்ன பகவானைத் தியானிக்க?
அந்த இடத்திலே தங்கிவிட்டாள் லக்ஷ்மி தேவி.

கரவீரபுரம் அடைந்த ஸ்ரீனிவாசன் கண்டது எது?
வெறிச்சோடிக் கிடந்த தேவியின் இருப்பிடத்தை.

கடுமையான தவம் மேற்கொண்டு விட்டாளா?
காடுகளில் தேடி அலைந்தான் லக்ஷ்மி தேவியை.

திருவுருவத்தின் அருகே அமர்ந்தான் ஸ்ரீனிவாசன்;
தியானம் செய்தான் தன் லக்ஷ்மி தேவியின் மீது.

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன – ஆனால்
பார்க்க முடியவில்லை பகவானால் லக்ஷ்மியை!

அசரீரி ஒன்று பேசியது ஆகாயத்தில் இருந்து,
“வசப்படமாட்டாள் லக்ஷ்மி உன் தியானத்துக்கு!

ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரினை
அமைப்பாய் பத்ம ஸரோவர் என்ற பொய்கையில்.

கிழக்கில் இருந்து சூரியன் ஒளி வீசும் பொழுது,
அழகிய தாமரையில் உன் தேவி தோன்றுவாள்!”

அடைந்தான் சுவர்ணமுகி தீரத்தை ஸ்ரீனிவாசன்.
அனுப்பினான் வாயு தேவனை இந்திர லோகம்.

பறித்து வந்தான் இந்திரனின் அனுமதியோடு
அரிய தாமரை மலர் ஒன்றை வாயுதேவன்.

ஆயிரம் இதழ்த் தாமரையை ஸ்தாபித்தான்;
ஆயிரம் இதழ்த் தாமரை மீது தியானித்தான்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

28b. Padma Sarovar

The moment Lakshmi Devi knew that SrinivAsan was coming to meet her and take her back with him, she went to the PAtAla lokam. She met sage Kaplia there and decided to stay on there itself. All she wanted to do was to meditate of her Lord and any place was good enough for that purpose.

SrinivAsan reached Karaveera Puram only to find that Lakshmi had gone away from there already. “Had she go into the forest to take up a more severe penance?” He searched for her everywhere but in vain. He sat near her image and started meditating on her.

Ten years rolled by but Lakshmi did Not appear before him. He then heard an aakAsh vANi which said, “This kind of meditation will not bring back to you Lakshmi Devi. Plant a divine lotus flower with one thousand petals in Padma sarovar and meditate on it. When the Sun shines from the east, Lakshmi Devi will appear on that lotus flower.”

SrinivAsan reached the banks of SwarNamukhi. He sent VAyu Devan to bring a lotus flower with one thousand petals from Indra lokam with Indra’s permission.

VAyu Devan brought the divine lotus. SrinivAsan planted it in Padma Sarovar and started meditating on it.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#27b. வினோதத் திருமணம் (2)

“மூவுலகிலும் இணையில்லாத கானம் செய்பவர்
முகத்தினால் கெட்டுப் போவது எதுவும் இல்லை.

வரித்துவிட்டேன் நாரதரைக் கண்டவுடனேயே;
பரிந்துரைத்து மணம் செய்வியுங்கள் எமக்கு.”

மாறவில்லை மகளின் மனம் என்றறிந்ததும்
முறைப்படி நடத்தி வைத்தனர் திருமணத்தை.

அங்கேயே தங்கிவிட்டேன் மணமான பிறகு.
தங்கி விட்டது துக்கம் மனதில் நிரந்தரமாக.

வருந்தவில்லை தமயந்தி என் முகம் கண்டு!
வருந்தினேன் நான் தமயந்தியின் முகம் கண்டு!

வந்தார் பர்வத முனிவர் என்னைக் காண்பதற்கு;
வருந்தினார் மனம் என் குரங்கு முகத்தைக் கண்டு.

“காட்டில் வசித்தால் இருக்காது மனவேதனை;
நாட்டில் வசிக்கிறீர் இளவரசியின் கணவனாக!

பரிவு பெருகுகிறது அரசகுமாரியை நினைத்தால்;
தெளிவு பிறக்கிறது நான் செய்த தவறு என்பதால்.

தருகின்றேன் என் புண்ணிய பலனை உமக்கு;
மறுபடி மாறட்டும் முகம் முன்போல் அழகாக!”

கருணை காட்டிய பர்வத முனிவருக்குக்
கருணை காட்டி மாற்றினேன் என் சாபத்தை.

அழகிய முகம் உண்டாயிற்று மீண்டும்!
பழகிய முகம் கண்டு மகிழ்ந்தாள் தமயந்தி.

அன்னையிடம் கூறினாள் நற்செய்தியை!
அன்னை கூறினாள் மன்னனிடம் செய்தி!

ஆனந்தம் அடைந்தனர் அழகிய முகம் கண்டு;
அனைத்துச் சிறப்புகளும் அளித்தனர் உவந்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

6#27b. The strange wedding (2)

Damayanti convinced her mother by saying, “No one can sing as well as NArada in the three worlds. I do not care about his face or his features! The moment I set my eyes on him, I had chosen him as my future husband. Please get us married as per our custom.”

When the king the and queen found out that their daughter stuck to her decision, they duly got her married to me – NArada. I stayed on at the palace after the wedding. But my mind was always sorrowful – worrying about my ugly monkey face. Damayanti never worried about my face but I worried about her all the more.

One day Parvata rushi came to visit me. He felt bad seeing me monkey-faced. He said, “It will not matter much if you happen to live in a jungle with this kind of a face. But living in a palace and the too as the husband of a princess is completely different.

My heart melts with pity towards the good princess. I realize my folly due to my anger – which had made me temporarily mad. I happily utilize the good effect of my penance to restore your face to its original glory.”

I was touched by his concern and wanted to repay him for his kindness. I too removed the curse I had cast on him. I got back my original face. Damayanti was overwhelmed and told her mother the good news. She conveyed it to the king. So there was joy everywhere. The king and queen bestowed on me lavish gifts now that I was suitable for their loving daughter.

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5f. தருமதத்தன்

தேடிய பொருளைப் பொன்னாக மாற்றித்
தேடி வந்த துறவியிடம் கொண்டு தந்தான்.

இரசத்தைப் பொன்னுடன் கலந்த துறவி
இரசவாத மட்குகையில் அதை அடைத்தான்.

புகை மண்டும் தீயில் வைத்தான் அதை.
புகையில் கண்கள் பற்றி எரியும் போது,

பொன்னை எடுத்து மறைத்துக் கொண்டு
பொன்னுக்கு பதில் இரும்பை வைத்தான்.

“காளி கோவிலில் வேள்வி செய்து விட்டு,
நாள் நான்கானவுடன் நான் திரும்புவேன்!

தனித்திருந்து, உணவு கூட உண்ணாமல்,
நினைத்திரு என்னையே, உரையாடாமல்!”

மூன்று நாட்கள் கடந்து சென்று விட்டன;
முனிவன் மீண்டும் அங்கு வரவே இல்லை.

காளி கோவிலிலும், அந் நகரிலும் தேடித் தேடிக்
களைத்துப் போனான் வணிகன் தருமதத்தன்.

மட்குகையில் கிடைத்தது கரிய இரும்பு.
மனம் உடைந்தவன் விழுந்து இறந்தான்.

பொருட்களை விற்கும் போது தான் செய்த
தருமத்தையும் விற்றதன் தீப் பயன் இது.

மத யானையாகத் திரிந்து உழல்கின்றவன்
மதி மோசம் போன தருமதத்தனே ஆவான்.

தீவிர தவத்தின் பயனை அளித்து அவன்
தீவினைகளை நீக்கினார் குச்சக முனிவர்.

தன் யானை வடிவம் மறைந்து தேவனாகிப்
பொன் உலகு ஏகினான் பொன் விமானம் ஏறி!

தாமதம் இன்றி குச்சிக முனிவர் தம் தீவிரத்
தவத்தைத் தொடங்கினார் பொய்கையினுள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5f. THE DECEPTION AND DIVINITY.


Dharma Dattan bought gold with all the money he got thus. He gave it to the alchemist, who mixed it some chemicals and packed it in a mud pot. The pot was then kept on a fire emitting fumes which stung the eyes.

When Dharma Dattan was thus temporarily blinded, the alchemist hid the gold and replaced it with iron. He told Dharma dattan,
”I have to perform a yAga in the KALi temple for the next three days. During that time you must go on a fast and keep meditating on me in utter silence. I will come back on the fourth day”.

Dharma Dattan did as was told but the alchemist never came back. He went search of the cheat and could not find him anywhere. He came home very tired and defeated. He was shocked beyond words to see iron in the mud pot in the place of the gold he had given.

He just dropped dead. It was because unknowingly he had sold away all his puNyam. The sage understood that it Dharma Dattan who was reborn as the angry elephant – suffering and making the others around him also suffer.

He donated the elephant the puNya earned by him by doing his penance. The elephant gained the form a Deva. He thanked the sage profusely, got in to a vimAnam and went to heaven. The rushi went back to his penance and the pond.


 
SRI VENKATESA PURAANAM

29a. அப்சரஸ்

நாட்கள் உருண்டு ஓடின – பகவானின் தவம்
நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தது மேலும்!

பத்ம தீர்த்தத்தின் கரையில் ஒருவன் அமர்ந்து
உக்கிர தவம் செய்வது ஒரு செய்தியானது!

பூலோகத்தில் தவம் நடந்தால் ஆபத்து நிகழும்
தேவலோகத்தை ஆளும் இந்திரனின் பதவிக்கு.

தவத்தைக் குலைத்துக் கலைப்பதற்கு இந்திரன்
தேவ மகளிரை அனுப்பினான் பூலோகத்திற்கு.

பூலோகப் பெண்களைப் போல மாறிவிட்டனர்.
பூஜைக்கு உதவி செய்திட விரும்பி வந்தனர்.

தடை சொல்லவில்லை பகவான் அவர்களிடம்;
நடை பெறவில்லை அவர்கள் விரும்பியதும்!

நெருங்க வில்லை பகவான் அந்த சுந்தரிகளை!
நெருங்கவும் விடவில்லை அந்த சுந்தரிகளை!

அடுத்த திட்டத்தினை அமல்படுத்தினர்அப்சரஸ்.
அடுத்து அடுத்துப் பாடினர் இனிய பாடல்களை!

அர்ப்பணித்தான் அந்தப் பாடல்களை லக்ஷ்மிக்கு;
கற்பனை பலிக்கவில்லை பெண்கள் எண்ணியபடி.

மாலைகளை அணிவிக்க வந்தனர் பகவானுக்கு;
மாலைகளை அணிவித்தான் அவன் தாமரைக்கு!

“நாட்டியம் செய்யலாமே நீங்கள்!” என்று சொல்லப்
போட்டி போட்டுக் கொண்டு இனிய நடனம் ஆடினர்.

மேனி எழிலை வெளிப்படுத்தினர் ஆடும் போது;
பேணினான் பிரம்மச்சரியத்தை பகவான் நன்கு!

கற்பனையில் உருவான அழகிய பெண்ணை
கண்முன் கொண்டு வந்து நிறுத்தினான் பகவான்

‘படைக்கும் சக்தி படைத்த இவன் மனிதன் அல்ல!’
மடை திறந்தது போல எல்லாம் நினவு வந்தது!

இந்திரன் தந்தான் வாயுவிடம் தாமரை மலரை;
இந்தத் தாமரை மலரே அவன் தந்த மலர் என்று!

விழுந்து வணங்கினர் பகவான் பாதங்களில்;
அழுதும், தொழுதும், கேட்டனர் மன்னிப்பு.

“செய்ய வந்தீர்கள் உங்களுக்கு இட்ட ஆணையை;
எய்தவன் இருக்க அம்பை நான் நோக மாட்டேன்!”

தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியவர்கள்
அப்போதே சென்றனர் இந்திரனின் சபைக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29a. The Apsaras


Days rolled by and the penance of SrinivAsan became more and more intense. The news that a handsome man was doing an intense tapas near Padma Sarovar reached far and wide.

Any intense tapas done on earth caused fear and concern in Indra’s mind – since that person might replace him and become the new Indra. He sent celestial maiden to disturb and disrupt the penance of that young man.

The celestial maidens transformed themselves to resemble the maidens of the earth. They offered to help SrinivAsan in performing his pooja and penance. SrinivAsan did not object to their offering their help. At the same time he made sure that their aim did not succeed.

He never went close to any of those maidens nor entertained their coming very close to him. So the next part of their scheme unfolded. Now they sang sweet song to attract SrinivAsan. He offered all those songs to the divine lotus and to Lakshmi Devi.

They made lovely garlands and wanted to put them round SrinivAsan’s neck but he intercepted and offered the garlands to the divine lotus flower to please Lakshmi Devi.

Now SrinivAsan himself suggested , “You may dance if you wish to!” Those maidens were expert dancers. They danced their best and also managed to reveal their beauty through their movements. But SrinivAsan was not infatuated with them since he offered their dances to please Lakshmi Devi.

Now SrinivAsan performed a miracle. He imagined a beautiful maiden and bought her to life. The celestial maidens were shocked to find that this young man was capable of creating a living person just by his sankalpam ( determination of mind).

They realized that he was not any ordinary man but God himself. Then they suddenly remembered that Indra had given the divine lotus with one thousand petals to VAyu – to be given to someone on the earth.

They fell at his feet and begged pardon for their wrong thoughts and actions. SrinivAsan told them with a smile , “You have carried out the orders given to you by your king Indra. Surely I will not hold you responsible for his actions.”

They were extremely happy and felt relieved that they were not cursed for their actions. They returned to Indra lokam and went straight to Indra Sabha.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#28a. நாரதர் பெண் ஆனார் (1)

பாற்கடலுக்குச் சென்றேன் பரந்தாமனைக் காண்பதற்கு.
பாடிக்கொண்டு சென்றேன் மஹதிவீணையை இசைத்தபடி.

உல்லாசமாக இருந்தனர் லக்ஷ்மி தேவியும், விஷ்ணுவும்.
சல்லாபம் தடைபட்டு விட்டது என் திடீர் வரவினால்.

நாணத்தோடு ஓடி ஒளிந்து கொண்டாள் லக்ஷ்மி தேவி;
நாராயணனிடம் வினவினேன் நான் இதைக் குறித்து.

“வென்றுள்ளேன் நான் ஐம்புலன்களையும் என்றறிவீர்.
வென்றுள்ளேன் மாயையை, சினத்தை என்றும் அறிவீர்.

தேடி வந்தேன் பாற்கடலுக்கு உங்கள் தரிசனம் பெற.
ஓடி ஒளிந்து கொண்டு விட்டாள் அன்னை லக்ஷ்மி தேவி”

கர்வம் தொனித்தது என் குரலில் சிறிது என்பதை
சர்வமும் அறிந்த நாராயணன் கண்டு கொண்டார்.

“இனிமையானது உன் மஹதியின் ஸ்வரங்கள்.
இனிமையானது உன் சாதுர்யமான மொழிகள்.

மாயையை வென்றுவிட்டேன் என்கின்றாய் நீ!
மாயையின் தலைவன் சிவனும் இதைக் கூறார்!

வெல்ல முடியவில்லை மாயையை யோகிகளால்;
வெல்ல முடியவில்லை மாயையை முனிவர்களால்;

வெல்ல முடியவில்லை மாயையைத் தேவர்களால்;
வெல்ல முடியவில்லை மாயையைத் தெய்வங்களால்.

முக்குணங்கள் பொருந்தி உள்ள ஒருவனால்
எக்காலத்திலும் வெல்ல முடியாது மாயையை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#28a. NArada became a woman (1)

NArada continued his explanation to sage VyAsaa. “I went to the Ocean Of Milk one day to have a darshan of Lord NArAyaNan. I went there singing and playing my Mahati veena.

Lakshmi Devi and NArAyaNan were enjoying the pleasures of solitude at that time. They were disturbed by my unexpected visit. Lakshmi Devi ran away from there feeling shy.

I told Lord NArAyaNan with some pride in my voice,”I have conquered all the five sense organs. I have conquered my anger and the delusion created by MAyA. Why should Lakshmi Devi feel shy on seeing me here and run away to hide herself?”

Lord NArAyaNan was surprised by the note of pride in my words and said, ” Your Mahati veena makes very good music. You make very good declarations. Even Lord Siva – who is the master of AyA – will not daringly make such a declaration.

Yogis, rushis, Devas and Gods are unable to come out of delusions of MAyA. As long as the three guNas are present in a person, MAyA can not be transcended.”

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5g. விருத்தை மீளுதல்

தவத்தை மெச்சிக் காட்சி தந்தான்
தவச்சீலர் குச்சகர் முன்பு நமன்!

“விரும்புவதைக் கேளும் முனிவரே!”
திருவாய் மலர்ந்தருளினான் நமன்.

“மகனுக்கு மணம் பேசி வந்தேன்;
மணமகள் பிணமாகி விட்டாள்.

முன்போல் அவளைத் தரவேண்டும்
என் மகன் திருமணம் நடப்பதற்கு!”

தூதனிடம் ஆணை இட்டான் நமன்,
“துரிதமாக இவள் உயிரை மீட்டுவா!”

உடலுள் மீண்டும் உயிர் புகுந்த அளவில்
உடன் எழுந்து கொண்டாள் விருத்தை.

உறங்கியவள் போல் எழுந்தவளைக்
கிறங்கிய தாய் கட்டி அணைத்தாள்.

ஏங்கிய அன்புத் தோழிகள் வந்து
தூங்கி விழித்தவளை அணைத்துக்

குச்சக முனிவரைப் போற்றினர்,
பத்திரமாக அவளை மீட்டதற்கு.

குச்சகர் மகனை அழைத்து வந்தார்;
விருத்தையுடன் நடந்தது திருமணம்.

இனிய இல்லறத்தில் மலர்ந்தான்
இனிய வரவாக ஒரு திருமகன்

மிருகண்டூயரின் மகன் மிருகண்டு!
மிருகண்டுவுக்கு வயது ஆறு ஆனது.

தவம் செய்யத் தந்தை சென்றது போல,
தவம் செய்ய மிருகண்டூயரும் சென்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5g. RESURRECTION OF VIRUTHTHAI.


Yamadharman was pleased by the penance of Kuchchagar. He appeared in front of the sage and asked him,” What do you wish for, revered sire?”

“I came here to fix the wedding of my son with a girl but now she lies dead. Please return her to me alive so that I can get her married to my son as originally planned!”

Yamadharman ordered his servant to go fetch the life of the girl immediately and return it to her. The girl woke up as if from a deep sleep.The joy of her mother knew no bounds. Her friends were overwhelmed with happiness.

Kuchchgar brought his son, whose wedding with Viruththai was promptly celebrated. They lived a happy life as a result of which they were blessed with a son Mrugandu.

When the son became six years of age, Mrugandooyar left to perform penance – the same way his father had left him earlier.


 

Latest ads

Back
Top