• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

20b. தாரகனுடன் போர்

அண்டம் குலுங்கும் வண்ணம் தாரகன்
தண்டத்தை எடுத்துப் போர் புரிந்தான்;


பூதப் படைகளின் கணைகள் அவனுக்கு
ஏதும் தீது விளைவிக்கவில்லை விந்தை!


நூறு ஆயிரம் பேரையும் வாரி எடுத்து
நீரில் வீழும்படிக் கடலில் வீசினான்.


ஒன்பது வீரரும் சினம் கொண்டனர்.
ஒன்பதின்மருடன் ஒரு மாயப்போர்.


தாரகன் சென்று ஒளிந்து கொண்டான்
கிரௌஞ்ச மலையின் ஒரு குகையில்;


துரத்தி வந்த வீராபகுத்தேவரும் அங்கு
உறங்கலானார் மலை செய்த மாயத்தால்!


தேடி வந்த தம்பிகள் குகையில் நுழைய
ஓடியது அறிவு; தழுவியது உறக்கம்!


பூதப் படைத் தலைவர்களும் குகையில்;
பூதங்கள் அஞ்சிப் புறமுதுகிடலாயினர்.


நாரதர் விரைந்தார் திரு முருகனிடம்,
“தாரகன் செய்கிறான் மாயப் போர்!


படைத் தலைவர்களும், ஒன்பதின்மரும்
கிடக்கின்றனர் குகையில் உறக்கத்தில்!”


“அஞ்ச வேண்டாம் கொஞ்சமும் நீங்கள்!
க்ரௌஞ்சத்தைப் பிளந்து அவரை மீட்பேன்.


தாரகனைப் இப்போரிலே வெல்லுவேன்!”
தேரினில் ஏறினான் வாயுதேவனுடன்;


முருகனைக் கண்டதும் திரும்பின பூதங்கள்;
மறுபடிப் போர் தொடர்ந்து நடந்தது.


அவுணர்கள் பலர் அழிந்து போயினர்.
அவுணர்கள் பலர் புறமுதுகிட்டனர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#20b. WAR WITH TAARAKAN.


TArakan charged wildly, wielding his Vajra dhaNdam, making the whole world tremble. The arrows and asthrams shot by the Siva GaNas did not deter him at all.


He grabbed the hundred thousand warriors and tossed them into the sea. Now the Nava Sakthi KumAras became very angry. TArakan decided to use a different tactics now.


He ran and hid himself in a cave in the Krounja Giri. VeerabAhu went looking for him and fell into deep slumber – due to the effect of MAyA exhibited by the tricky mountain.


His other eight brothers and the hundred and eight commanders came in search of him and they all fell asleep inside the cave likewise.

Without a commander, the army of the GaNas started running aimlessly and away form the battle field. NArada who was closely watching the events rushed to report them to Lord Murugan.

Murugan decided to go to the war front Himself. He sat on the chariot driven by VAyu Devan and reached MAyApuri in no time. The GaNas took courage at the sight of Lord Murugan and returned to the battle field.


Now it was the turn of the asuras to lay dead in the battle field or run away in order to save their life.
 
SRI VENKATESA PURAANAM

21a. பிரியா விடை

ஆகாசராஜன், தரணி தேவி திரும்பிப்
போகாமல் உடன் சென்றனர் வெகுதூரம்.

ஸ்ரீநிவாசன் சொன்னான் பத்மாவதியிடம்,
“இனிமையாகப் பேசித் திருப்பி அனுப்பி விடு!”

தேற்றினாள் பத்மாவதி தாய் தந்தையரை,
“ஏற்க வேண்டும் தவிர்க்க இயலாத பிரிவை!”

சேஷாச்சலம் செல்லவில்லை ஸ்ரீனிவாசன்;
சென்றனர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு.

சுவர்ணமுகி நதித் தீரத்தை அடைந்தனர்;
பர்ணசாலை அமைத்தனர் மணமக்களுக்கு.

இந்திராதி தேவர்கள் திரும்பிச் சென்றனர்;
தந்தார் பிரமன் பொன்னும் மணியும் பரிசாக!

கரவீர புரம் திரும்பினாள் லக்ஷ்மி தேவி;
தர விரும்பினாள் தடையில்லாத ஆனந்தம்.

ஆடிப் பாடிக்காலம் கழித்தனர் மணமக்கள்;
ஓடை நீரில் விளையாடினர் மணமக்கள்.

மலருடன் சென்று ஆராதித்தாள் வராஹரை
மறவாமல் அனுதினம் தாய் வகுளமாலிகை.

மலர் சூட்டி அலங்கரித்தனர் பத்மாவதியை
மாலை வேளைகளில் முனிவர் மனைவிகள்.

குதிரை வீரன் விரைந்து வந்தான் ஒருநாள்;
அதிர வைக்கும் செய்தி ஒன்று சொன்னான்.

“அரசன் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது
அரசியார் அனுப்பினார் செய்தி தெரிவிக்க.”

ரதம் தயாரானது பயணத்துக்கு – இருவரும்
விரைந்தனர் உடன் நாராயண புரத்துக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#21. The happy couple


AkAsa RAjan and DharaNi Devi accompanied SrinivAsan and PadmAvati for a very long distance. They could not think of going away from PadmAvati. SrinivAsan told her, “Talk to your parents and make them realise that this separation is unavoidable.”

PadmAvati spoke to them explaining the situation and they returned to their palace. SrinivAsan did not want to go back to the anthill in SeshAchalam. So He went to the Aashram of sage Agasthya instead. The sage was very happy to have the newly married couple stay in his place. He got a new parNasAla made ready for their stay.

All the Devas went back to their respective places. Brahma presented gold and gem stones to the couple. Lakshmi Devi went back to Karaveera Puram – since she did not want to disturb the happiness of the newly weds.

The newly weds spent all their time in dancing, singing and playing in the river water. VaguLa MAlikA went and worshipped her favorite God Aadi VarAha Moorthi every day with fresh flowers. The wives of the rushis decorated PadmAvati with fresh flowers in the evenings.

One day a soldier came on a horseback. He brought a bad news. The king AakAsa Rajan was ill and the Queen had sent for them . A chariot was made ready and SrinivAsan and PadmAvati rushed to NArAyaNa puram immediately.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#17b. பார்க்கவன் (2)

ஜொலித்தான் உதிக்கும் இளஞ்சூரியனைப் போல!
ஜொலித்தான் ஹைஹய அரசர்கள் குருடாகும்படி!

புலம்பினர், கலங்கினர், அழுதனர், தொழுதனர்,
புலப்படவில்லை என்ன மாயம் நிகழ்ந்தது என்று!

“பெண்களே செய்தனர் இந்த மாயத்தை இங்கே!
ஆண்கள் என்று யாருமே இல்லையே இங்கே?”

வணங்கினர் அரசர்கள் அந்தணப் பெண்களை,
“உணர்ந்து கொண்டோம் கற்பின் பெருமையை!

குருடாகிவிட்டோம் உங்கள் கற்பின் சக்தியால்;
அருளுங்கள் கண்பார்வை பிழைகளை மன்னித்து!

செய்ய மாட்டோம் இனிக் கொடிய பாவங்களை.
உய்யும் வழியைக் காட்டுங்கள் மனம் இரங்கி!”

“குருடாக்கவில்லை உம்மை யாம் மன்னர்களே!
பிருகு பிறந்தான் நீங்கள் வந்த அதே வேளையில்.

குருடானீர்கள் பிருகுவின் உடல் ஒளியால்;
கருவில் ஒளிந்திருந்தான் என் தொடையில்.

அஞ்சமாட்டான் பிருகு எவருக்கும் – அவனைத்
தஞ்சம் அடைந்தால் கிடைக்கும் கண் பார்வை.”

இறைஞ்சினர் பார்க்கவரிடம் ஹைஹய மன்னர்;
மறைந்த கண் பார்வை தரும்படி வேண்டினர்.

“தருகின்றேன் கண் பார்வை மீண்டும் உமக்கு!
செருக்கின்றி வாழுங்கள் தீங்குகள் புரியாமல்.

கொலை பாதகம் செய்யாதீர் அந்தணர்களுக்கு!
அலை பாயாதீர்கள் பழி வாங்கிய எண்ணியபடி.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#17b. BhArgavan (2)

The child shone as brilliantly as the rising Sun with a blinding light. The Haihaya kings did not understand how they had all become blind all of a sudden. There were only those helpless women and no men were anywhere around.

The lamented, cried, and prayed to the brahmin ladies there, “We have realized the power of your chastity. Please restore our eyesight. We won’t commit any sins in the future. Please help us out!”

The brahmin ladies replied to those kings “We have not made you blind Oh kings! Just when you arrived here, a son was born to one of the women here with the blinding brilliance of a rising sun.

He was conceived in her thigh. He can restore your eyesight. He is unafraid of anyone and anything. Pray to him to get you eye sight restored”.

The kings prayed to the new born baby boy to restore their eyesight. BhArgavan the boy replied,”I will restore your eyesight. Give up your greed and pride. Do not trouble the brahmins any more. Don’t go about looking for change to avenge and take revenge on the poor brahmins!”

 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

20c. சொற்போர்

ஆறு பூரண சந்திர வதனங்களைக் கண்டு
தாரகன் கேட்டான், “இவனா சிவகுமரன்?


சிவனுக்கும், எனக்கு பகை இல்லையே!
அவன் மகன் என்னை எதிர்ப்பது ஏன்?”


“தேவர்களைச் சிறை இட்டீர்கள் நீங்கள்!
தேவர் பிரான் ஆணைப்படி வந்தேன்!”


“கருட வாஹனன் திருமால் உருளை – என்
கழுத்து அணி ஆன கதையை அறிவாயா?”


“மாலின் உருளை அணிகலன் ஆகலாம்!
வேலின் சக்தியை நீயும் அறிவாயா? எனக்


கடும் போர் துவங்கி பாணங்கள் பறந்தன.
கொடும் பாணங்கள் மயக்கின அசுரனை.


மயக்கம் தீர்ந்து எழுந்தான் மீண்டும்;
தயக்கம் இன்றி முருகன் மீது அவன் எய்த


விஷ்ணு அஸ்த்திரம், பிரம்ம அஸ்த்திரம்
விழுந்து வணங்கிப் பின் ஒதுங்கி நின்றன.


சிவ அஸ்த்திரத்தை எடுத்துத் தொடுக்க,
சிவகுமரனைச் சேர்ந்து நின்றது அது!


“சிறுவன் என எண்ணினேன் இவனை!
குறும்புத்தனமாகவே வென்றிடுவானோ?


இனி உதவிடும் மாயப் போர் முறைகள்.
தனித்து நின்றாகிலும் நானே வெல்வேன்!”


கிரௌஞ்ச மலையிடம் கட்டளை இட்டான்;
“சிரமம் இன்றி வெல்ல மாயைகள் செய்வாய்!


முப்புரங்களாக வந்தது கிரௌஞ்ச மலை,
அப்புரங்களில் அவுணன் ஆனான் அவன்.


முகில் வடிவு எடுத்து வந்தது கிரௌஞ்ச மலை,
முகிலில் இடியாக மறைந்து வந்தான் அவன்!


கடல் வடிவு எடுத்து வந்தது கிரௌஞ்ச மலை.
கடலினுள் வடவாக்னி ஆக வந்தான் அவன்.


இருள் வடிவு எடுத்து வந்தது கிரௌஞ்ச மலை,
இருளில் பூதமாக உறைந்து வந்தான் அவன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#20c. THE WAR OF WORDS

TArakan saw the young boy whose six faces resembled six full moons! “Is he Siva’s son? I have no enmity with Siva. Then why has his son come to fight with me?”

“You have imprisoned Devas and Apsaras. I came here as ordered by my father!”Murugan replied to TArakan.


“Do you know that I am wearing the Sudarshan of VishNu as pendent around my neck?” TArakan demanded Murugan.


“VishNu’s Sudharshan may become your pendant, but it is time you realised the power of my spear!” A terrible war ensued. Arrows whizzed through the air. TArakan fainted in the battle field. He came around a little later.


He shot Brahma’s asthram and VishNu’s asthram on Murugan. They paid their respects to Murugan and stood by his side. Now TArakan shot Siva’s asthram on Murugan. It went right into his hand – ready to be used by him.


TArakan got frightened for the first time. “I thought he was just a child but he may win over me in a child’s play. Now it is time to resort to tricks and magic.”


He ordered the Krounja giri, “Do various tricks and help me win the war.” The mountain transformed into Tripuram. He came hiding as an asura in it. The mountain transformed into a huge cloud. He came hiding in it as the thunder. The mountain transformed into an ocean. He came hiding as the
vadavAgni in it. The mountain transformed into complete darkness. He came hiding in it as a demon.



 
SRI VENKATESA PURAANAM

22. விண்ணுலக வாழ்வு

சயனித்து இருந்தான் ஆகாசராஜன் மஞ்சத்தில்;
சோகமே வடிவாக தரணி தேவி அருகினில்!


இளவரசனும், இளவல் தொண்டைமானும்
இருந்தனர் கால் மாட்டில் அமர்ந்தபடி.


மகளைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான்;
மருமகனைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தான்.


ஒப்படைத்தான் இளவரசனை ஸ்ரீநிவாசனிடம்;
ஒப்புக் கொள்ளச் செய்தான் அரசன் தன் அரசி


தரணியின் உடன்கட்டை ஏறும் முடிவினை.
தரணி வாழ்வினைத் துறந்தான் அந்த மன்னன்.


சுகர் செய்வித்தார் இறுதிச் சடங்குகள்
சிதை மூட்டினான் இளவரசன் வசுதானன்.


சர்வாலங்கார பூஷிதையாக தரணி தேவி
சுற்றி வந்தாள் எரியும் சிதையை மும்முறை.


தீயினில் புகுந்து விட்டாள் ஒரு நொடியில்!
தீ எரிந்தது கொழுந்து விட்டு வானளவாக!


வந்து இறங்கியது விண்ணிலிருந்து விமானம்;
வந்தனர் வெளியே திவ்ய சரீரத்துடன் இருவரும்.


ஆகாசராஜனும், தரணி தேவியும் அமர்ந்ததும்
வேகமாக விண்ணில் பறந்து மறைந்தது அது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


# 22. Swarggam

AakAsa RAjan was lying down on his cot. The Queen DharaNi Devi was seated near him. The prince VasudAna and the king’s younger brother ThoNdaimAn were seated near his feet.


The King was happy to see his loving daughter PadmAvati. He felt moved by the presence of his son in law SrinivAsan. He entrusted VasudAna in the care of SrinivAsan and made all of them promise that the Queen would be allowed to follow sati after his death.


The king AakAsa RAjan breathed his last peacefully. Sage Sukar performed his last rites. VasudAna lighted the funeral pyre. The queen DharaNi Devi was decorated beautifully in silk and all her jewels. She went round the burning pyre thrice and jumped into the fire in a trice. The tongues of the flame leaped heavenwards.


A vimAnam came down from the heaven. The king and queen emerged from the fire with their divya sareeram (divine body) and got into the vimAnam. It took off and flew fast higher and higher in the sky and was out of their sight in no time at all.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#17c. ரேவந்தன்

சூரிய தேவனின் ஒளிவீசும் மகன் ரேவந்தன்
அரிய பரியின் மீது ஏறிச் சென்றான் வைகுந்தம்.


ஆரோஹணித்திருந்தான் உச்சைஸ்ரவத்தின் மீதில்;
அவதரித்தது அது பாற்கடலில் லக்ஷ்மி தேவியுடன்.


கண் கொட்டாமல் கண்டாள் லக்ஷ்மி தேவி அதை!
தன்னுடன் பாற்கடலில் பிறந்த உச்சைஸ்ரவத்தை!


சூரியன் மகனைக் கண்ட விஷ்ணு கேட்டார்,
“சூரியனைப் போல ஒளிரும் இச்சிறுவன் யார்?”


குதிரையின் அழகில் மனம் லயித்திருந்த லக்ஷ்மி
பதியின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.


மீண்டும் மீண்டும் கேட்டார் விஷ்ணு – ஆனால்
மீண்டும் மீண்டும் மௌனம் சாதித்தாள் லக்ஷ்மி.


கோபம் பிறந்து விட்டது விஷ்ணுவின் மனதில்;
சாபம் பிறந்து விட்டது விஷ்ணுவின் சொல்லில்.


“ரமிக்கின்றாய் காணும் பொருட்களில் நீ!
‘ரமை’ என்ற பெயர் பெறுவாய் இனி நீ !


சஞ்சரிப்பாய் ஒரு நிலையில் இல்லாமல்;
‘சஞ்சலை’ என்ற பெயர் பெறுவாய் இனி நீ!


குதிரையைக் கண்டு மதி மயங்கி நின்றதால்
குதிரையாகப் பிறப்பாய் பூமிக்குச் சென்று!”


திடுக்கிட்டாள் லக்ஷ்மி சாபத்தைக் கேட்டதும்!
இடும்பையை விளைவித்தது குதிரையின் எழில்!


‘குதிரையைப் பார்ப்பது தவறாகுமா ஸ்வாமி?
குதிரையாகப் பிறந்தால் சாபம் தீருமா ஸ்வாமி?”


“எனக்குச் சமமான புத்திரனைப் பெற்றெடுத்தால்
உனக்குக் கிடைக்கும் சாப விமோசனம்” என்றார்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#17c. Revanthan


Revanthan was the luminous son of Sun God. He rode to Vaikuntam on Uchchaisravas, the heavenly horse, one fine day. The horse was born from the Ocean Of Milk along with Lakshmi Devi. She stood admiring the beauty and the grace of the horse which had appeared along with her from the Ksheera SAgaram.


VishNu eyed the brilliant boy and asked Lakshmi Devi, “Who is that child? Whose son is he?” Lakshmi Devi was lost to the world and stood there silently admiring the divine horse.

VishNu asked her again and again but she remained silent even then. VishNu flew into a temper and cursed her!

“You get immersed to everything you set your eyes on. You will known by the name ‘RamA” henceforth. You will be moving around aimlessly like your concentration. You will be known as ‘SanchalA’ henceforth. You were admiring a mere horse and ignoring me. You will be born on the earth as a mare.”


Lakshmi Devi got shocked to hear these words of curse. She begged VishNu for a sApa nivAraNam (deliverance from the curse). VishNu told her, “Your curse will be broken when you give birth to a son who will be equal to me in every aspect and every respect!”


 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

20d. தாரகன் முடிவு

மாய விளையாட்டுக்களைக் கண்ட முருகன்;
“தீயவனைத் தப்ப விடக்கூடாது!” என்றான்.

சக்தி வேலிடம் ஆணை இட்டான் முருகன்,
“புத்தி கெட்ட தாரகன் கதையை முடித்து விடு!

தந்திரம் செய்யும் கிரௌஞ்சதைப் பிளந்து
அங்கு மயங்கிய தம்பிகளை மீட்டு வா!”

வேலைப் பிடிக்க முயன்றான் தாரகன்;
வேல் பாய்ந்தது தாரகன் மார்பினில்;

கிரௌஞ்ச கிரியையும் பிளந்தது வேல்,
பிரபஞ்சம் நடுங்கும் பேரோசையுடன்!

துயிலும் வீரர்களை துயில் எழுப்பியது!
தூய கங்கையில் நீராடி மீண்டு வந்தது!

முருகன் வெற்றியை அறிந்த தேவர்கள்,
பெருமகிழ்வுடன் ஆனந்தக் கூத்தாடினர்.

மயக்கம் நீங்கி எழுந்து வந்தவர்கள்,
மாயோன் மருகனை வணங்கி நின்றனர்.

சிவப் படைக் கலத்தை வீரவாகுவுக்கு
சிவக்குமரன் அளித்தான் அன்புடன்.

இறந்த கணங்களை உயிர்ப்பித்து எழுப்பி
தெற்கே செல்லலானான் படைகளுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

1#20d. THE FALL OF TAARAKAN.

Murugan saw all the tricks played by the mountain and TArakan. He said to himself “It is time to an end to the asuran”
He ordered to his spear, “Finish off the foolish TArakan and his tricky mountain Krounja Giri . Awaken all my brothers and commanders who lie asleep inside the mountain!”

The spear charged forward towards TArakan. He tried to catch hold of it. But it pierced his chest and he fell down howling in pain and died. The spear broke through the magical mountain with a deafening noise. It woke up all the nine brothers and the one hundred and eight commanders lying asleep there.

It went to the river Ganges and took a holy dip. It came back to Murugan’s hands. The nine brothers and the commanders prostrated to Murugan. The Devas celebrated the fall of TArakan and victory of Murugan.

Murugan brought back to life all the GaNas killed in the war. He was all set to travel further southwards.

 
SRI VENKATESA PURAANAM

23a. சிங்காதனம்

வசுதானனுக்கு முடிசூட்டினான் ஸ்ரீநிவாசன்;
வசுதானனுக்கு உதவிடத் தொண்டைமான்!


திரும்பினர் அகத்தியரின் ஆசிரமத்துக்கு;
திரும்பியது இயல்பு நிலை மனதில் மெல்ல.


தொண்டைமான் எதிர்த்தான் புதிய அரசனை!
“பண்டைக் காலத்தின் இளவரசன் நானே!” என்று.


“தந்தைக்குப் பின் தனயன் ஆளவேண்டும்!” என்ற
தன் கட்சியை எடுத்து உரைத்தான் வசுதானன்.


பூசல் தொடங்கியது மிகச் சிறிய அளவில்;
பூசல் பெருகி விட்டது வெகு விரைவில்.


பிரதானிகளின் துணையோடு தொண்டைமான்
அரசன் வசுதானனைஅழிக்க விரும்பினான்.


உதவி கோரினான் தொண்டைமான் ஸ்ரீநிவாசனிடம்;
மதி இழந்தவனிடம் பேசி என்ன பயன் விளையும்?


அளித்தான் அவனுக்குத் தன் சங்குச் சக்கரங்களை!
களித்தான் தொண்டைமான் தான் வென்றது போல.


செய்தி அறிந்ததும் பதறி ஓடி வந்தான் அங்கு
செய்வது அறியாத வசுதானன் ஸ்ரீநிவாசனிடம்.


“என்னைக் கொல்ல எண்ணும் சித்தப்பாவுக்கு
எந்தை போன்ற உங்கள் உதவி தேவையா?


பாசமே இல்லையா பத்மாவதி அக்கா! நான்
மோசம் போவதில் உனக்குச் சம்மதமா?”


தேற்றினான் ஸ்ரீநிவாசன் மைத்துனனை,
“தோற்றுப் போவான்; கவலைப் படாதே!


ஆயுதங்கள் உள்ளன அவனிடம் ஆனால்
ஆதரித்துப் போரிடுவேன் உன் பக்கம் நான்.


சமரசம் பேசு முதலில். சண்டையைத் தவிர்!”
சமரசத்துக்கு ஒப்பவில்லை தொண்டைமான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#23a. The dispute for rulership!

SrinivAsan crowned VasudAnan as the new king. ThoNdaimAn was appointed to assist the young king. SrinivAsan and PadmAvati returned to the Aashram of sage Agasthya.


ThoNdaimAn opposed the rule of the young king. He wanted to become the new king. He had been the Crown Prince all along after all! VasudAnan said that after a king his son should become the ruler. There was discord between their views and it escalated very fast.


ThoNdaimAn wanted to get rid of VasudAnan with the help of his loyal courtiers. He went to SrinivAsan and requested for his help. SrinivAsan knew that it would be futile to argue with a man mad for power and position and try to make him see good sense. So he lent his Conch and Discus to ThoNdaimAn – who felt elated with this rare gesture.


VasudAnan became desperate on hearing this and went to meet SrinivAsan. ” My own uncle wants to kill me and usurp the kingdom. And you are helping him in his mission. I regard you as highly as my own father! My dear sister! Is it alright with you if our uncle cheated of my rightful kingdom?”


SrinivAsan consoled him . He said, “ThoNdaimAn has only my weapons but I will fight in your side. He can never win the war. But I prefer that we settle the matter without a war. So first try to make up with him peacefully ”


VasudAnan tried his best but ThoNdaimAn was adamant and wanted to fight a a war to settle the dispute about the rulership.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#18a. பெண் குதிரை (1)

“என்ன செய்தான் ரேவந்தன் வைகுண்டத்தில்?
எங்கே பிறந்தாள் லக்ஷ்மி தேவி குதிரையாக?


எங்கனம் பிள்ளை பிறந்தது பெண் குதிரைக்கு?
எங்கனம் சாபம் தீர்ந்தது லக்ஷ்மி தேவிக்கு?”


சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தான் மன்னன்;
விரிவாக எடுத்துக் கூறி விளக்கினார் வியாச முனிவர்.


“சாபத்தைக் கேட்டு பயந்து விட்டான் ரேவந்தன்;
கோபத்தைக் கண்டு திரும்பிச் சென்று விட்டான்.


தந்தையிடம் சொன்னான் நடந்தவற்றை எல்லாம்.
நொந்த உள்ளத்துடன் விடை பெற்றாள் லக்ஷ்மி.


வடிவெடுத்தாள் பெண் குதிரையாக வனத்தில்;
கடின தவம் செய்தாள் சிவபிரானைக் குறித்து.


காளிந்தி நதி, தமஸா நதிகளின் சங்கமத்தில்
களி கூர்ந்து காட்சி தந்தான் சிவபெருமான்.


“வைகுந்தம் விடுத்து பூலோகம் வந்தது ஏன்?
விஷ்ணுவை விடுத்து என்னை தியானித்தது ஏன்?”


“சபித்து என்னைப் பெண்குதிரை ஆக்கினார் விஷ்ணு;
சாபவிமோசனம் புத்திரப் பேற்றுக்குப் பின்னர் தான்.


தேவை சாபவிமோசனம் நான் என் கணவனை அடைய!
தேவை என் கணவன் நான் சாபவிமோசனம் அடைய!


கூறவில்லை புத்திரப்பேறு ஏற்படுவது பற்றி அவர்;
கோரவில்லை புத்திரப்பேறு ஏற்படுவது பற்றி நான்.


கணவனே கண்கண்ட தெய்வம் பெண்களூக்கு ஆனால்
கணவனுக்குக் கண்கண்ட தெய்வம் நீரே அன்றோ?”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#18a. The mare (1)


King Janamejayan had many more doubts to be clarified by Sage VyAsa.
“What did Revanth do in Vaikuntham? Where did Lakshmi Devi appear as a mare? How did the mare deliver a son as great as VishNu? When did Lakshmi Devi get freed from the curse?”

Sage VyAsa replied,” Revanth got scared by VishNu’s anger and his curse. He went back and told all the happenings to his father the Sun God. Later Lakshmi Devi took leave of VishNu with a heavy heart.


She appeared a mare in one of the forests on earth. She meditated on Lord Siva with unified concentration. Lord Siva gave her a darshan in the sangamam of KALindi river and TamasA river.


He asked Lakshmi Devi, “Why are you here on earth instead of Vaikuntm? Why did you do penance towards me instead of your husband VishNu?”

Lakshmi Devi replied,” VishNu has cursed me to be born as a mare. I will be rid of the curse only after I bear a son as great as VishNu. But he did not tell me how I am supposed to conceive the son. I did not ask him about it either.

I know that the husband is the God for every married woman but you are the God of my husband. Therefore I meditated on you and did my penance towards you”.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

21. தேவகிரி

முருகனுடன் நான்முகன், தேவேந்திரன்,
திருமால்,தேவர்கள் சென்றனர் தெற்கே.


ஆதவன் மறையும் நேரத்தில் சென்று
அடைந்தனர் தேவகிரியை அவர்கள்;


“தாரகனை அழித்து தேவர்கள் துயரம்
வேரறுத்த உன்னை வழிபட வேண்டும்.


எழுந்தருள்வாய் தேவகிரியின் மீது!
விழுந்து வணங்கும் பேறு தருவாய்!”


தேவத்தச்சனுக்கு ஆணை இட்டனர்,
“தேவர்கள் தங்க நகர் அமைப்பாய்!”


அழகிய நகரம் எழுந்தது அங்கே!
அழகன் முருகனுக்குப் பொற்கோவில்.


மணிகள் இழைத்த அரியணை ஒன்றும்
கணப் பொழுதில் அங்கே தயார் ஆகின.


முருகனும் தேவர்களும் புகுந்தனர் – மனம்
விரும்பும்படி அமைந்த கோவிலினுள்.


தனி வலிவுடைய குமரனை நீராட்டப்
புனித கங்கை நீர் அங்கே வர வேண்டுமே!


மனத்தால் நினைத்ததும் தோன்றின
கணத்தில் அங்கே புனித கங்கை நீர்,


அணிகலன்கள், ஆடைகள், மலர்கள்,
மணிமாலைகள், வாசனை திரவியங்கள்!


குறைவற நடந்தது புனித நீராட்டு – மன
நிறைவுற்று மகிழ்ந்தனர் குழுமி இருந்தோர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#21. DEVA GIRI.


Murugan was accompanied by Brahma, VishNu, Indran and the other Devas. They went towards south and reached Deva Giri at sunset.


The Devas spoke to Murugan, “You have rid us of the asuras TArakan. “Please allow us to worship you, here on this Deva Giri!” The divine carpenter was ordered to create city for the Devas and a temple for Murugan. A beautiful city arose there in no time.


There a temple was made of Gold for Murugan. A throne studded with precious gems was set in the temple for Murugan. They all entered the temple. Murugan was made to sit on the throne.


They needed water from Ganges for the abhishekham. Even as they thought of Ganges, her water appeared there. Rich ornaments, silks, flowers, garlands and incenses also appeared there. Murugan was worshipped duly and everyone felt happy to be the present there and partake in the ritual and the worship.


 
SRI VENKATESA PURAANAM

23b. சண்டை

அமைதியை விரும்பியது ஸ்ரீனிவாசன் மட்டுமே!
ஆகாயக் கோட்டை காட்டினான் தொண்டைமான்!


நாரணனின் சங்கும், சக்கரமும் கிடைத்ததும்
நாராயாணபுர சிங்காதனம் கிடைத்தது போல!


சமரசத்துக்குத் தயாராக இல்லை அவன்;
சமருக்குத் தயார் ஆனான் படை திரட்டி.


சிற்றப்பன் போருக்குத் தயார் ஆனதால்,
சிறப்பாகத் தயார் ஆனான் வசுதானனும்.


செய்தி அனுப்பினான் ஸ்ரீநிவாசனுக்கு;
செய்தி வந்ததும் சென்றான் களத்துக்கு.


“உயிர் சேதம் சம்மதமா?” என்றாள் பத்மாவதி
“உயிர் சேதம் தவிர்க்கவே செல்கிறேன் நான்!”


நிலமை தலைகீழாக இருந்தது அங்கு!
நிகழவில்லை சமரசம் நினைத்தபடி!


சொன்னபடித் தலைமை தாங்கினான்
மன்னன் வசுதானன் படைக்கு ஸ்ரீநிவாசன்


யுத்தத்தில் உயிர் சேதத்தைத் தவிர்க்க
யுக்தி ஒன்று செய்தான் யுத்தகளத்தில்.


தொண்டைமான் முன் ஸ்ரீநிவாசன் செல்லத்
தொண்டைமான் எய்தான் மார்பில் ஓர் அம்பு


மயங்கிச் சாய்ந்து விட்டான் ரதத்திலேயே!
தயங்கிச் சண்டையை நிறுத்தினான் எதிரி!


ஆசிரமத்தை எட்டியது போர்ச் செய்தி
“பேசி நிறுத்துவேன் போரை!” என்று கூறி


முனிவருடன் கிளம்பினாள் பத்மாவதி
தனி ஒருவளாகப் போரை நிறுத்துவதற்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#23b. The War


Only SreenivAsan wished for peace but both ThondaimAn and VasudAnan got ready for a battle. ThondaimAn imagined that he will conquer in the battle with the help of the conch and the sudarshan given to him by SreenivAsan.


VasudAnan sent a message to SreenivAsan to keep his promise and lead his army in the battle. SreenivAsan left for the battle field. PadmAvati asked him,”Do you want the blood shed between an uncle and his nephew? SreenivAsan replied to her, “I am going there to stop the blood shed by any means – fair or foul”


The battle started. SrinivAsan wanted to stop it and decided to play a trick. He went in his chariot in front of ThoNdaimAn and fainted on the chariot when struck by an arrow shot by his enemy.


ThoNdaimAn got confused and stopped the war immediately. The news that SreenivAsan had got hit by an arrow shot by ThoNdaimAn and fainted on his chariot reached the Aashram of Sage Agasthya. Padmaavati got wild on hearing the news and rushed to the battle field to stop the war at any cost.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#18b. பெண் குதிரை (2)

“பேதம் இல்லை எங்கள் இருவரிடையே – ஆனால்
போதப்படும் இந்த உண்மை ஞானவான்களுக்கே.

ஸ்தூல உருவங்களில் உள்ளது பேதம் – ஆயினும்
ஸ்வரூபத்தில் இல்லை எந்த விதமான பேதமும்.


மாயையால் மறைப்பாள் தேவி தூய அறிவினை;
மாயை விலகியவுடன் துலங்கிடும் தூய அறிவு.

ஞான விலாசம் உண்டாகும் தேவியின் அருளால்;
ஞானம் பெற்றவர்களைக் காண்பது மிக அரிதே!”என

“எங்கனம் தெரிந்தது எனக்கு இந்த உண்மை?
தங்களிடம் பக்தி செய்தான் விஷ்ணு பிரான்.

‘அதிவிரைவில் மகிழ்வடையும் சிவபெருமானே
வசிக்கின்றார் பிராணனாக ஜீவன்களில்!’ என்றான்

‘கலந்துள்ளேன் நான் அன்பால் அவனுடன்!
கலந்துள்ளான் அவன் அன்பால் என்னுடன்!

பேதம் இல்லை எங்கள் இருவரிடையே!’ என்று
போதப் படுத்தினார் விஷ்ணு பிரான் எனக்கு!”என

“வியக்கின்றேன் உன் ஞானத்தை, பக்தியை!
விசனம் வேண்டாம் புத்திரப் பேறு குறித்து.

வருவான் நாரணன் ஆண் குதிரையாக மாறி;
தருவான் நீ விரும்பும் அழகியதொரு மகனை.

பெறுவன் உன் மகன் ஏகவீரன் என்னும் பெயர்;
பெறுவான் புகழ், பெருமை, ஆதிக்கம் உலகில்.

தழைக்கும் ஹைஹய வம்சம் முன் போலவே;
வழக்கம் போல நீ வாழலாம் வைகுந்தத்தில்!

வணங்கி வழிபடு சக்தி தேவியை மனமார!
வாய்க்கும் சித்த சுத்தி காமம், மதம் நீங்கி”என

துதித்தாள் தேவியின் திருவடிகளை – எதிர்
பார்த்திருந்தாள் லக்ஷ்மி தன் கணவன் வரவை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#18b. The mare (2)

Siva continued telling Lakshmi about himself and VishNu.” There is no difference between me and Vishnu. But only those who have wisdom know this truth. There are differences in our external appearnces but there is no difference in our real swaroopam.

Devi covers true intellect by her MAyA and people fail to see our unity in diversity. Once wisdom dawns overcoming Devi’s MAyA, this truth will reveal itself. Devi blesses a person with JnAnam and removes the ignorance she has created by her MAyA”

Lakshmi spoke to Siva now, “Do you wonder how I came to know about this truth? My husband VishNu is your staunch devotee. He told me once that ‘Siva who can be pleased very easily is the one who resides in all the jeevas (living things) as their prANa shakti or Life’s Force. I adore and worship him.
He does the same to me. There is no difference between me and Siva!’ Thus he made understand this truth.”

Siva was impressed by her knowledge and wisdom and told Lakshmi now,” I am impressed by your wisdom and knowledge. Please do not worry about getting a good son equal to VishNu in every respect.

VishNu will come to you as a male horse to fulfil your wish to get a great son. You will get a great son named Eka Veeran. He will become famous, powerful and great in his own rights.

Haihaya vamsam will flourish as before. You can return to Vaikuntham as before. Worship Devi. She is the one who can fulfil all your desires. She will remove all the defects related to mind and make the mind pure and blemish-less.”

Lakshmi worshipped Devi and was eagerly waiting for the arrival of her husband VishNu in the form of a male horse, to enable her to get sApa nivAraNam.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

22a. தாரகன் மனைவியர்

ஆறுமுகனின் வேற்படை குன்றைப் பிளந்து
ஆனைமுக அசுரனைக் கொன்ற செய்தியை,


தாரகன் மனைவி செளரி அறிந்தனள்;
தாளாத் துயருடன் களம் சென்றனள்.


“ஆழிப் படையை அளித்த திருமால்
ஊழ்வினை ஒழிந்தது என மகிழ்வாரோ?


சிவன் அளித்த மேன்மைகள் எல்லாம்
அவன் மகனால் பொய்யாகி விட்டனவே!


அரியணையில் அமர்ந்து அவுணர்கள் சூழ
அரிய ஆட்சி நீயும் புரிந்து வந்தாயே!


தருவது போலத் தந்த மேன்மைகளைச் சிவன்
ஒரு சிறுவனை விட்டு அழித்த சூழ்ச்சி என்ன?”


அசுரபுரி சென்றிருந்த தாரகனின் மகன்
அசுரேந்திரன் திரும்பினான் மாயாபுரி;


தந்தைக்கு ஈமச் சடங்குகள் செய்துவிட்டு
சந்தனக் கட்டைகளில் எரி ஊட்டினான்.


தடுத்தும் கேளாமல் தாரகன் மனைவியர்
விடுத்தனர் உயிரை உடன் கட்டை ஏறி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#22a. ASURENDRAN.


The news of the death of TArakan at the hands of Murugan reached his wife Souri Devi. She was overcome with deep sorrow. She went to the battle field and lamented over her husband’s dead body.


“VishNu who had surrendered his Sudharshan to you would be rejoicing now. Siva gave you many boons but they have been shattered by his own son! You used to sit on the throne surrounded by the asuras. Siva cheated you by giving the boons and taking them away through his own son.”


At the time of the war, Asurendran – TArakan’s son – was visiting Asurapuri of Simha mukhan. He learned the demise of his father and returned to MAyApuri in great haste.


He performed the last rites of his father and cremated him on a pile of sandal wood. The queens of TArakan could not be deterred from performing sati. By sitting on the burning pyre with their dead husband, they all willingly gave up their own lives!


 
SRI VENKATESA PURAANAM

23c. சமரசம்

“அடிபட்டு மயங்கி விட்டான் ஸ்ரீநிவாசன்!”
துடித்து விட்டாள் பத்மாவதி செய்தி கேட்டு.

கதறி அழுதபடி ஓடி வந்தாள் அவனிடம்,
பதறிய அவன் கேட்டான், “ஏன் வந்தாய்?”

“சமரசம் பேச வந்தார் தேவியார் – தாங்கள்
சமரில் அடிபட்டது கேட்டு துடித்து விட்டார்.”

அகத்தியர் இடைமறித்துக் கூறினார் – ஆனால்
“அதற்கு இடமே இல்லை!” என்றான் அவன்.

“இருவரையும் வரவழையுங்கள் என்னிடம்;
இருவருக்கும் செய்கிறேன் நான் சமரசம்”

அகத்தியர் அழைத்து வந்தார் இருவரையும்;
அகத்தீ கண்களில் வெளிவந்தது பத்மாவதிக்கு!

“அழிவதென முடிவு செய்து விட்டீர்களா?
பழி பாவத்துக்கும் அஞ்சுவது இல்லையா?”

“இளவரசுப் பட்டம் காட்டினார் என் அண்ணா!
இது உனக்கு நினைவு இல்லையா பெண்ணே ?”

“அரசனாக்கினார் என்னை ஸ்ரீநிவாசனே!
தர வேண்டாமா நாம் அதற்கு மதிப்பு ?”

“சமரஸத்துக்கு ஏற்பாடு செய்வார் இவர்;
சம்மதமா இருவருக்கும் கூறுங்கள்!” என

“தந்தைக்குப் பின் அவர் இடத்தில் நாங்கள்
எந்தையாகக் கருதுவது இவரைத் தானே!”

“நாட்டை இரு சம பாகங்கள் ஆக்குவோம்
நாட்டை ஆள வேண்டும் இருவரும் நட்புடன்!’

இருவரும் ஏற்றனர் இந்த முடிவினை;
இரண்டாக்கப் பட்டது அந்த ராஜ்ஜியம்.

தொண்டை நாடு தொண்டைமானுக்கு!
சோழ நாடு கிடைத்தது வசுதானனுக்கு!

நிலைமையைச் சீர் செய்து திரும்பினர்
நிம்மதியாக அகத்தியருடன் அவர்கள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#23c. The compromise


“SreenivAsan had fainted on his chariot in the battle field.” This news was enough to shock PadmAvati. She ran to his chariot. He came round and asked her, “Why are you here in the battle field?”

Sage Agasthya intervened and told SrinivAsan, “PadmAvati came to make the two warring persons come to a compromise.” SrinivAsan told them, “There is no chance for compromise now. They both want a war.” PadmAvati told him,”Bring those two warring people to me. I will make them come to a compromise.” Sage Agasthya brought them to her.

PadmAvati was so angry with them that her eyes spat fire! “Have you decided to destroy each other?’ she demanded. ThoNdaimaan said, “Do you remember that my brother had crowned me as the Crown Prince when he was alive?” VasudAnan told her, “SrinivAsan himself has crowned me as the king!”

PamAvati told them sternly , “My husband will offer a solution to this if you will abide by his wishes”. SrinivAsan suggested, “We can divide the country into two halves. Each of you can rule a half without enmity.”

Both the persons agreed to this. The country was divided into two. ThoNdimaan got the ThoNdai NAdu and VasudAna got the Chozha NAdu. Having successfully averted a war and the blood shed, Srinivaasan returned to the aashram along with PadmAvati and sage Aagasthya.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#19a. ஆண் குதிரை

சிவபெருமான் வரம் அளித்தார் லக்ஷ்மி தேவிக்கு;
சித்ரரூபனை அனுப்பினார் விஷ்ணு மூர்த்தியிடம்.


செல்வாய் வைகுந்த வாசனிடம் இப்போதே!
சொல்வாய் இந்தத் தூதுமொழிகளை அங்கு.


‘துயரத்தில் மூழ்கி உள்ளாள் லக்ஷ்மி தேவி.
துயரம் தீர்த்து அழைத்துச் செல் உன்னுடன்!’


வந்த காரியத்தை வினவினான் விஷ்ணு பிரான்;
“வந்த காரியம் உம் சொந்தக் காரியமே ஸ்வாமி!


வாழ வேண்டியவள் லக்ஷ்மி வக்ஷஸ்தலத்தில்;
வாடுகிறாள் பூமியில் தனியாக ஒரு வனத்தில்.


போக வாழ்வு வாழ வேண்டியவள் லக்ஷ்மி;
சோக வாழ்வு வாழ்கின்றாள் ஒரு வனத்தில்.


அனைவருக்கும் சௌபாக்கியம் தரும் தேவி
அனுபவிக்கலாமா மனவேதனைகளைக் கூறும்!


பத்தினியின் உருவத்துக்கு ஏற்ற உருவவெடுத்து
புத்திரனை அளித்துச் சாபம் தீர்ப்பீர்” என்றான்.


திரும்பினான் சிவலோகம் தூதுவன் சித்ரரூபன்;
பெருகியது காமம் விஷ்ணுவுக்கு தேவியருளால்.


விடுத்தான் வைகுண்டத்தை விஷ்ணு மூர்த்தி;
எடுத்தான் அழகிய ஆண் குதிரையின் வடிவம்!


சென்றான் பெண் குதிரை இருந்த வனத்துக்கு;
நின்றாள் லக்ஷ்மி தன் கணவனை எதிர் நோக்கி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#19a. The male horse


Siva blessed Lakhmi Devi. He sent Chitraroopan as his messenger to VishNu. “Go to Vaikuntha VAsan and convey this messages as told by me.” Lakshmi Devi is immersed in a life of loneliness and sorrow on the earth. Put an end to her sufferings and take her back with you to Vaikuntham.”


Chitraroopan went to VishNu who asked him what was his business there. Chitra roopan replied, “I have come here on your business lord! Lakshmi Devi’s rightful place is your vaksha sthalam (chest region). But now she is living in a forest on the earth all by herself – in the form of a mare!


Lakshmi Devi deservs to live a life of pleasures. But now she is living in a forest as a mare. Lakshmi bestows good life and riches on everyone else. Can we let her suffer thus?


Please assume a form to suit the present form of your wife. Bless her with a son and help her to get rid of our curse and return to Vaikuntham” Chitra roopan returned to KailAsam and Siva after conveying this message.


By Devi’s grace VishNu became lovelorn and yearned to become intimate with his wife Lakhmi Devi. He assumed the form a strong male horse and went to the forest where Lakshmi Devi was awaiting his arrival as a mare.





 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

22b. அசுரேந்திரன்

வருந்தினான் அசுரேந்திரன் மனம் வாடி,
அருமைத் தாய் தந்தையரின் மறைவால்;


தன் சுற்றத்துடன் விரைந்து சென்றான்,
தென் கடலில் உள்ள வீரமகேந்திரபுரி!


கதறி அழுதான் சூரனைக் கண்டதும்!
பதறிப் பற்றினான் சூரனின் கால்களை!


“வருந்தாதே மகனே! நடந்ததைக் கூறு!”
பெருவீரன் அவனை ஆசுவாசப் படுத்த,


“சிவன் மகன் வந்தான் பூதப் படைகளோடு!
அவன் கொன்றான் அருமைத் தந்தையாரை.


கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்தான்,
பிரபஞ்சம் நடுங்கும் பேரொலியுடன்!”


“கிரௌஞ்சத்துடன் தாரகனை வெல்லுவதா?
பிரமை பிடித்துவிட்டதா உனக்கு மகனே?”


மேகம் போல கர்ஜித்தான் சூரபத்மன்;
நாகம் போலச் சீறிச் சினந்தான் அவன்.


மனத்தில் பொங்கியது கொடிய சினத்தீ!
கணத்தில் தோன்றின கண்களில் தீப்பொறி.


புகை வெளிவந்தது மூச்சுக் காற்றில்;
பகையால் கடித்தான் தன் உதடுகளை.


உதடுகள் துடிக்க, கண்ணீர் பெருக
நடுங்கினான் இளவல் மேல் அன்பால்!


“இளவலை அழித்த கந்தனை அழிப்பேன்!
களம் புகத் தயார் செய்யுங்கள்” என்றான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#22b. SOORAPADMAN AND ASURENDRAN.


Asurendran was immersed in grief. He could not digest the sudden death of his parents. He rushed to meet Soorapadman in Veera Mahendra Puri, in the Southern Sea. He broke down at the sight of Soorapadman and cried his heart out holding on to Soorapadman’s feet tightly.


“Do not cry me dear son! Tell me what has upset you thus?” Sooparadman asked and Asurendrn replied , “Siva’s son came with an army of GaNas. He has killed my father and my mother committed Sati. The son of Siva had split Krounja Giri also with a deafening noise.”


“Surely you must be off your mind! Who could ever hurt TArakan and who could split the invincible Krounja giri?” Sooran became very angry when he realized that these statements were perfectly true!


His red eyes spat out sparks of fire. He let out fumes through his nose. He bit his lips in despair. Tears flowed from his eyes and he shivered like a tree in a strong wind.


“I will avenge the death of my younger brother! Let the army prepare for the battle immediately!” Soorapadman roared in anger.


 
SRI VENKATESA PURAANAM

24a. ஆலயம்

தொண்டைமான் காண வந்தான் ஸ்ரீநிவாசனை;
கொண்டு வந்தான் ஏராளமான பரிசுகளை.


” ஒன்றும் குறை இல்லை இந்த ஆசிரமத்தில்;
என்ன செய்வேன் பரிசுகளை வைத்துக் கொண்டு?”


“எண்ணியிருந்தேன் அண்ணன் மருமகன் என்று!
உண்மை ஸ்வரூபத்தை உணர்ந்தேன் இன்று!”


“அன்னிய இடத்தில் எத்தனை காலம்?
பொன்னும் மணியும் தர வேண்டாம்


தங்குமிடம் ஒன்று அமைத்துத் தரலாமே;
எங்களுக்கு அது தனியிடம் என்று ஆகுமே!”


“எங்கே எப்படி அமைக்க வேண்டும்;
தாங்கள் கோடி காட்டினாலே போதும்!”


மாலையில் சென்றனர் மீண்டும் புற்றுக்கு.
“ஆலயம் நிர்மாணிப்பாய் இந்த இடத்தில்!


புற்று உள்ள இடத்தில் வேண்டும் கர்ப்பக்கிரகம்
சுற்றிலும் எழுப்ப வேண்டும் மதில் சுவர்களை.


வைகுந்த வாசல் வேண்டும் இடையில்;
இரண்டாம் பிராகாரத்தில் வேண்டியவை


மடைப் பள்ளியும், கல்யாண மண்டபமும்,
மணக்கும் திரவியசாலையும், பள்ளி அறையும்.


இருக்க வேண்டும் மூன்றாவது பிராகாரத்தில்
உக்கிராண அறைகள், ஆஸ்தான மண்டபங்கள்.


வேண்டும் அழகிய ஏழு வாயில்கள்;
வேண்டும் அழகிய இரு கோபுரங்கள்;


வேண்டும் ஒரு கோபுரம் நுழை வாயிலில்;
வேண்டும் ஒரு கோபுரம் பிராகார வாயிலில்;


வேண்டும் பலி பீடமும், துவஜ ஸ்தம்பமும்!”
தொண்டைமான் நினைவில் கொண்டான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#24a. The Temple


ThoNdaimAn visited SrinivAsan . He brought many precious gifts with him. SrinivAsan told him, “I do not lack anything here. What will I do with these rich gifts?’


ThoNdaimAn told him, “I was under the impression that you are my brother’s son in law. But now I know who you really are!”
“If you build me a temple instead of showering me with such rich gifts, I will have a place of my own to live in!” SrinivAsan told him. ThoNdaimAn told him, “Just tell me how you want it to be built and it will be ready very soon.”

In the evening they went to SeshAchalam. SrinivAsan showed him the anthill and gave his specifications for building the temple.
“The temple must be built here. The garbba graha should be above this anthill. It should be surrounded by walls, Vaikuntha vaasal must be in between these two. In the second prAkAra I need the kitchen, the KalyANa maNdapam, Sayana gruham and a place for storing the incenses.

The third prAkAram should contain the ugrANa rooms and AasthAna maNdapams. The temple must have seven magnificent entrances. It must have two gopurams. One should be above the entrance to the temple and the other at the entrance of the prAkAras. In addition we must have the bali peetam and the dhwaja sthambam”.


ThoNdaimAn made a note of all these requirements carefully.





 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#19b. சங்கமம்

மோக லீலைக்குத் தயாரானது ஆண் குதிரை;
மோக லீலையை விரும்பியது பெண் குதிரை.


கருத்தொருமித்தன காம வேகத்தினால்;
கலந்து மயங்கின; காமத்தில் முயங்கின!


புத்திரப்பேறு உண்டானது பெண் குதிரைக்கு;
“புத்திரனை விட்டுத் திரும்புவோம் வைகுந்தம்!”


அழைத்தான் லக்ஷ்மியைத் தன்னுடன் விஷ்ணு;
விழையவில்லை லக்ஷ்மி குழவியைப் பிரிந்திட.


சுய உருவம் திரும்பி விட்டது இருவருக்கும்;
தூய விமானம் ஒன்று வந்தது விண்ணிலிருந்து.


“குறை ஒன்றும் வராது நம் பிள்ளைக்கு;
நிறைவேறும் பல அற்புதங்கள் இவனால்.


நூறாண்டு காலமாகத் தவம் செய்கின்றான்
துர்வசு என்னும் மன்னன் யயாதியின் குமாரன்!


வரவழைக்கின்றேன் அவனை இந்த இடத்துக்கு;
அரவணைத்து வளர்ப்பான் தன் சொந்த மகனாக!”


சமாதானம் செய்தான் லக்ஷ்மியை விஷ்ணு;
விமானத்தில் அழைத்து சென்றான் லக்ஷ்மியை.


திரும்பினர் வைகுந்தம் லக்ஷ்மியும், விஷ்ணுவும் – சிசு
விருப்புடன் காத்திருந்தது தன் வளர்ப்புத் தந்தைக்காக.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#19b. The Union!


The male horse was ready for the union. The mare was yearning for the union. They were happy to become two bodies and one soul.
The female horse conceived and delivered a son as great as VishNu himself. VishNu wanted to return to Vaikuntham leaving behind the new born baby but Lakshmi would not agree to part with the child.

Lakshmi and VishNu regained their original glorious forms. A vimAnam came down and landed to transport them back to Vaikuntham. Lakshmi Devi was still hesitating to go back to Vaikuntham leaving behind her new born son.


VishNu told her,”No harm can befall our son. He will perform many reat wonders and achieve many great things on earth. Turvasu – the son of YayAti – has been doing penance wishing a good son for over one hundred years. I will make him come here. He will bring up our son as his very own.”


Lakshmi Devi got consoled and agreed to return to Vaikuntham with VishNu on the vimAnam. The new born child lay there all alone on the ground eagerly awaiting the arrival of the king Turvasu who would adopt him and bring him up as his own son.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

22c. அமைச்சர் அறிவுரை

மதி அமைச்சன் அமோகன் கண்டான்,
கதி கலங்கிய அரசன் சூரபத்மனை.


“நன்றே பகர்கின்றேன் கொற்றவா – உன்
நன்மை கருதியே புகலுகின்றேன் இதை.


நகரை முற்றுகை இட்டபோதிலும் – நாம்
மிகக் கவனமாகவே களம் புக வேண்டும்.


சினத்துடன் படை எடுத்துச் சென்றால்,
மனத்தில் நினைப்பது நடந்து விடாது.


ஆற்றல் அறிய வேண்டும் பகைவனது,
ஒற்றர்கள் உதவியால் சாத்தியமாகும்.


ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவன் நீ!
முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன்;


சிறுவனை எதிர்த்துச் செல்ல வேண்டுமா நீயே?
சிறுவனின் ஆற்றல் அறிந்து கொள்ளுவாய்!


ஆராய்ந்து அமைச்சர்களுடன் முடிவு எடு!
வீராதி வீரா! விவேகத்துடன் செயல்படு!”


சொலல் வல்ல அமைச்சனின் சொற்கள்
செவி வழிச் சென்று மதியில் பதிந்தன.


சினத்தைக் கைவிட்டுச் சிலரை விளித்தான்;
மனத்தைத் திறந்து பேசினான் அவர்களுடன்;


ஆறுமுகனின் இயல்பினையும், படையின்
ஆற்றலையும் கண்டறியச் சொன்னான்.


அரசனின் ஆணையை சிரமேற்கொண்டு
விரைந்து சென்றனர் திறமிகு ஒற்றர்கள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#22c. THE MINISTER’S ADVICE.


Soorapadman’s minister named Amogan was his well-wisher. He spoke to Sooran thus, “Oh King! I wish for your welfare. So I am taking the liberty of speaking out these words to you! Even if we are under a siege, we must not rush out blindly to the battle field. Since mere anger does not help us to win a war.


We must first find out the strength of our enemy. Our spies can take care of this. You are the unparalleled king and the leader of the Devas. Why should you go to the war front in person?


Send you spies and tell them to find out the strength and weakness of the Son of Siva and his army of GaNas. You must consult all the other ministers also before making any important decision. Discretion is the better part of valour.”


Soorapadman understood the truth in this advice. He ordered his ablest spies to find out everything about Murugan and his army. The spies left immediately as instructed by their king.


 
SRI VENKATESA PURAANAM

24b. ரங்கதாஸன்

தோட்டத்தில் இருந்தது ஒரு கிணறு,
“தோண்டியவன் நீயே முற்பிறப்பில்!”


வைகாநஸன் ஒரு முனிவர் சோழநாட்டில்;
வைத்தார் தணியாத ஆசையை மனத்தில்.


வைகுந்தனைக் கிருஷ்ணணாகக் காணக்
கைக்கொண்டார் கடுமையான தவநெறி.


தவம் செய்தார் கனி, கிழங்குகள் உண்டு!
தவம் செய்தார் தழை, சருகுகள் உண்டு!


தவம் செய்தார் உணவே உண்ணாமல்;
தவம் செய்தார் காற்றை சுவாசித்து!


கண் எதிரே தோன்றினான் வைகுந்தன்
“கண்ணனாகக் காட்சி தர வேண்டும்” என,


“ஸ்ரீநிவாசனை ஆராதித்து வந்தால்
இனிதே நிறைவேறும் உம் விருப்பம்!”


கால் நடையாகச் சென்றார் சேஷாசலம்;
கண்டார் வழியில் பக்தன் ரங்கதாஸனை.


உடன் நடந்தான் முனிவருடன் அவன்;
“கேட்டான் எதற்கு சேஷாசலத்துக்கு?”

“கிருஷ்ணாவதாரத்தில் செய்தான் லீலைகள்;
கிருஷ்ணனைக் காணக் கடும் தவம் செய்தேன்.


சேஷாசலம் ஸ்ரீநிவாசனை ஆராதித்தால்
பேஷாக நிறைவேறுமாம் என் கோரிக்கை”


முனிவருடன் நடப்பது நல்லதாகி விட்டது!
இனிக்கும் கண்ணனைத் தரிசிக்கலாமே!


“அனாதை என்னைப் பணியாளாக எற்பீர்.
அநேக சேவைகள் செய்து உதவுவேன்!”


சேஷாசலத்தைச் அடைத்தனர் இருவரும்
வாசஸ்தலம் ஸ்வாமி பூஷ்கரிணீ அருகே.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#24b. Ranga DAsan

SrinvAsan showed a well in the garden to ThoNdaimAn and said, “You are the one who dug this well in your previous birth.”


VaigAnasan was a rushi living in the Chozha kingdom. His only desire was to get the dharshan of Sri Krishna. He performed very severe penance. He did penance, eating only the fruits and roots. Later on he switched over to the fresh leaves and then dry leaves. Then he stopped eating and was just breathing only air.


VishNu appeared to him in person. The rushi requested for a dharshan of Sri Krishna. VishNu told him, “Go to SeshAchalam and do AarAdhana to SrinivAsan. You will get the dharshan of Krishna!”
The sage started walking towards SeshAchalam. On the way he met another devote of VishNu called Ranaga DAsan. He too started walking along with the sage.

Ranga DAsan wanted to know the purpose of the rushi’s visiting SeshAchalam. The sage VaigAnasan told him, “VishNu performed many miracles as Krishna. My sincere desire is to get his dharshan. I was told to go to SeshAchalam and pray to SrinivAsan who will fulfil my desire.”


Ranga DAsan thought to himself, ‘It is good that I decided to walk with this sage. I too can have a dharshan of Krishna.’ He requested the sage,”I have no one to call as mine. Please accept me as your servant. I shall serve you to the best of my ability”


The sage agreed. They reached SeshAchalam and lived near Swami PushkariNi.




 
DEVI BHAAGAVATM - SKANDA 6

6# 20. ஏக வீரன்

மீண்டனர் திருமாலும், திருமகளும்,
மீண்டும் தம் வைகுண்ட லோகத்துக்கு.


வித்யாதரன் சம்பகன் வந்தான் விமானத்தில்;
உத்யான வனத்தில் மனைவியோடு சல்லாபிக்க.


லக்ஷ்மியின் மகனைக் கண்டது வாரி எடுத்து
லக்ஷணமான மனைவிக்கு அளித்தான் பரிசாக.


பறந்து சென்றனர் விமானத்தில் அவர்கள்
பிறந்த குழந்தையையும் எடுத்துக் கொண்டு.


“இந்திரன் அறிவான் இது யார் குழந்தை என்று!”
இந்திரனிடம் சென்றனர் இருவரும் நேராக.


“காளிந்தி, தமஸா நதிகள் சங்கமிக்கும் இடத்தில்
கண்டெடுத்தோம் இந்த அழகிய குழந்தையை யாம்!”


“குதிரை வடிவெடுத்த மாலுக்கும், லக்ஷ்மிக்கும்
புதிதாகப் பிறந்த பாலகன் ஆவான் இவன்.


தவம் செய்கின்றான் யயாதியின் மகன் துர்வசு;
தவம் பலிக்க விட்டுச் சென்றனர் குழந்தையை.


கிடத்தி விடுங்கள் குழந்தையை அதே இடத்தில்;
கிடைக்கட்டும் துர்வசுவுக்குத் தவப் பயனாக!”


தரிசனம் தந்தார் திருமால் துர்வசுவுக்கு!
“தவத்தால் மகிழ்ந்தேன்; வரம் தந்தேன்;


காளிந்தி, தமஸா நதிகளின் சங்கமத்தில்
காண்பாய் லக்ஷ்மியின் திருக் குமாரனை!


அளித்தோம் உனக்குத் தவப் பயனாக;
வளர்ப்பாய் அவனை அன்புடன் மகனாக!”


விரைந்து சென்றான் அரசன் சங்கமத்துக்கு;
உரைத்தபடியே கண்டான் அழகிய மகனை.


வாரி அணைத்தான் திருமகள் திருமகனை!
வளர்த்தான் ஏக வீரன் என்னும் பெயரிட்டு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#20. Eka Veeran


Lakshmi and VishNu returned to Vaikuntham. A VidhyAdaran came in a vimAnam with his wife to indulge in an amorous play on the earth.

He saw the baby left behind by Lakshmi and VishNu. He became very happy at the beauty and tejas of the child. He took it up and presented it to his wife lovingly.

They were curious to know whose child it was. Since Indra knew everything happening on the earth, they went straight to him and asked him about the parents of the child.


Indra said, “This is the son born to Lakshmi and VishNu when they had assumed the forms of two horses. They had left behind the child as a gift to Turvasu – the son of King YayAti- who has been doing severe penance seeking for a worthy son. Please take back the child and leave it where you had found him.”


The child was taken back and left where it was found. VishNu appeared in front of Turvasu and blessed him saying,

“I am pleased with your penance. I wish to give you the worthy son you wanted. Go to the sangamam of KAliNdi and TamasA rivers. You will find there the son of Lakshmi Devi. Adopt him and bring him up as your own dear son.”

Turvasu went to that place and saw the child. He adopted him and named him as Eka Veeran. He brought him up with all the royal privileges as his own son.



 
KANDA PURAANAM - URPATTHIK KAANDAM

23. வழி நடை

தேவகிரியில் எழுந்தருளிய திருக்குமரன்
திவாகரன் உதித்ததும் வழி நடக்கலானான்.


சிவ பெருமானின் இடப் பாகத்தை அடைந்திடச்
சிவகாமி தொழுத திருக்கேதாரத்தைக் கண்டான்.


முக்கட்பிரானே உண்மைப் பரம்பொருள் என
மக்கட்குணர்த்திய திருக்காசி நகர் கண்டான்;


சிவன் எழுந்தருள வேண்டி நந்தி மலையாகிச்
சிவனை முடிமேல் தாங்கிய திருப்பருப்பதம்;


திருமாலும், தேவர்களும் சிவனை வழிபட்ட
திருவேங்கடம் என்னும் அழகிய திருமலை;


சிலந்தியும், பாம்பும், யானையும், கண்ணப்பரும்,
சிவகோசரியாரும், நக்கீரரும், கன்னியர்களும்,


விண்ணுலக வாழ்வைப் பெற்று மகிழ்ந்திட்ட
தென்கயிலை எனப் புகழ்பெற்ற திருக்காளத்தி;


செருக்கு மிகுந்தாடிய காளியை ஐயன் வென்ற
திரு ஆலங்காடு என்னும் அழகிய திருத்தலம்;


ஊழிக்காலத்திலும் கூட அழிவற்றதாகி நிற்கும்
பாழடைவே இல்லாத அழகிய காஞ்சி மாநகர்;


அடிமுடி இல்லாத சோதியாகிய சிவபிரான்
அடியவர்க்கு முக்தி தரும் திருவண்ணாமலை;


முதியவராகிச் சுந்தரரின் அடிமை ஓலை காட்டி
வதுவையைத் தடுத்த திருவெண்ணெய் நல்லூர்,


ஐந்தெழுத்தின் உண்மையை போதித்து அதனால்
ஐயமின்றி முக்தி தரும் திருத்தலம் விருத்தாசலம்;


இருமுனிவருக்காக பிரான் ஆனந்த கூத்தாடிய
திருத்தில்லை என்னும் சிதம்பரத்தையும் கண்டு;


அப்பனையும், அம்மையையும் வணங்கிப் பின்
அடைந்தான் அழகிய காவிரிநதிக் கரையினை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


1#23. THE LONG TRAVEL.


When the Sun rise on the next day, Murugan and his army started travelling. They first visited Thiruk KedAram where SivakAmi Devi worshipped Siva and became the left half of His body.


Murugan then visited KAsi which proves to the world that Siva is the most supreme God. He visited Thirup Paruppatham where Nandhi had become a mountain – in order to make Siva appear there.


He visited the Thiru Venkata giri where Devas and VishNu worshipped Siva. He visited KALahasti which had given mukthi to many of Siva’s sincere devotes including a spider, a snake and an elephant.


He visited the AalangAdu where Siva defeated KaLi in a dance competition and subdued her pride and ego. He visited KAnchi which will not destroyed even during the PraLaya. He visited the Thiru ANNAmalai where Siva became an immense jothi with neither a beginning nor an end.


He visited the Thiru VeNNainalloor where Siva stopped Sundarar’s wedding – by proving that he was Siva’s slave. He visited VirudhAchalam and finally Thillai Chithambaram. He worshipped Siva and Uma and reached the lovely bank of river Kaveri.


 
SRI VENKATESA PURAANAM

24c. நந்தவனம்

தினமும் ஆராதித்தனர் பகவானை – ரங்கன்
முனிவருக்குப் பணிவிடைகள் செய்தான்.


வனத்துக்குச் சென்று மலர் கொய்தவன்
நந்தவனம் ஒன்று அமைக்க விரும்பினான்.


முனிவரிடம் விண்ணப்பித்தான் ரங்கன்;
கனிவுடன் பாராட்டி முனிவரும் உதவினார்.


உருவானது அழகிய நந்தவனம் அங்கே!
இருவாக்ஷி, சம்பங்கி, ஜாதி, முல்லை


மல்லிகை, அலரி, மந்தாரை என்று
மலர்கள் பூத்துக் குலுங்கின விரைவில்.


நறுமணம் நிறைத்தது நாற்றிசைகளை;
நிறங்கள் மயக்கின காண்பவர் கண்களை!


விடியலில் நீராடி மலர் கொய்து வருவான்;
செடிகளுக்கு நீரூற்ற வெட்டுவித்தான் கிணறு.


மலர் பறிக்கச் சென்ற ரங்கதாசன் ஒருநாள்,
மனத்தை மயக்கும் காட்சியைக் கண்டான்!


திவ்விய தேஜசுடன் சென்றான் கந்தர்வன்,
திவ்விய அழகு வாய்ந்த தன் மனைவியுடன்.


ஆகாய மார்க்கமாகச் சென்றவர் கண்டனர்
ஆதி வராஹமூர்த்தி ஆலயத்தை அங்கே.


ஸ்வாமி பூஷ்கரிணீயில் புனித நீராடி
ஸ்வாமி தரிசனம் செய்ய விரும்பினர்.


கந்தர்வனும், மனைவியும் நீராடுவது கண்டு
வந்த வேலையை மறந்து போனான் ரங்கன்.


சௌந்தரியத்தில் மனம் பறி போனதால்
செல்லவில்லை மலர் கொய்து ஆசிரமம்.


கரையேறி, ஆலயத்தில் தொழுது, கண்ணுக்கு
மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#24c. Nanda vanam


The sage and Rangan took holy dip in the SwAmi PushkariNi and worshiped God everyday. Rangan did all the services required by the sage. He would go to the forest and gather the flowers fit for the worship. Later on he decided to grow his own garden and use the fresh flowers blooming there for worship.


His suggestion was accepted by the sage who also helped Rangan in planning the garden. Soon colorful flowers bloomed there , filling the whole area with their fragrance. Rangan would take bath early in the morning and gather the flowers for pooja. He soon dug a well to facilitate the watering of the plants in the garden.


One morning when he went to the PushkariNi, he saw a Ghandharva and his wife travel in the sky. They were divine, beautiful beings. Rangan stood transfixed by their beauty and charm.


The Gandharvas saw the temple of Aadi VarAha Moorthy and decided to worship the God before proceeding any further. They came down and bathed in the holy PushkariNi. Then they came out of the water, went to the temple, did pooja and went away from there.


Rangan stood mesmerized all the while and forgot that the sage would be waiting for the fresh flowers to complete his daily pooja.



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#21a. யசோவதி (1)

நன்கு வளர்த்தான் துர்வசு மகன் ஏகவீரனை!
அன்புடன் பயிற்றுவித்தான் ஆய கலைகளை.


முதுமை எய்திவிட்டான் துர்வசு இப்போது;
புதிய மன்னனாக ஆக்கினான் ஏகவீரனை.


ஒப்படைத்தான் ராஜ்ஜியத்தை ஏகவீரனிடம்,
அர்ப்பணித்தான் வாழ்க்கையைத் தவநெறிக்கு.


மைனாக மலையில் மனைவியோடு தவம் செய்து
மெய்யருளால் சென்றடைந்தான் சுவர்க்க லோகம்.


சுற்றித் திரிந்தான் அமைச்சரோடு ஏகவீரன்;
சற்றும் திகட்டவில்லை கங்கைக் கரையின் அழகு!


ரசித்தான் இணையற்ற இயற்கையின் எழில் கண்டு!
சிரித்தான் துள்ளிப் பாயும் புள்ளி மான்களை கண்டு!


பலநிறப் பறவைகள் பாடி மகிழ்வித்தன – கனிகளும்
மலர்களும், மரங்களும் கண்களைக் குளிர்வித்தன.


கண்டான் மலர்ந்து மணம் பரப்பும் தாமரையை;
கண்டான் அலமந்து அழும் அழகிய பெண்ணை.


தாமரை முகம், கருவண்டுக் கண்கள் இரண்டு,
ஆதவனின் நிறத்துடன், கருமணல் கூந்தலுடன்.


காரணம் கேட்டான் கண்ணீர் பெருக்குவதற்கு;
பூரண அபயம் உறுதி அளித்தான் அவளுக்கு.


“ரைப்பியர் என்று ஒரு அரசர் உள்ளார்;
ருக்குமரேகை அவரது அன்பு மனைவி;


கற்பில் சிறந்தவள், அழகில் சிறந்தவள்,
பெற்றிலள் தனக்கென ஒரு குழந்தையை.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


6#21a. Yasovati (1)


Turvasu brought up Ekaveeran well and taught him everything a king had to know. When he became old, he crowned Ekaveeran as the new king and went off with his wife for vana vAsam. He and his queen did penance on MainAka parvathm and they attained swargga lokam.


Ekaveeran roamed about accompanied by his ministers. He never got tired admiring the beauty of Nature. He loved to enjoye the scenic beauty of the Nature. He wondered at the leaping gazelles.


He enjoyed the songs of many birds forming an orchestra. The trees were laden with flowes and fruits. He saw the lotus flowers in full bloom. He also saw a pretty lotus faced girl shedding copious tears.


She had two black eyes like two buzzing bees and hair resembled the black sand in the river banks. He asked her the reason for her copious tears. He gave her abahayam (fearlessness) and promised to protect her and solve her problems.


The girl said,”There is a king named Raibyar. Rukmarekha is his virtuous queen. She is chaste and beautiful but does not have a child of her own!”



 

Latest ads

Back
Top