• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

SRI VENKATESA PURAANAM

29b. பத்மாவதியின் கனவு

“அழிவுக்கு ஆளாகாமல் வந்துள்ளோம்!
பழிச் செயலைச் செய்திருந்த போதும்!”


கூறினர் பூலோகத்தில் நடந்தவற்றை;
மாறினான் இந்திரன் அதைக் கேட்டதும்.


ஓடினான் பத்மஸரோவருக்கு உடனே;
தேடினான் தவம் செய்யும் பகவானை.


விடவில்லை பற்றிய பாதங்களை அவன்;
எழவில்லை மன்னித்தேன் என்னும் வரை!


“தவறு ஒன்றும் நிகழவில்லை இந்திரா!
தவத்தில் திருப்தி செய்தோம் லக்ஷ்மியை.


மனம் உருகி வருந்திடும் ஒருவருக்கு
மன்னிப்பு உண்டு நிச்சயம்!” என்றான்.


இந்திரன் திரும்பினான் தன் இந்திரலோகம்.
சொந்த சிருஷ்டியான தேவதையிடம் அவன்


“வன தேவதையாக இருந்து காப்பாற்றுவாய்
தினமும் தேடி வரும் பக்தர்களை!” என்றான்.


தவம் தொடர்ந்தது மீண்டும் நெடுங்காலம்;
தவத்துக்கு இரங்கி வரவே இல்லை லக்ஷ்மி.


இருபத்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன;
வருத்தத்தில் மூழ்கியிருந்தாள் பத்மாவதி.


‘லக்ஷ்மியுடனேயே தங்கி விட்டாரா அவர்?
லக்ஷ்மியைத் தேடித் திரிகின்றாரா அவர்?


கண்டு பிடிக்கவே முடியாதபடி எங்கோ
கண் காணாது ஒளிந்து இருக்கின்றாளா?’


இரவு முழுவதும் உறங்கவில்லை அவள்;
துறவுக் கோலத்தில் கனவினில் கண்டாள்


விடியற்காலை நேரத்தில் ஸ்ரீனிவாசனை!
இடி விழுந்தது போலாகிவிட்டது உள்ளம்!

வகுள மாலிகையிடம் கூறினாள் கனவை;
வெகுவாகத் துயருற்றாள் அதை எண்ணி!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#29b. The dream

The celestial maidens told Indra,”We escaped by the skin of our teeth from being cursed by God.” They related the events that happened on earth after they went there. Indra was quite shocked at his mistaking the identity of the young man SrinivAsan.


Indra went to the earth as fast as he could. He reached Padma Sarovar and looked for SrinivAsan there. He fell at his feet and would not let go until SrinivAsan explicitly stated that all Indra’s actions had been forgiven and forgotten.


“You have not anything wrong Indra! In fact your celestial maidens helped my in pleasing Lakshmi Devi with their sweet songs, dances and the garlands.”


Indra went back to his world happy. SrinivAsan commanded the maiden created by his sankalpam, “Become the guardian angel of this wood and protect all my devotees form all dangers!”


His penance was resumed but Lakshmi did not appear even then. Twenty two years had rolled by after he left PadmAvati and went looking for Lakshmi Devi.


PadmAvati did not understand what was going on ! ‘Had SrinivAsan settled down with Lakshmi Devi? Or was he still searching for her? Had Lakshmi gone into hiding such that no one could ever find her?’


PadmAvati spent a sleepless night tossing in her bed. In the early morning she had a dream. She saw SrinivAsan dressed as a sanyasin . She woke up terrified wondering whether it was just a dream or the truth. She related her dream to VaguLa MAlikA and spent the whole day worrying about that weird dream.




 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#28b. நாரதர் பெண் ஆனார்(2)

நாராயணன் தொடர்ந்து கூறினார் நாரதரிடம்,
நன்கு விவரித்தார் மாயையின் மகிமையை.

“உருவம் அற்றது காலத் தத்துவம் – எனினும்
உருவம் ஆகிவிடுகிறது அதுவே மாயைக்கு.

மாயை ஆக்கும் அறிஞனை தர்ம மூடனாக;
மாயை ஆக்கும் மூடனைத் தர்மம் அறிஞனாக.

முக்குண வடிவானவள் மாயை; அவள் சர்வக்ஞை;
எக்காலத்திலும், எவ்விடத்திலும் நிரம்பி இருப்பவள்.

வெல்ல முடியாதவள் அவள்; ஆதாரம் ஆனவள்;
செல்வோம் கருடன் மீது மாயையைக் காண்பதற்கு!”

அமர்ந்தோம் கருடன் மீது நாங்கள் இருவரும்;
அடைந்தோம் கன்யா குப்ஜம் என்னும் நகரை.

ஒலித்தன பறவைகளின் இன்னிசைப் பாடல்கள்;
ஒளிர்ந்தன தாமரை மலர்கள் நீர் தடாகத்தில்.

“நீராடிவிட்டுச் செல்வோம் நகர் காண்பதற்கு!”
நிர்மலமான நீரில் இறங்கினேன் நான் முதலில்.

வைத்தேன் வீணை, துளசி மாலையைக் கரையில்;
திகைத்தேன் நீரில் முங்கி விட்டு எழுந்தவுடன்!

அழகிய இளம் பெண்ணாக மாறி இருந்தேன்!
பழகிய ஆண் உடல் மறந்து போனது எனக்கு.

மறந்தேன் நாரணனையும், வீணையையும் கூட!
மரம் போல நின்றுவிட்டேன் வியப்பின் உச்சியில்.

வந்தான் மன்மத ரூபனாக ஒரு மன்னன்;
சொன்னான் காதல் மொழிகளை என்னிடம்.

“மணந்து கொண்டு துய்ப்போம் இன்பம் நாம்;
கணவனாக ஏற்றுக் கொள் என்னை!” என்றான்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#28b. NArada became a woman (2)

Lord NArAyaNan explained to me (NArada) the magnificence of the all powerful MAyA. “Time Factor is without a form or a figure. But Time Factor becomes the body or figure of MAyA. MAyA can make a wise person a fool and a foolish person very wise.

MAYA is composed of the three guNas. MAyA is omniscient, omnipresent and omnipotent. MAyA can not be conquered. MAyA supports everything else but does not need a support for itself. Let both of us pay a visit to MAyA.”

Lord NArAyaNan sat on his Garuda along with me and soon we reached a city called Kanya Kubjam. The sweet songs of the birds filled the air. lotus flowers bloomed in the crystal clear water of the ponds and lit up the whole place pleasingly.

NArAyaNan said, “Let us first take dip in the pond and then proceed to see the city”. I agreed and left my Mahati veena and Tulasi mAlA on the bank of the pond. I entered the pond first and took a dip. When I came out I had become a beautiful young woman.

I forgot that I had been a man once and that my Mahati veena and tulasi mAlA were on the bank of the pond. A handsome king came that way. His name was TAladwajan. He fell head over heels in love with me – since I had changed into a pretty young woman – at the very first sight.

He proposed to marry me – promising me everything any pretty young woman would desire to possess!”


 
KANDA PURANAM - ASURA KAANDAM

5h. மிருகண்டூ

திருமண வயதை அடைந்த மிருகண்டூ
திருமணம் புரிந்தார் மருத்துவதியை.

இல்லறம் நடந்தது ஒரு நல்லறமாக;
இல்லறத்தில் மலரவில்லை ஒரு மகவு.

புனித நகர் காசியினை அடைந்தார்;
புனித கங்கை நதியில் நீராடினார்.

மணிகர்ணிகை திருக்கோவில் சென்று
பணியணி நாதனின் பதம் பணிந்தார்

விழைந்து மக்கட்பேற்றை அருந்தவம்
மழை, காற்று, பனி, வெய்யிலில் செய்ய;

ஓராண்டு காலம் ஓடி மறைய, வந்தார்
மிருகண்டூவின் தவத்தை மெச்சி சிவன்.

“அன்பரே! நீர் விழைவது என்ன?”
“அடியேனுக்கு அருள்க மக்கட்பேறு!”

“அறிவு அற்று, நோயுற்று, என்மேல் அன்பு
அற்று, நூறாண்டுகள் வாழ வேண்டுமா?

அழகுற்று, நோயற்று, என்மேல் அன்புடன்
பதினாறு ஆண்டுகள் வாழ வேண்டுமா?”

“அகவை குறைந்தாலும் சரி – பழுதற்றுச்
சிவனை விரும்புபவனே மகனாக வேண்டும்!

அத்தகைய மைந்தனை அருளினால்
மெத்தவும் மகிழ்வேன் பெருமானே!”

மருத்துவதி சூலுற்ற போது முனிவர்
மிருகண்டூ மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

பங்குனித் திங்கள், மிதுன லக்னத்தில்,
பிறந்தான் திருமகன் ரேவதி விண்மீனில்;

பொன்னையும், மணிகளை, மலர்களைச்
சந்தனம், கஸ்தூரியுடன் கலந்து தூவ

தேவ துந்துபிகள் முழங்கின விண்ணில்!
தேவர்கள் வந்து வாழ்த்தினர் மகனை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5h. MRUGANDOO’S LIFE.


When Mrugandu attained marriageable age, he married Maruthvati. Their life was happy but for one thing. They were not blessed with a child.

They went to Kasi and took holy bath in Ganges. Mrugandoo worshipped Siva and did severe penance in the heat of the sun, the cold of the winter and rain and snow. Siva was pleased an appeared before him after one year. Mrugandoo wished for a son.

Siva asked him, “Do you wish to have a son who would live for a hundred years but will lack intelligence, suffer from several diseases and will be devoid of Siva Bhakti? Or will you prefer a bright, intelligent son who would live only for sixteen years but will
have deep love and intense Bhakti for me?”

Mrugandoo wished for a son who would have love for Siva and who would be bright and intelligent. When his wife became pregnant, the sage was joyous. On an auspicious day in the month of Panguni a son was born to them. Gold, gems, flowers were strewn with sandal and kasthoori. Devas played dundubi and everyone blessed the child.


 
SRI VENKATESA PURAANAM

30a. தீப லக்ஷ்மி

மன நிம்மதி இழந்து விட்டாள் லக்ஷ்மி;
மனம் கலங்கியது நடப்பதைக் கண்டு.


‘கபிலரின் ஆசிரமத்தில் தங்கிவிட்டால்
கரவீர புரத்திலிருந்து திரும்பி விடுவான்!’


எண்ணிய எண்ணம் தவறானது – கணவன்
பண்ணுகின்றான் தவம் பத்ம ஸரோவரில்.


கூறினாள் மனக் கவலையைக் கபிலரிடம்;
கோரினார் கபிலர் பிரிந்து வந்த காரணத்தை.


“வாசஸ்தலத்தைக் களங்கம் செய்த பிறகு
வசிக்க முடியுமா மீண்டும் என்னால் அங்கு?”


“மகன் போன்றவன் அல்லவா பிருகு ருஷி ?
மகனிடம் கோபம் கொள்ளலாமா ஒரு தாய்?


கணவனைப் பிரிந்து தனியே வரலாமா?
கணவனைத் தவத்தில் தவிக்க விடலாமா?


பாராமுகம் செய்வது தகுமா தேவி – இங்கு
யாராவது மகிழ்ச்சியாக உள்ளார்களா?


தவிக்கின்றீர்கள் நீங்கள் தனிமையில்;
தவிக்கின்றான் பகவான் தவம் செய்து;


தவிக்கின்றாள் பத்மாவதி கவைலையில்;
தவிப்பினால் விளைந்த நன்மை என்ன?


மலரில் சென்று எழுந்தருள்வீர் தாயே!
பல காலம் செய்த தவம் பலிக்கட்டும்!”


தீபச் சுடர் உருவில் தோன்றி பகவானின்
தாபம் தீர்த்தாள் தாமரையில் லக்ஷ்மி.


தேவி தோன்றியவுடன் பிரகாசித்தது
கோடி சூரிய ஒளியுடன் தாமரை மலர்.


நிஷ்டை கலைந்து எழுந்தான் பகவான்;
இஷ்டத்துடன் நோக்கினான் லக்ஷ்மியை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#30a. Deepa Lakshmi


Lakshmi Devi had lost her peace of mind. She had imagined that when SrinivAsan did not find her in Karaveera Puram he would go back to SeshAchalam. But he had stayed back and had started doing severe penance on her.


She shared her worries with Sage Kapila. He asked her the reason why she had left VishNu and walked away from him. “Brugu insulted my residing place by kicking on BhagavAn’s chest. How can I continue to live there after being insulted thus?” Lakshmi asked the sage.


“But sage Brugu is your son. A mother can never get annoyed with her son so much that she would walk away from her husband. What is the real outcome of your anger Devi? Everyone is unhappy. You are unhappy and alone here.


BhagavAn is unhappy and doing penance for your return. PadmAvati is unhappy, alone and wondering what is happening here! It is high time that your appeared to BhagavAn on the lotus flower and made him stop his severe penance. ”


Lakshmi Devi realized that the sage was speaking the truth. She decided to appear on the lotus flower with one thousand petals. She chose to appear as the flame of a lamp on the lotus flower. Her brilliance was superior to ten million sun shining together.


SrinivAsan could feel the brilliance even in his yoga nishtai. He woke up, got up and looked at Deepa Lakshmi with deep affection and love.




 
devi bhaagavatam - skanda 6

6#29a. நாரதரின் குடும்பம் (1)

கேட்டான் பல கேள்விகளை மன்னன் தாலத்வஜன்;
கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லை எனக்கு.

“நான் யார் என்று கேட்டீர்! எனக்குத் தெரியாது!
யாருடைய பெண் நான் என்று கேட்டீர்! தெரியாது!

எங்கிருந்து இங்கு வந்தேன்? அதுவும் தெரியாது.
எதற்காக இங்கு வந்தேன்? அதுவும் தெரியாது.

தெரியவில்லை என்னைப் பற்றிய விவரங்கள்!
தெய்வாம்சமாக வந்திருப்பேனோ ஒருவேளை?

துணை ஒன்றும் இன்றி உள்ளேன் உம் வசத்தில்;
தோன்றியதைச் செய்யுங்கள் அரசே!” என்றேன்.

முத்துச் சிவிகை வந்தது அங்கு ஒரே நொடியில்!
பத்திரமாக அடைந்தேன் அவன் அரண்மனையை.

மணம் புரிந்து கொண்டோம் நல்ல நேரத்தில்;
மனம் மகிழும்படி பொழிந்தான் அன்பு மழை!

சுந்தரி என்று பெயரிட்டு அழைத்தான் என்னை!
சுக, போகங்களில் ஆழ்த்தி விட்டான் என்னை!

மறந்துவிட்டான் மன்னன் மற்ற எல்லாவற்றையும்.
துறந்து விட்டான் ராஜ்ஜிய காரியங்களை எல்லாம்!

இரவு பகல் பேதம் அறியவில்லை நாங்கள்!
அருந்தினோம் மது; மயங்கி முயங்கினோம்!

நினைவில்லை நான் ஒரு ஆணாக இருந்தது!
நினைவில்லை நான் நாரத முனியாக இருந்தது.

இணை பிரியாது வாழ்ந்தோம் இருவரும்;
துணை ஆகிவிட்டோம் ஒருவருக்கு ஒருவர்.

உருண்டு சென்றன பன்னிரண்டு ஆண்டுகள்.
உருவானான் கர்ப்பத்தில் என் முதல் மகன்.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#29a. NArada’s family (1)

“TAladwajan asked me many questions but I could answer none of them. I did not know who I was, whose daughter I was, where I
had come from and why I had come there.

I told king TAladwajan, ”I know nothing about myself. But I know that I am all alone without anyone support me or help me and I am at your mercy. You may do whatever you feel right!”

A palanquin made of pearls came there instantly. I was carried in it safely to the palace of that king. He married me on an auspicious day. He showered his affection on me. He called me as Sundari. We soon became inseparable.

He neglected his stately and kingly duties. We drank wine and enjoyed without distinguishing between the day and the night. I forgot completely that I had been a man once or that I was the Deva rushi NArada. Twelve years rolled by and I conceived my first son.”


 
kanda puraanam - asura kaandam

5i. மார்க்கண்டேயன்

காசி நகரம் அன்று களிப்பிலாழ்ந்தது;
காசினி முழுவதும் மகிழ்சியடைந்தது.

மறையவர்களுக்கு வழங்கினர் தானம்;
“மார்க்கண்டேயன்!” பெயரிட்டார் பிரமன்.

மாசற்ற திங்கள் போல் மகன் வளருவதை,
பாசமுற்ற பெற்றோர் பார்த்து மகிழ்ந்தனர்.

முப்புரி நூல் அணிந்தான் ஐந்து வயதில்;
மறைகளைக் கற்றுத் தேர்ந்தான் சிறுவன்;

“முழு முதற்கடவுள் சிவபெருமானே!” என
முழு மனதோடு நம்பினான் அச்சிறுவன்;

இறைவன், பெற்றோர், குருமார்கள் மீது,
குறையாத அன்பு செலுத்தினான் அவன்;

நாட்கள் உருண்டோடி ஆண்டுகள் ஆயின.
நடப்பது மகனின் பதினாறாவது வயது!

தாயும், தந்தையும் பெரும் துன்பக் கடலில்
தோய்ந்து கிடப்பதைக் கண்டான் மகன்;

காரணம் கேட்டு மன்றாடியதால் அங்கு
காரணத்தை அவனிடம் கூற நேர்ந்தது!

“வருந்த வேண்டாம் நீங்கள் இருவரும்,
பெருமான் அருளை பெறுவேன் நான்!

கூற்றுவனின் ஆற்றலையும் மாற்றி விடும்
போற்றும் நம் இறைவனின் இன்னருள்!”

விரைந்து சென்றான் திருக்கோவில்;
திருந்த அமைத்தான் ஒரு சிவலிங்கம்.

பெருந் தவத்தினரும் வியந்து போற்ற
அருந் தவம் அங்கு செய்யலுற்றான்!

செக்கர் வண்ணனாம் சிவபெருமான்
முக்கட் பிரான் வெளிப் போந்தார்!

“யாம் மகிழ்ந்தோம் நீ செய்தவத்தால்!
எம்மிடம் நீ கோருவது யாது மகனே?”

“நமன் கைப்படாமல் அருள்வீர் ஐயனே!
நான் வேண்டுவது வேறொன்றுமில்லை!”

“கூற்றுவனுக்கு நீ அஞ்சத் தேவை இல்லை!”
பொற்பதத்தை அவன் தலைமேல் பதித்தார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5i. MAARKKANDEYAN.


The whole city of Kasi celebrated the birth of the child. The whole world appeared to be happier than usual. Gifts were given to the worthy brahmins. Brahma named the child as MArkkandEyan.

The parents watched their son grow well like a blemish-less full moon. His upanayanam was performed at the age of five. He mastered the Vedas at a very tender age. He firmly believed that Siva was the most supreme God. He had great respect for Lord Siva, his dear parents and his gurus.

Days rolled by and he entered his sixteenth year. The poor parents were torn to pieces internally, thinking of the inevitable fate of their dear son. MArkkandEyan noticed their constant sorrow and wanted to know the real reason.

His parents had to come out with the truth – since the boy was persistent. He assured them, “Please do not worry. I am sure I will get the blessings of Lord Siva and defeat the purpose of Yama. Lord Siva is certainly more powerful than Yama”

He went to the temple. He erected a Sivalingam and started worshipping it with such an intensity that even grown up tapasvis became wonder struck.

Lord Siva was pleased with the serious penance of this young boy and appeared before him.”What is that you seek my dear son?” He asked the young and pious lad.

“Sire! I should not get snatched away by the cruel hands of Yama. I ask for nothing more from you!” Siva planted his lotus foot on the boy’s head and blessed him.”You need not be afraid of Yama any more my dear child!”

 
sri venkatesa puraanam

30b. பிணக்குத் தீர்ந்தது!

தாமரையில் மகாலக்ஷ்மி தோன்றியதும்
தாமதமின்றி விரைந்து வந்தனர் தேவர்.

பிரிந்தவர் சேரும் வைபவத்தைக் காணப்
பெரிய பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!

தேவர்கள் துதித்தனர் தேவியைப் பலவாறு;
தேவி இறங்கவில்லை தாமரையை விட்டு.

பிருகுவிடம் பேசினார் ஈசன் தனிமையில்,
“பிரிவுக்குக் காரண கர்த்தா நீரே அல்லவா?

தேவியிடம் சென்று மன்னிப்புக் கேட்பீர்!” என,
தேவியிடம் சென்று பிருகு கேட்டார் மன்னிப்பு.

சாந்தம் அடைந்து இறங்கினாள் லக்ஷ்மி தேவி.
சந்தனம் பூசினாள் பகவான் வக்ஷஸ்தலத்தில்.

வணங்கினாள் அவனை மண்டியிட்டு – அவளைப்
பிணக்குத் தீர்ந்து மார்பில் அமர்த்தினான் அவன்.

கந்தருவர் இசையுடன் கலந்து மலர் சொரிந்திட,
துந்துபி முழங்கியது எண் திசைகளிலும் பரவி.

அப்சரஸ் விண்ணில் ஆடினர் ஆனந்த நடனம்.
அருளினார் பகவான் உலகுக்குச் சிறந்த வரம்.

“கார்த்திகை மாத சுத்த பஞ்சமியில் – பத்ம
தீர்த்தத்தில் நீராடுபவருக்கு சகல சம்பத்து.”

அனைவரும் அடைந்தனர் சேஷாசலம் ;
அனைவரையும் வரவேற்றாள் பத்மாவதி

ஆரத்தி எடுத்தாள்; திருஷ்டி கழித்தாள் அவள்;
ஆனந்தத்தில் தத்தளித்தாள் வகுள மாலிகை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#30b. The Happy Reunion


When the news spread that MahAlakshmi had appeared on the lotus flower in the Padma theertham, all the Devas rushed there. The happy reunion of the Lord and Devi was not to be missed by anyone of them, at any cost.

The Deva worshiped Devi and sang her praise but Lakshmi did not get down from the lotus flower. Siva understood the reason. He spoke to Sage Brugu and told him, “You have been the cause of the separation between VishNu and Lakshmi. You must go and request Devi to return to her Lord.”

Brugu begged for Devi’s pardon and pleaded with her to return to her Lord. Lakshmi Devi became pacified. She got down from the lotus flower. She smeared the fragrant sandal paste on lord’s chest – where she used to live.

She knelt to him and paid obeisance. Their differences had been ironed out now. Lord was happy to lift her back to her original abode in his broad chest.

The Gandharvas sang and showered flowers. Dundubi blared and spread the joy. The apsaras did a dance of delight. SrinivAsan gave a special boon to the world.

“Whosoever bathes in the Padma theertham on the Suddha panchami day in the month of KArthigai will be blessed with every good fortune and all the eight kinds of richness.”

Everyone now went to SeshAchalam. PadmAvati welcomed them. She did hArathi to the couple. VaguLa MAlikA was overwhelmed with happiness since they all got reunited after many many years of separation.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#29b. நாரதரின் குடும்பம் (2)

“கர்ப்பிணி ஆகி விட்டேன் அன்பின் பயனாக;
கணவன் செய்தான் வளைகாப்பு, சீமந்தம்.

பிள்ளை பிறந்தான் நல்ல நேரத்தில், நல்ல நாளில்.
பிள்ளைக்குப் பெயரிட்டோம் வீரவர்மன் என்று.

பிள்ளை பிறந்தான் மீண்டும் இரண்டு ஆண்டுகளில்;
பிள்ளைக்கு நல்ல பெயரிட்டோம் சுதன்மன் என்று.

பிறந்தனர் பன்னிரண்டு பிள்ளைகள் எனக்கு!
புரிந்தோம் திருமணம் அருமை மகன்களுக்கு!

பிறந்தார்கள் பிள்ளைகள் பிள்ளைகளுக்கு;
பெருகியது பந்தபாசம் பேரர்கள் வருகையால்.

மூழ்கி விட்டேன் முற்றிலுமாக சம்சாரத்தில்;
ஆழ்ந்து விட்டேன் முற்றிலுமாக மாயையில்.

மறந்து விட்டது நாரதனாகச் சுற்றித் திரிந்தது;
மறைந்து விட்டது கற்று அறிந்திருந்த ஞானம்.

அகம்பாவம் உண்டானது சுகபோக வாழ்வினால்;
அறியவில்லை விஷ்ணு என்னை வஞ்சித்ததை.

படையெடுத்தான் அன்னிய தேசத்து அரசன்!
படையைச் சந்தித்தனர் பிள்ளைகள், பேரர்கள்.

விழுந்து விட்டனர் அனைவரும் போரில் மாய்ந்து;
விழாமல் வந்தான் கணவன் அன்பின் மிகுதியால்.

துயரக் கடலில் விழுந்தேன் தாளாத சோகத்தில்.
உயர இருந்து தலை கீழே விழுவது போலானது.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

6#29b. NArada’s family (2)

NArada continued explaining to VyAsa the effects of MAyA.

“I became pregnant with my first child. My loving husband performed all the celebrations like VaLai kAppu and seemantham. I delivered a healthy son and he was named as Veera Varman. After two years I gave birth to my second son whom we named as Sudanman.

In due course I delivered twelve sons. They all grew up well and got married when they attained marriageable age. They got their own children in due course. My delusion due to MAyA and immersion in samsAra increased.

With the arrival of my grand children, I forgot that I used to be NArada and used to roam around the three worlds playing makati even and singing the praise of NArAyaNan. I forgot all the sAstras I had learned and lost the knowledge I had gathered.

I became proud and arrogant that I was leading such a happy and problem-free-life. I did not realize that VishNu had betrayed me treacherously.

The ruler of a neighbouring kingdom waged a war on our kingdom. My sons and greadsons went to the war field. Unfortunately all of them fell dead to the attack by the enemy.

Only my husband managed to return to me alive. I felt as though I had been pushed down from the seventh heaven headlong! Now I was immersed a sea of unending sorrow.”

 
KANDA PURAANAM - ASURA KAANADAM


5j. கிங்கரன்

பதினாறு வயது நிரம்பி விட்டது;
பறித்து உயிரை எடுத்துச் செல்ல

அங்கே தோன்றினான் எமதூதன்;
கங்கைபுனை சிவபூஜை கண்டான்!

நெருங்க முடியவில்லை அவனால்!
திரும்பிச் சென்றான் வெகு விரைவாக.

“சிவனிடம் பொருந்திவிட்ட உள்ளம்;
சிவன் தன் பாதம் பதித்து விட்ட சிரம்;

பிரபோ அணுக முடியவில்லை அவனிடம்!
பிள்ளை அமர்ந்துள்ளான் சிவ வழிபாட்டில்!”

கணக்கனை அழைத்தான் எமதர்மன்;
“கணக்குப் பார்த்துச் சொல்லு வயதை!”

“பதினாறு முடிந்து விட்டது பிரபோ!
அதுவே அவனுக்கு அளித்த ஆயுள்!”

“சிவ வழிபாடு சிறந்த அறம் எனினும் அந்தச்
சிறுவனின் ஆயுட்காலம் முடிந்து விட்டது.

விண்ணுலகம் அடைவதற்கு உரியவனை
மண்ணுலகம் சென்று அழைத்து வா!”எனக்

காலனைப் பணித்தான் எமதர்மன்;
காலன் சென்றடைந்தான் காசியை.

அஞ்சினான் சிறுவனை நெருங்கிட;
“கெஞ்சியாகிலும் கூட்டிச் செல்வேன்!”

கண்ணுக்குத் தெரியும் வடிவம் எடுத்துக்
கண்நுதற் பெருமான் அடியானைத் தொழ,

“நீ யார்?” என வினவினான் சிறுவன்.
“நீவீர் தென்புலம் செல்ல வேண்டும்!

எமனின் அமைச்சன் காலன் நானே;
என்னுடன் அழைத்துப் போக வந்தேன்!”

“சிவனைத் தொழுபவன் வர மாட்டான்
சிவலோகம் தவிர வேறு ஒரு யமலோகம் !

உன்னுடன் வர என்னால் இயலாது!
உன் தலைவனிடம் சென்று சொல்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5j. MAARKKANDEYAN AND KINKARAN.


MArkkandEyan had completed sixteen years of age. A kinkaran came to take away his life. He saw the young lad seated in Siva pooja. He could not even go near the pious lad.

He went back to Yama immediately. “The boy is immersed in worshipping Lord Siva. Also Lord Siva has already blessed him by placing His foot on the boy’s head. I could not take away his life force as ordered by you!”

Yama called Chitragupthan and verified the age of the boy. “He is now sixteen years old and that is the lifespan that has been allotted to him sir!”

“Siva puja is a sat karma but since his life span is over he must be brought here at any cost!” He sent his minister KAlan to do the job in the place of the Kinkara.


KAlan went to KAsi. He saw the pious lad immersed in puja and realised that, if at all, the boy would have to come on his own – as no one could touch him. He took a visible form and prostrated to MArkkandEya.

The buy asked him, “Who are you? What do you want?” He replied to the young boy, “I am KAlan the minister of Yama. Your time on earth is over. You have to come with me now to Yamalokam.”

“A devote of Siva will go only Sivalokam and never ever go to any other lokam. Go and tell your master about this!” The boy was very firm and KAlan had to retreat in haste.


 
SRI VENKATESA PURAANAM

31a. ஆனந்தம் ஆனந்தம்!

ஆனந்த மயமாக மாறிவிட்டது அங்கே
ஆனந்த நிலயத்தில் மூவரின் வாழ்க்கை.

சக்களத்திகள் போல இருக்கவில்லை – இரு
சஹோதரிகள் போல அன்பு செலுத்தினர்.

பரம சந்தோஷம் பக்த கோடிகளுக்கு;
வரம் அளிக்க இருந்தனர் மூவர் என்று!

தனிமையில் கூறினான் லக்ஷ்மியிடம்,
ஸ்ரீனிவாசன் குபேரனின் கடனைப் பற்றி.

“வட்டி கட்ட ஒப்புக் கொண்டேன் நான்
வட்டி கட்ட வில்லை ஒரு முறை கூட.

பழிக்கு ஆளாகி விடுவேனே – நான்
இழிச் சொற்களைக் கேட்க நேருமோ?

உதவ முடியும் உன்னால் எனக்கு!
அதுவும் மிக எளிதான் முறையில்!

உன்னைத் தேடி வரும் பக்தருக்கு வழங்கு
பொன்னையும், பொருளையும் வாரி வாரி.

என்னைத் தேடி வருபவர்கள் அளிப்பர் – அந்தப்
பொன்னையும், பொருளையும் காணிக்கையாக!”

புறப்பட்டாள் லக்ஷ்மி தேவி கேட்ட உடனே,
“நிறைவேற வேண்டும் நம் நோக்கம் சுவாமி!

தனியே இருக்க வேண்டும் நான் – நம்முடைய
பணிகள் சரிவர நடை பெறுவதற்கு!” என்றாள்.

பாதாள லோகம் சென்றாள் லக்ஷ்மி
பகவானுக்கு உதவத் தயார் ஆனாள்.

“நினைத்த காரியம் இனிதாக நடைபெறப்
புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும் நான்.”

பகவன் பாடு மீண்டும் திண்டாட்டம்
பாதாள லோகத்தில் லக்ஷ்மி தவத்தில்

பூலோகத்தில் வந்து நிலை பெற்றால் தான்
ஆலோசிக்க முடியும் குபேரன் வட்டியை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#31b. Days filled with joy!


Aanandha Nilayam was filled with happiness now. The lives of the three Gods were filled with joy and nothing but joy. SrinivAsan’s two consorts were more like two sisters than two co-wives competing for the love of their husband!

The devotees were happy since now there were three Gods to bless them with whatever they wanted. One day when they were by themselves, SrinivAsan spoke to Lakshmi Devi about the money borrowed from Kuberan.

He said, “I can return the money borrowed at the end of Kali yuga. But I had agreed to pay the annual interest and I could not pay that even once. I am afraid I will be ridiculed for going back on my promise.

I may have to hear unkind comments. You can help me easily. Bless your devotees who throng to visit your temple with immense wealth. They will be only too happy to part with a portion of it and offer it to me.”

Lakshmi Devi understood his requirement and his wish. She got ready to go away immediately. She told him, “If your plan should work out with success, we have to live separately in the future also.”

She went to PAtAla lokam and wanted to purify herself for the task ahead of her. SrinivAsan never expected this to happen. Lakshmi had gone away to PAtAla one more time. She had started doing her penance once again. But she had to be on the earth
and in her temple – if his plans of paying back the interest to Kubera were to succeed!

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#29c. நாரதரின் குடும்பம் (3)

“அழுதேன்; புலம்பினேன்; அரற்றினேன்;
அருகில் வந்து நின்றார் ஒரு கிழ அந்தணர்.

“மகன் என்றும், பேரன் என்றும் மாறாத பாசம்;
மாடுகள் என்றும், மாளிகை என்றும் ஒரு பந்தம்;

துக்கத்தின் காரணம் இந்த பந்தபாசம் தான்!
துக்கத்தைக் துடைக்கத் தூக்கி எறி பாசத்தை!

யார் நீ? யார் இவர்கள் இதற்கு முன்பு?
எப்படி வந்தது பந்தமும், சொந்தமும் கூறு!

சிந்தித்துப் பார் பந்தம், சொந்தம் பற்றி – சம்
பந்தமே இல்லை உனக்கும், இவர்களுக்கும்.

கடைத் தேறும் வழியை எண்ணுவாய் – உன்
கடமை உன் ஆத்மாவைக் கடைத் தேற்றுவது!”

தடாகத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர்.
“விடாது தொடரும் துயரம் மறைந்து விடும்.

கனவைக் கற்பனையைப் போன்றது வாழ்வு.
கணத்தில் மாறிவிடும் முங்கி நீராடு!” என்றனர்.

பெண்ணாக முங்கினேன் தடாக நீரினில்;
ஆணாக எழுந்தேன் தடாக நீரிலிருந்து.

மறைந்து விட்டது பெண்ணின் உருவம்;
மறுபடி ஆகிவிட்டேன் நாரத முனியாக!

மறைந்து விட்டார் கிழ அந்தணர் அப்போது;
மறைகள் போற்றும் நாரணன் நின்றார் அங்கு!

மாயையைச் செய்தவன் மாலவன் அல்லவா?
மயக்கத்தைத் தந்தது அந்த மாயை அல்லவா?

“போகலாம் வா நாரதா நகருக்கு!” என்றார்.
புகல முடியவில்லை பெண்ணாக வாழ்ந்ததை!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

6#29c. NArada’s family (3)

I wept bitter tears. I lamented. I was inconsolable. An old brahmin came and stood by my side. He spoke to me, ”Sons and
grandsons bind you with their love and affection. The property and belongings bind you to samsAra.

The cause of your misery is your affection and your attachment to these people and things. If you want to get rid of your sorrows throw away your affection and cast away your attachments.

Who are you? Who are these people? How did you come to know them? Who were they previously? How did you get attached to them ? Why did you get attached to them? Think about all these things.

You are not related to or connected to anything you think you are. Think of saving your soul and escaping from this delusion called samsAra. You duty is to realize your real Self and rejoice in it.”

Then I was taken to a nearby pond and told to take dip to get rid of my sorrows and sufferings. I obeyed and took a dip in that pond. I was a woman when I went under the surface of water and a man when I rose above the surface of water. The mysterious old brahmin had as mysteriously disappered as he had appeared in the scene earlier.

Lo and behold! Lord NArAyNan stood in his place. He told me “Come on NArada! Let us go into the city as already planned buy us!” The delusion I suffered was caused by MAyA. The deluding MAyA was caused by none other than Lord VishNu”.

I could not tell him about my recent adventures as a woman. I am sure there was no need for me to tell it to him either.”

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

5k. யமதர்மன்

சிறுவனின் மறுமொழி கேட்டுச்
சினம் கொண்டான் யமதர்மன்.

“என்ன துணிச்சல் அச்சிறுவனுக்கு?
என் வாகனத்தைக் கொண்டு வா!”

அமர்ந்து கொண்டான் அதன் மீதேறி;
அவனே சென்றான் அச் சிறுவனிடம்.

பாசம், தண்டம், சூலம் எடுத்தவனைப்
பார்த்தவுடன் தெரிந்து விட்டது யாரென!

சிவனிடம் தஞ்சம் புகுந்தான் சிறுவன்;
சினத்துடன் பேசலுற்றான் யமதர்மன்.

“யாது சொன்னாய்? யாது செய்தாய்?
யாது எண்ணுகின்றாய் நீ சிறுவனே?

சிவன் வகுத்த வரைமுறைகளை
அவன் அடியார்களே மீறலாகுமா?

சிவ வழிபாடு போக்கும் தீவினைகளை,
சிவ வழிபாடு போக்குமா இக்கயிற்றை?

பிறப்பும், இறப்பும் விடுவதில்லை
திருமால், பிரமன், தேவர்களையும்.

என் கடமையில் தவறேன் நான்!
என்னுடன் நீ வரவேண்டும் உடனே!”

“இல்லை ஒரு முடிவு சிவன் அடியாருக்கு!
இனிதே வாழ்வார் சிவலோகம் சென்று!

சிவனுக்கும் சிவன் அடியாருக்கும் இல்லை
சிந்தித்துப் பார்த்தால் எந்த வேற்றுமையும்.

எல்லோரையும் போல் நீ எண்ணாதே!
எல்லாம் வல்ல சிவன் அடியார்களை;

எனக்கு நீ இழைக்கும் துன்பங்கள்
உனக்கே திரும்பவும் வரும் காண்!

அறிவற்றவன் போலச் செயல் படாதே!
திரும்பிச் சென்றுவிடு உடனடியாக!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#5k. MAARKKANDEYAN AND YAMAN.


Yaman became very angry to learn the words of the lad. He ordered his vAhanam to be brought to him, rode on it and went to the boy himself. The moment the lad saw him, he realised his true identity and moved closer to his Sivalingam.

“What did you say? What did you do ? What is in your mind? The rules laid by Lord Siva should not be broken by His own devotees. Worship of Lord Siva will rid you of your sins but it can never save you from my pAsam (noose).

Even VishNu, Brahma and the other Devas have inevitable birth and death. How can you defy your death? I will never fail in my duty. You must go with me!” Yama spoke in great anger.

“There is no death for the devotees of Lord Siva. They live forever in his Sivalokam. Do not equate the devotees of Siva to the other ordinary mortals. The troubles you are going to cause me with backfire on you manifold. Go back to your own world and in
future act sensibly”. The lad spoke thus and seemed to be unruffled.

 
SRI VENKATESA PURAANAM

31b. மீண்டும் தவம்

சென்றான் ஸ்ரீனிவாசன் பாதாள லோகம்;
நின்றான் தியானம் செய்த லக்ஷ்மி முன்பு.

கண்டாள் லக்ஷ்மி அகக்கண்களில் அவனை;
காணவில்லை அவள் புறக்கண்கள் அவனை.

“தரிசனம் தந்தீர்கள் எனக்கு – ஆனால்
அரிதாகி மீண்டும் மறைந்து விட்டீர்கள்.”

கலைந்து விட்டது உன் தவம் லக்ஷ்மி!
வேலைகள் அநேகம் காத்திருக்கின்றன.

தடைபட்டுள்ளன அவை உன் தவத்தால்;
உடைபடும் தடை நீ பூலோகம் சென்றால்!

சுகரின் ஆசிரமத்தில் காத்திருக்கின்றது,
சுகமான ராஜ போகம் உனக்கு!” என்றான்.

ஆதிசேஷனை தியானித்தாள் லக்ஷ்மி;
ஆதிசேஷன் வந்து வணங்கி நின்றான்.

“சேர வேண்டும் சுகரின் ஆசிரமத்தை!”
தேர் நின்றது வெள்ளைப் பரிகள் பூட்டி!

ஏறி அமர்ந்தாள் அழகிய ரதத்தினில்,
அரிய ஆபரணங்கள் அணிந்த லக்ஷ்மி.

ரதத்துடன் தேவியைத் தலையில் தாங்கி,
வேகத்துடன் வெளிப்பட்டான் ஆதிசேஷன்.

சாயாசுகர் கண்டார் மஹாலக்ஷ்மியை,
“சரணம் சரணம் லோக மாதா!” என்றார்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#31b. Back to Penance


SrinivAsan went to the PAtAla lokam. He stood in front of Lakshmi Devi who was in deep meditation. She saw him with her inner eyes but when she opened her eyes but she did not find him there!

“Lord! You appeared to my inner eyes but I am unable to see you now.” SrinivAsan told her, “Now that your meditation is disturbed, listen to me carefully. You have many tasks ahead of you. Your presence is needed on the earth and not in the PAtAla lokam. A
very fruitful and joyous life awaits you in the ashram of Sage ChAyA Sukar.”

She had to reach the surface of the earth now and that too very fast! Lakshmi Devi thought of Aadhiseshan and he appeared there immediately. She told him, “I have to reach the Aashram of Sage ChAyA Sukar now. Please arrange for that.”

A chariot with white horses stood ready for her. Lakshmi Devi got into it decorated with her exquisite jewels. Aadhiseshan lifted the chariot on his head and they reached the surface of the earth near the Aashram of the Sage ChAyA Sukar.

The Sage became happy to see Lakshmi Devi and welcomed her saying “SaraNam, SaraNam Loka MAtA!”

 
The increased traffic in this thread to 925 in the past 24 hours is encouraging. :ranger:

I than the readers of this thread foe showing their interest and sparing their time. :pray2:

Here is an easy method to read the posts of the past which yo might have missed.

In stead of jumping from page to page and scrawling up and down

just click on the links given below to read any post any time in any of the puraaNams.

LINKS TO DEVI BHAAGAVATAM BLOGS

17. https://bhagavathybhaagavatam.wordpress.com (Introduction on Devi)

18. https://bhagavathybhaagavatam1.wordpress.com (Skanda 1 )

19. https://bhagavathybhaagavatam2.wordpress.com (Skanda 2 )

20. https://bhagavathybhaagavatam3.wordpress.com (Skanda 3 )

21. https://bhagavathybhaagavatam4.wordpress.com (Skanda 4 )

22. https://bhagavathybhaagavatam5.wordpress.com (Skanda 5 )

23. https://bhagavathybhaagavatam6.wordpress.com (Skanda 6 )

24. https://bhagavathybhaagavatam7.wordpress.com (Skanda 7 )

25. https://bhagavathybhaagavatam8.wordpress.com (Skanda 8 )

26. https://bhagavathybhaagavatam9.wordpress.com (Skanda 9 )

27. https://bhagavathybhaagavatam10.wordpress.com (Skanda 10)

28. https://bhagavathybhaagavatam11.wordpress.com (Skanda 11)

29. https://bhagavathybhaagavatam12.wordpress.com (Skanda 12 )



 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#30a. மாயையின் வலிமை

நாரதர் தொடர்ந்தார் வியாசருக்குக் கூறுவதை;
நாரணன் மாயையின் வலிமையை உணர்த்தியதை.


“ஆணாக நான் மாறியதைக் கண்டு அதிர்ந்து
அழத் தொடங்கினான் கணவன் தாலத்வஜன்.


“மனைவி என்ன ஆனாள்? எங்கே போனாள்?
முனிவன் எப்படி வந்தான்? புரியவில்லையே!


மறைந்து போனாள் ஒரு நொடியில் மாயமாக!
நிறைவு எய்துமா எந்தன் வாழ்வு இனிமேல்?”


பிதற்றியபடி அழத் தொடங்கினான் மன்னன்;
கதறியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.


கனிவாகக் கேட்டார் விஷ்ணு மன்னனிடம்,
“மனைவியைத் தேடுகின்றாயே மன்னவா?


எங்கிருந்து வந்தாள் உன் மனைவி அன்று?
அங்கேயே திரும்பிவிட்டாள் அவள் இன்று!


பந்து, மித்திரர்கள் என்பவர் யார் எனக் கூறு!
மிதந்து செல்லும் துரும்புகள் நீரின் பரப்பில்.


சேர்வார்கள்; பின் பிரிவார்கள் அவ்வப்போது.
நீரின் போக்கு நிச்சயிக்கும் முற்றிலுமாக அதை.


யோகமும், போகமும் நம் வசப்பட்டவை அல்ல.
யோகமும், போகமும் காலத்தின் வசப்பட்டவை.


நாடு திரும்பி முன்போல் அரசாள்வாய் – அன்றேல்
காடு சென்று யோகத்தால் ஞானம் தேடி உய்வாய்.


உடல் பெற்றுள்ளாய் நீ ஒரு நல்ல மனிதனாக;
உடல் மறையும் முன்பே பெற வேண்டும் ஞானம்.


நித்திய ஆனந்தம் தருவது ஞானம் ஒன்றே!
சக்தி தேவியின் விளையாடல்கள் மற்றவை!”


ஒப்படைத்தான் ராஜ்ஜியத்தைத் தாயாதிகளிடம்;
எப்பாடு பட்டேனும் ஞானம் பெறச் சென்றான்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


6#30a. The power of MAyA


NArada continued to relate his adventures as a woman to Sage VyAsa to prove to him the power of MAyA.

“When TAladwajan saw me turn into a man he got shocked and started crying out for his wife. “Where is my wife? Where did she go to? From where has this rushi appeared suddenly? My wife has disappeared in one second! Will my life ever be complete without her presence?” He started prattling and crying pathetically.

VishNu spoke to him in a voice filled with compassion,” Oh King! You are looking for your lost wife! Whence did she come here on the other day? She has returned to the same place today.


Tell me who are the kin and kith of a man? They are nothing more than straws floating on the surface of a river. They come together often and then go their separate ways. It is the flow of the water decides their meeting and parting.


Yogam (acquiring a thing) and bhogam (enjoying a thing) are not in our hands or under our control. They are under the control of Time Factor.


Go back to your kingdom and rule it as before. Or better still, you go to a forest and try to acquire true knowledge (JnAnam) through yoga sAdhana.


You are born as a hale and healthy man. Your duty is to acquire JnAnam before the body drops down dead. Only the dawn of true knowledge can give you true and everlasting happiness. All the other things we see here are merely the child’s play in the hands of Devi ParA Shakti”.


The king TAladwajan handed over his kingdom to one of his relatives and went to a forest. He was determined to seek and acquire true knowledge, while his body lasted.




 
KANDA PURAANAM ASURA KAANDAM

5l. யமன் இறத்தல்

சிறு பயலின் சொற்களைக் கேட்டு
சீற்றம் தலைக்கேறியது யமனுக்கு.


இடி போல ஆரவாரம் செய்தான்;
இடியின் மின்னலாகக் கண்களில் தீ!


பாசக் கயிற்றை வீசி இழுத்தான் மிகுந்த
நேசத்துடன் சிவனை அணைத்தவனை!


கயிற்றினால் ஒரு துன்பமும் நேரவில்லை;
மயிர்க் கூச்செறிய வெளி வந்தான் சிவன்!


“மதம் தலைக்கேறியது எமனுக்கு!”- ஒரு
பதம் தூக்கி உதைத்தருளினான் யமனை .


வீழ்ந்து இறந்தான் யமன் அங்கேயே!
அழிந்தன அவன் படையும், ஊர்தியும்.


“முடிவில்லாத ஆயுளைத் தந்தோம்!” என
அடியவனை வாழ்த்தி மறைந்தார் சிவன்.


சிரஞ்சீவி ஆகிவிட்ட மார்க்கண்டேயன்
விரைந்து சென்றான் தன் பெற்றோரிடம்.


சிவப்பதிகள் சென்று சிவனைப் பாடி
சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகின்றான்.


யமன் இறந்ததால் இல்லை இறப்பு!
உயிர்கள் தோன்றிப் பெருகலாயின!


வருந்திய நிலமகள் மாலிடம் கூற,
திருமாலும், பிரமனும் சிவனிடம் கூற,


உயிர்ப் பிச்சை தந்தார் யமனுக்கு;
துயர் தீர்த்தார் நிலமகள் சுமையின்.


“என் அடியவர்களை நெருங்கி விடாதே!
என் அடியவர்கள் எனக்குச் சமம் ஆவர் !


என்றும் நீ இதை மறந்து விடாதே!”
எமன் திரும்பினான் தன் தென்புலம்.


“தவத்தின் பெருமையை உணர்வீர்!
தவம் பிழைப்பித்தது மணமகளை!


தவம் உய்வித்தது மத யானையை.
தவம் உயர்வித்தது மிருகண்டூயரை.


தவம் தந்தது ஓர் ஒப்பற்ற மகனை.
தவம் வென்றது ஊழ்வினைகளை.


தவத்தின் பெருமையை உணர்வீர்!
தவம் செய்து மேன்மைகள் பெறுவீர்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#5l. THE DEATH OF YAMA.

Yama became terribly angry on hearing the lad’s reply. He roared like the thunder claps and his eyes shone like the lightning in the dark rain clouds. He threw his pAsam (noose) around the lad – who was hugging now the Sivalingam and pulled him with all his might.


The lad did not suffer any pain but Lord Siva emerged from the lingam. He kicked Yama with one leg. Yama dropped down quite dead. His army and vAhanam also got killed.


Lord Siva blessed the boy, ‘You will be a chiranjeevi!” and disappeared. The lad ran back home to tell the good news to his worried parents. He visits all the Siva temples and sings the glory of Siva even to this day.


With the death of Yama there was no more death of any form of life. The population grew so much that the Goddess of Earth could not bear the weight of the living things. She told her sufferings to VishNu. He told it to Lord Siva.


Lord Siva resurrected Yama and told him, “Never approach any of my devotees in the future. Remember that they are equal to me!” Yama returned to his kingdom.


The sage KAsyapa concluded his long speech to his children thus:”Realise the greatness of penance. It brought back to life the bride-to-be. It gave moksham to a troubled elephant. It placed Mrugandooyar among the Devas. It gave Mrugandoo a great son. It
nullified the evil effects of fate. So my dear children do penance and may you all become great people on the earth!”

 
SRI VENKATESA PURAANAM

31c. சாயா சுகர்

சுகர் விரும்பினார் சாயுஜ்ய முக்தியை;
சுகர் எழும்பினார் தம் யோகசக்தியால்.


தடுத்தான் சூரியன் சுகரின் பிரயாணத்தை;
விடுத்தான் சுகரிடம் கேள்விக் கணைகளை.


“முன்னோர்கள் பூவுலகில் வாழ்ந்திருக்க,
முன்பாக சாயுஜ்யம் அடைய முடியுமா?


அருகதை இல்லை உமக்கு சாஸ்திரப்படி,
அறிந்திருப்பீர் இதனை நீரும் முன்பாகவே!


கிருஹஸ்தாஸ்ரமத்தை ஏற்க வேண்டும்;
பிறக்க வேண்டும் புத்திரர்கள், சந்ததியினர்;


பிரம்மஞானி ஆவது அதற்கும் பின்பு;
அரிய சாயுஜ்யம் அதற்கும் பின்பு என்று.”


“மனிதனுக்குத் தேவை நான்கு ஆசிரமங்கள்;
முனிவனுக்குத் தேவை இல்லை ஆசிரமங்கள்;


நீர்க்குமிழி போன்றது வாழ்க்கை என்று
நீத்து விடுகிறோம் அதை முற்றிலுமாக.


அடைய முடியுமா ஞான மார்க்கத்தை என
விடை அறிய விரும்பினேன் தந்தையிடம்.


அனுப்பினார் என்னை ஜனக ராஜனிடம்,
வனப்புடன் விளக்கினார் ஜனகர் எனக்கு.


பக்குவம் அடையாதவனுக்குத் தேவை இவை;
பக்குவம் அடைந்தவனுக்கு அல்ல என்பாதை.”


“விதிகளைக் கூறுபவர்களே தாம் கூறிய
விதிகளை உடைக்கவில்லை முனிவரே!


விஷ்ணு, பிரமதேவன், வசிஷ்டர், சக்தி,
பராசரர், வியாசர், நீர் ஒரு வம்சத்தினர்.


தேவை ஒரு சந்ததி சேவை செய்திட;
தோற்றுவித்தால் உமக்கு சாயுஜ்யம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#31c. Sage ChAyA Sukar

Sage Sukar wished to obtain SAyujya Mukti. He could travel in air by his yoga shakti. He went up higher and higher in the sky, until he was stopped by the Sun god. The sage was fired with several questions by the Sun God.


“Your ancestors are still living on the face of the earth. It is your duty to serve them. Why do you wish for SAyujya Mukti before they have obtained liberation? You are not as yet qualified for it . I am sure you are aware of it yourself.


You must take up Gruhastha Aasramam. You must beget good children. You can become a Brahma JnAni only after the completion of the Gruhastha Aasramam and VAna prastham. SAyujya Mukti comes at the every end of all the four Aashramams taken up in the correct sequence.”


The Sage Sukar replied, “Taking up the four aashramams in the correct order is only for ordinary human beings and not for those who are born as Brahma JNanis. We know that the life of a human is just like bubble seen on the surface of water.


We do not wish to entertain that or enter into samsaara. I asked my learned father Sage VyAsa whether it was possible to take up the gnana maarggam directly. He sent me to the king Janaka.


King Janaka explained that point very well to me! He said the four Ashrams in the correct order is only for ordinary human beings and not for those who are already set on the gnAna mArggam.”


“But O sage! Did you notice that those who preach these rules also follow them. They do not bend or break the rules to suit their convenience. Vishnu, Brahma, Vasishtar, Shakti, ParAsarar, Vyasar and you are from one lineage. You must beget a son to serve your elders. Sayujya Mukti is possible only after that.” The Sun God stuck to his line of argument.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6#30b. அவஸ்தைகள் ஐந்து

“தந்திரமாக ஏமாற்றினீர்கள் என்னை பகவானே!
மந்திரம் போட்டாற்போல் மாறினேன் பெண்ணாக!

மணந்தேன் நான் காமதேவன் போன்ற அரசனை;
பிணைத்தன சம்சாரத் தளைகள் விடாது என்னை.

ஆணாக இருந்ததை நான் எங்கனம் மறந்தேன்?
பெண்ணாக இருந்ததை ஏன் மறக்கவில்லை?”

“மாயா விலாசம் என்பர் இதனை அறிந்தவர்;
மாயையின் வலிமையை நன்கு உணர்ந்தவர்.

ஐந்து வகைப்படும் உடலின் அவஸ்தைகள்;
ஐந்தில் மூன்றையே அறிவான் ஒரு மனிதன்.

ஜாக்கிரதம், ஸ்வப்னம், சுஷுப்தி என்பவை.
ஜாக்கிரத்தில் அறிவான் அனைத்தையும் நன்கு.

சுஷுப்தியில் அறியான் மனிதன் எதையுமே!
ஸ்வப்னத்தில் உண்டாகும் பல அனுபவங்கள்.

ஸ்வப்னத்தில் கண்டது ஜாக்கிரதத்தில் தெரியும்.
ஸ்வப்னத்தில் தெரியாது ஜாக்கிரதத்தில் கண்டது.

ஸ்வப்னம் போன்றது உன் பெண் உருவம்;
ஜாக்கிரதம் போன்றது உன் ஆண் உருவம்.

மாயையின் குணங்களை அறிய இயலாது;
மாயையின் குணங்களை வெல்ல இயலாது;

முக்குணங்கள் உள்ளன மும் மூர்த்திகளிடமும்;
முக்குணங்களை ஒழித்த ஒருவர் துரீய சிவனார்.

மாயையைக் கடப்பது நடவாத காரியம்;
மாயையை வெல்வது முடியாத காரியம்.

மாயைக்கு மயங்காமல் ஞானம் பெறுவதற்கு
மாயா ஸ்வரூபிணியே மனம் கனிய வேண்டும்”.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

6#30b. The five states of the soul

I (NArada) told Lord NArAyaNan thus,” You have deceived me very cleverly Oh Lord! I was changed into a woman as if by black magic. I married a king as beautiful as KAma Deva. I was bound in samsAra by my affection and attachment. Why did I forget that I used to be a man earlier? Why did I not forget that I got transformed into a woman?”

VishNu smiled and replied to me,” This is known as the MAyA vilAsam by JnAnis and seers. Aatma (the soul) has five different states of existence known as the five avastha. Man resides only three of these five during his entire life time.

They are the jAgratha avastha (wakefulness), the swapna avastha (dreaming state) and the sushupti avastha (deep sleep). In jAgratha avastha man knows everything that is happening around him. In sushupti avastha, he is lost to the external world and does not know anything happening around him.

In swapna avastha he dreams of many varied experiences and events. He can remember the dreams when he passes on from the dreaming state to the jAgratha or waking state. But he may not remember the awakening state in his swapna avasta.

Your life as a woman is like a dream and you remember it when you came out of it. Your life as a man was in jAgratha avastha and so you did not remember it when you had become a woman.

It is impossible to understand MAyA. It is impossible to conquer MAyA. Even The Trinity possess the three GuNas. The only god who has transcended MAyA is Siva in Tureeya avastha. To overcome MAyA and gain pure JnAnam, The Devi who is the MAyA swaroopiNi has to bless us.

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

6. மாயையின் அறிவுரை

காச்யப முனிவரின் அறிவுரைகளை
கவனமாகக் கேட்டாள் அந்த மாயை;

“வீடு பேறு விரும்பும் வயோதிகருக்கும்,
காடு சென்று கடும் தவம் புரிவோருக்கும்,

முனிவரே உம் சொற்கள் பொருந்தும்!
இனிய வாழ்வை நாடுபவருக்கு அல்ல!

இன்பத்தை, நீண்ட ஆயுளை, நல்ல புகழை,
மேன்மையை, செல்வத்தை நாடுபவருக்கு

கூறுங்கள் அவற்றை அடையக் கூடிய
குறுக்கு வழி என்று ஒன்று இருந்தால்!”

அதிர்ந்து போனார் முனிவர், அதன் பின்
முதிர்ந்த அறிவுரைகளைக் கூறவில்லை.

“இந்த உலகில் மாந்தர் விழைவது இந்த
இரண்டு வகைச் செல்வங்களே அறிவீர்!

கல்விச் செல்வமும், பொருட் செல்வமும்
இல்லாத ஒரு வாழ்வு வெறும் தாழ்வே !

கல்வியிலும் சிறந்தது பொருட் செல்வம்.
கல்லாத செல்வர்க்கும் உண்டு செல்வாக்கு.

செல்வத்தை அடையத் தேவை ஊக்கம்;
சொல்லாமல் நிற்க வேண்டும் ஊக்கத்தில்.

எனக்குப் பிறந்து விட்டதால் நீங்களும்
அனைத்துத் தேவர்களுக்கும் பகைவர்கள்.

தேவர்களிலும் சிறந்த வாழ்வு நீர் பெற
ஆவது அனைத்தும் உரைப்பேன் நான்.

வடதிசை நோக்கிச் செல்லுங்கள் நீங்கள்!
திடமாகத் தவம் செய்ய நல்ல இடம் அதுவே;

நச்சு சமித்துக்களால் வளர்த்துங்கள் தீயை!
பச்சை ஊனையும், குருதியும் சொரியுங்கள்!

சிவபெருமான் மகிழ்ந்து வெளிப்படுவான்;
அவனருளால் பல மேன்மைகள் பெறுவீர்!”

சூர பத்மன் புறப்பட்டான் வடதிசைக்கு
தாரகன், சிங்கமுகன், அஜமுகியருடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2 #6. MAYA’S ADVICE.


MAyA listened to the sage’s long advice with rapt attention and then she spoke thus; “Your words are applicable to the old people who want to get liberated and to those tapasvis living in the jungle.

They are not useful to the people who desire for a long life of pleasure and happiness. Nor to those who seek wealth, fame and greatness. If there is a short cut method to achieve these things, teach that to our children!”

The sage was shocked to learn the true motives of MAyA. He spoke no more. MAyA continued: “The people of the world desire two things – Knowledge and Wealth. Of these wealth is preferred to knowledge. Even if a wealthy person does not have knowledge, he will still be respected, But not the other way!

You are my children. So all the Devas are now your enemies. I will tell you how to become superior even to the Devas and live a life better than theirs.

Go to the north. That place is ideal for doing penance. Do yagna with the poisonous samiththu and pour blood and meat in it. Siva will be pleased and emerge. You can get all the boons from him and become very powerful.”

Soorapadman left with his siblings and went northwards.



 
SRI VENKATESA PURAANAM

31d. சூரியனும், சுகரும்.

சக்தியினால் தோற்றுவித்தார் மானசீக புத்திரனை,
யுக்தியுடன் நிறுத்தினார் அவனை சூரியனின் முன்பு.

சாயாசுகர் வணங்கிய பின் கேட்டார் சுகரிடம்,
“மாயையால் என்னைத் தோற்றுவித்தது ஏன்?”

“கங்கைக் கரையில் வசிக்கும் என் தந்தைக்குத்
தங்கு தடையின்றி சேவை செய்து வருவாய்!”

வியாசருக்குப் பணிவிடை செய்வதற்குச்
சாயாசுகர் வசித்தார் சுவர்ண முகி தீரத்தில்.

கவர்ந்தது சுகரின் அறிவாற்றல் சூரியனை;
கதிரவன் கேட்டான் புதிர் போலச் சுகரிடம்,

தத்துவம் என்ன உள்ளது என் உருவில்?”
“சித்தத்துக்கு எட்டிய வரை கூறுகின்றேன்,

உண்டாயிற்று பிரணவம் நாரணனிடம்;
உண்டாயிற்று ஆகாசம் பிரணவத்திடம்;

உண்டாயிற்று வாயு ஆகாசத்திடம்;
உண்டாயிற்று அக்னி இவைகளிடம்.

வாயுவும், ஆகாசமும் கலந்த போது
வியாபித்தது அக்னி தோன்றிப் பரவி.

பிரளயம் தோன்றியது ஜல வடிவத்தில்!
பிரளய ஜலம் தோற்றுவித்தது பலப்பல

தங்க நிறம் கொண்ட ஒளிக் கிரணங்களை;
தங்க நிற ஒளிக்கிரணங்கள் ஆயின சூரியனாக!

அண்ட சராசரம் தோன்றியது அதிலிருந்து!
கொண்டிருந்தது வாழ வைக்கும் சக்தியை.

அசையும் அசையாப் பொருட்கள் வாழ
அவசியம் ஆனது அந்த சூரியனின் சக்தி.

சூரிய சக்தியால் மனிதன் பிறக்கிறான்;
சூரிய சக்தியால் மனிதன் வாழ்கிறான்.

அவன் சக்தி அடைகின்றது மீண்டும்
அதே சூரியனை ஒளிக்கிரணம் வழியே!”

அனுமதித்தான் சூரியன் சுகர் செல்வதற்கு;
வியந்தான் சுகரின் அறிவாற்றல் கண்டு!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#31d. The Sun and Sage Sukar

Sage Sukar created his son by his yogic power. The son was called as ChAyaa Sukar. “May I know why you have created me father?” the ChAyA Sukar asked the Sage Sukar. “My father VyAsa lives on the banks of River Ganges. I want you to go and serve him as I myself would do. ”

The ChAyA Sukar went to the banks of SwarNamuki river to serve Sage VyAsa – father of Sage Sukar. The Sun God was stunned by the intelligence and the yogic power of the Sage Sukar. “I wish to ask you one more question. What is the tatva hidden in me?” the Sun God asked the Sage Sukar.

The sage replied humbly, “I will make an attempt to answer this question to the best of my knowledge. PraNava appeared from Lord NArAyaNa. The AakAsam emerged from the PraNava. The VAyu emerged from the AakAsam. Agni emerged from these two.
When the AakAsam and VAyu merged, Agni emerged from them. PraLaya appeared in the form of water. The PraLaya jalam created several golden beams of light. These golden beams of light joined together and formed the Sun.

The Universe was created from the energy of the Sun. The Sun holds the power needed by all forms of life. The energy radiated by the Sun is essential for all the living things – those which can move about and those which cannot move about.

Man is born from the power of the Sun. He lives because of the power given by the Sun. His energy returns to the Sun again
though the same golden beams when he dies.”

Sun was pleased with this answer and allowed the Sage Sukar to pass through in his upward journey. He was wonderstruck at the intelligence of the Sage Sukar.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 6

6# 31. மாயா தேவி

சென்றார் விஷ்ணு மூர்த்தி வைகுந்தம்;
சென்றேன் பிரமனின் சத்திய லோகம்;

மாயைப் பற்றிக் கேட்டேன் பிரமனிடம்;
மாயையைப் பற்றிக் கூறினான் பிரமன்.

“வெல்ல இயலாது மாயையைத் தேவர்களால்;
வெல்ல இயலாது மாயையைத் தெய்வங்களால்;

வெல்ல இயலாது மாயையை ஞானிகளால்;
வெல்ல இயலாது மாயையை யோகிகளால்;

வெல்ல இயலாது மாயையை மும் மூர்த்திகளால்;
வெல்ல இயலாத மாயைக்கு முத் தொழில்கள்;

புரியும் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்பவற்றை;
விரியும் காலம், கர்மம், ஸ்வபாவம் என்று.

மயங்காதே மாயையைப் பற்றி சிந்தித்து;
வியக்காதே மாயையைப் பற்றி சிந்தித்து.”

கூறினான் பிரமன் இங்கனம் நாரதனுக்கு;
கூறினான் நாரதன் எனக்கு ஜனமேஜயனே!

வசித்தேன் சரஸ்வதி நதி தீரத்தில் சுற்றித் திரிந்து;
வசித்தேன் புராணங்களை இயற்றிக் கற்றுத் தந்து.

மரப் பொம்மைகள் போல நம்மையெல்லாம்
மயக்கி ஆடுவிப்பவள் ஆவாள் மாயாதேவி.

முக்குணங்கள் தொடர்பு கொள்ளும் மாயையுடன்;
முக்குணங்கள் தொடர்பு கொள்ளும் ஜீவர்களுடன்.

நீங்க முடியாது மாயையை விட்டு ஒருவராலும்;
நீக்குவாள் மாயையைத் தேவி தன் திருவருளால்.

துதிக்க வேண்டும் தேவியின் பாதங்களை நாம்;
உதிக்கும் மெய்ஞ்ஞானம்; மறையும் மனமயக்கம்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

தேவி பாகவதத்தின் ஆறாவது ஸ்கந்தம் இத்துடன் நிறைவு பெறுகிறது,

6#31. MAyA Devi


VishNu returned to Vaikuntham and I (NArada) went back to Satya lokam. I asked Brahma to tell me all about MAyA and he said, ”The Gods cannot overcome MAyA. The Devaas cannot overcome MAyA. Even JnAnis can not overcome MAyA nor can the yogis nor The Trinity.

The MAyA which cannot be conquered performs three operations namely the Srushti, Sthithi and Layam. It expands in to three factors namely the Time Factor, the Karma and SwabhAvam.

Do not waste your time in thinking about MAyA. It lies beyond our intellect. Do not get dazed by thinking about MAyA. It is beyond the power of comprehension.”

Oh king Janamejaya! Brahma told this to NArada and he told this to me.

I used to live in the banks of river Saraswati. I used to compose purANas and teach them to my disciples. I know that we are nothing more than mere wooden puppets in the hands of MAyA Devi.

The three guNas relate with MAyA. The three guNas also relate with jeevAs. So the chance of anyone getting rid of the MAyA is does not exist. Only Devi can dispel the MAyA – if she chooses to do so.

So our only hope is to worship her lotus feet and seek JnAnam and vairAgyam. She will bestow on us true JnAnam and dispel the delusion caused by her MAyA.”

Thus spoke sage VyAsa to King Janamejayan about the invincibility of MAyA.
With this, the Sixth Skanda of Bhagavathy Bhaagavatam gets completed.

 
KANDA PURAANAM - ASURA KAANDAM

7. மாயை நீங்குதல்

மக்களோடு புறப்பட்டு விட்டாள் மாயை;
விக்கித்துப் போனார் காசியப முனிவர்;

தையல் மீது கொண்ட மையல் – உச்சி
வெய்யில் போல எரித்தது முனிவரை.

“அன்பன் என்னை நீங்குதல் முறையோ?”
பின் தொடர்ந்து அரற்றினார் முனிவர்!

“மன்னியுங்கள் முனிவரே என்னை நீங்கள்;
மக்கட்பேற்றை விழைந்து வந்தேன் உம்மிடம்;

சொந்தம் கொண்டாடி வாழ்வதற்கல்ல!
வந்த நோக்கம் நன்கு நிறைவேறியது.

என் பெயர் மாயை. நானும் ஒரு மாயை!”
கண் முன்னேயே மறைந்தன அனைத்தும்.

மகனின் மனக் கலக்கத்தை அறிந்த – நான்
முகன் வந்தான் அவனைத் தேற்றுவதற்கு.

“அருந்தவம் புரிவதை விட்டு விட்டு நீ
வருந்தி நிற்பது ஏன் கூறு என்னிடம்!”

மாயையின் திடீர் வருகை, நோக்கம்;
தேவை முடிந்தபின் உதறிச் சென்றது;

மறைக்காமல் கூறினான் மறைமுனிவன்
மறைகள் ஓதும் தந்தை நான்முகனிடம்.

“மறைகள் கற்ற முனிவன் நீ! மகனே
அறிவற்றவன் போலப் புலம்பலாகுமா?

கள், காமம் என உண்டு இரண்டு எதிரிகள்.
கள்ளினும் கொடியது ஐயமின்றிக் காமமே!

உண்டவர் மனத்தைத் தான் மயக்கும் கள்.
கண்டவர் மனத்தையே மயக்கும் காமம்.

ஆழ்த்தும் இம்மையில் துன்பக் கடலில்!
வீழ்த்தும் மறுமையில் பிறவிக் கடலில்!

இழிவு பட்டாய் வஞ்சகியோடு இணைந்து!
இழிவு தீரக் கடும் தவம் புரிவாய் மகனே!”

மனம் தெளிந்த முனிவன் முன்போல்
கனத்த தவத்தைச் செய்யலுற்றான்.

வேண்டியதைத் தரும் தவத்தை மாயை
ஆண்டவனை நோக்கிச் செய்யலுற்றாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#7. MAYA DESERTS THE SAGE.


MAyA got ready to go off with her children. The sage was shocked by this. His lust for MAyA scorched him like the midday Sun. “You can’t desert me like this!” He lamented following her closely.

“I came to get worthy children from you and not to live with you. Please pardon me! I must go with my children. My name is MAyA. I am also a mAyA.” Along with her, all her creations, the mandapams, the ponds and the flower gardens disappeared. The sage was steeped in sorrow.

Brahma, the father of the sage, saw his son wallowing in self pity and sorrow. He consoled him and demanded to know what had upset him thus. The sage told him everything, MAyAs arrival, the night he had spent with her producing powerful offspring and the way MAyA had deserted him the very next morning.

Brahma told him, “You are a learned sage but You have behaved like a fool. You have degraded yourself by spending the night with her producing offspring. It is time to go back to your penance from the shameful act you have just performed.

There are two things which ruin a man – the wine and the woman. The wine disturbs the mind of one who drinks it. The women disturbs the minds of even the onlookers. The women make you miserable and bind you in samsAram.”

The sage got consoled and returned to do penance. At the same time MAyA was also doing a powerful yagna which would give her whatever she sought.


 
SRI VENKATESA PURAANAM

31e. சுக க்ஷேத்ரம்


போற்றினார் லக்ஷ்மியை சாயா சுகர்;
போற்றினர் லக்ஷ்மியை மும்மூர்த்திகள்;

போற்றினர் லக்ஷ்மியைத் தேவ கந்தர்வர்கள்;
போற்றினர் லக்ஷ்மியை முனி புங்கவர்கள்.

பிரமன் வேண்டினான் லக்ஷ்மி தேவியிடம்,
“தர வேண்டும் பத்ம தீர்த்தத்தில் நீராடினால்

அஷ்ட ஐஸ்வரியங்களையும் அள்ளி அள்ளி!
கஷ்டங்கள் எல்லாம் தொலைய வேண்டும்!

ஆலயம் அமைக்கும் எண்ணம் கொண்டேன்;
அனுமதி வேண்டும் அதை இங்கு அமைக்க”.

“சுக க்ஷேத்திரத்தை விடுத்தது என்னுடன்
சேஷாச்சலம் நீயும் வரவேண்டும் தேவி”

பகவான் கூறினான் லக்ஷ்மி தேவியிடம்,
பகவானுக்கு பதில் அளித்தாள் லக்ஷ்மி.

“சுக க்ஷேத்திரத்தில் இருக்க விருப்பம்;
இக பரம் தர வேண்டும் என் பக்தருக்கு!”

விசுவகர்மா அமைத்தான் ஆலயத்தை!
விசுவாசி சாயா சுகர் ஆராதனைகளை!

“செல்வதை வாரி வாரி வழங்குவாய் நீ!
செல்வர் என்னை வந்து தொழுத பின்பே.”

“கார்த்திகை மாதம் சுக்கில பஞ்சமியன்று
காத்திருப்பேன் தங்கள் மாலை, சேலைக்கு!

மறக்காமல் தர வேண்டும் ஆண்டுதோறும்!”
இறைவனிடம் வேண்டினாள் லக்ஷ்மி தேவி.

சுக க்ஷேத்திரத்தில் குடி கொண்டாள் லக்ஷ்மி;
சேஷாச்சலத்தில் குடி கொண்டான் பகவான்.

மலர்ந்த தாமரை மேல் தோன்றியவளை
அலர்மேல் மங்கை என அழைக்கின்றனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

வேங்கடேச புராணம் முற்றுப் பெற்றது.


சுபம், சுகம், சாந்தி எங்கும் நிலவட்டும் !


#31e. Suka Kshetram

Sage ChAyA Sukar praised Lakshmi Devi. The Trinity praised Lakshmi Devi. The Devas and Gandharva praised Lakshmi Devi. The sages praised Lakshmi Devi. Everyone from everywhere praised her.

Brahma requested Lakshmi Devi to grant a boon to the world. “Whosoever bathes in this Padma theertham must be blessed with all kinds of wealth by you Devi! All their sins must get washed away. Also I wish to build a temple for you here in this spot. I need your permission Devi”

SrinivAsan told Lakshmi Devi, “Please come with me to SeshAchlalm.” But Lakshmi Devi replied , “I wish to stay on here in Suka Kshetram itself. I want to bless my devotees with the best in this world and the next. ”

Viswakarma built a temple worthy of Lakshmi Devi. ChAyA Sukar arranged for the various pooja and AarAdhana. SrinivAsan told Lakshmi Devi, “Bless your devotees with immense wealth. Those who come here to worship you, will come to worship me in SeshAchalam, before going back.”

Lakshmi Devi made a request to SrinivAsan. “Please send me a new sari and a garland on the Sukla Panchami day in the month of KArthigai. I shall eagerly await these gifts from you every year. ”

Lakshmi Devi settled own in her temple in Suga Kshetram. SrinivAsan settled down in his temple in SeshAchalam. Devotees throng to worship these two Gods and get their blessings and grace.

Since Lakhmi Devi appeared on the lotus flower with one thousand petals, she is called as Alarmel Mangai (The Devi on the lotus flower)

The Venkatesa PurANam gets Completed with this story.


May Peace, Prosperity and Auspiciousness prevail all over the world!!!

 
THOUGH THE TRAFFIC IN MY BLOGS (THE LINKS TO WHICH I HAD GIVEN HERE A FEW DAYS AGO)

DID NOT SHOW ANY SPIKES, THE TRAFFIC IN THIS THREAD HAS BEEN 1855 IN THE PAST 24 HOURS.

I THANK ALL THE READERS FOR THEIR CONTINUED SUPPORT. :pray2:

THE NEXT BLOG OF POEMS MAY LAUNCHED IN 2018 BASED ON

THE LIFE OF THE 64 NAAYANMAAR (GOD WILLING AND MY HEALTH PERMITTING)
 

Latest ads

Back
Top