KANDA PURAANAM - URPATTHIK KAANDAM
24. குமாரபுரி
கதிரவன் மேற்கில் மறையலானான்;
“புது நகர் அமைத்து ஈண்டு எழுந்தருள்க!”
தேவர்கள் வேண்டினர் குமரக் கடவுளை;
தேவத்தச்சன் அமைத்தான் ஒரு நகர்;
முருகன் எழுந்தருளிய அந் நகருக்குத்
திருச் சேய்ஞலூர் என்ற அழகிய பெயர்!
பிரமன் முதலிய தேவர்கள் தமக்குத்
தரப்பட்ட அரியணைகளில் அமர்ந்தனர்.
தாரகனும், கிரௌஞ்சமும் அழிந்ததால் – மனப்
பாரம் சற்று நீங்கினான் தேவேந்திரன்.
வனதேவதை ஒன்று வந்தது அங்கே;
கனக ஆபரண மூட்டையைத் தந்தது;
இந்திராணியின் நகைகளைப் பாதுகாக்க
இந்திரன் தந்திருந்தான் வன தேவதையிடம்.
அணிகலன்களைக் கண்டதுமே மனைவியை
அணைக்கும் ஆவல் பெருகியது இந்திரனுக்கு.
ஏவலர்கள் மூட்டையைக் கட்டிய பிறகும்
காமநோய் அவனை வட்டி வதைத்தது;
கதிரவன் எழுந்ததும் மறைந்தது காமம்;
பதை பதைத்துப் பணிந்தான் குமரனை;
“ஐயனை வழிபட விழைகின்றேன் – நான்
செய்யும் பூஜைக்குப் பொருள் தருவிப்பாய்!
ஏவலர் தந்தனர் திருவிளக்கு, நறும்புகை,
பூ மலர், பொன்னாடை, திருவமுதுகள்.
இறைவனுக்கு அமைத்தான் திருக்கோவில்;
முறைப்படி அமைத்தான் அதில் சிவக்குறி!
வழிபாடுகள் செய்து போற்றினர் அனைவரும்,
வெளிப்பட்டார் உமையுடன் சிவபெருமான்;
மக்களுக்கு வழங்கினர் தன் நல்லாசிகள்,
மகனுக்குத் தன் ருத்ர பாசுபத அஸ்த்திரம்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
1#24. KUMAARA PURI.
The sun was setting at the west. The Devas told Murugan, “Please reside here in a new city which will be built by Viswakarma.”
Murugan agreed. The city was named as Thiruch Cheignaloor. The other Devas occupied the seats allotted to them and Murugan occupied his throne.
Indra felt relieved since the evil TArakan and his ally the crafty Krounja Giri had been destroyed. A fairy appeared there. She handed over a bundle to Indra. It contained the jewels of Sasi Devi – which had been given to the fairy for safe keeping.
Indra saw the jewels of his wife and wanted to be with her. The whole night he spent in pangs on love. In the morning he became normal and greeted Murugan. Murugan wanted to do pooja to Siva and Uma and wanted the auspicious things required for it. The servants of Indra brought the lamp, incenses, flowers, new silk cloth, ornaments and neivedhyam for the pooja.
A temple was constructed and a Sivalingam was installed there. Siva was pleased with the pooja. He appeared in person with Uma Devi. He blessed everyone there and gave His powerful Rudra PAsupatha asthram to Murugan.