• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 7

7#3c. திருமணம்

“தனியாக வனத்தில் வயதான ச்யவன முனிவர்.
மனிதரின் கண் பார்வையைப் பறித்து விட்டேன்.

பணிவிடை செய்வது என் கடமை ஆகிவிட்டது.
குணம் பெற வேண்டும் மக்கள் அனைவருமே.

காத்துக் கொள்வேன் என் கற்பின் நெறிகளை;
காத்து வருவேன் கண்ணிழந்த முனிவரையும்!”

எத்தனை கூறினாலும் ஏற்கவில்லை சுகன்யா!
அத்தனை மக்களும் ஆழ்ந்தனர் வியப்பினில்.

மனோதிடம் கண்டு மாறியது மன்னனின் மனம்.
வனத்துக்குச் சென்றனர் மீண்டும் ஒருமுறை.

மணம் முடித்தான் மன்னன், மகளை முனிவருக்கு!
மனம் மகிழ்ந்தார் முனிவர்; ஆசிகள் தந்தார் அவர்.

நொடியில் மறைந்து விட்டன உபாதைகள்!
விடை பெற்றுச் சென்றனர் பரிவாரங்கள்.

அணிகலன்களைத் தந்து விட்டாள் தந்தையிடம்;
அணிந்து கொண்டாள் மரவுரி, துளைசி மாலை.

இளமைச் சுகத்தை எண்ணவில்லை பெரிதாக!
வளமான வாழ்வை எண்ணவில்லை பெரிதாக!

“அருந்ததி வசிஷ்டரின் தர்ம பத்தினியாகி
வருங்கால சந்ததிக்கு வழிகாட்டுவது போலக்

கற்புடன் வாழ்வேன்; நற்பெயர் பெறுவேன்;
சற்றும் வருத்தம் இன்றிச் சென்று வாருங்கள்”

கண் கலங்கினான் நாடாளும் மன்னன்;
கண் கலங்கினர் அந்நாட்டுப் பிரஜைகள்!

ஆறுதல் கூறினாள் ரிஷி பத்தினி சுகன்யா;
தேறுதல் அடைந்து திரும்பினர் நாட்டுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#3c. The wedding

“The blind and old sage lives all alone in a forest. I deprived him of his eyesight. So now it has become my duty to take care of him. I do not want all the people of our country to suffer on my behalf. I will protect my virtue and take good care of the old sage.”

Princess Sukanya was adamant and no amount of argument would change her mind. The King changed his mind since the princess would not change her mind. The people of that country were dazed to see the selflessness of the young princess.

They all went to the garden beside the pond one more time. King SaryAti gave away his daughter to the rushi in marriage. Immediately all their discomforts and distress vanished!

Princess Sukanya gave back all her precious jewels to her father. She wore the ‘maravuri’ and Tulasi mAlA as the people living in vana vAsam used to wear.

Sukanya did not value the carnal pleasures above her duty as a rich patni. She did not value a prosperous life in the palace above her duty as a rich patni.

She told the king, “I shall live a chaste life and become an example for the human beings just as Aruntati has become by being the chaste wife of Vasishta.”

The king was moved to tears and so also his citizens. But Sukanya consoled all of them as a rishi patni. They got consoled and returned to their capital city.



 
bhagavathy bhaagavatam - skanda 1

1#4b. நாரதரின் பதில் (1)

“சிந்தனையில் ஆழ்ந்துள்ளது ஏன் வியாசரே?”
வந்த நாரதர் வினவினார் வியாச முனிவரை.

“புத்திரன் இல்லாதவனுக்கு இல்லை நற்கதி;
உத்திரவாதமாக உரைக்கின்றன வேதங்கள்!

குழம்புகின்றேன் இதையே எண்ணி எண்ணி நான்!
முழுகுகின்றேன் துன்பக் கடலில் செய்வதறியாமல்.

தவம் செய்து பெறப் போகின்றேன் சத் புத்திரனை.
தவம் செய்வது யாரைக் குறிந்து என்ற குழப்பம்.

எல்லாம் அறிந்த திரிகால ஞானி நீர் நாரதரே!
சொல்லுங்கள் தவத்துக்கு உகந்த தெய்வம் யார்?”

“இதே கேள்வியைக் கேட்டேன் நான் பிரமதேவனிடம்;
இதே கேள்வியைக் கேட்டான் பிரமன் விஷ்ணுவிடம்.

எல்லாம் வல்ல நாரணன் இருந்தார் தியானத்தில்;
சொல்லொண்ணா வியப்படைந்தான் பிரமதேவன்!

“தேவாதி தேவன் நீரே! திருமகள் நாதன் நீரே!
யாவரும் மயங்கும் அழகுடையவர் நீரே!

எங்கும் வியாபித்து இருப்பவர் நீரே! கரங்களில்
சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஏந்தியவர் நீரே!

முக்காலமும் உணர்ந்த மூர்த்தியாகிய நீர்
எக்காரணம் கொண்டு இத் தவம் செய்கின்றீர்?

உம்மிடம் உதித்த நான் படைப்புக் கடவுள் எனில்
உம் பெருமையை நவிலவும் இயலுமோ கூறும்.

உம்மிலும் உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது இதுவே!”

உலகம் உய்யவேண்டும் விசாலம். K. ராமன்


1#4b. NArada’s reply (1)


“What are worrying about?” NArada asked Sage VyAsa with concern.

Sage VyAsa replied, ” I know that a man who does not have son has to suffer in hell. I want to beget a worthy son through my penance. But I do not know who to meditate upon! You are a three kAla JnAni. Please guide me as to the best God who is sure to give me the boon of a good son!”

NArada said,” I had asked the same question to my father Brahma. He had asked the same question to his father VishNu. At that time VishNu was in meditation. Brahma was surprised that the all powerful VishNu himself was meditating upon another God.

Brahma told VishNu,” You are the God of all the Gods! You are the consort of Lakshmi Devi! You are the most handsome among Gods. You pervade the whole Universe. You are the wielder of the Conch, the Sudarshan, the mace and the lotus. You know the past and the future. Why should you meditate on another God?

I was born out of you and I am the God of creation. No one need talk to me about your greatness! I am amazed as to who is the God or Power superior to you – who you yourself have to meditate upon!”



 
kanda puraanam - asura kaandam

10. துர் உபதேசம்

மேன்மைகள் பெற்று மகிழ்ந்த சூரன்
மீண்டும் சென்றான் தன் தந்தையிடம்;

முனிவரை வணங்கி விவரங்கள் கூறி
“இனிச் செய்ய வேண்டியது யாது?” என,

“செல்வாய் நீ உன் குலகுரு சுக்கிரரிடம்;
சொல்வார் அவர் உந்தன் கடமைகளை!”

சுக்கிரர் ஆசி வழங்கி ஆரத் தழுவினார்,
மிக்க மகிழ்ச்சியுடன் அளவளாவினார்.

வீர வேள்வி செய்து பெற்ற மேன்மையை
விவரமாக கூறினான் வீரன் சூரபத்மன்.

“இனிச் செய்ய வேண்டியவை எவை எனக்
கனிவுடன் கூறுங்கள் எம் குலகுருவே!”

குரு நன்மைகளையே கூற வேண்டும்!
குரு சுக்கிரர் இதற்கு ஒரு விதிவிலக்கு!

“பதியும், பசுவும் ஒன்றே! பாசம் பொய்!
மதியாதே வினையை, வினைப்பயனை!

ஆற்றும் வினைகளை அஞ்சாது ஆற்றுக!
அறம், மறம் என்பவை அறிவின்மையே;

மறு பிறப்பு என்பது ஒரு முழுப் பொய்!
பிறப்பில் தேவரையும் விஞ்சினாய் நீ!

நீயே பிரமன்! தேவர்கள் உன் பகைவர்கள்!
தீயோரை தண்டிப்பது செய்யத் தக்கதே!

தேவர் கோனைச் உடன் சிறைப்படுத்து!
தேவரை, முனிவரை, ஏவல்கள் செய்வாய்!

கொலை, களவு, காமம் என்றவற்றை
நிலை குலையாமல் செய்து வருவாய்!

ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் சென்று,
ஆட்சியை நன்கு நிலைநாட்டி வருவாய்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#10. Guru Sukra’s wicked teachings


Soorapadman was very pleased with the boons he has acquired from Lord Siva. He went back to his father the sage Kasyapa and asked, “Sire! what is to be done by me now?”

The sage told him to go to his kulaguru and seek his advice. Sukra was very happy to hear about the boons given by Lord Siva. But he did not guide Sooran in the proper path. He created delusion and confusion in the mind of Sooran by his wrong teachings.

“There is no difference between the God and the man. There is no rebirth after death. There is no such thing as the fruits for our actions. There is no such division as Dharma and Adharma.

You are now superior even to the Devas! You realise that you are the Brahma now. All the Devas are your natural enemies. They need to be punished. Imprison Indra who keeps killing our clan – the asuras.

Make the Rushis your servants. You can do whatever you wish to do. You have the power and Siva’s protection. First of all go to the 1008 worlds of which you are the ruler now. Establish your rule there and then come back to me!”

 
07. அஞ்சனாத்ரி

வந்தனர் அங்கே சிவனும், உமையும்.
கண்டனர் மந்திகள் கூடிக் களிப்பதை!

இன்புற விரும்பினர் தாமும் அவ்விதமே ;
இருவரும் மாறினர் இரண்டு மந்திகளாக!

பரம சிவனிடம் வெளிப்பட்ட தேஜசைப்
பிரசாதமாகத் தந்துவிட்டான் வாயு அன்று!

கனி என்று எண்ணிப் புசித்துவிட்டாள்!
கனி அல்ல அது; சிவனுடைய தேஜஸ்!

அசரீரி கேட்டது அஞ்சனைக்கு அப்போது;
“அசாதரணமான மகன் பிறப்பான் உனக்கு!

மகேஸ்வரனின் ஒரு அருட் பிரசாதமாக;
மகா பலவானாக; ஒரு மகா பண்டிதனாக;

மகா பக்தனாக, ஒரு சிரஞ்சீவியாக!” என்று.
மன நிம்மதி கொண்டாள் தேவி அஞ்சனை.

வானர உருவில் வந்து பிறந்தான் ஒரு மகன்,
வானில் பாய்ந்து சென்று விளையாடினான்!

கனி எனக் கருதினான் செங்கதிரவனை!
இனித்துச் சுவைக்கப் பறிக்கச் சென்றான்.

தடுத்தான் பிரம்மாஸ்திரத்தால் பிரமன்;
தரையில் விழுந்தான் மயங்கிய குழந்தை!

அஞ்சனையின் கண்ணீருக்கு அளவில்லை.
அஞ்சி ஓடி வந்தனர் தேவர்கள் அவர்களிடம்.

“பாலகனுக்கு இல்லை என்றுமே ஆபத்து!
பாலகனுக்கு இல்லை என்றுமே மரணம்!”

தேவ கானமும், சாஸ்திர ஞானமும் தந்து,
தேஹ வலிமை, தொண்டு மனப்பான்மை,

வாக்கில் சாதுர்யம், மனதில் பூரண பக்தி,
திக்கெட்டும் பரவிய புகழ், அஷ்டசித்திகள்;

அனைத்தும் தந்தனர் அஞ்சனை மகனுக்கு;
“இனி ஒருவர் இணையாகார் இவனுக்கு!

புனிதத் தலம் விளங்கிடும் இப் புவனத்தில்
இனி அஞ்சனாத்ரி என்று உன் பெயரால்!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#07. AnjanAdri


Siva and Uma came to that garden. They saw the monkeys there enjoying intimacy on the tress. They too wished to enjoy in the same manner. So they both assumed the form of two monkeys.

When Siva released his tejas, VAyu Devan caught hold it and took it to AnjanA Devi. He dropped it in her hands as usual and she gulped it down as usual. But it was not a fruit as usual and was indeed the tejas which had emerged from Lord Siva.

AnjanA Devi became pregnant as well as worried. Just then she heard an AakAsh vANi which told her, “You will be blessed with a very unusual son as the divine prasAdam of Lord Siva. He will be extremely strong, extremely intelligent, a great devotee and a chiranjeevi”. AnjanA Devi felt relieved on hearing this celestial message.

She delivered a son at the due time. He was unusual no doubt. He could jump very high in the sky and he was utterly fearless. He mistook the rising red Sun to be a ripe fruit and jumped into the heavens to pluck it and eat it.

Brahma got bewildered and tried to stop the child from stealing the Sun with his Brahma asthram. The child got hit and fell down unconscious on the earth. AnjanA Devi’s tears were uncontrollable. The Devas felt sorry for Brahma’s rude action and rushed to where AnjanA Devi and her son were.

They showered blessings upon blessing upon that child. “Nothing can harm this child. He will be an immortal. He will have the most coveted ashta sidhdhis. He will be a divine singer. He will have the knowledge of all the sAstrAs. His physical strength will be nonpareil.

He will be service minded. He will be an expert in the play of words and in arguing. He will be a great devotee of God. His fame will spread far and wide and it will never ever diminish. No other person can ever become as great as this child is going to become.

In addition to all these boons bestowed on your son, this place will be named after you as Mountain AnjanAdri hence forth!”

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#4a. இனிய இல்லறம்

பின் தூங்கி முன் எழுந்தாள் சுகன்யா.
முன் நின்று செய்தாள் பணிவிடைகள்.

கண்ணிழந்த கணவனின் தேவையறியும்
பெண்ணினத்தின் பொன்னணி ஆனாள்.

உணவு அளித்து உபசரித்தாள் – அவருக்கு
உடல் நோகாமல் மெல்லப் பிடித்து விட்டாள்.

கண்டனர் அஸ்வினி குமாரர்கள் அவளை.
கொண்டனர் மோஹம் அவளது எழிலில்!

“யார் நீ ? யார் மகள்? யார் மனைவி?
யாரும் இல்லாத வனத்தில் வாழ்வது ஏன்?

மணிகளும், பட்டாடையும் அணியாமல் – நீ
மரவுரியும், துளசி மாலையும் அணிந்தது ஏன்?

ஒய்யாரமாக விமானத்தில் அமர்ந்து செல்லாமல்
மெய்யாகவே கால் பதிய நடப்பது ஏன் கூறு!” என

“மன்னன் சர்யாதியின் மகள் சுகன்யா ஆவேன்;
மணந்து கொண்டுள்ளேன் ச்யவன முனிவரை.

அந்தக, வயோதிகக் கணவர் முனிவருக்கு
அன்போடு பணிவிடை செய்து வாழ்கிறேன்.”

“விட்டு விட்டு வந்துவிடு குருட்டுக் கிழவனை!
கட்டிக் கொள் எங்கள் இருவரில் ஒருவனை!

உல்லாச வாழ்வு வாழ்வோம் நெடுங்காலம்;
சல்லாபம் செய்வோம் சோலை வனங்களில்.

வேலை செய்யப் பிறந்தவள் அல்லவே நீ!
வேடிக்கை விநோதங்களைச் சுவைப்பாய்!

வீணாகாதே உன் இளமையை எழிலை!
வாணாள் வீணானால் மீண்டும் வாராது!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

9#4a. The wedded life

Sukanya slept after her husband retired and woke up before he got up. She did everything he needed her to do. She could sense his requirements by her instinct and served him well even without being commanded. She gave him food and gently massaged his aged body to relieve the pain.

One day the Ashwini DevatAs happened to see her. They fell in love with this beautiful princess at the very first sight. They asked her, “Who are you? Whose daughter are you? Whose wife are you? Why do you live alone in a forest?

Why do you wear ‘maravuri’ and ‘tulasi mAlA’ instead of rich silks gold jewels? Why do you go by walk instead of travelling in style in a vimAnam?”

Sukanya replied to their questions.”I am the daughter of King SaryAti. I am the wife of sage Chyavana. He is old, infirm and blind. So I take care of him to the best of my ability.”

The Ashwini DevatAs told Sukanya,”Give up your old and blind husband and choose one of us as your husband. We can live a long life filled with pleasure. We can enjoy visiting the beautiful gardens.

You were not born to do any hard physical work. You are born to live in comforts and prosperity. Do not waste your youth and beauty in this forest. They will not last for ever. They will be lost for ever once they are gone!”

 
bhagvathy bhaagavatan - skanda 1

1#4c. நாரதரின் பதில் (2)

“பிரபஞ்ச நாயகரகக் கருதுகின்றேன் உம்மை.
பிரபஞ்ச காரணராகக் கருதுகிறேன் உம்மை.

முழு முதற் கடவுளாகக் கருதுகின்றேன் உம்மை!
தொழும் பக்தரைக் காப்பவராகவும் கருதுகிறேன்!

சகலமும் செய்பவராகக் கருதுகின்றேன் உம்மை.
சம்ஹார மூர்த்தியாகவும் கருதுகின்றேன் உம்மை

வானில் சூரிய சந்திரர்கள் திரிவது உம் ஆணையால்;
அனிலன் தென்றலோ புயலோ ஆவது உம் ஆணையால்.

எரியும் அக்னி வெப்பத்தைத் தரும் உம் ஆணையால்
சொரியும் மேகங்கள் மழையை உம் ஆணையால்.

ஆயினும் இத்தனை பெருமைகள் படைத்த நீரே
அமர்ந்துள்ளீர் ஒரு தெய்வத்தின் மீது தியானத்தில்!

உமது புத்திரன் நான்; உமது பக்தன் நான்;
உண்மை கூறுங்கள் நான் தெளிவடையும்படி!”

“கவனித்துக் கேள் பிரம்மனே நான் கூறுவதை!
அவனியில் உண்மையில் சிறந்த தெய்வம் யார்?

முத் தொழிலுக்கு உரிய தெய்வங்களாக
மும் மூர்த்திகள் நம்மைக் கருதிகின்றனர்.

எத்தொழில் நடப்பதற்கும் தேவைகள் இரண்டு,
அத்தொழில் புரியும் சக்தியும், சாமர்த்தியமும்!

உலகை படைத்திடும் உன்னிடம் உள்ளது
உன் தொழிலுக்கு உதவிடும் ராஜஸ சக்தி!

காக்கும் தொழிலைச் செய்யும் என்னிடம்
சாத்வீக சக்தி நிரம்பியுள்ளது உதவிட.

சம்ஹரிக்கும் சங்கரனிடம் நிரம்பியுள்ளது
சம்ஹரிக்கத் தேவையான தாமஸ சக்தி.”

உலகம் உய்ய வேண்டும் விசாலம். K. ராமன்


1#4c. NArada’s reply (2)


“Brahma continued to VishNu,” I consider you as the ruler of the world and as the creator of the world. I consider you as the supreme among Gods and the savior of all sincere devotees.

You are capable of every action. You can destroy as well as protect. The Sun and the Moon obey your commands. The wind becomes gentle or violent depending on your command. Agni (The God of Fire) burns things and clouds rain down on your
command.

But you are meditating on another power. I am not just your son. I am also your foremost devotee. You must tell me the truth and put an end to my confusion”. Thus spoke Brahma to VishNu.

“Listen to me carefully now oh Brahma! I shall reveal to you who is the supreme among the Gods. Everyone thinks that we the Trinity are responsible for the Generation, Protection and Destruction of the entire creation. But for anything to be done we need two requirements – the ability to do it and the knowledge to do it.

You create the universe. To help you in creation you are bestowed with RAjasic energy. As the protector of the creation, I am endowed with SAtvic energy. As the God of destruction Rudran is bestowed with the TAmasic energy.“

 
kanda puraanam - asura kaandam

11a. தத்துவங்கள்

அறிவுத் தத்துவம் தோன்றும் மூல பிரகிருதியில்;
அஹங்காரத் தத்துவம் அதலிருந்து தோன்றும்;

அஹங்காரத்தில் இருந்து தோன்றும் ஐம்புலன்கள்;
அவற்றில் இருந்து தோன்றும் ஐம்பெரும் பூதங்கள்;

மண் தத்துவத்துக்கு விரிந்து பரந்து அமைந்துள்ளன
அண்டங்கள் ஓர் ஆயிரம் கோடி எண்ணிக்கையில்;

அண்டங்கள் அனைத்தும் பொன் நிறமுடையவை;
அண்டங்கள் ஆயிரத்தெட்டு உன்னுடையவை இன்று;

அண்டங்கள் அனைத்தின் இயல்பை அறிந்திட
அண்டம் ஒன்றின் இயல்பைக் கூறுகிறேன் நான்;

அண்டத்தின் அகலம் நூறு கோடி யோஜனை ஆம்;
அண்டத்தின் உயர்ச்சியும் நூறு கோடி யோஜனை;

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#11a. A UNIVERSE.

Budhdhi thathva is born out of Moolap Prakruthi. AhankAra thathva is born out of Budhdhi thathva. The five subtle elements are born out of ahankAram. Form these five subtle elements the five elements viz AakAsam, VAyu, Agni, Jalam and Earth are born.

The earth exhibits itself as numerous universes. They are ten thousand million universes in the cosmos. Of these one thousand and eight belong to you. If you know about one universe then you know about every universe. They are very much similar in every aspect.The universe is golden in colour. It is eight thousand million miles high and equally wide.


 
sri venkatesa puraanam

08. மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்;
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்!

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குல ஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#08. MAdhavan


Purandaran was a good Brahmin who lived in Nadanam. He had a son as good as himself called MAdhavan. Chandra Rekha was his daughter in law and they lived a peaceful and contented life.

One day MAdhavan and Chandra Rekha went on a teerta yAtra. They bathed in the holy rivers and ponds and prayed to the deities.

One day he made her wait near the banks of a pond and went to the forest to fetch some fruits for her. But by the cruel play of fate, he saw a very attractive woman of the fourth varNa who had come there to cut the grass. He fell madly in love with her and followed her to her hut – forgetting all about his loyal wife who was waiting for him on the banks of the pond.

He lived with that woman and ate what she ate. Soon he forgot that he used to be a pure Brahmin. He waylaid passers by and stole their goods and money. He enjoyed carnal pleasures with her endlessly.

Soon he had become very old, infirm and weak. He could not commit robbery any more nor keep his woman happy. One fine day the woman walked away from him and his life very quietly.

 
devi bhaagavatam - skanda 7

7#5a. அஸ்வினி தேவர்கள்(1)

உடல் நடுங்கினாள் அஸ்வினி தேவதைகள்
தொடர்ந்து கணவனை நிந்தித்தது கேட்டு.


“சூரியனின் குமாரர்கள் ஆவீர்கள் நீங்கள்!
பாரினில் பதிவிரதா தர்மம் ஒன்று உண்டு.


அருந்தவ முனிவருக்கு அர்ப்பணித்தார்
அருமையாக என்னை வளர்த்த தந்தை.


தேடுவேனோ பரபுருஷர்களைச் சுகம் காணக்
கேடு கேட்ட வியபச்சாரியைப் போல நானும்?


அனைத்துக்கும் சாக்ஷி விண்ணில் சூரியன்;
நினைத்தும் பாக்க முடியவில்லை என்னால்


ஆதவனின் குமாரர்கள் இருவரும் எனக்குப்
போதிக்கின்றனர் கணவனைக் கைவிடுமாறு!


ஆத்திரம் கொள்வேன் அரசன் மகளாக!
பாத்திரம் ஆகிவிடாதீர் என் சாபத்துக்கு!


சென்று விடுங்கள் நீங்கள் வந்த வழியே!
நின்று கொண்டிருப்பது நன்மை தராது!”


அதிர்ந்து போயினர் அஸ்வினி தேவதைகள்!
‘பதி பக்தியில் இவளுக்கு நிகராவாள் இவளே!’


“மகிழ்ந்தோம் உன் பதிபக்தியைக் கண்டு.
நெகிழ்ந்தோம் உன் கணவனின் கதி கேட்டு.


தேவ வைத்தியர்கள் ஆவோம் யாம் இருவரும்.
தேவ வடிவம் தருவோம் கணவர் முனிவருக்கு!


பருமமும், உருவமும் ஆகும் எமக்குச் சமமாக.
இருப்போம் நாங்கள் மூவரும் ஒரு போலவே!


கண்டறிய வேண்டும் உன் கணவனை எம்மில்;
கண்டறிய முடியும் உந்தன் பதி பக்தியினால்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#5a. Ashwini DevatAs


Sukanya shuddered when she heard the Ashwini DevatAs talk ill of her dear husband. She told them,” You two are the sons of Sun God. Surely you must be knowing about something known as pati vratA dharmam.


My father gave me away to sage Chyavana as his wife. Will I seek other men to enjoy the carnal pleasures? Am I a harlot to seek other men just for the sake of pleasure?


Sun is the only witness to everything happening everywhere. I am surprised that the two sons of Sun God will preach infidelity to a rishi patni. I was born as the daughter of a king. I can get angry enough to curse both of you.


Please go away from here and now. Talking to me further will never achieve what you have in your mind.” Sukanya was firm and fierce in her warning given to the Ashwini DevatAs.

The Ashwini DevatAs stood rooted to the spot shocked by her words. Who would refuse the life with the celestial vaidhyas and stick on to a blind old rushi except a pati vratA?


They told her,”We are immensely pleased by your pati vratA dharmam and pati bkakti. We are the vaidhyas of Devas. We are moved to pity on hearing the sad plight of your husband.


We can bestow on him a Deva roopam (the figure and form of a celestial being) and make him an exact replica of us in every respect. You will have to spot him from among the three of us who will resemble one another. We are sure you will be able to do it because of your pati bhakti”





 
devi bhaagavatam - skanda 1

1#4d. நாரதரின் பதில் (3)

“அற்புத சக்தி மட்டும் இல்லாமல் போனால்
நின்றுவிடும் நம் தொழில்கள் முற்றிலுமாக!

சக்தியின் வயப்பட்டே உள்ளளோம் நாம்.
சக்திக்கு உட்பட்டே புரிகின்றோம் தொழில்.

மூழ்குகின்றேன் தியானத்தில் சில சமயம்
மூழ்குகின்றேன் இன்பத்தில் லக்ஷ்மியுடன்.

அறிதுயில் புரிகின்றேன் அவ்வப்போது;
புரிகின்றேன் அசுரருடன் உக்கிரப் போர்!

தோன்றினர் மது கைடபர்கள் என் செவிகளில்;
தோற்கவில்லை ஐயாயிரம் ஆண்டுப் போரில்.

சங்கரித்தேன் இறுதியில் அவர்களை நான்
சக்தி தேவியின் திருவருள் கனிந்தவுடன்.

பராபரை சக்திதேவியே என்று புரிவில்லையா?
பாரில் நிகழ்வன அவளால் தெரியவில்லையா?

இழி பிறவிகளாக திரியக் யோனிகளில் சென்று
விழைவார்களா பிறப்பதற்கு எவரேனும் கூறு!

தோன்றினேன் மீனாக, ஆமையாக, வராஹமாக!
தோன்றியது என்னுடைய சுயேச்சையால் அல்ல!

இழிந்த பிறவிகள் பல எடுத்த பின்னரும் – நான்
தொழப்படுவதும் என் முயற்சியினால் அல்ல.

ரமித்தும், சுகித்தும் லக்ஷ்மியுடன் இராமல்
ராக்ஷசர்களுடன் ஏன் புரியவேண்டும் போர்?

வில்லின் நாண் அறுந்துவிட்ட து ஒருமுறை.
வில்லின் நுனி அறுத்துவிட்டது என் தலையை

சிறந்த குதிரையின் முகத்தைப் பொருத்தினாய்;
சிறப்புறச் செய்தாய் ஹயானனாக என்னை நீ!

சுதந்திரர் அல்ல நம்மில் எவருமே!
சுயேச்சை இல்லை நம் எவருக்குமே!

சக்தியின் வசப்பட்டே உள்ளோம் நாம்;
சக்தியை தியானிக்கின்றேன்” என்றார்

தந்தைக்கு இதைக் கூறினார் விஷ்ணு;
என் தந்தை இதைக் கூறினார் எனக்கு.

சக்தியின் திருவடிளைத் தியானித்தால்
சக்தி நிறைவேற்றுவாள் கோரிக்கையை.”

உலகம் உய்ய வேண்டும் விசாலம். K. ராமன்


1#4d. NAradA’s reply (3)


“VishNu continued to tell my father Brahma!” said NAradA to Sage VyAsa. “But for our special powers we will not be able to perform our prescribed duties so well. We are under the influence of Shakti Devi. We perform our duties so well only because of the grace of Shakti Devi.

At times I get lost in meditation. At times I enjoy the loving company of my consort Lakshmi Devi. At times I indulge in an all-knowing-sleep. At times I am at war with the wicked asuras.

Madhu and Kaitaba asuras emerged from my ears. But I could not defeat them for five thousand years. Finally I was able to vanquish them only with the divine grace and help of Shakti Devi.

She is called as ‘ParA Parai’ meaning that she is supreme to all the other Gods and that there is no one supreme to her. Everything that happens always happens according to her wishes and plans.

No one likes to take birth in the wombs of animals that grow horizontally and move on all the four limbs. But I took the avatars as a fish, a tortoise and a boar only because Shakti Devi ordained it.

In spite of taking these lowly births, I have always been worshiped as a god and shown no disrespect whatsoever. That also happens not because of my efforts but because of her grace. Instead of enjoying the loving company of Lakshmi Devi why should I go to war with the demons and asuras?

Once the string on my bow got cut. The tip of the bow cut off my head. Then you Brahma had fixed the beautiful head of a horse on my body and made me famous as Hayagreeva.

None of us us have real freedom. None of us can do whatever we want to do. We always obey the wishes of Shakti Devi and behave accordingly. So it is the all powerful Shakti Devi I am meditating upon!”

VishNu told this to my father and he told it to me. Meditate on the lotus feet of Shakti Devi. She will surely grant you the boon you seek oh VyAsa!” NAradA advised sage VyAsa thus.



 
kanda puraanam - asura kaandam

11b. ஏழுகடல், ஏழு தீவு

உவர் நீர்க் கடல் சூழ்ந்தது சம்புத்தீவு.
பாற்கடலால் சூழப்பட்டது சாகத்தீவு.

தயிர்க்கடலால் சூழப்பட்டது குசத்தீவு.
நெய்க்கடல் சூழ்ந்தது கிரௌஞ்சத்தீவு.

கருப்பஞ்சாற்றுக் கடல் சூழ்ந்தது சால்மலி.
தேன் கடலால் சூழப்பட்டது கோமேதகம்.

நன்னீர்க் கடலால் சூழப்பட்டது புஷ்கரம்.
சப்த சாகரங்களும் தீவுகளும் இவைகளே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#11b. THE SEVEN SEAS AND SEVEN ISLANDS.


There are seven islands surrounded by seven seas.
They are as follows:-

Jambu dwipa is surrounded by a sea of salt water.
Saka dwipa is surrounded by a sea of milk.

Kusa dwipa is surrounded by an ocean of curd.
Karauncha dwipa is surrounded by an ocean of ghee.

Salmali dwipa is surrounded by sugar cane juice.
Plaksha dwipa is surrounded by madhu.

Pushkara dwipa is surrounded by an ocean of fresh water.


 
sri venkatesa puraanam

09. வேங்கடம்

தனியனாக ஆகி விட்டான் மாதவன்;
தன் நிலைமைக்கு மிக வருந்தினான்.

மனைவியிடம் செல்லவும் வழியில்லை
தனியே தவிக்க விட்டு விட்டு வந்ததால்!

நோய் வாய்ப்பட்டு அவளிடம் செல்வது
நேர்மை அல்ல என்பதை உணர்ந்தான்.

ஊர் ஊராகச் சுற்றி அலைந்து திரிந்தான்!
தீர்மானம் என்று எதுவும் இல்லை மனதில்!

சேஷாச்சலத்தை அடைந்தான் – ஆதி
சேஷனே அங்கு மலையாகக் கிடந்தான்.

பாவங்கள் தீரப் பிரார்த்தனை செய்தான்;
பாவனமாகிடப் பிரார்த்தனை செய்தான்;

காலடி வைத்தவுடன் அவனை எரித்தான்,
கால் முதல் தலை வரை அக்னி தேவன் .

பாவங்கள் எரிந்து சாம்பல் ஆனதும்,
பார்ப்பவர் வியக்கும் தேஜஸ் வந்தது.

வணங்கினர் அவனைக் கண்ட பேர்கள்,
வணங்கினர் அவனை முனிபுங்கவர்கள்.

கருணை எரித்தது பாவக் குவியலை;
கருணை அளித்தது புனிதமான உடலை!

வேங்கடம் என்றால் பாவத்தை எரிப்பது;
வேங்கடம் எரிக்கும் பக்தனின் பாவத்தை!

மாதவனின் பாவத்தை எரித்தது முதல்
மறு பெயர் பெற்றது வேங்கடகிரி என.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#09. VEnkatam


MAdhavan became all alone in the world. He felt sorry for himself. He did not want to go back to his wife – whom he had deserted without sympathy and without any warning long ago! He had taken ill and he did not think it proper to go back her as sick and old man now.

He roamed around wherever his legs took him to. He had neither any plan and nor any destination. He reached SeshAchalam while wandering like a vagabaond . It is said that Aadhiseshan had become the SeshAchalam. He prayed for deliverance form all his sins and he prayed to become purified.

Lo and behold! Agni Devan burned him from his feet to his head. All his sins got burnt. He received a body emitting brilliance. Whosoever saw him spontaneously paid him their respects. Even the rushis were impressed by his luminous sareeram.

The mercy of God had burned down all his sins. It made him a new man worthy of being respected by everyone. ‘VEnkatam’ means ‘burning down all the sins’. VEnkatam will rid a devote of all his sins.

It removed all the sins of MAdhavan and the name of SeshAchalam became VEnkatagiri.


 


devi bhaagavatam - skanda 7

7#5b. அஸ்வினி தேவர்கள் (2)

கண்ணொளி பெறுவான் கணவன் – ஆனால்
கண்டு பிடிக்க முடியாவிடில் விளையும் துயரம்!

சென்றாள் கணவர் ச்யவன முனிவரிடம்;
செப்பினாள் தேவர்களின் நிபந்தனையை.

“கலங்க வேண்டாம் கற்புடைய பெண்ணே!
நலமே விளையும் பராசக்தியின் அருளால்!

அழைத்து வா அவர்களை என்னிடம்!” என
அழைந்து வந்தாள் அவர்களை அவரிடம்.

“அழகும், இளமையும் பெறத் தடாகத்தில்
முழுகி எழ வேண்டும் முனிவர் இப்போதே!”

முங்கினார் ச்யவனர் தடாக நீரினில்;
முங்கினர் தேவர்களும் தடாக நீரினில்.

எழுந்தனர் மூவரும் ஒரு போலவே!
இருந்தனர் மூவரும் ஒரு போலவே!

ஆடையணிகளில்; ஆபரணங்களில்,
அழகில், உயரத்தில், வயதில், குரலில்!

திகைத்து நின்றாள் சுகன்யா இதைக் கண்டு;
நகைக்கும் உலகம் கணவனை அறியாவிடில்.

சரணம் அடைந்தாள் தேவியின் பாதங்களை!
ஸ்மரணம் செய்தாள் தேவியின் நாமங்களை!

“காத்தருள்வாய் என் கற்பு நெறியினை!
காத்தருள்வாய் என் பதிவிரதா தர்மத்தை!

அருள்வாய் அறிவினை இனம் காண்பதற்கு;
அருள்வாய் தெளிவினைத் தேர்ந்தெடுப்பதற்கு!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#5b. Ashwini DevatAs (2)

Sukanya was excited about her husband regaining his eye sight. But if she failed to located him from among the three persons in Deva roopam she would end up with some real problems.

She went to her husband and told him about the offer made by the Twins Ashwini DevatAs. Sage Chyavana said, “Do not worry my dear chaste wife. I am sure all will end well with the blessings of Devi ParA Shakti. Bring those two Devas to me.” She went and brought them to him.

The Ashwini DevatAs said, “To regain eyesight and to gain the divya Deva roopam Chyavana has to take a dip in the water of the pond.” Sage Chyavana did as he was told.

At the same time the Ashwini DevatAs also took a dip in the pond. When the three emerged from the water, they looked alike in their silk dress, ornaments, youth, beauty, age, height and even had the same voice.

This became an ordeal to Sukanya. If she failed to locate her husband, her pAtivratam would become dubious. She prayed to ParA Shakti to give her the keen intelligence and clarity of thinking to locate her husband correctly from the three Devas standing in front of her.

 
devi bhaagavatam - skanda 1

1#4d. நாரதரின் பதில் (3)

“அற்புத சக்தி மட்டும் இல்லாமல் போனால்
நின்றுவிடும் நம் தொழில்கள் முற்றிலுமாக!

சக்தியின் வயப்பட்டே உள்ளளோம் நாம்.
சக்திக்கு உட்பட்டே புரிகின்றோம் தொழில்.

மூழ்குகின்றேன் தியானத்தில் சில சமயம்
மூழ்குகின்றேன் இன்பத்தில் லக்ஷ்மியுடன்.

அறிதுயில் புரிகின்றேன் அவ்வப்போது;
புரிகின்றேன் அசுரருடன் உக்கிரப் போர்!

தோன்றினர் மது கைடபர்கள் என் செவிகளில்;
தோற்கவில்லை ஐயாயிரம் ஆண்டுப் போரில்.

சங்கரித்தேன் இறுதியில் அவர்களை நான்
சக்தி தேவியின் திருவருள் கனிந்தவுடன்.

பராபரை சக்திதேவியே என்று புரிவில்லையா?
பாரில் நிகழ்வன அவளால் தெரியவில்லையா?

இழி பிறவிகளாக திரியக் யோனிகளில் சென்று
விழைவார்களா பிறப்பதற்கு எவரேனும் கூறு!

தோன்றினேன் மீனாக, ஆமையாக, வராஹமாக!
தோன்றியது என்னுடைய சுயேச்சையால் அல்ல!

இழிந்த பிறவிகள் பல எடுத்த பின்னரும் – நான்
தொழப்படுவதும் என் முயற்சியினால் அல்ல.

ரமித்தும், சுகித்தும் லக்ஷ்மியுடன் இராமல்
ராக்ஷசர்களுடன் ஏன் புரியவேண்டும் போர்?

வில்லின் நாண் அறுந்துவிட்ட து ஒருமுறை.
வில்லின் நுனி அறுத்துவிட்டது என் தலையை

சிறந்த குதிரையின் முகத்தைப் பொருத்தினாய்;
சிறப்புறச் செய்தாய் ஹயானனாக என்னை நீ!

சுதந்திரர் அல்ல நம்மில் எவருமே!
சுயேச்சை இல்லை நம் எவருக்குமே!

சக்தியின் வசப்பட்டே உள்ளோம் நாம்;
சக்தியை தியானிக்கின்றேன்” என்றார்

தந்தைக்கு இதைக் கூறினார் விஷ்ணு;
என் தந்தை இதைக் கூறினார் எனக்கு.

சக்தியின் திருவடிளைத் தியானித்தால்
சக்தி நிறைவேற்றுவாள் கோரிக்கையை.”

உலகம் உய்ய வேண்டும் விசாலம். K. ராமன்

1#4d. NAradA’s reply (3)

“VishNu continued to tell my father Brahma!” said NAradA to Sage VyAsa. “But for our special powers we will not be able to perform our prescribed duties so well. We are under the influence of Shakti Devi. We perform our duties so well only because of the grace of Shakti Devi.

At times I get lost in meditation. At times I enjoy the loving company of my consort Lakshmi Devi. At times I indulge in an all-knowing-sleep. At times I am at war with the wicked asuras.

Madhu and Kaitaba asuras emerged from my ears. But I could not defeat them for five thousand years. Finally I was able to vanquish them only with the divine grace and help of Shakti Devi.

She is called as ‘ParA Parai’ meaning that she is supreme to all the other Gods and that there is no one supreme to her. Everything that happens always happens according to her wishes and plans.

No one likes to take birth in the wombs of animals that grow horizontally and move on all the four limbs. But I took the avatars as a fish, a tortoise and a boar only because Shakti Devi ordained it.

In spite of taking these lowly births, I have always been worshipped as a god and shown no disrespect whatsoever. That also happens not because of my efforts but because of her grace. Instead of enjoying the loving company of Lakshmi Devi why should I go to war with the demons and asuras?

Once the string on my bow got cut. The tip of the bow cut off my head. Then you Brahma had fixed the beautiful head of a horse on my body and made me famous as Hayagreeva.

None of us us have real freedom. None of us can do whatever we want to do. We always obey the wishes of Shakti Devi and behave accordingly. So it is the all powerful Shakti Devi I am meditating upon!”

VishNu told this to my father and he told it to me. Meditate on the lotus feet of Shakti Devi. She will surely grant you the boon you
seek oh VyAsa!” NAradA advised sage VyAsa thus.


 
devi bhaagavatam - skanda 1

1#5a. ஹயக்ரீவன் (1)


பதினாயிரம் ஆண்டுகள் போரிட்டார் விஷ்ணு,
பயங்கரமாக அசுர வீரர்களுடன் தொடர்ந்து.

களைத்துப் போய்விட்ட விஷ்ணு சிறிது நேரம்
களைப்பாறினார் சமதளத்தில், பத்மாசனத்தில்.

வில்லை வலுவாகப் பதித்தார் பூமியில் – அந்த
வில்லின் நுனியில் பதித்தார் தன் முகவாயை.

சத்தம் இல்லாமல் நித்திரை செய்தார்;
எத்தனையோ நீண்ட காலம் ஓடிவிட்டது.

யாகம் செய்ய விரும்பினர் தேவர்கள் – ஆனால்
யாக கர்த்தா விஷ்ணுவோ ஆழ்ந்த நித்திரையில்.

‘விழிக்கும் வரை காத்திருப்போம்!’ என்றால்
விழிப்பதாகத் தெரியவில்லை நெடுங்காலம்.

ருத்திரர் கூறினார் எழுப்புவதற்கு உபாயம்.
“குத்திட்ட வில்லின் நாணை செல்லரித்தால்

நிமிர்ந்து விடும் வில்லின் மறு நுனி – அதனால்
நீங்கி விடும் விஷ்ணுவின் ஆழ்ந்த உறக்கம்.

தேவ காரியம் நடைபெறவேண்டும் – எனவே
தேவேந்திரன் அரிக்கட்டும் செல்லாக மாறி.”

“பாதியில் நல்ல நித்திரையைக் கலைப்பதும்;
பாதியில் புண்ணிய கதையை நிறுத்துவதும்;

பாதியில் கலவி இன்பத்தைக் குலைப்பதும்;
பாதகமாகும் தாய் சேயைப் பிரிப்பது போல“

தேவேந்திரன் மறுத்தான் பாதகம் புரிந்திட;
தேவர்கள் விடவில்லை அவனை மறுத்திட.

“யாகத்தில் அளிப்போம் அவிர்பாகம் உனக்கு!
யோசனை செய்யாமல் விஷ்ணுவை எழுப்பு!”

செல்லுருவம் எடுத்து வில்நாணை அறுத்தான்.
வில்நுனி நிமிர்ந்தது நடுக்கும் பேரொலியுடன்!

நடுங்கினர் தேவர்கள்; நடுங்கியது பூமி;
நடுங்கின மலைகள்; கடல் கொந்தளித்தது;

இருண்டு விட்டது சூரிய அஸ்தமனம் போல்!
பறந்து சென்றது நாரணன் தலை அதிர்வில்!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#5a. Hayagreevan


VishNu fought a prolonged war for ten thousand years. He felt completely exhausted and wanted to rest for a while. He sat in Padma Asanam on a level ground. He planted his bow firmly on the ground and planted his chin firmly on the tip of his bow. He went into a deep sleep. Many years rolled by.

Meanwhile the DEva wanted to perform a yAgA. But the yAga kartA VishNu was fast asleep. They waited for a long time hoping that he would wake up by himself – but he did not.

The DEva kAryam ( the divine work of the Gods) must not be delayed. So Rudran told a plan to wake up VishNu. He told Indra,”Change into a termite and cut off the string of the bow. The other end of the bow will become straight and this will wake up VishNu from his sleep.”

But Indra refused to this idea saying, ” Waking up a person in a deep sleep, stopping a divine story in the middle, disturbing the happy union of man and a woman and separating an infant from its mother are deadly sins. So I will not do it!”

But the DEva would not listen to him. They promised him a huge share of ‘Havis’ (offering) in the yAgA. Indra finally gave in to their request, transformed himself into a termite and cut off the string of the bow. The bow straightened with a terrifying loud noise.

The DEva shook with inexplicable fear. The whole earth trembled, the string of mountains vibrated and the seas swelled up into huge tidal waves due to the vibration. It suddenly became very dark resembling the sunset. At the same time the beautiful head of VishNu got cut off from his body and flew away – no one knew where to!


 
kanda puraanam - asura kaandam

11c. மேருமலை

சம்புத் தீவின் நடுவில் மேருமலை;
அம்புய மொட்டை நிகர்த்த அதில்


அடுக்குகள் மூன்று அமைந்துள்ளன.
நடுமுடியில் நான்முகனின் மனோவதி;


நெடுமாலின் வைகுந்தம் மேற்கு திசையில்,
வடதிசையில் சிவனின் ஜோதிட்கம்,


எட்டு திசைகளில் பரவி அமைந்துள்ளன
எட்டு திக்பாலகர்களின் இருப்பிடங்கள்;


வெண்ணிற மந்தர மலை கீழ் திசையில்
பொன்னிற கந்தமாதன மலை தெற்கில்;


நீலநிற விபுலமலை உள்ளது மேற்கில்
சிவந்த சுபார்சுவ மலை வடக்கு திசையில்!


மந்தர மலையில் நிற்பது கடம்ப மரம்;
கந்தமாதனத்தில் உள்ளது நாவல் மரம்;


விபுலமலையில் நிற்பது அரசமரம்;
சுபார்ச்சுவதில் உள்ளது ஆலமரம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#11c. THE MOUNT MERU.


In the middle of Jambu dwipa is the mount Meru.

Its shape resembles a lotus bud.It has three levels.

In the central peak is situated Brahma’s Manovathi.

In the west Vishnu’s Vaikuntham is situated.

In the north-eastern side Siva’s Jyothishgam is situated.

The eight dig pAlakas live in the eight directions.

The white Mandara mountain is in the East.

A huge Kadamaba tree stands towering over it.

The golden GandhamAdanam is situated in the south.

A huge Jambu tree stands towering over it.

The blue coloured Vipula mountain is in the west.

A giant Pipal tree stands towering over it.

The red coloured SupArswa is situated in the north.

A giant Vata tree stands towering over it.
 
sri venkatesa puraanam

10. நாக கன்னிகை

சோழ ராஜன் சென்றான் வேட்டைக்கு,
சேஷாச்சலத்தை அடைந்தான் திரிந்து.

பிரிந்து விட்டான் படை வீரரிடமிருந்து;
மறந்து விட்டான் வெளிச்செல்லும் வழி!

தட்டு தடுமாறி வெளிவர முயன்றவன்
பட்டு ரோஜாப் பெண்ணைக் கண்டான்!

மலரே மலர்களைக் கொய்யுமா என்ன?
மலர் மங்கை மலர்கள் கொய்திருந்தாள்!

மையல் வசப் பட்டான் சோழ மன்னன்
தையலின் லாவண்யத்தைக் கண்டதும்.

“கொடிய விலங்குகள் திரியும் வனத்தில்
கொடி இடையாள் நீ என்ன செய்கிறாய்?

நீ யார்? எந்த ஊர்? என்ன பேர்? ” என
நீளமாக அடுக்கினான் கேள்விகளை.

“நாகர் குலத்தைச் சேர்ந்தவள் நான்
நாகர்களின் வேந்தன் என் தந்தை! ”

“மணம் செய்து கொள்கிறாயா என்னை?
மனம் பறி போய்விட்டது கண்டவுடன்!”

“நற்குணங்கள் பொருந்திய மன்னனைக்
கற்பு மணம் புரிய வேண்டுமாம் நான்!

தந்தையிடம் நீர் பேசினால் நடக்கும்
தடைகள் இல்லாமல் நம் திருமணம்! ”

“நாக லோகம் செல்ல நேரம் இல்லை!
காம வேதனை தாங்க முடியவில்லை!

கந்தர்வ விவாஹம் செய்து கொள்வோம்;
தந்தையிடம் சொல் திரும்பச் சென்றபின்.”

காமவசப் பட்டிருந்தாள் நாககன்னிகை;
தாமதம் இன்றிக் கந்தர்வ விவாஹம்!

ஆனந்த வெள்ளத்தில் நீந்தினர் பல நாள்;
அவரவர் வீட்டுக்குச் சென்றனர் ஒரு நாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

# 10. The NAga princess

A Chozha king went for hunting. He reached Venkatagiri while roaming around. He got separated from his men and lost his way in the forest. He saw a pretty maiden in the forest. She was plucking flowers.

He fell head over heels in love with her. He went near her and asked her,”Who you pretty lady? What are you doing in this forest where wild animals roam about freely?”

She replied to the Chozha king, “I am the princess of the NAgas and my father is the NAga King Danusan.” The Chozha king proposed to her right away and awaited her answer.

The princess replied. “It is my father’s wish that I must marry a famous king of the earth. I am sure he will readily accept you as his son in law. Please go and talk to him so that we can get married with her blessings!”

But the Chozha king replied,” I do not have the time or patience to go to your land and speak to your father now. If he will surely accept me, then we can get married now in Gandharva VivAham. You may tell your father about me when you go back to him.”

The princess also was madly in love with this handsome and brave Chozha king and so they married immediately in Gandharva vivAham. They spent many days together in enjoying marital bliss and supreme happiness. Then they went back to their respective places.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#5c. அஸ்வினி தேவதைகள் (3)


உணர்த்தினாள் தேவி சூக்ஷ்ம வேறுபாட்டினை!
கணத்தில் கண்டு கொண்டாள் தன் கணவனை.

இமைப்பர் மானுடர்; இமையார் தேவர் – தேவி
இருத்தினாள் இக்கருத்தினை அவள் மனத்தினில்.

வரித்து மாலையிட்டாள் ச்யவன முனிவருக்கு!
பூரித்து நின்றனர் அவள் பதிபக்தியைக் கண்டு!

கூறினார் ச்யவனர் அஸ்வினி தேவர்களிடம்;
“நாரீமணியை அடைந்தேன் மனைவியாக!

அனுபவித்தேன் இதுவரை துன்பத்தையே;
அனுபவிப்பேன் இனிமேல் இன்பத்தையே.

கடமைப் பட்டுள்ளேன் நான் உங்களுக்கு;
உடனே கூறுங்கள் வேண்டுவது என்ன?” என

“தந்தையின் அருளால் குறை ஒன்றும் இல்லை;
தந்ததில்லை இந்திரன் சோமபானம் இதுவரை!

அருந்த வேண்டும் அதை அமரருக்குச் சமமாக;
அருந்தவ முனிவரே அருள்வீர் நீர் அதை எமக்கு!

விரும்பும் கைம்மாறு இது ஒன்றே – எம்மை
அருந்தச் செய்யுங்கள் தேவர்களுடன் கூடி!”

“சரியாதி மன்னனின் வேள்வியில் உமக்கு
மரியாதையோடு அளிப்பேன் சோமபானம்!”

உறுதியளித்தார் ச்யவனர் அஸ்வினி குமாரருக்கு;
இறும்பூதெய்தினர் இது கேட்ட அஸ்வினி குமாரர்.

சென்றனர் அஸ்வினி தேவர்கள் தம் இருப்பிடம்;
சென்றார் முனிவர் சுகன்யாவுடன் தம் ஆசிரமம்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


7#5c. Ashwini DevatAs (3)

Devi made Sukanya understand the minute difference between a human and a Deva. Mortal humans blink their eyes while the immortal devatAs do not blink their eyes.

Sukanya could now spot her husband in less than a moment. She garlanded her husband Chyavana rushi from among those three look like devas. The Aswini DevAs were impressed by her pAtivratam.

Chyavana rushi told the Ashwini KumArAs,”I have married the gem among woman. Till today my life was nothing but suffering. From now it will be nothing but happiness. I owe you a lot. Please let me know how I can repay you for your kindness!”

The Ashwini KumArAs said, “By the grace of our father the Sun God, we do not lack anything. But there is one thing which troubles us. We are not allowed to drink Soma rasa along with the other Devas. Indra has forbidden us from drinking Soma rasa. We want to share it with the other Devas.”

Sage Chyavana promised them,”I will make sure that you get to share the soma rasa with the other Devas during the next yagna performed by King SharyAti.”

The Ashwini KumArAs became happy to hear this promise and went back to their abode. Sage Cyavana and Sukanya went back to their ashram.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#5b. ஹயக்ரீவன் (2)

அந்தகாரம் நீங்கி விட்டது சற்று நேரத்தில்;
அந்தோ இருந்தது சிரமற்றுச் சிதைந்த உடல்!

கபந்தத்தைக் கண்டு ஓலமிட்டனர் தேவர்கள்;
“அபயம் அளிக்கும் பெருமானுக்கு அபாயமா?

அழிவே இல்லாதவனுக்கு அழிவு ஏற்பட்டதே?
அழிக்க முடியாத ஒருவனை அழித்தது எது?

எங்கள் கதி என்ன ஆகுமே இனிமேல் அறியோம்!
எங்களாலேயே விளைந்தது இந்தக் கொடுமை!”

ஆறுதல் கூறினார் தேவகுரு பிருஹஸ்பதி.
“அழுவதும், அரற்றுவதும் பயன்தர மாட்டா!

தெய்வப் பிரயத்தனத்துடன் நம் பிரயத்தனம்!
செய்யும் அனைத்தும் நிகழ்வது இவற்றால்!

நமது முயற்சிக்கு வெற்றியை அளித்திடும்
நமது முயற்சியுடன் கூடிய தெய்வ முயற்சி.

தெய்வ சங்கல்பமின்றி நிகழ்ந்து விடாது ஏதும்!
தெய்வ சங்கல்பமே முயற்சியும் அதன் பலனும்.“

மறுத்தான் தேவகுருவின் கருத்தை ஏற்பதற்கு;
மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த இந்திரன்!

“உறக்கம் கலைவதற்குச் செய்தோம் முயற்சி;
பறந்து சென்று விட்டது விஷ்ணுவின் தலை!

நம் முயற்சி, தெய்வ முயற்சி, இவை இரண்டும்
தம்மில் வேறுபடாமல் நேருமா இக் கொடுமை?”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#5b Hayagreevan (2)


The darkness got dispelled soon. The DEva saw the decapitated and deformed body of VishNu. They lamented on their misdeed.
“The God who used to protect us from dangers is Himself in a danger now. The God who can not be destroyed had Himself got destroyed. Which power could have destroyed the protector of the universe? What will be out fate and future now? We have brought ruin to ourselves by our misdeed!”

Bruhaspati consoled them, “There is no use crying or lamenting now. Everything happens only when our efforts and the God’s efforts go hand in hand. Nothing can ever happen without God’s will and wish!”

Indra refuted this by saying, ” We wished only to wake up VishNu from his deep sleep. But now He has lost His head due our effort. How can this happen unless God’s wish had been different from our wish?”


 
kanda puraaNam - asura kaaNdam

11d. ஒன்பது வர்ஷங்கள்

நாவல்மரம் கந்தமாதனத்தில் நின்றதால்,
நாவலன் தீவு ஆகிவிட்டது பாரதவர்ஷம்;

பெருகிய பழச்சாறு ஆறாகப் பாய்ந்து சென்று
பெறும் ஜம்பூநதம் என்னும் அழகிய பெயரை.

பருகியவர் அடைவர் செம்பொன் நிறத்தை;
பெறுவர் ஆயுள் பதின்மூன்றாயிரம் ஆண்டு.

சிருங்க மலை, வடகடல் இடையே குருவர்ஷம்;
சிருங்கமலை, ஸ்வேதமலை இடையே இரணியம்;

இரமியம், ஸ்வேதமலை நீலமலைகளின் இடையே;
இலாவிருதம் மேருமலையைச் சுற்றிலும் அமையும்.

மாலியவான், கீழ்க்கடல் இடையே பத்திராசுவம்;
மேற்கடல், கந்தமாதனம் இடையே கேதுமாலம்;

ஏமகூடம், நிடதம் இடையே அரிவர்ஷம்;
ஏமகூடம், இமயம் இடையே கிம்புருஷம்,

இமயம், தென்கடல் இடையே பாரதவர்ஷம்;
இமயத்தின் வடக்கே நிற்கும் திருக்கயிலை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#11d. THE NINE VARSHAS.


Since a Jambu tree stood in BhAratha varsham, it is called as Jambu Dweepa. The juice of the great fruits of the tree flows as a

river called Jambunatham. Those who drink the juice acquire a golden-hue and live for 13,000 years.

Kuru Varsha is spread between the Srunga mountain and the North sea.

Hiranvat Varsha is spread between the Srunga and Swetha mountains.

Ramyaka Varsha is spread between the Swetha and the Blue mountains.

Ilavrutha Varsha is the area surrounding the Mount Meru.

Bhadraaswa Varsha is spread between the Maalyavaan and the Eastern sea.

Ketumaala Varsha is spread between the Gandamaadanam and the Western sea.

Hari Varsha is spread between the Hemagoodam and Nishaadam.

Kimpurusha Varsha is spread between the Hemagoodam and the Himaalayaas.

Bhaarata Varsha is spread between the Himalayas and the Southern sea.

Kalilaash giri stood to the north of Himalayas.


 
sri venkatesa purANam

11. யுவராஜன்

பாதாள லோகம் சென்ற நாக கன்னிகை
பூலோகத்தில் நடந்ததைச் சொன்னாள்.

மணந்தாள் அவள் சோழ மன்னனை என
மகிழ்ந்தான் தந்தை மன்னன் தனுசன்.

கந்தர்வ விவாஹத்தின் பலன் கர்ப்பம்!
சுந்தரனான ஆண் மகவு ஒன்று பிறந்தது.

பிறந்த நேரமும், அவன் தோற்றமும்,
சிறந்த அரசனுக்கு மட்டுமே உரியவை.

கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் அவனை;
கண்மணி வளர்ந்தான் கண்களைக் கவரும்படி.

“என் தந்தை யார்?” எனக் கேட்டான் தாயை.
“உன் தந்தை சோழ மன்னர்!” என்றாள் தாய்.

தந்தையைக் காண விரும்பினான் அவன்;
தடை சொல்லாமல் அனுப்பினர் அவனை.

சோழ மன்னனை வந்து வணங்க – மன்னன்
” தோழமையோடு கேட்டான் நீ யார்?” என.

“வந்தீர்கள் நீங்கள் சேஷாச்சலம் வேட்டையாட;
தந்தீர்கள் கந்தர்வ மணம் அன்னை நாககன்னிக்கு!”

அகன்ற ஆகாயத்தில் எழுந்தது ஓர் அசரீரி ;
“புகன்றது உண்மையே! இவன் உன் மகன்!

ஸ்ரீனிவாசனுக்குத் தொண்டுகள் புரிவான்;
மேதினியில் அழியாத புகழ் அடைவான்!”

அணைத்துக் கொண்டான் அருமை மகனை;
வினவினான் அன்னை, பாட்டனைப் பற்றி .

முதுமை எய்தி விட்டான் சோழ மன்னன்;
புதிய மன்னன் ஆனான் நாககன்னி மகன்.

நாடினான் நாட்டு மக்களின் நன்மைகளை,
நாற்றிசையும் அவன் புகழ் பரவி விரவியது

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#11. The YuvarAj

The NAga princess went back to her land and told her father the events that had taken place on the earth. The NAga King was very happy to learn that she had married a famous king worthy of her.

The Princess was pregnant and delivered a handsome son in due course. The time of birth and the appearance of the child indicated that he would become a great king on earth.

He was brought up with great care and a lot of love. One day the YuvarAj asked the princess, “Mother! please tell me who is my father and where he is now!”

The princess told him her story and her marriage to the Chozha king. The yuvaraj wanted to meet his father. His mother and grandfather bade him farewell and he reached the earth.

He went to the Chozha king and paid his respects him. The Chozha king liked the young boy and asked him, “Who are you? Where are you from? what bring you here?”

The boy replied, ” I am your son born to the NAga princess whom you married in a Gandharva vivAham.” At the same time an asareeri was heard saying, “Oh Chozha king! Whatever this boy tells you is the truth. He is indeed your son” . The king embraced the boy and became very happy.

He asked about the welfare of the NAga king and princess. The boy grew up to become a strong and intelligent man. He was crowned and made the new king when the Chozha king became too old to rule his land. The new king ruled well and wisely. His fame soon spread all over the world.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#6a. சர்யாதியின் வேள்வி

சசியும், இந்திரனும் போல வாழ்ந்தனர்
ச்யவனரும் சுகன்யாவும் இன்ப மயமாக.

தாய் பரிதவித்தாள் பாசத்தால் – மகளைப்
போய்ப் பார்க்கலாம் ஒரு முறை என்று.

ஏறிக் கொண்டனர் அழகிய ரதத்தில்;
சீறிப் பாய்ந்தது ரதம் ஆசிரமத்துக்கு.

தேவ வடிவமும், யௌவனமும் நிரம்பிய
யுவனுடன் கண்டனர் மகள் சுகன்யாவை.

திடுக்கிட்டான் அதைக் கண்ட சர்யாதி.
‘அடுக்குமா இவளுக்கு இந்தத் துரோகம்?

கிழட்டுக் குருடனை உதறி விட்டாளா?
அழகிய இளைஞனை வரித்து விட்டாளா?

தகுமா இது ஒரு மன்னனின் மகளுக்கு?
தகுமா இது ஒரு முனிவரின் மனைவிக்கு?’

உபசரித்தாள் சுகன்யா ஓடி வந்து
உள்ளமும், முகமும் அன்பால் மலர.

“எங்கே உன் கணவர்?” என மன்னன் கேட்க
“இங்கே” என அழைத்துச் சென்றாள் சுகன்யா.

“இளைஞரே கூறுங்கள் நீர் ச்யவனர் தானா?
இளமையும், தேவ அழகும் கிடைத்தது எப்படி?

கண்ணொளி மீண்டது எங்கனம் கூறுங்கள்!
பெண்ணையே சந்தேகித்து விட்டேன் நான்.”

ஆதியோடு அந்தமாக உரைத்தார் ச்யவனர்
பாதிப்பு நீங்கியது எங்கனம் என மன்னனுக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

7#6a. King SaryAti’s yagna

Sage Chyavana and Sukanya lived as happily as Indra and IndrANi Devi. Meanwhile the queen – Sukanya’s mother – was worrying about the life of her dear daughter with a blind and old sage in a forest. She wanted to meet her daughter to know about her welfare.

So king SharyAti and his queen got into a chariot and sped towards the ashram of Chyavana. They were surprised to see a beautiful young man with their daughter Sukanya. The blind and old sage Chyavana was nowhere to be seen!

The king got a doubt now. ‘Had Sukanya forsaken the old blind sage and chosen a new young man as her life partner? Will such a behaviour suit the daughter of a king or the wife of a rushi?’

Sukanya came running towards them with a face glowing with joy. The King SaryAti demanded to know where Chyavana was. Sukanya took him to the young man. The king still could not believe his eyes and asked the young man.

“Are you indeed sage Chyavana? If so how did you get back your eyesight? How did you get this youthful Deva sareeram? I doubted my own daughter foolishly unable to believe my eyes!”

Sage Chyavana related all the happenings in great detail to the eager King.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#5c. ஹயக்ரீவன் (3)

பிரமன் குறுக்கிட்டுக் கூறலுற்றான் – ஒரு
பிரமிக்க வைக்கும் காலத் தத்துவத்தை.

“தோன்றுகின்றன காலத்தால் செயல்கள்;
தோன்றுகின்றன செயல்களால் பலன்கள்.

அனுபவிக்க வேண்டும் வினைப்பயன்களை;
அணுவளவும் அதிலிருந்து தப்பவே முடியாது.

அகந்தை அடைந்தேன் நான் காலவசத்தால்;
அகந்தை அகன்றது ஒரு தலையை இழந்ததும் .

சந்திரன் க்ஷயரோகி ஆனான் சாபத்தால்;
இந்திரன் பெற்றான் ஆயிரம் யோனிகள்;

ஒளிந்திருந்தான் பிரம்மஹத்தியை அடைந்து,
வெள்ள நீரில் தாமரைத் தண்டினில் மறைந்து!

விஷ்ணுவின் தலை விழுந்தது உப்புக் கடலில்!
விபரீதச் செயல்களும் தெய்வச் செயல்களே!

மகாமாயை, வித்யா ஸ்வரூபிணி என்றும்
மகாதேவி, சனாதனி, சக்தி தேவி என்றும்

நாராயணியைத் தியானம் செய்வோம் நாம்
பாராமுகம் கொள்ளது உதவுவாள் தேவி”.

பிரமன் கூறியதை ஏற்றனர் தேவர்கள்;
பிரமாதமாகத் துதித்தனர் சக்தி தேவியை.

வேதங்கள் வந்தனன தேக உருவெடுத்து;
வேத புருஷர்கள் துதித்தனர் தேவியை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#5c. Hayagreevan (3)


Brahma spoke now explaining the Principle of Time Factor and it effects. He said, “Everything happens at the appointed time and
hour. Every action has its after-effects. We will have to face the consequences of our actions. There is no hope of eluding them or escaping from them.

Due to the influence of my bad Time, once I became very arrogant and proud. Lord Siva plucked off one of my five heads and I came back to my senses.

Chandran was cursed to lose his form and vanish due to the influence of his bad Time. Indra was cursed and developed one thousand female birth marks. He was afflicted by the Brahma haththi dosham (the sin incurred by killing a brahmin ) and had to hide inside the lotus stem in MAnasarOvar for a very long time.

Now that VishNu has lost his head is also due to the Time Factor. There is only one supreme power unaffected by this Time Factor. It is the Shakti Devi. Let us worship Her and seek Her grace. I am sure She will melt down with pity and help us out at this hour of ordeal.”

All the DEva agreed to this suggestion. They started praising the all powerful Devi. VEdas assumed human form and started singing the praise of Devi along with the DEva.

 
kanda purANam - asura kANdam

11e. பாரத வர்ஷம்

உழுது பயிர் செய்து வாழ்பவர்கள்;
தொழுது சிவன் அருள் பெறுபவர்கள்;

நல்வினை, தீவினை ஈட்டுபவர்கள்;
நற்குணம் மாறிமாறிப் பெறுபவர்கள்;

ஆற்றல், பெருமை, சீர், அறிவு, நிறை,
ஆயுள், வடிவம், உணவு, செயல்களால்

வேறுபடுவார் வேறு வேறு இடத்தில்
வேரூன்றிய மனிதர்கள் தமக்குள்.

பயிரிடுவர் நெல் முதலிய தானியங்கள்,
உயிர் வாழ்வார் கனி, காய், கிழங்குகளால்;

நல்வினை தீவினை துய்க்க ஒரே இடம்,
நல்லவர்க்கும், அல்லாதவர்க்கும் இதுவே.

முனிவரும், தேவரும் தம் குறைகள் நீங்க
தனித்துத் தவம் செய்யும் பூமி இதுவே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#11e. BHAARATA VARSHAM


The people are farmers and grow their food. They worship Lord Siva and seek his grace. They earn puNyam and pApam by their various actions. They become good or bad by turns. Their abilities, fame, greatness, intelligence, life span, shape, form, food habits, and activities vary from place to place.

They grow grains like paddy and live on fruits, vegetables and roots. It is the only place to exhaust the merit or demerits of our actions. Even rushis and Devas come here to do penance and nullify their defects and demerits.

 
sri venkatesa purANam

12. அபூர்வக் கனவு

இடையர்கள் கண்டனர் மன்னனை;
இயம்பினர் வியத்தகு நிகழ்ச்சிகளை.

“வேங்கட மலையினில் வாழ்பவர்கள் நாங்கள்;
தங்களுக்குப் பால் குடங்கள் எடுத்து வருவோம்.

வழியில் உள்ள புற்றின் அருகே வந்ததும்
வழிந்தோடுகிறது பால் குடங்கள் உடைந்து!

தினமும் நிகழ்கிறது இது போலவே மன்னா!
இனம் புரியவில்லை இதன் காரணம் எமக்கு!”

விந்தையாக இருந்தது சோழ மன்னனுக்கு;
“இந்த நிகழ்வைக் கண்டு பிடிப்பேன் நான்!”

கனவு கண்டான் மன்னன் அன்றிரவு;
கருமை நிற அழகன் ஒருவன் வந்தான்.

கையில் வில், மார்பில் பெண் உருவம்;
“கையுடன் அழைத்து வரச் சொன்னார்

சேஷகிரி ஸ்ரீனிவாசன் தங்களை!” என்றான்.
பேசாமல் அவன் பின் சென்றான் மன்னன்.

சேஷகிரியை அடைந்தனர் இருவரும் – வி
சேஷமான நவரத்தினம் மின்னும் மண்டபம்!

சங்குடன் சக்கரம், மகர குண்டலங்கள்;
பொங்கும் அழகுடைய தேவியர் மூவர்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் நாரயணன்;
தேடி வந்து கண்ட காட்சியில் உருகினான்!

அள்ள அள்ளக் குறையாத ஆனந்தம்;
மெல்ல மெல்ல மறைந்தது அக்காட்சி.

கனவு என்றே நம்ப முடியவில்லை அவனால்;
நனவு போலவே இருந்தது விழித்த பின்னரும்.

சபா மண்டபத்தில் உரைத்தான் தன் கனவை,
“அபாரமான கனவின் பொருள் என்ன?” என,

ஆழமாகச் சிந்தித்தனர் விசுவாச மந்திரிகள்;
சோழ மன்னனிடம் கூறினர் சிந்தனைகளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#12. The vivid dream

A group of cowherds came to the new Chozha king. They has a strange story to tell him.

“We live in the VEnkata giri. We bring you milk in many pots everyday. But when we come near an anthill, the pots get broken and all the milk flows down in waste. This happens everyday in spite of all the care we take. We are unable to find any cause for or explanation this Oh king!”

The king sent them back promising to investigate these strange events. He has an unusual dream on that night. A dark hued handsome man came to him in his dream. He carried a bow and had the image of a beautiful woman on his chest.

He told the king, “SreenivAsan of VEnkatagiri told me to bring you to him.” The king followed the strange man and soon they reached SeshAchalam.

The king saw a mandapam shining with gem studded pillars. He saw Lord NArAyaNan there with his Conch, Sudarshan, wearing makara kuNdalams and along his three consorts – shining like ten million Suns put together. He forgot himself and pure joy filled his mind and overflowed . The scene faded away soon and he woke up from his sleep.

He could not believe that it was just a dream. It had looked so real and so vivid that he had felt so happy in it. He described his dream in his Durbar the next morning and asked whether anybody could interpret his unusually vivid dream correctly.


 

Latest posts

Latest ads

Back
Top