kanda purANam - asura kANdam
12b. சரணாகதி அடைதல்
விரைந்து சென்ற தூதர்கள் சூரனின்
வரவைத் தெரிவித்தனர் குபேரனுக்கு;
“சிவன் அருள் பெற்ற சூரபத்மனை
எவன் வெல்ல முடியும்?” என அஞ்சி,
“சரண் அடைந்தால் உயிர் பிழைப்பேன்” என
முரண் படாமல் சென்று தொழுதான் குபேரன்.
“நான் உமக்கு அடிமை!” இது குபேரன்.
“நன்று! இந்நெறி மறவாதே!” இது சூரன்.
அளகாபுரியைக் கொள்ளை அடித்த அவுணர்
அளவில்லாத செல்வத்தை அள்ளிச் சென்றனர்.
அடுத்த இலக்கு அதற்குக் கீழ் திசையினில்.
நடுக்கத்துடன் மறைந்து போனான் இந்திரன்.
ஊரைக் கொளுத்தி நாசம் செய்த பின்னர்,
சூரபத்மன் அடைந்தான் அக்னியின் நகரை.
சினம் மிகுந்த அக்னி போர் செய்தான்.
பலம் மிகுந்த அவுணர்கள் வென்றனர்.
ஊழித் தீயாக உருவெடுத்த அக்னி தேவன்
பாழ் செய்யலுற்றான் அவுணர் படையை.
‘சடசட’ என்ற ஒலியுடன் பற்றி எரிந்து
படையினர் பலர் அழிந்து போயினர்.
தாரகன் வந்து எதிர்த்தான் அக்கினியை,
வீரத்துடன் அவன் சிவப் படையை எடுக்க,
“சிவப் படைக்கலம் அழித்து ஒழித்து விடும்,
சினந்து அத்தனை உலகங்களையும்!”எனக்
குறுக்கிக் கொண்டான் தன் வடிவினை அக்கினி,
“பொறுப்பீர் நான் செய்த பிழையை!” என்றான்.
அக்கினியைத் தாக்க முயன்றனர் அவுணர்கள்;
அக்கினியின் செல்வதைப் பறித்துக் கொண்டனர்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
2#12b. CHARANAAGATHI.
The messengers informed Kuberan about the arrival of Soorapadman’s army. Kuberan knew that no one could defeat Sooran who had the protection of Lord Siva. He decided to surrender unconditionally and save his skin.
“I am your slave sir!” Kuberan told Sooran.
“Good! never forget that fact!” replied Sooran.
Sooran’s army looted all the wealth of ALagApri. Then the army went eastwards. Indra disappeared silently. His city was burned down and Sooran’s army reached the city of Agni Devan.
Agni fought with valour but the asuras were mightier. Agni assumed the form of the terrible praLaya agni and started burning down the asura army.
TArakn took out his Siva bhANam. It would surely destroy all the worlds. So Agni Devan shrunk his size and surrendered to Sooran. His wealth was looted by the army of asuras.