• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

Sri Venkatesa PurANam

19. அகஸ்தியர்

அரியதொரு தவம் செய்தார் அகத்திய முனிவர்
கரிய நிறக் கண்ணனைப் பொதிகையில் காண.


பிரத்தியக்ஷம் ஆனார் பிரம்ம தேவன் அங்கே.
“பரந்தாமனைக் காணச் செல்வீர் சேஷகிரி!”


வேங்கடத்தை அடைந்து தவம் செய்கையில்
ஓங்கி ஒலித்தது விண்ணில் ஓர் அசரீரி.


“திருமலையில் உள்ளன நீராடுவதற்கு
திவ்விய தீர்த்தங்கள் ஆயிரத்து எட்டு!


மூல மந்திரத்தை உச்சரித்து நீராடி விட்டு
மலையின் மகிமை கூறி வலம் வருவாய்!


தவம் செய்தால் தவறாமல் கிடைக்கும்
பவம் ஒழிக்கும் பரந்தாமனின் தரிசனம்!”


ஆயிரத்தெட்டு தீர்த்தங்களிலும் நீராடி,
வாயால் மூல மந்திரத்தை உச்சரித்து;


வலம் வந்தார் அகத்தியர் திருமலையை;
தவம் செய்தார் பரந்தாமனைக் குறித்து.


சுவாமி புஷ்கரிணி அருகே பெற்றார்,
சுவாமி தரிசனம் லக்ஷ்மி சமேதராக!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#19. Sage Agasthya


Sage Agasthya wished to have the darshan of MahA VishNu and did severe penance in Podigai mountain. Brahma appeared to him and said, “If you go to Venkata Giri and perform your penance there, lord NArAyanan will give you his darshan”

Agasthya reached the Venkata Giri and sat in penance. He heard an asareeri loud and clear. “There are one thousand and eight divya teertams in Venkata Giri. Chant the moola mantra and take a dip in every one of the holy teertams. Go round the mountain elaborating on its greatness. God will give you his darshan.”


Agasthya did as he was told. He tool a dip in each of the one thousand and eight holy theertams chanting the moola mantra. He went round the mountain elaborating on it greatness. Near SwAmi PushkariNi he got the darshan of lord NArAyaNan with his consort Lakshmi Devi.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#9c. மந்தாதா

பிருது பிறந்தான் மன்னன் விகுக்ஷியின் மகனாக;
பிருது கொண்டிருந்தான் விஷ்ணுவின் அம்சத்தை.

மந்தாதா தோன்றினான் இந்த வம்சத்தில் – பல
மண்டபங்கள் அமைத்தான் மகாநதிக் கரையில்

வித்தியாசமானவன் மந்தாதா; பராசக்தியின் பக்தன்,
வினோதமாகத் தோன்றினான் தன் தந்தையிடமிருந்து!

யௌவனாஸ்வான் ஆவான் இவன் தந்தை.
யௌவன மனைவியர் இருந்தனர் நூறு பேர்.

உண்டாக வில்லை மகப்பேறு அவனுக்கு;
வேண்டினான் முனிவர்களிடம் உதவுமாறு.

குழுமினர் முனிவர்கள்; செய்தனர் யாகம்;
கும்பத்தை ஸ்தாபித்து மந்திரித்து வந்தனர்.

தாகம் ஏற்பட்டது யௌவனாஸ்வானுக்கு;
யாகம் செய்யும் இடத்துக்குச் சென்றான்.

கும்பத்தின் மந்திரித்த நீரைப் பருகிவிட்டான்!
ஸ்தம்பித முனிவர்கள் திரும்பிச் சென்றனர்!

கரு உண்டானது கும்பத்து நீர் பருகியதால்;
பெருகலானது வயிறு கர்ப்பவதியைப் போல்.

வலது புறத்தைக் கிழித்துக் கொண்டு
வந்து பிறந்தான் அவன் தவப்புதல்வன்.

மரணம் அடையவில்லை யௌவனாஸ்வான்;
கருணை புரிந்து உயிர் காத்தனர் தேவர்கள்.

பாலூட்டுவது எப்படி என்று விசனப்படுகையில்
பால் சுரந்தது இந்திரனின் சுண்டு விரலில்!

“மாந்தாதா!” என்று கூறியபடித் தந்தான்
இந்திரன் தன் சுண்டு விரலைச் சுவைக்க.

பாலை அருந்திய பாலகன் வளர்ந்தான் சிறப்பாக;
பலசாலியானான் வளர்ந்து பெரியவன் ஆனவுடன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

(மாந்தாதா = நான் இவனை ஊட்டுபவன்)

7#9c. MAndAtA

Pruthu was the son of Vikukshi. Pruthu had the amsam of Vishnu. MAndAtA was born in his race. He was different from the others. He was born not out of his mother but out of his father YowvanAswAn. He was a staunch devotee of Devi ParA Shakti.

His father YowvanAswAn had one hundred beautiful wives but none of them bore him any children. So he performed a yAgam with the help of the sages. Those rushis established a kumbam filled with water and were infusing the power of all the mantras they chanted into the water of the kumbham.

One night YowvanAswAn felt very thirsty and drank the water from the kumbham. He became pregnant with a child and his stomach bulged out similar to that of a pregnant woman. In due course, a son emerged by tearing open the right side of his body.

The Devas took pity on the king and kept him alive. The next problem was feeding the new born child. Suddenly milk for the child started oozing from the little finger of Indra.

He gave his finger to the child to suckle uttering the words ‘MAndAtA’ meaning “He suckles me!” The child grew up well and became a strong man later on.


 
bhagavathy bhaagavatam - skanda 1

1# 8. பராசக்தி

“முழு முதற்கடவுள் விஷ்ணு என்பர் சிலர்.
முழு முதற்கடவுள் சிவன் என்பர் சிலர்.

முழு முதற்கடவுள் சூரியன் என்பர் சிலர்.
முழு முதற்கடவுள் வருணன் என்பர் சிலர்.

சக்தி ஆற்றுகின்றாள் முத்தொழில்களை!
சக்தி விகசிக்கின்றாள் மூன்று விதங்களாக!

உள்ளாள் படைக்கும் சக்தியாக பிரமனிடம்;
உள்ளாள் காக்கும் சக்தியாக விஷ்ணுவிடம்;.

உள்ளாள் அழிக்கும் சக்தியாக சிவனிடம்;
உள்ளாள் ஒளிரும் சக்தியாக சூரியனிடம்;

உள்ளாள் உந்தும் சக்தியாக வாயுவினிடம்;
உள்ளாள் எரிக்கும் சக்தியாக அக்கினியிடம்;

உள்ளாள் குண்டலினி சக்தியாக மனிதனிடம்;
உள்ளாள் உயிர்ச் சக்தியாக உயிரினங்களிடம்;

செய்ய முடியாது எச்செயலையும் சக்தியின்றி!
செய்வாள் சக்தி செயலைத் தன்னிச்சைப்படி!

உபாசிக்கின்றனர் தேவியை மோக்ஷ காமிகள்,
உபாசிக்கின்றனர் தேவியை இகபோக காமிகள்,

தருவாள் தேவி அறம், பொருள், இன்பம், வீடு.
தரமாட்டாள் தன் தண்ணருளை அவிவேகிகளுக்கு.

தொழுவர் பராசக்தியை மும்மூர்த்திகளும்;
பெறுவார் தம் தொழிலுக்கு உகந்த சக்தியை.”

பிரமனுக்கு இதை கூறியவர் விஷ்ணு;
பிரமன் இதைக் கூறினான் நாரதருக்கு;

வியாசருக்குக் கூறினார் நாரத முனிவர்;
வியாசர் விளக்கினார் சூதமுனிவருக்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#8. ParA Shakti

“Some people believe that VishNu is the supreme God. Some others believe that Siva is the supreme God. Yet others believe that the Sun and VaruNa are the supreme Gods.


Shakti does everything. Shakti expresses Herself in different manners. In Brahma She expresses as his Creative Energy. In VishNu She expresses as his Protecting Energy. In Siva She expresses as his Destructive Energy.

In the Sun She is the Light Energy. In Agni (Fire) She is the Heat Energy. In VAyu (Wind) She is the Pushing Energy. In man She is the dormant Kundalini Energy. She is the life energy in every living thing.

No action can be done without Shakti. In fact Shakti perform every action – the way she wants it to be done. Everyone prays to Shakti – the people who are seeking liberation as well those who are seeking to enjoy all the worldly pleasures.

DEvi can give us anything we seek – Dharma, Arththa, KAma and Moksha ( the four aims in a man’s life namely Righteousness, Prosperity, fulfillment of Desires and Total Liberation respectively)


She does not shower Her grace on the people without vivEkam – the power of discretion. Even the Trinity worship Shakti Devi in order to get the power they need, to perform their duties well. “


The greatness of ParAshakti was first told to Brahma by VishNu. Brahma told this to NArada and NArada told this to VyAsa who in turn told this to Soota maharushi.



 
kanda purANam - asura kANdam

15a. விஸ்வகர்மா

“அழகிய ஒரு நகரை விரைந்து
அமைத்துக் கொடுப்பாய் எனக்கு!”

சூரனின் ஆணைப்படித் தச்சன்
சீரிய நகரை அமைக்கலுற்றான்.

நகரை அமைக்க உகந்த இடத்தைப்
பகர்ந்தார் அசுரகுரு சுக்கிராச்சாரியார்.

தென்கடலை அடைந்தான் விரைந்து!
எண்பதாயிரம் யோஜனை பரப்பளவில்,

கடலைத் தூர்த்தான் பெயர்த்த மலைகளால்!
ஆடகப் பொன்னால் அமைத்தான் மதில்களை.

நான்கு வாயில்களும், நான்கு கோபுரங்களும்,
நான்கு திசைகளிலும் பொலிந்து விளங்கின.

தெருக்கள், மாடங்கள், மாளிகைகள்,
அரங்குகள், மண்டபங்கள், சூளிகைகள்,

குன்றங்கள், சோலைகள், குளங்கள்,
மன்றங்கள் அமைந்தன மிகவும் அழகுற.

அந்நகரின் நடுவே அழகிய அரண்மனை,
அந்தப்புரம், படைக்கலச் சாலைகளுடன்.

வீர மகேந்திரபுரம் என்ற சூரனின் நகரம்
விளங்கியது கடலே அகழியாகக் சூழ்ந்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#15a. VISWAKARMA.


“Build me a city worthy of my position!” Soorpadaman commanded the Celestial carpenter Viswakarma. SukrAchArya suggested the ideal place to build the city.
Viswakarma reached the southern sea. He levelled the sea floor with the plucked mountains and recovered a vast area of 80,000 joyanas.

The surrounding wall of the city was made of pure gold. There were four entrances and four gopurams – one on each side.

The streets, multi storied houses, mansions, assembly halls, mandapam, gardens, ponds and stages were constructed. In the center of this wonderful city stood a palace with a separate quarters for the royal women and a place to store the weapons of warfare.



 
sree venkatesa purANam

20. சங்கன்

சூரிய வம்சத்தின் ஓரரசன் சங்கன்,
கோரினான் இறைவன் தரிசனத்தை.

கேட்டான் வசிஷ்ட முனிவரிடம் சென்று,
“நாட்டம் கொண்டேன் இறை தரிசனத்தில்!

தேட்டம் இல்லை தவம் செய்யும் இடம்;
வாட்டம் அடையாது தரிசிக்க உதவுவீர்.”

“சுவர்ணமுகி தீரத்தில் அமைந்துள்ளது
சேஷாச்சலம் என்னும் வேங்கடமலை.

முனிவர்கள் செய்தனர் அங்கே தவம்
புனிதன் நாராயணனின் தரிசனம் பெற.

பரம சிவன் உள்ளான் அடிவாரத்தில்;
பரந்தாமன் உள்ளான் மலையுச்சியில்.

விண்ணோர், மண்ணோர் தொழுவர்
கண்ணனை ஸ்ரீனிவாசனாக அங்கே.

பர்ணசாலை அமைத்துத் துதித்தான்,
சுவர்ண முகி தீரத்தில் வாயு தேவன்.

வந்தார் வயோதிகர் ஒருவர் அங்கு.
வாயுவின் தவத்தை மெச்சினார் .

வந்தவர் இறைவனோ என ஐயுற்றுத்
தங்க வைத்தான் சதுர்மாச விரதத்தில்.

திருவுருவைக் காட்டினார் வாயுவுக்கு,
விரதத்தைப் பூர்த்தி செய்ய உதவினர்.

கற்பத்தின் முடிவில் குழுமுவர் முனிவர்
சக்கர தீர்த்தத்தில்!” என்றார் சுக முனிவர்.

“மலையை வலம் வந்து ஞானயோகம் செய்.
அலைமகளுடன் தரிசிக்கலாம் நாரணனை!”

சங்கன் செய்தான் அவர் கூறியவாறு;
சங்கன் முன் தோன்றினான் நாரணன்.

“சந்திரன் சூரியன் உள்ள வரையில்
சன்னதி கொள்வீர் திருமலையில்!”

“சகலரும் வணங்கி அர்ச்சிக்கும்படி
சமைப்பாய் என் உருவத்தை இங்கு!”

ஆராதித்தான் திருவுருவை அமைத்து;
மாறாத பரமபதம் அடைந்தான் பிறகு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#20. Sankan

Sankan was a king born in the Soorya vamsam. He wished to have a darshan of lord NAraAyNan. He went to sage Vasishta and said, ” I wish to have a darshan of the lord. I do not know where to perform my penance. Please guide me properly so that I will surely get a darshan of the lord without fail.”

The sage Vasishta replied, “SeshAchalam is situated near SwarNamukhi theertam. Many sages have done penance there to obtain a darshan of lord NArAyaNan. Siva has his abode at the bottom of the mountain and SreenivAsan at the top of the hill. The Deva and the mAnava worship Lord NArAyaNan as SreenivAsan there.

VAyu Devan had done penance there once. He erected a hut on the banks of the river SwarNamukhi and did penance on NArAyaNa. An old Brahmin came there. He praised the penance done by VAyu Devan. VAyu Devan had a doubt that the old Brahmin might be God himself.

So he requested the old Brahmin to stay on with him in the hut and help him complete the chatur mAsya vratham successfully. The old Brahmin obliged as he was requested. He then revealed his true from as Lord NArAyaNan before leaving Sankan.

Sage Sukar has predicted that at the end of this kalpam, all the sages and rushis will gather at the Chakra theertam. Agasthya performed JnAna yogam there and got the darshan of NArAyaNan with his consort Lakshmi Devi. You can do the same thing and you will surely get the darshan of the lord.”

Sankan was happy with this guidelines given by sage Vasishta. He followed the instructions to the letter. Lord NArAyNan appeared before Sankan. He prayed to the lord, “Please reside here as long as the Sun and moon shine on the sky.”

The lord bade him, ” Please make a statue of me which will be worthy of being worshiped by everyone’!” Sankan established a beautiful vigraha of the lord and worshiped it sincerely. When his time came to leave this word, he reached lord’s parama padam.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#10a. சத்திய விரதன்

மாந்தாதா விளங்கினான் சிறந்த மன்னனாக;
இந்திரன் தந்தான் திரஸதஸ்யு என்ற பட்டம்.


பிந்துமதி மாந்தாதாவின் அழகிய மனைவி;
பிந்துமதிக்குப் பிறந்தனர் இரண்டு மகன்கள்.


புருகுச்சன், முசுகுந்தன் ஆவர் இரு மகன்கள்
புருகுச்சன் வம்சத்தில் பிறந்தான் அருணன்.


அருணனின் மகன் ஆவான் சத்திய விரதன்
பெரும் காமுகன், சுயநலவாதி, லோப குணன்.


சென்றான் அந்தணர் திருமணத்துக்கு – கடத்திச்
சென்றான் மணப்பெண் மேல் மோகம் கொண்டு.


முறையிட்டனர் பெற்றோர் அருணனிடம் சென்று;
முறை தவறி நடந்த மகன் மீது சினம் கொண்டான்.


நாடு கடத்தி விட்டான் அருணன் சத்திய விரதனை
நாய் இறைச்சி தின்பவர்கள் வாழுகின்ற சேரிக்கு.


பரிந்து பேசி சமாதானம் செய்யாததால் – அவன்
குரோதம் கொண்டான் குலகுரு வசிஷ்டர் மீது.


கானகம் சென்றான் அருணன் தவம் செய்திட;
வானம் பொய்த்தது பன்னிரண்டு ஆண்டுகள்!


தேசத்தில் தலை விரித்தாடியது கடும் பஞ்சம்;
வசித்தது அங்கு விச்வாமித்திரரின் குடும்பம்.


‘ஒரு பிள்ளையை விலைக்கு விற்று விட்டால்
பிற பிள்ளைகளைப் போஷிக்க இயலுமே!’


கழுத்தில் தர்ப்பைக் கயிற்றைக் கட்டி மகனை
இழுத்துச் சென்றாள் விச்வாமித்திரரின் மனைவி.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


7#10a. Satya Vratan


MAndhAta was a good king. Indra gave him a title as Tirasathasyu. MAndhAta had a beautiful wife named Bindumati. They had two sons named Purukutsa and Muchukunda. AruNan was the son of Purukutsan and Satya Vratan was AruNan’s son.


Satya Vratan was lustful, greedy and self centered. He went to attend the wedding of a brahmin girl but abducted the beautiful bride during her wedding.


The parents of the bride complained to AruNan who became very angry and banished his son Satya Vratan to live in the slum with the people who ate dog meat. Satya Vratan was angry with the kula guru Vasishta for not intervening and patching up between him and his father AruNan.


AruNan went to a forest for doing penance. The rains failed for twelve long years. There was scarcity and famine everywhere.


Sage ViswAmitra’s family was living there. Unable to feed her children in the absence of the sage, ViswAmitra’s wife decided to sell one of her sons for money so that she can feed the other children. She tied a rope of kusa grass around the neck of her middle son and dragged him along for selling him for money.


Footnote:


This may sound strange but it is true!

Our ancestors firmly believed that in order to save a family, one family member can be sacrificed, to save a village, a whole family can be sacrificed, to save a country, a whole village can be sacrificed.

So ViswAmitra’s wife deciding to sell one of her children to keep alive all the others was not against the Dharma SAstra.



 
bhagavathy bhaagavatam - skanda 1

1#9a. மது, கைடபர் (3)

வியாபித்து இருந்தாள் நித்திரை ரூபமாக
விஷ்ணுவின் உடல் முழுதும் தாமஸ சக்தி.


விஷ்ணுவின் உடலிலிருந்து வெளிப்பட்டு
விண்ணில் கலந்தாள் ஆதி பராசக்தியுடன்.


கண் விழித்தார் விஷ்ணு உடலை அசைத்து;
கண்டார் நடுங்கி நின்றிருந்த பிரமதேவனை.


“காதுக் குரும்பியிலிருந்து தோன்றிய அசுரர்கள்
வாது செய்து அழைக்கின்றனர் போர் புரிவதற்கு!


துரத்தி வருகின்றனர் என்னைக் கொல்வதற்கு!
சரணடைய ஓடி வந்தேன் எந்தையே உம்மிடம்!”


“அஞ்ச வேண்டாம் பிரமனே தஞ்சம் புகுந்த பிறகு;
கொஞ்சமும் உணரவில்லை அசுரர் என் சக்தியை!”


வந்து சேர்ந்தனர் மது கைடபர்கள் அங்கு;
“வந்து போர்புரி! அன்றேல் வந்து வழிபடு!”


“போர் புரியுங்கள் முதலில் என்னுடன்!” எனப்
போரைத் துவக்கினார் விஷ்ணு அசுரர்களுடன்.


பாய்ந்து வந்தான் மது விஷ்ணுவை நோக்கி;
ஓய்ந்து விடாது புரிந்தனர் கடின மல்யுத்தம்.


நீண்ட காலம் கடந்த பின் களைத்த அசுரன்
நீங்கினான் மஹாவிஷ்ணுவை விட்டு விட்டு.


கைடபன் பாய்ந்தான் விஷ்ணுவை நோக்கி
கைடபன் புரிந்தான் மல்யுத்தம் இப்போது.


நீண்ட காலம் கடந்த பின் களைத்த அசுரன்
நீங்கினான் மஹாவிஷ்ணுவை விட்டு விட்டு.


மாறி மாறிப் போர் புரிந்தனர் அசுரர்கள்
நேரம் தரவில்லை விஷ்ணு இளைப்பாற.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#9a. Madhu and Kiataban (3)


DEvi in her TAmasic form as Sleep had pervaded over VishNu’s body. Now the Goddess of Sleep emerged out of VishNu and merged with Aadhi ParA Shakti in the sky. VishNu moved his limbs and woke up from his deep slumber. The first thing he saw was Brahma shivering with fear.

Brahma told VishNu, “While you slept on two asuras Mahu and Kiataban were born out of the wax in your ears. They are challenging me to fight with them. They are chasing me all over the place and are determined to kill me. I surrender to you my dear father! Please save me from these demons!”

VishNu consoled Brahma saying, “No need to feel threatened anymore, dear Brahma! Now that you have surrendered to me I shall protect you. Those asuras do not know my power yet!”

Madhu and Kaitaban who were chasing Brahma reached there. They made fun of Brahma again and said, “Either you come and fight with us or you kiss our feet and surrender to us”. VishNu intervened and told the asuras, “First you will have to fight with me and then you can think about fighting with Brahma.”

Madhu sprang upon VishNu and they started to wrestle. It went on and on for a very long time until Madhu got tired. He let go of VishNu and went away. Now Kaitaban sprang upon VishNu and continued to wrestle until he became very tired.

Thus the two asuras fought with VishNu alternately taking rest in between their bouts, but making sure that VishNu did not get any time to rest or relax during the fight.



 
kanda purANam - asura kANdam

15b. பிற நகரங்கள்

ஏமபுரம், இமயபுரம், இலங்கைபுரம்,
நீலபுரம், சுவேதபுரம், அவுணர்புரம்,

வாமபுரம், பதுமபுரம், என்ற எட்டு நகர்கள்
அமைந்தன அதன் எட்டுத் திசைகளிலும்.

அடைத்த இடத்தில் வடகடலின் நடுவே
அமைத்தான் ஆசுரத்தைச் சிங்கமுகனுக்கு.

கடல்கள் தோறும், தீவுகள் தோறும்,
படைகள், சுற்றங்களுக்கு நகரங்கள்.

பொன்னிற மேருவின் தென் பகுதியில்
நாவலந் தீவின் ஏமகூட மலையில்,

மாயாபுரத்தை அமைத்தான் தச்சன்
மாயையின் மைந்தன் தாரகனுக்கு.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#15b. THE OTHER CITIES.


Hemapuram, Imayapuram, Ilangaipuram, Neelapuram, Swethapuram, AvuNarpuram, Vaamapuram and Padmapuram were the eight cities constructed in the eight directions of the Veera Mahendrapuram.

The northern sea was leveled and a grand palace was constructed there for Singa mukhan. Every sea and every island was utilised to build a city for a kin or kith of Soorpadman.

On the southern side of the golden hued mount Meru, in the Jambu dwipa, in the Hemakoota giri, the city MAyApuram was constructed for TAraka asuran.

 
sree venkatesa purANam

21. பசு நெய் விளக்கு

அந்தணன் ஒருவன் விஷ்ணு சர்மன்,
சொந்த குல ஆசாரத்தை மறந்தான்.


இன்பம் தூய்த்தான் பல பெண்களுடன் கூடி;
இன்பம் தூய்த்தான் குரு பத்தினியைக் கூடி!


பாவம் பற்றியது முதுமையுடன் கூடி;
நோய் வாய்ப்பட்டான் மனது மிக வாடி.


வெறுத்தனர் அவனை உற்றார், உறவினர்;
துரத்தினர் வீட்டை விட்டு, ஊரை விட்டு!


ஓடிச் சென்றான் காட்டுப் பிரதேசத்துக்கு;
வாடி விழுந்து விட்டான் நாடிகள் தளர்ந்து.


கடித்துத் தின்றன நாய்களும், நரிகளும்;
துடி துடித்து இறந்தான் விஷ்ணு சர்மன்.


“குரு பத்தினியைக் கூடியவன் இவன்;
குருத் துரோகம் செய்தவன் இவன்!”


கூசியது இதைக் கேட்ட யமதர்மன் உடல்;
ஏசியபடி அனுப்பி விட்டான் நரகத்துக்கு.


வேத நாமன் விஷ்ணு சர்மனின் மகன்;
‘ வேத குலத்தில் பிறந்தார் என் தந்தை.


பேதம் பாராமல் செய்தார் பாவங்கள்;
வேதனையோடு துறந்தார் உடலை.


நற்கதி கிடைக்காது; நரகமே கதி !’
நன்கு அறிந்திருந்தான் வேத நாமன்.


“பாவம் தீர்த்து நற்கதி தர வேண்டும்;’
தேவனைப் பிரார்த்தித்து ஏற்றினான்


பசு நெய் விளக்குகளை ஸ்ரீநிவாசனுக்கு;
நசித்தது விஷ்ணு சர்மன் செய்த பாவம்!


முற்றிலும் பாவங்கள் நீஙகிய பின்னர்,
நற்கதி அடைந்து சென்றான் வைகுந்தம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#21. The ghee lamps

VishNu sarma was a Brahmin. He gave up all his kula AchAram and vichAram. He found happiness and pleasure in the company of fallen women. He possessed even the wife of his own guru.


When he became old, all his sins afflicted him along with his old age. He became very sick and sad. Nobody wanted to have anything to do with him. He was driven out of his own home and town.


He went to the jungle nearby. He was too tired and feeble to go on. He fell down and could not get up again. Wild animals came to eat his flesh and he met a very sad and cruel end.


Yama was told of the sins of VishNu sarma. “This man was not loyal to his guru. He enjoyed the company of his own guru patni.” Yama became very angry with this wicked man and sent him off to the hell promptly.


Veda NAman was VishNu sarma’s son. He was a good man and a good son. He thought about his dear departed father. “My father was born as a Brahmin. But he committed all kinds of sins without even thinking about their evil after effects.


He died a painful death. Surely he must be suffering in the hell. I wish I could dissolve his sins and make him free from the sufferings of the hell. ”


He prayed to lord SrinivAsan with bhakti and lit the lamps filled with the ghee made out of cow’s milk. The bundle of sins committed by VishNu Sarma started getting reduced slowly until one day all his sons had vanished.


He was allowed to go out of the hell and escape from his sufferings. He reached Vaikuntham solely because of the sincere efforts of his dear son Veda NAman.



 
Bhagathy Bhaagavatam - skanda 7

7#10b. திரிசங்கு

சத்திய விரதன் கண்டான் இருவரையும்
சத்திய விரதன் கேட்டான் விவரங்களை.

மனம் இளகி விட்டது சத்திய விரதனுக்கு;
“தினம் உணவு கொண்டு தருவேன் இனி!”

தர்ப்பைக் கயிற்றால் கட்டப்பட்ட மகன்
தவ முனிவன் காலவன் ஆனான் வளர்ந்து.

சத்தியம் தவறவில்லை சத்திய விரதன்;
நித்தம் கொண்டு தந்தான் உணவு வகைகள்.

ஒரு நாள் கிடைக்கவில்லை எந்த உணவுமே!
குரு வசிஷ்டர் வளர்த்தும் பசுவைக் கண்டான்.

குரோதம் மறையவில்லை மனத்தில் இருந்து!
விரோதம் வெளிப்பட்டது சமயம் வந்தவுடன்!

திருடிச் சென்றான் அவன் வசிஷ்டரின் பசுவை.
பெரும் பகுதியைத் தந்தான் ரிஷி பத்தினிக்கு.

தின்றான் தானும் கொன்ற பசுவின் இறைச்சியை!
‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்!” அல்லவா?

எல்லை மீறிவிட்டது வசிஷ்டரின் சினம் – தரும்
தொல்லைக்கு ஓர் அளவில்லாமல் போனதால்.

“கவர்ந்து சென்றாய் அன்று மணப் பெண்ணை;
கவர்ந்து தின்றாய் நான் வளர்த்து வந்த பசுவை.

மூட்டினாய் வெஞ்சினம் உன் தந்தையின் மனதில்!
மூன்று கொம்புகள் உடைய பிசாசாக மாறுவாய்!

கண்டு அஞ்சட்டும் மூன்று உலகங்களும் உன்னை!
கொண்டு திரிவாய் உந்தன் பாவ மூட்டைகளை!”

கோர உருவெடுத்துவிட்டான் சத்திய விரதன்;
சோர்வடையாது தியானித்து வந்தான் தேவியை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#10b. Trisanku

Satya Vratan saw the mother and her son she dragged along. He spoke to them and found out the matter. His heart melted with pity towards the unfortunate boy.

He promised to bring for their family enough food everyday without fail. He released the boy from the kusa grass rope. The little boy grew up to become KAlavan, a great tapasvi later in his life.

Satya Vratan kept his promise and secured food for the family of ViswAmitra everyday. On one day, he could not get anything for them. He then saw the cow that belonged to Sage Vasishta.

His anger towards Vasishta existed like a live coal covered with ash. When the opportunity came to retaliate he made use of it. He killed the cow and gave a major portion the the family of the rushi ViswAmitra. He also ate a part of the cow.

Sage Vasista’s rage knew no bounds when he came to know the truth. The troubles caused by Satya Vratan were becoming far too many.

He abducted the brahmin bride during her wedding. He abducted the sage’s pet cow to kill it and eat it. He had made his father very sad while he lived. Vasista cursed Satyavratan thus:

“May you become a demon with three horns, seeing whom all the three worlds will shiver in fear. May you roam around in the world carrying the bundle of all the sins committed by you!”

Satya vrathan became Ttrisanku – a demon with three horns. It did not bother him at all. He spent his entire time in meditating on Shakti Devi.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#9b. மது, கைடபர் (4)

கண்டனர் நீண்ட தொடர் போராட்டத்தை
விண்ணிலிருந்த பிரமனும், ஆதி சக்தியும்.

ஆண்டுகள் ஐயாயிரம் உருண்டு விட்டன!
மாண்டு போகவில்லை அசுரர் இதுவரை!

களைப்படையவில்லை மது, கைடபர்கள்!
களைப்படைந்தது விஷ்ணு மூர்த்தி தான்.

பல ஆண்டுகள் தொடர்ந்து போரிட்டாலும்
பலமும், சக்தியும் வளர்ந்தன அசுரர்களுக்கு.

சோர்வுற்ற விஷ்ணு சிந்திக்கத் தொடங்கினார்,
‘சோர்வின்றிப் போரிடுபவரை வெல்வது எப்படி?

தந்திரமாகக் கொல்ல வேண்டும் இவர்களை!‘
சிந்திக்கத் தொடங்கினார் விஷ்ணு ஓர் உபாயம்!

‘வினோத வரம் பெற்றுள்ளார்கள் இவர்கள்!
வினோதமாகக் காதுகளில் தோன்றிய அசுரர்!

விரும்பும் போது மட்டுமே நிகழும் மரணம்!
விரும்புவாரா எவரேனும் தன் மரணத்தை?

மரணத்தை விரும்ப வேண்டும் இவர்கள்!
சரணடைகின்றேன் சக்தி தேவியிடம் நான்!”

ஜோதி ஸ்வரூபமாக விண்ணில் நின்றிருந்த
ஆதி சக்தியிடம் முறையிட்டார் நாராயணன்.

“அஞ்ச வேண்டாம் போரில் உனக்கே வெற்றி!
வஞ்சிக்கிறேன் அசுரரைக் காமத்தில் வீழ்த்தி!

சஞ்சலம் இன்றிப் போர் புரிவாய் அசுரருடன்;
கொஞ்சமும் ஐயுறவேண்டாம் வெற்றி உனதே!”

உறுதி மொழி அளித்தாள் ஆதி சக்தி தேவி.
மறுபடி போரிட்டார் விஷ்ணு அசுரர்களுடன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1# 9b. Madhu and Kaitaban (2)


Brahma and Aadhi Shakti watched the prolonged wrestling between VishNu and the two asuras. It had gone on for five thousand years now and still neither of the asura could be killed!

They had not even become tired. Only VishNu had become very tired and exhausted by then. Since the asuras had emerged from VishNu’s ears, they were as strong as him and their strength grew as the fight prolonged.

VishNu started thinking now, ‘How can I win over them when they are so fresh and I am so exhausted and tired? They can be killed only by a trick. These asuras have obtained a rare boon from DEvi that unless they wish to die, they could never be killed.

Will anyone wish for his own death? So first of all I must make them wish to die. Only DEvi can make this miracle happen and I shall surrender to Her now!’

He looked up at Aadhi Shakti who stood in the sky in her brilliant jyothi swaroopam (luminous form) and sought Her help. DEvi smiled at VishNu and told him, “Do not get vexed. The victory shall be yours! I will make the asuras infatuated with lust. Get on with your fighting. Have no doubts about your victory in this fight!”



 
kanda purANam - asura kANdam

16. சூரன் முடிசூடுதல்

வீரமகேந்திரபுரத்தைக் கண்ட சூரன்,
வியந்து போற்றினான் விஸ்வகர்மனை.

சூரபத்மனுக்கு முடி சூட்டுவதற்குச்
சேர்ந்து வந்தது தேவர்கள் குழாம்.

அமர்த்தினர் சூரனை ஓர் இருக்கையில்.
அனைத்து தீர்த்தங்களால் முழுக்காட்டி,

பொன்னாடைகள் அழகுற அணிவித்து,
புனைந்தனர் பலவகை மலர் மாலைகள்.

அணிகலன்கள் பல அணிவித்தனர்;
அரியணையில், கொண்டு அமர்த்தினர்.

மணிமுடியை எடுத்தான் நான்முகன்,
அணிவித்தான் அதை சூரபத்மனுக்கு.

தேவர்களும், அவுணர்களும் வாழ்த்திட,
தேவாதி தேவன் ஆனான் சூரபத்மன்.

இந்திரன் ஏந்தினான் காளஞ்சியை;
ஏந்தினான் குபேரன் அடைப்பையை.

காற்றுக் கடவுள் வீசினான் சாமரம்;
கதிரவன், திங்கள் குடை பிடித்தனர்.

இசை பாடினர் கருட கந்தர்வர்,
இசைந்து ஆடினர் தேவ மகளிர்,

அவுணரும், முனிவரும் வாழ்த்துரைக்க,
எமனும், அக்கினியும் பிரம்பை ஏந்தி,

வந்திருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தி,
வரிசைப் படுத்தி ஒழுங்கு செய்தனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
[ காளஞ்சி = spittoon.
அடைப்பை = bag of betel leaves].

2#16. PATTABHISHEKHAM.


Soorapadman was duly impressed by the new city Veeramahendra Puram and praised Viswakarma’s talents. All the Devas came there together to crown Soorapadman as their new King.

Soorapadman was made to sit on a fine seat. The holy teretam was poured on him and he was dressed in rich silks, gold ornaments, flower garlands and fine jewels. He sat on his throne. Brahman placed the crown on Sooran’s head.

The Devas and asuras praised Sooran alike. He had become the King of Devas. Indra held the spittoon for Sooran and Kubera the bag of betel leaves.

VAyu Devan waved the chAmaram. The Sun and the Moon held the white umbrellas. Gandarvas and Garuda sang sweetly and all the apsaras danced beautifully.

The rushis and the asuras blessed Sooran alike. Yama and Agni controlled and regulated the huge crowd assembled there.

 
sree venkatesa purANam

22. அவிர் பாகம்

வையகத்தில் நடந்தான் லக்ஷ்மியுடன்,
வைகுந்தவாசன் இயற்கையை ரசித்தபடி.

சேஷாச்சலத்தின் மலைச் சரிவுகளில் யாகம்
செய்து கொண்டிருந்தனர் முனி புங்கவர்கள்.

திருமலையில் செய்யும் யாகமும், தவமும்,
ஒரு குறைவும் இன்றி நிறைவேறும் அல்லவா?

அரசன் என எண்ணிய முனிவர் இறைவனை,
வரவேற்று அளித்தனர் பாலும், பழங்களும்.

பீதாம்பரம், இரத்தின ஹாரம் அணிந்தவன்
சாதாரண மனிதனாக இருக்க முடியாதே!

“எந்த நாட்டு அரசர்? தங்கள் பெயர் என்ன?
இங்கு வந்த காரணம் கூறுங்கள்!” என்றனர்.

“அரசனும் அல்ல, நான் அந்தணனும் அல்ல;
ஆசாரம், ஜாதி, குலம், கோத்திரம் இல்லை!

தந்தையும் இல்லை, தாயும் இல்லை எனக்கு!
எந்த தேசமும் என் தேசமே! எப்போதுமே!

எங்கும் இருப்பவன், எல்லாம் என் ரூபம்;
எத்தனை பெயர்கள், அத்தனை குணங்கள்!”

‘மனநிலை சரியாக இல்லையோ இவருக்கு?’
முனிவர்கள் தொடர்ந்தனர் தம் ஹோமத்தை.

மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்கையில்,
வந்தன இரு கரங்கள் அவிர் பாகம் பெற்றிட.

அக்கினியின் நடுவில் கரங்களை நீட்டி – அச்
சக்கரவர்த்தி பெற்றார் முனிவரின் ஹவிசை!

சங்குச் சக்கரதாரியாகக் காட்சி அளித்தார்;
அங்கு வந்திருந்தவர் ஸ்ரீனிவாசன் அல்லவா?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

22. The Yajna

SrinivAsan and Lakshmi Devi went on a stroll enjoying the beauty of the hill sides. They saw a group of sages performing a yagna on the slopes of SeshAchalam. Everyone knew that any yAga, yagna, or tapas done on the SeshAchalam would bear fruit and get completed unhindered.

The sages saw SreenivAsan and thought he must be the king of a country. Surely a man dressed in peeta ambaram and wearing ratna hAram cannot be an ordinary man.

They welcomed the divine couple and offered them milk and fruits. The sages wished to know the name and country of the person they had imagined to be a king.

But SreenivAsan replied to the in an intriguing manner. “I am neither a king nor a Brahmin. I do not have any AchAram or varNam or vamsam or gothram. I have neither a mother nor a father. All the countries are my own countries. I prevail everywhere. Everything is in me and I am in everything. You can not count all my names nor the qualities associated with those names.”

The sages felt pity that such a handsome rich man seemed to be out of his mind. They went on with their yagna. When they offered the havisu, a pair of hands appeared in the flame to receive the offering.

Those hand belonged to the the person whom they had imagined to be a king. They realized that it was none other than the god they were worshipping.

God gave them his darshan with his conch, Sudharshan, mace and lotus flower along with Lakshmi Devi


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#11a. தேவியின் அறிவுரை

பக்தியுடன் ஜபித்து வந்தான் சத்திய விரதன்
நித்தியம் தேவியின் நவாக்ஷர மந்திரத்தை.

பிசாசு உருவில் வாழ்ந்து வந்தான் – குரு
வசிஷ்டரின் ஆசிரமத்தின் அருகிலேயே.

வேதியர்களிடம் வேண்டினான் சத்திய விரதன்,
“விதிப்படி யாகம் புரியவேண்டும் எனக்காக!”

“சபிக்கப் பட்டுள்ளாய் மன்னன் அருணனால்!
சபிக்கப் படுள்ளாய் குல குரு வசிஷ்டரால்!

திரிகின்றாய் உலகில் பிசாசு வடிவில் – இனிப்
புரிய முடியாது யாகம் உனக்காக!” என்றனர்.

‘இனி நற்கதிக்கு வாய்ப்பே இல்லையா!
இனி உயிர் வாழ்வதில் பயனே இல்லையா!’

தீப் புகத் துணிந்து விட்டான் சத்திய விரதன்!
தீ மூட்டி, நீராடித் தேவியைத் தியானித்தான்.

தேவி தோன்றினாள் விண்ணில் அவனுக்கு;
தேவி கூறினாள் அறிவுரைகள் அவனுக்கு!

“அழித்துக் கொள்ளாதே உன்னை நீயே!
அழைப்பு வரும் உன் தந்தையிடமிருந்து.

முதுமை அடைந்து விட்டான் தந்தை – அதனால்
புது மன்னன் ஆக்கிவிடுவான் உன்னை!” என்றாள்.

மாற்றிக் கொண்டான் தீக் குளிக்கும் முடிவை;
போற்றினான் தடுத்து நிறுத்திய தேவியை!

சென்றார் நாரதர் அயோத்தி நகருக்கு;
சொன்னார் விவரங்களை மன்னனுக்கு!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#11a. Devi’s advice

Satya Vratan kept chanting Devi’s NavAkshara mantra. He lived in the form of a hideous ghost near the Aahsram of sage Vasishta. He requested a group of rushis to perform a yagna to help him regain his original form.

But the rushis bluntly refused saying,” You have been cursed by your father king AruNan and also by your kula guru Vasishta. You roam the face of the earth as a hideous ghost with three horns. We can’t perform a Yagna for your sake.”

Satya Vratan lost his last ray of hope for redemption. He decided to end his life by jumping into a roaring fire. He lit a roaring fire. He took bath and meditated on Devi while getting ready to enter the fire.

Devi took pity on him and appeared to him in the sky. She told him,”Son! Do not destroy yourself in a haste. Your father will send for you and make you his lawful successor very soon. He is aged and wants to retire from royal duties”

Satya Vratan changed his mind and did not jump into the fire. He lived on and kept chanting Devi’s NavAkshari mantra on and on.

NArada went to Ayodhya and reported about all these happenings to King AruNan.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#9c. மது, கைடபர் (5)

தொடர்ந்தது மல்யுத்தம் மீண்டும் அசுரருடன்;
தளர்ந்து விட்டார் விஷ்ணு மிக மெலிந்து வாடி!


தோன்றினாள் அம்பிகை ஜகன்மோஹினியாக!
ஊன்றினாள் காமவிதையை அசுரர் நெஞ்சில்!


கடைக்கண் பார்வை காமன் பாணமாகித் தாக்க;
தடையின்றி விழுந்தனர் அசுரர் மோக வலையில்!


மங்கையின் புன்னகை கள்வெறி ஊட்டியது!
அங்க அசைவுகள் அலைக்கழித்தன அசுரரை!


அறிவு கலங்கியது; உடல் முறுக்கேறியது;
வெறுத்தனர் போர்த் தொழிலை இருவரும்.


விரும்பினர் புவனசுந்தரியின் கருணையை.
விஷ்ணு பேசினார் தேவியின் குறிப்பறிந்து.


“வியக்கின்றேன் உங்கள் தோள் வலிமையை!
வியக்கின்றேன் உங்கள் போர்த் திறமையை!


அளிக்கின்றேன் உங்கள் வீரத்துக்கு ஒரு பரிசு!
தெளிவுபடுத்துங்கள் விரும்புவது என்ன என்று!”


நகைத்தனர் அவ்விரு அசுரர்களும் அதைக் கேட்டு;
‘பகைவனிடமும் இத்தனை நகைச்சுவை உணர்வா?’


“யாசிப்பது உன் பழக்கம் ஆயிற்றே நாராயணா!
யோசிக்கிறோம் நாங்கள் உனக்கு வரம் அளிக்க!


தொடர்ந்து போர் புரிந்தாய் நீ எமக்குச் சமமாக;
கடந்து ஐயாயிரம் ஆண்டுகள் சென்ற போதிலும்!


என்ன வேண்டுமோ கேள் தயங்காமல் எம்மிடம்;
சொன்ன சொல் தவறோம் அசுரர்கள் ஆயினும்!”


“வெல்ல வேண்டும் நான் உங்களைப் போரில்!
கொல்ல வேண்டும் நான் உங்களைப் போரில்!


சொல்ல வேண்டும் இறக்க விரும்புவதாக!
அல்லது நிகழாது உம் மரணம் அறிவேன்!”


எதையாவது தந்து இவனை அனுப்பி விட்டு
எளிதாகச் சுவைப்போம் மோகினியை எனக்


கனவு கண்ட அசுரர்களுக்கு இந்த நிகழ்ச்சி
நினைக்கும்போதே மனம் கசந்து வழிந்தது.


‘வரத்தை வைத்து விஷ்ணு எம்மை மடக்கினான்;
வரத்தை வைத்தே நாம் அவனை மடக்குவோம்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#9c. Madhu and Kaitaban (3)

VishNu resumed the wrestling with the asura wondering when he would win in this fight. DEvi now appeared as a world class beauty or a ‘jagan mohini’! She infatuated the asuras with her dazzling appearance. Her sidelong glances worked like the Cupid’s arrows and the asuras fell madly in love with her at the very first sight.

Her sweet smile intoxicated them. Her lovely figure and form made them tremble with desire and long for her proximity. Their intellect became clouded and shrouded. All they wanted now was to enjoy physical intimacy with this heavenly damsel – at any cost.

VishNu took the hint from DEvi and started talking to the asuras now. “I am deeply impressed by your strength and valor. I am deeply impressed by your knowledge in the warfare. I want to give you a gift to show my appreciation. What shall it be?”

The mighty ausras had a hearty laugh on hearing this. “Begging has been your chosen profession oh NArRyaNA! Actually we wish to give you a gift – since you fought with us for five thousand years and were almost equal to us in your strength. What do you wish for?”

This was the opportunity VishNu had been waiting for. He told them without hesitating,”I want to defeat you both in this fight. I want to kill you both in this fight. But this can’t happen unless you yourselves wish to die. So I want both of you to wish for your death now!”

The asuras were shocked beyond words! They had thought that they could bestow some gift or boon on VishNu, send him away so that they could enjoy the company of the beautiful maiden undisturbed. They never suspected that their gift would boomerang and make them wish to die!

Still all was not lost. VishNu had trapped them using their gift. They would trap him by using the boon given by him long ago!”



 
kanda purAnam - asura kANdam

17a. அரசாட்சி

“என் தந்தைக்குப் பாட்டன் முறை நீ!
நான் அழைக்கும்போது விரைந்து வா!”


திருமாலிடம் ஆணை இட்டான் சூரபத்மன்.
தினமும் பஞ்சாங்கம் சொல்வதற்கு பிரமன்;


என்றைக்கும் இளம் வெயிலாகக் கதிரவன்,
என்றைக்கும் முழுக்கலையுடன் சந்திரன்;


நினைத்த போது வந்து பணிகள் புரிந்தாலும்,
அனைவருக்கும் குளிர்ச்சியாகிய அக்கினி;


“எல்லா உயிர்கள் போல் எண்ணிக் கொண்டு
கொல்லக் கூடாது அவுணரை, விலங்குகளை!”


எமனிடம் ஆணை இட்டான் சூரபத்மன்;
எத்தனை தேவர்களோ அத்தனை ஆணைகள்,


நகர் பெருக்கிச் சுத்தம் செய்திட வாயு தேவன்,
நீர் தெளித்து நகரைச் சீராக்கிட வருண தேவன்,


குற்றேவல் புரிந்திட வரவேண்டும் தினமும்,
மற்ற தேவர்கள் நாள் தவறாமல் அங்கே!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#17a. SOORAPADMAN’S REIGN.


“You are my great grandfather. SO You must come to me whenever I call you! Soorapadman told VishNu. Brahma was commissioned to read the panchNngam (almanac) to Sooran everyday.


The Sun was commanded to keep his rays always gentle and pleasant. The moon was commanded to be always a full moon and not to wane and wax. Yama was commanded not to kill the asuras and their animals.


Each Devan was given a specific task to perform. VAyu Devan was ordered to sweep the city clean everyday. VaruNa Devan was ordered to sprinkle water to settle the dust. The remaining Devas were ordered to come there everyday to perform the other odd menial jobs.


 
sree venkates purANam

23. குமார தாரிகை


அழகிய இளைஞனாக மாறிய ஸ்ரீனிவாசன்
ஆடித் திரிந்தார் மலைச் சரிவில் ஒருநாள்.


வந்து கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர்,
வயது முதிர்ந்தவர் தன்னந் தனியாளாக!


கூனி விட்ட முதுகு; வலுவிழந்த கால்கள்,
பனி மறைக்கும் கண்கள், பசியுடன் தாகம்!


துணைக்கு வந்த மகனைத் தேடிக் கொண்டு,
‘ துணைக்கு வந்தவன் எங்கே போய்விட்டான்?


தண்ணீர் எடுக்கச் சென்றவன் வரவில்லையா?’
கண்ணீருடன் தேடிக் கொண்டிருந்தார் அவனை!


முள்ளிலும், கல்லிலும் அவர் நடப்பது கண்டு,
உள்ளம் வெண்ணையானது ஸ்ரீனிவாசனுக்கு!


“இறைவா! ஏன் நான் உயிரோடு உள்ளேன்?
இருக்கிறேன் ஒரு பாரமாக மற்றவர்களுக்கு!


வாட்டி வதைக்கின்றது முதுமையில் வறுமை.
வாழ்வதால் ஒரு பயன் இல்லையே இனி நான்”


மெள்ளத் தடவினான் முதுகை ஸ்ரீனிவாசன்,
“துள்ளும் இளமையோடு இருக்க விருப்பமா?”


“கேலி செய்கிறாயா தம்பி கிழவன் என்னை? என்
வேலைகளைச் செய்ய முடிந்தாலே போதுமே!


சேவை செய்வேன் இறைவனுக்கு முடிந்தவரை,
தேவை இல்லை துள்ளும் இளமை !” என்றார்.


“சுனைக்கு அழைத்துப் போகிறேன் முதலில்;
நனைத்தால் குறையும் உடலின் உஷ்ணம்.”


நீரில் முங்கி எழுந்தவர் மாறி விட்டிருந்தார்!
நிமிர்ந்து விட்ட முதுகு; இறுகிய தசைகள்!


நூறு வயது குறைந்து விட்டது – பதி
னாறு வயது வாலிபனாக மாற்றியது!


காணோம் கரையில் இருந்த இளைஞனை;
நாரணன் காட்சி தந்தான் புன் முறுவலுடன்.


“நித்திய கர்மங்களைச் செய்வீர் முன்போல்.”
பக்தியுடன் விழுந்தார் கால்களில் அந்தணர்.


முதியவரை இளையவராக ஆக்கிய சுனைக்குப்
புதிய பெயர் கிடைத்தது குமார தாரிகை என்று!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


#23. KumAra ThArigai

SrinivAsan went dancing and singing on the SeshAchalam as a young happy lad. He saw an old Brahmin walking with faltering steps. His back was bent and his legs were weak. His eyes were misty and he appeared to be very hungry, thirsty and tired.


He was looking for someone – may be his son who had gone to fetch drinking water and had not come back. SreenivAsan’s heart melted to see the old, feeble man walk on the rough terrain.


The old man lamented loudly, ‘Why am I still alive ? What is the purpose of my living except to become a burden to my family. Poverty and old age torture me. I do not see any point in my living”


SreenivAsan went to the old man and stroked gently on his bent back. “Do you wish to become young once again, oh grand father?”


The old man felt hurt and said, “Surely you must be making fun of me! I will be more than happy to be able to do my work without troubling anyone any more.”


“Let us go to the pond and take a dip in it. Your heat as well as thirst will disappear.” The lad led the old man to the water body . The old man immersed himself in it a slowly.


When he came up again he was transformed to a lad not more than sixteen years old. His back had become straight. His muscles were firm and he was hale, healthy and robust.


He searched for the lad who performed this miracle but he was not to be found. Instead he saw lord SreenivAsan with a smiling face. The lord blessed him and said,”Do your nithya karma as before and serve the others well!”


The theertam got a new name as KumAra thArigai since it transformed an old man into a kumaran.



 
bhagavatahy bhaagavatam - skanda 7

7#11b. அருணனின் அறிவுரை

கழிவிரக்கம் கொண்டான் மன்னன் அருணன்;
‘இழிசெயல் புரிந்த மகன் இன்று மாறிவிட்டான்.


ஒறுப்பது தேவையில்லை இனியும் அவனை!
வெறுப்பது தேவையில்லை இனியும் அவனை!


முடிசூட்ட வேண்டும் சத்திய விரதனுக்கு;
விடைபெற வேண்டும் வனம் செல்வதற்கு.’


கந்தல் ஆடைகளைக் கோர வடிவினைக் கண்டு
நொந்து போய்விட்டான் மன்னன் அருணன்.


அணைத்துக் கொண்டான் சத்திய விரதனை.
இணக்கமாகக் கூறினான் பல அறிவுரைகள்.


“கொள்ள வேண்டும் தர்ம சிந்தனை எப்போதும்;
கௌரவிக்க வேண்டும் அந்தணரை எப்போதும்.


தேடவேண்டும் பொருளைத் தர்மமான வழிகளில்;
நாடவேண்டும் நம் நாட்டு மக்களின் நன்மைகளை.


போற்ற வேண்டும் முனிவரைத் தவசீலரை.
பெற வேண்டும் புலன்களின் மீது ஆதிக்கம்.


மந்திராலோசனை நடக்க வேண்டும் ரஹசியமாக.
எந்த எதிரியையும் துச்சமாக நீ எண்ணி விடாதே!


எதிரிடம் அன்பு கொண்ட அமைச்சன் விரோதி.
எதிரியின் எண்ணத்தை ஒற்று அறிய வேண்டும்.


செய்ய வேண்டும் தானம், தருமம் அனுதினம்;
செய்யக் கூடாது வாதம், பிடிவாதம் எப்போதும்.


நம்பாதே அன்பு கொண்ட மகளிரையும் கூட.
நட்புக் கொள்ளாதே நீ சூதாடிகளுடன் கூட.


வேட்டையில் வேண்டாம் விரக்தியும், வெறுப்பும்.
தேட்டமும் தேவை தெளிவும் தேவை எப்போதும்.


கொடு தானம் வேதம் அறிந்த அந்தணனுக்கு;
கொடு அன்னம் வேதம் அறியாத அந்தணனுக்கு.


நீதி சாஸ்திரங்களின்படி நடந்து வருவாய்.
நியாயமான வரியைக் கஜானவில் சேமிப்பாய்!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


7#11b. AruNan’advice


King AruNan was moved with pity towards his son Satya Vratan. “My son has reformed now. He has won the grace and mercy of Devi ParA Shakti. There is no need for me either to hate him or punish him any more. I must crown him as my successor and take leave of him to go to a forest to do penance.”


When he saw his son’s hideous form and the tatters he was dressed in, he broke down completely. He hugged his son and advised him as a king should advise his successor. AruNan told Satya Vratan,


“Always entertain good thoughts. The brahmins and learned pundits must be always honored. Wealth must be earned by fair means. The first and foremost thoughts of a king should be the welfare of his citizens.


Gain control over your pancha indriyas ( five sense organs). The counselling with the ministers must be done in absolute secrecy. Do not slight or ignore any enemy – however weak and insignificant he maight appear to be.


The minister who has a soft corner for your enemy is also your enemy. Know the plans of your enemies by employing clever and smart spies.


Give dAnam everyday. Do not argue for petty things and unimportant issues. Do not trust completely any women – even those who seem to love you very dearly.


Do nor befriend gamblers. Do not give permission for hunting the animals. At the same time do not go to the other extreme and start to hate hunting of the wild animals.


You need to be clear minded and focused at all times. Give rich dAnam to the brahmins who have mastered the Vedas. Give rich feast to those brahmins who have not learned Vedas.


Always go according to the dharma sAstras. Always add the tax collected from the citizen in the royal treasury.”



 
bhagavathy bhaagavatam - skanda 1

1#9d. மது, கைடபர் (6)

மது கைடபர்கள் சொன்னார்கள் விஷ்ணுவிடம்,
“மறந்திருக்க மாட்டாய் என நினைக்கின்றோம்!


நீர் மயமாக உலகம் இருந்தபோது எமக்கு
நீ தந்தாய் ஒரு வரம் அது நினைவுள்ளதா?


நீரே இல்லாத விசாலமான ஒரு இடத்தில்
நீ கொல்லலாம் எங்களை இப்போது!” என;


சிந்தித்தார் சுதர்சனத்தை விஷ்ணு – உடனே
வந்திறங்கியது அது அவர் வலக்கரத்தினில்.


“வரம் தருகின்றேன் நீங்கள் கேட்டவாறே;
பரந்த நீரற்ற பிரதேசத்தை இதோ காண்பீர்!’


விண்ணுலகை முட்டும் விஸ்வரூபம் எடுத்தார்!
மண்ணுலகை ஒத்த தொடையைக் காட்டினார்.


“இந்தப் பிரதேசத்தில் வையுங்கள் தலையை;
தந்த வாக்கிலிருந்து பின்வாங்கிச் செல்லாதீர்!”


அப்போதும் செய்தனர் அசுரர்கள் ஒரு மாயம்!
தப்ப வேண்டும் எப்படியாவது உயிருடன் என்று.


நீட்டினர் தம் உடல்களை ஆயிரம் யோஜனைக்கு!
நீட்டினார் தொடையை ஈராயிரம் யோஜனைக்கு!


நாணமடைந்த அசுரர் வைத்தனர் தலைகளை!
நாரணன் சுதர்சனம் வேறாக்கியது அவற்றை.


பரவின இறைச்சியும், ரத்தமும் கடல் நீரினில்!
பரவிய இடமே பிறகு ஆனது இந்த பூதலமாக.


மேனியில் இருந்து தோன்றியது இந்த மேதினி;
வீணாகவில்லை மது கைடபர்களின் உடல்கள்.


வலிய அசுரர்களை வீழ்த்தவில்லை – தன்
வலிமையினால் நாரணன் நீண்ட போரில்!


மோகன சக்தியாகி மயக்கிய தேவியே
வேகமான அழிவுக்குக் காரணம் ஆனாள்.


“பராசக்திக்கு மிஞ்சிய தெய்வம் இந்தப்
பாரினில் இல்லை!” என்பது வேத வாக்கு.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#9d. Madhu and Kaitaban (6)


Madhu and Kaitaban told VishNu,”When the whole world was immersed in water, you had given us a boon. Do you still remember it? We want to make use of it now. We want to get killed by you only on a dry region devoid of any water.”

VishNu contemplated on his Sudarshan. Immediately it came and landed on his right hand. “I remember that boon and I shall grant it to you now. Here is the dry region you wish to die on!” VishNu assumed his ‘viswa roopam’ ( divine form of cosmic proportions) and his showed his thighs as large, flat and wide as the earth itself.

The asuras still wanted to play a trick and save their lives. They extended their bodies to the size of one thousand Yojana. (One yojana is approximately equal to eight miles). VishNu was not surprised by this and extended his thigh to the size of two thousand yojanas.

The asuras felt ashamed now and quietly placed their heads on the large dry thighs of VishNu. The divine discus Sudarshan severed their heads from their bodies.

The flesh and blood of the mighty asuras fell in the sea. The earth was formed out of their bodies. It is called as ‘Medhini’ since it was formed out of the ‘Meni’ (body) of those two asuras.

NArAyaNan did not kill the mighty asuras by his strength and valor but only by the grace of ParA Shakti – who infatuated the asuras and clouded their ability to think clearly.

“There is no power superior to that of ParA Shakti” is the gospel told to all humanity.



 
kanda purANam - asura kANdam

17b. திருமணங்கள்

பதும கோமளையைத் தெய்வத் தச்சன் மகளை,
வதுவை புரிந்து கொண்டான் அசுரன் சூரபத்மன்;

காமக் கிழத்தியராகப் பல இளம்பெண்களை
கந்தருவர் முதலிய தேவ மாதரை மணந்தான்;

சிங்கமுகன் மணந்து கொண்டான் அழகிய
நங்கை விபுதையை, நமனின் மகளை;

தாரக அசுரன் மணந்து கொண்டான்
நிருதியின் மகள் நங்கை சவுரியை.

திருமணம் முடிந்ததும் திரும்பிச் சென்றனர்
அருமையான அவரவர் நகரங்களுக்கு;

படைகளையும் அனுப்பினான் நகர்களுக்கு;
அடைந்த ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு.

எட்டு திசைகளிலும் அமைக்கப் பட்டிருந்த
எட்டு நகர்களுக்கு சூரபத்மன் அனுப்பினான்

யானை, குதிரை முகம், கொண்டவர்களை;
யாளி முகம், கரடி முகம் கொண்டவர்களை,

புலி முகம், பன்றி முகம் கொண்டவர்களை,
அரிமா, மரையின் முகம் கொண்டவர்களை.

துர்குணன், தருமகோபன், சங்கபாலன், மகிஷன்
துர்முகன், வக்கிரபாலன் ஆவர் மதி மந்திரிகள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#17b. THE WEDDING


Soorapadman married Viswakarma’s daughter Padma KomaLA. He took many other beautiful damsels as his lovers. Singa mukhan married Naman’s daughter Vibuthai.
TArakan married Nruthi’s daughter Sowri. After the weddings they all went back to their respective cities.

Soorapadman sent his army to the cities, and other places to maintain his rule. To the eight cities placed at the eight directions of his Veeramahendrapuram, he sent the army chiefs who had the faces of an elephant, or a horse, or a yALi, or a bear, or a tiger, or a boar, or a lion or a wild cow.

DurguNan, DharmagOpan, SankhabAlan, Mahishan, Durmukhan and VakrabAlan were Soorapadman’s ministers.
 
sree venkatesa purANam

24. சங்கனன்

சங்கனன் ஆண்டு வந்தான் காம்போஜ நாட்டில்
சங்காச்யம் என்னும் நகரைக் கீர்த்தியுடன்.

கர்வம் மிகுந்து விட்டது பராக்கிரமத்தால்;
தர்மம் குறைந்து நலிந்து மெலிந்து விட்டது.

புண்ணியம் குறையலானது சங்கனனுக்கு
கண்ணியம் குறையலானது சங்கனனுக்கு.

விலகி விட்டனனர் பாதுகாத்த வீரர்கள்;
விலை போயினர் மறைந்திருந்த எதிரிக்கு.

வழக்கம் போலப் பழகவில்லை பிரதானிகள்;
குழப்பம் மேலிட்டது; குறைந்தது அவன் மதிப்பு.

அவதிப் பட்டனர் அவன் நாட்டு மக்கள்;
அவன் மேல் விழுந்தது அந்தப் பழியும்!

ஆட்சியைக் கைப் பற்ற முயன்றனர்;
மாட்சிமை இல்லை அவர்களை அடக்க.

உயிருக்கு ஆபத்து என்ற நிலை உருவாக
எவருக்கும் தெரியாமல் தப்பி ஓடினான்!

பட்டத்து ராணியுடனும் இன்னமும் தன்
கட்டளைக்குப் பணியும் அமைச்சருடன்.

சேது கரையைச் சென்று அடைந்தனர்.
வேதனை தீரும் ராமேஸ்வரம் சென்றால்.

கடல் நீராடினான் சேதுவில் சங்கனன்
உடன் சென்று தரிசித்தான் இராமநாதரை.

அடைந்தான் சுவர்ணமுகி தீர்த்தத்தை!
விழைந்தான் வேங்கடத்தில் தவம் புரிய!

வட பகுதியைத் தேர்ந்தெடுத்தான் சங்கனன்;
“விட நேர்ந்த்தது நற்பணிகளைச் செருக்கால்.

அரியணையும் துறந்து அஞ்சி வாழ்கிறேன்!
சரியாகுமா மீண்டும் முன்போல இந்த நிலை?

நாட்டை அடைந்து ஆட்சி செய்வேனோ?
காட்டிலேயே காலத்தைக் கழிப்பேனோ?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

#24. Sankanan

Sankanan ruled the SankAsyam city in KAmboja Desam. He became arrogant with his growing popularity. Dharma took a back seat for him. His good fortune decreased fast. Soon he had lost his command over his people.

His courtiers behaved indifferently. The loyalty of his soldiers was secretly bought by his enemies. The army leaders looted the common people and the blame fell on Sankanan.

Some of his subordinated tried to depose him and usurp his kingdom. He could not control or subdue the miscreants. His life was in danger. He escaped with his wife and few loyal ministers before it was too late.

They reached RaAmeswaram which was famous for giving solace to the trouble people. They bathed in the sea and worshiped lord RAmanAthan. Sankanan decided to do penance on the banks of SwarNa mukhi in VenkatAchalam. He chose the northern part of the hill.

He thought to himself, “I stopped doing many good deeds. I had to give up my throne and flee in order to hide and save my skin. Will things return to the old state of affairs or will I spend the rest of my life in this forest. He did not know the answers for his questions.
 
bhagavathy bhaagavatam - skanda 7

7#12a. விபரீத ஆசை

தந்தையின் அறிவுரைகளின்படி நடப்பதற்கு
மைந்தன் சத்தியவிரதன் ஒப்புக் கொண்டான்.

அருணன் சென்று விட்டான் வானப்பிரஸ்தம்
அருமை மகனுக்கு மணிமுடி சூட்டிய பிறகு.

மகிழ்ந்தாள் தேவி சத்திய விரதனின் பக்தியில்;
அளித்தாள் நல்ல உடலையும், உருவத்தையும்.

ஒழிந்து போயின அவன் செய்த பாவங்கள்;
அழித்து போனது அவன் கரிய கோர உருவம்.

யாகங்கள் பல செய்தான் சத்திய விரதன்.
போகங்கள் பல பெற்றான் சத்திய விரதன்.

சத்திய விரதனின் பெயர் திரிசங்கு ஆனது.
சக்தி தேவியின் அருள் பூரணமாக இருந்தது.

சத்தியத்துக்கு ஒருவன் என்று புகழ் பெற்றான்
சத்திய விரதனின் மகன் ஆன அரிச்சந்திரன்.

விமரிசையாக நடந்தது முடி சூட்டு விழா.
விபரீத ஆசை விளைந்தது திரிசங்குவுக்கு.

“மனித உடலோடு செல்ல வேண்டும் சுவர்க்கம்.
இனிய போகங்களை உடலால் துய்க்க வேண்டும்!

எந்த யாகம் செய்ய வேண்டும் நான் கூறுங்கள்
இந்த உடலுடன் நான் சுவர்க்கம் செல்வதற்கு?

நடத்தித் தரவேண்டும் அந்த யாகத்தை – நான்
உடலோடு செல்லவேண்டும் சுவர்க்க லோகம்!”

வசிஷ்டர் வெறுத்தார் இந்த விபரீத ஆசையை!
வசிஷ்டர் மறுத்தார் இந்த யாகம் செய்வதற்கு.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#12a. A strange desire.

Satya Vratan agreed to follow the words of wisdom uttered by his father King AruNan. Accordingly AruNan crowned Satya Vratan as his successor and left for VAnaprastam to do penance.

Shakti Devi was pleased by the devotion of Satya Vratan. She absolved all his sins and blessed him with a good form and figure. He became blemish-less and his name became Trisanku. He performed several yagnas and he was blessed with many bhogams or enjoyment of the various pleasures.

His son Harishchandran became famous as the man who spoke the truth always. His coronations was celebrated well. Now Trisanku got a strange desire. He wished to go to heaven with his human body and enjoy the pleasures of heaven.

He asked Vasishta, “Which is the yAagam to be performed by me to be able to go to heaven with my physical body?” Vasishta did not like this idea and flatly refused to perform any yAga or yagna to fulfill his strange desire.
 
bhagavthy bhaagavatam - skanda 1

1#10a. வியாசரின் தவம்

மேருவின் சிகரத்தில் தவம் செய்தார் வியாசர்.
விரும்பினார் ஒரு சத்புத்திரனைப் பெறுவதற்கு.


வாக்பீஜம் என்னும் ஏகாக்ஷர மந்திரத்தை
வான் வழியே வந்த நாரதர் உபதேசித்தார்.


மாயையினால் தேவியை மறந்து விட்டார்
மகாதேவனை தியானித்தார் வியாச முனிவர்.


‘பஞ்ச பூதங்களின் வல்லமையைப் பெற்ற ஒரு
பிஞ்சு மகன் வேண்டும்!’ என்பது அவர் தவம்.


அன்ன பானம் விடுத்துப் புரிந்தார் தவம்
ஆண்டுகள் ஒரு நூறு ஓடும் வரையில்!


எத்தனை முயன்றும் காண முடியவில்லை
புத்திர உற்பத்திக்கான அறிகுறிகள் எதுவும்.


சக்தியின்றி சிவனை மட்டும் தியானித்ததால்
சந்ததியைப் பெறும் அறிகுறியே இல்லையோ?


தீர்மானித்தார் “சத்புத்திரனைப் பெறுவேன்
தியானிப்பேன் சக்தியைச் சிவனுடன் சேர்த்து!”


உலகம் முழுவது பரவியது கடின தவஜ்வாலை
உள்ளம் ஒன்றி இமயத்தில் செய்த தவத்தால்.


கோபம் கொண்டான் இந்திரன் இது கண்டு!
“கோபம் வேண்டாம் வியாச முனிவர் மீது


தவம் செய்வது பதவியைப் பெறுவதற்கோ?
தவம் செய்வது புத்திரனைப் பெறுவதற்கு!”


கோபத்தைத் தணித்தார் சிவபெருமான்;
தாபம் தீர வரமும் தந்தார் வியாசருக்கு.


“சாந்தம், தேஜஸ், ஞானம், புகழ் பெற்ற
சத்திய சீலனைப் பெறுவாய் மகனாக!”


தவம் பலித்தது! வரம் கிடைத்தது!
தாபம் தீரப் பிறப்பான் நல்ல மகன்!


இருப்பிடம் திரும்பினர் வியாச முனிவர்,
விரும்பினார் அக்னி காரியத்தை முடிக்க.


அங்குத் தீக்கடையும் போது எண்ணினார்,
“மங்கையுடன் சேராமல் மகன் பிறப்பானா?”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#10a. VyAsa’a penance


VyAsa wished for a son. He got DEvi’s VAkbeeja mantra upadEsam (initiation) from sage NArada. He contemplated only on Lord Siva – forgetting about Devi – and did severe penance for one hundred years. Nothing worthwhile happened!

He realized his folly of not including DEvi in his severe penance. He decided to do penance on DEvi and Siva together get a son who had the immense strength of the Pancha Boothas – the five great elements.

He went to HimAlayA and did his tapas. The jwAlA (light and heat) of his severe penance spread in all the three worlds. Indra got angry as usual – since anyone doing severe penance meant that Indra might lose his power and ruler ship over the Heaven.

Siva told Indra,”No need to get angry with Sage VyAsa. He is not doing penance to take your place in the Heaven. He just wants a good son”. Siva blessed VyAsa, “You will get a son who will have s’Antham, Tejas, JnAnam (Patience, Brilliance and Knowledge) and who will become very famous.”

VyAsa felt happy that his penance had been fruitful. He returned to his abode and started to churn the wood for creating a fire. He was also wondering how he was going to beget a son without the involvement of a woman?



 
kanda purANam- asura kANdam

18. தேவர்களை ஏவுதல்.

முனிவரும், தேவரும் சூரனின் ஆணைகளை
இனிதே புரிந்து திரிந்து கொண்டு இருந்தனர்;

“தேடிக் கடல் மீன்களைக் கொண்டு தருக!”
தேவர்களிடம் ஆணை இட்டான் சூரபத்மன்;

மனம் நடுங்கி மானம் இழந்த போதிலும்,
தினம் கயல் கொண்டுதர உடன்பட்டனர்.

வருணனிடம் சொன்னான் தேவர்கோன்,
“தருவாய் கடல் மீன்களைப் பிடித்து!”

கடலில் உள்ள மீன்களை எல்லாம்
கரையில் குவித்தான் வருண தேவன்;

கயல்களைத் தூக்க எண்ணிய தேவர்கள்
கயல்களைக் கட்டினார்கள் பாம்புகளால்.

மீன் கட்டுக்களைச் சுமந்த தேவர்களை
மீண்டும் எள்ளி நகையாடினர் அவுணர்.

கயவன் சூரன் ஆணையிட்டான் மீண்டும்,
“கயற்பொதியைத் தினமும் கொண்டு தருக!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#18. Commanding the Devas.


The rushis and Devas obeyed all the commands of Soorapadman to the letter.
One day Soorapadman ordered Indra to catch the fish from the sea and fetch them to him . The Devas were ashamed of this task but had no other choice than to obey this order.

Indra asked VaruNa Devan to pile up the fish on the bank. VaruNa piled up the fish on the bank. The Devas made the fish into bundles by tying them up with the snakes.

When the asuras saw the Devas carrying the bundles of fish, they had a hearty laugh. Soorapadman later commanded them to bring fresh fish everyday.
 
sree venkatesa purANam

25. சங்கனன்

அன்றிரவு தூங்கும் போது குரல் கேட்டது,
நின்று தேடியும் காணவில்லை எவரையும்!


விண்ணில் இருந்து ஒலித்தது அந்தக் குரல்,
எண்ணங்களை அறிந்தது போலப் பேசியது!


“வடக்கே உள்ளது வேங்கடம் எனும் திருமலை;
தடாகம் உள்ளது சுவாமி பூஷ்கரிணி என்பது.


தடாகக் கரையில் உள்ளது எறும்புப் புற்று;
தடாகத்தில் நீராடி விடாமல் துதித்து வா!”


வேங்கட மலையில் தடாகத்தை அடைந்தனர்;
தங்குவதற்குக் குடில் அமைத்தனர் புற்றருகே.


மூன்று வேளை நீராடினான் பூஷ்கரிணியில்-மனம்
ஊன்றித் தொழுதான் பகவானை நாள் முழுவதும்.


சுவாமி மனம் கனிவதற்கு ஆறு மாதமானது!
சுவாமி பூஷ்கரிணியில் தோன்றியது ஓர் ஒளி!


ரத்தின மயமான விமானத்தில் இருந்தனர்
யத்தனம் பலித்திட நாரணனும் தேவியரும்.


குழுமினர் தேவர்கள், துதித்தனர் முனிவர்;
ஆடினர் தேவ மகளிர்; பாடினர் கந்தருவர்.


புல்லரித்தது சங்கனனின் உடல் மகிழ்வால்,
சொல்லைக் கேட்டதும் துள்ளியது மனம்!


“உன் நாடு திரும்பும் நேரம் வந்தது!
உன் ஆட்சி திரும்பும் நேரம் வந்தது!”


சங்காச்யத்தில் சங்கடமான குழப்பம்;
சங்கனன் ஆட்சியே மேல் என்றானது!


தங்களுக்கே அரசபதவி வேண்டும் என்று
தானைத் தலைவர்கள் போட்டி இட்டனர்.


வேங்கட நாதன் அருள் பெற்ற மன்னன்
சங்கனன் திரும்பி வருவதை அறிந்தனர்.


குடிமக்கள் போர்க் கொடி தூக்கினர்;
பிடிவாதமாக அதிகாரிகளைச் சாடினர்!


சிற்றரசர்கள் ஆதரித்தனர் அரசனையே;
முற்றிலும் தோற்று விட்டனர் அதிகாரிகள்.


நாட்டை விட்டு ஓடிவிட்டனர் காட்டுக்கு;
நாட்டை மீட்டு ஆட்சி செய்தான் சங்கனன்.


வேங்கட நாதனின் பேரருளே அவனுக்குச்
சங்கடம் தீர்த்தது; ராஜ்ஜியம் அளித்தது.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#25. Sankanan

On that night when Sankanan fell asleep, he heard a voice. He got up from his sleep and looked around but found none there. Now the voice spoke from the sky. It spoke as if it had read his innermost thoughts correctly.


“Venkatagiri is to the north of this place. There is a pond called SwAmi PushkariNi. There is an anthill on the bank of the pond. Take a holy dip in the SwAmi PushkariNi and worship the lord.”


He reached Venkatagiri and the SwAmi PushkariNi with his wife and the ministers. They erected a hut near the anthill for their stay. He bathed thrice a day in the water of SwAmi PushkariNi and worshiped the lord all day long. The lord took pity on Sankanan after six months.


A brilliant light appeared in SwAmi PushkaiNI. There appeared a gem studded vimAnam of a temple. He saw lord SreenivAsan with his consorts in that brilliant temple..


The Deva had gathered there. The Gandharva sang celestial songs. The apsaras danced and the rushis praised the lord in the mandapams.


Sankanan felt dazed and happy. He heard the lord’s voice clearly now, “It is time for
you to go back to your kingdom. It is time for you get back your leadership!”


Confusion prevailed in SankAsyam. Everyone wanted to become the new king and there was perpetual confusion and competition. People thought that the rule of
Sankanan was far better to this state of confusion.


They heard that the king was returning after winning the grace and the blessings of Lord SreenivAsan himself. They got ready to welcome him warmly. They disobeyed the army leaders.


The courtiers and the kings under Sankanan’s control were supporting him now. The power seekers and the miscreants had to disappear from the kingdom, to escape with their precious lives.


Sankanan was given warm welcome and got back his leadership. He was for ever grateful to SreenivAsan who helped him win back his kingdom and power.



 

Latest posts

Latest ads

Back
Top