• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 7

7#12b. சண்டாளனின் உருவம்

“போக முடியாது தேவலோகம் உடலோடு;
ஏக முடியும் யாகத்தால், உடல் விழுந்த பின்!

செய்வாய் யாகத்தை முதலில் விமரிசையாக;
எய்துவாய் சுவர்க்கம் உடலை விடுத்த பிறகு!”

விளக்கம் இனிக்கவில்லை திரிசங்குவுக்கு;
இளக்காரமாகக் கூறினான் வசிஷ்டரிடம்.

“கேட்டு விட்டேன் முட்டாள்தனமாக உம்மிடம்!
கிட்டுவர் யாகம் செய்வதற்கு வேறு ஒரு குரு!”

“சண்டாளன் ஆகக் கடவாய் மதி கெட்டவனே!
பெண்டாள நினைத்தாய் வேதியன் மனைவியை.

கொன்று தின்றாய் நான் வளர்த்த பசுவை – எனவே
என்றுமே கிடைக்காது உனக்கு சுவர்க்க லோகம்!”

உடல் வனப்பு மாறி விட்டது ஒரே நொடியில்.
உருவம் ஆகிட்டது ஒரு சண்டாளன் போலவே.

மின்னும் ஆபரணங்கள் கருமை நிறம் ஆயின!
பின் நாறியது உடல் இறைச்சியைப் போலவே.

வருத்தக் கூடாது ஒரு பக்தனனை இன்னொருவன்;
வருந்தச் செய்தனர் இரு பக்தரும் ஒருவரை ஒருவர்.

விரும்பவில்லை அரண்மனைக்குத் திரும்பிட!
விரும்பவில்லை மனைவி மக்களைக் கண்டிட.

அரிச்ச
ந்த்ரன் அனுப்பினான் அமைச்சனை;
திரிசங்கு மறுத்து விட்டான் திரும்பிச் செல்ல!

“விகார உடலுடன் வரமாட்டேன் அரண்மனைக்கு;
குமாரன் ஆளட்டும் அயோத்தியை!” என்றான்.

திரும்பிச் சென்றனர் அமைச்சர் தலைநகர்.
வருந்தினான் மனம் தந்தைக்காகத் தனயன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#12b. ChandALan

Vasishta said again,”No one can go to Swarga lokam with a mortal body nor can he enjoy the pleasures in heaven with a human body. If you do a yagna now, you may ascend to heaven after this mortal body drops down!”

But Trisanku did not like this explanation. “I am sorry I asked for your help. I can get any number of gurus to perfom this yAgam for my sake.”

Vashishta flew into a terrible temper and said,”You are a cursed fool. You abducted the wife of a brahmin during her wedding. You killed and ate my cow. You can never enter swargga lokam. May you be reduced to a ChaNdALa now!”

Trisanku’s handsome figure changed in a moment. He assumed the form of a real chaNdALan. His ornaments turned black in colour and his body emenated the smell of raw flesh. He did not want to go back to Ayodhya as a ChaNdALa nor meet his family in that horrible and detestable form.

Harischandra sent some ministers and requested Trisanku to return to Ayodhya. Trisanku said, “I shall not come there with my deformed body. Let my son Harischandra rule Ayodhya.

The ministers had to go back quietly. Harishchadran felt pity for his father Trisanku.
 
bhagavathy bhaagavatam - skanda 1

1#10b. சுகர்

மண்ணில் தோன்றும் மக்கட் செல்வம்
பெண்ணுடன் ஆண் இணையும்போதே.


எண்ணமிட்டார் வியாசர் இதைப் பற்றி
பண்ண முடியாது தவத்தைத் தியாகம்.


விண்ணில் கண்டார் ஒரு மின்னல் கொடி!
கண்டதும் மோஹித்தார் வியாச முனிவர்!


அசைந்தன அவள் அழகிய அங்கங்கள்;
இசைந்தன நெளியும் இரு புருவங்கள்.


அலை பாய்ந்தன வட்டக் கருவிழிகள்;
அல்லாடின கொடியில் பருத்த கனிகள்.


சிற்றிடையோ கொடியிலும் மெல்லியது;
விற்புருவம் எய்தது காமன் கணைகளை.


கரிய கூந்தல்; மூன்றாம் பிறை நெற்றி;
எரித்தன தைத்த பஞ்ச மலர் பாணங்கள்.


தவத்தையும் கைவிட முடியவில்லை;
தாபத்தையும் கைவிட முடியவில்லை;


இல்லறத்தால் கிடைக்கும் புத்திரப்பேறு!
இல்லறம் அழித்துவிடும் துறவறத்தை!


செய்வது அறியாமல் திகைத்து நின்றார்
தெய்வச் செயலாக வந்தவளைக் கண்டு.


கட்டழகியோடு கூடி மகிழ்வதென்றுத்
திட்டமாக முடிவு செய்தார் வியாசர்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#10b. MOhini


Children are born only out of the union of a man and a woman. VyAsa knew this but he did not want to waste the power of his penance by uniting with a woman! Just then there appeared a celestial maiden – like a bolt of lightning in the sky. VyAsa fell head over heels in love with her at the first sight.

Her limbs were beautiful; her quivering eyebrows mesmerized him; her big black beautiful eyes were always restless and her beauty was truly intoxicating. Her hair was like the thick black clouds and her brow the crescent moon on the third day after New Moon.

VyAsa was in a dilemma. He could not get over his love for this unknown MOhini nor did he wish to lose the power of his penance. She could give him a son but then the life of a householder will bind him for ever, thereafter.
Finally he decided to enjoy with the MOhini at any cost.




 
kanda purANam - asura kANdam

19a. பானுகோபன்

சூரபத்மன் மனைவி பதும கோமளை – ஒரு
வீரத்திரு மகனை ஈன்று புறம் தந்தாள்.


சுற்றத்தினருக்குச் சிறப்புகள் பல செய்து,
பெற்ற மகனைக் கொண்டாடினான் சூரன்.


தொட்டிலில் உறங்கிய வீரமகனைத்
தொட்டு விட்டன கதிரவன் கதிர்கள்!


சினந்த குழந்தை சீறிப் பாய்ந்தது,
வினதையின் மகன் போல விண்ணில்!


கதிரவனைக் கையால் பற்றிக் கொணர்ந்து
கட்டிப் போட்டது தன்தொட்டில் காலில்!


கதிரவன் இல்லாத உலகின் இயக்கம்
கதி கலங்கி போய்த் தடுமாறி விட்டது.


இந்திராதி தேவர்கள் வந்து கெஞ்சினார்கள்
“இந்த மகன் கதிரவனை விடுவிக்க வேண்டும்!”


“ஞாயிறு சிறைப்பட்ட செய்தி அறியேன்!
ஞாயிறு இழைத்த பிழைகளைக் கூறுங்கள்!”


நடந்தவற்றை நவின்றனர் நாணத்துடன்
நான்முகன், தேவர்கள் சூரபத்மனுக்கு.


“இனிய மொழி பேசி அவனை மகிழ்வித்து
இனிக் கதிரவனை விடுதலை செய்யுங்கள்!”


கதிரவன் படைக்கலம் பெற்றுக் கொண்டு
கதிரவன் தளைகளைத் தளர்த்தினான் மகன்.


மோகப் படையை அளித்தார் பிரமன் – பானுவைக்
கோபப்பட்ட மகன் பெயர் ஆயிற்று பானுகோபன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#19a. BHAANU KOBAN.


Padma KomaLA, Soorapadman’s wife, gave birth to a valorous son in due course. Soorapadman celebrated the arrival of a worthy son in a befitting grand manner.


One day while that baby was sleeping in his cradle, the rays of the Sun fell on him. Enraged by this, the child leaped into the sky, caught hold of the Sun and tied him up to one of the legs of his cradle.


With the Sun gone, the life on earth was completely thrown out of gear. The Devas and Gods went to Soorapadman and prayed for the release of the Sun.


Soorapadman told them to talk sweet words to his son and secure the release of his
prisoner – the Sun. The child got Sun’s asthram in exchange for Sun’s freedom! Brahma presented the child with his Moha Asthram.


Since the baby boy got angry with the BhAnu the Sun, he was named BhAnu Koban.
 
sree venkatesa purANam

26. ஆத்மா ராமன் (1)

விந்தியப் பிரதேசத்தில் வாழ்ந்த
அந்தணரின் மகன் ஆத்மா ராமன்.


தெய்வ பக்தி மிகுந்தவன் – எனவே
தெய்வ அருள் பெற்று இருந்தான.


வேத, வேதாந்தங்களைக் கற்றவன்;
பேதமின்றி மதித்தனர் அனைவரும்.


மறைந்து போனார் அவன் தந்தை – ஆனான்!
பெரும் செல்வத்துக்கு புது அதிபதியாக!


பணம் வந்ததும் முழுதும் மாறி விட்டான்;
குணத்தை முற்றிலும் இழந்து விட்டான்.


குல ஆசாரங்களைத் துறந்து விட்டான்;
குல தெய்வத்தையும் மறந்து விட்டான்.


தலைக்கு ஏறியது செல்வச் செருக்கு;
விலைக்கு வாங்கினான் இன்பத்தை.


“குந்தி தின்றால் குன்றும் மாளும்” அல்லவா?
குறைந்தும், மறைந்தும் போனது செல்வம்!


பணம் போனவுடன் போயிற்று கௌரவம்!
குணம் என்றோ போய்விட்டது அல்லவா?


ஒதுக்கி வைத்தனர் வறுமை வந்தவுடன்;
மதிக்கவில்லை குலத்தைச் சேர்ந்தவர்கள்.


“குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு!”
பலவித பரிஹாசங்களைக் கேட்டு நொந்தான்.


நட்பு என்று சொல்ல யாரும் இல்லை!
நாணம் வந்தது உறவினரைக் காண.


ஊரை விட்டே வெளியேறி விட்டான்;
ஊர் ஊராக அலைந்து திரிந்தான் அவன்.


கால்போன திசையில் நடந்து சென்றவன்
கலியுக வரதனின் திருமலை அடைந்தான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#26. AatmA RAman (1)


AatmA RAman was the son of a Brahmin who lived in the Vindhya region. He was very pious and learned man. Naturally everyone respected him as they did his father.


Suddenly his father passed away. AatmA RAman became the sole heir of a huge fortune. The large fortune corrupted him. He became a slave to money and forgot all his good qualities. He gave up his AchAr and vichAr. He forgot even his own family deities.


He went out seeking pleasure and spent huge money in that effort. No fortune will remain inexhaustible while being drained unscrupulously by the owner. The huge fortune dissolved and disappeared steadily over a time.


Those who had respected him for his money now boycotted him. His own kin and kith made fum of him! He was subjected to several unkind comments. He did not have a single true friend to turn to.


He went away from his home and his hometown. He roamed around aimlessly wherever his legs carried him. Soon he had reached the Tirumala of Lord SreenivAsan – also known as The Kaliyuga Varadan.



 
bhagavathy bhaagavatam - skanda 7

7#13a. விஸ்வாமித்திரர்

அரிச்சந்திரன் அரசாள்வதை அறிந்து
திரிசங்கு மிகவும் மனம் மகிழ்ந்தான்.

தியானித்து வந்தான் தேவியைக் குறித்து;
தியாகம் செய்தான் அரசபோக வாழ்வை.

திரும்பினார் விஸ்வாமித்திரர் தவம் முடிந்து;
இருந்தனர் குடும்பத்தினர் மிகவும் நலமாக!

“எப்படிக் காப்பாற்றினாய் கடும் பஞ்சத்தில்
தம்படிக் காசு இல்லாமல் நம் குழந்தைகளை?”

ஒன்று விடாமல் சொன்னாள் மனைவி – மகன்
ஒருவனை விற்கக் கொண்டு சென்றது முதல்.

திரிசங்குவை வழியில் சந்தித்தது – அவன்
திரும்பிச் செல்லும்படித் தன்னிடம் கூறியது;

தினமும் உணவு கொண்டு வந்து தந்தது – ஒரு
தினம் வசிஷ்டரின் பசுவைக் கொன்று தின்றது;

“சாபம் அடைந்து சண்டாளன் ஆகிவிட்டான்;
தாபம் தீர்ப்பீர் தங்கள் தவ வலிமையால்!

நன்மை செய்தான் திரிசங்கு நம் குடும்பத்துக்கு;
நன்மை செய்ய வேண்டும் நாமும் அவனுக்கு!

ஆபத்துக் காலத்தில் உதவினான் திரிசங்கு
அவன் தாபம் தீர்ப்பீர்!” என்றாள் ரிஷிபத்னி.

தேடிச் சென்றார் திரிசங்கு இருந்த இடத்தை;
நாடினர் அவன் துயரின் காரணம் அறிந்திட!

“நிறைவேற்றுவேன் உன் விருப்பத்தை நான்
குறைவின்றி உறுதியாக!” என்று மொழிந்தார்.

“உடலுடன் செல்ல விரும்புகின்றேன் சுவர்க்கம்;
உடன்படவில்லை வசிஷ்ட முனிவர் உதவிட!”

சிந்திக்கத் தொடங்கினார் விஸ்வாமித்திரர் – இந்த
விந்தையான கோரிக்கையைக் குறித்து ஆராய்ந்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#13a. Sage ViswAmitra

Trisanku became happy to learn that Harischandra was now ruling over Ayodhya. He spent all his time in meditating up on Devi. He had given up the king’s life of pleasures and comforts long back.

ViswAmitra returned after completing his long penance. He was surprised to see his family hale and healthy – despite the twelve-years-long famine which had lasted there.

He asked his wife,”Dear wife! How did you manage to look after our children and feed them well even during the severe famine, since I had not left any money with you?”

The wife told everything in great detail – from the time she took one of their sons to be sold for money; how she met Trisanku on the way; how he took pity of the children and promised to provide food the family; how he had brought food every single day without fail; how he had to kill Sage Vasishtaa’s cow for food and how he got cursed by Sage Vasishta.

Vasishta has cursed him to become a chaNdALa because of the help he rendered to our family. Please help him just as he helped us in our difficuties.”

ViswAmitra went in search of Trishanku and found out the matter. Trishanku said,”I want to ascend to the swarggam with my human body. But Vasishta said it was impossible and cursed me to become chaNdALa.”

ViswAmitra wondered and pondered about this strange and weird request by King Trisanku.




 
bhagavathy bhaagavatam - skanda 1

1#11a. தாரையின் காதல்

பிருஹஸ்பதியின் மனைவி தாரை;
பிரமிக்க வைக்கின்ற அழகிய பெண்.

சென்றாள் ஒருமுறை சந்திரனின் இல்லம்;
வென்றான் அவன் அவள் மனதை அழகால்.

அறிவை இழந்து விட்டனர் இருவரும்.
வெறி கொண்டு குலாவி மகிழ்ந்தனர்.

“சந்திரனின் இல்லம் சென்ற என் தாரை
எந்தக் காரணத்தால் திரும்பவில்லை?”

சிந்தாகுலம் மிக அடைந்தார் தேவகுரு,
சந்திரனிடம் அனுப்பினார் மாணவனை.

“தேவகுரு பணித்தார் என்னைக் கூறும்படி,
தேவி நீங்கள் இல்லம் திரும்ப வேண்டும்!”

கண்டும் காணாமலும் சென்றாள் தாரை.
திண்ணமாக அலட்சியம் செய்தாள் அதை.

“சுவாமி மன்னித்து விடுங்கள் என்னை!
சுயபுத்தி இழந்து விட்டார் உமது பத்தினி!”

ஒருவர் பின் ஒருவர் சென்று அழைத்தும்
திரும்பவில்லை தாரை தன் கணவனிடம்.

சந்திரனிடம் மயங்கிக் கிடந்தாள் அவள்.
சந்திரனின் மாளிகை சென்றார் தேவகுரு.

“குருபத்தினியைக் கூடினாயா சந்திரா?
குருபத்தினி ஒரு தாய்க்கு சமம் அன்றோ?

பிரம்மஹத்தி செய்தவன், மதுக் குடித்தவன்,
குருபத்தினியைக் கூடினவன், பொன் திருடன்,

கொடிய பாவிகள் என்று அறியாயோ நீ?
கொடிய பாவி ஆகிவிட்டாயே சந்திரா நீ!

தேவருடன் சஞ்சரிக்கும் தகுதி இழந்தாய்!
தேவையின்றி நிந்திக்கப் படுவாய் நீ இனி!

தீரப் பழிக்கு ஆளாவாய் உன்செயலால்!
தீராது அந்தப்பழி சிவனருளாலும் கூட!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#11a. TArA’s love affair


TArA was the beautiful wife of Bruhaspati – the DEva Guru. She once went to the palace of Chandran – one of the students of her husband.

Chandran was known for his beauty and she fell in love with him madly. Chandran too loved TArA – the pretty wife of his Guru and they lived happily for a long time.

Bruhaspati got worried that his wife did not return after visiting his student. He sent another student to TArA with the message that she must return to him immediately.

The student conveyed the message to TArA, but she ignored him and walked away very much displeased.

The student returned and told Bruhaspati, “Please pardon me sir for failing in my mission. I think you wife is infatuated with Chandran and seems to have lost her good sense.”

Deva Guru sent some more of his students one after another but TArA did not return to him. Finally he himself went to the palace of Chandran.

He chided Chandran in a very loud voice,” Are you enjoying the company of the wife of your Guru? Don’t you know that Guru’s wife is equal to one’s mother?

The man who enjoyed his guru’s wife is as detestable as the man who did brahma haththi or stole gold or drank wine. You have lost your dignity and respect to be able to mingle with the other DEva. You will be blamed for this wicked action by everyone. Not even the mercy of lord Siva can wipe away this grave sin!”





 
kanda purANam - asura kANam

19b. பிற மகன்கள்

சூரபத்மனின் மனைவியர் ஈன்றனர்
வீரமகன்கள் மேலும் பற்பலரை.

பானுகோபனுக்குப் பல இளவல்கள்;
அக்கினி முகன், இரணியன், வஜ்ஜிரவாகு.


ஆயிரக் கணக்கான அழகியரிடம் – மூன்று
ஆயிரம் மகன்கள் மேலும் தோன்றினர்.


சிங்கமுகனின் பட்டத்து ராணி விபுதை
மங்காத வலிவுடைய சூரனை ஈன்றாள்.


பிற மனைவியர் ஈன்றனர் மேன் மேலும்
குறைவில்லாத நூறு வீர மகன்களை.


தாரகன் பட்டத்து ராணி செளரிதேவி
சீர் மிகுந்த அசுரேந்திரனைப் பெற்றாள்.


சேற்றில் பிறந்த செந்தாமரை போலவும் ,
சிப்பியில் விளைந்த முத்துப் போலவும்,


முள்ளில் மலர்ந்த மலரைப் போலவும் ,
கள்ளம், கபடு, சூது, வாது நிறைந்த


அவுணர் இடையே பிறந்தும் – அவன்
அவர்களைப் போல இருக்கவில்லை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


2#19c. THE OTHER SONS.


Soorapadman had many more sons from his many wives. His queen gave him three more sons Agni mukhan, HiraNyan and VajrabAhu. His other wives gave him three thousand sons.


Singa mukhan’s queen Vibuthai delivered a valorous son also named Sooran. His other wives gave him one hundred strong sons.


ThArakan’s queen gave him a son named as Asurendran. He was like a lovely and pure lotus flower blooming in the slush, a priceless pearl produced by the gnarled oyster, a pretty flower borne by a thorny plant.


He was born among the tricky, cunning and unscrupulous asuras but possessed all the noble qualities.
 
sree venkatesa purANam

27. ஆத்மா ராமன் (2)

பாவங்கள் தீரும் தாபங்கள் மாறும் என,
பகவானை ஆராதித்தான் திருமலையில்.


கபில தீர்த்தத்தில் நீராடினான் முதலில்,
கபிலேஸ்வரரைத் தரிசித்தான் கண்குளிர.


தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடினான்;
தீர்ந்தன அவன் பாவச்சுமைகள் அவற்றில்.


சுவாமி புஷ்கரிணியை நோக்கிச் சென்றான்.
சுவாமி தரிசனம் செய்தது போல மகிழ்ந்தான்.


கோடி சூரியப் பிரகாசத்துடன் ஒரு குஹையில்
தேடினாலும் கிடைக்காத சனத்குமாரர் இருந்தார்.


வலம் வந்து நமஸ்கரித்தான் அவரை – தன்
வளம் குன்றிவிட்ட பின்புலத்தைக் கூறினான்.


“முற்பிறவியில் நான் செய்த பாவம் என்ன?
முக்காலமும் அறிந்த நீர் சொல்லுங்கள்!” என,


“தான தர்மங்களை இகழ்ந்து பேசினாய்;
தானம் பெறுபவர், தருபவர் இருவரையும்.


நல்ல செயல்களைத் தடுத்தாய் – போனாய்
பொல்லாத வழிகளில் நன்னெறி தவறி!


தந்தையின் புண்ணியம் காத்தது உன்னை!
தந்தை சென்ற பின்னர் பற்றின பாவங்கள்.”


“வியாதியஸ்தனுக்கு வைத்தியன் போலவும்,
வறியவனுக்குக் கிடைத்த புதையல் போலவும்,


காயும் பயிருக்குப் பெய்யும் மழை போலவும்,
தீயோன் எனக்குக் கிடைத்துள்ளீர்கள் நீங்கள்.


இன்னல்கள் தீர வழி கூறுங்கள் சுவாமி!
இனியும் என்னால் தாள முடியாது சுவாமி!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


#27. AatmA RAman (2)


AatmA RAman believed that worshiping God in Tirumala would put an end to all his sufferings and wash away all his sins. He took a dip in the Kapila Theertam first and had a darshan of Kapileshwar.


Then he bathed in all the other holy theertams one after another. His sins got washed way by the dip in these holy theertams. He went to SwAmi PushkariNi. He felt happy as if he had got a darshan of the lord himself. He saw Sage Sanant KumAr – one of the four the Brahma JnAni bothers – sitting in a cave, with the brilliance of ten million suns shining together.


He paid his obeisance and related his tale of misfortune to the sage Sanat kumAr. He prayed to the sage, “Please tell me what are the sins I had committed in my previous birth to suffer in this manner”


The sage replied, “You spoke ill of DAnam and Dharmam. You made fun of those who gave dAnam as well as those who received it. You interrupted and stopped many good deeds from taking place. You did many wicked deeds prohibited by sAstra. Your father was a good man. So as long as he was alive his puNya protected you also. After he was gone, the effects of your sins afflicted you.”


AatmA RAman requested the sage Sanat KumAr, “You have appeared to me as a vaidhya to the sick, as a rare treasure to a beggar and as a cool shower to the withering crops. Please tell me how to get out of this mess I have got into. I can not take any more of this!”



 
bhagavathy bhaagavatam - skanda 7

7#14a. திரிசங்கு சுவர்க்கம்

“உடலுடன் செல்ல வேண்டும் சுவர்க்க லோகம்!”
உள்ளக் கிடக்கை ஆகிவிட்டது திரிசங்குவுக்கு.

யாகம் செய்ய அழைத்தார் விஸ்வாமித்திரர் – ஆனால்
யாகம் செய்ய முன் வரவில்லை வேதியர்கள் எவரும்.

தடுத்து விட்டார் வசிஷ்டர் அந்த வேதியர்களை;
கெடுத்துவிட்டார் யாக ஏற்பாடுகளை முற்றிலுமாக.

“தவ வலிமையைப் பிரயோகித்துத் திரிசங்குவைத்
தனிப் பெருமை அடையச் செய்வேன் நான்!” என

ஜலத்தைக் கையில் எடுத்தார் விசுவாமித்திரர் – தம்
ஜபத்தின் பலனைத் தத்தம் செய்தார் திரிசங்குவுக்கு!

“தந்தேன் நான் சேர்த்து வைத்த புண்ணியத்தை உனக்கு
தந்தேன் அந்த சுவர்க்க லோகத்தை உனக்கு!” என்றார்.

எழும்பினான் வானில் ஒரு பறவை போல திரிசங்கு.
அழையா விருந்தாளியாக நெருங்கினான் சுவர்க்கம்.

திடுக்கிட்டனர் அவனைக் கண்டதும் தேவர்கள்.
தடுத்தனர் அவன் சுவர்க்கத்தில் நுழைந்து விடாமல்.

விழத் தொடங்கினான் வேகமாகத் தலைக் குப்புற.
அழத் தொடங்கினான் விழும் வேகத்துக்கு அஞ்சி!

குப்புற விழுந்தால் மிஞ்சாது ஒரு எலும்பு கூட.
“காப்பாற்றுங்கள் என்னை முனிவரே!” என்றான்.

“நில் அங்கேயே!” என்று கையை உயர்த்தியவுடன்
நின்று விட்டான் அந்தரத்தில் திரிசங்கு தலைகீழாக.

இரண்டாவது சுவர்க்கத்தை சிருஷ்டிக்க விரும்பினார்;
பிரம்மாண்ட யாகம் தொடங்கினர் விஸ்வாமித்திரர்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#14a. Trisanku swarggam

The only desire filling the mind of Trisanku was to reach the heaven in his mortal body! He requested ViswAmitra to perform the appropriate yAgam. But Vasishta had stopped the other rushis from attending that yAgam. He ruined completely the arrangements made by ViswAmitra for the yAgam.

ViswAmitra decided to use the power earned by his long and intense penance in lifting Trisanku to heaven. He took some water from his kamaNdalam and said, “I give you some of the power of penance earned by me. May you reach heaven in your mortal body!”

Trisanku rose in the sky like a big bird and reached the gates of the heaven. The Devas there stopped him – an uninvited and unwelcome guest – from entering the heaven and pushed him down headlong.

Trishanku was falling freely under the great gravitational force of attraction. He got frightened by the ever increasing speed of his fall and started crying for help from ViswAmitra.

“Oh Sage! Please save me! Please protect me!” ViswAmitra lifted his right hand and said,”Stop there” and the falling king Trisanku stopped in mid air hanging upside down.

ViswAmitra decided to create a brand new heaven exclusively for Trisanku.

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#11b. சந்திரன்

“கோபம் அதிகமாக இருக்கிறது உம்மிடம்.
கோபம் கொண்டவனை பூஜிக்கக் கூடாது.


திரும்பி வரத் தாரை விரும்பியிருந்தால்
திரும்ப எத்தனை நேரம் தேவை கூறும்.


அத்தனை மாணவர்கள் அழைத்த போதும்
இத்தனை பிடிவாதமாக இருக்கின்றாளே!


இஷ்டப் பட்டால் உம்மிடம் வருவாள்!
இஷ்டப் படாவிட்டால் இங்கிருப்பாள்!


இனிமை காண்பீர் நீர் உம் தனிமையிலே;
இனிமை காண்போம் நாங்கள் உறவிலே!”


நாணித் தலை குனிந்து திரும்பினார்-பின்
மீண்டும் சென்றார் தேவகுரு சந்திரனிடம்.


“குரு அழைப்பதாகச் சந்திரனிடம் சொல்!”
குரு அழைத்தும் வெளிவரவில்லை சந்திரன்.


‘பெண்டாளும் சண்டாளனுக்குத் தகுந்த
தண்டனை தரவேண்டும் தவறாமல் நான்!


நகைப்புக்கு இடமாகிவிடும் – சந்திரன்
அகப்பட்டும் தண்டனை தராவிட்டால்!’


கூவினார் வயிறு எரியத் தெருவில் நின்று,
“பாவி உன்னைச் சாம்பலாக்கி விடுவேன்!


தெருவில் என்னை நிறுத்திவிட்டு நீசா!
குரு மனைவியுடன் குலாவுகின்றாயா நீ?”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#11b. Chandran


Chandran was not perturbed by his Guru’s anger. He said coolly, “SAstras say that we should not honor men who are angry. So I am not going to honor you as my Guru now, since you are very angry.


If TArA wants to go back to you, how much time does she need to do it? All your students came here to take her back and failed.

If she wants to live with you she will come back to you. If she wants to live with me she will stay on here. Learn to find happiness in your loneliness while we discover new joy in company of each other!”

Deva guru felt crestfallen in this open and blunt insult but could not not do anything about it. He plodded back to his place feeling wretched and miserable.


He came again to Chandran’s palace later. The guard stopped him. “Tell Chandran that his Guru calls him to come out now”

Chandran did not come out to answer his Guru. Bruhaspati become more hurt than angry. He thought to himself, ‘If I don’t punish this lustful Chandran now, I will become the laughingstock among all the DEvas.’

He cursed Chandran from the street in seething anger,”I shall turn you into ash. You have made me stand on the road while you are holding on to my wife inside your palace there”


 
kanda purANam - asura kANdam

20a. இரு சகோதரர்கள்

மூவரின் தங்கையான அஜமுகியோ
மூர்க்கத்தனமாகத் திரிந்து வந்தாள்.


வரைமுறை இல்லாது வாழ்ந்து வந்தாள்;
பிறர் மனைவியரைத் துன்புறுத்தினாள்.


தேவர் மனைவியரைத் தமையன்களின்
தேவைகளுக்கு ஆட்படுத்தி வந்தாள்.


மிக்க வலிமை படைத்தவர்களான – இரு
மக்கட் பேற்றை விழைந்தாள் அஜமுகி.


துர்வாசரைக் கூடிப் பிள்ளைகள் பெறும்
துர்எண்ணத்தோடு சென்றாள் அவரிடம்.


விலகிச் செல்லும் முனிவரை விடாமல்
வலிந்து தழுவி மகன்களைப் பெற்றாள்.


வில்வலன், வாதாபி என்ற மகன்களிடம்,
“வல்லமை பெறுங்கள் தவத்தால்!” என்றாள்.


மைந்தர் வணங்கினார் தந்தை துர்வாசரை,
தந்தையின் தவத்தைத் தருமாறு கேட்டனர்.


மறுத்த முனிவரை ஒறுக்க எழுந்தவர்களை
உரத்த குரலில் சாபம் இட்டார் முனிவர்,


“முனிவர்களுக்குத் துன்பம் இழைத்துப் பின்
முனிவராலேயே மாண்டு போவீர்கள்!” என.


வேறு ஒரு காட்டைச் சென்று அடைந்தனர்.
வேறு ஒரு கருத்தின்றித் தவம் செய்தனர்.


முனிவர்களைக் கொலை புரிவது ஒன்றே
இனி அவர்களின் வாழ்வின் குறிக்கோள்.


நெடுங்காலம் அக்கினிகளின் நடுவில்
கடும் தவம் செய்து வந்த போதிலும்


நான்முகன் இரங்கி வரவும் இல்லை;
வேண்டிய வரங்கள் தரவும் இல்லை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#20a. THE TWO BROTHERS.


Ajamukhi – the younger sister of the three asuras – led a very loose life. She had no moral values nor did she allow the other women to remain haste. She forced the wives of the Devas the become the lovers of her three brothers.


Later she wanted two strong sons for herself. She planned to have her sons sired by DurvAsa maharushi. He did not agree to her wish. Still she forced herself on him and got two sons named Vilavalan and VAtApi.


She told her two sons, “Become great by the power of penance”. The two sons paid their respect to their father DurvAsa maharushi and demanded that he should give them both the power accumulated by his penance.


He bluntly refused. He also cursed them, “You will continue to trouble the rushis and will meet your sad end in the hands of one of the rushis !”


They went to another forest and started doing penance standing in between fires. Their only aim in life now became murdering eat and every rushi they came across.


But Brahma did not take pity on them and did not appear before them.
 
sree venkatesa purANam

28. ஆத்மா ராமன் (3)

“ஒரு வழி இருக்கிறது இன்னல் தீர்ந்திட,
திருமகள் கருணையைப் பெறுவது அது!

திருமால் மார்பில் உறைபவள் அவள்,
திருவென்னும் செல்வத்துக்கு அதிபதி!

பூரணச் சந்திரன் போன்ற முகத்தினள்;
கருணையே வடிவாகிக் காக்க வந்தவள்,

வியூக லக்ஷ்மியாக இருந்து தருவாள்,
விஜயம், புகழ், செல்வம் இவை நமக்கு.

முற்பிறப்பில் செய்த பாவங்கள் தீர்ந்திட
பொற் பதங்களைச் சிக்கெனப் பற்றுவாய்!

தாமரை மலரில் அமர்ந்து கொண்டு அவள்
தங்குகிறாள் வேங்கட நாதனின் மார்பில்.”

லக்ஷ்மியின் திருமந்திரத்தை உபதேசித்தார்.
லக்ஷியத்துடன் அவனை ஜபிக்கச் சொன்னார்.

பய பக்தியுடன் பெற்றான் உபதேசம்-அதை
சுய புத்தி மாறாமல் நடந்தான் உச்சரித்து.

சுவாமி புஷ்கரிணியை அடைவதற்குள்
சுலபமாகி விட்டது அந்த மந்திர ஜபம்.

அனைத்துத் தீர்த்தங்களிலும் மேலான
அந்தத் தீர்த்தத்திலும் நீராடினான் அவன்.

அரிய காட்சி தெரிந்தது அருகே வனத்தில்.
அழகிய விமானத்துடன் ஆலயம் ஒன்று.

மண்டபத்தில் குழுமி இருந்தனர் தேவர்;
கண்டான் ஆலயத்தில் அற்புத தரிசனம்.

சங்கு, சக்கரம், கிரீட, குண்டலங்களுடன்
வேங்கடேசன் இருந்தார் தேவியர்களோடு.

கண் கொள்ளாக் காட்சியில் மெய் சிலிர்த்து
தெண்டனிட்டவன் இருந்தான் தடாகம் அருகே!

குறைவற்ற செல்வம் தேடி வந்தது அவனை!
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தான் நெடுநாள்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28. AatmA RAman (3)

Sage Sanat KumAr gave his advice. “There is only one way to get out of this difficulty. You have to seek the blessings of Lakshmi Devi – the consort of Lord NArAyan. Her abode is the broad chest of the lord. She is the goddess of wealth.

She has a beautiful face which will put to shame the full moon itself. Lakshmi Devi is the personification of mercy. She bestows on her devotees Victory, Fame and Wealth. Catch hold of her lotus feet to get out of the sins you have committed in the past
births.”

The sage taught AatmA RAman the mantra of Lakshmi Devi. He was advised to chant it with a definite purpose. He got the upadesam with humility and walked to the SwAmi PushkariNi while chanting the mantra.

He took a dip in the SwAmi PushkariNi and reached its bank. He got a vision in a forest nearby. There appeared a temple with a beautiful vimAnam. Its mandapams were filled the Devas.

He had the darshan of Lord Venkatesa with his consorts. The lord appeared with his conch, Sudharshan, gem studded crown and makara kuNdalams. He forgot himself at the beauty and suddenness of this divine vision.

His prostrated in front of the Lord but found himself standing at the bank of the SwAmi PushkariNi. He became rich once again and lived a long life of contentment – thankfully remembering the grace of Lakshmi Devi and the Lord SreenivAsan.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#14b. அரிச்சந்திரன்

ஓடி வந்தான் இந்திரன் விஸ்வாமித்திரரிடம்,
“வேடிக்கையல்ல இரண்டு சுவர்க்கம் என்பது!


வேண்டுவது என்ன என்று கூறுங்கள்!” என
“வேண்டும் சுவர்க்கம் திரிசங்குவுக்கு!” என்றார்.


தந்தான் இந்திரன் திரிசங்குவுக்கு திவ்விய ரூபம்;
தந்தான் இந்திரன் திரிசங்குவுக்கு சுவர்க்க போகம்.


திரிசங்கு அடைந்தான் சுவர்க்க லோகம்;
அரிச்சந்திதிரன் அடைந்தான் பெரு மகிழ்ச்சி.


உண்டாகவில்லை மகப் பேறு அவனுக்கு – நூறு
பெண்கள் அவனது ராணிகளாக இருந்த போதும்.


அறிவுறுத்தினார் வசிஷ்டர் அரிச்சந்திரனுக்கு
“ஆராதிப்பாய் வருண தேவனை பக்தியுடன்.


கருணை புரிவான் வருண தேவன் உனக்கு;
தருவான் புத்திரப் பேற்றை உறுதியாக!” என


தவம் செய்தான் கங்கையாற்றின் கரையில்;
தவத்துக்கு மகிழ்ந்தான் வருண தேவன்.


“புத்திரப் பேறு உத்திரவாதம் உனக்கு – உன்
புத்திரனை ஆக்க வேண்டும் யாகப் பசுவாக.


செய்ய வேண்டும் நரமேத யாகத்தை மறவாது,
செய்யவேண்டும் என் மனம் மகிழும்படியாக!”


ஆலோசிக்கவில்லை அரிச்சந்திரன் எதையுமே;
விலக வேண்டும் மலடன் என்ற பட்டப் பெயர்.


வாக்குத் தந்தான் வருண தேவன் கேட்டபடி;
வந்து பிறந்தான் அழகிய மகன் லோகிதாசன்.


தான தருமங்கள் பல செய்தான் அரிச்சந்திரன்;
வானளாவாக உளம் மகிழ்ந்தான் அரிச்சந்திரன்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


7#14b. Harischandra

Indra came running to Sage ViswAmitra. “It is not acceptable to have two different heavens. Please tell me what you want from me.”


ViswAmitra replied, “A place in the heaven for Trisanku!” Indra agreed to this immediately. He gave a divya sareeram to Trisanku and also a place in heaven. Trisanku finally reached heaven as he had desired all along. Harischandra was very happy to hear that his father had achieved his life’s ambition.


King Harischandra had one hundred wives but not a a single child. He desperately wished for a son and consulted sage Vasishta.


Vasishta advised him to pray to Varuna Devan. Accordingly Harischandra did penance towards Varuna Devan on the bank of river Ganga. Varuna was pleased and appeared before Harischandra.


“I shall grant you a good son but you must offer him back to me in a nara medha yAgam without fail. ”


Harischandra did not think of the consequences of this condition. He promised Varuna Devan to offer his son as the sacrificial animal in a Narameda yAgam.


In due course a son was born to one of his queens. There was great jubilation. Celebrations cheered up the people and they all welcomed the infant prince.


 
bhagavathy bhaagavatam - skanda 1

1#11c. இந்திரன்

கோபத்தோடு வெளிப்ப பட்டான் சந்திரன்,
“மோஹத்தோடு பிதற்றுகின்றீர் ஐயா நீர்!

அவலட்சணமான உம்முடன் வாழ்ந்தால்
அவமானம் தான் மிஞ்சும் தேவி தாரைக்கு.

குரூபியுடன் நீர் திருமணம் முடித்திருந்தால்
பொருத்தமாக இருக்கும் உருவத்தில் உமக்கு.

தனக்குச் சமமான ரூப லாவண்யதைத் தன்
கணவனிடமும் எதிர்பார்க்கின்றாள் பெண்.

பொருத்தம் இல்லாத உம்மை வெறுக்கின்றாள்
பொருத்தமான என்னை தாரை விரும்புகின்றாள்.

கோபம், தாபம், சாபம் எதுவுமே பலிக்காது!
போகும் வழியைப் பார்த்துச் செல்லும் நீர்!”

மதிக்காமல் பேசினான் குருவிடம் – பின்னர்
மாளிகைக்குள் சென்றுவிட்டான் சந்திரன்.

நொந்து விட்டார் மனம் குரு பிருகஸ்பதி
இந்திரனிடம் சென்றார் உதவி கேட்க.

வரவேற்ற இந்திரன் உபசாரம் செய்தான்.
விரிவாகக் கேட்டான் துயரக் கதையை.

“பிறன் மனைவியை அபகரித்திட்டானா
பிறன் மனைவியை விழையும் சந்திரன்?

தூதுவனை அனுப்புகின்றேன் முதலில்;
தூது பலன் தராவிட்டால் அடுத்துப் போர்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#11c. Indra


Chandran came out of his palace very angry.“You are confused and are shouting standing here unnecessarily. Living with a man like you will make the beautiful TArA disgraced. If you had married someone equal to you in your ugliness there would hve been no problem at all.

A Woman expects her man to match with her in beauty and good looks. TArA hates you since you are not suitable for her. TArA loves me since I am well matched for her in beauty.

Nothing will be achieved by your anger, shouting and cursing. I suggest that you go back quietly to where you have come form!”
Having said this, Chandran went back into his palace. Bruhaspati felt completely shattered and helpless. He went to Indra and told him his grievances in great detail.

Indra consoled him and said, ” I will send a messenger to Chandran insisting that he should return your wife. If he refuses, I will wage a war on him”


 
kanda purAnam - asura kANdam

20b. வில்வலன், வாதாபி

வில்வலன் செய்தான் அதற்குப் பின்னர்,
சொல்லரிய வேள்வி வாதாபியைக் கொன்று!

சொரிந்தான் வாளால் கிழித்துக் குருதியை!
செய்தான் தாளாத கொடும் வேள்வியினை!

நான்முகன் அங்கு வந்தான் மனம் இரங்கி!
வேண்டும் வரங்கள் எல்லாம் தந்தான்.

“எத்தனை முறை கொல்லப்பட்டாலும்,
எத்தனை துண்டாக வெட்டப்பட்டாலும்,

மீண்டும் முழு உடல் அமையப் பெற்று
மீண்டும் உயிர் பெற வேண்டும் வாதாபி.”

கோரிய ஒரு வரத்தைப் பெற்று விட்டனர்.
சீரிய ஒரு திட்டம் தயாராகக் கைவசம்!

மாமன் சூரபத்மனிடம் சென்று விளக்கி,
மார் தட்டிக் கொண்டனர் இருவர்களும்.

குடக நாட்டின் காட்டை அடைந்தனர்,
திடமாக முனிவரைக் கொல்லலாயினர்.

நான்கு பாதைகள் கூடும் ஓர் இடத்தில்
நல்ல வசதிகளுடன் பெரிய இருப்பிடம்;

நடந்து செல்லும் முனிவரைப் பணிந்து
நல்லதொரு விருந்துக்கு அழைப்பார்கள்.

ஆட்டு முகம் கொண்ட வாதாபியை – ஓர்
ஆடாக்கிச் சமைப்பான் வில்வலன்,

உணவு உண்டவரின் வயிற்றைக் கீறிப்
பிணமாக்கி வெளியே வருவான் வாதாபி.

இறந்த முனிவரின் உடலை இருவரும்
அருந்தி விருந்தாக அகம் மகிழ்வர்.

வெகுநாள் தொடர்ந்தது இந்த நாடகம்,
வெகுளி முனிவர்கள் தொடர்ந்து பலி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#20b. VILVALAN AND VAATAAPI.


Vilvalan performed a terrible yAgam by cutting the body of VAtApi with a sword and offering his blood and parts of his body in the yAgakundam’s fire. Brahma took pity on them and appeared before them. They asked for an unusual boon,

“Even when cut into several pieces and cooked; even when killed any number of times in this manner, VAtApi must regain his original form and figure and emerge alive!” Brahma granted this rare boon.

The two brothers now went to meet their maternal uncle Soorapadman and boasted about their rare boon. They had made a fool-proof plan to get rid of the rushis without creating any suspicion.

They built a spacious house at the junction of four roads. Whenever any rushi would walk by, they would prostrate to him and invite him to take food in their house.

The goat faced VAtApi would be cut and cooked by Vilvalan. After the visiting rushi had eaten the food, Vilvalan would call out the name of VAtApi.

VAtApi would resume his original figure and form, and emerge outside after tearing open the stomach of the rishi. Then the two brothers would feed on the rushi’s body. This went on for a very long time and several rushis got killed in this manner.
 
sree venkatesa purANam

29. சக்கர ராஜன்

துஷ்டர்கள் சாது ஜனங்களுக்கு நானாவிதக்
கஷ்டங்கள் தந்தனர் முன்பொரு சமயம்.

அசுரர்கள் தபஸ்விக்களின் கர்மங்களைப்
பிசுபிசுக்கச் செய்து துன்புறுத்தி வந்தனர்.

முனிவர்கள் குழுமினர் சேஷாச்சலத்தில்;
கனிவுடன் காட்சி தந்தார் ஸ்ரீனிவாசன்.

துயரப் பட்டியலைக கேட்ட ஸ்ரீனிவாசன்,
அயரவில்லை அதனைக் கேட்டுச் சற்றும்!

“நிர்பயமாகத் தொடருங்கள் பணிகளை;
அபயம் அளிப்பான் இனிச் சக்கர ராஜன்!”

அனல் விழிகளுடன் அவன் வீசிய சக்கரம்
அழகிய ராஜகுமாரனாக உருவெடுத்தது.

“எட்டுத் திசைகளிலும் சென்று வேரறுப்பாய்
துஷ்டர்களைக் கூண்டோடு!” உத்தரவிட்டார்.

பெற்றான் சக்கர வேந்தன் என்ற பெயரை;
பெற்றான் அழகிய ரதத்தை மானசீகமாக.

பெற்றான் வலிய கரங்கள் ஓராயிரம்!
பெற்றான் அரிய ஆயுதங்கள் ஓராயிரம்!

கிழக்குப் பக்கம் சென்றான் அவன் முதலில்;
அழித்தான் துஷ்டரைக் கேசிமலைக் காட்டில்.

தென் கிழக்குப் பக்கம் சென்றான் அடுத்து;
தேடி துவம்சம் செய்தான் துஷ்டர்களை!

தெற்கு நோக்கிச் சென்றான் சக்ரராஜன்;
துடிப்புடன் எதிர்த்து வந்தனர் அவனை

உக்கிராங்கன், அங்கன், புளிந்தன், காலகன்
முக்தாயிகன் என்ற ஐந்து அரக்கர்கள்.

சதுரங்க சேனையுடன் வந்தவர் கண்டனர்
எதிரில் வருபவன் தன்னந்தனியன் என்பதை!

நகைத்தனர் சக்கர ராஜனைக் கண்டு!
பகைவர் வந்து சூழ்ந்தனர் ஒன்று சேர்ந்து!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29. Chakra RAjan.

Once upon a time, the wicked asuras tortured the pious people. The disturbed the yAgam and yagna when they were being performed. The sadhus and sags came together to SeshAchalam. SreenivAsan appeared to them and listened to their tales of woe. But he was not worried by those stories.

He told the sages and sadhus, “Continue your penance, yAgam and yagna as before. This Chakra RAjan will protect you from those wicked asuras in the future!”

He threw down his Sudarshan red-eyed and it changed into Chakra RAjan – handsome prince at once. SreenivAsan commanded Chakra RAjan, “Go forth in all the directions one after another and rid the earth of all the wicked asuras!”

Chakra RAjan developed one thousand mighty arms. He procured one thousand weapons used in wars. He got a fine chariot to ride on. He went to the east at first. He destroyed all the wicked people in the mountain Kesi.

Then he went to the South east and destroyed all the wicked people living there. Next he went to the South. Ugran, Angan, PuLindan, MukthAyikan and KAlakan were the five asuras living there.

They came ready for the battle with the their chaturanga senai. They were amused to find Chakra RAjan all alone by himslef with no armt to help him. They laughed at him and surrounded him completely.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#15a. புத்திர பாசம்

ஆனந்தம் பொங்கி வழிந்தது அரண்மனையில்;
அந்தணன் வேடத்தில் வந்தான் வருண தேவன்.

“தந்தேன் நீ கேட்டபடி சத்புத்திரனை உனக்கு,
வந்தேன் நீ கூறிய நரமேத யாகத்தைக் காண!”

தயங்கினான் அரிச்சந்திரன் புத்திர பாசத்தால் – மனம்
மயங்கினான் ‘பிறந்த குழந்தையை பலியிடுவதா?’ என.

“செய்கின்றேன் நரமேத யாகம் நான் கூறியபடி;
சென்று வாருங்கள் இவன் தீட்டுக் கழிந்த பிறகு!”

லோகிதாசன் என்ற அழகிய பெயர் சூட்டினான்;
லோபம் இன்றி வாரி வாரி வழங்கினான் தானம்.

மாத முடிவில் மீண்டும் வந்தான் வருண தேவன்.
“ஏது நீ செய்ய ஒப்புக் கொண்ட நரமேத யாகம்?”

“பல் இல்லாத பசுவை, மகனைப் பலியிடலாகாது!
பல் முளைத்த பின்பு செய்வேன் நரமேத யாகத்தை!”

வந்தான் வருணன் பல் முளைத்த பின் மீண்டும்.
நொந்தான் மனம் மன்னன் வருணனின் வரவால்.

“சௌச கர்மம் செய்யவில்லை இன்னும் மகனுக்கு;
செய்வேன் யாகம் சிகை நீக்கிய பின்னர் ” என்றான்.

“சாக்குப் போக்குக் கூறுகின்றாய் அரிச்சந்திரா!
சபித்து விடுவேன் என்னை ஏமாற்ற நினைத்தால்”

“இரு பிறப்பாளர் ஆவர் மூன்று வர்ணத்தவர்;
இரு பிறப்பாளன் ஆவான் உபநயனத்தின் போது.

செய்வேன் உபநயனம் பதினோராவது வயதில்;
செய்வேன் யாகம் பதினோராவது வயதில்!” எனச்

சென்று விட்டான் பேசாமல் வருணன் மீண்டும்;
சிந்தித்தான் மன்னன் அரிச்சந்திரன் இது குறித்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#15a. The love for his son

There was great joy in the palace of Harischandra on the new arrival of the royal son. Varuna came disguised as a brahmin and said to Harischandra,” I gave you a good son as you had wished for. Now you must perform the naramedha yAgam which I had wished for. ”

Harischandra hesitated wondering how could he bring himself to kill the new born son? He told Varuna, “I have not forgotten my promise. I will perform the yAgam when the child and his mother becomes purified after the birth. Varuna went back but came back again at the end of that month.

“We are not supposed to offer animals which do not have teeth. Kindly wait till my son gets his first few teeth!” Harischandra bought some more time thus.

Varuna came back after the baby got the first few teeth. Now Harischandra said,” We are yet to perform the soucha karmam. Please come after the garbba kesam of the child has been removed.”

Varuna smelled trouble and said,”If you are trying to cheat me, I shall curse you Harischandra!”

Next time when Varuna came Harischandra told him, “Three out of the four varNas wear poonool. A brahmin becomes dwija only when the upanayanam is performed. My son will get his poonool in his eleventh year. I shall perform the yAgam at that time.”

 
bhagavathy bhaagavatam - skanda 1

1#11d. தூதுவன்

தூதுவன் சென்றான் சந்திரனிடம் உடனே.
“நீதி நெறி அறியாதவனா நீயும் சந்திரா?

அத்திரி மகா முனிவரின் புத்திரன்
இத்தகைய செயல் செய்யலாகுமா?

மாற்றான் மனைவியை அபகரித்தல் பாபம்.
மாற்றான் உன் மனைவியை அபகரித்தால்?

கட்டழகியர் உள்ளனர் உன் அந்தப்புரத்தில்,
எட்டும் இருபதும் என்று தக்ஷன் குமாரிகள்.

தேவ மகளிர் உள்ளனர் உல்லாசத்துக்கு!
தேவை இல்லை குருபத்தினியுடன் உறவு.

திருப்பி அனுப்பிவிடு தாரையை உடனேயே!
மறுத்தால் பிறக்கும் போரும், கலகமும்.”

அயரவில்லை இதைக் கேட்டு சந்திரன்
“கயவன் இந்திரனின் அறிவுரைகளா?

நீதி நெறிப்படி நடப்பவன் சொல்ல வேண்டும்
நீதி நெறிகளைப் பிறர்க்கு எடுத்து உரைத்து.

பிறன் மனைவியை அனுபவிப்பது பற்றிக்
குறை கூறுகின்றானோ இன்று தேவராஜன்?

காம சாஸ்திரம் இயற்றினார் தேவகுரு.
காம சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா?

பெண் ஆணிடம் கொண்ட ஆறாத காதல்
பெண்ணை ஆண் சுகிக்க அனுமதிக்கும்!

வலியவனுக்கு உரியவர் மகளிர் அனைவரும்;
எளியவனுக்கோ எனில் மனைவியும் இல்லை.

தாரை விரும்புவது என்னை மட்டுமே!
தாரை விரும்பவில்ல தேவகுருவை!

விட மாட்டேன் ஒருநாளும் தாரையை!
முடிந்ததைச் செய்யலாம் தேவராஜன்.”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#11d. Indra’s messenger


A messenger went to Chandran and spoke to him thus. “Don’t you know the right from the wrong Oh Chandra! It is wrong to possess another man’s wife. How would you like your wife being possessed by another man?

You have 27 lovely wives – the daughters of Dakshan. The divine damsels are there for your pleasure. You do not need to have affair with your Guru patni. Let TArA go back to her husband now. If you don’t send her back, there will be a war.”

Chandran was not impressed by this message. “Oh these are the words of the womanizer King Indra! Those who preach morals to others must also live a life of morals. Imagine Indra finding fault with me for living with another man’s wife!

Deva Guru has written the KAma sAstra. He himself admits that the intense love a woman has for a man allows him to enjoy her without guilt. The mighty and the valorous man own all the women in the world. The weak and cowardly man does not own even his own wife.

I will never send back TArA. Indra can do whatever he thinks best!”


 
kanda purANam - asura kANdam

21a. மறைந்துறைதல்


மருமகன்கள் ரிஷிகளை ருசித்துப் புசிக்க,
மாமனோ அண்டங்களை ஆண்டு வந்தான்.

இந்திர ஞாலத்தில் ஏறிச் சுற்றி வந்தான்;
இங்கு அங்கு என்னாது எங்கும் சென்றான்.

எங்கே சென்றிருந்தாலும் தவறாமல் மாலை
மங்கும் நேரம் திரும்புவான் தலைநகருக்கு.

இந்திரனை மேலும் தொந்தரவு செய்வதற்குச்
சொந்தப் படையை அனுப்பினான் சூரபத்மன்.

அயிராணியைச் சொந்தம் ஆக்குவதற்கு
அவுணப் பெண்கள் ஒன்பது கோடிப்பேர்.

ஒற்றர்கள் மூலம் செய்தியை அறிந்ததும்
காற்றென மறைந்துவிட்டனர் இருவரும்!

மற்ற தேவர்களைத் துன்புறுத்தியும் – கைப்
பற்ற முடியவில்லை இந்திரன், அயிராணியை.

சூரபத்மனின் மோஹம் தலைக்கு ஏறியது.
சூரபத்மனின் சினம் எல்லையை மீறியது.

ஒற்றர் படைகள் அண்டங்கள் எங்கும்
சுற்றிச் சுற்றித் தேடியது அவர்களை.

வைகுந்தம் சென்றிருந்த இந்திரன் மகன்
வேதனயுற்றான் இந்த நிகழ்வுகளால்.

விண்ணுலகை விட்டு மறைந்து ஓடி
மண்ணுலகில் இருந்தனர் பெற்றோர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#21a. LIVING IN SECRECY

The two nephews were feeding happily on the rushis while their maternal uncle Soorapadman ruled over the 1008 universes. He would get into his chariot IndrajnAlam and travel everywhere. But he would return to his capital city before the nightfall.

Soorapadman wanted to have IndrANi his consort and torment Indra more and more. He sent an army and 90 million asura women to catch and fetch both of them.

Indra learned about this the plot through his spies and vanished from Heaven without a trace. The other Devas could not tell the whereabouts of Indra and IndrANi. Looking for the escaped couple, Soorapadman’s Spies roamed in all the universes under his rule.

When all these were happening Jayanthan, Indra’s son just returned from Vaikuntam. He was very sad to learn of the plight of his parents who had gone into hiding somewhere on the earth.


 
sree venkatesa purANam

30. அயி சிரசன்

ஐந்து அசுரர்கள் சூழ்ந்தனர் படையுடன்
அஞ்சா நெஞ்சன் சக்கர வேந்தனை!


ஆயிரம் கரங்களால் எய்தான் பாணங்களை;
ஆயிரம் பாணங்களை விலக்கினான் போரில்.


சக்கரம் போலவே சுற்றிச் சுழன்றான்;
சக்கராஜன் போரிட்டான் அசுரருடன்!


போரினைத் தொடர்ந்தனர் வெகுநேரம்;
சூரியனை மறைத்தது பரவிய புழுதி.


கரங்களால் பொழிந்த சர மழையால்
சிரங்களை அறுத்தான் சக்கர ராஜன்!


அயசிரசன் ஆவான் ஐவரின் தலைவன்;
ஐயுற்றான் ஐவரின் அழிவைக் கேட்டு.


“அழிப்பேன் சக்கரனை!” சபதம் இட்டவன்
அழிவது கண்டான் தன் எஞ்சிய படையும்!


வளைத்துக் கொள்ள ஆணையிட்டான்;
அழிக்கும் அஸ்திரத்தையும் விடுத்தான்.


ஆக்னேய அஸ்திரம் விடுத்தான் சக்கர ராஜன்
அக்னிக்கு முன்னால் நிற்க முடியுமா எதுவும்?

அக்னி அஸ்திரம் அழித்தது பாணத்தை;
அக்னி அஸ்திரம் அழித்து அயசிரசனை!


“யமனிடம் அனுப்புவேன் அவனை!” என்று
போர்க்களம் சூளுரைத்து வந்த அயசிரசன்,


யமனிடம் சென்று விட்டான் தான் அவனே
போர்க்களம் வந்து நாழிகைப் பொழுதில்!


தெற்கு திசையில் அழித்தான் துஷ்டர்களை;
தென் மேற்கிலும் அழித்தான் துஷ்டர்களை;


மேற்கு திசை நோக்கிச் சென்றான் சக்கர ராஜன்
மேற்கொண்டு அசுரரை அழிப்பதற்கு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
#30. Ayisirasan

The five asuras surrounded Chakra RAjan completely. Chakra RAjan shot arrows using all his thousand mighty arms. He destroyed the arrows shot by the asuras. He swirled like a wheel in the battle field and fought with those asuras and their armies
all alone by himself.


The dust under their feet rose to form a screen hiding the sun. Chakra RAjan severed the heads of the five asuras and their army ran away.


Ayisirasan was the leader of those five asuras. He heard of the battle and its outcome and could not believe his ears. “I will kill that upstart with my own hands!” he swore and came to the battle field, gathering the soldiers who were still alive.


Chakra RAjan shot his Aagneya asthram . The arrow shot by Ayisirasan got destroyed like a moth in fire. Aagneya asthram destroyed the arrow and then the asuran Ayisirasan also.


He who entered the battle field swearing to kill Chara RAjan got killed by him in less than a naazhigai. (1 naazhigai = 24 minutes)

Chakra RAjan destroyed the the wicked asuras living in the South and the South West before proceeding to the West – to vanquish more asuras living there.

 
bhagavathy bhaagavatam - skanda 7

7#15b. தலை மறைவு

அணிவித்தான் பூணூல் பதினோராவது வயதில்;
அணி திரண்டனர் வேதியர்கள் உபநயனத்துக்கு.

வந்தான் வருண தேவன் மீண்டும் அவனிடம்,
“தந்துவிடு நரமேத யாகம் நீ கூறியபடி!” என்றான்.

“இருக்கிறது சமாவர்த்தனம் என்ற சடங்கு.
பொறுக்க வேண்டும் நீர் அது முடியும் வரை”

“சாதுர்யமாகப் பேசித் திருப்பி அனுப்புகின்றாய்.
சமாவர்த்தனம் வரையில் பொறுக்கின்றேன்!” என

கண்டான் லோகிதாசன் அன்று நிகழ்ந்தவைகளை;
கண்டான் தன் இருண்ட எதிர்காலத்தை கண்ணெதிரே.

“பலி ஆகிவிடுவேன் இனியும் இங்கு இருந்தால்!”
கிலி பிடித்து ஒடிவிட்டான் ஒரு பெரிய காட்டுக்கு.

பதுங்கி இருந்தான் ஒரு மலைக் குகையில்;
ததும்பியது சோகம் அரிச்சந்திரன் உள்ளத்தில்.

நாலாபுறங்களிலும் தேடினர் வீரர்கள் – ஆனால்
பாலகன் பதுங்கி இருந்த இடம் தெரியவில்லை.

வந்தான் வருணன் வாக்குறுதியை நினைவுறுத்த;
“தந்தேன் வாக்குறுதி நரமேத யாகம் செய்திட!

பயந்து ஓடிவிட்டான் என் மகன் லோகிதாசன்!
பயனின்றிப் போயின நான் செய்த செயல்கள்.”

எல்லை மீறிவிட்டது வருணனின் கடும் சினம்!
“சொல்லைக் காப்பாற்றாத நீயும் ஒரு மன்னனா?

பலமுறை ஏமாற்றினாய் நீ மீண்டும் மீண்டும்!
ஜலோதரம் பீடிக்கட்டும் உன்னை!” என்று சபித்தான்.

சாபம் தந்த பின் மறைந்தான் வருண தேவன்
சாபம் பீடித்துத் துயர் உற்றான் மன்னன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#15b. The Prince runs away!

Harischandran performed the upanayanam of his son at the age of eleven. All the brahmins gathered for the ceremony. Varuna also came as a brahmin and reminded the king of the promise made by him long ago.

Harischandra said, “There is just one more ceremony to be performed called SamAvarthanam. Kindly wait till it is over. I will surely offer my son to you in a narameda yagam after that!”

Varuna said, “Everytime you come up with something and send me back empty handed. I shall wait just one more time. No more waiting after this time!”

Varuna went back. LohidAsan had been observing the altercation between Varuna and Harischandra. He was now old enough to understand things and situations.

He knew that if he stayed on there his father will offer him to Varuna in a narameda yAgam. So ran away to a nearby forest without the knowledge of anyone. He hid himself in the cave and lived there in secrecy.

Harischandra became very sad. His spies were unable to locate the prince even after an intense search. Varuna came again and demanded the naramedha yAgam. Harischandra explained to him that his son had disappeared secretly.

Varuna lost his temper and cursed Harischandra,”May you be afflicted with the terrible jalodharam” and walked way in a huff. The curse took effect immediately and Harischandra was in great pain and discomfort.


 
bhaghavathy bhaagavatam - skanda 1

1#11e. சுக்கிரன்

சந்திரன் கூறிய மொழிகளைத் தூதுவன்
இந்திரனிடம் சென்று எடுத்துரைத்தான்

சினம் கொண்டான்; சீறினான் இந்திரன்;
சேனையுடன் போனான் உடனே போருக்கு.

‘பகைவனின் பகைவன் நண்பன் ஆயிற்றே’!
ப்ருஹஸ்பதியின் பகைவன் சுக்ரனின் நண்பன்.

சந்திரனைக் காணச் சென்றான் சுக்கிரன்.
சந்திரனுக்கு அறிவுரை சொன்னான் சுக்கிரன்.

“தாரையை ஒருபோதும் விடாதே சந்திரா!
போரைச் சந்திக்க நேர்ந்தாலும் சரியே!

அசுரர்கள், ஆயுதங்கள், மந்திரங்கள் என
அத்தனையும் நான் தந்து உதவிடுவேன்.”

பிருஹஸ்பதி செய்வதறியாமல் – சிவ
பிரானிடம் அடைந்தான் சரணாகதி!

சங்கரன் பூண்டார் போர்க் கோலம் அன்று.
சங்கரன் சென்றார் சந்திரனுடன் பொருத!

சுக்கிரனின் செல்வாக்குத் தந்தது பலன்;
உக்கிரப் போருக்குத் திரண்டனர் அசுரர்.

தொடங்கியது போர் தேவ அசுரர் இடையே.
தொடர்ந்தது போர் தேவ அசுரர் இடையே.

பிரமன் பிரமித்தான் போரினைக் கண்டு!
‘குருபத்தினிக்காக இத்தகைய யுத்தமா?

தலையிட வேண்டும் நானே நேரில் சென்றுத்
தலை குனிவை ஏற்படுத்தும் போரைத் தடுக்க.

சென்றான் பிரம தேவன் சந்திரனை நாடி!
செப்பினான் பிரமன் அவனுக்கு அறிவுரை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


1#11e. Sukran

The messenger went back to Indra with Chandran’s message. Indra became furious on hearing it. He got ready for a full fledged war with Chandran.

‘Enemy’s enemy becomes one’s friend’. So Bruhaspati’s enemy Chandran now became Sukran’s friend. Sukran went to meet Chandran.

He told Chandran,” Never give up TArA. I will help you in case a war breaks out with asura army, Ayudhams and mantras”
Bruhaspathi felt helpless and did saraNAgati to Lord Siva. Siva got ready for the war with Chandran. Sukran’s influence had gathered a huge asura army to fight for Chandran.

A fierce war ensued. Brahma was appalled by this war waged for the sake of a guru patni! He told to himself, “I must intervene and put an end to this shameful warfare myself”



 
kandapurANam - asura kANdam

21b. ஜயந்தன்


மயங்கி நின்று துயரக் கடலில் விழுந்த
ஜயந்தனை அணுகினார் தேவரிஷி நாரதர்.

இருக்கை அளித்து வணங்கினான் ஜயந்தன்,
“இருக்குமிடம் அறிகிலேன் அன்னை தந்தையர்!

இன்னல்கள் நீங்கி யாம் வாழ்வது எப்போது?
அன்னை தந்தையரைக் காண்பது எப்போது?”

“நன்மையும், தீமையும் பிறர் தர வாரா.
நன்மை தீமைகள் நம் வினைப்பயன்களே.

இன்பம் கண்டு மகிழார் பெரியோர்!
துன்பம் கண்டு துவளார் பெரியோர்!

வறியவர் பெரியவர் ஆவதும் உண்டு.
பெரியவர் வறியவர் ஆவதும் உண்டு.

வளர்ந்து தேயும் திங்களின் கலைகள்
வாழ்வில் தோன்றும் மாற்றம் போன்றதே.

நிலையற்றது சுரர்கள் படும் துன்பங்கள்.
நிலையற்றது அசுரர்கள் படும் இன்பங்கள்.

இன்பமும், துன்பமும் உடலுக்கே அன்றி
இன்பமும், துன்பமும் உயிருக்கு அல்ல!

உருவை மறைத்து ஒளிந்திருக்கும் தந்தை
விரைவில் அழிப்பான் அவுணர் கூட்டத்தை.

வருந்தாமல் இருந்து காலம் கனிவதற்கு
விரும்பிக் காத்திருப்பாய் ஜெயந்தா நீ!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

2#21b. Jayantan and NArada.


NArada was moved to pity at the sight of Jayantan’s suffering. He wanted to console him. Jayantan paid his respect, offered him a seat and spoke.

” I do not know the whereabouts of my dear parents. When will our sufferings come to an end? When will I meet my parents again?” Jayantan lamented to NArada.

” The good and the bad in a person’s life are not inflicted by anyone other than himself. Our own actions subject us to these consequences. So the wise will not jump in joy nor crumble in sorrow.

Fortune may favor a pauper and make him king. It also make a king into a pauper. The fortune affects a person’s life very similar to the waxing and waning of the moon.

Your sorrows will not last for ever, nor the happiness and joy of the asuras. More over the joy and sorrow affect only the body and not the soul living in it.

I am sure your father is planning a way of getting rid of the asuras soon. Time is Factor which can change everything upside down. So wait for the opportune moment without losing courage!” NArada ended his long speech consoling Jayantan.
 
sree venkatesa purANam

31. வனகர்த்தன்

மேற்கில் வசித்தான் அசுரன் வனகர்த்தன்,
மேற்கொண்டான் தவம் சிவனைக் குறித்து.

“பிறக்க வேண்டும் புஜபலம் மிகுந்த ஒரு மகன்;
சிறக்க வேண்டும் மூவுலகங்களையும் வென்று!”

காலம் கடந்தது; காட்சி தரவில்லை சிவபிரான்,
ஞாலம் வெல்லும் மகனை விரும்பிய அசுரனுக்கு.

தலையை அறுத்து அக்கினியில் இடும் போது,
பலியைத் தடுத்துத் தரிசனம் தந்தான் சிவன்.

“மனிதரும் தேவரும் வெல்ல முடியாத – வீர
மகன் பிறக்க அருள் புரிவீர்!” என்றான் இவன்.

பெருமிதம் கொண்டான் மகன் பிறந்ததும்;
செருக்கு மிகுந்துவிடத் துன்புறுத்தலானான்.

சாதுகளைத் தாக்கினான் ஈவு இரக்கமின்றி.
பேதமின்றிச் சேதப்படுத்தினான் முனிவரை.

சக்கர ராஜனை எதிர்க்க அனுப்பினான் – ஒரு
சதுரங்க சேனையைத் திரட்டி வனகர்த்தன்.

நெருப்பில் வீழ்ந்த விட்டில்கள் ஆயினர்.
நெருங்க முடியவில்லை சக்கர ராஜனை.

படை அழிந்து விட்டது என்று கேட்டதும்
மடை திறந்து கோபம் பெருக்கெடுத்தது.

ஜ்வால பாதனை அனுப்பினான் போருக்கு.
ஜெயிக்க முடியாத மகனே ஜ்வால பாதன்!

அரசகுமாரன் என்று எண்ணினான் பகைவனை.
அறியவில்லை அவன் சுதர்சனத்தின் உருவென!

அஸ்திரங்கள் பாய்ந்தன இரு திசைகளிலும்;
அஸ்திரங்கள் மாய்ந்தன தாக்கிக் கொண்டபின்.

சக்கர ராஜனின் அஸ்திரம் விரைந்து சென்றது;
மிக்க பலத்துடன் ஜ்வால பாதனை நெருங்கியது.

மாயையால் மறைந்துவிட முயன்ற அசுரனை
மாய்த்தது பாய்ந்து தாக்கிய சக்கரனின் பாணம்!

திரட்டி வந்தான் போரில் சிதறி ஓடிய வீரர்களை.
மரித்தான் தொடர்ந்து நடந்த போரில் வனகர்த்தன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#31. Vanakartan


Vanakartan lived in the western direction. He had done severe penance on Lord Siva. He wished for a son who would conquer all the three worlds. But Siva did not appear to him for a very long time.

Vanakartan got very angry and wanted to offer his own head to the fire in the yAga kuNdam. When he was about to cut off his own head, Siva appeared and stopped him from doing so.

Vanakartan asked to be blessed with a son who will be invincible by occupants of all the three worlds. He got a son JwAla PAdan as desired by him. He then became arrogant and started troubling the sages, rushis and pious people.

He sent his army to fight Chakra RAjan but his army got destroyed like a cloud of locusts in a wild fire. When he heard of this, he became very angry and sent his son to fight Chakra RAjan.

JwAla PAdan thought that Chakra RAjan was a prince. He did not know that he was the personification of Lord’s Discus – The Sudarshan.

A war ensued between the asura army and Chakra RAjan. JwAla PAdan tried to escape the asthram shot by Chakra RAjan by becoming invisible. But the ashtram did not spare his life.

On hearing the end of the invincible JwAla PAdan, Vanakartan himself came to the battle field. He fought valiantly but got killed by Chakra RAjan.


 
bhagavathy bhaagavatam - skanda 7

7#16a. நரமேத யாகம்

தலைமறைவாக வாழ்ந்தான் லோகிதாசன்;
நிலைகுலைந்தான் அரிச்சந்திரன் நோயினால்.

விரும்பினான் தந்தையிடம் திரும்பிச் செல்வதற்கு;
விடவில்லை அவனை மரணபயம் திரும்பிச் செல்ல.

துணிந்து புறப்பட்டான் லோகிதாசன் ஒருநாள்;
தணிந்து விட்டது அச்சம்! வந்தான் இந்திரன்!

அந்தணன் உருவில் வந்தான் தேவேந்திரன்;
வந்தவன் கலைத்தான் லோகிதாசன் மனதை.

“கொழுந்து விட்டெரியும் தீயில் விழுவதற்கா?
கொல்லப்பட்டு உன் இன்னுயிர் துறப்பதற்கா?

எதற்காகச் செல்ல வேண்டும் உன் தந்தையிடம்?
எதையும் செய்வான் தன்னைக் காத்துக் கொள்ள.

ஆத்மாவின் மேல் அதிகப் பிரியம் ஜீவன்களுக்கு;
ஆத்மாவைக் காக்கத் தியாகம் செய்வர் எதையும்.

செல்லாதே உன் தந்தையிடம் நீ இப்போதே!
செல்லலாம் நாடாளும் நீ சமயம் வந்தவுடன்!”

மனம் மாறிவிட்டான் லோகிதாசன் – இதனால்
வனத்திலேயே தங்கி விட்டான் மேலும் ஓராண்டு.

மீண்டும் நடந்தது இதே போல் ஒரு முறை.
மீண்டும் தங்கி விட்டான் வனத்தில் மகன்.

வருந்தினான் நோயால் அரிச்சந்திரன்;
குருவிடம் கேட்டான் இதற்கு உபாயம்.

‘சொந்த மகன் இல்லாததால் – விலைக்கு
வந்த மகனை வைத்து யாகத்தைச் செய் !”

“யாராவது பிள்ளையை விற்பார்களா குருவே?
யாரவது மகனை பலியிட அனுமதிப்பார்களா ?

விலைக்கு வந்தவன் ஆவானா என் பிள்ளை?
தலைக்கு வந்தது தப்பிப் பிழைப்பேனா நான்?”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

7#16a. Nara Meda YAgam

LohidAsan lived in hiding. Harischandran suffered from the terrible jalodharam. Once LohidAsan decided to go back to his father.
But his fear of imminent death as the sacrificial animal in the Nara Meda YAgam frightened him and he did not go back to his father.

On fine day he decided to face his destiny and go back to his father. Indra came to him disguised an a brahmin. He spoke to LohidAsan and said, “You must be off your mind to go back to your father. He wants to offer you to Varuna in a Nara Meda YAgam. Will anyone jump into a roaring fire willingly? Will anyone wish to lose his precious life?

Your father will do anything to save himself from his disease. Every living thing cherishes its life force and will do anything to save it and remain alive. Do not go back to your father now. You may go back to your palace when it is the right time for you become the new king!”

The boy decided not to go back. This was repeated one more time after one year. Again Indra managed to convince the boy to stay back in the cave.

Harischandran could bear his disease no more. He approached Vasishta and sought his advice. Vasishta said, “If your own son is not present here you may use a boy bought for money as the substitute for your son and finish the yAgam to get rid of this disease. Ten types of boys are equivalent to own own sons.”

Harischandra wondered. “Whosoever will sell his son for money? Whosoever will agree to sacrifice his son in a yagna? Will a boy purchased for money become equal to one’s own son? Will I ever be able to perform this yaaga and get rid of my disease and discomfort?”


 

Latest posts

Latest ads

Back
Top