• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

# 41. நிற்க ஓரடி நிலம்!





ஒரு மிகப் பெரிய நிலச் சுவான்தார்,
ஒரு பெரிய வயல்வெளி உள்ளவர்;
போதும் என்ற மனம் இல்லாததால்,
பேராசை கொண்டு ஏங்கி நின்றார்.

ஒரு நாள் ஒரு விசித்திரமான கனவு,
ஒரு வினோத மனிதன், தன் மனம் விரும்பும்
நிலத்தைத் தனக்குத் தருவதாகக் கண்டு,
நனவாகுமா தன் கனவு என ஏங்கினார்!

மறுநாள் தன் வயல் வெளியில் அதே
மர்ம நபரை நனவிலும் கண்டார்.
மகிழ்ச்சியுடன் விரைந்து வந்தவரிடம்,
மனம் விட்டு இனிக்கப் பேசினான் அவன்.

“காலைக் கதிரவனுடன் நீயும் கிளம்பி,
மாலையில் அவன் மறையும் வரை,
நீ சுற்றி வரும் நிலம் எல்லாவற்றுக்கும்,
நீயே சொந்தம் கொண்டாடலாம் “.

கனவு நனவாவது கண்டு மகிழ்ந்து,
கரை காணாத உற்சாகத்துடன் அவர்,
கண்ணிமைக்குக் நேரத்தில் ஒரு சிறு
கன்றைப்போலத் துள்ளி ஒடலானார்!

“அதோ! அந்த நிலம் வளமையானது,
இதோ! இதுவும் நல்ல விளை நிலம் !”
தன் நிலை தெரியாமல் துள்ளி ஓடினார்;
மண் ஆசையால் மதி இழந்த மனிதர் .

கிளம்பிய இடத்திற்கே திரும்பினால் தான்,
கிடைக்கும் தான் சுற்றி வந்த நிலபுலன்கள் .
கதிரவன் மேற்கில் இறங்குவது கண்டு,
உதிரம் வற்றும்படி மிகவும் வேகமாக;

மூச்சுத் திணற, கண்கள் தெறிக்க, நா வரள,
உடல் நோக ஓடிக்கொண்டே இருந்தார்.
சூரியன் மறைந்து விட்டான் , இவரும்
சுருண்டு விழுந்தார் வெறும் பிணமாக!

மனிதன் நிற்க ஓர் அடி நிலம் போதும்,
மனிதன் இருக்க இரண்டு அடி நிலமும் ,
அவன் கிடக்க ஆறு அடி நிலமும் தேவை;
அனைவரும் அறிவார் இவ்வுண்மையினை.

இன்னமும் வேண்டும் என்று நினைத்து,
இன்னுயிர் போகும்படி பேராசையுடன்;
மாங்கு மாங்கென்று அங்கே ஒடுவனேன்?
மனிதன் தன் இன்னுயிரை விடுவானேன்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
#42. பருந்தும், பண்டிதரும்!





உயர, உயரப் பறக்கும் பருந்துக் கூட்டம்,
உயரத்தில் இருக்கின்றனர் கற்ற பண்டிதரும்;
மெத்தப் படித்துக் கற்றவர் சிலருக்கு,
சித்தத் தூய்மை ஏன் ஏற்படுவதில்லை?

உயர, உயரப் பறந்த போதிலும் ஒரு,
பருந்தின் பார்வை தரையின் மீதே!
உண்பதற்கு ஏதேனும் உள்ளதா என்றே,
பார்த்து ஆராயும் அது மேலிருந்தபடியே.

பண்டிதர் சிலர் தம் மேதா விலாசத்திற்கு,
கண் கவர் சன்மானம் என்ன கிடைக்கும்,
என்றே சிந்தித்து இருப்பார் எப்போதும்,
ஒன்றிய மனதோடு சிந்தியார் ஈசனை!

“எத்தனை பேரை பேச்சால் வெல்லலாம்?
எத்தனை பேரை வாதத்தில் மடக்கலாம்?
எத்தனை பேருக்கு பாடம் சொல்லலாம்?
எத்தனை ஊருக்கு பயணம் செல்லலாம்?”

பார்த்தபடி இருப்பார்; இறைவனை நாடார்;
பற்றுதல் ஒழியார்; பக்தியும் கிடையாது; .
பக்தி இல்லாமல் முக்தியும் கிடைக்காது.
படிப்பும் அவர்க்கு ஒரு வெறும் சுமையே!

எட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
எத்தனை கற்றாலும் தன்னடக்கத்துடன்,
அனைத்தும் இறைவன் கருணையே என
நினைப்பவரே மனத் தூய்மை அடைவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
They come in our life,
to disapperar
unable we are to say
when and where
an innocent wish we bear
that will meet again in future near
what sorrows they offer
or its just confusion of ours
to find a breakthrough
we have to wait though
for less or more time
in shadows and sunshine
and when it will be got
the same which we thought
to make our lives happy
one day they will be back
and will give us peace
which we now most lack.
 
Hopes and fears.( # 79 originally by hoover polished and presented)

They enter our mundane lives,

Only to completely disappear!
Like the bees entering their hives,
None can tell when and where!

An innocent wish we cherish,

That may bear fruit or perish;
What sorrows they might add?
And burden the heart already sad!

To find a real break through,

We will have to wait though;
May be for less or more time,
In dark shadows or day time!

When it will be again got,

The thing which we had sought;
Will make our lives very happy,
Following us like a little puppy!

Peaceful days will be back,

Which we now mostly lack;
Let us wait full of hopes,
Till that lucky day pops.
 
Last edited:
# 43. #43. எல்லோரும் ”டெல்லர்களே”!





கத்தை கத்தையாய் பச்சை நோட்டு,
கலகலக்கும் நாணயக் கூட்டு,
இவைகள் அளிக்கும் உற்சாகம் ,
இனிமை, அருமை, பெருமை, உண்மை !

தேடித் தேடி பொருள் ஈட்டி,
ஓடி ஓடி அதைப் பெருக்கி,
நாடி நாடிச் செலவுகள் செய்து,
கூடிக் கூடி இன்புறுகின்றோம்!

உலகில் வரும்போது வெறுங்கை,
உலகை விட்டு செல்லும்போதும் அதுவே!
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்,
சேர்ந்து வராது செல்லும் போது!

எத்தனை அழகிய வீடோ, மனையோ,
எத்தனை சிறந்த உடையோ, நகையோ,
எத்தனை அதிக பணமோ, காசோ,
எத்தனை செல்வச்செழிப்போ, களிப்போ,

செல்லும் போது உடன் வராது ஒரு
செல்லாக்காசு கூட! நாம் சேமிக்கலாம்;
செல்வத்தை கொடுக்கலாம் வாங்கலாம்;
செலவுகள் செய்து மனம் மகிழலாம்!

வங்கிப் பணம் எல்லாம் “டெல்லர்” வசம்,
வங்கியினுள்ளே இருக்கும் வரையில் தான்.
வெளியே அவர் செல்லும் போது, ஒரே ஒரு
வெள்ளிப் பணமாவது அவர் கூட வருமா?

ஆம், நாம் எல்லோரும் டெல்லர்களே!
ஆனால், நாம் உலகத்தின் டெல்லர்கள்.
உலகமே ஒரு பெரிய வங்கி ஆவதால்,
உயரிய மனிதர்கள் அதன் டெல்லர்களே!

அவர்கள் வங்கிப் பணத்தை உரிமையுடன்
ஆளுவது போலவே நாமும் உரிமையுடன்
ஆளலாம் நம்மிடமுள்ள செல்வதை! நம்
ஆயுள் உள்ளவரை தான், பிறகு இல்லை!

நல்லதையே நினைத்து, நன்மையே செய்து
செல்லும் வழியை நல்வழி ஆக்குவோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம்,
வானுறையும் தெய்வத்துடன் ஒன்றுவோம்.

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.


 
#44. அருகிலும், தொலைவிலும்.





சிறிய கல்லை கண் அருகில் வைத்தால்,
சிறந்த உலகம் மறைந்தே போய்விடும்;
தள்ளி நின்று கல்லைக் காண முயன்றால்
தட்டுப்படாது அச்சிறுகல் நம் பார்வைக்கு!

மனிதனின் மனமும் இதைப்போன்றே,
மாறி மாறி அனைத்தையும் அறிந்து கொள்ளும்;
அருகில் இருந்தால் குறை மிகப் பெரிது,
ஆகாசத்தில் இருந்தால் தெரியவே தெரியாது!

மரம், புல், பூண்டு, புதர்கள் என்று பலவாறு,
மாறுபட்டுக் காட்சி அளிப்பவை எல்லாம்,
மலை உச்சியில் நாம் நின்று பார்த்தால்,
மனத்தை மயக்கும் வெறும் பச்சை வெளியே.

உயரும் போது உள்ளமும், பார்வையும்,
உயர்வடைந்து நன்கு விரிந்து செல்லும்;
குறுகிய மனம் கொண்டால் வட்டம்,
குறுகி மிகச் சிறியதாக ஆகி விடும்.

அருகில் இருக்கும் போது மனிதரின்
அருமை பெருமைகள் தெரியாது, ஆனால்
உருவெடுக்கும் ஒரு விஸ்வ ரூபமாகவே
உள்ள சிறு குற்றம் குறைகள் எல்லாம்!

அருகில் உள்ளதை வெறுத்துத் தவிர்க்கவும் ,
தொலைவில் உள்ளதை விரும்பி விழைவதும்,
அறிந்துள்ளது நன்றாய் மனித மனம், இதை
அறிவோம் நன்கு, அறிவுள்ள எல்லோருமே.

விரும்பிப் போனால் அது விலகிப்போகும்,
விலகிப் போனால் அது விரும்பி வரும்!
கொஞ்சினால் மிஞ்சுவதும், மாறாய்
மிஞ்சினால் கொஞ்சுவதும் மனித இயல்பே.

பார்வையின் வட்டத்தை பெருக்குவோம்,
பாரினில் உயர்ந்ததை உள்ளுவோம்,
பரந்த மனத்தால், பரந்த பார்வையால்
சுரக்கும் இன்பமே பிறந்த பூமியில்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#45. யானையும், பானையும்!





அரச சபைக்கு அனைவரும் வந்தபின்,
அவசரமாக வரும் அறிஞர் ஒருவரை,
அரசன் கேட்டான், “ஏன் நீர் எப்போதும்
சரியான சமயத்துக்கு வருவதில்லை?”

அறிஞர் கூறினார் தன் பக்க நியாயத்தை,
“சிறு குழந்தை ஒன்று, தான் செய்யும் பல
குறும்புகளால் என்னைப் பாடு படுத்தும்,
வேறு வழி இல்லை! நேரம் ஆகி விடும்”.

“இத்தனை அறிவும் ஞானமும் உடைய,
சித்தனைப் போன்ற உம்மால் கூட, ஒரு
சிறு குழந்தையைச் சமாளிக்க இயலாதா?”
சிரித்துக் கொண்டே கேட்டான் அரசன்.

“நீங்களே பார்த்தால் தான் நம்புவீர்கள்.
நாளையே அந்தச் சிறு குழந்தையை
நானே இங்கு அழைத்து வருவேன்”,
நவின்ற படியே மறுநாள் வந்தார்!

குழந்தைக்கு அரசரைப் பார்த்த குதூகலம்;
குதித்து விளையாடிய படியே கேட்டது,
“எனக்கு ஒரு பெரிய யானை வேண்டும்!”
யானை வந்து நின்றது ஒரே நொடியில்!

மீண்டும் குழந்தை கேட்டது இப்போது,
“மண்ணால் செய்த பானை வேண்டும்!”
நொடியில் வந்தது ஒரு பெரிய பானை.
நீடித்த மகிழ்ச்சியில் மன்னன் இருக்க,

யானையையும், பானையையும் பார்த்த
குழந்தை சொன்னது அரசனிடம் அப்போது,
“யானையைத் தூக்கி இந்தப் பெரிய
பானையில் இப்போதே போடுங்கள்!”

யாரால் முடியும் இச் செயலைச் செய்ய?
யார் என்ன காரணம் சொல்லியும் கேளாமல்;
காலையும், கையையும் வேகமாக உதைத்துக்
கலவரம் செய்தது அச் சிறு குழந்தை.

இப்போது புரிந்தது அந்த அரசனுக்கு,
இவ்வுலகு அஞ்சும் அரசனானாலும்,
எல்லாம் செய்ய வல்லவராக இருந்தாலும்,
எல்லாமும் எப்போதும் செய்ய முடியாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



 
respected Ramaniji,
you alwayas polishes my poems and provide them a new glitter.
I must say that the letest attempt is just excellant.
how easily we place
in their hands
to ourselves.
we raly on
leaving our own
their intellect
without thinking if it is
wrong or correct
they may be anyone
statesman, scientists or doctor
but surely few of them are enclined
towards an ethical character
as they are also made of
bones and flesh
with envies and wish
and affinity of cash
who will teach them
rules of a fair game
with some humanity
and earnign a good name
they are societys cream
now become a concern grim
forgotten morals
and full of whim
It musbe known
that they are not soverign
and manifest will of
a power most supreme
someone should advice them
that, for him,It is all same
a trivial stone or a prestigious gem
god is his name
unitverse is his domain
uniquely everywhere
he alwais reign.
 
# 83 originally by hoover polished and presented.

Pebbles and diamonds.


How easily we do place,
Ourselves in their grace!
Our own intellect we give up,
And rely on their back up!

Without a single thought,
Whether it's wrong or right;
It might be just any man,
A scientist or a statesman.

But few of them are really bent,
Towards an ethical conduct,
As they are no more than
A bag of flesh and bone!

With jealousy and a crush,
And an affinity only for cash;
Who will really teach them
The rules of a fair game?

Endurance and humility,
Forbearance and credibility;
And for earning a good name,
As they form the society's cream!

Now it's a concern grim,
It is too difficult to trim,
A life full of whim and fancies,
Morals dried up like pansies.

It must now be made known,
That they are not sovereign;
As they are no more a cream,
To The Power Most Supreme!

Someone should advise them,
Since for Him all are the same,
A pebble found on the beach,
Or a diamond beyond our reach!

He is the one real master,
His opinions only really matter;
No one can question His reign,
In His vast, infinite domain.


 
Last edited:
#46. பள்ளமும், வெள்ளமும்!





முதிர்ந்த கதிர் தலை சாய்ந்திருக்கும்;
முதிராத பதர்கள் வானம் நோக்கும்.
நிறைந்த எடைத்தட்டு கீழே செல்லும்;
குறைந்த எடைத்தட்டு மேலோங்கும்.

கனிந்த மரக்கிளை பணிந்திருக்கும்;
கனி இல்லாதது விறைத்து நிற்கும்.
கனமுடைய பொன் நீரில் மூழ்கும்;
கனமில்லாத மரம் நீரில் மிதக்கும்,

பண்புள்ளவர்களே பணிவுள்ளவர்கள்;
பணிவுள்ளவர்களே பள்ளம் போன்றவர்.
பள்ளத்திலே தான் வெள்ளம் தங்கும்;
வெள்ளம் பாய்ந்துவிடும் மேட்டிலிருந்து.

குருவின் உபதேசங்கள் வான் மழைபோல,
குறைவின்றிச் சேரும் எல்லோரையுமே;
உள்ளத்தில் உபதேச மொழிகள் உறையும்,
பள்ளம் போல அது பணிவாக இருந்தால்!

வெள்ளம் போலப் பாய்ந்து உபதேசம்
வெளியேறும், உள்ளம் ஒரு மேடானால்.
மேட்டு நிலம் வயலாகாது; அது வரப்பே.
மேன்மையான வயல் பள்ளமானதே!

பணிவும் வேண்டும்; துணிவும் வேண்டும்;
வேண்டாம் அகந்தையும், ஆரவாரமும்!
பணியும் நாணல் புயலைத் தாங்கும்.
பணியாத மரமோ புயலில் வீழும்.

உள்ளத்தை நன்கு பணிவாக்குவோம்;
வெள்ளம் போல வரும் நன்மொழிகளை,
கள்ளம் இன்றிச் சேகரித்து வைத்து நலமுற,
பள்ளம் போல நாம் ஆகிப் பயனுறுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



Cancel reply
 
#47. நாற்றமும், நறுமணமும்!





அடிக்கும் அலைகடலில் படகேறி,
பிடித்து வந்த மீன்களை எல்லாம்,
எடுத்துச் சென்று அலைந்து திரிந்து,
கொடுப்பார் செம்படவப் பெண்டிர்.

இருண்டு, கறுத்து, உறுமும் வானமும்,
திரண்டு பொழியும் மேகமும் கண்டு,
இருக்க நல்ல இடம் தேடி ஓடியவர்க்கு,
இருக்க இடம் தந்தான் ஒரு பூக்காரன்!

மல்லிகை, முல்லை, ரோஜா மலர் என,
மணக்கும் பூ வகைகளை வைத்திருந்த,
அறையினை அளித்தான் அவர்களுக்கு;
அறையில் அமர்ந்தனர் அப்பெண்கள்.

“என்ன நாற்றம் தாங்கவில்லையே!”
என்று முதலில் ஒருத்தி கூற, “ஆமாம்,
எனக்கும் மூச்சு முட்டுகிறது பூ நாற்றம்!”
என்று மற்றவர்களும் கூறலாயினர்.

உள்ளவர்களில் அறிவு மிகுந்த பெண்
உள்ளத்தில் உதித்தது ஒரு எண்ணம்;
மீன் கூடையை எடுத்து முகர்ந்தால்,
மீன் வாசனையில் பூ நாற்றம் போகும்!

அனைவரும் தம் தம் மீன் கூடைகளை,
ஆசையுடன் எடுத்து முகர்ந்து கொண்டு,
மழையும் நின்று மழை மேகங்களும்,
மறையும் வரையில் காத்து இருந்தனர்.

மணமும், நாற்றமும் அவர் அவர்களின் ,
மனத்தை பொறுத்ததே அறிந்திடுவோம்!
பழகிய நாற்றமும் நறுமணமே ஆகும்;
பழகாத நறுமணமும் நாற்றமே ஆகும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#48. குடும்பமா? குழப்பமா?


கூட்டுக் குடும்பம் என்னும் அழகிய ஆலமரம்
பட்டுப்போய் விழுகின்ற அவலம் கண்டீர்!
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று
கூவினாலும் காதில் விழுவதே இல்லை!

ஒருவர் ஊதியத்தில் வாழ இயலாமல்,
இருவரும் செல்வர் வெளியே பணி புரிய.
பூட்டிய கதவுகளால் வரவேற்கப்படும் சிறார்,
மாட்டிக் கொள்ளுவர் கெட்ட பழக்கங்களில்.

என்ன செய்தாலும் தெரியப் போவதும் இல்லை;
என்ன என்று கேட்க யாருக்கும் நேரமும் இல்லை;
தானே தனிக்காட்டு ராஜா என்று இருப்பதனால்,
தன் மனம் போனபடி எல்லாம் நடக்கலாமே!

கணவன் மனைவியர் இடையே தோன்றும்
பிணக்குகள், சில பல சிறு பிரச்சனைகள்.
பெரிவர்கள் இருந்தால் பாங்காய் பேசி,
சரி செய்து விடுவார்கள் பிரச்சனைகளை.

வளர்ந்து வரும் விவாஹரத்துக்கள் வரை,
வளர விடமாட்டார்கள் சிறு விவகாரங்களை.
வளரும் குழந்தைகளை மிகவும் நோகடிப்பது,
தளரும் தன் தாய் தந்தையரின் உறவல்லவா?

தன் வீடும், கூடும் காலியாகி விட்டதால்,
தனியே தவித்து, வெறுமையில் வாடி;
மனோ வியாதிகளும், உடல் வியாதிகளும்,
மாறி மாறித் தாக்குவதால் துவண்டு போய்;

வாழ்வே சுமையாகிவிட்ட வயோதிகர்கள்,
வாழ்வில் எதிர்நோக்குவது ஒன்றே ஒன்று.
தம் வாரிசுகளின் வாரிசுகளுடன் கூடி,
தம் மீதி நாட்களைக் கழிப்பதே ஆகும்!

மனோ வியாதிகள் உற்பத்தி ஆகாது.
மறந்தே போய்விடும் உடல் வியாதிகள்.
மாசற்ற மழலைகளின் ஸ்பரிசத்தால்
மாறியே போய்விடும் அத்தனையுமே!

அனைவருக்குமே நன்மை பயக்கும் அந்த
அருமையான வாழ்க்கை முறையை மீண்டும்
அரங்கேற்ற வேண்டாமா? ஆராய்ந்து கூறுவீர்!
அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டாமா?

“கூட்டுக் குடும்பத்தில் குழப்பமே மிஞ்சும்!”
கூற்றில் உண்மை கடுகளவும் இல்லை.
தனிக் குடும்பத்தில் தகராறுகள் இல்லையா?
தனி நபர்கள் அதில் தலையிடுவது இல்லையா?

கூடி வாழும் போது பொறுமை வளரும்;
பொறுப்பும், சகிப்புத் தன்மையும் வளரும்;
பகிர்ந்து உண்ணும் நல்ல பண்புகளும்,
பரந்த மனப்பான்மையும் ஓங்கி வளரும்.

கூடி வாழுகின்றன கொடிய விலங்குகள் கூட;
கூடி உண்கின்றன கரிய காகங்களும் கூட;
கூடி வாழ்கின்றன எறும்புகளும், தேனீயும்;
கூடி மனிதர்கள் வாழ்வது எப்போது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#49. அகமும்,முகமும்!





அகத்தின் அழகு முகத்தில் தெரியும்;
முகத்தின் அழகை விடவும் அதிகமாக!
முயற்சி செய்தாலும் மறைக்க முடியமா
முன்னே வந்து நிற்கும் அந்த அக அழகை?

அசலும், நகலும் என்று வேறுபடுத்தி
அறியவே இயலாத வண்ணம் இன்று,
அற்புதமான பொருட்கள் பலவற்றை
அழகுத் துறையில் நாம் கண்டிடலாம்!

பட்டாம்பூச்சிகள் போல இறகடிக்கும்;
போலி கண் இமையின் நீள் நுனிகள்!
நாணம் கொண்ட ஒரு சிறு பெண் போல,
நாளெல்லாம் திகழும் இரு கன்ன நிறம்!

இருப்பதை மறைத்து வரையப்பட்ட,
வில் போன்ற நீண்ட புருவங்கள்!
கனிந்த ஆப்பிள் பழம் போல் ஒரு
கணத்தில் உருப்பெறும் இரு உதடுகள்!

தோலின் நிறத்தையே மாற்றும் சில
தோல் சலவை திரவங்கள், பொடிகள்;
மொழு மொழு எனத் தோன்றிடத் தேவை,
மெழுகு வகைகள் சிலவற்றின் சேவை!

இலை போன்ற மிகத் தட்டையான வயிறு;
இல்லாதது போன்ற ஒரு உடுக்கை இடுப்பு;
நகங்களுக்கும் உண்டு பல நிறப் பூச்சு,
நாளெல்லாம் இதே மூச்சு, இதே பேச்சு!

மாறிக் கொண்டே இருப்பதன் பெயர் தான்
மாண்பு மிகு நம் ‘சரீரம்’ என்று அறிவீரா?
மாறிக் கொண்டே இருக்கும் ஒன்றுக்காக
மனிதனின் பொருள், நேரம் வீணாகலாமா?

உடல் கிடைத்தது நல்ல சாதனை புரியவும்,
உலகம் உய்ய நல்ல சேவை செய்யவுமே!
உழைத்து, உடலைக் காட்சிப் பொருளாக்கி,
உலகத்தோருக்கு காண்பிப்பதற்கு அல்ல!

மணி வெளுக்க சாணை உண்டு,
மனம் வெளுக்க வழியும் உண்டோ என
மனம் வெதும்பிப் பாடுகின்றார் அல்லவா
மனம் கவர்ந்த தமிழ்க் கவி பாரதியார் ?

மனம் வெளுத்தால் நம் அகம் அழகுறும்.
முகத்தில் தெரியும் அந்த அகத்தின் அழகு!
முயற்சிகள் எத்தனை செய்த போதிலும்,
முக அழகு என்றும் அக அழகை வெல்லாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#50. சொல்வதைக் கேட்கணும்!





முதுமைப் பருவத்தில் சோதனையின்றி வாழப்
புதுமை வழி உண்டு; அறிந்து கொள்வோம்!

“சொல்வதை மட்டுமே கேட்கணும்!
கேட்டதை மட்டுமே சொல்லணும்!”

எளிதாகத் தோன்றும் இவை இரண்டும்
எளிதல்ல என்பதை அறிந்து கொள்வோம்!

பிணைப்பே இல்லாது இருந்தால், நம் மேல்
பிணக்கம் கொண்டுவிடுவார் விரைவிலேயே!

என்ன என்ன என எப்போதும் கேட்டிருந்தாலோ,
எள்ளளவும் பிடிக்காது போய்விடும் யாருக்கும்!

நம் வயது, அனுபவத்தை மதித்து எப்போது
நம்மிடம் வழி கேட்டாலும், சொல்லணும் தப்பாது!

தொட்டும் தொடாமல், தாமரையிலை நீர் போல
பட்டும் படாமல் வாழ்ந்திடப் பழக வேண்டும்.

வாழும் நல்வழி இது என்று உணர்ந்து, இனி
வாழும் நாட்களை எளிதாய் அமைத்திடுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



 
#51. உப்பும், உறைப்பும்!





பெற்ற பிள்ளைகளைப் பேணி வளர்ப்பது
பெற்றோர் கடமை, பிறந்தவர் உரிமை;
பேணி வளர்த்ததற்குக் கூலி கேட்டால்,
பெற்றோர் என்ற பெரிய பெயர் எதற்கு?

பெண்களைப் பூட்டி வைத்த காலம், இன்று
போன இடம் தெரியவில்லை! உண்மை.
ஆண்களுக்கு நிகராக இவர்கள் உலகை
ஆள்வதும் இன்று நாம் காணும் உண்மை.

படிக்க வைத்தவர்களுக்கு நன்றியுடன்
பிடித்தது எல்லாம் செய்து கொடுப்பார்;
அடுத்தவன் மனைவியாக ஆன பின்பும்
கொடு கொடு என இவர்கள் படுத்தலாமா?

“வாழு, வாழ விடு” என்பதற்கு இணங்க
வாழ்த்தி அவளை வாழ விடவேண்டாமா?
வாழச் சென்றவளை வலுக்கட்டாயமாக
வம்பில் மாட்டுவதை வாடிக்கை ஆக்கலாமா?

கட்டிக் கொடுத்த பெண்ணிடம் இருந்து,
கட்டுச் சோறு கூட வாங்கமாட்டார்கள்!
கட்டுப்பட்டிகள் எனக் கூறி நகையாதீர்,
கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த அவர்களை.

தாயும் சேயும் ஆனாலும் அவர்கள்
வாயும் வயிறும் வேறு வேறு தானே!
தாய்க்காகச் சேய் உண்ண முடியுமா?
தாயின் பசிதான் தீர்ந்து போகுமா?

ஆட்டி வைக்கும் பெற்றோர்களை
அடக்கத் தெரியாமல், பெண்கள்
ஆட்டுக் குட்டி போலக் கணவனை
ஆட்டி வைக்கும் கொடுமை காணீர்!

யாருக்கும் வெட்கம் இல்லைதான்!
யாரிடமும் யாசிக்கத் தயாரானவர்கள்
யோசிக்க வேண்டும், இப்படியும் உலகில்
சுவாசித்து நாம் வாழ வேண்டுமா என்று.

ஒட்டுண்ணியாக மாறும் பெற்றோர்கள்,
உப்பு இட்டு உணவு உண்பது நலம் தரும்.
ஓரம் கட்டப்படும் கணவன்மார்கள் சிறிது
உறைப்புடன் உணவு உண்பது நலம் தரும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Dear Srimathi Visalakshi Ramani,

These are very original, personal thoughts, I must say. Hope you find a publisher soon.

Regards,
KRS
 
Dear Mr. K.R.S.

I am really happy to get your feedback on my Tamil Poems-as I had requested you some time ago!

I think a lot and mostly get into trouble for not being a second fiddle or jalra :(

I wish your prediction comes true with a slight change!

The publisher should find me - as I have no plan of finding one! :)

But if God wishes it to happen, it will surely happen!

You share my only brother's initials! He is a great doctor and writer of many books on Medicine and Medical ethics of international fame.

"Trick or Treat" is the best known book in India and abroad by my brother Dr.K.R.Sethuraman.

with warm regards,
V.R.
 
Last edited:
Dear Srimathi Visalakshi Ramani Ji,

I googled your brother. Looks like yours is a very illustrious family. I know many medical graduates from JIPMER and let me pass along any interesting tid bits about him as the Dean there.

By the way, what does the initial 'K' stand for? Is it for your village?

Even if a writer writes for herself, I think she has the responsibility to make that available for the wider world. Especially if the writer is an accomplished poet. Just my opinion.

Namaskarams,
KRS

P.S.: Sorry I have missed your earlier request for comments from me.
 
dear Mr. K.R.S,

Thank you for your mail. I feel honored to receive such a mail from a gentleman veteran like you.

My brother studied in Jipmer and was working there till recently when he was invited to become the dean of a Medical University in Malaysia. He is in Penang now.

He is famous for his Integrity, Originality, Sense of humour and Versatility. He writes, draws, paints and plays Mruthangam excellently.

It is by God's grace that I am born in such an illustrious family. I did not want to shine in borrowed feathers. That is why I did not disclose it earlier :)

My father was a distinguished doctor too. He was distinguished right from his childhood as he had his entire education right up to M.B.B.S, on Merit Scholarship in Burma.

I want me thoughts to reach out and be read by thousands of people. That is why I have created my blog at <visalramani.wordpress.com>

All my poems are there for posterity! I am adding a fourth section with new poems now.

You may read them at leisure and send me your valuable feedback. Now I feel that you are as close to me as my own brother K.R.S :)

You may find my paternal grandfather's original musical compositions in the
Music and Dance section of this forum, in "Compositions of Sri K.R.Narayanan".

with warm regards,
V.R.

 
#52. மண்புழுவும், ஒட்டுண்ணியும்.





மண்புழுவும் ஒட்டுண்ணியும் ஒருபோல
மற்றவற்றைச் சார்ந்து வாழ்ந்தாலும்,
நன்மைகள் பல செய்யும் மண் புழுக்கள்;
நாசம் செய்துவிடும் ஒட்டுண்ணிகள்.

மண்ணை உண்டு வெளியேற்றி அதன்
மாண்பைப் பெருக்கும் மண்புழுக்கள்.
உள்ளே காற்றுப் புக வழிகள் செய்து,
உழவனின் நண்பன் எனப் பெயர் பெறும்!

ஒட்டுண்ணிகள் ஒட்டிப் பிழைப்பவை;
ஒட்டிக்கொண்ட இடத்தையே நன்றாக
உறிஞ்சி உறிஞ்சி அவ்விடத்தில் உள்ள
உயிர்ச் சத்தையே அழித்து விடுபவை.

மனிதரிலும் உண்டு இவ்விரு வகை,
மனத்தையே தாக்கும் இவ்வுண்மை!
சேர்ந்த இடத்தை சிறப்புறச் செய்பவர்,
சேர்ந்த இடத்தை நாசம் செய்பவர் என!

தன் உயிர் அளித்தேனும் காப்பர் சிலர்
தனக்கு இடம் அளித்த பெருமக்களை;
தான் உயிர் வாழ வேண்டித் தன்னைத்
தாங்குபவரையே அழித்துவிடுவர் சிலர்.

சேர்க்கும் முன்பே நன்கு சிந்தியுங்கள்,
சேர்த்தபின் ஏதும் செய்ய இயலாது!
சேர்க்கப் போவது மனித உருவில் உள்ள
சிறந்த மண் புழுவா அன்றி ஒட்டுண்ணியா?

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.



 
53. அகர வரிசைப் பாட்டு.





அன்பர் உள்ளம் உறைபவனே வா வா கண்ணா;
ஆலிலை மேல் பாலகனே வா வா கண்ணா.

இடையர் குலத்திலகமே நீ வா வா வா கண்ணா;
ஈரேழ் உலகும் காப்பவனே வா வா கண்ணா.

உலகை உண்டு உமிழ்ந்தவனே வா வா வா கண்ணா;
ஊதும் குழல் கை அழகா வா வா கண்ணா.

எதுகுலத்தில் உதித்தவனே வா வா வா கண்ணா;
ஏழுமலை ஆண்டவனே வா வா கண்ணா.

ஐவர்களின் நண்பனே நீ வா வா வா கண்ணா;
ஒளி விடும் நடனாகரனே வா வா கண்ணா.

ஓங்கி வளர்ந்த வாமனனே வா வா வா கண்ணா;
ஒளஷதமே ஆரமுதே வா வா கண்ணா.

ஆடி வா நீ ஓடி வா நீ வா வா வா கண்ணா;
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா கண்ணா.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி




 
#54. ராமனும், கண்ணனும்.



ராமனும் கண்ணனும் அவதாரங்களே!
ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்களே!

சீரிய மனையினில் பிறந்தவன் ராமன்;
சிறைச் சாலையினில் பிறந்தவன் கண்ணன்.

இளமையில் வளமாய் வாழ்ந்தவன் ராமன்;
இளமையில் ஒளிந்து வாழ்ந்தவன் கண்ணன்.

அரசிளங் குமரன் ராமன் என்றால்,
ஆவினம் மேய்ப்பவன் கண்ணன்.

மிக மிக குறைவாய் பேசுவான் ராமன்;
மிக மிக அதிகம் பேசுவான் கண்ணன்.

சத்தியம் ஒன்றே பேசுவான் ராமன்;
சத்தியம் என்பதே கண்ணன் பேச்சு!

ஜயஜய எனவே வாழ்த்தினர் ராமனை;
ஜெயித்துக் கொல்ல முயன்றனர் கண்ணனை.

நண்பர்களை என்றும் கை விடான் ராமன்;
நகர்ந்து சென்று கொண்டே இருப்பான் கண்ணன்.

பெண்களைக் கண்டால் விலகுவான் ராமன்;
பெண்களைக் கண்டால் விரும்புவான் கண்ணன்.

கௌரவமாய் நின்று பழகுவான் ராமன்;
கூடிக் குலாவி மகிழ்வான் கண்ணன்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ராமனுக்கு;
தன் சொல்லே உயர்ந்த மந்திரம் கண்ணனுக்கு.

துயர் வரும் போது துடித்தான் ராமன்;
துயர் வரும் போது சிரித்தான் கண்ணன்.

மனிதன் போலவே வாழ்ந்தான் ராமன்;
மாயங்கள் பலப் பல செய்தான் கண்ணன்.

மற்றவர் கருத்தை மதித்தான் ராமன்;
மற்றவர்க்கு கீதை போதித்தான் கண்ணன்.

ராம ராஜ்ஜியம் எனப் புகழ்ந்து பாடினாலும்,
கிருஷ்ண சாயுஜ்யம் என்றே புகல்கின்றார்!

ராமன் செய்ததை நாம் பார்த்துப் படிக்கணும்;
கண்ணன் சொன்னதை நாம் கேட்டுப் படிக்கணும்.

ராமனும், கண்ணனும் எத்தனை எத்தனை
மாறுபட்டாலும், அன்றி வேறுபட்டாலும்,

இருவருமே நம் பாரதத்தின் தூண்கள்!
இருவருமே நம் அனைவரின் கண்கள்!

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
 
#55. இதுவும் ஒரு வழிப்பாதையே!





ஒரு வழிப்பாதை, இரு வழிப்பாதை,
புதியதன்று, மிக மிகப் பழையதே!
“எல்லா பாதையும் செல்லும் ரோம் நகர்”,
என்பார் முன்பு சரித்திரவாணர்.

எல்லாப் பாதையும் செல்லும் கண்ணனிடம்,
எந்த பாதையும் திரும்பாது அங்கிருந்து!
தாய் போல் வந்த மாயப் பூதனையும்,
தன் உயிர் விட்டாள், திரும்பவில்லை!

வேகத் திகிரியாகச் சுழன்று வந்தவன்,
தாமரைத் தாள் பட்டுச் சூரணம் ஆனான்!
புயல் போல் கண்ணனைத் தூக்கிப் பறந்தவன்,
புழுதிக் குவியலாய்க் கீழே விழுந்தான்!

வந்தான் வத்சாசுரன் அழகிய கன்றாய்!
வந்தவன் அசுரன் என்று அறிந்ததும்,
கால்களைப் பற்றி, சுழற்றி, எறிந்து,
காலனாய் மாறினான், கார் வண்ணன்!

வானளாவும் ஒரு பறவை உருவுடன்,
வஞ்சித்து நின்றான் பகாசுரன் – அவன்
வாயினைப் பிளந்து, வானுலுகுக்கு
வழி நடச் செய்தான் நம் கண்ணன்!

மலை அளவு உயர்ந்த மலைப்பாம்பாக,
மண்ணில் கிடந்தான் கோர அகாசுரன்.
மயங்கி வாயினுள் நுழைந்த சிறுவரை,
மனம் கனிந்து காத்தான், மாயக் கண்ணன்!

வந்த வேகத்தில் மறைந்து போயினர்,
தேனுகன், பிரலம்பன், கேசி, அரிஷ்டன்!
வந்தவர்களைக் காணோம் என்று,
தேடினாலும் காண முடியாது எங்குமே!

வைரிகள் தோற்று, வெந்து, மடிந்து,
ஒரு வழி பாதையில் போவது போல,
பிரியர்கள் கண்ணனைப் பிரிய முடியாமல்,
ஒரு வழி பாதையில் செல்வர் அவனிடம்!

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”,
என்று இறைவனைப் புகழ்வது போலச்
“சென்றவர் மீண்டிலர், மீள்பவர் சென்றிலர்”,
என்ற இதுவும் ஒரு வழி பாதையே!

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி



 
#56. பக்தியும், பகைமையும்.





பக்தியும், பகைமையும் மாறுபட்டாலும்,
முக்தியை அளிப்பதில், அவை சரிசமமே.

அவை இரண்டும் எதிர்ப் பதங்களே – ஆயினும்
அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

அதீத விருப்பம் பக்தியில் முடியும்;
அதீத வெறுப்போ பகையில் முடியும்!

கண்ணன் மேல் கொண்ட பக்தி பெரியதா?
கண்ணன் மேல் கொண்ட பகைமை பெரியதா?

நூறு பிறவியில் கொள்ளும் பக்தியும்,
மூன்று பிறவிகளில் கொள்ளும் த்வேஷமும்,

சரிசமம் ஆகும் தராசுத் தட்டில்;
சரிதான் மாயக் கண்ணன் கணக்கு.

நாம் விரும்புபவர்களை, அவ்வப்போது
நாம் விருப்புடன் கொஞ்சம் நினைப்போம்.

நாம் வெறுப்பவர்களையோ, நெருப்பென
நம் நினைவில் இடைவிடாது கொள்வோம்!

எப்படி நினைத்தால் என்ன கண்ணனுக்கு?
எத்தனை நேரம் நினைக்கிறோம் என்றே,

கணக்கு வைத்துக்கொண்டு மனம் கனிவான்;
கணக்கு முடிந்தவுடன், கருணை பொழிவான்.

பக்தியும், அன்பும் அடைவிப்பது போன்றே,
பயமும், பீதியும் அவனை அடைவிக்கும்.

“எப்படியோ என்னை நினைத்தாலே போதும்”,
என்றே கண்ணன் எண்ணுகின்றான் போலும்!

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன்
வேறு எப்படித்தான் எண்ண முடியும்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 
#57. கண்ணன் அருள்!





கண்ணன் என்றால் கருணையும், கனிவும்.
காண்போர்க்கெல்லாம் இனியவன் அவனே.
சாம, தான, பேத, தண்டம் என்று,
சாதுரியமாக அருள் புரிபவனே.

பக்தர்களைக் கொண்டருளும் அவன்,
பகைவர்களைக் கொன்றருள்வான்.
பார்ப்பதற்கு இரண்டும் வேறுபட்டாலும்,
பயனளவில் இவ்விரண்டும் ஒன்றே!

கொண்டாலும், கொன்றாலும், அவன்
கொண்டல் வண்ண மேனியுடன்,
கூடும் நற்பயன் தானே கூடிவரும்.
நாடும் நற்பயன் வேறென்ன உண்டு?

அன்று மடுவில் பொற்றாமரை பறித்து,
குன்று குடையாய் எடுத்த கோமானுக்கு,
கொடுக்க எண்ணிய யானை கஜேந்தரனை
கடித்து, துடிக்கச் செய்த முதலையை,

கருடாரூடனாய் விரைந்து வந்து, அந்தக்
கரியினைக் காத்து, முதலையைக் கொன்று,
கொண்டருளியும், கொன்றருளியும் அவர்க்கு
விண்ணுலகு அளித்தான், வேணு கோபாலன்.

வஞ்சனை செய்து கண்ணனை அழிக்க,
கஞ்சன் என்போன் மனப்பால் குடித்து,
குவலயா பீடம் என்ற குன்று நிகர்த்த
குவலயம் காணா மதக் களிற்றினை,

கொண்டு முடித்திட எண்ணம் கொண்டான்.
கொன்று முடித்தான் கண்ணன் களிற்றினை!
உயிருடன் உள்ள யானையின் தந்தத்தின்
உயரிய முத்துக்கள் ராதைக்கு பரிசு.

கிடைப்பதற்கரிய வானுலகப் பதவி,
கம்ச, சாணூர, குவலயா பீடத்திற்கு!
பக்தியால் கிடைக்கும் அற்புதப் பரிசு,
பகைமையால் கிடைப்பது விந்தை அன்றோ?

நவ வித பக்திகள் இறைவனை அடைய;
நன்மையே தரும் அவை ஒன்பதுமே!
கொண்டும், கொன்றும், அருளும் கண்ணன்,
கொண்டு செல்வான் நம்மை, பரமபதத்திற்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.




 

Latest posts

Latest ads

Back
Top