#28. விஷயமும், விளம்பரமும்.
இது ஒரு சிறந்த விளம்பர யுகம்!
எதை விற்பதானாலும் வேண்டும்,
கதை போன்ற ஒரு நீண்ட விளம்பரம்.
பொய்களில் மூன்று வகைகள் உண்டு;
அண்டப் புளுகுகள் , ஆகாசப் புளுகுகள்,
அறிவை மயக்கும் விளம்பரப் புளுகுகள்!
மணலை மலையாகக் காட்ட வேண்டுமா ?
பேனை பெருமாள் ஆக்கவேண்டுமா ?
பேனா செய்யும் இவ்விளம்பர மாயங்கள்!
தரம் இருந்தால் விளம்பரம் எதற்கு?
தரம் குறைந்த பொருட்களைத் தள்ளவே;
தரம் குறைந்த விளம்பரங்கள் தேவை.
“என்னிடம் தேன் உள்ளது” என்று
எந்த மலர் விளம்பரம் செய்தது ?
வண்டுகள் தேடி வரவில்லையா?
“என்னிடம் பழம் உள்ளது” என்று
எந்த மரம் விளம்பரம் செய்தது ?
கிளிகள் கொத்த வரவில்லையா?
பால் இருக்கின்றதென்று பசுவோ;
நூல் இருக்கின்றதென்று பஞ்சோ;
தோல் இருக்கின்றதென்று எருதோ;
எப்போதேனும் விளம்பரம் செய்யுமா?
தப்பாமல் நாம் தேடிச் செல்கின்றோமே.
விஷயம் இருந்தால், வேண்டாம் விளம்பரம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
இது ஒரு சிறந்த விளம்பர யுகம்!
எதை விற்பதானாலும் வேண்டும்,
கதை போன்ற ஒரு நீண்ட விளம்பரம்.
பொய்களில் மூன்று வகைகள் உண்டு;
அண்டப் புளுகுகள் , ஆகாசப் புளுகுகள்,
அறிவை மயக்கும் விளம்பரப் புளுகுகள்!
மணலை மலையாகக் காட்ட வேண்டுமா ?
பேனை பெருமாள் ஆக்கவேண்டுமா ?
பேனா செய்யும் இவ்விளம்பர மாயங்கள்!
தரம் இருந்தால் விளம்பரம் எதற்கு?
தரம் குறைந்த பொருட்களைத் தள்ளவே;
தரம் குறைந்த விளம்பரங்கள் தேவை.
“என்னிடம் தேன் உள்ளது” என்று
எந்த மலர் விளம்பரம் செய்தது ?
வண்டுகள் தேடி வரவில்லையா?
“என்னிடம் பழம் உள்ளது” என்று
எந்த மரம் விளம்பரம் செய்தது ?
கிளிகள் கொத்த வரவில்லையா?
பால் இருக்கின்றதென்று பசுவோ;
நூல் இருக்கின்றதென்று பஞ்சோ;
தோல் இருக்கின்றதென்று எருதோ;
எப்போதேனும் விளம்பரம் செய்யுமா?
தப்பாமல் நாம் தேடிச் செல்கின்றோமே.
விஷயம் இருந்தால், வேண்டாம் விளம்பரம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி