#58. காரண வாரணன்!
அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!
வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!
நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!
கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!
பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி படிய விளையாடுவான்.
பட்டுப்போல் குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும் வாரணம்!
அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின் காரணம்;
அவன் அருள் என்றும் நாம் கோரணும்!
அவன் திவ்ய பரி பூரணன்;
அவனே உயர் திரு நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!
எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான், இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!
வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!
நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!
கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!
பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி படிய விளையாடுவான்.
பட்டுப்போல் குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும் வாரணம்!
அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின் காரணம்;
அவன் அருள் என்றும் நாம் கோரணும்!
அவன் திவ்ய பரி பூரணன்;
அவனே உயர் திரு நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!
எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான், இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.