சிந்தனை தந்த இந்திர ஜாலம்
#010. பிரஹலாதன்
#010. பிரஹலாதன்
செந்தாமரை சேற்றில் வளர்ந்தாலும்,
வந்தனை செய்ய அவசியம் தேவை.
தாமரை மலரின்றி பூஜைகள் ஏது,
தாமரைக் கண்ணன் இறைவனுக்கு?
கர்வத்தில் உச்சியில் இருந்து கொண்டு
கடவுள் நானே என்று அறைகூவல் இட்ட
அரக்கர்களின் அரசன் இரண்யகசிபுவின்
அருமை மகனே பக்தப் பிரஹலாதன்.
மணி வயிற்றில் குடி இருந்தபோதே
மணிவண்ணன் மேல் பக்தி கொண்டு,
மாறாமல் உறுதியாக நின்று, இறுதியில்
மாதவனின் அருள் பெற்ற ஒரு குழந்தை.
பிஞ்சுக் குழந்தையாக இருந்த போதிலும்,
நஞ்சு கோப்பைக்கு அவன் கொஞ்சமும்
அஞ்சவில்லை; எடுத்து அருந்தினான்.
கெஞ்சவோ அன்றிக் கொஞ்சவோ இல்லை.
மலை உச்சியில் இருந்து உருட்டிய போதும்,
மன்னன் பட்டத்து யானை இடற வந்தபோதும்,
கல்லுடன் கட்டிக் கடலில் வீசப்பட்டபோதும்,
கனலில் இறங்கி நடக்கச் செய்தபோதும்,
ஹரியின் திருநாமத்தைத் தவிர வேறு ஏதும்
அறியவும் இல்லை, இயம்பவும் இல்லை.
ஹரி பக்தர்களைக் காப்பாற்றுவது அந்த
ஹரி பரந்தாமனின் கடமை அன்றோ?
இறுதியில் தன் பக்தன் வாக்கை மெய்ப்பிக்க,
வெறும் கல் தூணிலிருந்து தோன்றினான்,
தேவர்களும் காண அரும் தவம் இருக்கும்
தேவாதி தேவனான ஹரி நாராயணன்.
குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தையும்,
சிப்பியில் விளையும் நல்ல முத்தையும்,
சேற்றில் மலர்ந்த செந்தாமரையையும்
போற்றுவோம்; என்றுமே இகழ மாட்டோம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
#010. BHAKTA PRAHLAADH
Lotus flower may bloom in a slushy pond but we can’t do pUjA to the lotus-eyed Lord, without that flower. PrahlAd was the son of HiraNya Kasipu – who proclaimed himself to be the God.
Even while PrahlAd was in his mother’s womb, he developed a staunch and unwavering bhakti (devotion) towards Lord VishnU. It never diminished or wavered even when PrahlAd was subjected to dire threats and severe punishments for uttering the name
of Sri Hari.
When PrahlAd was asked to drink the deadly poison, he never begged for mercy nor was he frightened to drink it. Then he was pushed down from the top of a mountain. Later the king’s royal elephant was ordered to trample on his head.
PrahlAd was tied to a rock and thrown into the sea. He was pushed into a pit of roaring flames, by the orders of his foolish and jealous father. He never cried or shouted. The only word he kept repeating was the name of Sri Hari.
He knew that saving Hari’s devotees from all sorts of dangers was the responsibility of Hari himself! Just to prove that PrahlAd’s words were true, the God – to get a glimpse of whom even the dEvAs have to wait for a long time – appeared as narahari (the half lion-half man) from a mere stone pillar.
A precious gem may be thrown in the mud; but that does not diminish its value. A pearl may grow in an unsightly oyster; but it does not make it less precious. A lotus flower may bloom in mud; but that does not defile or degrade it. We all think that lotus is the best flower to be offered to God.
PrahlAd may be the son of a sinful king but that does not diminish his fame in any which way.