• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 12

12#6e. தேவியின் விளக்கம் (1)

“யார் அந்த யக்ஷன் கூறவேண்டும் தாயே!
எதற்கு வந்தான் ? எங்கிருந்து வந்தான்?”


“யக்ஷ உருவமும் என் உருவமே இந்திரா!
கோஷ ரஹிதம் அது! சர்வ சாக்ஷியும் அது!


மாயாதிஷ்டானம் அது! பிரம்ம ஸ்வரூபம் அது!
மஹா மாயையின் மகத்தான உருவம் அது!


சகல தேவர்களும் பூஜிக்கும் திருவடி எதுவோ;
சகல தவங்களும் உணர்த்தும் திருவடி எதுவோ;


பிரம்மச்சாரிகள் வணங்கும் திருவடி எதுவோ;
உரைக்கின்றேன் அந்தத் திருவடியைப் பற்றி.


‘ஓம்’ என்னும் அக்ஷரம் ஆகும் பிரம்மம்;
'ஹ்ரீம்' என்னும் இரண்டு அக்ஷரம் ஸ்வரூபம்;


இரண்டும் சிறந்தவை என் பீஜ மந்திரங்களில்;
உருவாக்கினேன் சிருஷ்டியை பீஜமாக இருந்து.


ஒரு பாதியாகும் என் சத் சித் ஆனந்த ஸ்வரூபம்;
மறு பாதியாகும் என் மாயா பிரகிருதி ஸ்வரூபம்.


மஹேஸ்வரி பராசக்தியான என்னிடம் ஒன்றாகி
மறைந்துள்ளது மாயா சக்தி இரண்டறக் கலந்து!”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#6e. Devi’s explanation (1)

Indra asked Devi, “What was that glow of light? Who was that ? Why did it appear here? Please tell me all Oh Devi!!”


Devi replied to Indra thus, “That glow of light too was my own form Indra. My Form is that of Brahman. It is the Cause of all Causes; It is the Seat of MAyA; It is the Witness to everything; It is perfect and free from defects and is always blemish-less.


I am THAT which all the Vedas and Upanishads try to establish. I am THAT which has to be reached by practising severe austerities and brahmacharyam (celibacy).


‘Om’ and ‘Hreem’ are the beejas – the mystical syllables – which are my foremost mantras in which I reside.
I create this universe with My two aspects. Therefore I have two beeja mantras.

The beeja OM is the Sath-chit-Ananda-swaroopam (meaning Everlasting Existence, Everlasting Intelligence and Everlasting Bliss).


The beeja “Hreem” is the MAyA-Prakriti or the Undifferentiated Consciousness, made to manifest.

MAyA is the Highest Sakti and I am the Omnipotent Goddess – an inseparable fusion of the Sath-Chit-Aananda-swaroopam and MAyA-Prakriti-Swaroopam.”




 

12c. திருமங்கை ஆழ்வார் (3)

பெரிய திருமொழி:பெரிய திருமந்திரத்தின் மகிமை

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (1)


ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (2)


சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (3)


வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (4)


கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
– நாராயணா என்னும் நாமம் (5)


எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (6)


இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
– நாராயணா என்னும் நாமம் (7)


கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
– நாராயணா என்னும் நாமம் (8)


குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (9)


மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
– நாராயணா என்னும் நாமம் (10)


“திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் “


ஆழ்வார்களின் வரலாறு இத்துடன் முற்றுப் பெற்றது
 
முதல் குழந்தை எல்லோருக்குமே எப்போதுமே செல்லக் குழந்தை.
இதற்கு விதிவிலக்கு அல்ல நான்.

என் இடுகைகளில் முதலாவது சிறுகதைத் தொகுப்பு (கவிதை வடிவில்)


பஞ்சதந்திரம், பாகவதம், பரமஹம்ஸர், பாலர் கதை மலர் என்ற

எதையுமே விட்டு வைக்கவில்லை நான் இந்தத் தொகுப்பில்.

மூன்று பாகங்களாகப் பிரித்திருந்தேன் நான் அந்த இடுகையை முதலில்.

'தலைவனும் நாமும்', 'உலகமும் நாமும்', 'அறிந்ததும் அறியாததும்' என்று.

இப்போது பிரிவுகள் மறைந்து விட்டன! ஒன்றாகக் கலந்து விட்டன.

எல்லாமே கதைகள், அவை கூறும் நன்னெறிகள் என்று ஆகிவிட்டன

புதுக் கவிதைகள் எழுதும் வரை இவை தொடரும் இந்த இதழில்!
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#6f. தேவியின் விளக்கம் (2)

குளிர்ச்சியும் நிலவும் கலந்துள்ளது போல
மிளிர்கின்றது மாயை என்னுடன் கலந்து.

இருக்கின்றன இரண்டும் சமமாக என்னிடம்,
இருக்கின்றன இரண்டும் அபேதமாக என்னிடம்.

பிராகிருத பிரளயத்தில் அபேதமாக இருக்கும்
பிரபஞ்ச ஜீவராசிகள் என்னுள் ஒடுங்கி லயித்து.

அவ்யக்தமாக இருக்கும் பிராணிகளின் கர்மங்கள்
வ்யக்தமாகிவிடும் மீண்டும் என் மாயையினால்.

மறைமுகமான அவஸ்தையே ஆகும் மாயை.
வெளிப்படையான அவஸ்தை ஆகும் தமஸ்.

தோன்றுகின்றன தமஸிலிருந்து ஸத்வம், ரஜஸ்.
தோன்றும் முக்குணங்கள் மும் மூர்த்திகளிடம்.

மிகுந்திருக்கும் தமஸ் ருத்ர மூர்த்தியிடம்;
மிகுந்திருக்கும் ஸத்வம் விஷ்ணுவிடம்;

மிகுந்திருக்கும் ரஜஸ் பிரம்ம தேவனிடம்;
மிகுந்திருக்கும் தொழிலுக்கேற்ற குணம்.

விளங்குவார் பிரமன் ஸ்தூல தேஹமாக;
விளங்குவார் விஷ்ணு சூக்ஷ்ம தேஹமாக;

விளங்குவார் ருத்திரன் காரண தேஹமாக;
விளங்குவேன் நான் துரீயமாக – அறிவாய்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6f. Devi’s explanation (2)


Just as moonlight is not different from the Moon, so also this MAyA Sakti is not different from Me. It is present in me inseparably.

During Pralaya this MAyA Shakti lies dormant and latent in Me, without any differentiation from me. At the time of creation, this MAyA appears as the fructification of the KarmAs of the JeevAs.

The potential and latent MAyA is Antarmukhi and Unmanifested. The kinetic MAyA which expresses is Bahirmukhi and Manifested. There is neither an origin nor a beginning for this MAyA. It is in a state of equilibrium of the three GuNas.

During Creation the GuNAs appear. Tamas appears first. Satvam and Rajas appear from Tamas. The three GunAs dominate in The Trinity. Tamas dominates in Rudra; Satvam dominates in VishNu and Rajas dominates in BrahmA.

BrahmA is known as of the Gross Body of a jeeva; VishNu is known as of the Subtle Body of the jeeva; Rudra is known as of the Causal Body of the jeeva while I am known as Tureeya of the jeeva – transcending these three GuNas.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம் – முன்னுரை

ஆன்மீகத் தேடலில் நான் கண்டு எடுத்த சில
அரிய முத்துக்களே நீங்கள் காணப்போகும் எனது கருத்துக்கள்.


படிக்க நேரம் இல்லாததால் சிலரும், புரிந்து கொள்ள முடியாததால் சிலரும், சரியான குரு கிடைக்காததால் சிலரும் இந்த அரிய கருத்துக்களை அறியாமல் இருக்கலாம்.


இறைவன் அருளால் எனக்கு நேரமும் உள்ளது. நல்ல குருவும் கிடைத்தார். நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று முனைந்து இவற்றை உங்களுக்கு அளிக்கின்றேன். கருத்துப் பரிமாற்றங்களும் (கருத்து யுத்தங்களும்) வரவேற்கப்படுகின்றன.


என்றோ விதையாக ஒளிந்திருந்த என் எழுதும் திறனை,
அன்றே கண்டு கொண்ட என் தந்தை டாக்டர் ராமனுக்கும்;
என்றும் என்னை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி வந்த
அன்னை திருமதி மீனாள் ராமனுக்கும் இந்நூல் சமர்ப்பணம்.


திருத்தி, மெருகேற்றிக் கொடுத்த அன்புத் தங்கை
திருமதி (கவிஞர்) ராஜி ராம் அவர்களுக்கும்,
பொருத்தி வலையில் அழகுற அமைத்துத் தந்த,
மருமகள் ரூபா ராமனுக்கும் நன்றிகள் பலப்பல.


இள வயதிலேயே இறைவனிடம் பக்தியையும்,
வளம் கொழிக்கும் இனிய கர்நாடக இசையையும்,
கணித, ஆங்கில இலக்கணத்துடன் கலந்தூட்டிய,
கண் போன்ற என் தாத்தா திரு k. R. நாராயணனுக்கு
எண்ணிலடங்காத நன்றிகளும், வந்தனங்களும்,
என் வாழ்நாட்கள் உள்ளளவும் உரித்தாகுக!


முதல் முறையாக ஆன்மீகத்தில் நுழைபவர்களுக்கு,
சில பல கருத்துக்கள் கடினமாகத் தோன்றலாம்.
முயன்று நான்
எளிமையாக்கி அளித்தவற்றை,
முயன்று படித்து நீங்களும் இனிமையாக ரசிக்கலாமே!


வாழ்க வளமுடன்,
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.






 
A prayer to BAla KrishNan

அகர வரிசைப் பாட்டு.


அன்பர் உள்ளம் உறைபவனே வா வா கண்ணா;
ஆலிலை மேல் பாலகனே வா வா கண்ணா.


இடையர் குலத்திலகமே நீ வா வா வா கண்ணா;
ஈரேழ் உலகும் காப்பவனே வா வா கண்ணா.


உலகை உண்டு உமிழ்ந்தவனே வா வா வா கண்ணா;
ஊதும் குழல் கை அழகா வா வா கண்ணா.


எதுகுலத்தில் உதித்தவனே வா வா வா கண்ணா;
ஏழுமலை ஆண்டவனே வா வா கண்ணா.


ஐவர்களின் நண்பனே நீ வா வா வா கண்ணா;
ஒளி விடும் நடனாகரனே வா வா கண்ணா.


ஓங்கி வளர்ந்த வாமனனே வா வா வா கண்ணா;
ஒளஷதமே ஆரமுதே வா வா கண்ணா.


ஆடி வா நீ ஓடி வா நீ வா வா வா கண்ணா;
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா கண்ணா.


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



https://vannamaalai.wordpress.com/சிந்தனை-தந்த-இந்திர-ஜாலம/a-prayer-to-bala-krishnan/

 
bhagavathy bhaagavatam - skanda 12


12#6g. தேவியின் விளக்கம் (3)

“சமாவஸ்தையாகிய அந்தர்யாமியும் நானே!
உருவமே அற்ற பிரம்ம ஸ்வரூபமும் நானே!

மாயையின் கலப்பில்லாத நிர்குணமும் நானே!
மாயையுடன் கூடியிருக்கும் ஸகுணமும் நானே!

படைக்கின்றேன் சகல ஜீவராசிகளையும் நானே!
படைக்கின்றேன் சகல ஜீவன்களின் கர்மங்களை!

இயக்குகின்றேன் மும் மூர்த்திகளையும் நான்!
இயங்கச் செய்கின்றேன் முத்தொழில்களையும்!

ஏவுகின்றேன் கிரஹங்களை அவற்றின் பாதைகளில்;
மேவினீர் போரில் வெற்றி என்னுடைய உதவியால்.

ஆட்டுவிக்கின்றேன் ஜீவர்களை பொம்மைகளாக;
ஆட்டம் தொடரும் நான் ஆட்டுவிக்கும் வரையில்.

தருவேன் கர்ம பலன்களை ஜீவ ராசிகளுக்கு;
தருவேன் வெற்றி தோல்வியை ஜீவர்களுக்கு.

மறந்து விட்டீர்கள் ஸர்வ ஸ்வரூபிணியான என்னை;
மமதை கொண்டீர்கள் வெற்றியால் கர்வம் அடைந்து.

உன்னதமாக வெளிப்படுகின்ற உங்களுடைய தேஜஸ்
உண்மையில் வெளிப்படுகின்ற என்னுடைய தேஜஸ்!”

மமதை அகன்ற தேவர்கள் துதித்தனர் தேவியை;
மனம் மகிழ்ந்த தேவியும் மறைந்து அருளினாள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6g. Devi’s explanation (3)


My Tureeya Form is the state of equilibrium of the three GuNAs. I am the one who dwells in every jeeva as AntaryAmi with the three GuNAs perfectly balanced. I am also the Brahman without a form.

I have two forms – Saguna the form with the attributes and NirguNa the form without any attributes. SaguNA lies within MAyA. NirguNA lies beyond MAyA. After creating this universe, I enter within that as the Inner Controlling force of everything and everyone. It is I that compel all the Jeevas to act the way they are destined to do. I decide their karmAs, their efforts and their actions.

Creation, Preservation and Destruction of this universe are carried out by BrahmA, VishNu and Rrudra according to My Commands. I make the wind blow; I make the clouds rain; I make the fire burn and I make the Sun move in the sky. Indra, Agni and Yama do their respective duties as ordered by me.

It is only through My Grace that you have obtained victory in this battle. I make you all dance like wooden puppets and use you as My mere instruments. You are merely My functions. I am the Integral Whole. I give victory to you or to the DaityAs just as I please.

I do everything as I wish to. I am the only one who has the independence to act. I always act duly and justly according to the Karmas of the Jeevas.

You have forgotten me though your pride and went into deep delusion by your vanity and egoism. I have appeared as this glow of Light only to favor you. Give up your pride and ego. Take refuge in Me with your head, heart and soul and be safe under my care and protection.”

Having said this Devi disappeared from there. The Devas worshiped Devi with deep devotion and respect.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#002. ராமனும், கண்ணனும்.

ராமனும் கண்ணனும் அவதாரங்களே!
ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்களே!


சீரிய மனையினில் பிறந்தவன் ராமன்;
சிறைச் சாலையினில் பிறந்தவன் கண்ணன்.


இளமையில் வளமாய் வாழ்ந்தவன் ராமன்;
இளமையில் ஒளிந்து வாழ்ந்தவன் கண்ணன்.


அரசிளங் குமரன் ராமன் என்றால்,
ஆவினம் மேய்ப்பவன் கண்ணன்.


மிக மிக குறைவாய் பேசுவான் ராமன்;
மிக மிக அதிகம் பேசுவான் கண்ணன்.


சத்தியம் ஒன்றே பேசுவான் ராமன்;
சத்தியம் என்பதே கண்ணன் பேச்சு!


"ஜெஜெய" எனவே வாழ்த்தினர் ராமனை;
ஜெயித்துக் கொல்ல முயன்றனர் கண்ணனை.


நண்பர்களை என்றும் கை விடான் ராமன்;
நகர்ந்து சென்று கொண்டே இருப்பான் கண்ணன்.


பெண்களைக் கண்டால் விலகுவான் ராமன்;
பெண்களைக் கண்டால் விரும்புவான் கண்ணன்.


கௌரவமாய் நின்று பழகுவான் ராமன்;
கூடிக் குலாவி மகிழ்வான் கண்ணன்.


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ராமனுக்கு;
தன் சொல்லே உயர்ந்த மந்திரம் கண்ணனுக்கு.


துயர் வரும் போது துடித்தான் ராமன்;
துயர் வரும் போது சிரித்தான் கண்ணன்.


மனிதன் போலவே வாழ்ந்தான் ராமன்;
மாயங்கள் பலப் பல செய்தான் கண்ணன்.


மற்றவர் கருத்தை மதித்தான் ராமன்;
மற்றவர்க்கு கீதை போதித்தான் கண்ணன்.


ராம ராஜ்ஜியம் எனப் புகழ்ந்து பாடினாலும்,
கிருஷ்ண சாயுஜ்யம் என்றே புகல்கின்றார்!


ராமன் செய்ததை நாம் பார்த்துப் படிக்கணும்;
கண்ணன் சொன்னதை நாம் கேட்டுப் படிக்கணும்.


ராமனும், கண்ணனும் எத்தனை எத்தனை
மாறுபட்டாலும், அன்றி வேறுபட்டாலும்,


இருவருமே நம் பாரதத்தின் தூண்கள்!
இருவருமே நம் அனைவரின் கண்கள்!


வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி


#002. RAMA and KrishnA.


RAMA and KrishNA are both avatArs of Vishnu.
Yet they cannot be more different from each other!


RAMA was born in a palace.
KrishnA was born in a prison.


RAMA was a royal Prince.
KrishnA was a cowherd.


RAMA lived a luxurious life as a child.
KrishnA was always hiding from his enemies.


RAMA was a man of few words.
KrishnA loved to talk a lot!


RAMA spoke only satyam.
Whatever krishnA spoke became satyam.


People blessed RAMA all along.
Enemies tried to kill KrishnA all along.


RAMA never left behind a friend.
KrishnA was always on the move.


RAMA did not mingle with women.
KrishnA loved the company of women.


RAMA kept his distance from others.
KrishnA mingled freely with everyone.


His father’s words were ‘mantra’ for RAMA.
His words became ‘mantra’ for Krishna.


RAMA broke down in difficult situations.
KrishnA laughed at the face of problems.


RAMA lived as a human being.
KrishnA was a mAyAvi from the beginning.


RAMA listened to the others.
KrishnA taught the others.


RAMA RAjyam was famous.
Krishna SAyujyam is famous.


We have to learn from RAMA by doing what He did.
We have to learn from KrishnA by listening to what He said.


RAMA and KrishnA may appear totally opposed!
But they both form the pillars of India and Hinduism.


https://vannamaalai.wordpress.com/சிந்தனை-தந்த-இந்திர-ஜாலம/002-ராமனும்-கண்ணனும்/



 
The post has become super long!
So from tomorrow I will post only the original poem in Tamil.
You are requested to make use of the link given below to read the English translation given below the poem in the blog.
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#6h. தேவி வழிபாடு

வழிபட்டனர் தேவர்கள் காயத்ரீ தேவியை
மொழிந்தனர் காயத்ரீ ஜபத்தைச் சந்திகளில்.

தந்தனர் யக்ஞ பாகங்கள் தவறாமல்;
வந்தனம் செய்தனர் நன்றி மறவாமல்.

சிறந்திருந்தனர் கிருத யுகத்தில் அந்தணர்கள்
பிரணவ, காயத்ரீ, ஹ்ருல்லேகா மந்திரங்களில்.

நித்தியம் ஆனது அல்ல சிவனின் உபாசனை!
நித்தியம் ஆனது அல்ல விஷ்ணு உபாசனை!

நித்தியமானது காயத்ரீ உபாசனை என்று
நிச்சயமாகக் கூறுகின்றன வேதங்கள்.

கிருதக் கிருத்தியம் தரும் காயத்ரீ ஜபம்;
விரும்பத் தேவையில்லை வேறு எதையும்!

முக்தி தரும் காயத்ரீ ஜபம், தினசரி வழிபாடு;
நித்தியம் செய்ய வேண்டும் சந்தி வேளையில்.

வேறு உபாசனைகள் தேவையே இல்லை
மறவாமல் காயத்ரீ ஜபம் செய்பவர்களுக்கு.

உபாசித்தனர் காயத்ரியைக் கிருத யுகத்தில்
உயர்ந்த தேவீ பக்தர்களான கிருத யுகத்தினர்.

காயத்ரீ தேவிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை;
காயத்ரீ ஜபத்துக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6h. Worship of GAyathree Devi

The Devas worshiped Devi Bhagawathy. They chanted GAythree during the Sandhya times. They offered her share of Havisu during the yAgas and Yagnas. They always remembered her with deep gratitude.

In the Krita Yuga, the brahmins excelled in PraNavam, GAyathree and HrullekA mantrAs. The worship of VishNu is not eternal. The worship of Siva is not eternal. Only the worship of GAyathree is eternal – according to the Vedas.

GAyatree bestows all auspiciousness and fulfills all our desires. Regular chanting of GAyathree can give total liberation to a brahmin. It must be performed at the Sandhya times.

No other vratha or pooja or upAsana is necessary for those who chant GAyathree regularly. In the Krita Yuga brahmins worshiped GAyathree Devi sincerely.

There is no mantra superior to GAyatree and no Devi superior to GAyathree Devi.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#003. ஒரு வழிப்பாதை

ஒரு வழிப்பாதை, இரு வழிப்பாதை,
புதியதன்று, மிக மிகப் பழையதே!

“எல்லா பாதையும் செல்லும் ரோம் நகர்”
என்பர் முன்பு சரித்திர வாணர்.

எல்லாப் பாதையும் செல்லும் கண்ணனிடம்,
எந்த பாதையும் திரும்பாது அங்கிருந்து!

தாய் போல் வந்த மாயப் பூதனையும்,
தன் உயிர் விட்டாள், திரும்பவில்லை!

வேகத் திகிரியாகச் சுழன்று வந்தவன்,
தாமரைத் தாள் பட்டுச் சூரணம் ஆனான்!

புயல் போல் கண்ணனைத் தூக்கிப் பறந்தவன்,
புழுதிக் குவியலாய்க் கீழே விழுந்தான்!

வந்தான் வத்சாசுரன் அழகிய கன்றாய்!
வந்தவன் அசுரன் என்று அறிந்ததும்,

கால்களைப் பற்றி, சுழற்றி, எறிந்து,
காலனாய் மாறினான், கார் வண்ணன்!

வானளாவும் ஒரு பறவை உருவுடன்,
வஞ்சித்து நின்றான் பகாசுரன் – அவன்

வாயினைப் பிளந்து, வானுலுகுக்கு
வழி நடச் செய்தான் நம் கண்ணன்!

மலை அளவு உயர்ந்த மலைப்பாம்பாக,
மண்ணில் கிடந்தான் கோர அகாசுரன்.

மயங்கி வாயினுள் நுழைந்த சிறுவரை,
மனம் கனிந்து காத்தான், மாயக் கண்ணன்!

வந்த வேகத்தில் மறைந்து போயினர்,
தேனுகன், பிரலம்பன், கேசி, அரிஷ்டன்!

வந்தவர்களைக் காணோம் என்று,
தேடினாலும் காண முடியாது எங்குமே!

வைரிகள் தோற்று, வெந்து, மடிந்து,
ஒரு வழி பாதையில் போவது போல,

பிரியர்கள் கண்ணனைப் பிரிய முடியாமல்,
ஒரு வழி பாதையில் செல்வர் அவனிடம்!

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”,
என்று இறைவனைப் புகழ்வது போலச்

“சென்றவர் மீண்டிலர், மீள்பவர் சென்றிலர்”,
என்ற இதுவும் ஒரு வழி பாதையே!

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி

For English translation use the link given below and read #003
https://vannamaalai.wordpress.com/
 
Last edited:
bhagavathy bhagavatam - skanda 12

12#7a. கௌதமர் (1)

பொய்த்தது மழை பன்னிரண்டு ஆண்டுகள்;
காய்ந்தன பயிர்கள் மழை நீர் இல்லாமல்.

தலை விரித்தாடியது கடுமையான பஞ்சம்;
தடுக்க முடியவில்லை பட்டினிச் சாவுகளை.

தின்றனர் மனிதர் குதிரைகள் பன்றிகளை!
தின்றனர் மனிதர் இறந்தவர் உடல்களை!

தின்றனர் பெற்றோர் தாம் பெற்ற செல்வங்களை!
தின்றனர் கணவர்கள் தாம் மணந்த பெண்களை!

சேர்ந்தனர் அந்தணர்கள் ஒன்றாகக் கூடி;
சென்றனர் கௌதமரிடம் உதவியை நாடி.

கூறினர் கௌதமரிடம் தம் குறைகளை;
கோரினர் அவரிடம் தம்மைக் காக்கும்படி.

ஜபிக்கச் சொன்னார் சாந்தி மந்திரங்களை;
ஜபித்தார் முனிவர் காயத்ரீயைத் துதித்து.

“வேதங்களின் தாயே! மந்திர ஸ்வரூபிணி!
பிராண ஸ்வரூபிணி! ஸ்வாஹா! ஸ்வதா!

கற்பக விருஷம் போன்றவள் நீ பக்தருக்கு;
சாக்ஷியாகின்றாய் மூன்று அவஸ்தைகளுக்கு.

துரியாதீத ஸ்வரூபிணி! சத் சித் ஆனந்த ரூபிணி!
அறியலாம் உன்னை உபநிஷத்துக்கள் உதவியால்.

வசிக்கின்றாய் சூரிய மண்டலத்தில் தேவி நீ!
துதிக்கின்றனர் சூரிய மண்டலத்தில் உன்னை!

உள்ளாய் சிவந்த நிற பாலையாகக் காலையில்;
உள்ளாய் சிவந்த நிறக் குமரியாக நண்பகலில்;

உள்ளாய் கரிய நிற விருத்தையாக மாலையில்;
தள்ளுவாய் எம் அபராதங்களை நீ மன்னித்து!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#7a. Sage Gouthama (1)


The rains failed for twelve long years continuously. The water bodies dried up and the crops failed. A severe famine lasted for a long time. The death due to starvation could not be avoided.

Men were forced to eat pigs and horses. Men ate dead bodies of other men. Parents ate their own children and husbands ate their own wives.

The brahmins were desperate. They decided to seek the help of Sage Gautama. They went to meet him with their families and their cattle. They explained to him their present difficulties and begged the sage to help them.

Sage Gautama told them to chant the ShAnti mantrAs while he himself started praying to GAyathree Devi.

“Oh mother of the VedAs! Manthra swroopiNi! PrANa swaroopiNi! SwAha RoopiNi! SwadA RoopiNi! You are the celestial Karpaga vruksham for your devotees.

You are the sAkshi for the three avasthAs of a jeevA. You are the TureeyAtheetha swaroopiNi! You are the Sath-Chith-Aanandha Roopini You may be realised through the Upanishads".

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்

#004. பக்தி, பகைமை

பக்தியும், பகைமையும் மாறுபட்டாலும்,
முக்தியை அளிப்பதில், அவை சரிசமமே.

அவை இரண்டும் எதிர்ப் பதங்களே – ஆயினும்
அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

அதீத விருப்பம் பக்தியில் முடியும்;
அதீத வெறுப்போ பகையில் முடியும்!

கண்ணன் மேல் கொண்ட பக்தி பெரியதா?
கண்ணன் மேல் கொண்ட பகைமை பெரியதா?

நூறு பிறவியில் கொள்ளும் பக்தியும்,
மூன்று பிறவிகளில் கொள்ளும் த்வேஷமும்,

சரிசமம் ஆகும் தராசுத் தட்டில்;
சரிதான் மாயக் கண்ணன் கணக்கு.

நாம் விரும்புபவர்களை, அவ்வப்போது
நாம் விருப்புடன் கொஞ்சம் நினைப்போம்.

நாம் வெறுப்பவர்களையோ, நெருப்பென
நம் நினைவில் இடைவிடாது கொள்வோம்!

எப்படி நினைத்தால் என்ன கண்ணனுக்கு?
எத்தனை நேரம் நினைக்கிறோம் என்றே,

கணக்கு வைத்துக்கொண்டு மனம் கனிவான்;
கணக்கு முடிந்தவுடன், கருணை பொழிவான்.

பக்தியும், அன்பும் அடைவிப்பது போன்றே,
பயமும், பீதியும் அவனை அடைவிக்கும்.

“எப்படியோ என்னை நினைத்தாலே போதும்”,
என்றே கண்ணன் எண்ணுகின்றான் போலும்!

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன்
வேறு எப்படித்தான் எண்ண முடியும்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

For English translation of this poem please use the link given below and read # 004.

https://vannamaalai.wordpress.com/
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#7b. கௌதமர் (2)

தந்தாள் காயத்ரீ தேவி கௌதமருக்குக் காட்சி;
தந்தாள் மாட்சிமை வாய்ந்த ஒரு பாத்திரத்தை.

சர்வ போஷண பாத்திரம் அவள் தந்தது!
சகல வஸ்துக்களையும் அளிக்க வல்லது!

“போக்குவாய் இவர்கள் பசியை இதன் உதவியால்;
ஆக்குவாய் இவர்களைத் துயரம் அற்றவர்களாக!”

குவிந்தது அங்கே உண்ண அன்னம் மலை போல;
குவிந்தன அறுசுவைப் பண்டங்கள் மலை போல.

குவிந்தன உன்னதமான பட்டாடைகள்;
குவிந்தன அணிமணிகள், ஆபரணங்கள்.

குவிந்தன உன்னதமான யாகப் பொருட்கள்;
குவிந்தன கௌதமர் விரும்பிய அனைத்துமே.

குவிந்தன கால் நடைகளுக்குப் புல் வகைகள்;
குவிந்தன யாகத்துக்கு வேண்டிய பொருட்கள்.

வழங்கினார் கௌதமர் வஞ்சனையின்றி!
மகிழ்ந்தனர் அந்தணரும், குடும்பத்தினரும்.

சுவர்க்க லோகம் போலானது முனிவர் ஆசிரமம்;
சுவர்க்க வாசிகள் போலாயினர் ஆசிரமவாசிகள்.

சந்தனம், மலர்கள், பட்டாடை, அணிமணிகள்,
அந்த இடத்தை மாற்றி விட்டது அமராவதியாக.


வியந்தனர் தேவர்கள் இந்த விந்தையைக் கண்டு;
வியந்தனர் மாந்தர்கள் அந்தப் பாத்திரம் கண்டு!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#7b. Sage Gauthama (2)


Devi GAyathree appeared to the sage Gauthama and gave him a vessel by which every one can be fed and well nourished. Devi told him, “This vessel will give you whatever you wish for!” and vanished from there.

Mountains of cooked rice, cooked vegetables and sweetmeats for the brahmins and their families soon lay heaped there. Plenty of grass and fodder for the cattle were derived from the vessel.

Silks and ornaments for the womenfolk and various articles and vessels needed for sacrificial purposes were all given by the wonderful vessel as desired by Sage Gautama.

Whatever Gauthama wished for, came out of the vessel given by the Devi GAyathree. Sage Gauthama gave the other sages and munis wealth, grains, clothes, ornaments, sacrificial ladles, spoons, cows and buffaloes for the sacrificial purposes.

The Munis assembled and performed various yagnas and YAgams. Sage Gauthama’s ashram flourished and prospered to look like a heaven on the earth.

The Munis, with sandal paste all over their bodies and decorated with very bright silks and ornaments looked like the gods, while their wives looked like goddesses!

The DevAs wondered about the power of Sage Gauthama while the men wondered about that vessel presented by GAyathree Devi endowed with miraculous powers.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#005. கண்ணன் அருள்!

கண்ணன் என்றால் கருணையும், கனிவும்.
காண்போர்க்கெல்லாம் இனியவன் அவனே.

சாம, தான, பேத, தண்டம் என்று,
சாதுரியமாக அருள் புரிபவனே.

பக்தர்களைக் கொண்டருளும் அவன்,
பகைவர்களைக் கொன்றருள்வான்.

பார்ப்பதற்கு இரண்டும் வேறுபட்டாலும்,
பயனளவில் இவ்விரண்டும் ஒன்றே!

கொண்டாலும், கொன்றாலும், அவன்
கொண்டல் வண்ண மேனியுடன்,

கூடும் நற்பயன் தானே கூடிவரும்.
நாடும் நற்பயன் வேறென்ன உண்டு?

அன்று மடுவில் பொற்றாமரை பறித்து,
குன்று குடையாய் எடுத்த கோமானுக்கு,

கொடுக்க எண்ணிய யானை கஜேந்தரனை
கடித்து, துடிக்கச் செய்த முதலையை,

கருடாரூடனாய் விரைந்து வந்து, அந்தக்
கரியினைக் காத்து, முதலையைக் கொன்று,

கொண்டருளியும், கொன்றருளியும் அவர்க்கு
விண்ணுலகு அளித்தான், வேணு கோபாலன்.

வஞ்சனை செய்து கண்ணனை அழிக்க,
கஞ்சன் என்போன் மனப்பால் குடித்து,

குவலயா பீடம் என்ற குன்று நிகர்த்த
குவலயம் காணா மதக் களிற்றினை,

கொண்டு முடித்திட எண்ணம் கொண்டான்.
கொன்று முடித்தான் கண்ணன் களிற்றினை!

உயிருடன் உள்ள யானையின் தந்தத்தின்
உயரிய முத்துக்கள் ராதைக்கு பரிசு.

கிடைப்பதற்கரிய வானுலகப் பதவி,
கம்ச, சாணூர, குவலயா பீடத்திற்கு!

பக்தியால் கிடைக்கும் அற்புதப் பரிசு,
பகைமையால் கிடைப்பது விந்தை அன்றோ?

நவ வித பக்திகள் இறைவனை அடைய;
நன்மையே தரும் அவை ஒன்பதுமே!

கொண்டும், கொன்றும், அருளும் கண்ணன்,
கொண்டு செல்வான் நம்மை, பரமபதத்திற்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

Please visit
https://vannamaalai.wordpress.com/
and read #005 for English translation of this poem.
 
bhagavathy bhaagavatam - skanda 12

12#7c. கௌதமர் (3)

அபயம் அளித்துப் போஷித்தார் கௌதமர்
அபாயம் நீக்கிப் பன்னிரண்டு ஆண்டுகள்.

ஏற்படுத்தினார் காயத்ரீயை உபாசிக்க இடம்;
போற்றி வந்தனர் அந்தணர்கள் காயத்ரீயை.

வந்தார் நாரதர் மஹதி வீணையை இசைத்தபடி;
வந்தார் காயத்ரீயின் பெருமையை இசைத்தபடி.

வரவேற்றனர் அனைவரும் உற்சாகமாக அவரை;
வந்து அமர்ந்தார் அந்தணர்கள் நடுவில் நாரதர்.

“தேவேந்திரன் புகழக் கேட்டேன் கௌதமரை;
தேடி வந்தேன் உடனே அவர் தரிசனம் பெற்றிட”

வியப்புடன் பார்த்தார் காயத்ரீயின் ஸ்தானத்தை;
விடை பெற்றுச் சென்றார் நாரதர் சுவர்க்க லோகம்.

தன் இனம் வாழக் காணப் பொறாத விந்தைத்
தன்மை வாய்ந்தவர்கள் ஆவர் அந்தணர்கள்!

கௌதமர் புகழைக் கேட்டதும் முனிவரின்
கௌரவத்தைக் குலைத்திட விரும்பினர்!

நல்ல மழை பொழியத் தொடங்கியது மீண்டும்;
நல்ல நிலைமை திரும்பியது நாடு நகரங்களில்.

சபிக்க விரும்பினர் அந்தணர்கள் கௌதமரை!
தவித்தனர் அமைதியின்றி நன்றி மறந்தவர்கள்!

கிழட்டு மாயப் பசுவினைக் கொண்டு வந்தனர்;
கீழும் மேலும் ஓடச் செய்தனர் யாகசாலையில்;

தடுத்தார் “ஹூம்!” என்ற சொல்லால் முனிவர்;
விடுத்தது ஆவியை; விழுந்தது அந்த மாயப் பசு!

ஆர்ப்பாட்டம் செய்தனர் அந்தணர்கள் அங்கே;
அமர்ந்தார் நிஷ்டையில் கௌதமர் அப்போதே.

அறிந்தார் பசு இறந்து விழுந்த காரணத்தை;
துறந்தார் பொறுமையை, மன அமைதியை!

வெகுண்டு எழுந்தார் பிரளயகால ருத்திரனாக!
வெகுளியில் சபித்தார் அந்தணரைக் கடுமையாக!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#7c. Sage Gauthama (3)


Sage Gauthama took care of the brahmins and their families as if he were their father for twelve long years. He constructed a place for the worship of GAyathree Devi. All the brahmins worshiped GAyathree Devi there together.

One fine day NAradha came there playing on his Mahathi veena and singing the praise of Devi GAyathree. He was a given a warm welcome with due honors by the sage and the brahmins.

NArada said, “I heard IndrA praise Sage Gautama and wished to get his darshan.” He visited the place constructed for the worship of GAyathree Devi and was all praises for Sage Gauthama.

Most Brahmins are jealous by nature. They can not bear one of their own clan being praised and getting appreciated. The ungrateful brahmins were waiting for an opportunity to defame and curse the kind hearted Sage Gauthama.

The rain returned and the crops flourished. Now the brahmins did not need the help of Sage Gauthama nor had to humor him any more. They created an old cow by their MAyA and drove it up and down in the yAga SAlA while the yAgA was being performed.

Sage Gauthama said “Hoom!” to control the cow and it dropped down quite dead! The brahmins made a lot of confusion there blaming the Sage for the death of the cow. Gauthama sat in meditation and discovered the real cause for the death of the cow.

His anger became uncontrollable. He got up with reddened eyes looking as fierce as the praLaya kAla Rudra and cursed those brahmins very harshly.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#006. காரண வாரணன்!

அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!


வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!


நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!


கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!


பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி படிய விளையாடுவான்.
பட்டுப்போல் குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும் வாரணம்!


அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின் காரணம்;
அவன் அருள் என்றும் நாம் கோரணும்!


அவன் திவ்ய பரிபூரணன்;
அவனே உயர் திரு நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!


எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான், இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


#006. KAraNa VAraNa KaNNan.


He is the cause of this world;
He is a beautiful VAranam;

He is pretty and dark colored;
So He is a beautiful VAranam.


He has became a kunjaram ( as chubby as an an elephant) by eating butter, curd and milk to His heart’s delight. We can spend hours at a stretch, watching a magnificent elephant. The magnificent KAraNan will steal our hearts and intellect!


All calves are pretty, even that of an elephant. but the only real beautiful person is our Krishnan. Decorated with silk clothes after having his bath, He will go and play in mud and sand. When bathed clean, the elephant will shower itself with dirt and mud.


His words form the Aranam;
He is a karpaga VAranam;

He is the srushti KAranam;
His blessings are to be sought;


He is the only pari pooranan;
He is the all powerful NAraNan;

He is the root of everything;
He wears a garland of 1000 names;


We may seek and search all over the world,
but we will not find another KAraNa VAraNa KrishNan.





 
bhagavathy bhaagavatam - skanda 12

12#7d. கௌதமர் (4)

“பராமுகம் ஆகக் கடவீர் நீங்கள் இவற்றில்!
பற்றற்றவர் ஆகக் கடவீர் நீங்கள் இவற்றில்!

காயத்ரீ ஜபத்திலும், காயத்ரீ தேவி தியானத்திலும்,
வேதங்களிலும் அவை கூறும் வாக்கியங்களிலும்;

சாஸ்திரங்களிலும், மந்திரங்களிலும்,
இதிஹாசங்களிலும், புராணங்களிலும்;

தேவி தியானம், மந்திரம், ஸ்தானத்தில்;
தேவி உபாசனை, உற்சவம், தரிசனத்தில்;

தேவி நாம சங்கீர்த்தனம், ஈஸ்வர பூஜையில்;
ஞான மார்க்கத்தில், ஆசாரம், சதாசாரத்தில்;

அத்வைத ஞானத்தில், சாந்தி சாதனங்களில்;
நித்ய கர்ம அனுஷ்டானங்களில், பூஜைகளில்;

தான தர்மங்களில், சிரார்த்த கர்மங்களில்;
பிராயசித்தங்களில், தேவி பக்தி சிரத்தையில்;

விக்ரயம் செய்வீர்கள் குடும்பத்தினர்களையே;
விக்ரயம் செய்வீர்கள் வேதம், தீர்த்தம், தர்மத்தை.

சங்கமம் செய்வீர்கள் தராதரம் இன்றி – உங்கள்
தாய், புத்திரி, சஹோதரி, பிறன் மனைவியுடன்!

சந்ததிகள் பிறப்பர் உங்களைப் போலவே;
சஞ்சலம் அடைவர் என் சாபம் தகிப்பதால்!

கோபிக்கட்டும் காயத்ரீ தேவி உங்கள் மீது!
போகட்டும் உங்கள் வீடுகள் இருளடைந்து!”

அடைந்தார் காயத்ரீ ஸ்தானத்தை முனிவர்,
கிடைத்தது காயத்ரீ தேவியின் தரிசனம்.

“நஞ்சாகி விடும் நல்ல பாம்பு குடிக்கின்ற பால்.
நஞ்சாக்கி விட்டனர் இவர்கள் உன் உதவிகளை.

சாந்தி அடைவாய்! சினம் தவிர்ப்பாய் மகனே!
பாந்தம் இல்லை உனக்கு இந்த வெஞ்சினம்!”

சினம் தணிந்தார் கௌதம முனிவர் – அந்தணர்
இனம் குலைந்து ஈனம் அடைந்தனர் சாபத்தால்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#7d. The curse of Gautama

“Oh Wicked Brahmins! You will become indifferent to the festivals of Siva and the worship Siva. You will have no affinity to RudrAksha and the vibhooti!

You will have no interest in the right ways of living; nor preserve your good conduct, nor follow the path of knowledge; nor control you senses; nor perform SandhyA Vandanam; nor perform the Agnihotra ceremonies; nor study the Vedas; nor give gifts of cows; nor to perform the SrAddhas of your ancestors.

You will worship DevAs other than GAyathree Devi and become the KApAlikas or even heretics. You will sell your own father, mother, brothers, sisters, sons and daughters and even your wives for money. You will sell the Vedas, Teerthas, and your own Dharma. You will not feel ashamed to sell any of these.

You will not hesitate to enjoy pleasure with your own mother, daughters or your sisters and the wives of other men. Those who will be born in your families will do the same. May Devi GAyathree be always cross with you!”

Sage Gauthama went to GAyathree Devi’s temple there bowed down to Her. The Devi said, “O Gauthama! The poisonous snake converts the milk you feed to it into a venom.

These brahmins have done a similar thing. Become calm my dear son! Do not worry about the happenings and do not feel sorry that you cursed them!”

Hearing the words of the Devi, Gauthama calmed down and went back to his own Ashramam.

 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#007. பிரம்மம், மாயை

நிறைந்த சக்தியே பிரம்மம்; அதன்
சிறந்த வெளிப்பாடே மாயை ஆகும்!


இயங்காத சக்தி என்பது பிரம்மம்;
இயங்கும் சக்தி என்பது மாயை!


சலனமற்றது பிரம்மம் என்றால்,
சலனம் உடையது மாயை ஆகும்!


எரியும் நெருப்பு பிரம்மம் என்றால்,
எரிக்கும் சக்தி அதன் மாயை ஆகும்!


பிரம்மம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி;
பிறக்கும் வர்ண ஜாலமே மாயை ஆகும்.


படைப்புகளுக்குக் காரணம் பிரம்மம்;
படைப்புகள் என்னும் காரியம் மாயை.


காண முடியாதது பிரம்மம் ஒன்றே;
காணும் பொருட்கள் எல்லாம் மாயை!


என்றும் தனித்து நிற்கும் பிரம்மம்;
என்றும் மனத்தை மயக்கும் மாயை!


தோற்றம் இல்லாதது பிரம்மம் என்றால்,
தோன்றி ஒடுங்குவது அதன் மாயை!


பாலும் நீரும் போலக் கலந்த இவற்றை,
பரமஹம்சர்களே பிரிக்க வல்லவர்.


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


#007. BRAHMAM AND MAYA.


The sum total of all power is Brahmam;
The expression of this power is MAYA.


The Energy stored is Brahmam;
The Energy spent is MAYA.


The Immovable power is Brahmam;
The Power in motion is MAYA.


If a fire can be equated to Brahmam;
Its capacity to burn is equated to MAYA.


If a prism can be equated to Brahmam;
Its spectrum can be equated to MAYA.


If the Cause of the Creation is Brahmam;
Then the Effect of this Creation is MAYA.


What lies beyond our sight is Brahmam;
Everything within our eyesight is MAYA.


That which remains aloof is Brahmam;
That which expresses itself is MAYA.


That which is neither born nor destroyed is Brahmam;
That which is born and gets destroyed is MAYA.


Brahmam and MAYA are mixed like milk and water.
Only a Parama hamsA (an enlightened person) can separate the two,
in the same way a hamsA (a swan) separates milk and water.





 
bhagavathy bhaagavatam - skanda 12

12#7e. கௌதமர் (5)

விழுந்தனர் கௌதமர் கால்களில் அந்தணர்கள்;
தொழுதனர் தங்களிடம் கருணை காட்டுமாறு.


“எழுதுங்கள் எங்கள் தலை விதியை மாற்றி!”
என அழுதனர் சாபங்களை மாற்றி விடுமாறு;


“வீணாகாது நான் சொன்ன வார்த்தைகள்!
விழுவீர் கும்பீபாகத்தில் கலியுகம் வரும் வரை.


பிறவி எடுப்பீர் மீண்டும் உலகில் கலியில்;
சிறுமை அடைவீர் இழிந்த வாழ்வு வாழ்ந்து.


வழிபடுங்கள் காயத்ரீ தேவியை பக்தியுடன்;
வழிகாட்டுவாள் தேவி சாப விமோசனத்துக்கு!”


கலியுகம் பிறந்ததும் கும்பீபாக நரகத்திலிருந்து
வெளிப்பட்டனர் சாபம் அடைந்த அந்தணர்கள்;


பிறந்தனர் மீண்டும் உலகில் அந்தணர்களாக;
மறந்தனர் காயத்ரீ தேவின் ஆராதனைகளை.


துறந்தனர் சந்தியா வந்தனத்தை முற்றிலும்;
சிறந்தனர் தகாத செயல்கள் செய்வதில்;


கைவிட்டனர் தேவ, தெய்வ யக்ஞங்களை;
கைவிட்டனர் பித்ரு, பூத யக்ஞங்களை;


திரிந்தனர் பாஷாண்ட மதங்களில் புகுந்து.
திரிந்தனர் காமுகர்களாகக் கயவர்களாக!


அடைவர் இவர்கள் கும்பீபாக நரகத்தை;
அடைவர் துன்பம் அடுத்த கலியுகம் வரை;


பக்தி இவர்களிடம் மறைந்து போன காரணம்
சக்தி வாய்ந்த கௌதம முனிவர் தந்த சாபம்!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#7e. Sage Gautama (5)

The Brahmins forgot the Vedas and GAyatree mantra due to the curse of the great Sage Gautama. They repented for their action and went to seek the pardon of the sage.


Sage Gautama took pity on them and replied. “My words can not become false. You will have to remain in KumbheepAka hell till Kali yuga is born. Then you will be born in the earth and my curse will take effect. If you want to become free from my curse go and catch hold of the feet of Gayatree Devi. You are left with no other choice now.”


In Kali yuga, the cursed Brahmins were born again as brahmins but gave up chanting of GAyatree and doing SandhyA vandanam. They have lost their faith in the studying the Vedas and doing Agni hotra, yAgas, yagnas and SrAddhas.


Chastity and brahmacharyam took a backseat. Mutual consent was enough to have intimate relationships. They will return to the hell again and suffer there until the next Kali yuga.

The worship of Vishnu or Rudra is not permanent or eternal. Only Devi worship is permanent and eternal. Those who give up Devi’s worship are sure to suffer.




 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#008. பரிணாம வளர்ச்சி

டார்வின் கண்டு அறிந்து சொன்னார்,
உலகில் பரிணாம வளர்ச்சியினை;
பரமன் நமக்குச் செய்தே காட்டினான்,
உலகில் பரிணாம வளர்ச்சியினை!

முன்னர் நீரில் உயிரினம் தோன்றியது;
பின் நீரிலும், நிலத்திலும் வாழ்பவை;
தரையில் வாழ்பவை என உயிரினங்கள்,
தர வரிசைப்படி தோன்றின என்பார்.

மறைகளைக் காப்பதற்கு இறைவன்,
நீரில் வாழும் மீனாய்த் தோன்றினான்.
மந்தர மலையைத் தாங்கிப் பிடிக்க,
நீர், நிலம் வாழும் ஆமை ஆனான்.

பூமியை மீட்டு, முன் போல் நிறுத்த,
பூமியில் வாழும் வராகமானான்.
மிருகமும், மனிதனும் கலந்த ஒரு
உருவமாக நரசிம்மன் ஆனான்.

குறு மனிதனாய் வாமனனாகி, பின்
முழு வடிவில் பரசுராமன், ரகுராமன்,
கண்ணன், பலராமன் என்பவர்களாக,
கண் நிறையும் படி அவதரித்தான்!

அரிய ஆராய்ச்சியால் டார்வின் அறிந்ததை,
புரிய வைத்தான் எளிதாய் நம் இறைவனே!
விஞ்ஞானிகளுக்குள் எல்லாம் மிகப் பெரிய
விஞ்ஞானியும், மெய்ஞானியும் அவன்தானே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#008. The Theory of Evolution.

Scientists postulated the theory of Creation and Evolution. God had enacted it in his dhasa avatArs.

This theory states that the first form of live appeared in water. It was followed by the amphibians – which can live in water and on land. Then came the land living animals followed by human beings.

To protect the VEdhAs God appeared as a giant Fish – a water living organism. To support the mountain Mandhara when the ocean of milk was being churned to bring out the nectar, God assumed the form of a giant tortoise – an amphibian which can live both on land and in water.

To recover the earth from under water, God became VarAhA (a giant boar) - a land living animal. The next avatAr was the half lion and half man – Narahari.

This was followed by the vAmana avatAr, where God appears as a very short boy. The following avatArs were full grown powerful men namely Parasu RAmA, Raghu RAmA, BalarAmA and KrishnA.

What scientists have proved with great difficulties, God has demonstrated by his avatArs so easily. He is the greatest of all great scientists and great J~nAnis.

 
bhagavathy bhaagavatam - skanda 12

12#8a. மணித்வீபம் (1)

அமைந்துள்ளது பிரம்ம லோகத்தின் மேற் பாகத்தில்;
அமைந்துள்ளன சகல லோகங்களும் மணித்வீபத்தில்.

வாசம் செய்கிறாள் தேவி இதில் – பிரகாசிக்கும்
கோலோகம், பூலோகம், கைலாசம், வைகுண்டம்.

ஸர்வ லோகம் எனப்படும் மணித்வீபம்;
ஸர்வ லோகாதிகம் ஆகும் மணித்வீபம்.

அமைத்தாள் தேவி மூலப் பிரகிருதியிலிருந்து;
அமைய இயலாது இதனினும் அழகிய லோகம்.

மணித்வீபம் அழிக்கும் பிறவிப் பிணிகளை;
மணித்வீபம் குடையாகும் மூவுலகுக்கும்!

சாயையாகும் பிரம்மாண்டத்துக்கு – மஹா
மாயையான தேவியின் இந்த வாசஸ்தலம்.

சூழ்ந்திருக்கும் அமுதக் கடல் மணித்வீபத்தை;
ஆழ்ந்திருக்கும் கடலில் வீசும் அலை வரிசைகள்.

மின்னும் மணல் பரப்பு ரத்தினம் போல;
மீன் வகைகளோ எண்ணிலடங்காதவை!

சங்குகள் தென்படும் காணுமிடமெல்லாம்;
இங்கிதமான குளிர்ச்சி நீர்த்திவிலைகளால்.

மரம், செடி, கொடிகள் நிறைந்திருக்கும் – கொடி
மரங்களோடு மரக்கலங்களும் நாற்புறங்கிலும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#8a. MANI DWEEPAM (1)


MaNidweepa is the abode of Devi. It is called as Sarvaloka and is situated over the Brahmaloka. This is far superior to all the other regions. Hence it is named as The Sarvaloka. Moola Prakruti Devi built this place as her residence – in accordance to Her own will. It is far superior to Goloka, KailAsa and Vaikunta.

No other place in this universe can match this MaNidweepa. It is situated at the top of all the other regions and resembles an umbrella. Its shadow falls on the Universe and reduces the pains and sufferings in this world.

An ocean called the SuddhA Samudra surrounds the MaNidweepa. Series of waves arise in the ocean due to winds. Numerous fish, conches and other aquatic animals live in this. The beach has sand which glitters like the precious gems.

The seashores are kept cool by the splashes made by the waves striking on the beach. Numerous ships decorated with various colorful flags move to and fro. All kinds of trees, plants and creepers flourish on this MaNidweepa
.
 
சிந்தனை தந்த இந்திர ஜாலம்


#009. “நாராயணா!”

“நாராயணா!” எனும் நாமத்தை
நாவாறச் சொன்னாலே போதும் ;
நன்மைகள் நம்மைச் சூழும், பல
வண்மைகள் நம்மை வந்தடையும்.

அந்தண குலத்தில் பிறந்து, குலத்தின்
அறங்களைக் கைவிட்டு வாழ்ந்தும்,
நாராயண நாம வைபவத்தாலேயே
நரகத்தைத் தவிர்த்தவன் கதை இது!

அந்தணன் அஜாமிளன் ஒரு நாள்
தந்தை சொற்படிக் கானகம் சென்றான்.
காமத்தின் வசப்பட்டவனாய், அங்கு ஒரு
காரிகையைக் கண்டு விரும்பினான்.

இழி குலத்தில் பிறந்தவள் அவள்;
இன்பம் அளிப்பதில் கைதேர்ந்தவள்;
குலம், ஆசாரம், கல்வி, தவம் கெடக்
கூடி வாழ்ந்தான், குடும்பம் பெருகிற்று.

கடைக் குட்டியின் பெயர் நாராயணன்;
கடைத்தேறவும் அதுவே உதவியது!
மரண காலத்தில் தன் முன் தோன்றிய
முரட்டுக் கிங்கரரைக் கண்டு அஞ்சினான்.

நடுங்கிய வண்ணம் நாவாற அழைத்தான்,
“நாராயணா!” என்று தன் செல்ல மகனை!
விஷ்ணு தூதர்கள் வந்தனர் விரைவிலேயே;
விவாதம் துவங்கிற்று குழுக்களிடையே!

பாவங்களைப் பட்டியல் இட்டு
படித்துக் காட்டினர் யம கிங்கரர்;
பகவான் நாமத்தைச் சொன்னதுமே,
பாவம் தொலைந்தது என்றனர் தூதர்.

இறுதியில் வென்றனர் விஷ்ணு தூதர்கள்.
சடுதியில் நற்கதி அடைந்தான் அஜாமிளன்.
விண்ணப்பித்த கிங்கரரிடம் கூறினான் யமன்,
“விஷ்ணு பக்தரை இனி அணுக வேண்டாம்”.

நெருப்பு, சருகுகளை எரிப்பது போலும்,
மருந்து, நோய்களை அழிப்பது போலும்,
நாராயணனின் நாமம், நவின்றவர்களின்
நூறாயிரம் பாவங்களை அழித்துவிடும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

#009. NArAyaNa nAmam.

The utterance of the name ‘NArAyaNA’ will rid us of all sins and bless us with everything good in life!

ajAmiLan was a brahmin by birth but he gave up all the religious practices of a real brahmin. His load of sin would have delivered him into narakam (Hell) but by uttering the name of NArAyana, his sins were absolved and he escaped the punishment in Hell.

One day ajAmiLa went to the forest to bring the things needed by his father. He met a woman of dubious virtue and fell in love with her. He gave up his old austere practices and started living with her. They got many children. Their youngest and their most favorite son was named as NArAyana.

On his death bed ajAmilA got frightened by the sight of the Yama kinkarAs – the servants of YamA, the God of Death. He called out for his son NArAyana who was playing outside. Immediately the servants of Lord Vishnu arrived and a heated argument ensued.

The kinkarAs listed all the sins of the man. The servants of Lord Vishnu argued that the moment he uttered Lord’s name all his sins were absolved. Finally the servants of Lord Vishnu won the argument and ajAmiLan escaped from Hell.

When the kinkarAs reported the incident to their master YamA, he advised them to keep away from the devotees of Lord Vishnu.

Just as fire destroys dried leaves and medicine destroys diseases, the name of NArAyaNa will destroy all the sins accumulated by us over one hundred thousand births.

 
bhagavathy bhaagavatam - skanda 12

12#8b. மணித்வீபம் (2)

உள்ளன வடக்குப் பக்கம் நான்கு வாயில்கள்;
உள்ளது இரும்பால் அமைந்த உயர்ந்த மதில்.


சஞ்சரிப்பர் காவலர் அஸ்திர சஸ்திரங்களுடன்;
சஞ்சரிப்பர் பக்தர்கள் தேவியின் தரிசனம் பெற;


உராய்ந்திடும் பக்தர்கள் அமர்ந்த விமானங்கள்;
பரவும் மணியோசை உராய்வினால் உண்டாகி!


ஒலிக்கும் குதிரைகளின் குளம்பொலி;
ஒலிக்கும் குதிரைகளின் கனைப்பொலி;


ஒழுங்கு படுத்துவர் பிரம்பினால் கூட்டத்தை,
ஒலிக்கும் பிரித்தறிய முடியாத ஒலிக்கலவை.


திகழும் வழி நெடுகத் தெள்ளிய தடாகங்கள்;
திகழும் வழி நெடுக ரத்தின மயத் தருக்கள்;


உள்ளது வெண்கல மண்டபம் வடக்கில்;
உள்ளது வெண்கலப் பிராகரம் சுற்றிலும்;


விண்ணை முட்டும் அதன் கோபுரங்கள்;
பன்மடங்கு காந்தியுடன் ஒளிரும் அவை.


உள்ளன அங்கு எல்லாவகை மரம், செடிகள்.
அள்ளித் தரும் தளிர்கள், மலர்கள், கனிகளை.


நிறைந்திருக்கும் அழகிய உப வனங்கள்;
நிறைந்திருக்கும் அழகிய நீர் நிலைகள்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#8b. MaNidweepa (2)


Across this ocean, there is an iron enclosure, high enough to block the Heavens. Within this enclosure wall, skilled and alert guards carrying various weapons keep a constant vigil. The four main entrances are swarming with hundreds of guards and devotees of Devi. Whenever any Deva comes to pay a visit to Devi, his VAhanam gets stopped here.


This place reverberates with the chiming of the bells of the chariots of Devas and the neighing of the horses and the sound made by their hoofs. The Devas control the crowds using their canes. The place is buzzing with a rare mixture of various sounds. The houses are adorned with trees of gems and jewels. The tanks are filled with clear and sweet water.


There is a second enclosure wall made of bell metal, so high that it almost touches the Heavens. It is far more brilliant than the previous enclosure wall. There are many entrance gates and various trees here.


All the varieties of trees found in this universe are there, bearing flowers, fruits and tender leaves! The whole place is scented with their sweet fragrance!




 

Latest posts

Latest ads

Back
Top