• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

ஆழ்வார்கள்

08c. ஆண்டாள் நாச்சியார் (3)

வருகை தந்தது சத்திரம், சாமரம் வரிசைகளோடு
திருவரங்கன் கோவில் பரிவாரம் ஸ்ரீ வில்லிபுத்தூர்.


பணிந்து கூறினர் பெரியாழ்வாரின் திருவடிகளை;
“பணித்தான் அரங்கன் ஆண்டாளை அழைத்து வர!”


பல்லக்கில் ஏற்றி வந்தனர் மணமகள் கோதையை;
பாண்டியன் அலங்கரித்தான் வீதிகளை மிக அழகாக.


பட்டுத் திரையிட்ட பல்லக்கில் பவனி வந்தாள் கோதை,
பல வகை இசைக் கருவிகளும் இசைந்து இசைத்திட.


“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்!
சுரும்பாற் குழல் கோதை வந்தாள்!


திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!
தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்!”


அடைந்தனர் அழகிய மணவாளன் மண்டபத்தை;
அடைந்தார் சஞ்சலம் ஆழ்வார் “கனவு நனவாகுமா?”


கூடி நின்றனர் வேத விற்பன்னர்கள் ஊர் எல்லையில்;
கூடி நின்றனர் திரளாக பொதுமக்கள் ஊர் எல்லையில்;


“திருவிழாக் கூட்டமோ?” என்று ஐயுற்றார் பெரியாழ்வார்;
திரண்டு நின்றவர் வணங்கினர் ஆழ்வாரின் அடிகளை.


“மணந்து கொள்ள வருவாள் என் மஹாலக்ஷ்மி என்று
கனவில் வந்து உரைத்தான் எம்பெருமான் எம்மிடம்!


ஏற்பாடுகள் செய்துள்ளோம் திருமண வைபவத்துக்கு;
ஏற்க வேண்டும் எங்கள் கோரிக்கையை உபச்சாரத்தை!”


மெய் சிலிர்த்தார் பெரியாழ்வார் எம்பெருமான் கருணையால்;
ஐக்கியம் ஆனாள் கருவறையுள் புகுந்த கோதை இறையுடன்!


பக்தி செய்யும் வழியைக் கூறும் கோதையின் பாசுரங்கள்;
பக்தியுடன் அளிக்கும் மங்கள வாழ்வை அவள் பாசுரங்கள்.

பங்குனி உத்திர நன்னாளில் நிகழ்ந்தது இந்தத் திருமணம்;
பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள்.


“திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!


பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!


ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே!


மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!”


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

108c. ANdAL nAchiyAr (3)


The temple authorities of Srirangam arrived in Sree Villipuththor carrying the traditional Umbrella, chAmaram and palanquin of the temple to meet PeriyAzhwAr.


They conveyed a thrilling message, “God appeared in our dream and ordered us to fetch His bride AndAL with all due honors to Srirangam”.


ANdAl became a beautiful bride and traveled in the palanquin which was covered by silk curtains in great style. The PANdya King had decorated the streets all the way up to Srirangam from Sree Villipuththoor


The bridal procession was accompanied by the temple retinue and music was played on the various auspicious musical instruments. The crowd sang the praise of AndAl in many sweet words.


They reached the Srirangam. PeriyAzhwAr was torn by doubts whether God would really marry his daughter and whether her dream would become true or not.


The pundits and priest welcomed them. A huge crowd had gathered to welcome them. Everyone fell at the feet of PeriyAzhwAr. The priest said,”Lord appeared in our dream and ordered us to arrange for His marriage with your daughter ANdAL. Kindly accept our arrangements and honors”


PeriyAzhWar was overwhelmed by the infinite mercy of God. ANdAL entered the Sanctum Sanctorum of the temple and merged with her Lord inseparably. This wonderful wedding took place on Panguni Uththiram day.


ANdAL’s pasurams teach us how to love and offer our devotion to God. They Give us all auspices in our life on earth. ANdAL is the only female AzhwAr out of the twelve AzhwArs. Yet she overshadowed all the others by merging with God in the holy union of marriage.

 
bhagavathy bhaagavatam - skanda 12

12#2c. காயத்ரீயின் தத்துவங்கள்

12#2c. The twenty four Thathvas

The twenty four Thathvas for the twenty four aksharas of GAyatree mantra :

(1) The Earth;
(2) The Water;
(3) The Fire;
(4) The Air;

(5) The AakAsa;
(6) The Smell;
(7) The Taste;
(8) The Form;

(9) The Sound;
(10) The Touch;
(11) The Male genital organ;
(12) The Anus;

(13) The Legs,
(14) The Hands;
(15) The Speech;
(16) The PrAna;

(17) The Tongue;
(18) The Eyes;
(19) The Skin;
(20) The Ears;

(21) The ApAna;
(22) The VyAna;
(23) The Udhana and
(24) The SamAna.

 
ஆழ்வார்கள்

08d. ஆண்டாள் நாச்சியார் (4)


நாச்சியார் திருமொழி : திருமணக் கனவை உரைத்தல்

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (1)


நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (2)


இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (3)


நால்திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்
காப்புநாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (4)


கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் (5)


மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் (6)


வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் (7)


இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் (8)


வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (9)


குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் (10)


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே (11)


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Last edited:
bhagavathy bhaagavatam - skanda 12


12#2d. காயத்ரீயின் முத்திரைகள்

12#2d. The twenty four MudrAs of the twenty four syllables

(l) Sammukha mudra;
(2) Samputa mudra;
(3) Vitata mudra;
(4) Vistrita mudra;


(5) Dvimukha mudra;
(6) Trimukha mudra;
(7) Chaturmukha mudra;
(8) Panchamukha mudra;


(9) ShaNmuka mudra;
(10) Adhomukha mudra;
(11) VyApakAnjali mudra
(12) Sakata mudra;


(13) YamapAsa mudra;
(14) Grathita mudra;
(15) Sanmukhon mukha;
(16) Vilamba mudra;


(17) Mushtika mudra;
(18) Matsya mudra;
(19) Koorma mudra;
(20) VarAhaka mudra;


(21) SimhAkrAnta mudra;
(22) MahAkrAnta mudra;
(23) Mudgara mudra and
(24) Pallava mudra.




 
ஆழ்வார்கள்

09a. குலசேகர ஆழ்வார் (1)

அவதரித்தார் குலசேகர ஆழ்வார் சேரநாட்டின் இளவரசராக;
அவதரித்தார் திருவஞ்சைக்களத்தில் மாசியில்,புனர்பூசத்தில்.


தந்தையார் பெயர் திடவிரதன்; தந்த நூல் பெருமாள் திருமொழி;
‘கொல்லிக் காவலன்’, ‘கூடல் நாயகன்’, ‘வில்லவர் கோன்’ இவரே!


செய்தார் ஒரு சிறந்த நல்லாட்சி குலசேகர ஆழ்வார்;
வென்றார் சோழ, பாண்டிய மன்னர்களைப் போரில்!


மணந்தார் பாண்டிய மன்னன் மகளைக் குலசேகர ஆழ்வார்;
மனத்துள் புகுந்து அவரை மாற்றியது திருமால் திருவருள்!


மறைந்து விட்டன ‘நான்’ ‘எனது’ என்ற மனோபாவனைகள்;
மனதில் மாயை விலகியவுடன் பெருகியது பக்தியுணர்வு.


கேட்டு வந்தார் தினமும் ராமாயணக் கதைகளை ஆழ்வார்;
கேட்டதுடன் நின்றுவிடாமல் உணர்ச்சி வசப்படுவார் ஆழ்வார்.


“சீதையை மீட்க அரக்கர்களுடன் போர் புரிய முடிவு செய்தார்;
சேனையைப் போருக்கு ஆயத்தமும் செய்தார்” என்று கூறுவர்


சூட்டினார் மகனுக்குப் பட்டம் சேரநாட்டு மன்னனாக;
செய்தார் திருத்தல யாத்திரை மாலவன் ஆலயங்களுக்கு.


‘பெருமாள் திருமொழி’யாகும் இவர் பாடிய 105 பாசுரங்கள்;
பெருமானை பூசித்தார் பூமாலைகளால், பாமாலைகளால்!


அடியவர் கூட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டார்;
அடியவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப் பட்டது ஒருமுறை.


“பரமனின் அடியார்கள் செய்யார் இந்தப் பாதகச் செயல்!
பாம்பு பிடுங்கட்டும் என்னை – அவர்கள் திருடி இருந்தால்”


குடத்தில் குழைத்தார் தன் திருக் கரத்தை – ஆனால்
குடத்தில் இருந்த விஷநாகம் தீண்டவில்லை அவரை!


திருக் கண்ணபுரம் எம்பெருமான் இவரது இஷ்ட தெய்வம்;
திருமொழியில் பாடியுள்ளார் இவர் ராமாயணக் கதையை.


“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!” புகழ் பெற்றது

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”


ஆகிவிட்டது திருமலையில் திருவேங்கடவனின்
ஆலயப்படி ‘குலசேகரன் படி’யாக என்றென்றும்!


‘சேனை வென்றான் திருமண்டபம்’ அமைத்தார் – இவர்
திருவரங்கள் திருக்கோவிலில் மூன்றாவது சுற்றினில்.


வழங்கப்படுகின்றது இன்றைக்கும் இவர் பெயராலே
அழகன் அரங்கனின் ஆலயத்தின் மூன்றாவது சுற்று.


அம்சம் ஆவார் திருமாலவன் மார்பின் ‘கௌஸ்துபமணி’யின்.
அரசனாகவும், அடியவனாகவும் இருந்தவர் குலசேகர ஆழ்வார்.

“ஸ்ரீ குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


09a. Kulasekhara AzhwAr (1)


Kulasekhara AzhwAr was born in Thiru vanchaik kaLam as the Prince of ChEra kingdom in the month of MAsi under the star Punarpoosam. His father was Dhidavrathan. The other popular names referring to Kulasekhara Azhwar are ‘Kollik kAvalan’, ‘Koodal nAyakan’ and ‘Villavar kON’.


Kulasekharan was a righteous and a valorous king. He won over the ChOzha and PANdya kings. He married the princess of PANdya Kingdom. The grace of Vishnu transformed his mind from his attachment to the world to his attachment to the Lord. He gave up the concepts of ‘I’ and ‘Mine”. His delusions were destroyed and his devotion to the supreme deepended.


He was an ardent devotee of Sree RAma and used to listen to the stories on RAmAyaNa everyday. He would get completely absorbed in those stories and would react asif the incidents being related were happening right then!


When he heard the story about how RAma had to fight with the asuras to win back Sita, he got so deeply involved in the story that he ordered his army to get ready to go and help RAma in the war.


He crowned his son as the next king and went round visiting the various temples to his heart’s content. His ‘PerumAL Thirumozhi’ consists of 105 verses sung in praise of God. He worshiped God both with his garland of flowers as well as the garland of his pAsurams.


He used to associate himself and mingle freely with the other devotees of God. Once the devotees were suspected to have stolen a costly ornament from the King’s palace. Kulasekhara would not believe that devotees were capable of such a heinous crime.


To prove their innocence he inserted his hand into a pot containing poisonous snakes – without any hesitation. He did not get bitten by the snakes – thus proving the innocence of the devotees.


His ishta dheivam was the lord at Thiruk kaNNa puram. He sang the story
of RAmAyana in his beautiful verses. The step at the entrance of the sanctum sanctorum of any Vishnu temple is named as Kulasekharan Padi (The step of Kulasekharan) as desired by him. He built a Mandapam in the third circumcircle of the RanganAthan temple at Srirangam.


Kulasekharan is considered to be the amsam of the Kousthubha gem worn by Lord Vishnu. He excelled both as a ruler of his country and as a staunch devotee of Vishnu.








 
bhagavathy bhaagavatam - skanda 12

12# 3. காயத்ரீ தியானம்

தியானம்

நிறங்கள் ஐந்து உடையவள் காயத்ரீ தேவி;
முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை.

தரிப்பவள் சந்திரனோடு கூடிய இரத்தின மகுடம்;
தத்துவார்த்தங்கள் நிறைந்த வர்ண ஸ்வரூபிணி!

வரதம், அபயம், பாசம், அங்குசம், வெண் கபாலம்;
சங்கு, சக்கரம், தாமரைகள் கரங்களில் ஏந்தியவள்.

Gayatri Dhyanam


Muktaavidru mahema neela dhavalachchayai rmukhaisteknai
Rmuktaaminduni daddharatna makutaam tatvaardha varnaatmikaam
Gaayatreem varadaa bhayaankusha kashaasshubhram kapaalam gadaam
Samkham chakramadaaravinda yugalam hastairvahanteem bhaje

गायत्रि ध्यानं

मुक्ताविद्रु महेम नील धवळच्छायै र्मुखैस्तेक्णै
र्मुक्तामिंदुनि दद्धरत्न मकुटां तत्वार्ध वर्णात्मिकां
गायत्रीं वरदा भयांकुश कशाश्शुभ्रं कपालं गदां
शंखं चक्रमदारविंद युगळं हस्तैर्वहंतीं भजे

http://www.hithokthi.com/viewstotra.php?g_id=20&story_id=563


காயத்ரீ கவசம்

நாசம் செய்யும் நூறு விதத் துன்பங்களை
தரும் 64 கலை ஞானமும், மோக்ஷமும்.

ஒழியும் பாவங்கள் இதைப் படித்தால், கேட்டால்!
அளிக்கும் ஆயிரம் கோதான பலன், பிரம்ம வடிவு.

http://www.vignanam.org/veda/gayatri-kavacham-devanagari.html


http://www.vignanam.org/veda/gayatri-kavacham-english.html


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்
 
ஆழ்வார்கள்

09b. குலசேகர ஆழ்வார் (2)

கண்ணபுரத்து காகுத்தன் தாலாட்டு

தரவு கொச்சகக் கலிப்பா


மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ. (1)


புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்!
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண்டிசையு மாளுடையாய்! இராகவனே! தாலேலோ. (2)


கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்!
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ!
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள்குலத் தின்னமுதே! இராகவனே! தாலேலோ. (3)


தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே! தசரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (4)


பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே!
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே!
தாராளும் நீண்முடியென் தாசரதீ! தாலேலோ. (5)


சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே!
அற்றவர்கட் கருமருந்தே! அயோத்திநகர்க் கதிபதியே!
கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ. (6)


ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே!
வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க் கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ. (7)


மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே!
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே!
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலைவலவா! சேவகனே! சீராமா! தாலேலோ. (8)


தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே!
களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட் கருளுடையாய்! இராகவனே! தாலேலோ. (9)


தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே!
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரிவெஞ் சிலைவலவா! இராகவனே! தாலேலோ. (10)


கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன
பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே. (11)

குலசேகரப்பெருமாள் ஆழ்வார் திருவடிகளே சரணம்



 
bhagavathy bhaagavatam - skanda 12

12# 4. காயத்ரீ ஹ்ருதயம்

12#4. Gayatree Hrydayam

http://sanskritdocuments.org/doc_devii/gAyatrI_hRRidayam.html?lang=ta

By knowing the GAyatree Hrudaya, a man can become a Deva. The Rishi of this is NArAyaNA. The Chhandas is GAyatree; and GAyatree herself is the DevatA. The person must do nyAsam in a lonely spot and then artha nyAsam.He must worship GAyatreewith her mantra and say,

“I take refuge of the Divine GAyatree, the Devi with one thousand eyes. I surrender to her wholly ! I bow down to Tat savitur vareNyam. I bow down to the Sun rising in the East, I bow down to the Morning Sun. I bow down to the GAyatree, residing in the Morning Sun. I bow down to all.”

Reciting this GAyatree Hridaya in the morning destroys all the sins committed in the night. By reciting this in the evening, he can get all his sins committed during the day destroyed!

Whoever recites this in the evening and in the morning becomes free of all his sins. He gets the fruits of all the Teerthas. Studying this will confer on him the fruits of performing thousand sacrifices and repeating the GAyatree sixty thousand times.

The link given below can be used to read Gayatree Hridayam in Sanskrit

http://sanskritdocuments.org/doc_dev…a.html?lang=sa

 
ஆழ்வார்கள்

09c. குலசேகர ஆழ்வார் (3)

தில்லைநகர்த் திருசித்திரகூட மால் இராமனாய் தோன்றிய காதை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை
என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே (1)


வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்க ளொருமூவா யிரவர் ஏத்த
அணிமணியா சனத்திருந்த அம்மான் தானே. (2)


செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி
வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் தன்னை
தெவ்வரஞ்சு நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் தன்னை
இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே. (3)


தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்
தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை
பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப்
பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து
சித்திரகூ டத்திருந்தான் தன்னை யின்று
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே. (4)


வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று
வண்தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்
கரனோடு தூடணன்த னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்
திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே. (5)


தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்
தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன் தன்னை
ஏத்துவா ரிணையடியே யேத்தி னேனே. (6)


குரைகடலை அடலம்பால் மறுக வெய்து
குலைகட்டி மறுகரையை யதனா லேறி
எரிநெடுவே லரக்கரொடும் இலங்கை வேந்தன்
இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து
திருமகளோ டினிதமர்ந்த செல்வன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அரசமர்ந்தான் அடிசூடும் அரசை யல்லால்
அரசாக வெண்ணேன்மற் றரசு தானே. (7)


அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி
அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்
தன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி
உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்
பருகுவோம் இன்னமுதம் மதியோம் இன்றே. (8)


செறிதவச்சம் புகன்தன்னைச் சென்று கொன்று
செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோன் ஈந்த
நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் தன்னைத்
தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட
திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
உறைவானை மறவாத வுள்ளந் தன்னை
உடையோம்மற் றுறுதுயரம் அடையோம் இன்றே. (9)


சாற்றுப்பாட்டுக்கள்


அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி
அடலரவப் பகையேறி யசுரர் தம்மை
வென்று இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற
விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி
சென்றினிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
என்றும்நின்றான் அவனிவனென் றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர்! நீரே. (10)


தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் தன்னை
எல்லையில்சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்
கோழியர்கோன் குடைக்குலசே கரன்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்
நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே. (11)


குலசேகரப் பெருமாள் ஆழ்வார் திருவடிகளே சரணம்




 
bhagavathy bhaagavatam - skanda 12

12#5a. காயத்ரீ ஸ்தோத்திரம் (1)

“ஆதி சக்தி! ஜகன்மாதா! உன் பக்தர்களுக்கு
அருள் பாலிப்பவளே! எங்கும் நிறைந்தவளே!

அந்தமில்லாதவளே! திரிசந்தி ரூபிணியே!
காயத்ரீ தேவியே! உனக்கு நமஸ்காரம்!

காயத்ரியும் நீயே! திரி சந்தியும் நீயே!
சாவித்திரியும் நீயே! சரஸ்வதியும் நீயே!

ப்ராஹ்மியும் நீயே! வைஷ்ணவியும் நீயே!
ரௌத்திரியும் நீயே! ஸ்வேதாவும் நீயே!

உள்ளாய் பாலை வடிவாகக் காலையில்;
உள்ளாய் இளம் பெண்ணாக நண்பகலில்;

உள்ளாய் வயது முதிர்ந்தவளாக மாலையில்;
உன்னுகின்றனர் ரிஷிகள் உன்னை இவ்வாறு.

விளங்குகின்றாய் அன்ன வாஹனத்தில்!
உள்ளாய் கருட வாஹனம் உடையவளாக;

உள்ளாய் ரிஷப வாஹனம் உடையவளாக;
விளங்குகிறாய் மும்மூர்த்தியரின் வாகனத்தில்.

தியானிக்கின்றாய் ரிக் வேதத்தை பூமியில்;
படிக்கின்றாய் யஜுர் வேதத்தை விண்ணில்;

எந்த தேவியைத் தரிசிக்கிறாரோ தவஞானி
அந்த தேவியாக நடமாடுகின்றாய் பூமியில்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#5a. GAyatree sthotram (1)


I bow down to you, the mother of the world; one who favors your devotees; the Infinite and omnipresent Devi!

You are SandhyA; You are GAytree; You are SAvitri and you are Saraswati; You are BrAhmî, You are VaishNavi and you are Raudri.

You are meditated by the rushis as being very young girl in the morning, full of youth in the mid-day, and aged old lady in the evening. I bow down to You.

You are seen by the ascetics as BrahmANi, riding on a swan; Saraswati riding on Garuda and SAvitri riding on a Bull.

You are manifesting the Rigveda in this world, manifesting Yayurveda in the middle space and manifesting SAmaveda in the Rudra loka. You exist in the three worlds. I
bow down to you”.

 
ஆழ்வார்கள்

10a. தொண்டரடிப்பொடி ஆழ்வார் (1)

அவதரித்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமண்டங்குடியில், மார்கழியில், கேட்டையில்.


ஆனார் இவர் அடியவர்களின் அடியவனாக;
ஆவார் இவர் வனமாலையின் ஓர் அம்சமாக;


இட்டுக் கொள்வார் தன் சென்னியின் மீது
இட்டத்துடன் அடியவரின் காலடி மண்ணை.


இயற்பெயர் மறைந்து போனது இதனால்;
புனைபெயர் ஆனது தொண்டரடிப்பொடி.


அருளினார் ‘திருமாலை’ என்னும் 45 பாசுரங்களை.
அருளினார் திருப்பள்ளி எழுச்சியாக 10 பாக்களை.


இருந்தார் வேதவிசாரதர் ஒரு விஷ்ணு பக்தராக;
பிறந்தார் விப்ர நாராயணன் இவரது மைந்தனாக.


திருமாலின் சேனைத் தலைவர் வந்தார் பூமிக்கு;
அருளினார் உண்மைப் பொருளை ஆழ்வாருக்கு;


அரங்கன் நிறைந்துவிட்டான் சிந்தை முழுவதிலும்;
விரதம் மேற்கொண்டார் தீவிர பிரம்மச்சரியத்தை.


சென்றார் ஸ்ரீரங்கம் திருத் தலயாத்திரையாக;
கண்டார் திருமால் பெருமைக்கு நிகரில்லை என.

“பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


10a. ThoNdar adippodi AzhwAr (1)


Vipra nArAyaNan (ThoNdar adippodi AzhwAr) was born in Thiru MaNdangudi in the month of MArgazhi under the star Jyeshta. He was born as an amsam of the VanamAlai ( the garland made of leaves and various coloured flowers ) worn by Lord Vishnu. His father VEdha VisAradhar was a staunch devotee of Lord Vishnu.


Vipra nArAyaNan was in fact ‘ a devotee of the devotees’. He would happily sprinkle the dust of the feet of the other devotees on his head. This became his new name as an AzhwAr ‘who sprinkles the dust of the feet of the devotees on his head’


ThoNdar adippodi AzhwAr sang 45 pAsurams as ‘ThirumAlai’ and 10 verses as the ‘Thiup paLLi ezhuhchi’. The General of the army of Lord Vishnu is said to have come down to the earth to do the upadesam to VipranArAyanan about the Absolute Truth.


Ever since then, Vipra NArAyanan was steeped in the devotion towards Lord RanganAthan. He adhered to staunch celibacy along with his deep devotion. He visited Srirangam temple and realised that Vishnu was the God supreme. He sang Lord Vishnu’s praise with deep devotion and love.



 
bhagavathy bhaagavatam - skanda 12

12#5b. காயத்ரீ ஸ்தோத்திரம் (2)

“அடைந்துள்ளாய் நீ ருத்திர லோகத்தை;
அடைந்துள்ளாய் நீ விஷ்ணு லோகத்தை;


அடைந்துள்ளாய் நீ பிரம்ம லோகத்தை;
அடைந்துள்ளாய் நீ ரிஷிகளின் பக்தியை;


இருக்கின்றாய் நீ மாயா ஸ்வரூபிணியாக;
தருகின்றாய் வரங்களை உன் பக்தர்களுக்கு.


உருவானாய் நீ பார்வதி பரமேஸ்வரரின்
கர வியர்வையிலும், கண்களின் நீரிலும்.


ஆனந்த ரூபிணி ஆனவள் நீயே!
அனைத்து துர்க்கா ரூபமும் நீயே!


குருத்துவம் கொண்டவள் நீ!
வராஹ ஸ்வரூபிணி! சக்தி!


போக, மோக்ஷங்கள் தருபவள் நீ!
மத்ய லோகத்தில் பாகீரதியானாய்.


பாதாள லோகத்தில் போகவதி நீ!
திரிலோக வாஹினீ ஆவாய் நீ !


ஸ்தானத் த்ரயநிவாசினி நீ – பூமியில்
தாங்குகின்றாய் அனைத்தையும் நீ!


உள்ளாய் வாயு சக்தியாக புவர் உலகில்;
உள்ளாய் தேஜஸ் கடலாக சுவர் உலகில்;


உள்ளாய் மஹாசக்தியாக மஹர் உலகில்;
உள்ளாய் ஜனனியாக ஜனர் உலகில்;


உள்ளாய் தபஸ்வினியாகத் தப உலகில்;
உள்ளாய் பத்ய வாக்காக ஸத்ய உலகில்.”


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#5b. GAyatree sthotram (2)


You are RudrAni in the Rudra loka, VaishNavi in the VishNu loka and BrahmANi in the Brahma Loka. You are like a mother to the seven sages.


You are MAyA. You grant boons to your devotees. You came into being from the perspiration in the hands of Siva and PArvati and the tears in their eyes. You are the one exhibiting as all the various forms of DurgA Devi.


You are the BhAgirathi also known as the river Ganges in this world; You are the river Bhogavati in the PAtAla and you are the MandAkini in the Heavens.


You are the sole supporter in this world (Bhur loka); You are the VAyu Shakti in the middle space (Bhuvar Loka); You are the energy or the ocean of Tejas in the Heavens (Svar loka); You are the Great Siddhi in the Mahar loka; You are the Janani in the Janar Loka; You are the Tapasvini in the Tapar loka and You are the Speech in the Sathya loka”.



 
ஆழ்வார்கள்

10b. தொண்டரடிப்பொடி ஆழ்வார் (2)

அமைத்தார் அழகிய நந்தவனம் ஒன்றை ஆழ்வார்;
அமைத்தார் வண்ண மலர்ச்செடிகள் அனைத்தையும்.


கொடுப்பார் தொடுத்த மலர்மாலைகளை ஆலயத்தில்;
கொடுப்பர் இவருக்கு உணவு மற்ற இல்லறத்தினர்.


அறியவில்லை ஆண், பெண் என்ற பேதங்களை இவர்;
அறிய விரும்பினான் இறைவன் இதை நன்கு சோதித்து.


இருந்தனர் இரு அழகிய நடனமணிகள் திருக்கரம்பனூரில்;
திரும்பினர் தம்ஊர் உறையூர் மன்னன் தந்த பரிசுகளுடன்;


மயங்கினர் வண்ண மலர்த் தோட்டத்தைக் கண்ட பின்னர்.
தயங்கி நின்றனர் தோட்டம் அமைத்தவரைக் காணவிரும்பி.


கண்டு கொள்ளவேயில்லை விப்ரநாராயணன் அவர்களை;
மண்டிய பக்தியால் கேட்கவுமில்லை அவர்கள் மொழிகளை;


சபதம் செய்தாள் அவரது அன்பை வெல்லுவதாக தேவதேவி;
சலனம் ஏற்படுத்தினாள் ஆழ்வார் மனநிலையில் தேவதேவி;


‘அவள் இன்றித் தான் இல்லை’ என்ற நிலை உருவானது!
அவளுடன் தானும் சென்றார் அவள் வாழும் இல்லத்துக்கு!


பொருளற்ற ஆழ்வாரை வெறுத்தாள் தேவதேவியின் அன்னை;
அருளின்றி வெளியேற்றினாள் ஆழ்வாரை இல்லத்திலிருந்து!


தந்தான் பெருமான் பொற்கிண்ணத்தை மாறுவேடத்தில் அத்தாயிடம்.
தந்தான் பெருமான் பொற்கிண்ணதை ஆழ்வார் அளித்ததாகக் கூறி.


பொற்கிண்ணத்தைக் காணவில்லை பெருமானின் ஆலயத்தில்.
பொற்கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது தேவதேவியின் இல்லத்தில்.


சிறையில் அடைத்தான் உடனே மன்னன் விப்ர நாராயணரை;
இறைவன் தெரிவித்தான் கனவில் ஆழ்வார் பெருமைகளை!


விடுவித்தான் மன்னன் ஆழ்வாரைச் சிறையில் இருந்து உடனே.
நெடுங்காலம் வாழ்ந்தார் இறைத்தொண்டுகள் செய்து கொண்டு.


“ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் “


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


10b. ThoNdar adip podi AzhwAr (2)


ThoNdar adip podi AzhwAr grew a beautiful garden of flower plants of all hues. His service to Lord consisted of making garlands out of the fresh flowers gathered from his garden and offering them to God. The householders used to feed him by offering him food – since he was a sworn bachelor.


ThoNdar adip podi AzhwAr treated everyone with equal respect. He did not distinguish a man from a woman and never treated them differently. God wanted to put to an acid test his equanimity and uniformity.


There were two beautiful dancers Devi and Deva Devi in Thiruk karambanoor- who were siblings. They were returning with the rich gifts conferred on them by the Chozha king and happened to pass by AzhwAr’s garden.

The colors and the fragrance of the fresh flowers mesmerized them so much that the younger sibling Deva Devi wished to greet the owner of that beautiful garden.


ThoNdar adip podi AzhwAr happened to walk past them but he neither saw then nor heard them. Deva Devi felt belittled to be ignored in this manner and swore to her sister Devi that she would win the affection of the AzhwAr and make him a slave to her love.


She slowly conquered the mind of AzhWAr and became an indispensable part of is life. AzhwAr could not be away from her even for a short period. So he went with her to meet her mother.
The old lady was not happy with the AzhwAr who was a a penniless pauper and drove him away from her house.


Lord in the guise of a manservant of the AzhwAr, presented the mother with a gold vessel, which belonged to the temple. The vessel was found missing the very next day and was traced to the house of Deva Devi. AzhwAr was imprisoned for this theft.


Lord appeared in the dream of the King and told him about the greatness of AzhwAr. The king promptly released him from the prison. AzhwAr continued to serve his lord as before, as long as he lived.




 
bhagavathy bhaagavatam - skanda 12


12#5c. காயத்ரீ ஸ்தோத்திரம் (3)

“உள்ளாய் விஷ்ணு லோகத்தில் கமலவாஸினியாக;
உள்ளாய் பிரம்ம லோகத்தில் காயத்திரி தேவியாக;


உள்ளாய் ருத்திர லோகத்தில் கெளரி தேவியாக;
உள்ளாய் பிரகிருதி தேவியாகப் பராபரையாக;


உள்ளாய் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக.
உள்ளாய் புண்ணிய நதிகளின் வடிவமாக;


உள்ளாய் புனிதத் தீர்த்தங்களின் வடிவாக;
உள்ளாய் உடலின் நாடிகள் அனைத்துமாக;


உள்ளாய் இருதயத்தில் பிராண சக்தியாக;
உள்ளாய் கண்டத்தில், ஸ்வப்ன நாயகியாக;


உள்ளாய் நாவில் ஸதா தாரையாக – மேலும்
பிந்து ஸ்தானத்தில் பிந்து மாலினியாக;


உள்ளாய் மூலாதாரத்தில் குண்டலினியாக;
உள்ளாய் ரோம மூலத்தில் வியாபினியாக;


உள்ளாய் சிகை நடுவில் மனோன்மணியாக;
உள்ளாய் மூவுலகங்களில் அனைத்துமாக;


மஹாதேவி! மஹேஸ்வரி! சாந்தி ரூபிணி!
மனமார நமஸ்கரிக்கின்றேன் உன்னை!” எனப்


பாராயணம் செய்தால் பாவங்கள் தொலையும்;
புண்ணியம் வளரும்; சித்திகள் தோன்றும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


12#5c. GAyatree sthotram (3)


You are the KamalvAsini in VishNu loka; You are the GAyatree Devi in the Brahma loka and you are the Gauri Devi in the Rudra loka. You are the Prakriti Devi. You are the ParA Shakti and You are the ParamA Sakti.


You are the IchchhA Sakti, the KriyA S’akti and the JnAna Sakti. You are all the holy rivers flowing on the earth. You are all the NAdis of the human body!


You are the vital PrANa shakti in the lotus of the heart; You are Svapna nAyikA in the throat; You are SadAdhArA in the palate and You are the BindumAlini Sakti in between the eyebrows.


You are the KuNdalini in the MoolAdhAra; you are the VyApini extending up to the roots in the hair follicles; You are the MadhyAsanA in the crown of the head andou are the Manonmani in the BrahmArandhra.


In fact everything seen in this Universe is you and nothing but you. I bow down to you!


GAyatree Stotra will give all success, destroy all sins, and yield good merits to whoever chants it with faith and devotion.




 
10c. தொண்டரடிப்பொடி ஆழ்வார் (3)

திருப்பள்ளி எழுச்சி

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (1)


கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)


சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (3)


மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (4)


புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)


இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (6)


அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (7)


வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)


ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)


கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே (10)



 
bhagavathy bhaagavatam - skanda 12


12#5d. காயத்ரீயின் பலன்கள்

“தரும் புத்திரர்களைப் பிள்ளை இல்லாதவர்களுக்கு;
தரும் பொன் பொருளை வறுமையில் வாடுபவருக்கு;

தரும் புண்ணிய தீர்த்தமாடிய பலன்களை;
தவம், யாகம், யக்ஞம் செய்த பலன்களை;

தரும் இஷ்ட சித்திகளை இம்மை போகங்களை;
தரும் பக்தியை, முக்தியை, விடுதலையை!

எந்த ஸ்நான காலத்தில் இதைப் படித்துவிட்டு
எந்த ஜலத்தில் ஒருவன் நீராடினாலும் அவன்

அடையலாம் சந்தியா ஸ்நானத்தின் பலன்களை;
அமிர்த வாக்கு இது உண்மை உண்மை உண்மை!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#5d. Merits of GAyatree sthotram


He who reads this in the SandhyA times, with all attention and devotion, will get sons – if he does not have sons. He will get wealth – if he has does not have wealth.

Whoever reads this Stotra gets the fruits of all Teerthas, TapasyAs, DAnam, YAgA and YagnA. He enjoys all the pleasures in this world and get liberated at the end.

Taking bath in any water after reading this stotra will confer the benefits of SandhyA snAnam. He will be freed from all his sins.

 
ஆழ்வார்கள்

11a. திருப்பாணாழ்வார்

அவதரித்தார் கார்த்திகை மாதம், ரோஹிணியில்;
அம்சம் ஆவார் திருப்பாணாழ்வார் ஸ்ரீவத்ச மருவின்.


வாழ்ந்தார் திருப்பாணாழ்வார் திருக்கோழியில்;
வளர்ந்தார் பாணர் குலத்தில் தீண்டத் தகாதவராக.


மன்னனையும், பெருமானையும் பாடும் பாடல்களால்
மறக்கச் செய்வார்கள் பாணர்கள் அகில உலகையும்.


அரிய பக்தி பூண்டிருந்தார் திருப்பாணர் திருமால் மீது;
அனுமதி இல்லை திருவரங்கத்தினுள் நுழைவதற்கு!


வழிபட்டு வந்தார் தன் இனிய பாடல்களால் – வேறு
வழியின்றிக் காவேரியின் மறுகரையில் நின்றபடி.


செல்வார் திருப்பாணாழ்வார் காவிரியின் தென்கரைக்கு;
தொழுவார் அரங்கனை அக்கரையில் இருந்த வண்ணம்.


எடுத்துச் சென்றார் ஆலய அர்ச்சகர் லோகசாரங்கர் – பொற்
குடத்தில் பெருமான் திருமஞ்சனத்துக்கு காவிரியாற்று நீர்.


விலகச் சொன்னார் அர்ச்சகர் வழியில் நின்றிருந்த பாணரை;
விலகவில்லை பக்திப் பரவசத்தில் மூழ்கி நின்றிருந்த பாணர்!


கல்லால் அடித்தார் அர்ச்சகர் லோகசாரங்கர் திருப்பாணரை;
கல்லடி பட்டு வழிந்தது குருதி திருப்பாணாழ்வார் தலையில்!


கண்டு கொள்ளவில்லை அர்ச்சகர் அடிபட்ட பாணரைச் சிறிதேனும்;
கொண்டு சென்றார் நீரை மேள தாளத்துடன்; சத்திர சாமரத்துடன்.


திடுக்கிட்டார் அர்ச்சகர் அங்கு கண்ட காட்சியால் – பாணருக்கு
அடிபட்ட அதே இடத்தில் உதிரம் வழிந்தது பெருமான் நெற்றியில்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


11a. Thirup PANAzhwAr (1)


Thirup PANAzhwAr was born as an amsam of the Sree Vatsam of Lord Vishnu. He was born in the month of KArthigai under the star ROhiNi. He lived in Thiruk kOzhiyoor and belonged to the race of pANar – who were at that time considered as untouchables.


PANars were devoted to singing the praise of the Gods and Kings. Thirup pANAzhwAr was a staunch devotee of Vishnu in the form of RanganAthan. But he could not enter the temple of Srirangam because of his caste.


He would stand on the southern bank of the river Kaveri and sing the praise of Lord with deep devotion. He would be lost to the external world as he would be immersed in ecstasy and bliss.


The temple priest Loka SArangan used to fetch water from the river Kaveri to do abhishekam to the Lord’s vigraham (idol) in a gold pot everyday.


One day the priest found that his path was obstructed by Thirup pAnAzhwAr. He ordered Thirup pANAzhwAr to make way for him by moving away. But Thirup pAnAzhwAr was completely lost to the external world and did not move away.


The priest threw a stone at him and walked away without caring about the AzhwAr – who had started bleeding from his forehead. The priest went on carrying the river water accompanied by the usual procession of Umbrella, chAmaram, and various musical instruments to the temple.


When he entered the Sanctum Sanctorum he was shocked to find the deity also bleeding from the same spot Thirup pANar was seen bleeding.

 
bhagavathy bhaagavatam - skanda 12

12#6a. அகந்தை அடங்கியது

“சக்தியின் உபாசனையே கூறப்பட்டு வருகிறது
நித்திய வழிபாடாக வேதங்களில் வேதியருக்கு.

உள்ளனர் அந்தணர் பலர் வைஷ்ணவர்களாக;
உள்ளனர் அந்தணர் பலர் காணபத்யர்களாக.

உடுக்கின்றனர் சிலர் மர உரிகளை – சிலர்
உடுப்பதில்லை எதையுமே திகம்பரர்களாக.

இருக்கின்றனர் பலர் காபாலிகர்களாகவும்,
சார்வாக்கர்களாகவும், பௌத்தர்களாகவும்.

மங்களமான சக்தி உபாசனையை விட்டு விட்டு
இங்ஙனம் பலர் மாறுபடுவது ஏன் எனக் கூறுங்கள்!”

வினவினான் முனிவரிடம் ஜனமேஜயன்;
விளக்கினார் முனிவர் ஜனமேஜயனுக்கு.

“யுத்தம் நடந்தது தேவ அசுரர்கள் இடையே;
ரத்த ஆறு ஓடியது நூறு ஆண்டுப் போரில்.

வென்றனர் தேவர்கள் தேவியின் அருளால்;
சென்றனர் அசுரர்கள் பாதாள உலகுக்கு ஓடி!

மறந்து விட்டனர் தேவர்கள் தேவியின் உதவியை!
மமதை கொண்டனர் தமது வலிமையை வியந்து!

பாராட்டிக் கொண்டனர் தம்மைத் தாமே புகழ்ந்து;
பார்த்தனர் ஆவிர்பவிக்கும் ஒரு யக்ஷ ரூபத்தை!

தோன்றியது ஒரு பேரொளி அவர்கள் முன்பு!
மின்னியது கோடி சூரியரின் பிரகாசத்துடன்;

மின்னியது கோடி சந்திரரின் குளுமையுடன்;
மின்னியது கோடி மின்னல்களின் ஒளியுடன்!”

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6a. Pride was subdued!


king Janameyan asked Sage VyAsA this question, “Shakti UpAsana is stated as the most suitable for the Brahmins in all the VedAs. Yet many of the brahmins choose to worship VishNu or Ganesa.

Some of them become KApAlikAs. Some of them become the followers of Buddha or ChArvAka. Some of them wear the bark of trees while the others go around naked wearing nothing at all.

What makes them move away for the Devi upAsana and do all these things? Why don’t they have even a trace of faith in the Vedas?”

VyAsA told King Janamejayan,” Once a terrible war took place between the DevAs and the AsurAs. It went on for one hundred years. Rivers of blood flowed and many lay dead on either side.

Finally the DevAs defeated the AsurAs with the help of Devi. The defeated AsurAs went back to PAtAlA and hid themselves. The Devas forgot the help rendered by Devi for their victory. They imagined that they had won the war with their own might and strength. So they were praising and congratulating one another.

Suddenly they saw a formless brilliant light appear in front of them. It had the brilliance of ten million Suns and the coolness of ten million moons shining together. It shone with the brilliance of ten million lightnings shining at the same time.”




 
ஆழ்வார்கள்

11b. திருப்பாணாழ்வார்

பாரம் நிறைந்தது லோகசாரங்கர் மனத்தில் – இரவு
பாவம் செய்ததால் பரிதவித்தார் உறங்க முடியாமல்!


தோன்றினான் இறைவன் இரவில் அவர் கனவில்;
ஊன்றினான் கருத்தில் அர்ச்சகர் செய்த பிழையை.


“தாக்கினாய் தன்னை மறந்து என்னைப் பாடிய
தூய பக்தனை ஈவு, இரக்கம் இன்றிக் கல்லால்.


தாக்கியது நீ வீசிய கல் என்னையும் விடாமல்
தங்கியிருக்கிறேன் அவனுள் நான் என்பதால்.


இழைத்த தவறுக்கு மன்னிப்புக் கேள் அவனிடம்;
அழைத்து வா நீயே அவனை என் சன்னதிக்கு.


அமர்த்தி வா பாணனை உன் தோட்களின் மீது;
ஆகும் இதுவே உன் பிழைக்குப் பிராயச்சித்தம்”


மறுநாள் சென்றார் பாணரிடம் லோகசாரங்கர்;
மன்னிப்புக் கோரினார் தான் இழைத்த தீமைக்கு.


வற்புறுத்தினார் பாணரைத் தன் தோட்களின் மீது அமர;
வர மறுத்தார் பாணர் தன் குலப்பிறப்பை எண்ணி அஞ்சி.


வலியச் சுமந்து சென்றார் பாணரை லோகசாரங்கர்;
வழியில் கண்டவர்கள் அதிசயித்து நின்று விட்டனர்.


இறக்கி விட்டார் திருப்பாணாழ்வாரை கருவறையுள்;
இருந்தார் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டு.


மகிழ்ந்தார் திருப்பாணர் திருமால் தரிசனத்தால்;
நெகிழ்ந்தார் பெருமானின் பாதங்களைக் கண்டு.


அடி முதல் முடி வரை கண்டு புளகமுற்றார் பாணர்;
அமலன் ஆதிபிரானின் அழகை அள்ளிப் பருகினார்!


பரவசத்துடன் பாடினார் பிரானை வர்ணனை செய்து;
மறந்தே போனார் தன் ஊரையும் பேரையும் பாணர்!


அளித்தார் அழகிய பத்துப் பாடல்களை பாணாழ்வார்;
அமைந்தன இவை உடல் உறுப்புக்களின் வர்ணனையாக


பெருமானின் பாதம், ஆடை , உந்தி, உத்தர பந்தனம், மார்பு,
பெருமானின் கழுத்து, வாய், கண்கள், உடல், தலை என்று.


தன்னுடன் இணைத்துக் கொண்டான் பெருமான் பாணரை
“என் அமுதினைக் கண்ட கண்கள்…..” என்று பாடியவுடன்.


காந்தமும், இரும்பும் போல இணைந்தனர் அவ்விருவரும்;
காய்ந்த இருப்பில் வீழ்ந்த நீரென மறைந்தார் திருப்பாணர்!

அரியவன் அல்லன் நம் அரி மெய்யன்பர்களுக்கு!
அருள்வான் அன்புடன் ஒரே போல அனைவருக்கும்!


பட்டப் பெயர்கள் ஆகும் திருப்பாணாழ்வாருக்கு
‘முனி வாஹனர்’, ‘யோகி வாஹனர்’, ‘கவீஸ்வரர்’


“திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


11b. Thirup pAnAzhwAr (2)


The priest Loka SArangan became heavy in heart and spent a restless night – sleeping in fits and starts. God appeared in his dream and made him realize his folly.


“You harmed my true devotee by hitting him with a stone and causing a bleeding wound. I am in him and he is in me. So I was also bleeding along with him due to the wound you had caused. Beg for his pardon and bring him to my sannadhi carrying him on your shoulders – without any disgust or hatred. That will be the parihAram for the sin you have committed today.”


The priest went to Thirup pAnAzhwAr and fell at his feet seeking forgiveness. He compelled Thirup pANAzhwAr to climb on to his shuldes. But pANAzhwAr refused firmy – considering his lower caste as compared to the higher caste of the priest.


But the priest compelled him to sit on his shoulders and carried him to the temple. The onlookers were wonderstruck by this strange sight. The priest let down Thirup pANAzhwAr from his shoulders, stood aside and watched the wonderful happenings.


Thiru pAnAzhwAr’s lifetime dream had finally come true. He saw the beautiful feet of the lord first and then went up admiring Him part by part right upto the head of the Lord. He went into an ecstasy and started singing the praise of the Lord’s beauty in ten beautiful verses. These ten pasurams are known aa “Amalan Adhip pirAn’.


He described the ten parts of his Lord’s body in those ten verses namely Lord’s feet, lord’s dress, Lord’s navel, Lord’s waistband, Lord’s Chest, Lord’s neck, Lord’s mouth, Lord’s eyes, Lord’s body and Lord’s head.


When Thirup pANAzhwAr sang saying that ” My eyes which have feasted on the beauty of my Lord would not see anything else” he merged with his God inseparably. They came together like a piece of iron and a magnet.

AzhwAr disappeared just as the water thrown on a hot iron piece does!

The other names of Thirup pAnAzhwAr are “Muni vAhanar, YOgi vAhanar and also Kaveeswarar”. His life proves the fact that God is accessible to everyone of us – whatever be our race or caste or language or varNa.

God cares only for our true and sincere devotion and nothing else.

 
bhagavathy bhaagavatam - skanda 12

12#6b. “யார் அது?”

அடைந்தனர் வியப்பு அதைக் கண்ணுற்ற தேவர்கள்;
விடை தெரியவில்லை “அரிய மாயை புரிவது யார்?”

‘ஆராய வேண்டும் இந்த யக்ஷ உருவத்தைப் பற்றி;
அறிய வேண்டும் இந்த யக்ஷ உருவத்தைப் பற்றி!’

அனுப்பினர் தேவர்கள் அக்னி தேவனை முதலில்;
வினவினான் அருகில் சென்று “யார் நீ?” என்று !

“சொல் முதலில் நீ யார் என்பதை என்னிடம்!
சொல் உன் வல்லமை எது என்று என்னிடம்!”

“அக்னி தேவன் ஆவேன் நான் என்று அறிவாய்!
ஜாதேவேதன் என்று எனக்கு இன்னொரு பெயர்!

எரிக்க வல்லவன் நான் எந்தப் பொருளையும்;
எடுத்துள்ளேன் அனலன் என்ற பட்டப் பெயர்!”

துரும்பைக் கிள்ளி எறிந்தது அந்த யக்ஷ உருவம்;
“எரித்துக் காட்டு இதை எனக்கு!” என்றது உருவம்.

முயன்றான் அக்னி தேவன் அதைச் சுட்டெரிக்க;
முடியவில்லை எத்தனை முறை முயன்றாலும்!

நாணித் தலை குனிந்தான் அக்னி தேவன் – உடனே
காணாமல் போய்விட்டான் அந்த இடத்திலிருந்து.

அனுப்பினர் தேவர்கள் வாயு தேவனை அடுத்ததாக;
வினவினான் இவனும் ஆணவத்தோடு, “யார் நீ?”

“சொல் முதலில் நீ யார் என்பதை என்னிடம்!
சொல் உன் வல்லமை எது என்று என்னிடம்!”

“வாயுதேவன் ஆவேன் நான் என்று அறிவாய்!
வாரி வீச வல்லவன் நான் எந்தப் பொருளையும்.”

துரும்பைக் கிள்ளி எறிந்தது அந்த யக்ஷ உருவம்;
“வாரி வீசிக் காட்டு இதை உன் வல்லமையால்!” என

முயன்றான் வாயு தேவன் அதைச் சுழற்றி வீசி விட;
முடியவில்லை எத்தனை முறை முயன்ற போதும்!

நாணித் தலை குனித்தான் வாயு தேவன் – உடனே
காணாமல் போய்விட்டான் அந்த இடத்திலிருந்து.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6b. ‘Who was that?”


The DevAs did not know who was behind the appearance of the brilliant and formless light! They had to find out more about that strange light. They must know who was causing it. They sent Agni Deva to find out all bout that strange light.

He went and asked the glowing light, “Who are you?” It replied,”Tell me first who you are and what is yours speciality.”

Agni said proudly, “I am Agni Devan. My other name is JAthavEdan. I can burn any amount of anything offered to me. I am called Analan – meaning one who never says “Enough!”

The formless light threw a blade of grass in front of Agni and said, “Burn this straw now!” Agni tried his best to burn it down but could not. He got ashamed of himself and disappeared from there.

Now VAyu Devan was sent by the DevAS to find out about the strange glow of light. He asked it, “Who are you?” It said, “Tell me first who you are and what is your speciality”

VAyu said “I can blow off anything however heavy. I am called as VAyu Devan.”

The glow of light threw a blade of grass and said, “Blow this away “. VAyu could not blow away the blade however hard he tried. He too became ashamed of himself and disappeared from there.

 
ஆழ்வார்கள்

11c. திருப்பாணாழ்வார்

அமலன் ஆதிபிரான்

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே (1)


உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே (2)


மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே (3)


சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே (4)


பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே (5)


துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய-
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே (6)


கையின் ஆர் சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே (7)


பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே (8)


ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி-ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே (9)


கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே (10)


[FONT=&quot]“திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி[/FONT]
 
bhagavathy bhaagavaam - skanda 12

12#6c. இந்திரன் தோல்வி

தேவர்கள் கூறினர் இந்திரனிடம் ஒருபோல;
“தேவர்களின் அதிபதி நீரே அறிந்து வாரும்!”


துரத்த முயன்றான் இந்திரன் யக்ஷ உருவத்தை;
விரைந்து ஓடிப் போகவில்லை யக்ஷ உருவம்;


பாய்ந்து வந்தது இந்திரனை நோக்கி வேகமாக;
மாய்ந்து போனது காற்றோடு காற்றாக நொடியில்!


மமதை மறைந்து போனது இந்திரன் மனத்தில்;
‘மதிக்கவில்லை என்னை ஒரு பொருட்டாகவே!


திருப்பி அனுப்பியது உருவம் அக்னி தேவனை;
திருப்பி அனுப்பியது உருவம் வாயு தேவனை.


பேசவுமில்லை மதிக்கவுமில்லை என்னை;
பேசாமல் மறைந்து விடுகிறேன் இங்கிருந்து!


மானம் பெரிதா அல்லது உயிர் பெரிதா எனக்கு?’
மனம் ஓடிந்ததால் சரண் புகுந்தான் யக்ஷனிடம்.


“மாயா பீஜ மந்திரத்தை ஜபித்துவா இந்திரா!”
மாயக் குரல் ஒலித்தது விண்ணிலிருந்து !


தியானம் செய்தான் ஒரு லக்ஷம் ஆண்டுகள்
தியாகம் செய்தான் அன்ன, பான, நித்திரையை.


தோன்றியது பேரொளி மீண்டும் அந்த இடத்தில்
நண்பகலில், சித்திரை மாதத்தில், நவமி திதியில்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6c. IndrA’s humiliation

Now all the Devas told Indra,” You are our king. So you must go and find out about that strange light.” IndrA tried to chase the glow of light. It did not move away but came charging towards Indra and then disappeared suddenly.


Indra felt humiliated now. ‘The strange light spoke to Agni Devan and Vayu Devan but it did not even speak to me. It did not care about me nor fear me.’ Indra felt belittled and distressed at this thought.


Suddenly a voice was heard from the Sky,” Indra! Do the japam of MAyA Beeja mantra.”


Indra did penance for one lakh years forgoing food, drink and sleep. The same brilliant light appeared again on the Navami Day of Chaitra month at noon.










 

ஆழ்வார்கள்

12a. திருமங்கை ஆழ்வார் (1)

தோன்றினார் இவர் திருக்குரையலூர் கிராமத்தில்
சேனைத் தலைவர் ஆலிநாடர் வல்லித் திருவுக்கு.


அவதரித்தார் கார்த்திகை மாதம் கார்த்திகையில்;
அவதரித்தார் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக.


இயற்பெயர் ஆயிற்று இவர் நிறத்தால் நீலன் என்று;
இளமையில் கற்றார் வீரக் கலைகளும் வேதங்களும்.


அளித்தார் சோழமன்னர் நீலன் வீரத்துக்குப் பரிசாக
திருமங்கை என்ற தலைநகரைக் கொண்ட சிற்றரசை.


காலன் போல இருந்தார் தன் பகைவர்களுக்கு – பர
காலன் என்ற பெயர் பெற்று அரசாண்டார் நீலன்.


பிறந்திருந்தாள் தேவகன்னிகை அமங்கலை
பூமியில் குமுதவல்லியாக கபிலரின் சாபத்தால்.


சிறந்திருந்தாள் அறிவில், அழகில், புகழில்;
விரும்பினான் நீலன் குமுதவல்லியை மணக்க.


நிபந்தனை விதித்தாள் அவள் தன்னை மணக்க;
“நித்தம் உணவளிக்க வேண்டும் 1008 அடியவருக்கு”.


அளித்தான் நீலன் உணவு நிபந்தனைப்படியே;
அழிந்தது செல்வம்; சரிந்தது நிதி நிலைமை.


கட்ட முடியவில்லை சோழ மன்னனுக்குக் கப்பம்;
தட்ட முடியவில்லை மூன்று நாட்கள் சிறை வாசம்.


தோன்றினான் எம்பெருமான் நீலன் கனவில்;
காட்டினான் பெரும் புதையல் இருக்குமிடத்தை.


கடனை அடைத்தான் கப்பம் கட்டிய நீலன் – மேலும்
அடியவருக்கு உணவளித்திட எஞ்சியது புதையல்.


திருப்பித் தந்து விட்டான் சோழன் கப்பத்தையும்;
தீர்ந்து போய் விட்டது புதையல் செல்வம் ஒருநாள்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


12a. Thiru Mangai AzhwAr (1)


Thiru Mangai AzhwAr was born as an amsam of SArangam (The bow of Lord Vishnu). He was born on the month of KArthigai under the star KArthigai in Thiruk Kuraiyaloor. He was dark in complexion and so his parents named his as Neelan.


Neelan became well versed in the Art of Warfare as well in SAsthras. The Chozha king was pleased with his valor and made him the king of a country with Thirumangai as its capital city. Neelan proved to be a KAlan (God of death) to his enemies and won the title “ParakAlan.”


Neelan fell in love with Kumudhavalli admiring her beauty, intelligence and fame. It is said that she was a celestial damel who was born on the earth due to the curse of a rushi.


Kumudhavalli laid a condition for their marriage. Neelan must offer feast to 1008 devotees of Lord Vishnu everyday. Neelan agreed and this service went on until he ran out of wealth. He was unable to continue the service or even pay the tribute due to the ChOzha king.


Neelan was captured and imprisoned for three days. God appeared in his dream and revealed to him about a buried treasure. Neelan found the buried treasure. He paid the tribute due to the ChOzha king and used the remaining portion of the treasure in feeding the devotees of Lord Vishnu.


The ChOzha king returned the tribute paid by Neelan, after learning about the service rendered by Neelan and his wife Kumudhavalli to the devotees of Lord Vishnu. But very soon the treasure also got completely exhausted!




 
bhagavathy bhaagavatam

12#6d. உமா தேவி

தோன்றினாள் அவ்வொளியின் நடுவே ஒரு தேவி;
மேன்மையான உருவத்துடன்; இளம் பருவத்துடன்.

கோடி இளஞ் சூரியர்களின் ஒளி கொண்டவள்;
சூடியவள் இளம் பிறைச் சந்திரனைத் தலையில்.

மூடிய ஆடையில் ஒளிர்ந்தன இரு ஸ்தனங்கள்;
வாடாத இளந்தளிர் மேனி கொண்டவள் அவள்;

பாசம், அங்குசம், அபயம், வரதம் பொருந்தியவள்;
பக்தர்களுக்கு நல்ல கற்பக விருக்ஷம் ஆனவள் அவள்.

கொண்டிருந்தாள் மயக்கும் மனோஹர வடிவம்;
கொண்டிருந்தாள் முகத்தில் மூன்று விழிகள்.

மிளிர்ந்தது மல்லிகைச் சரம் அடர்ந்த கூந்தலில்;
ஒலித்தன வேதங்கள் உருவெடுத்து நாற்புறமும்.

மன்மதர்கள் கோடியை வென்றிடும் வனப்பு;
புன்னகை மிளிர்ந்திடும் பிரசன்ன வதனம்.

பத்மராகம் என மின்னியது பூவுலகு – அவள்
பல் வரிசைகள் சிந்திய ஓர் அபூர்வ ஒளியில்.

அணிந்திருந்தாள் சிவந்த பட்டாடைகள் அவள்;
அணிந்திருந்தாள் சிவந்த சந்தனப் பூச்சு அவள்.

காரணங்களுக்கெல்லாம் காரணி ஆவாள் அவள்;
காரணம் கருதாத கருணைக்கடல் ஆவாள் அவள்.

தோன்றினாள் உமா தேவி ஒளி வெள்ளத்தில்;
தோத்தரித்தான் தேவேந்திரன் மெய் சிலிர்த்து!

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்

12#6d. UmA Devi


Indra saw within that glow of Light, a young and beautiful virgin take shape. Her body was as brilliant as ten million young Suns. The colour was of her body was rosy red similar to a fully bloomed JavA flower.

A crescent moon shone on her forehead. Her firm and full breasts and looked very beautiful under her clothes. She was holding a noose and a goad in her two hands. Her other two hands showed the signs of Favour and Fearlessness.

She wore various gem-studded-ornaments and looked auspicious and beautiful. She was like the celestial Karpaga vruksha tree fulfilling all our desires. She had three eyes and her dark hair was adorned by garlands of MAlati flowers.

She was praised on Her four sides by the Four Vedas which had assumed physical forms. Her teeth shed a lustre on the ground as if they were PadmarAga jewels. Her face sported a sweet smile. Her dress was red in color and Her body was smeared with red sandal paste.

She was the Cause of all the Causes. She was merciful to everyone for no special reasons. When Indra saw UmA Devi, the hairs on his body stood on their ends with ecstasy. His eyes were filled with tears of love and devotion. He fell at her feet and sang various hymns of praise.

 
ஆழ்வார்கள்

12b. திருமங்கை ஆழ்வார் (2)

வழிப்பறி செய்தார் நீலன் வழிப் போக்கர்களிடம்;
வழி காட்டியது அது திருப்பணியைத் தொடர்ந்திட.


மணக் கோலத்தில் வந்தார் பெருமான் லக்குமியுடன்;
மணமக்களை மிரட்டினார் கள்வர் தலைவன் நீலன்.


எல்லா நகைகளையும் தந்துவிட்டனர் புதுமண மக்கள்!
கால் விரல் மோதிரத்தைத் தரவில்லை எம்பெருமான்.


குனிந்து பற்களால் கடித்து மோதிரத்தை எடுக்கையில்,
குனிந்து காதில் மந்திரத்தை உபதேசித்தான் பெருமான்.


அறிந்து கொண்டான் நீலன் மணமகன் யாரென்பதை;
அடிபணிந்து கோரினான் மன்னிப்பு பெருமானிடம்.


எட்டெழுத்து மந்திரத்தின் பொருள் உணர்ந்தார் நீலன்;
கட்டவிழ்ந்தன தமிழ்ப்புலமையும் இறைபக்தியும் கலந்து!

“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம்”


அரிய பாசுரங்கள் 1253 அளித்தார் திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி (1084); திருக் குறுந்தாண்டகம் (20)


திரு நெடுந்தாண்டகம் (30); திரு ஏழு கூற்றிருக்கை (1)
பெரிய திருமடல் (78); சிறிய திருமடல் (40) என்பன.


நாற்கவிகளிலும் சிறந்திருந்தார் திருமங்கை ஆழ்வார்;
“நாலுகவிப் பெருமாள்” என்று புகழ்ந்தார் ஞானசம்பந்தர்.

“திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

நாற்கவி என்பவை எவை என்று அறிவோமா?

1. ஆசு கவி :- உடனுக்குடன் கவி பாடுவது

2. சித்திர கவி :- பாடலும், பொருளும் அலங்காரமாக அமைவது

3. விஸ்தார கவி :- நன்கு விவரித்துப் பாடுவது

4. மதுர கவி :- நல்ல இசை நயத்துடன் பாடுவது

நாற்கவியிலும் சிறந்து விளங்கியவர் திருமங்கை ஆழ்வார்.

திரு ஞான சம்பந்தர் இவரை 'நாலு கவிப் பெருமாள்' என்று போற்றியுள்ளார்

12b. Thiru Mangai AzhwAr (2)

Now Neelan turned to waylaying the travelers and looting their belongings with a group of men. The loot was used up in feeding the devotees of Vishnu as before.


Lord Vishnu and Lakshmi Devi came with a group of people posing as
newly wedded couple. Neelan and his gang stopped them and demanded them to handover everything they had.


The people in the group removed their jewels and dropped them on the piece of cloth spread by these men. All the jewels were there except the toe ring worn by the groom. He said he was unable to remove it.


Neelan kneeled down and tied to remove the toe ring using his teeth. The groom bent down and uttered in his ears the NArAyaNa Manthram. Now Neelan understood who the groom really was and started singing like a freely flowing water in a river.

Thiru Mangai AzhwAr sang Thiru NedunthANdagam ( consisting of 30 verses); Thiru KuRnthANdagam (consisting of 20 verses); Thiru Ezhu kootRirukkai (just 1 verse); SiRiya Thirumadal (consisting of 40 verses); Periya Thirumadal (consisting of 78 verses) and Periya Thirumozhi (consisting of 1084 verses).


Out of the 4000 verses of NAlAyiram Dhivya Prabandham, 1253 were sung by Thiru Mangai AzhwAr. He was well versed in all the four types of poetic styles namely ‘Aasu kavi’, “Chiththira kavi’, ‘VisthAra kavi’ and ‘Mathura kavi’. Thiru JnAna Sambandhar praised him as “NAlu kavip PerumAL” meaning “An exponent in all the four types of poetry”.



 

Latest posts

Latest ads

Back
Top