#148. கலி தரும் இன்னல்கள்!
கலி காலத்தில் நடப்பவை எல்லாம்,
கிலி அளிப்பனவாக இருந்திடுமே!
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் முன்பே,
அறிந்திருந்தார் இதை ஞானியர் அன்றே!
பொறுமை, இரக்கம், மனிதனின் ஆயுள்,
அறிவு, ஞானம், சுத்தம், குறையும்.
பொருளே பெரியது; குலம், வம்சம்,
திறமை, உண்மை, நேர்மை அல்ல.
கணவன் பேச்சை மனைவி மதியாள்,
கனவான் கூற்றை சிறியவர் மதியார்.
மனைவி சகோதரன் கை ஓங்கி நிற்கும்,
தனது சகோதரர்க்கு எங்கும் இடம் இல்லை .
வர்ணங்கள், ஜாதி பேதங்கள் அழிந்திடும்,
தர்மம் , தானம், தவம் குறைந்திடும்;
திருமணம் என்பது இரு மனப்பொருத்தம்;
ஒரு ஆண், ஒரு பெண் மட்டுமே தேவை.
கோத்திரம், கல்வி, குடும்பச் சூழ்நிலை,
கேட்கவே வேண்டாம் வேறு எதையுமே!
இல்லற இன்பமே அனைவரின் தேவை;
இல்லறம் நல்லறம் புரிவதற்கு அல்ல!
கல்வியை விற்று பல அந்தணர்களும்,
பொருட்களை விற்று மற்றவர்களும்,
கற்பை விற்று பல பெண்களும், அறம்
பெருந்தாத வாழ்க்கை வாழ்ந்திடுவர்!
வணிகம் என்றாலே வஞ்சகம் தான்,
அனைவரும் செய்வதால் அதுவும் சரியே.
நாணயம், நேர்மை, என்று நினைத்தால் ,
அனைத்தையும் இழந்து, நிற்க வேண்டும்.
திறமையும், அறிவும் நன்கு பயன்படும்,
தன் குடும்பத்தினரை பேணுவதற்கே!
சிறந்த அறங்கள் செய்வார் பலரும்,
தம் பெயர் புகழுடன் விளங்குவதற்கே!
வேலியே பயிரை மேய்வது போலே,
வேந்தனே மக்களைச் சுரண்டிடுவான்!
பொன், பொருள், பெண் என்ற எல்லாம்
தன்னது என்றே பறித்துக் கொள்வான்
அதிக வெய்யில், அதிக வெப்பம், புயல்;
அதிகக் காற்று, அதிக மழை , வெள்ளம்;
பஞ்சம் என்று இயற்கையும் தன் பங்குக்கு
வஞ்சனை செய்யும்; வாட்டி வதைக்கும்!
வருமுன் காப்போம், மிகவும் கவனமாக;
கலியின் பற்பல இன்னல்களில் இருந்து;
இறைவன் திருஅருள் நம் மீது இருந்தால்,
இது முற்றிலும் சாத்தியம், சத்தியமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
#148. KALI PRABHAAVAM.
Thousands of years ago, Kali Prabhaavam had been foreseen and enlisted by great Gnaanis of ancient India. Most of them are proving to be accurately foreseen true predictions.
Virtues like Patience, sympathy, life span, intelligence, wisdom, cleanliness, will be decreasing continuously. Money or riches will be the only criterion not the varnam, vamsam, talent, satyam or honesty.
Dharmam, Dhanam and Tapas will be on the decline. The distinctions of castes and communities will vanish. For a marriage to take place, we only two people willing to tie the knot.
No importance will be given to the gothram, education, family background, social status etc. The aim of the marriages will be pure physical pleasures and not upholding sanaathana dharma.
Wife will slight her husband and the poor will slight the rich! The wife’s brothers will have a say in ever issue while the brothers husbands will kept at bay.
Brahmins will make a livelihood by selling their knowledge, and the other three varNas by selling other things. Many women will make a living selling their virtue. The word business will imply cheating. Since everyone will be cheating, there will be no social stigma attached to it.
All the time and talent of a man will be utilized in minding the welfare of his own family. Even those who do good deeds will be doing them only for self advertisement, a good name and fame.
The rulers will loot the citizens systematically. Gold, land and beautiful women will all be grabbed by the rulers. Too much heat, floods, storms, famines and droughts will affect the normal lives of the people.
The only way to protect from the effects of Kali is to surrender to God and catch hold of His lotus feet strongly. We can not remove the bad effects of Kali but we can protect ourselves from them.