• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Abirami Andhadhi

Status
Not open for further replies.
# 31. ஆட்கொண்ட திறம்.

உமையும், உமையொரு பாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமயங்களுமில்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

உமையும், உமையொருபாகனும் என் கனவில் தோன்றி என்னை அவர்கட்க்கு மெய்யன்பர் ஆக்கினர். எனவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்கள் ஏதும் இல்லை. என்னை ஈன்று எடுத்த தாயும் வேறில்லை. மங்கையர் மீது எனக்கு காதலும் இல்லை.
 
# 32. என்னே உன் நேசம்!

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே!


இறைவனின் இடப்பாகத்தில் இடம்பெற்ற தேவியே! ஆசைக் கடலில் அகப்பட்டு, இரக்கம் என்பதே இல்லாத எமனின் பாசக்கயிற்றால் மரணமடைய இருந்த என் தலை மீது, உன் திருவடித் தாமரைகளை நீயே வலிய வந்து சூட்டி என்னை ஆட்கொண்டாய்! உன் உள்ளன்பை நான் என்னென்று போற்றிப் புகழுவேன்?
 
# 33. அபயம் அருள்வாய்!

இழைக்கும் வினை வழியே அடும்காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து 'அஞ்சல்' என்பாய்! அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

எம்பெருமானின் உள்ளதையெல்லாம் உருக்கும் நறுமணமும், எழில் நகில்களும் கொண்ட மெல்லியலாளே! நான் செய்த வினைகளின் பயனாக, நான் நடுங்கும்வண்ணம், எமன் என்னை அழைக்கும் போது, உன்னைச் சரண்புகுவேன். "அஞ்சேல்" என்று நீ எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.
 
# 34. உன் இருப்பிடங்கள் இவை.

வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே
பரிவோடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமமும், பாகமும் பொற்
செந்தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.



அடைக்கலம் புகும் அடியவர்களுக்கு விண்ணுலக வாழ்
வை அளித்துவிட்டு; தேவி பிரமனது நான்கு முகங்களிலும், திருமாலின் மார்பிலும், சிவபிரானுடைய இடப்பாகத்திலும், பொற்றாமரை மலரிலும், அம்மலரை மலர வைக்கும் சூரிய வடிவிலும், சந்திர ஒளியிலும் வீற்று இருப்பாள்.
 
# 35. என்னே என் பேறு!

திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணைமேல் துயில் கூறும் விழுப்பொருளே.

அலைகடலில் பாம்பணைமீது அறிதுயில் கொள்ளும் திருமாலின் திறனாகிய வைஷ்ணவி தேவியே! இளம் பிறையின் மணம் கமழும் உன் சிறிய செவ்வடிகளைத் தலையில் சூட்டி என்ன பேறு எமக்கு அளித்து விட்டாய் நீ! எண்ணில் அடங்காத தேவர்களுக்கும் இந்தப் பேறு கிடைக்குமோ?
 
# 36. அருளின் இயல்பு என்ன?

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது! அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே!


செல்வமே! செல்வத்தினால் விளையும் போகமே! போகத்தினால் ஏற்படும் மயக்கமே! மயக்கத்தில் ஏற்படும் தெளிவே! தாமரை மலர்ப் பீடத்தில் அமர்ந்து இருக்கும் அம்பிகையே!
என் மனதில் வஞ்சமாகிய மாயையின் இருள் சற்றும் இல்லாதபடி, ஒளி வெளி ஆகி இருக்கும், உன் திருவருளின் தன்மை என்ன என்று சிறிதும் எனக்குத் தெரியவில்லையே!
 
# 37 . அன்னையின் அணிகலன்கள்.

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டு
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே!


எட்டு திசைகளையே ஆடையாக அணியும் எம்பெருமானுடன் இணைந்தவளே! உன் கைகளில் கரும்பு வில்லும், மலர்க்கணையும் அணிந்துள்ளாய். தாமரை மலர் போன்ற உன் மேனியில் நீ அணிவது வெண்முத்துமாலை. பாம்பின் படம் போன்ற இடையின் மீது பல மணிகள் இழைத்த மேகலையையும், பட்டாடையும் அணிந்துள்ளாய்.
 
# 38. உலகீர் உணர்வீர்!

பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும், பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.

பவளக்கொடியைக் காட்டிலும் பழுத்துச் சிவந்த வாயையும், குளிர்ந்த புன்னகையையும் துணையாகக் கொண்டு; எம்பெருமானை அவர் யோகநிலை கெடும்படி போர் செய்த; நகில்களின் பாரத்தால் துவளும் உடுக்குப் போன்ற இடையி
னையுடைய தேவியை வணங்கி, விண்ணுலகை ஆளும் பேற்றினைப் பெருவீர்களாகுக!
 
# 39. என் குறையே!

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன் பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு; மேலிவற்றின்
மூளுகைக்கு, என் குறை நின் குறையே அன்று! முப்புரங்கள்
மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே!

முப்புரங்களை அழிப்பதற்கு அம்பு எய்த வில்லாளனாகிய சிவபிரானின் இடப் பக்கம் உறையும் தேவியே! என்னை ஆள்வதற்கு உன் திருவடித் தாமரைகள் உள்ளன. யமனிடமிருந்து மீட்பதற்கு உன் கடைக்கண்கள் உள்ளன. இவற்றின் மீது என் கருத்தைச் செலுத்தாதது என் குறையே அன்றி உன் அருளின் ஏற்பட்ட குறை அன்று!
 
"Thadhi uru Matthil"

In this song, bhattar depcits how worst is our creation. Like the curd getting churned, we are also taking so much of births, we see so many parents, brothers, friends... Who is dediding all these? It is, she the superior. Now bhattar confirmly said that devi has decided to relive the soul of bhattar from this worldily issues. To make this much more clear, he adds that she has been worshipped by brahma, vishnu and sivan. Why is it so? When she decides to do something, noone can stop her, even the 3murthis are just devotees of her. That much power she possess. She alone has the power to give "Moksha".

When kama was fired by shiva, she gave him his form once again. When yema was hitted by shiva, devi rescued him. (Since, he was hitted by shiva's left leg (Which is actually devi's property), it was filled with passion and because of that he did not died). That much is her grace and power.

The usage of word "Thalarvu iladhor" is the for us. When we worships her with whole-hearted, she will decide and gives us the free from this illusionary world.

Check the order: Kamalalayan, madhi uru veni maghizhnan, mal
Whether the order should be creator, protector, destructor or destructor, creator, protector.
But here bhattar goes in a different order, of creator, destructor and protector.

This is mainly to say us that because of the willingness of devi, creator has created us. When we worshipped her, she will destroy all our sins and frees us from this live and protects us under her lotus feet. There is no difference between the protector and devi at all (You can see that even in this song; Brahma and shiva have been called by someother symbolic language, whereas vishnu has been directly identified as "Maal"- "Ariyalaal devi illai aiyan iyaaranarukke"- Thirunavukarasar)

One word here to be noted is "ENdrum thudhi uru sevadi". It means they are always worshipping her at all times and because of their worship devi's feet has turned red. If it so, who is doing their jobs? It is not logical. So here we should think of the song "Nindrum irundhum..." like that whatever works they do these 3 devas think of devi and with her order only they functions.

Pranams
 
# 40. புண்ணியம் அன்றோ?

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன்செய் புண்ணியமே?

ஒளி பெருந்திய நெற்றிக்கண்ணை உடையவளை; விண்ணோர்கள் வந்து வணங்க எண்ணும் எம்பெருமாட்டியை; அறியாமை நிறைந்த உள்ளத்தினால் காண இயலாத கன்னியை; கண்டு போற்ற வேண்டும் என பக்தி செய்ய எண்ணிய எண்ணம், நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயனால் அல்லவா?
 
# 41. பத்ம பாதம் பதித்தவள்.

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.



புதிய பூங்குவளை போன்ற கண்களை உடையவளும், பொன்னர் மேனியரும் மங்கை ஒரு பாகனாக இணைந்து வந்து; தன் அடியார்கள் இடையே நம்மையும் இருக்கச் செய்து; திருவடித் தாமரைகளையும் தலை மீது பதித்திட என்ன புண்ணியம் செய்துள்ளேமோ நெஞ்சமே !
 
# 42. என்னே நின் ஆற்றல்!

இடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டிறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை, நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
படங்கொண்ட அல்குல் பனி மொழி வேத பரிபுரையே!

பரந்த இடத்தில் விம்மிப் பருத்து, முத்து மாலைகளோடு விளங்கும், தளர்ச்சி அற்ற மலைகளாகிய நகில்களால், இறைவனின் உள்ளத்தையே ஆட்டம் காணச் செய்யும் சிறப்புடைய தேவி; பாம்பின் படம் போன்ற அழகிய கூந்தலையும், குளிர்ந்த மொழிகளையும், வேதங்களாகிய சிலம்புகளையும் உடையவள்.

 
# 43. செம்பாகத்தில் இருப்பவள்.

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்ச பாணி இன்சொல்
திரிபுர சுந்தரி, சிந்தூர மேனியள் தீமை நெஞ்சில்
புரிவர வஞ்சரை அஞ்சக்குனி பொறுப்புச்சிலைக் கை
எரிபுரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

சிலம்புகள் அணிந்த சீரிய திருவடிகளையும், அங்குச பாசங்களையும், ஐந்து கணைகளையும் உடையவள். இனிய சொல் வழங்கும் திரிபுர சுந்தரி. அவள் சிவந்த மேனியள். தீய நெஞ்சம் படைத்த முப்புரத்தாரை அழிக்க மேரு மலையினை வில்லாக ஏந்திய திருக்கரத்தையும், நெருப்பு வண்ண மேனியையும் உடைய சிவபிரானின் செம்பாதியில் வீற்று இருக்கும் நம் அம்பிகை.
 
# 44. மேலான தெய்வம் வேறு இல்லை!

தவளே இவள்; எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினாள்; ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்;
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய் தொண்டு செய்தே.

இந்த அம்பிகையே எங்கள் சிவபிரானின் மங்கலமனை மாட்சித் துணைவி ஆவாள். இவளே படைப்பு முறையில் சிவபிரானின் தாயும் ஆவாள். ஆகையால் இவளே அனைத்து தெய்வங்களுக்கும் மேலான தலைவி ஆவாள். இனிமேல் இவளுக்கும் மேலான தெய்வம் உண்டு என்று நம்பி அதற்குத் தொண்டுகள் செய்து துவளமாட்டேன்!
 
இந்தப் பாடலில் சற்று உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது இந்த 'தவளே' எனும் சொல்.
அருந்தவம் ஆற்றி அரனை அடைந்தவள் இவள். அதைத்தான் தவளே இவள் எனக் குறிப்பிடுகிறார்.
தவம் செய்பவள் என்பதல் 'தவள்' ஆகிறாள்.
முன்னொரு பாடலில் 'மாத்தவளே' [பெருந்தவம் செய்தவளே]
எனக் குறிப்பிட்டிருப்பதோடு ஒப்பு நோக்கினால், இதனை அறிய இயலும்.
 
# 45. பொறுத்தருள வேண்டும்.

தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சை
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.


தேவியே! உனக்குத் தொண்டு செய்யாமலும், உன் திருவடிகளைத் தொழாமலும், துணிந்து தன் மனம் போன போக்கில் தான் விரும்பிய தொழில்களைச் செய்தவர்கள் சிலர் உண்டோ? அன்றி இல்லையோ? நானும் அது போன்றே செய்தால் அது உன்னால் வெறுக்கப்படும் தவமோ?
மாறான செயல்களை நான் செய்தாலுமே அவற்றை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் அம்மா!
 
Last edited:
தலைப்பில் ஒரு சிறு தட்டச்சுப் பிழை.
பொறுத்தருள என இருக்க வேண்டும்.
 
பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு
தழைத்தோங்கும் நன்றி உரித்தாகுக!
பொருளில்
'பொறுத்துக் கொள்ள'
என்றும்
'பொருத்தருள' என்று தலைப்பிலும் உள்ளன :(
 
# 46. உன்னை வாழ்த்துவனே!

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் , தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே; புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப் பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.

பெரியவர்கள் தம் அடியாரின் தீச் செயல்களை பொறுத்துக் கொள்வது புதியது அல்லவே!
நீ வெறுக்கும் செயல்களை நான் செய்தாலும், நீ பொறுத்தருள வேண்டும். புது நஞ்சை உண்டு, கறுத்து, நீலகண்டனான இறைவனின் இடப்பாகத்தில் கலந்த பொன்னே! எனக்கு எதிரான செயல்களையே நீ செய்தாலும், நான் உன்னை வாழ்த்திக் கொண்டே இருப்பேன்!
 
//நீ வெறுக்கும் செயல்களை நான் செய்தாலும், நீ பொறுத்தருள வேண்டும்//

இதுபோன்ற பாடலில் இல்லாத பொருளை அடைப்புக் குறிகளுக்குள் இடுதல் நலம்
என நினைக்கிறேன்.

மேலும் இப்பாடலை வேறு விதமாகவும் பார்க்கலாம்.

சரியல்ல எனச் சொல்லப்படும் "மறுக்கும் தகைமைகள்" நான் செய்யினும், யானுன்னை
வாழ்த்துகின்ற பண்பினால், உனக்கு அடியவராகிப் போகின்றேன்.

எனவே, நீ 'வெறுக்கும் தகைமகளை' நான் செய்யினும், உனது அடியவனாகிய என்னைப்
பொறுத்தருள வேண்டும் எனவும் கொள்ளலாம்.

அவள் செய்கின்ற எதுவுமே நமக்கு எதிரான செயல்கள் இல்லை!
அப்படி இருக்கவும் இருக்காது!
அவள் செய்யும் அனைத்துமே நமக்கு நல்லது பயப்பதற்கே.


அனவரதமும் அம்பிகையையே மனதில் கொண்டு வாழ்ந்த அபிராமி பட்டர்,
தாயைப் பார்த்து, "நீ எனக்கு எதிரான செயலைச் செய்கிறாய்" எனக் கூறுவது எனக்குப்

பொருத்தமாகப் படவில்லை.
 
இறை அடியவரின் பெருமைகளைப்

இறைவியே உலகுக்கு தெரிவிப்பாள்.


தேர்வு நடத்துவது போல நாடகமாடி

மாறுபட்டும் காட்சியளிப்பாள் அவள்.
:pray:
 
# 47. சொற்களுக்கு அப்பாற்பட்டது.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று; விள்ளும் படி அன்று; வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும்; எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

யான் இன்ப வாழ்வு வாழ்வதற்கு ஒரு சக்தியை கண்டு கொண்டேன். அது மனத்தால் ஒருவர் எளிதாகப் பற்றி விடக்கூடியது அல்ல. எடுத்துக் கூறவும் இயலாது. அது கடல் சூழ்ந்த ஏழு உலகங்களுக்கும், எட்டு மலைகளுக்கும் எட்டாமல்; இரவு, பகல் உண்டாக்கும் சுடர்களுக்கு இடையே பொருந்தி ஒளி வீசுகின்றது.
 
"Sundari endhai thunaivi"

In this song, bhattar is describing devi as his friend and

father. Usually in all songs he calls her like mother only

and here he describes she will be his freindly father.

Because mother is always filled with passion. But father is

strict and takes care and makes his son to complete his

duties in the right time. He will be always correct and he

will not always be compassionate even tolearting all the

mischeiveous deeds of the son. So in this song bhattar calls

her as father.

Next he is saying that "En paasa thodarai ellam vandu ari".

Check with his perfect usage of words. He has not said

"Aruthudu". "Paasam" is like a chain and continous one. It

cannot be cut at once. so only he is telling that as "Paasa

thodar"

The perfect meaning of "Ari" in tamil is "to cut in the right

way" (This word is totally different from "vettu"). "Karigai

arindhen- I have cutted the vegetables. It means I have done

the job in the way that it was a smooth activity. Here also

bhattar uses the same terminology. Ambal should cut them in a

nice manner so that it should not harm himself.

Hereafter the song goes like this "mahidan thalai mel"-- If

we go straight by meanings, it wil be discontinous. But when

we analyse we can get the perfect continuation of thought. Mahidan here itself depicts the "Paasam" (the deeds and their effects). Since it will be a great deed for her to come there and cut often, she herself stand over the head of the mahishan. So, it cannot rise its heads in presence of devi.

After this he is stating that "Aranathon kamthari kaithalathal"- Why is this particular incident is reminded by bhattar? Why the heads of brahma has been reduced from 5 to 4? It is because of his "Aham" Bhavam. To remind this only, ambal is holdong that 5th head always in her hands. Like this even she will also just-like-that cut off our sins.

Malarththal- A foot like flower. This is what the straight meaning goes. But if we take it as the "holy feets above the flower" we will get some more interesting views. If you see usually the sculpture of devi durga, she will not be standing directly over the head of mahisha. She will be in the lotus and below that mahishasura head will be there.

1.Lotus is the symbolifcation of "Gnana". Mahisha is the symbol of "Agnana and ahankara". If you roll down the ahankara then the gnana itself will come up. In that glwoing gnana, god will himself be seated.

2. Buffalo will also be residing in the mud, and the lotus will also be in the mud. Similarly, both these gnana and agnana sprang from the same human mind only,

3. Other meaning is lotus is like a barrier. We usually say the leaf of lotus to denote the life of a pure sage. Similarly, though this sundari devi stand over the head of mahisha, she will never be having touvh ith that since she has been separated by this lotus.

Like this so many meanings will come. This is one of my very very favourite song in this.
 
I think the meaning provided by visalakshi mam is right. Dear VSK sir, you can see similarly a song in kandar anubhudhi

"paazh vaazhvu enum ippadu maayaiile
veezhvaai ena ennai vidhithanaiye
thaazhvaanavai seidhanadhaam uladho
vaazhavai ini nee mayil vaaganane"

You have made me to live in this human birth and made me to bind with these maayas and vasanas. You have done all the things like lower people anyhow you live long O the one who has peacock as his vahana.

The true devotee has all the rights to scold even the god. In this song "verukkum thaggaimaigal seiyinum" also bhattar is saying that only, Ambal has given her grace to devas "she made her husband to drink the venom and poison for the sake of devas ho has not even invited or informed about the "Amirtha madhana" to shri sankara. But even for them devi has shown grace. Why not to him? So only he is insisiting that incident also "Karukkum thiru midatratan idapagam kalandha ponne". It means she has also drunk the poison for the sake of mischievous devas. And now she is delaying to show her grace of bhattar...

Hope the meaning goes right with the situation and example.

Pranams
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top