• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Abirami Andhadhi

Status
Not open for further replies.
Abhirami Andhadhi

Dear Madam,

Many thanks. I will contribute to this thread whatever little knowledge I have
on this Andhathi.

There are many references to Lalitha Sahasranamam in this stuthi . For
instance :
Song 2 ; Veda janani in LS
song 4 : thaapasaaradhya in LS
song 5 : thakaraasa roopini in LS
song 13 : shristikarthri ; gopthri govindaroopini ; samhaarini; rudraroopa in LS
song 20: chandra mandalamadhyaka in LS.
song 24: sarvavyadhiprasamani.

I have given some references only reflecting the meaning of Abhirami
Andhathi . There are many more. Some references are also found in
Devi bhagavatham which is not mentioned by Ki va ja.

Since you are doing good work you can make yours a detailed commentary,
bashyam on AA.

Thanks and regards,
 
dear Mr. N.R.R,
I am just giving the barest outline of the stanzas.
The product you suggest involves a lot of studies and reference work.
May be Mr. Durgadasan is the right person for the Himalayan task.
The other person i can think of besides you is Mr. V.S.K.
Hope one of you will accept this offer and do justice to the Abirami Anthaathi.
with warm regards, :pray2:
Mrs. V.R.

 
# 60. என்னே நின் அருள்!

பாலினும் சொல் இனியாய்! பனிமா மலர்ப் பாதம் வைக்க,

மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றைவார் சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும், சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே?


பாலினும் இனிய சொல் உடையவளே! திருமாலும், மற்ற தேவர்களும் வணங்கும் சிவபிரானது கொன்றை சூடிய சடையையும் , அவன் பாதங்களின் கீழ் நின்று வேதங்கள் ஓதும் மெய்ப்பீடங்கள் நான்கையும் விடவும், உன் பனிமலர்ப் பாதங்களை வைத்தருள, நாயேன் என்னுடைய தலை சிறந்ததாக ஆயிற்றோ?
எனில் என்னே உன் அருள்!
 
# 61. அறிவு தந்தாய்!

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்; நின்னை உள்ள வண்ணம்

பேயேன் அறியும் அறிவு தந்தாய்; என்ன பேறு பெற்றேன்
தாயே, மலைமகளே, செங்கண்மால் திருத் தங்கச்சியே!


அன்னையே! மலைமகளே! திருமாலின் தங்கையே! நாயேனையும் ஒரு பொருட்டாக மதித்து, விரும்பி வந்து, நான் நினைக்காத பொழுதினில் என்னை ஆட்க்கொண்டுவிட்டாய். உன்னை உள்ளபடி அறியும் ஞானத்தையும் தந்தாய். இதற்கு நான் செய்த நற்செயல் தான் என்ன?
 
# 62. என் சிந்தையில் நீயே!

தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கட் கரி உரி போர்த்த செஞ்சேவகன்,மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங்கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையே.

தங்கமலையான மேருவினையே வில்லாக வளைத்த, முப்புரத்தையும் அழித்த, மத யானையின் தோலைப் போர்த்தியுள்ள, சிவபெருமானின் திருமேனியைச் சேர்ந்து; குரும்பை போன்ற நகில்களால் குறியிட்டருளிய தேவியின் கைகளில் உள்ள கரும்பு வில்லும், மலர்க்கணைகளும் எப்போதும் என் சிந்தையில் நிலை பெற்று இருக்கும்.
 
# 63. நீயே தலைவி!

தேறும்படிச் சில எதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறிக்குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறு சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே!

ஆறு சமயங்களுக்கும் ஒரே தலைவியாக இருப்பவள் அன்னை அபிராமியே என்று அறிந்து இருந்த போதிலும், வேறு சமயங்கள் உள்ளன என்று கூறும் வீணர்களுக்கு; அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி எடுத்துக் கூறுவது என்பது ஒரு மலையைக் குறுந்தடியால் உடைக்க முற்படுவதற்குச் சமம் ஆகும்.
 
# 64. உள்ளத்தின் உறுதி.

வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று, மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்; நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும்; திருமேனிப்ரகாசம் அன்றிக்
காணேன் , இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

எம்பிராட்டியே! உன் மேல் பக்தி கொண்டு விட்டேன். அதனால் வீணாகப் பலி கேட்கும் மற்ற தெய்வங்களிடம் அன்பு கொள்ள மாட்டேன். உன் புகழை அன்றி வேறு ஒரு தெய்வத்தின் புகழைப் பேசமாட்டேன். நிலத்திலும், வானத்திலும், நான்கு திசைகளிலும் உன் திருமேனிப் பிரகாசம் அன்றி வேறு எதையும் நான் காண மாட்டேன்.
 
# 65. வல்லபம் என்னே!

ககனமும், வானும், புவனமும் காண, விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி; நீ செய்த வல்லபமே.

அபிராம வல்லியே! உன் வல்லபத்தால் அண்ட சராசரங்கள் அனைத்தும் காணும்படியாக, முன்பு மன்மதனைத் தகனம் செய்த சிவபெருமானுக்கு, பன்னிரு கரங்களும், ஆறு
சிவந்த முகங்களுமுடைய அறிவின் மைந்தன் தோன்றினான் அல்லவா?
 
# 66. உன் திருநாமங்கள்!

வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்; பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்று இருப்பாய்! வினையேன் தொடுத்த
சொல் அவம் ஆயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே.


பசும்பொன் மலையை வில்லாகக்கொண்ட
சிவனுடன் வீற்று இருப்பவளே! உன் ஆற்றல் எதனையும் சிறியேன் நான் அறியேன். ஆயினும் உன் சிவந்த மலர்ப் பாதங்களைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் எனக்கு இல்லை. தீவினையுடையவனான நான் தொடுத்த சொல்மாலை பயனற்றதாகயிருந்தாலும் அதில் உள்ள உன் நாமங்கள் நல்ல தோத்திரமாகும் அல்லவா?
 
# 67. வணங்காதவர்கள் அடையும் துயர்.

தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம், கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள் தோறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே.

மின்னல் போன்ற உன் அழகிய தோற்றத்தை ஒரு நொடிப் பொழுதேனும் வணங்கி மனதில் எண்ணாதவர்கள்; கொடை, நற்குடிப் பிறப்பு, கோத்திரம், கல்வி , நற்பண்பு எல்லாம்
குன்றிவிட; வீடுகள் தோறும் சென்று பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுக்கும் துன்பம் அடைவார்.
 
# 68. தவம் உடையவர் பெறும் தனம்.

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்திலும், நிலம், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐம்பூதங்களிலும் கலந்து நிற்கும் சிவகாம சுந்தரியின் அழகிய சிறு திருவடிகளில் அடைக்கலம் புகுதல் என்கின்ற தவத்தைச் செய்பவர்களுக்குக் கிடைக்க முடியாதது என்ற எந்த செல்வமும் இல்லை.
 
Dear Madam,
sloka 60 corresponds to sloka 1 of Soundarya lahari.

Line 3 says ஹரிஹர விரிஞ்சாதிபி அபி ஆராத்யாம்
த்வாம் அக்ருத புண்ய ப்ரணந்தும் ஸ்தோதும் வா.
( soundarya lahari )
 
Dear Madam,

There is one beautiful sloka in Soundarya Lahari, which corresponds to sloka 61 , which
conveys a meaning similar to sloka 61 above.

The sloka begins with -- பவானி த்வம் தாஸே மயீ விதர த்ருஷ்டும் ஸகருணாம்.

இது ஒரு சிலேடை. பக்தன் 'பவானி த்வம்' என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே
( அவன் இன்னும் சொல்லி முடிக்கவில்லை ) தேவி சாயுஜ்ய பதவியைத்
தந்தேன் என்று வரம் அளித்துவிடுகிறார்.
 
dear Mr. N.R.R,

The sloka "bhavaani thvam" is one of the important slokas in

Sondharya Lahari. But I do not know why we were taught it in Raagam

Mukaari. May be to bring out the mood of Devi's krupa and the

helplessness of the devotee.

Laitha Sahasra Namam, Sondharya Lahari and Abiraami Andhathi have

many concepts and descriptions common - since all of them sing the

glory of the same Goddess. Worth doing a research to find out similar

slokas/ phrases in them. If some one has already done it please let me

know the name of the book.

Are you considering taking up the thread with Lalitha Thrisathi or

Soundharya Lahari? "Annaiyin Aayiarm Naamangal" will be completed

today.

with warm regards,
Mrs.V.R. :pray2:

 
Dear Madam,

Thanks for your response. There are two more I would like to mention -
one is by sage Durvasa and the other is Mooka panchasathi. Kavi
Kalidasa's works also are a revelation.

Much as I would like to, I am afraid I will not be able to take long threads
since I am busy studying scriptures and puranas to equip me better in
editing a monthly spiritual journal. My email address is [email protected]
 
Dear Mr. N.R.R.,
If you are already on the line of editing a monthly spiritual journal, then you are the right person for the task.
May be you can post a thread on a weekly basis instead of daily basis! Please think about it.
If I may know it, please name the magazine for the benefit of all our friends in the Forum.
with warm regards,
Mrs. V.R. :pray2:
 
# 69. இம்மைப் பயன்கள்.

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா
மனம் தரும், தெய்வவடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.

மலர்கள் செறிந்த கூந்தலை உடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே அவள் அன்பர்களுக்குச் செல்வங்களைத் தரும்; கல்வியையும், தளர்வு அடையாத மனத்தையும், தெய்வீக அழகையும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத நல்ல சுற்றத்தினரையும், மற்றும் எல்லா நலன்களையும் அளிக்கும்.
 
# 70. கண்டு களித்தேன்.

கண்களிக்கும்படிக் கண்டு கொண்டேன்; கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும், கையும், பயோதரமும்,
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.

கடம்ப வனமாகிய மதுரையில்; பண்களை மகிழ்விக்கும் இனிய இசையை உடைய வீணையும், கையும், அழகிய தனங்களும், மண்ணுலகத்தினரை மகிழ்விக்கும் பச்சை நிறமும் கொண்ட பெண்ணாக, மதங்கர் குலத்தில் தோன்றிய, நம் பெருமாட்டியின் பேரழகை என் கண்கள் களிக்கும்படி நன்கு கண்டு கொண்டேன்.
 
# 71. என்ன குறை?

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பு இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே! இரங்கல், உனக்கு என்குறையே?


பிறவியின் பயனை இழந்து நிற்கும் மனமே! எவருமே இணை ஆகாத அழகின் கொடியாக, எப்போதும் வேதங்களால் வருடப் பட்டு சிவந்த நிறம் கொண்ட சீரிய தாமரை அடிகளும், குளிர்ந்த இளம் பிறை சூடிய முடியும், மேன்மையும், பசுமையும் வாய்ந்த அபிராமி துணையாக இருக்கும்போது உனக்கு என்ன குறை கூறு!
 
மேதையைக் கொடு ஸ்ரீயை கொடு என்று உபநிஷத்தில் வருகிறது. முதலில்
கல்வி பிறகு தனம். இல்லாவிடில் அர்த்தம் அனர்த்தம்தான்.

ஷ்யாமளா தண்டகத்தில் கடம்பவனவாஸினியைப் பற்றிய வர்னனையைக்
காணலாம். தீஷிதரின் ' மீனாஷிமே முதம் தேஹி' என்ற பாடலும் இங்கு
நோக்கத்தக்கது.

பாடல்கள் 69, 70 க்கு ஒப்பானது.
 
மனதில் அம்பாளின் உருவத்தை நிறுத்தி நிரப்பிக்கொள். இல்லாவிடில்
மனஸ் வெளி விஷயங்களின் பின்னே செல்லும். மாசு படிந்த உள்ளத்
தில் நல்ல என்னங்கள் தோன்றாது என்பதாம்.

பாடல். 67.
 
பாடல் 61 முக்கியத்துவம் பெற்றது. ' அறிவை அறிவது அறிவு' என்னும்
தத்துவத்தை பறைசாற்றுகின்றது. இது ஞான வாசகம்.
 
# 72. யார் குறை சொல்!

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கில்
நின் குறையே அன்றி யார் குறை காண்? இருள் நீள் விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்!
தன்குறை தீர, எம்கோன் சடைமேல் வைத்த தாமரையே.


நீண்டு அகன்ற வானில் தோன்றும் மின்னலைக் காட்டிலும் மெல்லிடை வாய்க்கப் பெற்ற தேவியே! எம்பிரான் தம்முடைய குறைகள் தீரத் தம் சடைமேல் வைத்துப் போற்றிய உன் தாமரைத் திருவடிகளை யானும் என்னுடைய குறைகள் தீரும் வண்ணம் வைத்துப் போற்றுகின்றேன். இனியும் நான் பிறவி எடுக்க நேர்ந்தால் அது உன்னுடைய குறையே அன்றி வேறு யாருடைய குறை?
 
# 73. தியானமுறை .

தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக்கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்றுவைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளிச் செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.

அம்பிகையின் பெயர் திரிபுர சுந்தரி; அவள் கண்கள் மூன்று;
அழகிய கைகள் நான்கு; மேனியின் நிறம் சிவப்பு;
மாலை கடம்ப மலர்களால்; படைக்கலங்கள் என்பன ஐந்து மலர்
க்கணைகள்; வில் ஒரு கரும்பு; வழிபட ஏற்ற நேரம் பைரவர் காவல் புரியும் நள்ளிரவு; அவள் நமக்காக வைத்துள்ள செல்வம் அவள் திருவடிகளே!
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top