• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Abirami Andhadhi

Status
Not open for further replies.
# 48. பிறவித்தளை நீங்கும்.

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

ஒளி வீசும் பிறை சூடிய, சடை முடியுடைய, சிவ பிரான் என்னும் செம் பவளக் குன்றில் இணைந்து படரும், இயற்கையிலேயே மணம் கமழும், பசுங்கொடியாகிய தேவியை மனதில் பதித்து; துன்பம் தவிர்த்து, ஒரு நொடிப் பொழுதேனும் யோகநிலையில் இருப்பவர்கள் சதையும், ரத்தமும் தோய்ந்த கருப்பையினுள் மீண்டும் புகுவாரோ?
 
# 49. அபயம் அளிப்பாய்!

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து,
அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து, 'அஞ்சல்' என்பாய்
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.

நரம்புகளில் பிறக்கும் இசை வடிவாக விளங்கும் நாயகியே! உடம்பு என்னும் கூட்டிலே குடி புகுந்துள்ள என் உயிர், கொடிய கூற்றுவன் அமைத்த எல்லையில் உள்ளம் கலங்கும் வேளையில், அரம்பை முதலான தேவமங்கையர் சூழ வந்து உன் வளைக்கரத்தினால், 'அஞ்சேல்' என எனக்கு அபயம் அளிப்பாய்.
 
# 50. சரணங்களே அரண்!

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

உலக நாயகி; நான்முகனின் சக்தியாகிய பிராமி; நாராயணி என்னும் நாராயணனின் சக்தி; ஐந்து மலர்க்கணைகளை உடையவள்; சாம்பவி என்னும் சங்கரனின் சக்தி; சங்கரி; நீலி எனப்படும் சியாமளாதேவி; பாம்பு மாலை அணிந்தவள்; பூமித்தாய்; சூலம் ஏந்தியவள்; மதங்க முனிவரின் புதல்வியாகிய மாதங்கி; என்று பல பெயர்கள் பெற்ற கீர்த்தி மிக்க தேவியின் திருவடிகளே நமக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு அரண்.
 
அற்புதமான பாடல்!
அன்னையின் பல்வேறு வடிவங்கள் இதில் போற்றப்படுகின்றன.


இவற்றுள், இந்த "கை நளின பஞ்ச சாயகி" என்னும் சொற்றொடர் மட்டுமே இன்னாரெனக்
குறிப்பிடாத ஒரு பெருமையைப் பெற்றிருக்கிறது.

சிவனாரின் கோபத்தால் எரிந்து மறைந்து போன மன்மதனின், மாறனின் கையிலிருக்கும்

ஐந்து மலர்க்கணைகளையே இவை குறிப்பிடுகின்றன.

அவனே மறைந்து போனதால், அவனைப் பற்றிய குறிப்பையும் மறைமுகமாகவே சொல்லி
ஆனந்திக்கிறார் அபிராமி பட்டர்.

கரும்பு வில்லைக் கைக்கொண்டிருக்கும் மாறனின் கணைகள் ஐந்து.
தாமரை, மா, அசோகம், முல்லை, நீலம் எனும் ஐந்து கணைகள்.

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!


சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்.


இந்த ஐந்து கணைகளையும் தன் வசத்தில் வைத்து ஆட்சி செலுத்துபவளே காமாட்சி!
அவளே ஜகன் நாயகி, நான்முகி, நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை, மாலினி, வாராஹி,
சூலினி, மாதங்கி! அவளே அபிராமி!

சம்பு எனப்படும் சிவனின் சக்தி சாம்பவி என்றும், சங்கரனின் சக்தி சங்கரி எனவும்
அழைக்கப்படும்.
 
//I think the meaning provided by visalakshi mam is right. Dear VSK sir, you can see similarly a song in kandar anubhudhi


"paazh vaazhvu enum ippadu maayaiile
veezhvaai ena ennai vidhithanaiye
thaazhvaanavai seidhanadhaam uladho
vaazhavai ini nee mayil vaaganane"

You have made me to live in this human birth and made me to bind with these maayas and vasanas.
You have done all the things like lower people anyhow you live long O the one who has peacock as his vahana.

The true devotee has all the rights to scold even the god. In this song "verukkum thaggaimaigal seiyinum"
also bhattar is saying that only, Ambal has given her grace to devas "she made her husband to drink the
venom and poison for the sake of devas ho has not even invited or informed about the "Amirtha madhana"
to shri sankara. But even for them devi has shown grace. Why not to him? So only he is insisiting that incident
also "Karukkum thiru midatratan idapagam kalandha ponne". It means she has also drunk the poison for the
sake of mischievous devas. And now she is delaying to show her grace of bhattar...

Hope the meaning goes right with the situation and example.

Pranams //

அது அனைவரும் வழக்கமாகச் சொல்லும் பொருள் ஐயா! ஆனால், தேவியை, முருகனைப் புரிந்த
பட்டரும், அருணையாரும் அப்படிப் பாடவில்லை எனவே நான் கருதுகிறேன். இது பற்றிய விளக்கம்,
31-ம் பாடல் சொல்லும் போது கந்தரநுபூதி இழையில் வரும். வணக்கம்.
 
# 51. அடியவர்கள் பெரும் பயன்கள்.

அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
'சரணம், சரணம்' என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

இரக்கம் என்பதே இல்லாத அசுரர்களுடைய திரிபுரத்தை எரிக்கச் சினம் கொண்டு முனைந்த சிவபெருமானும், முகுந்தனும் வணங்குகின்ற தேவியின் திருஅடியவர் பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையும் இவ்வுலகில் அடையமாட்டார்கள்.
 
"Karuthana"

The mind and eyes of shri shiva has been filled by you. Your

holy breasts are like the meru mountain and you gave milk to

the dravida sisu. You should come in front of me holding the

bow and flower arrows with a smiling face.

In this song, the direct meaning says that shiva's full

attaention is on the holy breasts of devi. Here, the word

usage of bhattar is very much appreciable. "Thiru Thana".

Usually feets and head will be specified with the prefix

"thiru" as "thiruvadi and thirumudi". But here the same

prefix has been provided to the breasts. They are the sign of

her maternity and compassion. So only shiva has filled them

in his eyes and mind.

In the next line, bhattar has mentioned the incident of

"mulaipaal" given to Thirugnanasambandhar. Even there is a

debate too with this same for our great guru sankara also.

(In his soundarya lahari too similar incident has been

explained). Anyhow it is totally unnecessary for us since

both of them are greater pesonalities and nodoubt that both

of them got the grace of devi. The word which I wish to

emphasize here in this song is, "Paal azhum pillaiku". She

has not come directly and gave milk to the child. Since she

heard the crying sound of the child, she came and feed the

child. What it means? Every one has to do sadhana. Atleast

should think of her (Karuthana) or else just go and see her

in temple (kannena), then only they will get the grace of

ambal.

She is like the bonfire. Only the persons suffering from cold

and shivering should go near the fire. The fire will never

come near by itself to the shivering person. Even for a

child, only if it cries, the mother will feed it. So, we

should also do our level best to attain her.

In this song, devi is considered as thripurasundari and

bhattar calls her to come infront of him holding the

sugarcane bow and flower arrows (but he has not mentioned

them, he has simply said bow and arrows; because, already the

total concentration has been turned towards the holy breasts

and in this song, they are the hero. So, these bow and arrows

have been simply mentioned.

Finally he is telling that devi should come in front of him

with a smiling face. The reason is no need to explain as

everyone knows well that things will fructify only when the

person who is solving our problem is in good mood.

Here also, the word "Neeyum" should be marked. Bhattar has

called "Neeyum" instead of "Ne". Why is this so? Then who is

the other person? It is noone than shri shiva. He has been

already invited indirectly. Shiva has concentrated fully on

devi's breasts. It means he is watching them always. So, if

devi comes in front of bhattar, shiva will also follow her.

So only bhatar says "neeyum" (You also) come infront of me.

Pranams
 
# 52. அடியவர் சின்னங்கள்.

வையகம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை,
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.


பிறை சூடிய பிரானின் திருமனையாளின் திருவடித் தாமரைகளுக்கு முற்பிறவியில் அன்பு செய்தவர்களுக்கு, இப்பிறப்பில் தேர், குதிரை, மத யானை, திருமுடி, பல்லக்கு, பொன், அணிகலன்கள் முதலான எல்லா நலன்களும் சின்னங்களாக அமையும்.
 
# 53. சிறந்த தவம்.

சின்னஞ் சிறிய மருங்கினில்
சாத்திய செய்யப் பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங் கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது
போலும்வம் இல்லையே!


தேவியின் சிற்றிடையில் சாத்தப்பட்ட சிவந்த பட்டாடையையும், மிகப் பெரிய நகில்களையும், முத்து மாலைகளையும், பிச்சிப்பூ சூடிய கரிய கூந்தலையும், மூன்று கண்களையும் சிந்தையில் நிலை நிறுத்தித் தன்னந் தனியாக இருப்பவர்களுக்கு; இதைக் காட்டிலும் சிறந்த தவம் என்று எதுவும் இல்லையே.
 
Last edited:
53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.
 
# 54. ஆற்றுப்படுத்துதல்.

இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்,
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்,
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.


ஒருவரிடம் சென்று தன் வறுமையை எடுத்துக்கூறி இழிவுபட்டு நிற்காமல் இருக்க நீங்கள் விரும்பினால்; தவம் செய்யக் கல்லாத கயவர்களிடம், ஒருபோதும் நான் செல்லாமல் என்னைக் காத்து அருளிய, திரிபுரசுந்தரியின் திருவடிகளைச் சரண் அடையுங்கள்.
 
# 55.

மின் ஆயிரம் ஒரு மெய் வடிவாகி விளங்கிகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய், நடு எங்குமாய், முடிவு ஆய முதல்விதனை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே.


ஆயிரம் மின்னல்கள் ஒரு வடிவெடுத்தது போன்ற தேவி; அகம் மகிழும் ஆனந்தவல்லி; வேதங்களின் முதலாகவும், நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் தேவி; உயிர்கள் தன்னை நினந்தாலும், அன்றி நினைக்காவிட்டலும் அவர்களிடம் விரும்புவது எதுவும் இல்லை.
 
# 56. அருளின் அருமை என்னே!

ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய்,
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் எந்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலியையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

ஒரே பராசக்தி பல சக்திகளாகப் பிரிந்தும், விரிந்தும், இவ்வுலகம் எல்லாம் நிறைந்து நிற்பாள்.அனைத்தையும் நீங்கியும் நிற்பாள். அத்தகைய சக்தி என் நெஞ்சில் நீங்காது நின்று அருள் புரிகின்றாள். ஆலிலைமேல் துயிலும் ஹரியும், எம்பெருமானான ஹரனும் இந்த உண்மையை நன்கு அறிவார்கள்.
 
# 57. உன் மெய்யருள்?

ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய, அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசும்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய்; இதுவோ உந்தன் மெய்யருளே?


எம்பெருமான் அளந்து கொடுத்த இருநாழி நெல்லைக் கொண்டு உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அறம் வளர்க்கும் நாயகியாகிய உன்னை வணங்கி; ஒருவரிடம் சென்று, பைந்தமிழ் பாமாலை புனைந்து, பொய்யும் மெய்யும் புகலும்படி என்னை அமைத்து விட்டாய். இதுதான் உன் மெய்யருளா?
 
'உன்னையும்' 'பாமாலையும்' என்னும் இரு சொற்களில் இருக்கும் அந்த 'உம்' எனும்
விகுதியின் பொருள் இதில் சரியாக வரவில்லையோ என நினைக்கிறேன்.

உலகுக்கே படியளக்கும் உன்னைப் போற்றிப்பாடும் யான், இப்படி வயிற்றுக்காக
இன்னொருவரிடமும் செல்லும்படி வைத்து விட்டாயே! அப்படி நான் அதைப் பற்றிக்
கவலைப்படாமல், உன்னை மட்டுமே போற்றும்படி, நீயே இந்த வயிற்றுப் பாட்டையும்
கவனித்துக் கொள்ளக்கூடாதா?' என உரிமையுடன் இறைஞ்சுகிறார்.

'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது.
அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு
அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.

'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.
 
Dear Mr. V.S.K,

I am just giving the barest outline of the verses.

I welcome you in addition to Mr. Durgadasan it add your views and

enrich this thread.

My time is limited. Being a writer yourself, you can guess the amount

of time I need to spend in reference, writing, typing etc, it takes to

keep alive multiple threads in the Forum.

You are welcome to add your views everyday for every verse!

Thank you in advance, :welcome:

with warm regards, :pray2:
V.R.
 
# 58. தஞ்சம் இல்லை.

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகைசேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே!

செந்தாமரையிலும், என் உள்ளத்தாமரையிலும் வீற்று இருக்கும்;
தாமரை மொட்டுக்களை ஒத்த நகில்களை உடைய தேவியின்; கருணை பொழியும் தாமரை விழிகளையும், தாமரை முகத்தினையும், தாமரைக் கரங்களையும், தாமரைத் திருவடிகளையும் அன்றி வேறு ஒரு தஞ்சம் நான் கண்டதில்லையே!
 
# 59. என் அன்னை நீயே!

தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்; ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.


நீண்ட கரும்பு வில்லையும், ஐந்து பாணங்களையும் உடைய தேவியே!
உன்னைத் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று உன் தவநெறி பழக எண்ணினேன். பஞ்சினை மிதிக்கவும் அஞ்சுகின்ற மென் பாதங்களை உடைய பெண்கள், தாம் பெற்ற பிள்ளைகள் குற்றம் செய்தாலும் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா?
 
Dear Mr. N.R.Ranganathan,
Thank you for the info. I will try to get my own copy of the book and enrich my knowledge further.
with warm regards,:pray2:
Mrs. Visalakshi Ramani.
 
Abhirami Andhadhi

Dear Madam,

Here is Late Ki va Ja's translation for verse 59 "

உரை : நீண்ட தனி வில்லும், ஐந்து அம்புகளும் முறையே கரும்பாகவும்
மலராகவும் கைக்கொண்டு நின்ற தேவி, இஃதன்றி வேறு பற்றுக்கோடு
இல்லையென்று நின்னைத் தியானிக்கும் தவ வழியில் மனத்தைப்
பழகும்படி செய்ய யெண்ணீனேன் இல்லை; பஞ்சை மிதிப்பதாயினும்
அஞ்சுகின்ற மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற
பிள்ளைகள் அறீயாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களைத்
தண்டிக்கமாட்டார்கள்.

அதுபோல நீ யென்னைப் புறக்கணித்துத் தண்டியாமல் அருள் புரிய
வேண்டும் என்பது கருத்து. இதன் கண் வேற்றுப்பொருள் வைப்பணி
வந்தது, பஞ்சு - செம் பஞ்சுக் குழம்புமாம். பஞ்சஞ்சும் மெல்லடியார்:
" பஞ்செனச் சிவக்கு மெங்காற் றேவி " ( கம்பராமயணம், வீடனன்
அடைக்கலப் ).

page 82/83 of his book. This book is available at Giri Trading.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top