• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.

He who will not reason is a bigot,

he who can not is a fool and :loco:

he who dares not is a slave. :fear:


We have just enough religion
to make us hate one another, :fencing:

but certainly not enough of it

to make us love one another. :hug:
 
அன்னையே! என் அன்னையே!

வெள்ளை நிறம், கொள்ளை அழகு!
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்!

எள்ளுப்பூ நாசி, கண்களும் மீன் ஆக்ஷி;
கொள்ளைச் சிரிப்பு, கொஞ்சம் முன்கோபம்!

கண் கண்டதை கைகள் செய்யும்,
மண்ணில் தெரியாத கலை இல்லை.

உள்ளத்தில் உள்ளதை உதடுகள் பேசும்
கள்ளத்தனமாகப் பேசத் தெரியாது!

நக்கீரரின் மறு பிறவியே தான்
குற்றம் என்றால் அது குற்றமே!

அற்புதப் பெண் தான் என்று அறியாது,
அளவுகோலாகத் தன்னையே ஆக்கி;

மற்றவர்களைப் பார்ப்பதே அவர்
சின்னச் சின்னக் கோப காரணம்!

முடியாது! தெரியாது! என்ற சொற்கள்
பிடிக்கவே பிடிக்காது அவருக்கு!

சுறு சுறுப்பில் தேனீ! எறும்பு!
சிரிப்பும், உருவமும் கரும்பு!

வளர்ந்திடும் தள்ளாத வயதிலும்,
விளைந்திடும் அதிசய அழகை நான்

இருவரிடம் மட்டுமே கண்டேன்!
ஒருவர் M.S. அம்மா, ஒருவர் S.M. அம்மா .

(என் அன்னையின் பெயர் S. Meenal)

அம்மாவின் அழகை நாங்கள்
எல்லோருமே கோட்டை விட்டோம்.

அப்பாவின் அச்சுப் பிரதியாகத்
தப்பாமல் பிறந்து விட்டதால்!

அம்மாவின் குண நலன்களை
அம்சங்களாப் பெற்றுள்ளோம்.

ஒரு முறை பார்த்தவர் கூட
ஒரு நாளும் மறக்க மாட்டார்

தேவ பாஷையில் பேசவேண்டி
தீவிர முயற்சி செய்கின்றார்!

என் அன்னையைப் படைத்து,
எனக்கு அன்னையாகப் படைத்த,

ஜகதன்னையின் திரு நாமத்தை
ஜபித்துக் கொண்டே இருப்பேன்! :pray: :hail:
 
அன்னையே! என் அன்னையே!
.....................
என் அன்னையைப் படைத்து,
எனக்கு அன்னையாகப் படைத்த,

ஜகதன்னையின் திரு நாமத்தை
ஜபித்துக் கொண்டே இருப்பேன்! :pray: :hail:
What a nice change..... :cheer2:
 
What can't be cured must be endured! :bored:

So no regrets about power cut! :)

For the past 7 days out of 9, they forgot to cut the power for us! :gossip:

One more reason for the happy post about mom! :dance:
 

The joke I enjoyed today!

A teacher asked her student,'Your answer sheet is full of etc.!

Do you know what it means, at least?' Quick came the reply:

'Yes Mam! It means end of thinking capacity!'

Howzat? :playball:
 
Can you realize what it means to me, if the power is NOT cut off even for one day?

Three whole working hours! :clock:

For 7 days it will be 21 hours. If they forget today also :rapture:

I would have GAINED one full day! :dance:

Trying to catch up the time lost in the past few months

due power cuts and other miscellaneous problems! :roll:
 

Prejudice is the child of ignorance.


A puritan is a person :director:

who vehemently pours :blabla:

righteous indignation :nono:

into wrong things.:lock1:
 
எங்கள் அப்பா போல எங்கள் அப்பா மட்டுமே!

பெயர் ராமன்! ராமச்சந்திரனின் சுருக்கமோ?
பெயருக்கு ஏற்றபடியே நான்கு சகோதரர்கள்!

"தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று,
தந்தையைப் பார்த்தே கற்றுகொண்டுவிட்டோம்!

அகன்ற, ஆன்ற கருணை பொழியும் விழிகள்!
அறிவைப்பறை சாற்றும் அகன்றதோர் நெற்றி!

கண்களில் மட்டும் ராமன் அல்ல அவர்!
கலரிலும் அந்த ராமபிரானே தான் இவர்!

பால் போன்ற என் அன்னையாருக்கும், நல்ல
"பேஷ் பேஷ் காபி" டிகாக்க்ஷன் அப்பாவுக்கும்,

காபிக் கலரில் பிறந்துள்ளோம் நாங்கள்!
கலரைப் பற்றி கவலைப்பட்டதே இல்லையே!

அம்மாவின் அழகைக் கோட்டைவிட்ட நாங்கள்,
அப்பாவின் I.Q வைக் கோட்டை விடவில்லையே!

முதல் வகுப்பிலிருந்து மருத்துவப்பட்டம்வரை
முதல் மாணவன்! மாதச் சம்பளம் வாங்கியவர்!

ஆசிரியர்களுக்கு அளிப்பது போலவே அன்று
அரிய மாணவர்களுக்கும் அளித்து வந்தனர்!

அப்பாவுக்கும் அடுத்த தம்பிக்குமே இடைவெளி
பத்து வருடங்களுக்கு மேலேயே இருக்கும்!

தம்பிகளைத் தன் குழந்தைகளாகவே எண்ணி,
அம்பிகளுக்கு வேண்டியவை எல்லாமே செய்தார்.

பிறகு நாங்கள் ஐவர், அதில் நால்வர் பெண்கள்!
கிறங்காமல் உறுதியாக நின்று கரை ஏற்றினார்.

பொன்னுக்கும், பொருளுக்கும், மயங்கியதே இல்லை!
"பொன்னையும், பொருளையும், உண்ண முடியுமா?"

தனக்கென்று நேரமும் இல்லை, காலமும் இல்லை,
எந்நேரமும் எவருக்கும் சிகித்சை செய்யத் தயார்!

பல்லை பிடுங்க வேண்டுமா? கடின பிரசவ கேசா?
சில்லறை ஆபரேஷன்களா? குட்டி விபத்துக்களா?

ஒவ்வொரு குழந்தையிடமும் ஒளிந்திருந்த
செவ்விய திறனைக் கண்டு அதிலேயே நன்கு

அவரை ஊக்குவித்து உற்சாகமும் கொடுப்பார்!
அவர் அவசரப்பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை.

பொறுமையாகவும் , கனிவாகவும், நேரத்தை
ப்
பொன்போலப் போற்றியும் வாழ்ந்து வந்தவர்.

அவர் குலுங்கி அழுதது எப்போது தெரியுமா?
அவரது 85 வயது தந்தை இறந்த போது தான்!

தன் ரத்தத்தையே தந்தைக்குச் செலுத்தியும்,
தன்னால் அவரைக் காப்பாற்ற முடியாததால்!

பொன்னையும், பொருளையும் மதிக்காதவர்;
அன்பையும், ஆசியையும் வாரிக் குவித்தார்!

இன்று நாங்கள் இருக்கும் நிலைமைக்கு அவர்
அன்று வாரிக் குவித்த ஆசிகளே முழுக்காரணம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதரை
:angel:
தெய்வத் தந்தையாகப் பெற்ற பாக்கியசாலிகள்! :pray2:
 
"If a man will begin with certainties, :high5:

he shall end in doubts; :confused:

but if he will be content to begin with doubts, :confused:

he shall end with certainties" :laser:

Francis bacon.
 
எங்கள் முதல் முதல் குருநாதர்.

தனிக்குடித்தனம் செய்பவர்களுக்குத்
தெரிந்து இருக்கவே வாய்ப்பில்லை!

தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா, சித்தி,
அத்தை இவர்களின் அருமை பெருமை!

பிறந்தது முதல் பொத்தி பொத்திக் காத்து,
சிறப்பாக அவர்கள் நம்மை வளர்ப்பதை!

முதல் குருநாதர் என்றாலே நினைவில்
முதலில் வருபவர் தந்தையின் தந்தையே!

எண்ணும், எழுத்தும், இருகண்கள் என்றால்;
கண்களைத் தந்தவர் எங்கள் தாத்தாவே!

சிறு வயதிலேயே பிடித்து அமர்த்தி,
சிறப்பான சங்கீதத்தைக் கற்பித்தார்.

பிணங்கி விலகி ஓடிவிடும் ஸ்ருதியை,
பிடித்து இணைத்துக் கொடுப்பார் அவர்!

நடனம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது.
நடனம் ஆடினால் "குறத்தி!" என்பார்!

வந்ததுவும், போனதுவும் தெரியாதவாறு;
வாசல் / கொல்லை வழியாக ஓடிவிடுவேன்!

கைத்தடியுடன் திண்ணையில் காத்திருப்பார்;
கையும் மெய்யுமாக என்னைப் பிடிப்பதற்கு!

கலைக் களஞ்சியம் எனக்கேட்டு இருப்பீர்கள்;
கதைக் களஞ்சியம் என்பது எங்கள் தாத்தாவே!

எத்தனை கதைகள்! எத்தனை நீதிக் கதைகள்!
எத்தனை வர்ணனை! எத்தனை சாகசங்கள்!

மனக்கணக்குப் பயிற்சி என்ற பெயரில் என்று
பகல்கொள்ளை அடிக்கின்றார்களே சிலர்!

இமைப் பொழுதில் அவற்றைச் செய்திட
இனிய வழிகளைக் கண்டிருந்தார் அவர்!

ஆங்கில இலக்கணம் என்றாலே பலருக்கும்
ஆமணக்கு எண்ணெய் போலவே இருக்கும்!

அதையே அல்வாவாக மாற்றி ஊட்டும்
அதிசயத் திறமை கொண்டவர் அவர்!

தீபாவளி வந்தாலே கொண்டாட்டம்தான்!
தீபாவளிப் பட்டாசுகள், மத்தாப்புகள் என;

முப்பது நாட்களுக்கு முன்பே வாங்கிவந்து;
முப்பது நாளும் வெய்யிலில் காய வைப்போம்.

ஒவ்வொருவருக்கும் மத்தாப்புக் குச்சியை,
ஒரு தட்டுக்குச்சியில் பொருத்தித் தருவார்!

"பெண் குழந்தைகள் நீங்கள்! பத்திரம்! பத்திரம்!"
கண்களைப் போலவே எங்களைக் காப்பார் அவர்!

மித ஆஹார விஹாரம் என்று பகவத்கீதையில்
இதமாகச் சொல்லுவதை நன்கு கடைப்பிடித்தார்.

பகல் பொழுதில் அவர் உறங்குவதை நாங்கள்
பார்த்ததே கிடையாது! நடை, ஜபம், எழுத்து!

அப்பாவுக்குப் பிறகு பறிகொடுத்தார் அவர்
அப்போதே பிறந்த பல பால்மணச் சிசுக்களை!

அப்பாவை மருத்துவர் ஆக்கியதற்கு ஒரு
தப்பாத காரணம் இதுவாக இருக்குமோ?

குப்பன் என்று பெயரிட்டு ஒரு குழந்தையை
எத்தன் யமனிடமிருந்து காத்து விட்டார்.

மேலும் இரண்டு மகன்கள் பிறகு பிறக்கவே
நாலு மகன்களுடன் அவர் மிகவும் மகிழ்ந்தார்!

எத்தனை கோடி ராம நாம ஜபம் செய்தாரோ?
அத்தனைக்கும் முக்தி நிச்சயம் கிடைத்திருக்கும்!

எத்தனையோ பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தாலே
:pray2:
இத்தகைய ஒருவரின் வம்சத்தில் பிறக்க இயலும்! :hail:

 
"Revenge triumphs over death,
Love slights it,
Honor aspireth to it,
Grief flieth to it "
:thumb:

"To say that a man lieth,
is as much to say as that
he is brave towards God
and a coward towards men." :peace:

Francis bacon.
 
"When the first baby laughed for the first time, :D
the laugh broke onto a thousand pieces and :bounce:

they all went skipping about, and :dance:

that was the beginning of fairies. :angel:

James Mathew Barrie.
 
[FONT=comic sans ms,sans-serif]What a strange world !!!

When I write my observations and other funny stories related by my dear father, I get into trouble - since people are eager to fit into those accounts (on their own accord) and find fault with me that I am making indirect references to them! :whip:

I am very happy nobody wanted to fit in the story of the super-duper, taste-master, cocktail-specialist though! :rolleyes:

They take the help of their forum friends and descend on an old lady like me!

But on the other side shady things have been happening for over a month and no one was any wiser! :doh:

What a strange world !!! :shocked:
[/FONT]
 
நடன மாஸ்டர் நடராஜன்.

எட்டு வயதிருக்கும் எனக்கு அப்போது.
எங்கிருந்தோ வந்தார் திரு நடராஜன்!
அக்காவுக்கு அப்போது வயது பதிமூன்று!
ஆர்வமுமில்லை நடனக் கலையில்!

ராஜி ராமுக்கு மூன்று வயதிருக்கும்;
விஜி இன்னமும் பிறக்கவே இல்லை!
ஆகையால் என்னுடன் நடனம் பயிலத்
தேவை வீட்டில் எவருக்குமே இல்லை!

அலை அலையான நல்ல கிராப்பு,
கலை ஆர்வம் நன்கு நிறைந்தவர்.
நாள் தோறும் இரண்டு மணிநேரம்
நாள் பாராது எங்களுக்குக் கற்பிப்பார்!

வெள்ளிக்கிழமை அடவுகள் மட்டுமே!
பள்ளிக்குக் கூட நடக்க முடியாதபடி,
ஆட வைத்து முட்டிக் கால்களை
ஓய வைத்து வீட்டுக்கு அனுப்புவார்!

மாதச் சம்பளம் ஐந்து ரூபாய் மட்டுமே!
தோதாய்ப் பணத்தை வாரிக் குவிக்கும்
நாட்டிய மணிகளின் இன்றைய நல்ல
தேட்டமும், தெளிவும் இல்லாதவர்!

தமிழ் பாடல்களையும், அன்றைய நல்ல
திரைப்படப் பாடல்களையும் கற்பித்தார்.
வேறு மொழி பாடல்கள் இல்லை! இதுவே
வேறு ஊரில் பிரச்சனை ஆனது எனக்கு!

ஆந்த்ராவில் தழிழ்ப் பாடலுக்கு நடனம்
ஆடினால், சொல்லவேண்டும் கதையை
முதலில்! இல்லாவிட்டால் புரியாது
முதல் வரிசையில் உள்ளவருக்கும் கூட!

அன்னமையாபாடல் வேண்டும் என்பார்;
ஆந்திர மொழியில் வேண்டும் என்பார்;
எந்த மொழிப் பாடலுக்கும் நடனம் கற்பிக்கக்
கற்றுக்கொண்டு விட்டேன் நான் விரைவில்!

மீராபாய் நடனம் மட்டும் இன்றும்
மாறாமல் நினைவில் உள்ளது எனக்கு!
அனு என்னும் சிறந்த மாணவி அவள்
அமெரிக்காவில் இன்று ஒரு professor!

தன்னை மறந்து மீராபாய் ஆடுவதாகப்
பின்னால் வரும் கடைசி வரிகளுக்கு
ப்
பம்பரம் போலச் சுழன்று ஆடுவாள்!
நம்பி ஒரு மாறுதல் செய்தோம் நாங்கள்!

ஆடி, ஆடி மயங்கி விழுவது போலக்
கூடி ரகசியமாக முடிவு செய்தோம்!
யாருக்குமே தெரியாது இந்த திடீர் மாற்றம்!
பேருக்குக்கூடச் சொல்லவில்லை நாங்கள்!

"பக் குங்குரு" என்ற அந்த மீராபஜனுக்கு
பம்பரமாகச் சுழன்று ஆடியவள் அங்கு
மேடையிலேயே மயங்கி விழுந்தாள்!
மேடையே நிறைந்துவிட்டது நொடியில்!

"டாக்டர் காவலெனா? ஆம்புலன்ஸ்?" எனப்
பதறி அடித்து ஓடி வந்தவர்கள், அவள்
சிரித்துக் கொண்டே எழுந்ததைப் பார்த்துச்
சிரிக்கலானார்கள் மன நிம்மதியுடன்!

அஸ்வின் என்னும் கிருத்துவப் பையன்,
சிவ தாண்டவத்துக்கென்றே பிறந்தவன்!
பெரிய பெரிய முட்டைக் கண்களும் ,
பொறி பறக்கும் அவன் கால் சலங்கைகளும்!

இரண்டு லில்லிபுட்டுகள் மிகப் பிரசித்தம்!
இக்குணூண்டு இருந்து கொண்டே அவை
ஆளை மயக்கி, மனத்தைத் திருடிவிடும்!
ஷண்முகப்ரியா, வசந்தா பத்மஜா!

நடன நிகழ்ச்சியில் முதல் கேள்வியே,
"குட்டீஸ் டான்ஸ் இன்று இருக்கின்றதா?"
ஒரு குட்டிக்குக் கல்யாணம் ஆகிவிட்டது!
ஒரு குட்டி பெரிய படிப்பு படிகின்றது!

(தொடரும்)
 
Francis bacon quotes

"To spend too much time in studies is sloth; :bored:

To use them too much for ornament is Affectation;
:drama:

To make judgment wholly by their rules is the humour of a scholar"


"Crafty men contemn studies;

Simple men admire them;
:thumb:

Wise men use them".
:nerd:
 
கூட்டணியின் நாட்டிய நாடகம்!

அனிதா, ஜீபா என்று இரு அழகிய
ஸ்நேக் டான்ஸ் super specialists!
கராத்தே மாணவிகள் இருவருமே!
கண்டிஷனில் இருக்கும் உடல்வாகு!

சிட்டிபாபுவின் சிவலீலா விலாசம்
சிறந்த நாட்டிய நாடகமாயிற்று,
மூவர்களின் கூட்டு முயற்சிகளால்!
மூவரில் இருவரை நீங்கள் அறிவீர்கள்!

இடைவெளித் துளியும் இல்லாமல்
அரை மணி செல்லும் வீணை இசை!
அதையே நாட்டிய நாடகம் ஆக்கி
அளித்தோம் HUSBAND'S DAY அன்று!

ராஜி ராமுக்கு இரட்டை வேடம்!
கௌரியும் அவளே! சபிக்கப் பட்ட
கங்கையின் தோழியும் அவளே!
கங்கை நான் நான்
நானே தான்!

உயரமான, சுறுசுறுப்பான, தோழி
ஷீலா எங்களுடைய சிவபெருமான்!
கடைசி ஐந்து நிமிடங்களே வந்தாலும்
மேடையில் தூள் பறக்கும் தாண்டவம்!

முதலிலிருந்து கடைசிவரை உண்டு
கங்கைக்கு வேலை மேடையின் மேலே !
ராஜியோ மூன்றே நிமிடங்களில் உருமாறி
கௌரியாகவேண்டும் தோழியிலிருந்து!

"என்ன ஆடிவிடப்போகின்றாகள்!" என்று
சின்ன வியப்புக் கூட இல்லாது அமர்ந்தவர்,
முற்றுகை இட்டனர் எங்கள் கிரீன் ரூமை
முற்றுப் பெற்ற நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் !

ஆடையை மாற்றிக் கொண்டு நாங்கள்
மேடையிலிருந்து இறங்கும் வரையில்,
பொறுமை இல்லாது போயிற்று, எங்கள்
அருமையான நடனத்தைக் கண்டபின்னர்!

மூன்று முறை வேண்டி விரும்பிக்
கேட்டனர் அதே நிகழ்ச்சியை அவர்கள்!
சென்னைக்கு மூவரில் இருவர் சென்றதால்
பின்னர் சிதறிவிட்டது எங்கள் கூட்டணி!.

என் மகன்களை விட வயதில் இளைய
இரு சஹோதரிகளுடன் நான் மட்டும்
மீண்டும் சில முறை சிவலீலா விலாசம்
வேண்டிக்கொண்டவர்களுக்காக ஆடினேன்!

"ராதா மாதவம்" என்னும் ஒரு அற்புத
ராக மாலிகைத் தொகுப்பையும் ஒரு
நாட்டிய நாடகம் ஆக்கிப் படைத்தேன்,
நாட்டியமே கற்காத சிறுமிகளை வைத்து!

ஓணம், சங்கராந்தி,கிரு
ஸ்
த்துமஸ், நியூ இயர்!
ஓடிவிடும் மாதங்கள் மிகவும் விரைந்து!
வேண்டும் புதிய பாடல்களுக்கு நடனம்!
வேண்டும் தெலுங்குக் கீர்த்தனைகளே!

இரவும், பகலும் ஓடிக்கொண்டே இருக்கும்;
இஞ்சின் போல ஜாதிக்கோர்வை மனதில்!
படித்ததை மீண்டும் வாந்தி எடுப்பது போல
படிப்பிப்பதில் எனக்குச் சம்மதம் இல்லை!

"வழுவூர் பாணியா, தஞ்சாவூர் பாணியா?
கலாக்ஷேத்ரா பாணியா?" என்று கேட்டால்
நான் ரஜினி போலக் கூறுவேன் அவர்களிடம்,
"என் பாணி தனிப்பாணி!' எனத் தன்னம்பிக்கையுடன்!

(தொடரும்)

 
[FONT=comic sans ms,sans-serif]Francis Beaumont and John Fletcher.

"Deeds not words shall speak to me". :tape:

"All you better deeds
shall be in water writ, but this in marble".
[/FONT]
:help:
[FONT=comic sans ms,sans-serif]
"There is no other purgatory but a woman".
[/FONT]
:drama:
 
சவாலுக்குச் சவால்!

எங்கள் நடன நிகழ்ச்சியில் முக்கியமானது
என்றும் தசாவதாரமும், ராமாயணமும்;

ஜெயதேவரின் தசாவதாரப் பாடலும் மற்றும்
பாவயாமி ரகுராமமும் இல்லாமல் முடியாது.

எல்லோருக்குமே அந்த நடனங்கள் தெரிந்தாலும்
எல்லோரும் சம வாய்ப்பளிக்க சுழற்சி முறையே!

ராம நவமி அன்று 1989 இல் சிறப்பு நிகழ்ச்சி!
ராமாயண நாட்டியம் வேண்டும் எனக் கோரிக்கை!

அன்றைக்கென்று மாறிவிட்டாள், நிகழ்ச்சியில்
ஆட இருந்த பெண் ஒரு கிஷ்கிந்தை வாசியாக!

தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளாமல்,
தாய் தந்தையுடன் வந்து என்னிடம் மல்லுக்கு நின்றாள்!

" என் பெண் ஆட மாட்டாள்! என்ன செய்யப் போகின்றீர்கள்?
எப்படி நடக்கும் நிகழ்ச்சி என்று நானும் பார்க்கின்றேன்!"

" நன்றாக நடக்கும் நாளைய நாட்டிய நிகழ்ச்சி!
நானே ஆடப் போகின்றேன் ராமாயணப் பாடலுக்கு!"

சொல்லும் போது என்னுடைய வயது ~ நாற்பது நான்கு!
சொன்னதுடன் நிற்கவில்லை ஆடவும் செய்தேன் மேடையில்!

எனக்கு rehearsal தேவையில்லை என்ற போதிலும்,
எனக்குப் பாடிய வீணை மாஸ்டருக்குத் தேவைப்பட்டது!

குறித்துக் கொடுத்துவிட்டேன் அவர் புத்தகத்திலேயே
நிறுத்த வேண்டிய இடங்களும், பாடவேண்டிய முறைகளும்!

எனக்குப் பிடித்த சொற்றொடர் "
சவாலுக்கு சவால்"!
என்னை நேரில் பார்க்க வெட்கி எதிர்ப்படவே இல்லை!

வீணாக வம்பை விலைக்கு வாங்கியதன் பலன்
வீணாயிற்று அவள் நடன வகுப்பும், பயிற்சியும்!

 
[FONT=comic sans ms,sans-serif]Brendan Beham quotes.

"Pound note is the best religion in the world" :popcorn:

"Never throw stones at your mother,

You will be sorry for it when she's dead;

Never throw stones at your mother,

Throw bricks at your father instead" :moony:
[/FONT]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top