• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Quotes by Robert Burns.

Man's inhumanity to man,
Makes countless thousands mourn! :Cry:

An idiot race, to honor lost-Who know them best despise them most.:mmph:

Whatever mitigates the woes or increases the happiness of others, this is my criterion of goodness; and whatever injures society at large, or any individual in it, this is my measure of inequity.:peace:
 
Juggler-cum- Mono Cyclist!

கைகொட்டிக் களி முடிந்த பிறகும்,
மேடையிலிருந்து இறங்க மறுத்த

இளைய மகன் பலவகைகளில்
இன்றும் ஒரு super showman!

Mono cycle ஒட்டுவான் ஒற்றையாக!
Group cycling is by far easier!

கைகளைக் கோர்த்துக் கொண்டு
கை கொடுக்கலாம் balance செய்ய!

எந்தப் பொருளைக் கையில் கொடுத்தாலும்
விரல் நுனியில் வேகமாகச் சுழற்றுவான்!

புத்தகமோ, குஷனோ, தட்டோ, அட்டையோ
எதுவானாலும் சுழலும் விரல் நுனியில்.

விஷ்ணுவின் அவதாரமோ என்னவோ! :rolleyes:
விழாது ஒரு பெரிய பந்து கூடத் தரையில்!

Juggling expert உம் கூட ஆகிவிட்டான்!
எப்போது கற்றுக் கொண்டான் இவற்றை?

பேச்சுக் குறைவு ஆனால் விரல்கள் பேசும்!
பேசினால் அதை நினைத்து நினைத்துச்

சிரித்துக் கொண்டே இருப்போம் பலநாட்கள்!
மாறுபட்ட கோணங்களில் அவன் பார்ப்பான்.

சிரிக்காமல் சொல்லுவான் எதையும்!
சிரிப்பு பொத்துக்கொண்டு வரும் நமக்கு!

ஒரு bakery யில் volunteer ஆக இருந்து உதவி,
trade secrets அத்தனையும் அறிந்துகொண்டான்!

Birthday cake செய்தால் அதன் மேல்
கத்தியை வைக்க மனதே வராது நமக்கு!

3 D figure கேக்குகள் செய்வான்!
Dolls, Mickey Mouse, Castle, Teddy Bear! :love:

What is worth doing, is worth doing well! :thumb:
அவன் philosophyயே அவன் மனைவியுடையதும்!:clap2:
 
Scooter Driving Adventure .

பாம்பு போல சைக்கிள் ஒட்டியது,
பயன் பட்டது கார் ஓட்டும்போது.

உடலில் balance உணர்வு வந்துவிட்டால்
உலகில் எந்த வண்டியையும் ஓட்டலாம்.

ஸ்கூட்டர் ஓட்டக் கற்றுக் கொள்ள,
ஸ்கூல் மைதானத்துக்குச் சென்றோம்;

முதல் நாளே காலை ஊன்றாமல்
ட்டி,
எட்டுப் போட்டு ஆச்சரியப்பட வைத்தேன்!

அப்பா சொன்ன வார்த்தைகள் பொருந்தின
அனைத்து வகை driving செய்வதற்கும்.

கால்கள் இரண்டும் கீழே எட்டாது என்பதால்
காலை ஊன்றாமல் anticipate & drive policy!

அது geared vehicle , Lamby 150 என்று பெயர்.
Driving test போகாமலேயே வாங்கிவிடலாம்

Driving License என்றார் இவர் ! நான் மறுத்தேன்!
"நாமே விதிகளை உடைத்தால் எப்படி?" என்று!

எனக்கு, license வாங்கப் போன இடத்தில்
எதிர்பாராத சர்க்கரைச் செய்தி கிடைத்தது!

விசாகப்பட்டணத்திலேயே license for geared
Vehicle வாங்கிய முதல் பெண்மணி நான்!

பெருமை எல்லாம் இவருக்கே சேரவேண்டும்!
பிறகு முழங்கால் தேய்வதற்கும் முக்கியமான

காரணங்களில் இந்த Lamby யும் ஒன்றாயிற்று!
கலப்படமில்லாத நன்மை என்பது இல்லையே!

(Thanks to Kick starting and the center stand !)

குட்டிப் பயலைப் பில்லியன் சீட்டில் அமர்த்தி,
ஓட்டிச் செல்லும் போது, அவன் அந்த நேரத்தை

வீணாக்காமல் பின்னால் circus செய்து வந்தது,
வீணை டீச்சர் ராஜிராம் சொல்லித் தெரியவந்தது!

பன்னிரண்டு ஆண்டுகள் தனியே இருந்தபோது,
பயன் பட்டது Lamby யும், Driving லைசென்சும்!

 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Samuel Butler (17th century)

For rhyme the rudder is of verses :fish2:
With which like ships they steer their courses.

She that with poetry is won :music:
Is but a desk to write upon. :typing:

And prove their doctrine orthodox
By apostolic blows and knocks.:boxing:
[/FONT]
 
என் சலங்கைகள்.

முதல் சலங்கை வாங்கியது
கோவில் குருக்களிடமிருந்து!
ஆஞ்சநேயர் கோவில் பூசாரி
ஆடுவார் அதைக்கட்டிக்கொண்டு!

மாட்டுச் சலங்கை தான் அது என்பது
மற்றவர்களின் சலங்கையைப் பார்த்த
பின்பு தான் தெரிந்தது! சாரமில்லை!
தன் பணியை அது நன்கு செய்ததால்.

கதக் கலைஞர்கள் கட்டிக்கொள்ளும்
கனத்த சலங்கை மிகவும் பிடிக்கும்.
நீளமாக கோர்த்து அதனைக் காலில்
நெருக்கமாகக் கட்டிக்கொள்ளுவார்கள்.

திறமையான நடனமணியால் ஒரு
தனிச் சலங்கையை ஆட்டமுடியுமாம்!
இங்கே தோலில் கம்பியால் கோர்த்த
இரண்டு மூன்று வரிசைச் சலங்கைகளே!

ஆடும் போது தெறித்து விழுந்துவிடும்.
ஆடும் கால்களையே பதம் பார்க்கும்!
கொஞ்ச நாட்களுக்குப் பின்னர், பூக்கள்
உதிர்ந்து போன நார் போலக் காட்சிதரும்.

என் சலங்கைகளை நானே தைத்தேன்;
எண்ணி ஆறு டஜன் சலங்கை ஒரு காலுக்கு!
மெல்லிய தோலில், துணியால் லைனிங்;
Nylon கயிற்றினால் தைத்து விட்டேன்.

வியர்க்காது- துணி லைனிங் இருப்பதால்;
உதிராது- strong nylon கயிற்றினால்.
என் சலங்கையைக் கட்டி ஆடாதவர்
எனக்குத் தெரிந்த வரையில் இல்லை!

இன்றும் என் சலங்கை இன்றியமையாதது.
எங்கும் பாடும் போது தாளம் அதில் தான்.
ஸ்ருதியுடன் நன்கு இணையும் மெல்லிய
ஸ்வீட்டான background மியூசிக் அது!

மாட்டுச் சலங்கையையும் அவற்றுடன்
நாட்டியச் சலங்கைகளையும் ஒன்றாய்ச்
சேர்த்திருப்பதால், அதன் சப்தஜாலம்
சேர்க்கும் இன்பம் நம் செவிகளுக்கு!

 
ரயில் பயணங்கள். #1.

நிறையப் பாடங்களைக் கற்றேன் நான்
நீண்ட ரயில் பயணங்களின் போது.

Howrah மெயிலில் பயணம் நாங்கள்,
ராஜி ராம், அவர் கணவர் எல்லோரும்.

பத்து நிமிடங்கள் இருந்தன இன்னும்,
பக்கத்தில் கொண்டப்பள்ளி பொம்மைகள்

"வா! வா! "என்று மதியை மயக்கின!
வாங்கும் போது திரும்பிப் பார்த்தால்,

வேகம் பிடித்தாயிற்று எங்கள் மெயில்!
நேரம் மாறியது தெரியவில்லை எங்களுக்கு!

என் குழந்தைகளும், ராஜியின் கணவரும்,
அந்த ரயிலில் சென்று கொண்டிருந்தனர்!

நானும், ராஜியும் என் கணவரும் அங்கு
Paltform மில் பரிதவித்துக் கொண்டு!

எல்லாக் கதவுகளிலும் ஆட்கள் நின்று,
டாடா காட்டிக்கொண்டு வழியை மறைக்க;

ராஜிக்கு ஒரு உந்து
ஒரு கதவுக்கு நேராக;
ராஜி
ஒரு கோச்சினுள் போய் விழுந்தார்!

அடுத்த உந்து எனக்கு, அடுத்த கதவுக்கு நேரே!
பின்னாலேயே இவரும் ஏறி விட்டார் உள்ளே!

பெருமூச்சு விடுவதற்குள், ராஜிராம் அந்த
கோச்சிலிருந்து குதித்து எங்கள் கோச்சில்!!!

"யார் வேண்டுமானாலும் stunt செய்யலாம்
அவசியம் இருந்தால்!" என்று உணர வைத்தது!

அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது!
நாங்கள் ஏறினோமா இல்லையா தெரியாது!

அடுத்த ஸ்டேஷன் அனகாபல்லி வந்ததும்
பிடித்த ஓட்டம் எங்கள் கோச் வரையிலும்.

ஒருமணி நேரம் ஆயிற்று குழந்தைகளைப்
பிரிந்து! இரண்டும் சித்தப்பாவுடன் சமர்த்தாக!

ரயிலை நிறுத்தி எங்களை ஏற்றாது ஏன்?
ரயிலைத் தவறவிடமாட்டோம் என்பதாலா?

ரயிலில் அமர்ந்தால் பின்னர் கீழே அந்த
ரயிலை விட்டு இறங்குவதில்லை அதன்பின்!
 
ரயில் பயணங்கள். #1.
.............
எனக்கு வேறு விதமாக நினைவலைகள்! இரு துணைவர்கள், மூன்று குழந்தைகளை

ரயிலில் இருக்கச் சொல்லிவிட்டு, நாம் இருவர் மட்டும் இறங்கி பொம்மை வாங்கச்

சென்று, ரயில் புறப்பட்டதும் அலறியடித்து, பொம்மைகளைக் கடையிலே போட்டு, ஓடி,

திணறி, பல 'கோச்'களில் படிக்கட்டு நிறைந்திருக்க, ஏதோ ஒரு புண்ணியவாளன்

'கைகொடுத்த தெய்வம்'போல இருவரையும் பெட்டிக்குள் வரவைக்க, முக்கால் மணி

நேரத்திற்குப் பின், அனகாபல்லியில் இறங்கி, மீண்டும் ஓடி, சரியான பெட்டியில் ஏறி,

நம்மவர்களைப் பார்த்து (முறைத்து!!), 'ஏன் ரயிலை நிறுத்தவில்லை?' என்று கேட்ட

கேள்விக் கணைக்கு, 'நீங்கள் ரெண்டுபேரும் உள்ளே ஏறினதைப் பார்த்தோமே!' என்று Cool

ஆகக் 'கோரஸ்' போட்டதுபோல நினைவு!!


:biggrin1:
 
My dear Raji,

I try NOT to remember incidents unless they cause seep indelible

impressions in my mind. It was athimber who pushed us one by one into

the coaches. The train was moving too fast for any kind hearted man to

help us board in the same coach!

Nobody saw us board the train I am sure. Must be that Mr. Ram (your

husband) had that much confidence in Athimber that he forgot that he

could have stopped the train (using the valid reason three adults had not

boarded the train since the time of departure was changed on that day)!

All is well that ends well!

with best wishes and love,
V. R. Akka.

 
[FONT=comic sans ms,sans-serif]Quote by Samuel Butler (17th century)

What makes all the doctrines plain and clear? :nerd:

About two hundred pounds a year :popcorn:

And that which was prov'd true before, :rolleyes:

Prove false again? Two hunded more.:popcorn:
[/FONT]
 
ரயில் பயணங்கள் # 2.

சுடுநீர் படுத்திய பாடு!

கோடை விடுமுறைக்கு வருவோம்;
கோவை நானும் என் குழந்தைகளும்.

கோவை வருவார் அவர் தனியாகே
தீபாவளி சமயத்தில் விடுமுறையில்.

அந்த முறை பயணம் கடைசி கோச்சில்;
தண்ணீர் வெந்நீர் ஆகிவிட்டது உஷ்ணத்தில்!

ரயில் நின்றது, தண்ணீர் குழாய் ஜஸ்ட் வெளியே!
இரயிலிருந்து இறங்கி சுடுநீரைக் கொட்டும்போதே,

தொலைவில் செல்கின்றது எங்கள் ரயில்!!!
கிழக்கே போகும் ரயில் படத்தின் ரயில் போல!

தனியாக இரண்டு சிறு குழந்தைகள் உள்ளே!
பாட்டிலும், மூடியும், ஹை ஹீல்ஸ்ஸுமாக,

நான் வெகு தொலைவில்! குழந்தைகள் கதவருகே
என்னைத் தேடி வந்தால்! ரத்தமே உறைந்துவிட்டது.

எப்படி ஹைஹீல்சில் ஓடினேன்? ஓடும் ரயிலில்
எப்படி பாட்டிலும்,
மூடியும், கையுமாக ஏறினேன்?

ஒன்றுமே நினைவில்லை எனக்கு அது பற்றி !
ஒன்றும் ஆகவில்லை அவர்களுக்கு நல்லவேளை!

தண்ணீர் என்று அதற்குப் பிறகு எங்குமே ரயில்
வண்டியிலிருந்து இறங்கினதே இல்லை இதுவரை !
 
ரயில் பயணங்கள். # 3.

குழந்தை எங்கே?

என்னை விட்டு ஐந்து நிமிடங்கள் கூட
தனியாக இருக்கமாட்டான் சின்னவன்!

"அம்மா தோகா" என்று அவனுக்குப் பெயர்!
"அம்மாவின் வால்" என்பது மொழிபெயர்ப்பு.

அருகில் படுக்க வைத்து தூங்குவது வழக்கம்;
பெரியவர்கள் ஆனதும் தனி பெர்த் கிடைக்கும்.

எங்கள் cubicle தான்; இருந்தாலும் இரவில்
எழுந்து பலமுறை பார்ப்பேன் அவர்களை!

ஒரு பயணத்தின் போது தூங்கிக் கொண்டு
இருந்த சின்னவனைக் காணோம்! குழந்தை எங்கே?

யாரவது அழைத்துச் சென்று விட்டார்களா?
எங்கேயாவது இறங்கிப் போய் விட்டானா ?

"கண்ணா! கண்ணா!" என்று கண்ணீருடன் தேடினால்
தூங்கி ஆடிக்கொண்டு யாருடைய பெர்த்திலோ

அமர்ந்திருக்கின்றான்! அவர்களுக்கும் தெரியவில்லை!
அன்றிலிருந்து ஒரு புதுத் திட்டம் வகுத்தேன் அவனுக்கு!

மெல்லிய கறுப்புக் கயிற்றால் கட்டிவிடுவேன்
மென்மையாக மணிக்கட்டையும், பெர்த்தையும்.

எழுந்து நடந்தால் அவனை இழுத்து நிறுத்துமே!
என் பெர்த்தையும் நினைவு வைத்துக்கொள்ளுவான்.

யானைக் கட்ட கனமான சங்கிலி வேண்டும்;
யானையே அதையும் கொண்டு வந்து தரும்.

வேளுக்குடி ஸ்வாமிகள் கூறும்போது எனக்கு
இந்த நிகழ்ச்சி தவறாமல் நினைவுக்கு வரும்.


இவன் பாக்கெட்டிலேயே இருக்கும் அந்தக் கயிறு.
இரவு படுக்கைக்கு முன்பு இவனே எடுத்துத் தருவான்.
 
Hi Abinandan,

Please correct your signature.. It is not மரம் வெட்டி கலைத்து போன மனிதன் .... இளைப்பாற தேடினான் ஒரு மரத்தை.

It should be மரம் வெட்டிக் களைத்துப்போன மனிதன், இளைப்பாறத் தேடினான் ஒரு மரத்தை.

F Y I

Raji Ram
 
Last edited:
Hi Abinandan,

Please correct your signature.. It is not மரம் வெட்டி கலைத்து போன மனிதன் .... இளைப்பாற தேடினான் ஒரு மரத்தை.

It should be மரம் வெட்டிக் களைத்துப்போன மனிதன், இளைப்பாறத் தேடினான் ஒரு மரத்தை.

F Y I

Raji Ram

Thanks..!! :)
 
Hello Abinandan,

Your avatar IS very cute. :love:

Reminds me of my 'busybody' grandson Tejas! :)

You can move into the thread puthuk kavithai -

since your thought process suits it. :typing:

All you have to is to arrange your words vertically

instead of horizontally. Also make sure that

there are no spelling mistakes since it is

Raji Ram madam's thread! Good luck!
icon14.png


with best wishes,
V.R.
 
[FONT=comic sans ms,sans-serif]Life is one long process of getting tired.:bored:

Life is the art of drawing sufficient conclusions
from insufficient premises. :confused:

All progress is based upon a universal innate desire
on the part of every organism to live beyond its income.:popcorn:

Quotes by Samuel Butler (19th Century)
[/FONT]
 
interview board.

ஒரு நாள் ப்ரின்சிபலிடமிருந்து அழைப்பு,
"அரைமணி பள்ளிக்கு வரமுடியுமா?" என்று!

காரணம் தெரியாமலேயே பள்ளிக்குச் சென்றால்
திடீர் interview board member ஆக்கப்பட்டேன்!

மியூசிக் டீச்சர் போஸ்ட்க்கு interview அன்று.
மியூசிக் பற்றிக் கேள்விகள் கேட்க யாரும் இல்லை!

என்னிடம் technical questions கேட்கச்சொன்னர்கள்.
மியூசிக் classes எடுத்துக் கொண்டிருந்ததால் சுலபம்!

சிரித்த முகமும், நல்ல குரல் வளமும் கொண்ட
ஸ்ரீநிவாசை அந்தப் போஸ்டுக்கு செலக்ட் செய்தேன்.

மிகவும் விசுவாசம் உள்ளவர். கோபமே வராது.
எத்தனை வேலைகள் இருந்தாலும் மறுக்காமல்

எங்கள் டான்ஸ் recital லுக்கு வீணை வாசிப்பார்.
என்னுடைய நாலரைக் கட்டை சுருதியிலேயே!
 
மிருதங்கம் மணி.

A. I. R. Artist. பந்தா பார்ட்டி!
நிறைய மாணவர்கள் உண்டு.

Rehearsal என்றாலே பிடிக்காது!
"rehearsal எனக்குத் தேவையில்லை!"

ஒரே பதில் தான் வரும் எப்போதுமே!
ஒருவேளை வந்தாலும் பீஸ் உண்டு!

பாட்டுக்கு அவர் வாசிப்பதற்கும்,
நாட்டியத்திற்கு வாசிப்பதற்கும்,

உள்ள வேறுபாடுகளை என்னால்
உணரவைக்கவே முடியவில்லை

சொந்தச் சரக்கு ஜொலிக்கும்
இசைக்கச்சேரிகளில் என்றும்!

நாட்டியத்திலோ மிருதங்கம்,
நாட்டிய ஜதிகளுடன் கலந்து,

அல்வாத் துண்டுகள் போல,
அனுபவிக்க எளிதா
க்க வேண்டும்.

ஜதியை எழுதிக் கொடுத்தால்,
ஜம்பமாகக் கடாசி விடுவார்.

பாடும் போது, முத்தாய்ப்பு
முடியும் வரையில் பாடகர்,

புன்சிரிப்புடன் அமரலாம்;
அதில் எந்த தவறும் இல்லை.

திடீர் முத்தாய்ப்புகள்
வாசித்தால்,
நடனமணிகள் வெறுமனே,

மேடையில் சிரித்துக் கொண்டு,
பேசாமல் நிற்க முடியுமா?

இந்த வேறுபாடுகளை அவர்
புரிந்து கொள்ளவே இல்லை.

நிறைய rehearsal செய்வோம்!
பாடாவிட்டால் கூட மாணவிகள்

பாங்காக ஆடி விடுவார்கள்!
Puncture ஆக மாட்டார்கள்!

 
Quotes by Samuel Butler (19th century)

To live is like love, all reason is against it, and all healthy instincts for it. :confused:

I do not mind lying, but I hate inaccuracy.
:nono:

The world will, in the end, follow only those who have despised as well as served it. :flock:
 
flute john.

அற்புதமான ஆர்டிஸ்ட் இவர்!
கற்றதில்லை கர்னாடக சங்கீதம்!

எந்தப் புதுப் படத்தில் வந்த
எந்தப் புதுப் பாடலையும்

வந்த சூடு ஆறும் முன்பே
வாசித்துக் காட்ட வல்லவர்.

"கண்ணன் பாடல்களுக்கு ஒரு
குழல் இருந்தால் இனிக்குமே!" என

இவரை வரவழைத்தேன் நான்.
"நீங்கள் பாடப் பாட நானும்

பின் தொடர்வேன் சரியாக!"
என்றார் தன்னம்பிக்கையுடன்.

"மஹா கணபதிம்" முதலில்!
முதல் வரியிலேயே பல்டி!

ஸ்வரம் சொல்லி, key board இல்
வாசித்தும் ஒன்றும் பயனில்லை!

அன்று தான் உணர்ந்தேன் நம்
சாஸ்திரீய சங்கீதப் பெருமையை!

விட்டால் போதும் என்று எண்ணி
வாசிக்காமலே சென்று விட்டார்!

திரைப்பட பாடல் நிகழ்சிகள்
தொடர்ந்தன எப்போதும் போல.

 
சலூனும், சங்கீதமும்.

ஒரே ஒரு சலூன்; ஒருபாடு கூட்டம்;
ஒரு நிமிடம் நேரம் கிடைத்தாலும்,

ஒலிக்கும் இனிய கிளாரிநெட் இசை!
ஒலிப்பவர் சலூன் சொந்தக்காரர்!

இயற்கையாகவே இசைப்பவர் தான்,
இசை பயின்றது இல்லை இவரும்.

மனதில் மிகவும் ஆசை இவருக்கும்
மேடையில் வாசிக்க வேண்டும் என்று.

நான் அழைக்கவில்லை இவரை,
ஜானுடன் செய்த முயற்சிக்குப் பிறகு.

ஊர் அறிந்த சலூன்காரர் என்பதும்
உள்ளூர ஒரு காரணமோ அறியேன்!

அந்த வழியாக நடந்தாலே போதும்;
தேவதையைப் போலப் பார்ப்பார்!

கூடவே எப்போதும் இருப்பவருக்குத்
தெரியாத நம்முடைய மேன்மைகள்

எட்டி இருப்பவர்களுக்கு மட்டும்
இப்படி நன்றாய்த் தெரிவது எப்படி?
 
Field Marshal Sam Bahadur Maneckshaw once started addressing a public meeting at Ahmedabad in English.
The crowd started chanting, "Speak in Gujarati. We will hear you only if you speak in Gujarati."
Field Marshal Sam Bahadur Maneckshaw stopped. Swept the audience with a hard stare and replied,
"Friends, I have fought many a battle in my long career. I have learned Punjabi from men of the Sikh Regiment; Marathi from the Maratha Regiment; Tamil from the men of the Madras Sappers; Bengali from the men of the Bengal Sappers, Hindi from the Bihar Regiment; and even Nepali from the Gurkha Regiment. Unfortunately there was no soldier from Gujarat from whom I could have learned Gujarati."
 
.........
ஸ்வரம் சொல்லி, key board இல்
வாசித்தும் ஒன்றும் பயனில்லை!

அன்று தான் உணர்ந்தேன் நம்
சாஸ்திரீய சங்கீதப் பெருமையை!
..........

திரை இசை...

திரை இசைப் பாடல்களும், கர்நாடக இசை ராகங்களே!
குறைவான கமகங்களுடன், ராகத்தை ஒட்டி இருக்கும்.

ஜன ரஞ்சகமாக அவை அமைந்துவிடுவதால், பொது
ஜனங்களை அடைவதும், அந்த இசைக்கு மிக எளிது;

நான் கூறுவது குத்துப் பாடல்களை அல்ல; 'மெலடியே'
தான் என்று சாதிக்கும், திரை இசைப் பாடல்களையே!

ரஹ்மான் வந்த பின், தர்மவதியும், கானடாவும் வந்து,
ரம்மியமாக மனதை மயக்குகின்றன, இக்காலத்தில்.

பல இசைப் போட்டிகளில், இவற்றைப் பாட முடியாது
பலர் கோட்டை விடுவது, அந்த கமகங்களால்தான்!

எல்லாத் திரை இசைப் பாடல்களுமே, எளிது அல்ல;
நல்ல இழைந்து வரும் இசையில்தான் பரிமளிக்கும்!


நல்ல இசை வாழ்க!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top