• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
குழந்தைகளுடன்!

நான் மிகவும் விரும்புவது இவர்கள் தான்!
நான் relaxed ஆக இருப்பதும் இவர்களுடன்!

பெரியவர்களுடன் இருந்தால் அவ்வளவு
ஃ ப்ரீயாக இருக்கவே முடிவதில்லை.

ஆண்கள் அதிசயப் பிறவியைப் போலும்,
பெண்கள் பொறமைக் கண்களுடனும்,

பார்த்து என் மன நிம்மதியை அழிப்பார்;
வள்ளி டீச்சர் காலம் முதல் தொடரும் இது.

குழந்தைகளுக்குக் கதை சொல்லுவேன்!
குழந்தைகளுடன் கார்ட்டூன் பார்ப்பேன்.

கணக்கு அல்லது SCIENCE புரியவைக்க
கார்ட்டூன்களின் உதவியை நாடுவேன்.

நடனத்தில் நடக்கும் போது வேண்டும்
மாறு கால்கள், மாறு கைகளின் அசைவு!

அஞ்சவேண்டாம் மதுரைவீரனை எண்ணி!
அசைய வேண்டும் வலது கால் + இடது கை!

அது போலவே இடது காலும், வலது கையும்.
ஒரே பக்கக் கை கால்கள் ஒன்றாய் அசைந்தால்

சாவி கொடுத்த பொம்மை போலவும் ஒரு
TIN SOLDIER போலவும் இருக்கும் பார்க்க!

எத்தனை சொல்லியும் புரியாதவனுக்கு
TOM AND JERRY cartoon "THE FLIRTY BIRD"

பார்த்தவுடன் புரிந்து விட்டது! அதன்பின்
அழகாக நடக்கத் தொடங்கினான் அவன்.

கார்டூன்களில் எவ்வளவு Science உம்,
Arts & Maths உள்ளன என்று கவனியுங்கள்!



 
முக்கால் ரூபாயை எக்காலமும் மறவேன்!

கல்லூரி ஆண்டு விடுமுறையின் போது
இல்லத்துக்கு என்னை அழைத்துச் செல்வார்

அப்பாவின் compounder மாமாவோ அல்லது
அப்பா, அம்மாவோ, எங்கள் hostel இல் இருந்து.

அது இறுதி ஆண்டு! இறுதித் தேர்வு!
அக்கா திருமணம் fix ஆகியிருந்தது!

அப்பா புதுவீடு கட்டிக்கொண்டிருந்தார்.
தம்பி medical college admission busy.

என்னை அழைத்துச் செல்லுவதற்கு
யாருக்கும் அன்று வசதிப்படவில்லை!

"நானே வந்து விடுகின்றேன்!" என்று
நானே சாமான்களுடன் புறப்பட்டேன்.

பஸ் டிக்கெட் வாங்கிய பிறகும் என்
பர்சில் ஐந்து ரூபாய் பாக்கியிருந்தது!

ஐந்து ரூபாய் என்றால் வெறும் தூசு அல்ல!
அரை கிராம் தங்கம் அன்று நாலு ரூபாயே!

அம்மாவுக்கு ஸ்பெஷல் கதம்பம் நிறைய!
இரண்டு ரூபாய்க்கு வாங்கி அமர்ந்தேன்.

கண்டக்டர் லக்கேஜுக்கு தரச் சொன்னார்
என்னிடம் மூன்றே முக்கால் ரூபாய் மட்டும் !

இருந்த மூன்று ரூபாயைக் கொடுத்தால்,
"இறங்கும் போது முக்கால் ரூபாயைக்

கொடுத்து விட்டு luggage எடுத்துக்கொள்!"
சொல்லிவிட்டு சீட்டுக்குப் போய்விட்டார்.

பஸ்ஸில் தெரிந்தவர் யாரும் இல்லை!
பஸ் ஸ்டாப்புக்கும் யாரும் வரமாட்டார்!

மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தேன்.
முடிவில் தீர்மானம் செய்தேன் ஒரு வழியாக!

"குதிரை வண்டிக்காரனிடம் வாங்கி இங்கே
கொடுத்துவிட்டு, அத்தான் மாமியிடம் வாங்கி

அவனுக்குக் கொடுத்துவிட்டு, அத்தான் மாமிக்கு
அப்பா அம்மாவிடம்வாங்கிக் கொடுத்துவிடலாம்!"

இறங்கியவுடன் ஸ்டைலாக வண்டிக்காரனிடம்,
"ஒரு ரூபாய் சில்லறை கொடுங்கள் இப்போது!

வீட்டுக்குப் போனவுடன் சேர்த்துக் கொடுக்கின்றேன்!"
வாயெல்லாம் பல்லாகக் கூறினான் என்னிடம் அவன்,

"ரூபாயைக் கொடு அம்மணி. ஒரே நிமிஷத்தில் நான்
சில்லறை மாற்றித் தரேன்!" இது எப்படி இருக்கு?

"சாமான்களை இறக்கியவர்களுக்கு கால் ரூபாய்,
luggage க்கு முக்கால் ரூபாய்" விளக்கியபிறகு

தன் நண்பனிடம் ஒரு ரூபாய் கடனாக வாங்கி வந்து
என் மானத்தைக் காப்பாற்றினான் அந்த நல்ல மனிதன்!

அத்தான் மாமியிடம் வாங்கி அவனுக்குக் கொடுத்து,
அத்தான் மாமிக்கு அப்பாவிடம் வாங்கிக் கொடுத்து,

பெரிய business transaction முடிந்தது போலிருந்தது!
பெரிய பாராட்டும் கிடைத்தது என் அப்பாவிடமிருந்து!

" இனி உன்னை பற்றிய கவலை எனக்கு இல்லை!
எங்கே இருந்தாலும் நீ பிழைத்துக் கொள்ளுவாய்!

பணம் இருந்து வேறு எது இல்லாவிட்டாலும்,
வாங்கிக் கொள்ள முடியும் பரவாயில்லை! :rain:

பணம் இல்லாமல் வேறு எது இருந்தாலும்,
நிச்சயமாக மாட்டிக்கொள்வோம் எங்காவது! :fear:

 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lord Byron.

Man, being reasonable, must get drunk;
The best of life is but intoxication;
[/FONT]
:heh:
[FONT=comic sans ms,sans-serif]Glory, the grape, love, gold, in these are sunk
The hopes of all men and of every nation.:pound:

Each kiss is a heart-quake...for a kiss's strength
I think must be reckon'd by its length.:kiss:
[/FONT]
 
ப்ரியா என் ப்ரிய மாணவி.

எதிர் வீட்டுக்கு அவள் வரும்போது,
இரண்டு வயது கூட நிரம்பவில்லை!

காந்தமும், இரும்பும் போல இருவரும்
ஒன்றாக ஒட்டிக் கொள்ளாத குறை!

சாப்பிடவும், தூங்கவும் தான் போவாள்
தன்னுடைய வீட்டுக்கு என் ப்ரியா குட்டி!

மற்ற நேரமெல்லாம் என் ப்ரியா தான்!
எங்கு போனாலும் தூக்கிச் செல்லுவேன்!

என் குழந்தை என்று எண்ணி ஏமாந்தவர்கள்
ஏராளம் உண்டு! பெற்றால் தான் பிள்ளையா?

எதோ மொழியில் நீண்ட நேரம் பேசுவாள்.
"லக்ஷ்யாமி, விளக்ஷ்யாமி, ஈஜிப்ஷியாமி"

என்று பட்டணத்தில் பூதம் திரைப் படத்தில்,
ஜாவார் சீதாராமன் நீளமாகப் பேசுவது போல.

நம் பேச்சு மனதில் பதியப் பதிய அந்த
விசித்திர மொழியை மறந்து போனாள்!

ஒரு சேரில்
காலை நீட்டி அமர்ந்து என்
வகுப்பில் நடப்பதை நன்கு கவனிப்பாள்!

யாராவது தவறு செய்தால் திருத்துவாள்,
தன்னுடைய அழகிய மழலைமொழியில்!

'காலை இப்பி அச்சணம்!"
(காலை இப்படி அடிக்கவேண்டும்)

"கையை இப்பி வெச்சணம்!"
(கையை இப்படி வைக்க வேண்டும்)

நீள முடியும், Almond eyes ஸும் கொண்ட
இவள் தான் வகுப்பின் முதல் லில்லிபுட்!

முதல் dance எப்போதும் இவளுடையதே!
மஹா கணபதிம் specialist இந்தக் குட்டிப்பெண் !

ஒரு முறை rehearsal இன் போது சீரியஸ்!
"இப்படி இருந்தால் நான் பாடமாட்டேன்!

சிரித்துக்கொண்டே வந்தால் தான் பாடுவேன்!"
சிரித்த புன்னகையில் அன்று உலகமே மயங்கியது!
 
"நா பேரு கிருஷ்ணா!"

வசந்தா பத்மஜா, ப்ரியாவின் ஜோடி.
இரண்டாவது லில்லிபுட் இவள் தான்.

ராஜுகாருவின் மகள், ராஜ களை!
சிவப்பு நிறம், ரோமன் நாசியுடன்!

கிருஷ்ணர் வேஷம் போட்டால்
கண் படாது இருக்கவே முடியாது!

Zinc plant புரோகிராமில் இவர்களின்
ராதா கிருஷ்ணா டான்ஸ் அரங்கேற்றம்!

"நீ பேரு ஏமிட்டி தல்லி?" என்று கேள்விக்கு
"நா பேரு கிருஷ்ணா " என்ற ஒரே பதில்!

அவள் மறந்து போய் விட்டாள் அன்று
அவள் பெயர்
வசந்தா பத்மஜா என்று!

கிருஷ்ணனாகவே தன்னை எண்ணும் போது
கிருஷ்ணராகவே மாறிவிடுவதில் வியப்பு???
 
[FONT=comic sans ms,sans-serif]விரும்பிப் போனால் விலகிப் போகும்! :bolt:

விலகிப் போனால் விரும்பி வரும்! :bump2:
[/FONT]
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lord Byron.

There is a tide in the affairs of women,
Which when taken at the flood, leads-
God knows where.:fear:

A lady of a "certain age," which means certainly aged.:drama:

With just enough learning to misquote.:crazy:
[/FONT]
 
குறிப்பறிந்து...!

நாட்டிய நிகழ்சிகள் இருந்தால் செய்வோம்
நேரம் பார்க்காமல் continuous rehearsals!

நூறு முறை பாடிப் பழகிய பின்பு தான் அதை
மேடையில் பாடவேண்டும் என்பார்கள் சிலர்.

நூறு முறை ஆடிப் பழகிய பின்னர் தான்
துணிந்து அவர்களை மேடை ஏற்றுவேன் நான்.

பாட்டே இல்லாமல் கூட ஆடிவிடுவார்கள்.
தூக்கத்தில் எழுப்பினாலும் கூட ஆடிவிடுவர்.

Rehearsal முடிந்த பிறகு, "எதையாவது கிளறி
வயிற்
றில் தள்ளுவோம்!" என்று நினைக்கும் முன்

காலிங் பெல் அடிக்கும்! அதை தொடர்ந்து
சூடான சாப்பாடு ஒருவருக்கு tray இல் வரும்.

ப்ரியாவின் அம்மா தான் 5 * treatment தருவார்!
"ப்ளீஸ் வேண்டாம்!!" என்றால் கேட்க மாட்டார்!

"இத்தனை நேரம் பாட்டுச் சத்தம் கேட்டது,
இனிமேலே சமைத்துத் தானே சாப்பிடணும்?.

Tired ஆக இருப்பீர்கள்! உடம்பு கெட்டுவிடும்!"
எந்த ஜென்ம பந்தமோ எனக்குத் தெரியவில்லை!

இந்த மாதிரி நண்பர்கள் கிடைப்பதற்கு நான்
எத்தனை புண்ணியம் செய்திருக்கின்றேனோ!
 
பள்ளிக் கலைநிகழ்ச்சிகள்.

தசஅவதாரம் வேண்டும் என்று பெற்றோர்
தவம் கிடந்தனர் school day நிகழ்ச்சியில்!

ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம்!
யாருக்குத்தான் ஆவல் இருக்காது?

அர்த்தமில்லாத கண்டிஷன் ஒன்றால்
வியர்த்தம் ஆகிவிடுமோ என் நிகழ்ச்சி?

குறைந்து ஆறு பேர்கள் ஆடவேண்டும்
குழந்தைகள் ஒரு பள்ளிதின விழாவில்!

தச அவதாரம் ஆடுபவர்கள் ஐந்து பேர்;
அறுவராக வந்தால் தான் ஆடச் சான்ஸ்!

ப்ரியா சொன்னாள்,"நான் ஆடுவேன் என்று!"
ப்ரியா அதை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை!

இருபத்தைந்து நிமிடங்களுக்கும் மேல் வரும்!
பன்னிரண்டு பத்திகள்- பாட்டும், ஸ்லோகமும்!

ஜதிக் கோர்வைகள் மட்டும் அரைடஜன் உண்டு!
பாடல் முழுவதும் ஒரு நொடி ஓய்வு இருக்காது.

எப்படிப் படிப்பாள் ஒரு வாரத்துக்குள் இத்தனையும்?
எப்படியோ படித்தாள், ஓயாமல் practice வீட்டில்!

குழந்தை எடையே குறைந்து விட்டாள் ஆடிஆடி!
க்ரூப் டான்ஸுக்குத் ஆறு பேர்கள் தயார் ஆனார்!

அந்த நிகழ்ச்சியில் தான் மிருதங்கம் மணி தன்
மேதாவித்தனத்தை எல்லாம் வெளிக் காட்ட...

என் பாட்டே கேட்கவில்லையாம் இவர்களுக்கு!
எண்ணற்ற rehearsal செய்தோமோ பிழைத்தோமோ!

தூக்கத்தில் எழுப்பி நிறுத்தினால் கூட ஆடுவார்கள் ;
தூக்கி நிறுத்தியது எங்களை அத்தனை practice உம் .

மற்ற நிகழ்ச்சிகளை ஓரம் கட்டியதால் கோபம்
மற்ற எல்லா டீச்சர்களுக்கும் எங்கள் மேல்!

அதற்குத் தயார் ஆவதற்குப் பட்ட பாடும்
அதன் விளைவாக பட்ட பாடும் போதும்!

 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lord Byron.

Mostly innocent flirtation,
Not quite adultery, but adulteration.:hippie:

Now hatred is by far the longest pleasure;
men love in haste, but they detest at leisure.:scared:

The English winter-ending in July,
To recommence in August.:smow:
[/FONT]
 
தாயினும் சாலப் பரிந்து!

ஒரு முறை இவர் கோவை பயணம் ரயிலில்!
அவர் அப்புறம் செல்ல எனக்கு திடீர் சோதனை!

அடிக்கடி வரும் தொல்லைகள் fibroid களால்!

ஆங்காங்கே மயங்கி விழுந்ததும் உண்டு சிலமுறை!

Hospital admission , Emergency D.N.C என்று ரகளை!
இவருக்குத் தகவல் சொல்ல ஒரு போனும் இல்லை!

எல்லாம் நண்பர்கள் தான் ஓடியாடிச் செய்தார்கள்!
அன்றிரவு hospital வாசம் எனக்கு compulsory.

சின்னவன்
ப்ரியா வீட்டில் தங்கி விட்டான்.
என்னுடம் ப்ரியாவின் பாட்டி தங்கியிருந்தார்!

இரவு முழுவதும் உறங்கவே இல்லை அவர்!
எனக்கு விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார்!

தமிழில் பேசி, வெற்றிலை மென்று கொண்டு!
தெலுங்கோ, ஆங்கிலமோ சுத்தமாகத் தெரியாது.

வயதானவர்! என்னுடன் வந்து தங்க வேண்டிய
அவசியம் எதுவும் இல்லை என்றாலும் கூட,

அன்று தாயினும் சாலப் பரிந்து அவர் செய்ததை
என்றுமே மறவேன் நான் என் உயிர் உள்ளவரை!

நான் கண்ட தெய்வ மனிதர்களில் இவரும் முக்கியமானவர்!
 
Vegans...the purest Vegetarians!

இரண்டு மகன்களும் மாறிவிட்டனர்
vegetarian களிலிருந்து vegan களாக!

இவர் சஷ்டியப்த பூர்த்தியை 1999 இல்,
இவர்கள் செய்தார்கள் விமரிசையாக!

திரும்பிச் செல்லும் போது படித்துள்ளான்,
மிருகங்கள் நம்மிடம் படுகின்ற பாட்டை!

பசுக்கள் எல்லாம் வெறும் பால் தரும்
மிஷீன்களாக மாறியது எப்படி என்று!

ஒரு புறம் உணவு உள்ளே செல்லும்.
மறு புறம் பாலும், கழிவும் வரும்!

பிறந்ததிலிருந்து நின்று கொண்டே தன்
ஜீவனைக் கழிக்குமாம் அந்தப் பசுக்கள்!

கால்களால் உடலின் எடையைக் கூட
தாங்க முடியாததால், தாங்க ஒரு தூளி!

அன்றிலிருந்து சின்னவன் Vegan ஆனான்!
அடுத்தது பெரியவனும் Vegan ஆகி விட்டான்.

அவர்கள் மணந்த பெண்களும் vegans ஆனார்கள் .
அவர்கள் குழந்தைகளும் Vegans ஆகிவிட்டார்கள் !

I, Iyer, I......r.என்று வரிசைப் படுத்துவார்கள் முன்பு!
Non vegetarian, Vegetarian, Vegan இது இன்றைய ஆர்டர் !

முதலில் நிறையக் கஷ்டப் பட்டார்கள்!
இப்போது உள்ளன நிறைய சாய்ஸ்
கள்!

Sour கிரீம் வைத்து செய்கின்றார்கள்
தயிர்ப் பச்சடி, அவியல், மோர்க்குழம்பு!

Soy ஐஸ் கிரீம் சாப்பிட்டால் பின்னர்
தொடவே மாட்டோம் பால் ஐஸ் கிரீம்!

சுவையோ சுவை! நிறமோ நிறம்!
உலகம் மாறி வருகின்றது உண்மை!
 
Dear Sis,

When we visited your sons in the US, they were kind enough to buy real milk and curd, though

they are vegans! Somehow, we are not able to relish the taste of soy- the great!!

Chennai being a hot and humid city throughout the year, it is difficult to store vegan food.

Soy milk is available only in some special stores and they will be fresh only for a day!

R R
 
Last edited:
Dear Raji,

We don't have to FEEL GUILTY for using dairy products since in India we

have not converted cows into milk producing machines. We still treat them

with kindness and consider them holy animals

Soy milk and yogurt taste a little odd but nothing can beat Soy ice creams.

They are DELICIOUS! Try the chacobar type with nuts strewn on the top!

Yummy (to say the least)!.

V.R akka.

 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lord Byron.

(Of Wordsworth)
Who, both by precept and example shows
That prose is verse, and verse is merely prose. :confused:

Be warm but pure; be amorous but chaste.:hug:

Her faults were mine- her virtues her own.:thumb:
[/FONT]
 
Same ! Same !

Alumni Meet இல் எல்லோரையும்
Asin மிரண்டாவைக் குடித்துவிட்டு

கலாய்ப்பது போலவே நானும்
கலாய்ப்பேன் என் நண்பர்களையும்!

கோவையில் நடக்கும் போது hostess ,
சென்னையில் நடக்கும் போது guest!

இந்தமுறை மேடையில் நின்றுகொண்டு
கீழே பார்த்தால் கண்கள் கூசுகின்றன!

எல்லோரும் gold framed specs!
எல்லோருக்கும் பளபளக்கும் domes !!

பேசும் போது சொன்னேன், "தேவை
மேடை மீது கூலிங் கிளாஸ்!" என்று.

Lunchtime ! பார்த்தால் எல்லோரும்
ஒரு போலவே இருக்கின்றார்கள்!

பின்புறம் 'same! same!' முன்பே தெரியும்!
முன்புறமும் 'same! same!' தான் ஆச்சர்யம்!

சின்ன prosperous செல்லத் தொப்பை.
இழுத்துக் கட்டிய leather இடுப்பு பெல்ட்.

பின் புறமும் மட்டுமல்ல same same
முன்புறமும் கூட same same என்றால்

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
என்னிடம் தான் இறுதியில் opinion கேட்பர்.

எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல்
மனதில் பட்டதைச் சொல்லுவேன் என!

ஒவ்வொரு வயோதிகனுக்குளும் உள்ளே
ஒவ்வொரு பால
ன் ஒளிந்து இருக்கின்றான்!

ஒவ்வொரு பாட்டிக்குள்ளேயும் உள்ளே
ஒரு குட்டிப்பெண் ஒளிந்து இருக்கின்றாள்!
 
உலகம் சுற்றும் வாலிபன்!

உலகம் சுற்றும் வாலிபன் யார் தெரியுமா?
உண்மையிலேயே என் கணவர் தான் அது!

வீட்டில் இருப்புக் கொள்ளது இவருக்கு!
வீட்டை விட்டு எங்காவது போக வேண்டும்!

வேலை இருக்கின்றதோ இல்லையோ இவர்
வேலை உண்டு பண்ணிக் கொண்டு செல்வார்!

இவர் தான் அதிகம் சாலையில் செல்பவர் என்று
சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணம் ஆயிற்று!

சாலையில் இருக்கும் குழியை படம் பிடிக்கும் போது
சாலையில் சென்றது இவர் ஸ்கூட்டர் மட்டுமே!

'ஹிந்து'வில் கலர் போட்டோவைப் பார்த்ததும்,
சந்தோஷம் பிடிபடவில்லை அவருக்கு அன்று!

தெரிந்தவர்கள் எல்லோருமே விசாரிக்கவும்,
ஹீரோ போல சில நாட்கள் உணர்ந்தார்!

Law of Randomization நிரூபித்து விட்டது
அதிகம் அந்த சாலையில் செல்வது இவரே!

உத்தியோகம் மட்டும் புருஷ லக்ஷணம் அல்ல!
ஊர் சுற்றுவதும்
இவருக்குப் புருஷ லக்ஷணம் !
 
Now we know why Confucius was known as a sage!

世上有两件事很难:

一是把自己的思想装进别人的脑袋。
二是把别人的钱装进自己的口袋。
前者成功的叫老师。
后者成功的叫老板。
两者都成功了的叫老婆。
两者都做反的是老公。



A brief translation for those interested:

Two things in life that are difficult to achieve:-

1. to plant your idea in someone's head

2. to plant someone's money in your own pocket.


He who succeeds in the former - we call teacher; ... Lao Shi
He who succeeds with the latter - we call boss:..... Lao Ban
The one who succeeds in both - we call wife; .... Lao Por
The one who fails in both - we call husband...... Lao Gong
 
Same ! Same !
..............
பின் புறமும் மட்டுமல்ல same same
முன்புறமும் கூட same same .............

எங்கள் வீட்டில் ஓடும் பல்லிகளைக்கூட நான் அடையாளம் காணுவேன்!

மகன் கேலி செய்வான், 'இதோ பாரும்மா, உன் friend முனுசாமி!'

நெட்டை, குட்டை, கருப்பு, சிவப்பு, மொட்டை, சொட்டை, தாடி, 'மழுங் மழுங்',
சின்னத் தொப்பை, பெரிய தொப்பை என்றும் பெரிசுகளில் வித்தியாசம் இருக்குமே! :decision:
 
இருவரைத் தவிர எல்லோரும் ~ ஒரே உயரம்

மீடியம் பில்ட், செல்லத் தொப்பை, லெதர் பெல்ட்.

Striped Shirts , Dark Pants, பட்டை
வாட்ச்சு

ஒற்றுமையே அதிகம், வேற்றுமை குறைவு.

மேலும் தொப்பை கண்டார்... தொப்பையே கண்டார்!
:becky:
 
dont miss this...real funny got this by email


Mozzarellasura Linguini Stotram



Words entirely from the menu of the excellent Tuscana restaurant
Lyrics

Ai Funghi Linguini Foccacia Capellini Pizza Fettucine Lasagna Penne
Spinaci Bolognese Pesto Minestrone Cannelloni Porfirio Asparagi

Ravioli Spaghetti Alfredo Pescatore Fresco Pomodoro Tagliatelle
Tiramisu Arabiatta Farfalle Stagioni Calzone Gamberi Pepperoncini

Ai Frutti di Mare Quattro Formaggio Risotto con Pollo Paesana Roma
Napolitana Fagioli alla Checca Gorgonzola Gnocchi Carbonara

"Mozzarellasura Linguini Stotram" by krishashok is licensed under a Creative Commons License

Mozzarellasura Linguini.mp3 - File Shared from Box.net - Free Online File Storage
 
Last edited:
Vegans...the purest Vegetarians!

Sour கிரீம் வைத்து செய்கின்றார்கள்
தயிர்ப் பச்சடி, அவியல், மோர்க்குழம்பு!

!

visa,

sour cream is a milk product. maybe it was some other stuff?

Sour cream - Wikipedia, the free encyclopedia

we use sourcream for avial and more koottan but it is too fattening for thayir pachchadi. sour cream has a lot of fat content.
 
dear Mr. kunjuppu,

I had a feeling that I had written something that does not fit in the article.

I found out from my D.I.L. today.

She used Tofu for getting the consistency and lime/lemon juice for getting the

taste.

Thanks for reminding me to register the correction.


with warm regards,
V.R
 
..sour cream is a milk product. maybe it was some other stuff?
K, you are talking about the U.S. of A, there is nothing like "not there". This is the land of deep-fried beer, meat-on-meat sandwich - no room for bun. Look here for Vegan Sour Cream, we have used it it during my stint being a Vegan -- drove my wife nuts and had to give in to the authority of she who must be obeyed.

Cheers!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top