• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
எல்லாத் திரை இசைப் பாடல்களுமே, எளிது அல்ல;

எல்லா திரை இசைப் பாடல்களும் எளிதானவை அல்ல!
பல திரை இசைப் பாடல்கள் எளிதானவை! ஆனால்

எல்லா சாஸ்தி
ரீய சங்கீதமுமே கடினமானவையே,
அதை முறைப்படிக் கற்றுக்கொள்ளதவர்களுக்கு!

இன்று திரை இசை பாடுவதில் வல்லவர் எல்லோரும்
முறையாக
சாஸ்திரீய சங்கீதம் பயின்றவர்கள் தானே!
 
Last edited:
இளைஞர்களே உஷார்! உஷார்!

விக்கிரமாதித்தன் காலம் தொட்டு
விடாமல் தொடர்வது இப்பிரச்சனை!

காலடிகளைப் பார்த்து விட்டு இருவர்
கல்யாணப் பெண்ணை முடிவு செய்ய,

தந்தை ஒரு பெண்ணின் மகளையும் ,
அந்தப் பெண்ணை
மகனும் மணப்பர்.

இருவருக்கும் குழந்தை பிறந்தால்
இரு குழந்தைகளுக்கும் என்ன உறவு?

சிக்கலான பிரச்னை தான் இது
விக்கிரமாதித்தனுக்கே கூட!!!

ரேடியோவில் குரலைக் கேட்டு
காதலில் விழுந்தவர்களின் கதை

அற்புதமான திரைப்படம் ஆகி
வெற்றிகள் பல அடைந்தது!

இன்றும் தொடர்கிறது இது
எழுத்து உலகத்திலும்
கூட ! :typing:

முகம் தெரியாத நபர்களிடம்
மனதைப் பறி கொடுத்துவிட்டு, :love:

இலவு காத்த கிளியாக ஆகாதீர்! :nono:
இளைஞர்களே உஷார்! உஷார்! :moony:
 
இன்று திரை இசை பாடுவதில் வல்லவர் எல்லோரும்
முறையாக சாஸ்திரீய சங்கீதம் பயின்றவர்கள் தானே!

Dear Sis!
There is always an exception!! I mean the great S P B! :lalala: . . . :thumb:
 

முகம் தெரியாத நபர்களிடம்
மனதைப் பறி கொடுத்துவிட்டு,

இலவு காத்த கிளியாக ஆகாதீர்!
இளைஞர்களே உஷார்! உஷார்!

இதை இளைஞிகளுக்கும் சொல்ல வேண்டும்!

Face book - இல் பார்த்த விவரங்களால் ஏமாந்த பெண்கள் எத்தனை பேர்!

டஜன் கணக்கில் பெண்களை ஏமாற்றி, ஒருவனே மணப்பது, புது வித Cyber crime!!

:evil: . . . :croc:
 
[FONT=comic sans ms,sans-serif]Quote by Samuel Butler 19th century.

'Tis better to have loved and lost :love:

than never to have lost at all. :mmph:

An honest God's the noblest work of man.:hail:

[/FONT]
 
காந்திஜியைப் போலவே!

வாரம் ஒருமுறை திரைப்படம்
வெட்டவெளி gallery இல் இடுவர்,

நல்ல நல்ல தெலுங்குப் படங்களை!
எல்லோருக்கும் அங்கே நல்வரவு!

கடவுளர் கதைகள் பிரசித்தம்.
ராஜா, ராணி கதைகளும் தான்!

Trick shots நிறைய இருக்கும்,
Thrilling ஆகவும் இருக்கும்!

மொழியைப் பயில சுலபமான
வழி, திரைப்படங்கள் பார்ப்பது!

வேறு கேளிக்கைகள் இல்லாததால்,
திரைப்படங்களைப் விரும்புவேன்!

மகன்களுக்கு பார்க்க வேண்டாம்!
தந்தைக்கும் பார்க்க வேண்டாம்!

தந்தை மகன்களை அனுப்புவார்
வலுக்கட்டாயமாக gallery க்கு!

அமர்ந்துடனேயே உறங்கிவிடுவார்கள்,
ஆளுக்கு ஒரு மடியில் தலை வைத்து!

படம் முழுவதும் நல்ல உறக்கமே!
முடிந்த பின் வீட்டுக்குச் செல்லுவோம்.

பாதி உறக்கத்தில் எழுந்தவர்களைப்
பத்திரமாக அழைத்துச் செல்லுவேன்!

ஆளுக்கு ஒருபக்கம் கைலாகு கொடுத்து,
ஆடி ஆடி வீடு வரையிலும் மூவருமாக!

காந்திஜி இரண்டு சிறுமிகளுடன்
நடந்து செல்வது போலவே தான்!

சிறுமிகள் அவருக்குக் கைலாகு கொடுத்தனர்.
சிறுவர்களுக்குக் கைலாகு நான் கொடுத்தேன்!
 
பொறி தெறித்த அறை.

விசாகா சென்ற புதிது.
தெலுகு பேச வராது!

சிம்மாசலம் பார்க்கப்
போனோம் பஸ் பயணம்.

அம்மாவிடம் சின்னவன்,
ஆறு மாதக் குழந்தையாக!

என்னிடம் என் பெரியவன்,
மூன்றரை வயதுப் பையன்.

தரிசனம் முடிந்து பஸ்ஸில்
ஏறினால் சரியான கூட்டம்!

காய்கறிக்காரர்கள் அட்டஹாசம்
சொல்லாமலேயே தெரிந்துவிடும்.

தூங்கும் குழந்தை தோளில்,
ஒரு கையில் கம்பியைப் பற்றி,

காலை ஊன்றிச் செய்த பயணம்
'தொங்கும் ஊர்தி'யில் போலவே .

அம்மா கதவுக்கு நேரே circus !
அம்மாவுக்கு பின்புறம் நான்.

காய்கறிக் கூடைகள் வழி நெடுக!
காலை வைக்கவும் இடமில்லை!

கூடைகள் வித்தியாசமானவை;
வட்டம் அதிகம், உயரம் குறைவு!

ஒருத்தி அம்மாவைத் தொடர்ந்து
பிடித்துத் தள்ளிக் கொண்டே இருக்க,

வில் போல உடலை வளைத்து,
அம்மாவும் குழந்தையுடன் சமாளிக்க;

தெலுங்கில் திட்டிக்கொண்டே அவள்
தொடர்ந்து பிடித்துத் தள்ளவே எனக்குள்

நிகழ்ந்தது நரசிம்ஹ அவதாரம்!
கம்பியை விட்டு விட்டு நின்று,

கொடுத்தேன் அவளுக்கு ஒரு அறை!
செவிட்டில் பொறி பறக்கும் அறை!

எனக்குத் தெரிந்த 'மொழி'யில் பேசினேன்!
எனக்கு வேறு வழி தெரியவில்லை!

விழுந்தால் அம்மாவும் குழந்யையும்,
விழுவது எங்கே எனக் குலை நடுங்கியதால்!

இப்போதோ அவளுக்கு ஆவேசம் வந்தது!
பத்திரகாளி போலத் திரும்பினாள்.

ஓங்கிய அவள் கையைத் தடுத்தேன்!
உடைந்த கண்ணாடி வளையல் பட்டு,

ஒரு துளி ரத்தம் வந்ததும், ஆவேசம்
எல்லை மீறிவிட்டது எல்லோருக்கும்!

சம்பேஸ்தானு (கொன்று விடுகிறேன்)
என்று மொத்தக் கூட்டமும் நெருங்க;

ஆஞ்சநேயரே என் உதவிக்கு வந்தார்;
ஆஞ்சநேயலு என்னும் மனிதர் வடிவில்!

அவருக்குத் தெரிந்து விட்டது உடனேயே
எங்கள் நிலைமை என்னவென்று!

எங்கள் கம்பெனி security officer அவர்
என்று அப்போது எனக்குத் தெரியாது.

அவரும், அவருடைய நண்பர்களும்,
அமைத்தனர் வியூகம் எங்களைச் சுற்றி!

அத்தனை பேரையும் தடுத்தும், விரட்டியும்,
அண்ணன் போலக் காப்பாற்றினார் அவர்.

வீடு வரையிலும் துணைக்கு வந்து
மாடியேறிச் செல்லும் வரை நின்றார்.

உடன் வந்த இவர்
என்ன செய்தார்?
"கதை கதையாம்" என்று பலநாட்கள்

கதை போலச் சொல்லிச் சொல்லி
அதைக் கேட்பவர்களுடன் சிரித்தார்!

அன்று மட்டும் அந்த ஆஞ்சநேயலுகாரு,
அந்த பஸ்ஸில் வராமல் இருந்திருந்தால் ...!

அன்றிலிருந்து தெரிந்து கொண்டேன்
அழைக்காமலே உதவுது யார் என்று!

வாய் விட்டுச் சொன்னாலும் கூட,
வந்து செய்யாதவர்கள் மனிதர்கள்.

மனத்தால் "நீயே கதி!" என்று உறுதியாக
நினைத்தவுடன் வந்து உதவுபவன் அவன்!

தெய்வம் மனித வடிவில் வரும்!
தெய்வ மனிதர்கள் பலரைக் கண்ட

பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.
நம்பினார் கெடுவதில்லை உண்மை!

 
பின்குறிப்பு.

எங்கள் பஸ் ஸ்டாப்புக்கு
முந்தியது அந்த ஸ்டாப்.

மொத்தகூ
ட்டமும் அங்கே
இறங்கிவிட்டது அப்பாடா!

வாரந்திரச் சந்தையில், அறை
வாங்கியவளைக் கண்டேன்!

அதன் பிறகு பலமுறைகள்!
அவளுக்கு நினைவில்லை

ஒரு முறை நிகழ்ந்தது
நினைவிருக்கும் நன்கு!

தினமும் நூறு முறை
குஸ்தி போடுபவளுக்கு

என் நினைவு இருக்குமா?
நன்றே அதுவும் என்பேன்!

அந்த பஸ் ஸ்டாப் பெயர்
நாத்தைய பாலம் ஆகும்!

இதைவிட பொருத்தமான
பெயர் இருக்க முடியுமா?
 
Whenever I log in Tambram.com, my eyes automatically go up to the Notification!

Thanks to Mr. Gopaindu alias raja48 for inculcating the good habit in me and

also for showering cascades of 'likes' and raising my score sky high! :pray2:

 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lord Byron.

"Here all were noble, save Nobility,
None hugged a Conqueror's chain, save fallen Chivalry!"

A school boy's tale, the wonder of an hour.:rolleyes:

"Year steal
Fire from the mind as vigor from the limb;
And Life's enchanted cup but sparkles near the brim."
[/FONT]
 
க்ருஹ ப்ரவேசம்.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு,
அப்போது தான் திரும்பி வந்திருந்தார்,

இவர் பெயரை உடைய இவர் நண்பர்;
ஒரே தடபுடல் தான் எப்போதும், எதிலும்!

அமெரிக்கா returned ஆயிற்றே!
ஆரவாரம் அதிகமாகவே இருந்தது!

"Photographer ஒன்றும் வேண்டாம்
Photos நானே எடுக்கின்றேன்!" என

எடுத்துத் தள்ளினார் போட்டோக்கள்,
எல்லோருக்கும் ஏகப்பட்ட அதிசயம்!

சின்ன தங்கை கேலி செய்தாள்,
'ரீல்' போடாமல் 'ரீல்' விடுவதாக!

ஆவலுடன் அந்த போட்டோக்களை
எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்தது?

பசு மாடு வீட்டுக்குள் நுழையும் போது
பின்புறம் இருந்து எடுத்த போட்டோ!

ஒன்றே ஒன்று தான் கிடைத்தது!
பின்புறம் ஒரு பசுவினுடையது!

'ரீல்' போடாமல் 'ரீல்' விட்டதற்கு
ஃபீல் பண்ணவில்லை இதுவரை!
 
நெற்றிக் கண்.

இடது புறம் ஓரமாகச் செல்வேன்;
நடைபாதையில் நடப்பது போலவே.

பட்டம் பூச்சி வடிவ டாலர் செயின்
எப்போதும் அணிந்திருப்பேன் நான்;

பட்டைச் செயினில் மாட்டிய பிறகு
பட்டாம் பூச்சி மேலும் அழகானது.

தினமும் கோவிலுக்குச் செல்லும்
நல்ல பழக்கம் உண்டு அப்போது!

ஓரமாகச் செல்லும் என்னை
நேராக மோதி விடுவது போல

ஒருவன் சைக்கிளில் வந்தான்;
அத்தனை பெரிய சாலை காலி!

இருந்த போதும் wrong side இலும்
நேர் எதிரிலும் அவன் வந்ததால்

கோபம் தலைக்கேறிவிட்டது!
தெலுங்கில் திட்டி விட்டேன்,

"உனக்கு டிராபிக் ரூல் தெரியாதா?
உனக்குக் கண்ணும் தெரியாதா?"

நான் முறைத்ததைக் கண்டவுடன்,
நீங்கிச் சென்றுவிட்டான் அவன்.

கோபத்துடனேயே செல்பவளிடம்,
கேட்கின்றான் செக்யூரிட்டி கூலாக!

"எப்படி உங்கள் செயினைப் பறிக்காமல்
போய்விட்டான் அந்த கஜ தொங்கன்?"

தொங்கன் என்றாலேயே திருடன்!
'கஜ தொங்கன்' மஹா திருடன்!

"அவனை ஏன் colony க்குள் விட்டாய்?"
அதற்கு பதில் ஒரு அசட்டுப் சிரிப்பு!

கூட்டுக் களவாணிகளோ என்னவோ?
திட்டி விட்டுப் போனேன் அவனையும்.

தொடுவது போல் அருகில் வந்தவன்,
தொங்கும் செயினைப் பறிக்கவில்லை!

காரணம் புரிந்தது, அதே கோபத்துடன்
கண்ணாடி முன் நின்று திட்டினபோது!

என்னை பார்த்தால் அச்ச உணர்வு
எனக்கே வந்து விட்டது அப்போது!

நவரசப் பயிற்சி நன்மை செய்தது!
நெற்றிக்கண் நன்கு பணி செய்தது!

பட்டைச் செயினும் தப்பியது!
பட்டாம் பூச்சி டாலரும் தான்!


 
Of late the power cut has become unpredictable! :crazy:

I am at the mercy of more than one unpredictable element! :smash:

Kindly bear with me if my posts get delayed :pray2:
 
Of late the power cut has become unpredictable! :crazy:

I am at the mercy of more than one unpredictable element! :smash:

Kindly bear with me if my posts get delayed :pray2:

Dear VR,

We can understand and bear with your delay but I dont think someone can!!!!
 
[FONT=comic sans ms,sans-serif]Quotes by Lord Byron.

That untaught innate philosophy,
Which, be it Wisdom, Coldness, or deep Pride,
Is gall and wormwood to an enemy.

...the madmen who have made men mad
By their contagion. Conquerors and Kings,
Founders of sects and systems.

To fly from, need not be to hate, mankind.
[/FONT]
 
17 நிமிடங்கள், 9 சுற்றுக்கள்.

கோவிலுக்குப் போகும் போது
இருக்கும் சரியாக 17 நிமிடங்கள்!

செய்ய வேண்டும் 9 சுற்றுக்கள்;
மலை மீது உள்ள 3 கோவில்களில்!

அடிவாரத்தில் ஆனைமுகன்,
நடு மலையின்மேல் அனுமன்,

உச்சியில் இருப்பார் பெருமாளும்,
பத்மாவதித் தாயும், ஆண்டாளும்.

கீழே கோவிலில் மூன்று சுற்றுக்கள்,
கிடு கிடு என்றோடி நடுவில் அனுமனுக்கு!

மேலே மூன்று சுற்றுக்கள் செய்துவிட்டு
கால் பதியாமல் ஓட்டம் என் வீட்டுக்கு !

அப்போதே சொன்னார் பூஜாரி மனைவி !
"இப்படி ஓடாதே அம்மா திருஷ்டி படும்!

எல்லார் கண்ணும் நல்ல கண்ணல்ல!
பொல்லாதவை தான் அதிகம்!" என்று.

அனுபவசாலி! அறிவுரை சொன்னார்!
அனுபவம் வந்தபின் அறிவுரை புரிந்தது!

வழுக்கை விழுந்த பின் சீப்பு எதற்கு?
முட்டி தேய்த்தபின் வருத்தம் எதற்கு?

 
ஹனுமான் மஹிமை.

அண்ணன் மிக நன்கு படித்தால்
அவனால் தம்பிக்கு டென்ஷன்!

எப்போதும், எல்லோரும், அவர்களை
ஒப்பிட்டுப் பார்த்தபடியே இருப்பார்கள்!

தனித் திறமைகள் வேறுபடும் ஆனால்
நினைத்துப் பார்ப்பதில்லை எவருமே!

சின்னவன் பாடு திண்டாட்டமாயிற்று!
அண்ணன் எப்போதும் முதல் மார்க்கு!

"விளையாட்டுப் பிள்ளையாக உள்ளான்!"
"வகுப்பில் distract ஆகி விடுகின்றான்!"

"Lazy with a capital L!" என்றெல்லாம்
என்னிடம் கூறுவார்கள் அவன் டீச்சர்கள்!

"இவன் அவனைவிட அதிகம் துறு துறு .
இவன் அவனுக்குச் சளைத்தவன் அல்ல!

எனக்கு மட்டும் தெரிந்தால் போதாதே!
என்ன செய்யலாம்?" என சிந்தித்தேன்!

ஹனுமான் மகிமையில் மிகுந்த நம்பிக்கை!
ஹனுமான் சாலீஸ் படிக்கத் தொடங்கினேன்!

ராமனுக்காக அற்புதங்கள் செய்தவர் என்
ராமனுக்காகவும் அற்புதங்கள் செய்வார்!

செய்வார் அல்ல, செய்தார் மெய்யாகவே!
பொய்த்துப் போகவில்லை என் நம்பிக்கை!

அதன் பின் விளையாட்டெல்லாம் குறைந்தது,
விழுந்து விழுந்து படிக்கத் தொடங்கினான்!

பத்தாம் வகுப்பில் மிகவும் நல்ல மதிப்பெண்கள்.
பத்மா சேஷாத்ரி Entrance Exam இல் முதல் ரேங்க்!

I. I. T. Entrance exam இல் நல்ல ரேங்க் கிடைத்து
E. E. E .இல் இடம் கிடைத்தது சென்னையிலேயே!

Passport, Visa, Scholarship, University Admission
எல்லாம் அனுமன் அருளால் தடையின்றி நடந்தன.

Doctorate இலும் Robert. T . Chien Memorial Award in
Electrical and Computer Engineering இல் கிடைத்தது.

University Notice Board இல் என் அப்பா பெயரும்,
இவன் அப்பா பெயரும், இணைந்த இவன் பெயரை

இன்றும் நீங்கள் காணலாம் U of I சென்றால்!
என்றுமே மறவாதீர்கள் இந்த உண்மையினை!

More things are wrought by prayer

than the world dreams of! :pray: :hail:
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top