• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 7. Nine days week?

"Holidays must be longer!"
வழக்கத்துக்கு வந்தது,

முதல் முறை அமெரிக்கா
முயன்று சென்ற போது.

இருவரும் students தான்
இரு வேறு நகரங்களில்!

இரு மணி நேரப் பிரயாணம்.
இரு நகரங்களின் இடையே!

Weekends தான் ஒன்று சேரும்
Wonderful ஆன நாட்கள் ஆம்!

பெரிவனிடம் நாம் இருந்தால்
வருவான் சின்னவன் அங்கு!

திரும்பிச் செல்லும்போது எங்களை
விரும்பி அழைத்துச் செல்வான்.

அடுத்த weekend வந்துவிடுவான்
கொடுத்த வாக்கின்படிப் பெரியவன்!

இப்படி மாறி மாறி இருந்ததால்
இப்படி மனதில்தோன்றலானது.

ஐந்து நாட்கள் ஒருவனுடனும்
நான்கு நாட்கள் அனைவருமாக!

ஏழு நாட்கள் வாரம் மாறிப்போய்
ஒன்பது நாட்கள் வாரம் ஆனது.

"Holidays must be jolly days!
Jolly days must be longer"!!!
 
Last edited:
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்!

# 8. Visit to a Planetarium.

சின்னவனுடன் அந்தப் Planetarium!
மிகவும் பெரியது I max வசதியுடன்.

காத்திருக்கும் போது பார்த்தேன்,
அத்தனை கண்களும் எங்கள் மீதே!

ஆணி அடித்தது போல பதிந்திருந்தது
ஏனென்று விளங்கவில்லை எனக்கு!

புடவை அணிந்திருந்ததாலா அல்லது
நம் நிறம் மாறுபட்டு இருந்ததாலா?

பிறகு அங்கே இருந்தவர்களைப்
பார்த்தவுடன் தெரிந்தது தெளிவாக,

எதில் நாங்கள் மாறுபட்டிருந்தோம்
எதனால் அந்தப் பார்வைகள் என்று!

வந்திருந்த அனைவரும் ஜோடிகள்
காதலர், தம்பதி
கள், கிழ ஜோடிகள்!

இரண்டு ஆண்
நண்பர்கள்!
இரண்டு
பெண் நண்பர்கள்!

மருந்துக்குக் கூட காணவில்லை
இரண்டு வேறு தலைமுறையினர்!

பார்வையில் அசூயை இல்லை!
Admiration, ஆதங்கம் இருந்தது!

Family values தப்பிப் பிழைத்து
Feeble ஆகவேனும் இருப்பது

இன்னமும் உலகம் முழுவதிலும்
அன்னை பாரதத்தில் மட்டும் தானே!
:thumb:
 
Hai

Everyone has his own specific vocation or mission in life…….Therein he cannot be replaced, nor can his life be repeated. Thus, everyone’s task is as unique as his specific opportunity to implement it.



Quotes by Henry Fielding

To whom nothing is given of him can nothing be required. :dance:

What a silly fellow must he be who would do the devil's work for nothing. :loco:

Public schools are the nurseries of all vice :doh:
and immorality.
:faint:
 
In case you are referring to the second quote,
we see people serving devil for free all the time!
may be it is their mission in life! eh?

Everyone has his own specific vocation or mission in life…….Therein he cannot be replaced, nor can his life be repeated. Thus, everyone’s task is as unique as his specific opportunity to implement it.
 
hai,

I was saying this in general may I have replied to wrong message secondly I was reading all your posts and the next page had some post which were written in Tamil , unfortunately I cannot read Tamil that is the reason I choose this post to reply.

In morning when I was reading the post I wonder how much time you would have spent in writing these post every day I really appreciate you interest

bye

Sreenivasa Chary.M
9848993644
 
I am sorry you are missing so much of fun and pun because you can't read Tamil. Somethings are best expressed in Tamil!

hai,

I was saying this in general may I have replied to wrong message secondly I was reading all your posts and the next page had some post which were written in Tamil , unfortunately I cannot read Tamil that is the reason I choose this post to reply.

In morning when I was reading the post I wonder how much time you would have spent in writing these post every day I really appreciate you interest

bye

Sreenivasa Chary.M
9848993644
 
Half to forget the wandering and the pain,
half to remember days that have gone by,
And dream and dream :sleep:
that I am home again!:couch2:

And with great lies about his wooden horse:lie:
Set the crew laughing and forgot his course.:help:

James Elroy Flecker.
 
Care of the Crossroads?

San Fransisco நகரத்தின் பிசியான
சௌராஸ்தா அல்லது நாற்சந்தி!

உலகிலேயே உள்ள மிகவும்
வளைந்தசாலை LOMBARD வீதி!

போட்டோ பைத்தியம்இவருக்கு!
செடி, கொடி, மரம், மட்டை என

மடிக்காமல் நின்று புகைப்படம்
எடுத்துக் கொள்வதில் சூரப் புலி ! :photo:

சாலையைப் பார்த்த உடனேயே
சப்தநாடியும் ஒடுங்கியது எனக்கு!

நானாவது இந்தச் சாலையில்
நடந்து செல்வதாவது? ஊஹூம்! :scared:

"இங்கேயே அமர்ந்திருங்கள் மம்மி!
இப்போதே வந்து விடுவோம்!"

"அரை மணியில் வருவீர்களா?"
"ஐந்து நிமிடங்களில் வருவோம்!"

சுத்தமாக இருந்த குட்டிச் சுவரில்(?)
சத்தம் இல்லாமல் அமர்ந்தேன்!

செமை டிராபிக் உள்ள இடம் / நாள்!
சென்றவர்கள் கண்களில் கேள்விக்குறி?

யார் இவள்....? யார் இந்தப் பெண்? :suspicious:
எதற்கு இங்கு அமர்ந்து உள்ளாள்?

யாருக்காக காத்திருக்கின்றாள்?
பார்த்தால் 'அந்தப்பெண்' போல இல்லை!

தொலைந்து போனவளுமில்லை!
அமைதியாக அமர்ந்துள்ளாளே!

கைவிடப்பட்ட கேசும் இல்லை!
கண்ணீர் மழை சொரியவில்லையே!

ஒரு யோகி போல, ஒரு துறவி போல,
இந்தச் சந்தியில், இந்தச் சந்தடியில்,

இருந்தும் இல்லாதவள் போல,
தனித்து இருக்கும் இவள் யார்?

கடப்பவர்களின் நினைப்புகளைச்
சொற்கள் போலவே உணர்ந்தேன்!

கண்களைத் திறந்தபடியே தியானம்!
சுற்றுப்புறத்திலிருந்து முழுத் தனிமை!

இவர்கள் கதையோ வேறு ஒரு வகை!
இராமாயணக் காட்சியைப் போன்றது!

ராமனை ஏய்த்து அழைத்துச் சென்ற
மாயாவி மான் ஆகி விட்டார் இவர்.

"இங்கே ஒன்று! அங்கே ஒன்று!"
இவர்கள் புகைப் படங்கள் எடுத்துத்

திரும்பி வருவதற்கு ஆகிவிட்டது
இரண்டு மணி நேரத்துக்கும் அதிகம்!

"சாரி! சாரி!" என்றவாறு வந்தார்கள்!
" சரி! சரி!" என்றேன் என்றாலும்,

என் மனதில் ஒரு வினோத எண்ணம்
எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

"I am homeless!" எனஅமர்ந்திருந்தால்
Return fare சம்பாதித்து இருப்பேனா ?

அல்லது காவல்துறையின் சிறப்பு
உபசரிப்பில் இருந்திருப்பேனா ? :noidea:
 
"Are you a Princess?"

கோவிலுக்குச் செல்லுவதற்காக
காஞ்சிபுரம் பட்டுப்புடவை கட்டி,

வெளியில் வந்தால் நம்மிடம்
வெளிப்படுவது இந்தக் கேள்வி!

"Are you a Princess?" :faint:

சாதாப் புடவை அணிந்த
சோதாவிடமே இப்படியா?

'சசிகலா சாரி' கட்டிக் கொண்டு
நகை ஸ்டாண்டாக இருந்தால்???:drama:

Indiana Sand Dunes சென்றபோது
இனிமையான குரல் ஒன்று கேட்டது!

"Don't go too close dear!
You are too sweet to get wet!":love:

நம்மை ஒரு சக்கரையால் ஆன
பொம்மை போல பேசுவார்!

நம்மை அறியாதவர் கூறுவதை,
நம்மை அறிந்தவர்கள் மட்டும்

என்றுமே ஏன் கூறுவதில்லை?
என்றுமே விளங்காத புதிர் தான்! :noidea:

 
Hai,

you need not me soory for writting in tamil secondly it's my problem not learning tamil. as you rightly said many of our fellings are better expressed in our mother tounge.

bye
Chary
 
# 11. THE ROADSIDE SHOW AT BOSTON.

கண்கட்டு வித்தைகள் காண்போம்
கண்கவர் மேடைகளில் அரங்குகளில்!

கண்ணாடி போன்றவற்றால் நம்மை
நன்றாக எய்த்துவிடுவார்கள் ஷோவில்!

நட்ட நடு ரோட்டிலும் செய்கின்றார்கள்
நடுங்க வைக்கும் பல சாதனைகள்! :fear:

கில்லடின் ஒன்றில் தலையை வைக்க
பல்வேறு விதமாக அழைத்தார் அவர்!

ஒரு பெண் முன் வந்தாள்! அவர் ஆளோ? :noidea:

கூடையை அவள் முன்னே வைத்தார்
'கட்'டான தலையைச் சேகரிப்பதற்கு!

எல்லோரு
க்கும் BYE BYE சொல்லச் சொன்னார்!
கத்தியும் இறங்கியது அவள் மேல்!:scared:

தலை தப்பிவிட்டது அதிசயம்தான்!
நல்ல வசூல் நடுங்க வைத்த ஷோவுக்கு!
:clap2:
 
Last edited:


# 12. Fantastic Juggler.


கில்லடின் பார்த்து விட்டு நகர்ந்தால்
அங்கே fantastic juggling performance!

பாட்டில்களின் மேலே ஒரு பலகை!
பலகையின் மேலே ஒரு மனிதன்!

ஸீ ஸா போன்று கால்களை அசைத்தபடி,
கைகளால் மூன்று பாட்டில் அம்மானை!

இத்துடன் பேச்சும் ஜோக்குகளும் வேறு!
ஷோ முடியும் போது human psychology !

கைகளால் ஐந்து ஐந்து என்று பிளாஷ் செய்தார்.
ஐந்து டாலர் நிச்சயமாகப் போட வேண்டுமாம்.

எங்களுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
அத்தனை பேரும் 5 டாலர் போட்டால்...! !

அப்போது மகன் கூறினான் அவருக்கு
அற்புதமான வெப்சைட் உள்ளதாம்!

"Roadside Juggler என்று எண்ணாதீர்கள்!
இவர் பெரிய ஆள் !"இது எப்படி இருக்கு???
 

Born in a cellar...and living in a garret. :doh:

He is not only dull himself, :loco:
but the cause of dullness in others.

For as the old saying is ,
When house, and land are gone and spent :bolt:
Then learning is most excellent.:typing:

Samuel Fotte
 
Quotes by Benjamin Franklin.

In this world nothing can be said to be certain
except death and taxes. :pout:

Be in general virtuous and you will be happy.:angel:

To lengthen thy life, lessen thy meals.
:hungry: :nono:
 
# 13. "Hey Dude!"

சாலையில் நடக்குபோது எப்போதும்
Eye Contact வைத்துக் கொள்ளுவேன்!

இவர் எவரையும் பார்க்க மாட்டார்!:bolt:
Machine Man போலவே நடப்பார்!

தினமும் ஒரு குறும்பு இளைஞனை :yo:
தெருவில் பார்ப்பேன்! கை ஆட்டுவான்.

சின்ன
ப் புன்னகையுடன் கடந்து செல்வேன்!
என்ன செய்தாலும் இவர் பார்ப்பதில்லை.:cool:

"Hey ! Dude !" என்று ஒரு நாள் கத்தினான்.
தூக்கிப் போட்டவருக்கு கை ஆட்டினான்!:wave:

வீட்டுக்குச் சென்றவுடன் முதல் கேள்வி
"DUDE !" என்றால் கெட்ட வார்த்தையா?
 
# 14. Soy Coffee Shop!

வெளியில் போனால் குடிப்போம்
பெரிய giant size soy coffee ஒன்று!

அரை லிட்டர் இருக்கும் அது!
ஒருவரால் குடிக்க முடியாது!:tea:

நான்கு சின்ன பேப்பர் கப்
புகளில்
நான்கு பேர் பகிர்ந்து கொள்வோம்!

சில நாட்களில் நண்பிகள் ஆனார்கள்
பல நாட்களாக அங்கு பணி செய்பவர்.

"Brown is beautiful! White skin is sickly!
Black skin is ugly! Brown is beautiful!"

ஒவ்வொரு முறையும் கூறுவார்கள்!
ஒவ்வொன்றாக
ப் பாராட்டுவார்கள்.

"Look at her eyes! Look at her ear rings!
Lovely straight hair! We love straight hair!"

எனக்குச் ரொம்பச் சிரிப்பு வந்துவிடும்!
"எங்கள் ஊரில் சுருட்டை முடி அழகு!"

இங்கு உள்ளவர்கள் சுருட்டை முடிக்கு
ஏங்குவதை கூறினால் நம்ப மாட்டார்கள்!

தன்னிடம் இல்லாதது தான் நிஜ அழகு!

தன்னிடம் இருப்பது அழகு அல்லவே!

நாங்கள் திரும்பி வந்த பிறகும் கூட
எங்களை
ப் பற்றி விசாரிப்பார்கள்!

அமெரிக்க ஆண்களும், ஆஃப்ரிக்கன்
அமெரிக்கப் பெண்களும் friendly!:yo:

எங்கு பார்த்தாலும் greet செய்வார்கள்.
நன்கு உரையாடுவார்கள். மற்றவர் :nono: !

 
Quotes by Benjamin Franklin.

Many foxes grow gray, but few grow good.:evil:

The golden age never was the present age.:rolleyes:

Little strokes fell great oaks.:ballchain:
 
# 15. Beetroot man!

ஒரு முறை ஒரு local flight இல் :plane:

ஒரு பீட்ரூட் மனிதன் அருகில் சீட்!


அவருக்கு வேறு எந்தப் பெயரும்

சிறிதும் பொருந்தவே பொருந்தாது!


அவர் கலர் பீட்ரூட். ஷர்ட் கலர் பிங்க்!

மூச்சு இறைக்கப் பேசும் முகம் பிங்க்!


உடல் வடிவமும் பீட்ரூட் தான்!
ஓயாமல் fries கொறித்துக் கொண்டு!:popcorn:

எனக்கும் வேறு free supply முயற்சி!
:nono:

அவர் உடல் நிறத்துக்கும், நிலைக்கும்,

வடிவுக்கும் காரணம் அந்த deep fries !!


அது அவருக்குச் சொல்லிப் புரியுமா?

அதை நான் சொல்லத்தான்
முடியுமா? :tape:
 
# 16. Full moon at grand canyon.

பகலில் அத்தனை தெரியவில்லை
இரவில் அத்துவானக் காடுதான்! :scared:

கேபினை விட்டு யாரும் வெளியே

கால் வைப்பதே இல்லை இருட்டில்!

அன்று பௌர்ணமி நிலவின் அழகை

நின்று பார்க்கச் சென்றனர் இவர்கள்!

காரில் போகுமாறு சொன்னாலும்

காலால் நடந்தே சென்றனர் மூவரும்!:roll:

நெடு நேரம்ஆகியும் வரவில்லை.

செல் போன் இல்லை. ஆனது என்ன? :fear:

செய்வது அறியாத போது நம்மால்

செய்ய இயன்றது பிரார்த்தனையே!:pray:

ஹனுமான் சாலீசும், கந்த ஷஷ்டியும்,

அனுதினமும் போல உருப்போட்டேன்!

மகன் விரைந்து தனியாக வந்தான்!

மற்றவர்கள் என்ன ஆனார்கள்?


பாதிவழியில் மூச்சிரைக்கவே இவர்,

பாங்காக அங்கேயே அமர்ந்து விட்டார்.

இவருக்குத் துணை பெரிய மருமகள்.

காரை எடுக்கவே மகன் வந்திருந்தான்!

மூவரையும் பார்த்த பிறகு தான் வந்தது

மூச்சு எனக்கு!அனாவசிய டென்ஷன்!

அன்று ஒரு professor ஐக் காணாததால்,

அல்லோல கல்லோலப் பட்டது அங்கு!


 
[h=1]#53. கலி தரும் இன்னல்கள்![/h] கலி காலத்தில் நடப்பவை எல்லாம்,
கிலி அளிப்பனவாக இருந்திடுமே!
ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் முன்பே,
அறிந்திருந்தார் இதை ஞானியர் அன்றே!

பொறுமை, இரக்கம், மனிதனின் ஆயுள்,
அறிவு, ஞானம், சுத்தம், குறையும்.
பொருளே பெரியது; குலம், வம்சம்,
திறமை, உண்மை, நேர்மை அல்ல.

கணவன் பேச்சை மனைவி மதியாள்,
கனவான் கூற்றை சிறியவர் மதியார்.
மனைவி சகோதரன் கை ஓங்கி நிற்கும்,
தனது சகோதரர்க்கு எங்கும் இடம் இல்லை .

வர்ணங்கள், ஜாதி பேதங்கள் அழிந்திடும்,
தர்மம் , தானம், தவம் குறைந்திடும்;
திருமணம் என்பது இரு மனப்பொருத்தம்;
ஒரு ஆண், ஒரு பெண் மட்டுமே தேவை.

கோத்திரம், கல்வி, குடும்பச் சூழ்நிலை,
கேட்கவே வேண்டாம் வேறு எதையுமே!
இல்லற இன்பமே அனைவரின் தேவை;
இல்லறம் நல்லறம் புரிவதற்கு அல்ல!

கல்வியை விற்று பல அந்தணர்களும்,
பொருட்களை விற்று மற்றவர்களும்,
கற்பை விற்று பல பெண்களும், அறம்
பெருந்தாத வாழ்க்கை வாழ்ந்திடுவர்!

வணிகம் என்றாலே வஞ்சகம் தான்,
அனைவரும் செய்வதால் அதுவும் சரியே.
நாணயம், நேர்மை, என்று நினைத்தால் ,
அனைத்தையும் இழந்து, நிற்க வேண்டும்.

திறமையும், அறிவும் நன்கு பயன்படும்,
தன் குடும்பத்தினரை பேணுவதற்கே!
சிறந்த அறங்கள் செய்வார் பலரும்,
தம் பெயர் புகழுடன் விளங்குவதற்கே!

வேலியே பயிரை மேய்வது போலே,
வேந்தனே மக்களைச் சுரண்டிடுவான்!
பொன், பொருள், பெண் என்ற எல்லாம்
தன்னது என்றே பறித்துக் கொள்வான்

அதிக வெய்யில், அதிக வெப்பம், புயல்;
அதிகக் காற்று, அதிக மழை , வெள்ளம்;
பஞ்சம் என்று இயற்கையும் தன் பங்குக்கு
வஞ்சனை செய்யும்; வாட்டி வதைக்கும்!

வருமுன் காப்போம், மிகவும் கவனமாக;
கலியின் பற்பல இன்னல்களில் இருந்து;
இறைவன் திருஅருள் நம் மீது இருந்தால்,
இது முற்றிலும் சாத்தியம், சத்தியமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
source:
my blog <visalramani.wordpress.com>
 
[h=1]#54. கலியின் இருப்பிடங்கள்.[/h] ஒரு நாள் மன்னன் பரீக்ஷித்து கண்டது,
ஒரு கால் எருதினை அடிக்கும் மனிதனை;
அருகினில் ஒரு பசு உருவினில் பூமகள்,
அருவியாய்ப் பெருகிடும் கண்ணீர் வழிந்திட;

முதல் யுகமான கிருத யுகத்தினில்,
முழு எருதாக இருந்தது தர்ம தேவதை.
தவம், ஆசாரம், தயை, சத்யம் என்ற
தன் கால்கள் ஒவ்வொன்றாய் இழந்து;

கலியுகத்தில் சத்யம் என்னும் ஒரே
காலுடன் தடுமாறுகின்றது தர்மம்.
தடியால் அடிப்பவனே கலிபுருடன்,
தாங்க முடியவில்லை மன்னனுக்கு.

“இனி என் நாட்டில் உன்னைப் போன்ற,
இரக்கமில்லதவனுக்கு இடமில்லை “என்று
கலியை விரட்ட முனைந்தான் மன்னன்,
கலியோ தன் பக்க நியாயத்தைப் பகர்ந்தான்.

“இறைவன் என்னை இப்படிப் படைத்தான்,
இதில் என் தவறு ஏதும் இல்லை. நீங்கள்
அளிக்கும் இடத்தில் ஒளிந்து கொள்கின்றேன் ,
அனுமதி தரவும் வேண்டுகின்றேன்” எனப் பணிய,

மது, மாது, கொலை, சூது, தங்கம் என்று
மன்னன் கலிக்கு அளித்தான் ஐந்து இடங்கள்.
போதாது என்று மன்றாடிய கலிக்கு அளித்தான்,
மேதாவி மன்னன் மேலும் ஐந்து இடங்கள்,

காமம், பொய், வெறி, கலகம், பகைமை;
கலிக்கு கிடைத்த வேறு ஐந்து புகலிடங்கள்.
கலியின் புகலிடங்கள் அறிந்து, அவற்றுடன்,
கலப்பதை நாம் அறவே தவிர்ப்போம்! .

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Quotes by Benjamin Franklin.

A little neglect may breed mischief...:nono:
for want of a nail, the shoe was lost,:sad:
for want of a shoe the horse was lost,
for want of a horse the rider was lost.:llama:

He that lives upon Hope will die a fasting.
:rip:
 
# 17 . வாங்கி பாத்!

Lake side பிக்னிக் சென்றோம்
மகனின் இரு நண்பர்களுடன்;

முடிந்த அளவு வீட்டு உணவே!
முடியாவிட்டால் வெளிஉணவு.

அன்று வாங்கி பாத் செய்தேன்
கத்தரிக்காய் வதக்கிச் சுவையாக.

க்ரிஸ்பீஸ் என்று வறுத்த வடகங்கள்!
குடிக்க fruit juice, வீட்டுத் தண்ணீர்!

நண்பர்கள் மிக விரும்பி உண்டனர்
"மாமி இது என்ன சொல்லுங்கள்!"

"இதன் பெயர் வாங்கி பாத்" என்றேன்!

"கரெக்ட் ஆன பெயர் தான் மாமி!
வாங்கி வாங்கிச் சாப்பிடுகின்றோமே!"
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top