• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 18. An unusual picnic!

ஆபீஸ் friends உடன் ஒரு பிக்னிக்
அரக்கு valley அழகிய இடம் தான்!

அவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்.
அவர்கள் அனைவரும் non வெஜிடேரியன்ஸ்.

நான் லஞ்ச் தந்ததை எடுத்துக்கொள்ளாமல்,
நன்கு ஸ்டைலாக ஆடை அணிந்து சென்றார்.

மாலை திரும்பி வரும் போது என்ன மாற்றம்!
மாதக் கணக்கில் fasting செய்தவர் போல வாடி!

ஒரிஜினல் non veg பிரியாணி அன்றைய உணவு!
ஓடாமல் இவர் அங்கே இருந்ததே ஒரு அதிசயம்.

நான் pure vegetarian என்று இவர் சொன்னதும்
"நோ problem என்று அவற்றை நீக்கிவிட்டு

அன்புடன் plate ஐ மீண்டும் கொடுத்தார்களாம்!
அன்றைய இவரது உணவு "சோடா & பீடா???"

 
My people and I have come to an agreement which

satisfies us both. They are to say what they please, and I am to do what I please.:rapture:
(Frederick the great)

Home is the place where, when you have to go there,
They have to take you in.:hug:

Some say the world will end in fire,:flame:
Some say ice :smow:
From what I've tasted of desire
I hold with those who favor fire.

Quotes by Robert Frost.
 
# 19. THE FAMOUS GYNECOLOGIST.

விசாகாவில் அவர் FAMOUS GYNECOLOGIST!
விரும்பிப் பெண்கள் அவரிடமே செல்வார்கள்!! :flock:

அப்போதெல்லாம் GYNECOLOGIST என்றாலே

லேடி டாக்டர் என்று (சொல்லாத) பொருள்!

இத்தனை லேடி டாக்டர்கள் உள்ள போது

இத்தனை பெண்கள் அங்கு போவது ஏன்? :confused:

நீங்கள் எதிர்பாராத பதில் இதுதான்!

அவர் கண்ணால் பார்க்கவே மாட்டார்! :cool:

மேலே வெள்ளை ஷீட் விரித்து விட்டுக்

கைகளால் தான் தொட்டுப் பார்ப்பார்!

இன்று வரையிலும் எனக்குப் புரியாத

லாஜிக்களில் இது மிக முக்கியமானது! :nod:
 
#20. "meeru chaddi esukkunnaraa?"

slipped disc problem வந்துவிட்டது!
Staggering உம் அதிகம் ஆகிவிட்டது.

படும் கஷ்டத்தைப் பார்க்கமுடியாமல்,.
உடன் துணைக்கு நானும் சென்றேன்!

Specialist ஐப் பார்க்கச்சென்றோம்.
உள் அறைக்கு அழைத்துச் சென்றார்.

உடைகளைக் களையச் சொன்னார்.
உடனேயே திகில் குரலில் கேட்டார்,

"மீரு chaddi எஸுக்குன்னாரா?"
(ப்ரீஃப் அணிந்திருக்கின்றீர்களா ??)

அவர் குரலிலேயே தெரிந்து விட்டது
அவருக்கு அவ்வளவு பெரிய ஷாக்கை

ஒருவரோ பலரோ அளித்திருந்தது!
"occupational hazard" இது தானோ
???
 
#20. ..........................
"occupational hazard" இது தானோ
???

Sometimes it will be a hazard because of a funny name too!

Once Smt. Indira Gandhi visited Trivandrum and she was supposed to be accompanied by Mr. Jatti!!

Since he could not accompany her due to some problem, Mrs. Gandhi had to come alone by flight.

There came the announcement in a sad voice, at the airport:

We are sorry to announce that the honorable prime minster is arriving without Jatti!! :director:
 
# 21. Strangers on the train?!

ஒருமுறை சென்னைக்கு ரயிலில்
செல்கையில் அமர்ந்திருந்தனர்

எங்கள் சைடு பெர்த்துகளில்
ஒரு வாலிபனும், ஒரு பெண்ணும்!

அறிமுகம் இல்லை போலும்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இரவு சிவராத்திரி தான் பாவம் .
இளைஞனுடன் ஒரே பெர்த்தில்!

நான் நினைத்தது சரியாயிற்று
ஆனால் நான் நினைத்தது போலல்ல!

Light ஐ அணைத்தவுடன் அவன்
வெள்ளை ஷீட்டுக்குள் புகுந்தான்!

அவனும் male gynecologist?
அவள் Cleopatra வின் போஸில்.

அவன் அவள் இடுப்புக் கீழே !
என்ன தான் ஆராய்ச்சியோ?

அவள் அனங்கவே இல்லை!
அவனும் தான் முழு இரவும்!

நடந்து செல்பவர்களைத் தவிர,
இருபத்து இரண்டு audience !

அடுத்த நாள் மீண்டும் அதே டிராமா!

அவர்கள் முன்பின் கொஞ்சமும்
அறிமுகம் இல்லாதவர் போலே!

அவள் அம்மாவே அவனை ஒரு
துணையாக அனுப்பி இருப்பாளோ?

செகண்ட் A.C. Coach ஆகவும்,
திரைச்சீலை வசதியும் இருந்தால்,

செலவில்லாமல் காந்தர்வ மணம்!!!
சொகுசான(O.C) A.C.இல் nuptial கூட???
 
#22. A cry in the dark!

அறுவது வயதாகி
விட்டால் கிடைக்கும்
கேட்காமலேயே லோயர் பெர்த்துகள்.

இள வயதுக்காரர்கள் மேல் பெர்த்தில்
செட்டில் ஆகி விடுவர்! நல்லவர்கள்!

சென்னையிலிருந்து திரும்புகின்றோம்,
சாமான்களை வைத்து செட்டில் ஆனோம்.

மேல் பெர்த்தில் இருவர் மாமிச உணவையும்,
மதுப்புட்டியையும் ருசித்துக் கொண்டிருந்தனர்.

அன்றைக்கு பிரதிக்னை செய்தோம் இருவரும்
"Third Class பயணம் இனிமேல் கிடையாது!"

எதிர் சீட்டில் வெள்ளையும், சொள்ளையுமாக
நல்ல மனிதரும், அவர் Glaxo Baby மனைவியும்!

நடு நிசி! ஆழ்ந்த உறக்கம்! "ஆ" என்று பெண் அலறல்!
சிலீர் என்று ஒரு சப்தம். விளக்கும் அணைந்துவிட்டது!

பொன்னியின் செல்வனின் கிளைமாக்ஸ் சீன்
அங்கேயும் அன்று நடந்தது! கை வசம் torch !

மது புட்டி சரிந்து கீழே வழிந்ததில்
Glaxo பேபி பயந்து பெரிய அலறல்!

புட்டி கீழே விழுந்து உடைந்தது சிலீர் சப்தம்.
கண்ணடித் துண்டுகளும், நாற்றமும்! சிவசிவா!

ஒரு வழியாக மீண்டும் உறங்கினால்,
மணல் மூட்டை கீழே விழுந்த சப்தம்.

என்ன தான் நடந்தது என்று பார்த்
தில்,
மதுப் பிரியனின் அடுத்த Adventure!

ஆறடி உயர பெர்த்தில் இருந்து கீழே "அலேக்!"
மயக்கத்தில் இருந்ததால் உயிர் பிழைத்தான்!

உணர்வுடன் இருந்திருந்தால் போயிருப்
பான்!
அதற்குப் பிறகு தூக்கம் "போயே போயிந்தி!!!
 
Last edited:
When Mahatma Gandhi went on a hunger strike, the British government shivered in sheer fear!

For them a dead Gandhi would be more dangerous than a live Gandhi. They were keen to keep him alive for the control he had over the masses at that time.

Today the hunger strike has been reduced to the level of an entertainment. The clever fast between breakfast and lunch (as we all do!)

The tenacious people may starve themselves to death but the concerned people are turning a deaf ear and cold shoulder.

Were not the Britishers more sensitive than our own leaders?
 
Yeah, wedding went off very well.. I am happy that she is happy.. I have extended in laws in this country so it was so nice that almost everyone could attend.. it felt good.. very emotional of course, but i know my daughter is in good hands.. I am blessed that my two daughters found good husbands.. even if I had tried to find the right match, I could not have found good SIL's. God has been very kind.. If only I could find a great girl for my son, my duty will be in some ways over....
Thank you for your wishes..
Bushu :-)
 
Last edited:
Dear Mrs. Subha,
The God who has given you two great sons in law will also give you a wonderful daughter in law. Rest assured!
with best wishes.
Mrs. V.R.
 
Fear is the parent of cruelty.

Wild animals never kill for sport. Man is the only one to whom torture and death of his fellow creatures is amusing in itself.

James Anthony Froude.
 
# 23. விடாக்கண்டனும்,
கொடாக்கண்டனும்.

"இரவு ஒன்றரைக்கு மணி train!
பெர்த் டோடல் வேஸ்ட் ஆகும்!"

"காலை நீட்டி படுத்துக் கொண்டு
relaxed ஆகப் போவோம் நாம்!"

அடித்துப் பிடித்து ஏறினால், அங்கே
நெடுமால் போல சயனம் பெர்த்தில்.

அதற்கு மேல் பெர்த் காலி தான் !
அதில் உறங்க மாட்டேன் என்றார்!

"என் பெர்த் தான் எனக்கு வேண்டும்!"
எழுப்பும் முயற்சியில் இறங்கினார்.

அது ஆணா அல்லது பெண்ணா?
அசையவே இல்லை சிறிதும்!

முழு Cubicle உம் விழித்தாயிற்று,
நாங்கள் எழுப்பிய ஆளைத் தவிர!

"விட்டுத் தொலையுங்கள்!" என்றால்
விடாக் கண்டனாக மாறினார் இவர்!

கொடக் கண்டனை கடைசியில்
உருட்டிக் கீழே தள்ளினார் இவர்!

"என்னால் ஏற முடியாது!" என்று அவள்
சொன்னால் கிடைத்திருக்கும் பெர்த்.

கடைசியில் அங்கே, "வாலு போச்சு!
கத்தி வந்தது! டும் டும் டும்!" ஆயிற்று!

"பெர்த் வந்தது! தூக்கம் போச்சு!
டும் டும் டும்!" என்பது போல் ஆனது!
 
# 24. UNCONDITIONAL SURRENDER!

ஆளை உருட்டித் தள்ளியவர்;
தானே பெர்த் OFFER செய்தார்!

நம்ப முடியவில்லை அல்லவா?
நானும் நம்பி இருக்க மாட்டேன்

அவளைப் பார்க்காமல் இருந்தால்!
'அவளா' அல்லது 'அவர்களா'' ???

கிராமப் புறங்களில் ஒரு சொல் வழக்கு!
"அழித்துப் பண்ணினால் மூன்று ஆள்!"

இவளை மட்டும் உருக்கி வார்த்தால்
எவ்வளவு பேர்கள் கிடைப்பார்கள்?

அரை டசன்??? அதை விட அதிகம்???

இடை சுற்றளவு அதிகம், அவள்
உடல் உயரத்தைக் காட்டிலும்!

பார்த்தவுடன் total surrender! "என்
பெர்த்தை எடுத்துக் கொள்ளுங்கள்!"

அடுத்தநாள் கேட்டேன் அவரிடம்,
"கொடுத்தது பெர்த்தை எப்படி?" என்று!

"அவளுக்குக் கீழ் பெர்த்தில் படுத்து
அமைதியாகத் தூங்க முடியுமா?

பெர்த் சங்கிலி அறுந்தால், ஆளை
வழித்து எடுக்க வேண்டும்!" என்றார்!

"அதற்குச் சான்சே இல்லை!" என்றேன்.
"அதெப்படி நீ அவ்வளவு நிச்சயமாக...?"

"அவள் மிடில் பெர்த்தில் fit ஆகமாட்டாள்!
அவளால் டாப் பெர்த் ஏறவும் முடியாது!"

So the problem got solved automatically,
with his total and unconditional surrender!

Moral of the incident...

If you have a problem, let it be a 'superlative' problem!
Then the others will happily solve your problem for you!
 
Quotes by Christopher Fry.

I know I am not
A practical person; legal matters and so forth
Are Greek to me, except, of course,
That I understand Greek.

Where in this small-talking world can I find longitude with no platitude?
 
# 25. KIRI KIRI KARNEWALE AAYE HAIN!
(THE TROUBLE MAKERS HAVE COME!)

ஹைதராபாத் பயணம் ரயிலில்.
மத்தியானம் தொடங்கும் பயணம்.

அவருக்கும் லோயர் பெர்த்
என்னுடையது எதிர் பக்கத்தில்!

"எதிர் எதிர் பக்கத்தில் வேண்டாம்!
அடுத்த அடுத்த சீட்தான் வேண்டும்!"

எத்தனை கேட்டாலும் தருவதில்லை.
அத்தனை ரூல்ஸ் பேசுகின்றார்கள்!

MIDDLE பெர்த் ஆள் TOSSING & TURNING!
MEDDLESOME FELLOW வும் கூடத்தான்!

இருபது மணி நேர நீண்ட நெடிய பயணம்.
இப்போதிருந்தே படுத்துக் கொண்டால்...!

அவரை பெர்த்தை மடக்கச் சொன்னால்,
"மீரு கூட நித்ர போண்டி" என அறிவுரை.

அவள் மகள் அம்மாவிடம் சொல்கிறாள்,
"கிரி கிரி கர்நேவாலே ஆயே ஹைன்!"

"கிரி கிரி நீங்கள் தான் செய்கின்றீர்கள்!
இரவே 9 to காலை 6 வரை தான் பெர்த்!

நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள் அங்கே!
படித்துவிட்டு வா! படிக்கத் தெரிந்தால்!"

T.T.R. தலையிட வேண்டி வந்தது
Troublesome travelers in THE trains!

அதற்குப் பிறகு special request எழுதுவோம்
"அடுத்து அடுத்த சீட்ஸ் தான் வேண்டும்!
"
 
# 26. அவர்கள் எங்கே?

விசாகா சென்னை ரயில் பயணம்.
ஒருமணி முன்பே ஸ்டேஷேனில் ஆஜர்!

வேறு ஒரு ரயில் பிளாட்பாரத்தில்!
விசில் ஊதி அது புறப்படும் நேரம்.

அவசர அவசரமாக ஓடி வந்தார்
அறுபது வயதுப் பெண் ஒருவர்.

படியில் காலை வைத்தார் அவர்
நொடியில் காணவில்லை எங்கும்!

ரயில் ஓட ஆரம்பித்து விட்டது!
ரயிலை நிறுத்தினார் முழுவதுமாக

ஒரு மகானுபாவன் துணிச்சலுடன்
ஓடுகின்ற ரயில் சங்கிலியை இழுத்து!


அங்கே சென்ற பார்க்கவே அச்சம்!
என்ன கதியில் இருப்பாரோ என்று!

நம்பவே முடியவில்லை இன்னமும்!
பழுதில்லாமல் முழுதாகவே அவர்!

severe ஷாக்கில் நடுங்கிக் கொண்டு!
நான்குபேர் கைகொடுத்துத் தூக்கினர் .

ரயில் பின்னால் வந்தது பிளாட்பாரமுக்கு.
அவர் அதில் செல்ல மறுத்துவிட்டார்!

படியும், பிளாட்பாரமும் ஒட்டியுள்ளன!
அதற்குள் ஆள் விழுந்த மர்மம் என்ன?

ஒரு பெஞ்சில் நடுங்கியபடி அமர்ந்த
அவர் நினவு இன்னமும் பசுமையாக!
 
Many excellent cooks are spoiled by going into the art.:doh:

Civilization is paralysis.:crutch:

Art is either a plagiarist or a revolutionist.:moony:

Paul Gauguin.
 
#. 27. சங்கரியும், கிங்கரியும்!

பிரயாணத்தின் போது முடிந்த அளவு

கலந்த சாதமும், இட்லிகளும் ஓ.கே!

உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தியும்,

உபத்திரவம் இல்லாதவைகள் தாம்.

ஒருமுறை எங்கள் cubicle இல்
ஒரு குடும்பம் உடன் பயணித்தது! :flock:

ஒரு அடி விட்டம் உள்ள தட்டுகள்!

மூன்றடி உயரம் உள்ள டிபன் கேரியர்.

வீட்டில் உண்பது போலவே நிறையச்

சோறு, சாறு, கூர, இத்யாதிகள்.

பெரிய, பெரிய குழியல்களும்!

கிச்சனே இடம் பெயர்ந்திருந்தது!

பிள்ளைகளுக்கும் நல்ல பசி போல! :hungry:

பிள்ளைகளுக்கு உணவைப் "படைத்தாள்!"

அதுவரையிலும் எல்லாம் ஓ.கே தான்!

அதற்குப் பின் என்ன நடந்தது தெரியுமா?

அவர்கள் உண்ட மீதியை ஒட்ட வழித்து

அந்த காரியர் உணவிலேயே போட்டாள்!

நல்லவேளை நாங்கள் சாப்பிட்டிருந்தோம்!

இல்லாவிட்டால் சோறே இறங்கி இராது! :sick:

மகன் பெயர் லிங்கம்! அவள் பெயர் சங்கரி(?)

"மகானுபாவுலு எந்தரோ உன்னாரு காதா?"

கொம்பு இல்லாமலும், சங்கரி பெயரில்,

நம்மை ஏய்த்துக் கிங்கரிகள் உலவலாம்!
 
# 28. ஒரு மாதிரி கேஸ் ???

ஒருமுறை அவசரப் பயணம்;

unreserved கோச்சில் இவருடன்!

அடித்துப் பிடித்து ஏறி விட்டோம்

எதிரில் 'ஒரு மாதிரிப் பெண்கள்'(?) :suspicious:

அம்மாவும் மகளும் என இருவர்.

அம்மா நெற்றியில் காலணா பொட்டு.

பெண்ணின் பல சேஷ்டைகளும்,

போலி நாணமும் தாங்கவில்லை! :doh:

அடுத்து அமர்ந்து இருந்தான் ஒரு

அப்பாவி இளைஞன், பயந்தவன்.

அம்மா பெண்ணை பிடித்துப் பிடித்து
அவன் மடியில் அவளைத் தள்ளினாள். :bump2:

"தூங்கு கண்ணு! தூங்கு!" என்று உபசாரம்! :sleep:

விலகி விலகிப் போனாலும் அவனை

விடுவதாக இல்லை இவ்விருவரும் !

பிறகு நாங்கள் இறங்கி விட்டோம்.

அப்பாவி வாலிபன் என்ன ஆனானோ?
 
Quotes by John Gay.

Then nature rul'd, and love, devoid of art, :hug:

Spoke the consenting language of the heart.:love:


No sir, tho' I was born and bred in England, I can dare to be poor, :high5:
which is the only thing now-a-days men are ashamed of.
:fear:
 
# 29. விசையுறும் பந்தினைப் போல்!

எல்லா வினோத மனிதர்களையும் நாம்
வெளியில் தான் சந்திப்போம் அல்லவா?

Howrah மெயிலில் சென்னை பயணம்.
பெங்காலி பாபூஸ் கூட்டம் அன்று நிறைய!

நாண் இழுத்துக் கட்டியது போன்ற உடல்!
ஞானியின் 'தவ'க்களை அவன் முகத்தில்.

உடலையும், உள்ளதையும் ஒருங்கே
உருவேற்றி இருந்தான் அந்தப் பையன்.

அவன் பெர்த் டாப் பெர்த். பகல் வேளை!
அவன் தனிமையை விரும்பினான் போல!

இரண்டு வரிசைக்கும் நடுவே நின்றான்!
இரண்டு கம்பிகளையும் நன்கு பற்றினான்!

அடுத்த நொடியில் அவன் பெர்த்தின் மேலே!

'எடுத்து கண்டனர் இற்றது கேட்டனர்!"
என்று ராமன் வில்லை ஓடித்தானாம்.

கால்களைத் தூக்கியது கண்டோம்
வில் போல உடலை வளைத்து மேலே!

"விசையுறும் பந்தினைப் போல்" என்ற
பாரதியின் பாடலுக்கு உயிர் தந்தான்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top