நம்பிக்கை நட்சத்திரங்கள்!
பல வித இனிப்புக்களில் சிலவற்றையே விரும்புவதால்,
பல வித தெய்வங்களை மனிதன் உருவாக்கினானோ?
படைக்கும் தொழிலை பிரமன் செய்தாலும், அவனைப்
படைக்கும் பணியைச் செய்தது, மனிதனே அல்லவா?
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற தொழில்களுக்கு,
படைத்தான் வேறுபாடுகளுள்ள மூன்று தெய்வங்களை.
ஒவ்வொரு தெய்வத்தின் தொழிலையும், குணத்தையும்,
வெவ்வேறு வகையில் மனிதனே பட்டியலும் இட்டான்!
தொழிலாகப் படைப்பைக் கொண்ட அந்த பிரமனை, ஒரு
தொழிலதிபருக்கு ஒப்பிடுவது என ஆரம்பித்துவிட்டால்,
சூழ்ச்சிகள் பல செய்து, பாண்டவருக்கு வெற்றி அளித்த,
சூத்திரதாரி மாயக் கண்ணனை, யாருடன் ஒப்பிடுவீர்கள்?
உடலெங்கும் நீறு பூசி, தாண்டவம் ஆடுகின்ற பாதனாம்,
உடலில் பாதியை உமைக்களித்த சிவன், என்ன ஆவார்?
இறை வடிவங்கள், நாம் சரணாகதி அடைந்தால், நல்ல
நிறைவான வாழ்வு தரும், நம்பிக்கை நட்சத்திரங்கள்!
'நம்பினார் கெடுவதில்லை', எனத் திண்ணமாக எண்ணி,
நம்புகிறான் மனிதன், தன்னுடைய இஷ்ட தெய்வத்தை!
வேண்டி வணங்கி அவர்களைத் தொழுதல், மிக நலமே!
சீண்டிப் பார்த்தால், பலருக்கு வரும், கொஞ்சம் கோபமே!
அன்புடன்,
ராஜி ராம் .............. :blah: (refer post #94)