• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 192. Double share for bachelor ?

அவர்களை ஒரு கை விரல்களால்

எண்ணிவிட முடியாது நம்மால்!

முன்பு எல்லாம் அது சஹஜம் தானே?

நிறைய நிறைய அண்ணன்கள்!

ஒரே ஒரு அன்புத் தங்கை!

எல்லோரும் பேரன் பேத்தி

எடுத்த பின் பாகப் பிரிவினை!

வளைத்துப் போட்டிருந்த நிலத்தின்

விலையே பல லகரம் பெறும்.

மணம் ஆகாத அண்ணன் சொன்னான்,

"இரண்டு பங்கு எனக்குத் தந்தால் தான்

இந்த ஏற்பாட்டுக்கு உடன் படுவேன்!"

கல்லூரியில் படிக்கும் பேரன்கள், :typing:

கல்யாணத்துக்கு தயாராக மதமதவென்று

வளர்ந்து நிற்கும் பேத்திகள்! :music:

அவர்கள் தாத்தாக்கள் கேட்காத

இரட்டைப் பங்கு சொத்துக்கள்

கட்டை பிரம்மச்சாரிக்கு எதற்கு? :mmph:

வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.

எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம்

உலவுகின்றார்கள் இந்த நிலவுலகில்!!! :tsk:
 
# 193. Teen-age girl looking for trouble!

என்னைக் காட்டுக்குப் போகச் சொன்ன

அந்த பிரம்மச்சாரிகள் வசிக்கும் வீட்டில்,

இரண்டும் கெட்டான் பெண்ணுக்கு

தினம் தினம் என்ன வேலை வைத்திருந்தது? :noidea:

தினமும் அவளே அங்கு சுயேச்சையாகப் போவாள்.

பிறகு "வீல்! வீல்!" என்று அலறிக் கொண்டு

அவள் வெளியே ஓடி வருவாள்.

நான்கு ஐந்து கைகள் வெளியே நீளும்.

மீண்டும் அவளை உள்ளே இழுக்கும்!

மீண்டும் தொடரும் அவள் அலறல்!

என்ன தான் நடக்கும் அங்கே! :shocked:

அவள் அம்மா சிரித்துக் கொண்டு

தன் வீட்டில் இருப்பாள்.

அவர்கள் சில்மிஷம் செய்தார்களா?

அல்லது வேறு ஏதும்....? :scared:

மண்டுப் பெண் விளக்கில் விழும்

வீட்டில் பூச்சியைப் போல :loco:

தினமும் அங்கே ஏன் சென்றாள்???
 
Quotes by Percy Bysshe Shelley.

Why didst thou leave the trodden paths of men
Too soon? :tsk:

From the contagion of the world's slow
He is secure. :pray:

The fountain of divine philosophy
Fled not his thirsty lips.
:cool:
 
# 194. தப்பான சித்தப்பா.

அவர் மனைவியின் அக்கா பெண்ணுக்குப்

பாடம் சொல்லிக் கொடுக்க வருவார் தினமும்.

ரொம்பவும் ரெகுலர் வருகை. ரெகுலர் டைம்.

என்ன சொல்லிக் கொடுத்தார்

என்பது பிறகு தெரிய வந்தது. :rolleyes:

அகஸ்மாத்தாக வந்த வேலைக்காரி

அவர்களை மிகவும் நெருக்கத்தில்

பார்த்ததோடு நில்லாமல் உடனேயே :shocked:

ஊரெல்லாம் தண்டோரா! :horn:

எப்போது காலி செய்தார்களோ

எங்கள் யாருக்குமே தெரியாது!

திருவிளையாடலில் வரும் பாடகர்

ஏமநாதன் தன் சிஷ்யர்களுடன்

நள்ளிரவில் சொல்லாமல் கொள்ளாமல்

ஊரை விட்டு ஓடினதைப் போல.
:bump2:
 
# 195. Cost Of Food ...no problem!

நிறைய மனிதர்கள் உணவுக்காக

எவ்வளவு பணம் வேண்டுமானாலும்

செலவழிக்கத் தயாராக இருப்பர்.

கேட்டால், "அது ஒன்று தானே நமக்கு

உள்ளே போகிறது!" என்று தத்துவம். :hungry:

உள்ளே போனது உள்ளேயே இருக்குமா?

அடுத்த நாள் தன் அழகிய உருமாறி

வெளியே வந்துவிடும் அல்லவா? :scared:

படிக்கும் புத்தகங்கள் எல்லோருக்கும்

பயன்படும் இன்றும் என்றும்.

பாடல்கள் அடங்கிய டிஸ்க்குகள்

எல்லோருக்கும் எப்போதும் பயன்படும்.

எதுவுமே எல்லோருக்கும் பயன் தரும்!

அவற்றை வாங்க ஆயிரம் முறை

யோசிப்பவர்கள் எல்லோரும் :decision:

உணவுக்காக மட்டும் சிந்திக்காமல்

ஏராளமாகச் செலவு செய்வது
ன்?! :noidea:
 
A Woman tells her Doctor : I've got a bad back since couple of days

The Doctor says : It's old age perhaps

The Woman tells her Doctor: Can I've have the second opinion

The Doctor says : 'Okay - You are unpleasant to look at'

Balasubramanian
Ambattur
 
I am sure the doctor had to CLOSE his clinic after the

words told by him spread by word of mouth, :director:

from the lady to her friends and their friends! :grouphug:


A Woman tells her Doctor : I've got a bad back since couple of days

The Doctor says : It's old age perhaps

The Woman tells her Doctor: Can I've have the second opinion

The Doctor says : 'Okay - You are unpleasant to look at'

Balasubramanian
Ambattur
 
Quote by P. B. Shelly.

I silently laugh at me own cenotaph, :laugh:

And out of the caverns of rain, :rain:

Like a child from the womb, :baby:

like a ghost from the tomb, :rip:

I arise and unbuild it again.
 
# 196. Female Eiffel tower!

மழைக்காலம் வந்துவிட்டாலே போதும், :rain:

எங்கும் இதே காட்சி தான் காணப்படும்.

பெரு நீரோடு கலந்து மக்கள் தங்கள்

சிறு நீரையும் பாய்ச்சுவது வழக்கம். :doh:

பெண்களுக்கும் அது குளிர், அதே மழை,

ஆனால் அவர்கள் ஆண்கள் அங்கங்கே நின்று

ஜிப்பை இறக்குவது போலச் செய்வதில்லையே!

நமக்கு இருக்கும் அடக்கும் திறன்

அவர்களுக்கு இல்லாமல் போனதா? :confused:

அல்லது ஆண்கள் என்ன வேண்டுமானாலும்

செய்யலாம் என்று எழுதப்படாத விதியா?

ரயிலில் போகும் போது சிலர் சொம்புகளை

எண்ணுவார்கள் பொழுதுபோவதற்கு.

இங்கு தலைகளை எண்ணலாம் போல.

"பெண்கள் பெண்கள் தான்!" என்று நினைத்த போது

அங்கே பார்த்தேன் ஒருத்தி
யை ஒரு மரத்தடியில்,

Female Eiffel tower போல நிற்பதை.

ஆகாயத்தில் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள்!

கீழே மும்மரமாக வேலை நடந்து கொண்டு இருந்தது!

இந்திர ஜாலம் செய்பவர்கள் நம்மை

திசை திருப்ப ஏதாவது பேசுவார்கள்

அல்லது செய்வார்கள். அதே technique.

அவள் எதைத் தேடுகிறாள் என்று பார்ப்போம்!

அவள் செய்வதை நாம் பார்க்க மாட்டோம்.

அவள் காட்சி தந்த அளவுக்கு முட்டாள் அல்ல!
:loco:
 
# 197. WHO WAS (S)HE?

முதல்முறை அமெரிக்
கா சென்றபோது

அவ
ளை (அவனை?) பஸ்ஸில் கண்டேன்.

நெடு நெடு என்று நல்ல உயரம்.

ஒல்லி உடம்பு. கருப்பு skirt.

bobbed ஹேர், ரத்தச் சிவப்பு உதடுகள்.

தினமும் shave செய்வதைப் போல

பச்சை நிறக் கன்னங்களும், முகவாயும்.

mascara , eyeliner, eye shade எல்லாமே!

அவனா? அவளா? அதுவா? தெரியாது! :confused:

பாவமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. :tsk:

அத்தனை heavy மேக்கப் போடாமல் இருந்தால்

யாரும் கவனித்து இருக்க மாட்டார்களே!
:hippie:

பிறகு எதற்கு அத்தனை heavy

make up செய்து கொண்டாள்??? :noidea:
 
Last edited:
quotes by P. B. Shelley.

We - are not formed , as notes of music are,
For one another though dissimilar?

The breath of her false mouth was like faint flowers,
her touch was an electric poison.

One Heaven, one Hell, one Immortality.
 
# 198. DON'T MESS WITH THEM!
மதியம் புறப்பட்டு இரவு சென்னை
செல்லும் தினசரி train அது.
சிடி பஸ் போல அலைமோதும் கூட்டம்.
ஸ்டான்டிங்கிலேயே சென்று விடுவார்களா
அத்தனை பேரும் சென்னை வரையில்?
அந்த குரூப் ஒன்று ஏறிற்று ரயிலில்.
ஆண் போலக் குரல்!
பெண் போல உடல்.
ரொம்ப பிஸியாக அவர்கள்
ரயில் முழுக்க அலைந்தனர்.
ஒரு பையன் துணிந்து ஒருத்தியைத்
தொட்டுவிட்டான்! இளிப்பு வேறே!
"தொட்டதற்குக் காசு கொடு!"
என்று பிடித்துக் கொண்டு விட்டாள்.
"உன் கையைத்தனே தொட்டேன்"
" ஏன் இங்கே உக்காந்து இருக்கிற பொம்பளைங்க
கையெல்லாம் போய் தொட வேண்டியதுதானே "
அவன் கொடுக்க மறுக்கவே
மொத்தக் கூட்டமும் corner செய்தது அவனை.
முதலிலேயே அவன் கொடுத்திருந்தால்
சின்ன அமௌன்ட்டோடப் போயிருக்கும்.
எல்லோரும் வந்ததால் நன்றாகப் பழுத்தது.
போயும் போயும் சபலப் பட்டு,
இப்படி அவர்களிடம் ஒருவன்
போய் மாட்டிக் கொள்ளுவானா?
"Don't mess with them" என்று
popular tune இல் பாடத் தோன்றியது.

 
# 199. Tamil terimaa?

"போண்டா டீ" என்று வியாபாரம்!

ரயிலில் இருந்தவன் சிரித்தான்,

"பொண்டாட்டி?" என்று சொல்லியபடி.

"ஏய்! உனக்கு தமிழ் தெரியுமா?"

ஒருவன் அவனிடம் கேட்டான்.

அவ்வளவு தான் ஆவேசம் வந்தவன் போல

"ஹிந்தி தேரி மா! கன்னடா தேரி மா!

தெலுகு தேரி மா! இங்கிலீஷ் தேரி மா"

என்று சண்டை போடத் துவங்கினான்.

(தேரி மா = your mother in Hindi.)


அவன் அம்மாவைப் பழித்ததாக

அவன் எண்ணிவிட்டான்.

பெரியவர்கள் புகுந்து விளக்கி

சமாதானம் செய்யவேண்டி இருந்தது.
 
Last edited:
P.B. Shelley.

A ship is floating in the harbor now, :fish2:
A wind is hovering ov'r the mountain's brow;
There is a path on the sea's azure floor,
No keel has ever ploughed that path before.:nono:

Self impelling steam-wheels of the mind. :high5:
 
# 200. பூனைக்கும் ஒரு காலம் வரும்.

A.I.R. ப்ரோகிராம் முடிந்துவிட்டது.

எல்லோருக்கும் தலை கழுத்தில் நிற்கவில்லை.

என்னமோ ஆடிஷனுக்குச் சென்று வென்றது போல்.

அடுத்த ladies Club மீட்டிங் வந்தது.

எல்லோருடைய வேண்டுகோள்,

"மீண்டும் அந்தப் பாடலைப் பாடவேண்டும்!" :sing:

பாடியவர்கள் ஹாலில் பிரிந்து அமர்ந்து இருந்தனர்.

எல்லோரும் ஒரே இடத்துக்கு வருமாறு சொன்னால்

எழுந்து வர அவ்வளவு சோம்பல். :bored:

நெம்புகோல் வைத்துத் தான் எழுப்ப வேண்டுமா?

சொல்லிச் சொல்லிச் சலித்துப் போனது.

பாட்டை
ப் பாட ஆரம்பித்தேன்.

எல்லோரும் சேர்ந்து கொண்டனர்.

ஆனால் அத்தனை பெரிய ஹாலில்

அனைவரையும் தூக்கிப் பிடித்து

வழி நடத்த (மைக்கும் இல்லாமல்)

நோ சான்ஸ் அட் ஆல்!

Unless I have the voice of a military commander-

in which case I won't be able to sing with that voice!

எல்லோரும் எல்லாதிசைகளிலும் மேயவே :flock:

நான் பாடுவதை நிறுத்திவிட்டேன்.

எல்லோரும் தொடர்ந்து மேய்ந்துவிட்டு

ஒருவழியாக வந்து சேர்ந்தனர்.

எல்லோருக்கும் ஒரே திகைப்பு.

"அன்று ரேடியோவில் அவ்வளவு

நன்றாக இருந்ததே இந்தப் பாட்டு?"

சங்கீதமும், இங்கிதமும் தெரிந்த

என் நண்பி கூறினாள் ச
த்தமாக,

"அன்று பாடிய ஒரே ஒருவர் மட்டும்

இன்று இங்கு பாடவில்லை! அவ்வளவு தான்" :moony:
 
# 201. COMPLEMENTING COUPLES.

ஒரு கதையில் வரும் இரு நண்பர்களில்

ஒருவனுக்குக் கண் இல்லை, கால் உண்டு.

மற்றவனுக்கு கண் உண்டு, கால் இல்லை.

கண் உள்ளவன், கால் உள்ளவன்

தோள் மீது அமர்ந்து வழி சொல்வான்.

கண் இல்லாதவன் அவனையும் சுமந்து நடப்பான்.

"இப்படியெல்லாம் கூட இருப்பார்களா?" என்று

குழந்தைப் பருவத்தில் வியந்தது உண்டு. :shocked:

இப்
போது கண்கூடாகப் பார்க்கின்றேன்

விந்தையான பல தம்பதிகளை.

கணவனுக்குக் காது கேட்காது! :ear:

மனைவிக்குப் பார்வை மங்கி விட்டது! :cool:

கேட்டு பதில் சொல்லுவாள் மனைவி.

பார்த்து எடுத்துக் கொடுப்பான் கணவன்.

அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருந்தால்

இந்தக் குறைபாட்டைக் கண்டு பிடிக்கவே முடியாது.

கணவனுக்கு நல்ல உடல் பலம் இருக்கும்.

மனைவிக்கு நல்ல புத்தி பலம் இருக்கும்.

கணவன் எளிதில் உணர்ச்சி வசப்பட்டால்

மனைவி தைரியமானவராக இருப்பார்.

ஒருவர் காலில் கஞ்சி ஊற்றிக்கொண்டது போல

பரபரப்பாக இருந்தால், மற்றவர் கொள்கை

"தானத்தில் சிறந்தது நிதானம்!" என்பதே.

இறைவன் நன்றாகத்தான் ஜோடி சேர்க்கிறான்.

Truly marriages are made in Heaven

just like the thunder and lightning!
:scared:
 
[FONT=comic sans ms,sans-serif]Quote by P. B. Shelley.

Oh, cease! must hate and death return?

Cease! must men kill and dye?

Cease! drain not to its dregs the urn

Of bitter prophecy.

the world is weary of the past,

Oh! might it die or rest at last!


[/FONT]
 
# 202. BLOOD TRANSFUSION !

சின்ன அறுவை சிகிச்சை ஆனாலும் சரி,

லப்ரோஸ்கோபிக் முறையானாலும் சரி,

அட்டை போல நம் இரத்தத்தை உறிஞ்சிவிடுவர்.

ஒவ்வொன்றுக்கும் கணக்கு உண்டு;

எத்தனை unit ரத்தம் நாம் தரவேண்டும் என்று!

ஆனால் அதை அவர்கள் patient டுக்குக்

கொடுப்பதே இல்லை ஒரு போதும்!

அவசியம் இல்லை என்பார்கள் நாம்

விடாமல் துரத்தித் துரத்திக் கேட்டால்! :bump2:

பின் எதற்கு அத்தனை ரத்தம்

தேவைப்படுகிறது அவர்களுக்கு!

எதிர் வீட்டு ஆன்ட்டி கால் மடிந்து விழ,

மேஜையின் விளிம்பு தலைப் பதம் பார்க்க,

மண்டை பிளந்து குழாய் நீர் போல

வழிந்து கொண்டிருந்து ரத்தம்.

எத்தனை அழுத்தினாலும் கட்டுப்படவே இல்லை.

பிறகு தெரிந்தது அவருக்கு stroke வந்ததால்

anti coagulant drug எடுத்துக் கொள்ளுவது.

ஒரு வழியாக emergency வார்டு செல்வதற்குள்

எனக்கு ரத்த அபிஷேகம் செய்தது போலாயிற்று!

என்றால் அவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் :faint:

கழுவக் கழுவ
அறை முழுவதும் diluted blood !!!

தைக்க நேரமும் இல்லை, வசதியும் இல்லை;

வரிசையாக 15 staple பின்கள் தலைமேல் அடித்து

ஒரு வழியாக ரத்தப் போக்கை நிறுத்தினார்கள்!

அதற்குள் அவர் ஒரிஜினல் நிறமே மாறி

பழைய வேஷ்டி போல ஆகிவிட்டார்.

"மூன்று லிட்டர் ரத்தம் சேதம்" என்ற

டாக்டரிடம் ரத்தம் கொடுக்கச் சொன்னால்

"தேவை இல்லை அதுவே ஊறிவிடும்" என்கிறார். :nono:

அறுவை சிகிச்சைக்குப் பின் நமக்கும் தருவதில்லை!

ரத்தம் சேதம் ஆனவர்களுக்கும் தருவதில்லை.

என்ன தான் செய்கிறார்கள் அதை? !
:shocked:
 
Last edited:
# 203. VEENA TUNER .

இசைக்கருவிகளுக்கு மெட்டுக்கட்ட

செவிப்புலன் தேவை இல்லையோ? :noidea:

விசாகாவில் வீணைக்கு மேளம் கட்டியவர்

ஒரு முழுச் செவிடர்! நம்பமுடியவில்லை

வீணையின் மேளம் சரியாக இருந்தது. :happy:

கோவையில் வீணை மேளம் கட்டியவரும்

கொஞ்சம் ஹியரிங் impaired தான். :ear:

Harmonics கணித பின்னங்கள் தான்.

அந்த விகிதங்கள் தெரிந்ததால் தான்

அவர்கள் செவிப்புலன் இன்றியே

செம்மையாகத் தம் பணியைச் செய்தனர்!
:clap2:
 
As our elders used to say we can practice to the extent possible if our financial back-up permits us to do.

- Make an attempt to help those genuine needy if there is none to support them

- A Man/Woman may be at the Doctor's Clinic for Arthritis because no one helped her to cross
the street and he/she fell, if we are at the Clinic at that time

- Above all we should understand ourselves as to who are we before making an effort to understand
the importance of life

Balasubramanian
Ambattur
 
The purpose of life is to care and to share.
We can share money, time, knowledge, space, place, happiness, sorrow, feelings, fears....everything under the sun.
Only we need the inclination, interest and involvement.
 
The inclination, interest and involvement should more or less be by nature for a person
or some one in the family, predecessor etc. have done similar activities and that culture
is available in that family.

Balasubramanian
Ambattur
 
the inclination, interest and involvement should more or less be by nature for a person
or some one in the family, predecessor etc. Have done similar activities and that culture
is available in that family.

Balasubramanian

not necessarily!
Pearls are born out of gnarled oysters.
The best flower used for puja - lotus- blooms in the slush.
Roses appear among the thorns.
Anything is possible in nature.
 
Quotes by P. B. Shelley.

Spirit of Beauty, that dost consecrate :love:

With thine own hues all thou dost shine upon

Of human thought or form. :cheer2:


Alas, good friend, what profit can you see
In hating such a hateless thing as me? :confused:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top